மேத்தா கவிதையில் பொருளாதாரச் சிந்தனைகள்

முனைவர் ச. நாகரத்தினம் 25 April 2019 கட்டுரை Read Full PDF

முனைவர் ச. நாகரத்தினம்

முதல்வர்

தமிழ்த்துறை

வள்ளியம்மையார் இந்து ஆசிரியை பயிற்சிநிறுவனம்

குலசேகரன்பட்டினம்.

 

ஆய்வுச் சுருக்கம்

வானம்பாடிகளின் பொது இயல்பான விமர்சனப் பாணியிலிருந்துகொண்டு பொருளாதார மேம்பாட்டு சிந்தனைகளைப் பற்றிய கருத்துக்களைப் பேசுவதில் மு.மேத்தா தனித்து நிற்கிறார். பொருளியல் கோட்பாடுகள் உலக நாடுகளில் பல்லாண்டுகளாக இருந்து வந்துள்ளன. இதற்கு நமது திருக்குறளும் ஒரு சான்றாகும். “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பது வள்ளுவரின் கருத்து, அறமும் இன்பமும் பொருளாலேயே அன்று முதல் இன்று வரை இருந்து வருகின்றன. இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த 5 ஆண்டு திட்டங்கள் தீட்டப்பட்டன. எனினும் அடித்தட்டு மக்களின் வறுமையை ஒழிக்க முடியவில்லை. இந்திய மக்களின் சராசரி வருமானம் அமெரிக்க மக்களின் சராசரி வருமானத்தில் 49ல் ஒரு பங்காக உள்ளது. மனித சமூகத்தில் 5 வகை வர்க்கப் பொருளாதார அமைப்புகள் நிலவுகின்றன.

  • பூர்வீகக் கூட்டு வாழ்க்கை (அடிமைத்தனம் இல்லை)
  • அடிமை முறை
  • நிலப்பிரபுத்துவம்
  • கம்யூனிசம் (சமதர்ம பொதுவுடைமையை வலியுறுத்தல்)

புரட்சியுணர்வு கொண்ட கவிதைகள் மு.மேத்தாவின் பொருளாதாரக் கருத்து பற்றிய சிந்தனையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. ஆட்சியாளர்களின் எல்லை மீறிய அடக்குமுறைக்கொடுமைகளாலும், சுரண்டல் தன்மைகளாலும் உள்ளுக்குள்ளேயே கனன்று கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில்தான் புரட்சி வெடிக்கிறது.

இந்த உலகமயமான பொருளாதாரத்தில் நல்ல வாய்ப்புகள் வரும்போது பயன்படுத்தவும் தீமைகள் வரும்போது தவிர்க்கவும்தான் இந்த அதிகாரப் பரவல் வந்துள்ளது. மு.மேத்தாவும் இக்கருத்தை வலியுறுத்துகிறார். இரவில் பெற்ற சுதந்திரம் இன்னும் விடியலைப் பெறவில்லை மு.மேத்தா அரளிப்பூ அழுகிறது எனும் கவிதையில் சிந்திக்க வைத்துள்ளார். உழைப்பு, போராட்டம, பொருளாதாரமே மனிதனை மதிக்கத்தக்கவையாக உயர்த்து;கின்றது.

 

திறவுச்சொற்கள் ;

பொருளாதாரம், மேத்தா, கோட்பாடுகள், வருமானம், இந்தியா

 

முன்னுரை

இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் தடையாக உள்ள மக்கள் தொகைப் பெருக்கம், வறுமை, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் முதலிய அகக்காரணிகளைவிட பொருளியல் கோட்பாடுகளையும் அது பற்றிய புரிதல்களையும் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியாத சமூகமாக நாம் மாறிப்போனதே பெரிதானதாக இருக்கிறது. எனவே பொருளாதார அடிப்படையில் கட்டமைப்புகள் போன்றவற்றைப் பொதுமக்களுக்கான திறப்புகளாக மாற்ற இலக்கியத்தின் பங்கு தேவையாகிறது. வானம்பாடிகளின் பொது இயல்பான விமர்சனப் பாணியிலிருந்து கொண்டு பொருளாதார மேம்பாட்டுச் சிந்தனைகளைப் பற்றிய கருத்துக்களை பேசுவதில் மு.மேத்தா தனித்து நிற்கிறார்.

