அறிவிப்புகள்

 அன்பான தமிழ்ச் சொந்தங்களே

வணக்கம். வரும் 2019, ஜூலை மாதம் வெளிவரும் அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழுக்கான ஆய்வுக் கட்டுரைகள் ஆய்வாளர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி நாள்- 2019 ஜூன் 10. அதற்கு பின் வரும் கட்டுரைகள் ஏப்ரல் இதழில் இடம்பெறாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: aranjournal@gmail.com

 அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் காலாண்டு இதழாக ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் வெளியாகும்.

விரைவில் அறிஞர்கள். எழுத்தாளர்கள், ஆளுமைகள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெற இருக்கின்றன.

 புதிய படைப்பாளர்களின் நூல்கள் மதிப்புரையுடன் அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழில் வெளியிடலாம். நிறுவனர் அனுமதி பெற்ற பின் உங்கள் நூல்கள் இரண்டு, அதன் மதிப்புரை ஆகியவற்றை அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 நீங்கள் விரும்பினால் உங்களது ஆய்வு நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வேடுகளை ஆய்வாளர்கள் பயன்பெறும் வகையில் அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழில் பதிவிடலாம். அதற்கான பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் சார்பாக, அரண் கவிதை பொதி, அரண் திறனாய்வு புதினம், அரண் தொல்லியல் களம், அரண் களஞ்சியம் போன்ற வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் தமிழ் சார்ந்த முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.இதன் மூலம் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம். எமது புலனக்குழுவில் இணைய விருப்பம் உள்ளவர்கள் 7299587879 எண்னணத் தொடர்பு கொண்டு விவரம் அறியவும்.