அவரது 14 கவிதைத் தொகுப்பிலிருந்து மட்டும் பொருளாதாரச் சிந்தனைகளாக அவர் உணர்த்துவதை ஈண்டு காண்போம்.

 

இலக்கியமும் பொருளாதாரமும்

பொருளியல் கோட்பாடுகள் உலக நாடுகளில் பல்லாண்டுகளாக இருந்து வந்துள்ளன. இதற்கு நமது திருக்குறளும் ஒரு சான்றாகும். “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பது வள்ளுவரின் கருத்து, அறமும் இன்பமும் பொருளாலேயே அன்று முதல் இன்று வரை இருந்து வருகின்றன.. அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து, தீ தின்றி வந்த பொருள் (754) என்ற குறளில் வள்ளுவர் கூறியுள்ளார். மக்கள் நல்ல முறையில் பொருளீட்ட வேண்டும் என்றும். அதை உரிய முறையில் செலவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் குறள்களை அவர் இயற்றியுள்ளார். தீதின்றி வந்த பொருள் (754) தாளாற்றி தந்த பொருள் (212) உறுபொருள் உலகு பொருள் தறுபொருள் (756) என்பன போன்ற சொற்றொடர்கள் பொருளியல் தொடர்பானவை,

            “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்து
            வகுத்தலும் வல்லது அரசு"

2000 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய குறள் கோட்பாடு இக்காலத்திற்கு ஏற்றதாக அமைந்துள்ளதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இது இலக்கியத்திற்கும் பொருளாதாரத்திற்கும் உள்ள பிணைப்பைக் காட்டுகிறது. பாரதி தொடங்கி இன்றுவரை உள்ள புதுக்கவிதைக்காரர்களிடமும் பொருளாதாரச் சீர்த்திருத்தத்தையும் பாடவேண்டும் என்ற வேட்கை உள்ளது. மு.மேத்தாவும் அதில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்.

 

வர்க்கப் போராட்டக் கவிதைகள்

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த 5 ஆண்டு திட்டங்கள் தீட்டப்பட்டன. எனினும் அடித்தட்டு மக்களின் வறுமையை ஒழிக்க முடியவில்லை. இந்திய மக்களின் சராசரி வருமானம் அமெரிக்க மக்களின் சராசரி வருமானத்தில் 49ல் ஒரு பங்காக உள்ளது.

கீழ்க்காணும் புள்ளிவிவரம் இந்திய மக்களுக்கும் ஒரு நபர் உயிர்வாழத் தேவையான உணவு, உடை, உறையுள் கூட பெற முடியாத அளவு வருமானத்தைப் பெற்றுள்ளதைத் தெரிவிக்கின்றது.

இந்திய மக்களின் சராசரி வருட வருமானம் 1975-76ல் ரூ.1005 ஆக இருந்தது. ஆனால் 1961 ஆம் வருடத்தின் பணமதிப்பீட்டின்படி இது ரூபாய் 366க்கு சமம். இதுவே தமிழகத்தில் 1975-76ல் ரூ.851 ஆகவும் இதன் பணமதிப்பு 1961 ஆம் ஆண்டின்படி ரூ.338 ஆகவும் இருந்தது. தமிழக மக்களுக்குள் ஏழ்மைக் கோட்டிற்குக் கீழே ரூ.52.5 சதவீதத்தினர் வாழ்ந்து வருகின்றனர் என்று ஒர் ஆய்வு மக்களின் வருட வருமானம் சராசரி நிலையைக் கூறுகின்றது. கிராமங்களிலும் நகரங்களிலும் மக்கள் முன்னேற்றமின்றி ஏற்றத்தாழ்வோடு வாழ்ந்து வருவதை இவ்வாய்வு மெய்ப்பிக்கின்றது. இச்சூழ்நிலையில் இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகளைப் போக்கிச் சமதர்ம சமுதாயத்தை உருவாக்கிட தமிழ்ப்புதுக்கவிஞர்கள் தங்கள் படைப்புகளைப் பயன்படுத்திக் கொண்டனர்.இதனால் பாட்டாளி வர்க்கப் புரட்சியைப் போற்றியும் சுரண்டல்களை எதிர்த்தும் கவிதைகள் தோன்றின.

 

மு.மேத்தாவின் வர்க்கப்புரட்சி சில வரையறை

மனித சமூகத்தில் 5 வகை வர்க்கப் பொருளாதார அமைப்புகள் நிலவுகின்றன.

1. பூர்வீகக் கூட்டு வாழ்க்கை (அடிமைத்தனம் இல்லை)
2. அடிமை முறை,
3. நிலப்பிரபுத்துவம்,
4. முதலாளித்துவம்,
5. கம்யூனிசம் (சமதர்மப் பொதுவுடைமையை வலியுறுத்தல்)

கவிஞர் மு.மேத்தா கவிதைகளில் பயின்று வரும் வர்க்கப் போராட்டச் சிந்தனைகள் 3 நிலைகளாகப் பிரிக்கலாம்.

1. தொழிலாளர் வர்க்கப்போராட்டக் கவிதைகள்,
2. விவசாயிகள் வர்க்கப் போராட்ட கவிதைகள்,
3. பாட்டாளி மக்கள் புரட்சியை வரவேற்கும் கவிதைகள்.

 

தொழிலாளர் வர்க்கப் போராட்டக் கவிதைகள்

அதிகார வர்க்கம் ஏழை மக்கள் சலுகைகளில் ஏமாற்றிய காலம் முடிந்துவிட்டது. எனவே சலுகைகளை உதறித்தள்ளி உரிமைப்போருக்கு உறுதியோடு வாருங்கள் என்று அழைக்கிறார் மு.மேத்தா. புரட்சியுணர்வு கொண்ட கவிதைகள் மு.மேத்தாவின் பொருளாதாரக் கருத்து பற்றிய சிந்தனையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.

           ‘ஒப்பந்தம் தற்காலிகமானது
            உயிரையே பணயம் வைத்து
            நடத்தும்
            நிஜமான போராட்டமே
            நிரந்தரமானது’

 

விவசாயிகள் வர்க்கப் போராட்ட கவிதைகள்

விவசாயிகளை ஏமாற்றும் செயலும் திட்டமும் தொடர்ந்து நடந்தேறி வருகின்றன. இதனை எஸ்.அறிவுமணி, மித்ரா, இன்குலாப் போன்ற கவிஞர்கள் பாடியுள்ளனர். இதில் மு.மேத்தாவும் ஒருவர். நிலம் உடைமையாளர்கள் நிலம் இல்லாதவர்கள் ஆகிய இருவர்க்கங்கள் மு.மேத்தா கவிதைகளில் இரு மையங்களாக விளங்குவதைக் காண முடிகின்றன. சாதி தொடர்பான பிரிவினைகளும், ஏற்றத்தாழ்வுகளும் வர்க்கப் போராட்டத்தை வலுவடையச் செய்யும் காரணிகளாக இருப்பதை மேத்தாவின் கவிதைகள் காட்டுகின்றன

           “உரசப் பயந்து
            ஒய்ந்து கிடந்தால்
            தீக்குச்சியை
            விளக்குக் கூட
            விவாகரத்து செய்கிறது."

என்று விவசாயிகளின் வர்க்கப் புரட்சிக்கு அறைகூவல் விடுக்கிறார் மு.மேத்தா.

 

பாட்டாளி மக்கள் புரட்சியை வரவேற்கும் கவிதைகள் :

பொதுவாக எந்தவொரு நாட்டில் வாழும் மக்களும் புரட்சி மனப்பான்மை கொண்டவரல்லர். மனித உரிமைகள் மிகக் கீழான நிலைக்குக் கொண்டு போகப்பட்டு அடக்குமுறைகளும் அநியாயங்களும் அதிகமாக நடைபெற்றாலும் அவற்றுக்கெதிராக மக்கள் உடனே திரண்டெழுவதில்லை என்றாலும் அவற்றின் மீது சொல்ல முடியாத அளவுக்கு வெறுப்பு தோன்றியிருக்கும்.இவ்வெதிர்பானது ஆட்சியாளர்களின் எல்லை மீறிய அடக்குமுறைக்கொடுமைகளாலும், சுரண்டல் தன்மைகளாலும் உள்ளுக்குள்ளேயே கனன்று கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தான் புரட்சி வெடிக்கிறது. இப்புரட்சியை அடக்கியாள நினைக்கிற ஆட்சியாளர்களின் எதிர்தாக்குதலுக்கு ஏற்ப புரட்சியாளர் தன்மை தீர்மானிக்கப்படுகிறது.

பாட்டாளி மக்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழும் இவ்வதிகார அடக்குமுறைகள் எல்லை மீறும் போதும், புரட்சி வெடிக்கிறது.

           “வயிற்றில் எரியும்
            நெருப்பு வளர்ந்தால்
           கட்டாயம் ஒரு நாள்
            இந்தத்
            தேசமே
           தீக்குளிக்கும்”

வர்க்கப் போராட்டத்தின் இறுதிக்கட்டம் புரட்சியில் முடிகின்றது. மு.மேத்தாவின் கவிதை வரிகள் இதையே காட்டுகின்றன.

 

நிர்வாகச் சீர்திருத்தம்

நம் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாடுகளில் இருந்து நம்நாட்டிற்கு முதலீடு செய்து தொழில் தொடங்க வருகின்றவர்களுக்குப் பல அலுவலகங்களுக்குச் சென்று அனுமதி பெறும்போது எங்கு பார்த்தாலும் லஞ்சம் கேட்டுத் தொல்லை தருகின்றனர். இதனை எதிர்க்கும் கருத்தாக்கத்தினைக் கொண்டது மு.மேத்தா கவிதைகள்.

ஒரு கிராமத்தில் ஏழைக்குத் தேவையான நிலம், வீடு, வாழ்வாதாரம், குழந்தைகள், அரசுப்பள்ளி மருத்துவமனை இவை அனைத்தும் இருப்பதாக அரசு சொல்கிறது. உண்மைதான் ஆனால் செயல்படுகின்றனவா? என்பது தான் கேள்விக்குறி கிராம அதிகாரி இருக்கிறார்! ஆசிரியர் இருக்கிறார், சுகாதார செவிலியர் இருக்கிறார், பஞ்சாயத்தில் 5 குழுக்கள் இருக்கின்றன. ஒய்வு பெற்ற அலுவலர்கள் இருக்கிறார்கள். சுய உதவிக்குழு பெண்கள் இருக்கிறார்கள். இளைஞர்கள் அமைப்பில் உள்ள இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் இதுவரை ஒன்றுகூடிப் பேசியதுண்டா? கிராமத்துப் பிரச்சினைகளைப் பற்றி ஒன்றுகூடி யோசித்தது உண்டா? தங்களுக்கு மேல் அதிகாரிகளுக்குக் கட்டுப்பட்டு சொன்ன வேலை செய்யும் பணியாளர்களாக இருக்கின்றனரே அன்றி தாங்கள் மக்களுக்குக் கடமைப்பட்டவர்கள் என்ற உணர்வைப் பெறுவதே இல்லை அப்படிப்பட்ட உணர்வையும் கடமையையும் அவர்களிடம் அரசு உருவாக்கவில்லை. ஆக அனைவரும் தங்களின் துறைமேல் அதிகாரிகள் தங்கள் செயல்பாடுகளில் நிறைவடைந்தால் போதுமானது என்று எண்ணும் மனோபாவமே நமது அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் வந்துவிட்டது.

           “நரசிம்மம் இருக்கிறது!
            இருந்தும், அவதாரம்
            எடுக்க மறுக்கிறது!
            ஏனென்றால்
            இரணியனும் அவரும்
            ஒரே கட்சி!
            பாவம்
            பிரகளாதர்கள்தான்
            பிளக்கப்படுகிறார்கள்!
            வால்காவின் கரை மீது
            வளமாக நிமிர்ந்திருந்த
            இரும்புக்கோட்டையே
            இடிந்து விட்டது!
            செங்(கல்) கோட்டையே
            நீ
            சிந்திக்க வேண்டாமா?”

என்று கிராமப்புற நிர்வாகத்தைச் சீர்திருந்த அறைகூவல் விடுகிறார் மு.மேத்தா.

 

அதிகாரப்பரவல் அரசியல்

இந்த உலகமயமான பொருளாதாரத்தில் நல்ல வாய்ப்புகள் வரும்போது பயன்படுத்தவும் தீமைகள் வரும்போது தவிர்க்கவும்தான் இந்த அதிகாரப் பரவல் வந்துள்ளது மு.மேத்தாவும் இக்கருத்தை வலியுறுத்துகிறார்.

 

நேற்றைய பொழுது

           அவர்களிடமிருந்தது!
           இன்றைய பொழுது
           இவர்களிடமிருக்கிறது!
           நாளைய பொழுதாவது
           நம்மிடம் வரட்டும்!

என்று கீழ்த்தட்டு மக்களுக்கான அதிகாரப்பரவலாக்கக் குரலாக மேத்தாவின் கவிதைக் குரல் வெளிப்படக் காணலாம்.

 

சுகாதார மேலாண்மை

சுகாதாரமின்மை பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெருந்தடையாக உள்ளதாக மு.மேத்தா குறிப்பிடுகிறார். இலங்கையில் சுதந்திரம் அடைந்தவுடன் “கை கழுவும் திட்டம்” எனக் கூறி குறிப்பாக குழந்தைகளுக்கு நகம் வெட்டுவது எப்படி? பல் துலக்குவது எப்படி? என்பதைச் சொல்லித்தந்ததன் விளைவு இன்று இலங்கை தெற்காசியப் பகுதியில் மானுட மேம்பாட்டில் மேல் நிலையில் உள்ளது. அந்த நாடு பொருளாதாரத்தில் சிரமப்பட்டாலும், மானுட வாழ்க்கை ஆரோக்கியமாக உள்ளது. எனவே அதேபோல் இந்தியாவிலும் நம் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நம் ஊடகங்கள் நம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து அரசுடன் வேலை செய்தால் சாதிக்க முடியும். இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் என்பது மக்களை எந்த அளவிற்குத் தயார் செய்கிறோமோ அந்த அளவிற்கு வளர்ந்த தொழில்நுட்பமும் எல்லையில்லா மூலதனமும் பயன்பாட்டிற்கு வந்து எல்லோருக்கும் பொருளாதார மேம்பாட்டைத் தரும் எனவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திட்டங்களும் நிதியும் மட்டுமல்ல இதைத் தாண்டி பொதுமக்களின் அறிவார்ந்த செயல்பாடும்தான். தண்ணீரின் மூலம் நாம் இன்று துண்டாடப்பட்டு வருகிறோம் மு.மேத்தா.

           “ஆறுகளின் மேனியில் கூட
            கட்டுகள்
           அடுத்தவர் போட்ட
            கட்டுகள்
            அணைக்கட்டுகளாம்”

எனவே நதி நீர்ப்பிரச்சனை அவரின் பாடுபொருளாகிறது 1950 முதல் 1980 வரை 35 விழுக்காடுதான் நம் நாட்டுப் பொருளாதாரம் வளர்ந்தது. இக்குறைந்த வளர்ச்சி அதிக நபர்களுக்கு வேலைதர முடியவில்லை என்கிறார். பொருளியல் ஆய்வாளர் வே.கலியமூர்த்தி. இந்நிலைக்குக் காரணம் போதிய உற்பத்தியின்மை, உற்பத்தியின்மைக் காரணம், தொழிற்துறை வளர்ச்சியின்மை அதற்குக் காரணம் விவசாயம் குறைந்து வருதல், விவசாயம் குறைந்து போனதற்குக் காரணம் நீர் மேலாண்மை இல்லாமை மற்றும் பிரிவினைப் பேதங்கள் ஆக மு.மேத்தா குறிப்பிடும் காரணமே இங்கு அடிப்படையாகிறது.

 

சமுதாயச் சிக்கல்

கவிஞர்.மு.மேத்தா ஆண், பெண், மூன்றாம் பாலினத்தார் ஆகிய முப்பாலரும் சமுதாயத்துள் அடங்குபவர் ஆனால் சமத்துவ சமுதாயம் இன்று இல்லை இச்சமுதாயத் தேய்வும் பொருளாதார வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக அமைகிறது என்கிறார் மு.மேத்தா.

 

சுதந்திரம்

இரவில் பெற்ற சுதந்திரம் இன்னும் விடியலைப் பெறவில்லை மு.மேத்தா அரளிப்பூ அழுகிறது எனும் கவிதையில்;

           பூக்களிலே நானுமொரு
            பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன்
            பூவாகப் பிறந்தாலும்
            பொன் விரல்கள் தீண்டலையே!
            பொன் விரல்கள் தீண்டலையே! – நான்
            பூமாலையாகலையே”

பொருளின்மையில் மகளிர் முதிர்கன்னியராகின்றனர். பொருளாதாரத்திலும் விடுதலைப் பெறாத மகளிர் சிக்கலைச் சந்திக்கின்றனர். அரசியலில் இட ஒதுக்கீட்டிற்காக காத்திருக்கின்றனர்.

 

பொருளாதாரம்

வாழ்க்கையின் ஆதாரம் பொருள், எல்லார்க்கும் எல்லாப் பொருளும் வாய்த்துவிட்டால் பொதுவுடைமைச் சமுதாயம் மலரும் வர்க்க முரண்பாடில்லை உடையான் - இல்லான், ஆண்டான் - அடிமை என்ற இனவேறுபாடு. அகலும், மனித இனம், மனித அறிவு வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப சமுதாய மாற்றம் ஏற்படும்

           “பொருளாதாரத்தில்
            பொதுவுடைமைவராமல்
            சூரியனின்
            வெளிச்சமும் சரியாக
            விநியோகமாகாது
            உறவுகளில் கூட இங்கு
            உண்மை இருக்காது
            சமூகத்தில் அனைவருக்கும்
            சமஉரிமை எட்டும் வரை
            சங்கடங்கள் தீராது.

என்ற பொருளாதார சமத்துவத்தைச் சிந்திக்க வைத்துள்ளார்.

“பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்ற அய்யன் திருவள்ளுவர் வாக்கு இங்கு நினையத்தக்கது.

           “ஆறுகளின் மேனியில் கூட
            கட்டுகள்
           அடுத்தவர் போட்ட
            கட்டுகள்
            அணைக்கட்டுகளாம்”

எனவே நதி நீர்ப்பிரச்சனை அவரின் பாடுபொருளாகிறது 1950 முதல் 1980 வரை 35 விழுக்காடுதான் நம் நாட்டுப் பொருளாதாரம் வளர்ந்தது. இக்குறைந்த வளர்ச்சி அதிக நபர்களுக்கு வேலைதர முடியவில்லை என்கிறார். பொருளியல் ஆய்வாளர் வே.கலியமூர்த்தி. இந்நிலைக்குக் காரணம் போதிய உற்பத்தியின்மை, உற்பத்தியின்மைக் காரணம், தொழிற்துறை வளர்ச்சியின்மை அதற்குக் காரணம் விவசாயம் குறைந்து வருதல், விவசாயம் குறைந்து போனதற்குக் காரணம் நீர் மேலாண்மை இல்லாமை மற்றும் பிரிவினைப் பேதங்கள் ஆக மு.மேத்தா குறிப்பிடும் காரணமே இங்கு அடிப்படையாகிறது.

 

சமுதாயச் சிக்கல்

கவிஞர்.மு.மேத்தா ஆண், பெண், மூன்றாம் பாலினத்தார் ஆகிய முப்பாலரும் சமுதாயத்துள் அடங்குபவர் ஆனால் சமத்துவ சமுதாயம் இன்று இல்லை இச்சமுதாயத் தேய்வும் பொருளாதார வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக அமைகிறது என்கிறார் மு.மேத்தா.

 

சுதந்திரம்

இரவில் பெற்ற சுதந்திரம் இன்னும் விடியலைப் பெறவில்லை மு.மேத்தா அரளிப்பூ அழுகிறது எனும் கவிதையில்;;;

           பூக்களிலே நானுமொரு
           பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன்
           பூவாகப் பிறந்தாலும்
           பொன் விரல்கள் தீண்டலையே!
           பொன் விரல்கள் தீண்டலையே! – நான்
           பூமாலையாகலையே”

பொருளின்மையில் மகளிர் முதிர்கன்னியராகின்றனர். பொருளாதாரத்திலும் விடுதலைப் பெறாத மகளிர் சிக்கலைச் சந்திக்கின்றனர். அரசியலில் இட ஒதுக்கீட்டிற்காக காத்திருக்கின்றனர்.

 

பொருளாதாரம்

வாழ்க்கையின் ஆதாரம் பொருள், எல்லார்க்கும் எல்லாப் பொருளும் வாய்த்துவிட்டால் பொதுவுடைமைச் சமுதாயம் மலரும் வர்க்க முரண்பாடில்லை உடையான் - இல்லான், ஆண்டான் - அடிமை என்ற இனவேறுபாடு. அகலும், மனித இனம், மனித அறிவு வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப சமுதாய மாற்றம் ஏற்படும்

           “பொருளாதாரத்தில்
           பொதுவுடைமைவராமல்
            சூரியனின்
            வெளிச்சமும் சரியாக
            விநியோகமாகாது
           உறவுகளில் கூட இங்கு
           உண்மை இருக்காது
            சமூகத்தில் அனைவருக்கும்
           சமஉரிமை எட்டும் வரை
           சங்கடங்கள் தீராது.

என்ற பொருளாதார சமத்துவத்தைச் சிந்திக்க வைத்துள்ளார்.

“பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்ற அய்யன் திருவள்ளுவர் வாக்கு இங்கு நினையத்தக்கது.

 

மதநல்லிணக்கம்

கனவுக் குதிரை என்ற கவிதைத் தொகுப்பில்;;

           இராமர் கோவிலா
           பாபர் மசூதியா
           இந்தியனே! இந்தியனே!
           முதலில்
           நீ இருக்க
           ஒரு
           இடம் தேடு
           ஆண்டவனுக்கு வேண்டிய இடத்தை
           அவன் தேடிக்கொள்வான்!
           பாவம்!
           கடவுளைப் பற்றி அதிகம் தான்
           கவலைப்படுகிறார்கள்
           கடவுளோ
           மனிதர்களை எண்ணியன்றோ
           மனம் வருந்துகின்றான்

என்று கூறுவதில் மதநல்லிணக்கம் தொனிக்கிறது. இறைவனுக்கு மதம் கிடையாது. ஆனால் மதத்தின் பேரால் நாம் தூண்டப்படுகிறோம். பொருளாதாரத் தேய்;விற்கு இது அடிப்படையாகிறது.

 

வறுமை

நாட்டின் எல்லைகளுக்காகப் போராடும் நிலை மட்டுமல்ல, வறுமை நீங்கவும் போராட வேண்டும் ஏனென்றால் வறுமை இல்லாத நாடுதான் பொருளாதாரத்தில் உயர்வான நாடாக இருக்க முடியும் இதனைத்தான் கவிஞர் மு.மேத்தா

           “நாடுகள் தாண்டவேண்டியது
            எல்லைக் கோடுகளையல்ல
            வறுமைக் கோடுகளை”28 எனக் குறிப்பிடுகிறார்.

மாத ஊதியம் பெறும் மனிதனின் அவல வாழ்க்கையை

            என்னுடைய சம்பள நாளில்
           எண்ணி வாங்குகிற
           பளபளக்கும் நோட்டுகளில்
           எவரெவர் முகமோ
           தெரியும்
           என் முகத்தைத் தவிர என்கிறார்.

 

உழைப்பு

            உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாமை
            “உழைத்த கைகளுக்கு
           அடிமை விலங்கும்
           உதைத்த கால்களுக்கு
           உயர்ந்த நடைவிரிப்பும்
           கிடைக்கும் என்றால்
           திருத்தப்படவேண்டியது
           தரித்திரம் மட்டுமல்ல
           சரித்திரமும் தான்!

என்ற வரிகள் மூலம் நாட்டு சரித்திரத்தை மாற்றி அமைக்கும் போதுதான் தரித்திரமும் மாறும் என்பதைப் புரட்சி மனப்பான்மையோடு அறைகூவல் விடுக்கிறார்.

 

அறியாமை

மக்களின் அறியாமையினால் அரசியல் தலைவர்கள் கூட மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள.; இதனை மேத்தாஇ

           சட்டதிட்டம் ஏதுமின்றி
            சர்க்கார் வரிப்பணத்தால்
            தன்னுடைய காதலிக்கு
           தாஜ்மகால் கட்டியதால்
           ஷாஜஹானைக் கூட
           சந்திக்கு இழுத்து வந்து
           வேடம் களைகின்ற
           வேளை வரவேண்டாமா?
           ஏழ்மை, அறியாமை,
           இவற்றால்
           இங்கே
           வெட்டரிவாள் கூட
           விசிறியாய்ச் சுழல்கிறது.

இக்கவிதை வரிகளில் சமுதாயத்தில் நிலவும், அறியாமையை வெளிப்படுத்தி அரசியல் தலைவர்களையும் கேள்வி கேட்கும் நிலை உருவாக வேண்டும் எனப் புரட்சிகரமாக இளைஞர்களுக்கு அறைகூவல் விடுகின்றார்.

அறியாமை தான் ஊழலையும், லஞ்சத்தையும் பெருக்கும். பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக அமையும் என்பது மு.மேத்தாவின் கருத்தாகும்.

 

போராட்டம்

          பெருமூச்சு என்றைக்குப்
          புயலாக மாறுமோ?
          முணுமுணுப்பு எப்போது
          முழக்கங்களாகுமோ?
          இந்தியக் கும்பகர்ணர்கள்
          எப்போது
          இலக்கிய சீற்றத்துடன்
          எழுந்து நிற்பார்களோ?
          அப்போது தான்
          பதவி நாற்காலிகள்
          நமக்குப் பயன்படும்
          அது வரைக்கும்
          நாற்காலிகளெல்லாம்
          உங்களுடைய தலை மீதே
          உட்கார்ந்து கொண்டிருக்கும்!

என்ற வரிகள் மூலம் பொருளாதார முன்னேற்றத்திற்குத்தடைக்கற்களாக இருப்பவை அரசும், அரசின் செயல்பாடுகளும். அரசியல் தலைவர்களுமே என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றார்.

 

முடிவுரை

பொருளாதாரமே மனிதனை மதிக்கத்தக்கவையாக உயர்த்துக்கின்றது. எனவே பன்னாட்டுப் பொருளியல் கொள்கைகளை வரலாற்று அடிப்படையில் இக்காலம்வரை உணர்ந்து வெளிப்படுத்துவதை மு.மேத்தா கவிதைகள் உறுதி செய்கின்றன. அதிகார வர்க்கத்தினர் ஏழை மக்களைச் சலுகைகளால் ஏமாற்றுகின்றதையும், உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் வழங்காததையும் இவரது கவிதைகள் வெளிப்படுத்தி அதிகாரவர்க்கத்தினரின் அதிகாரங்களை அடக்கி அவர் சலுகைகளை உதறித்தள்ள வேண்டும் என்ற சிந்தனையை ஏற்படுத்துவதோடு பொருளாதார முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாக இருப்பவை அரசும், அரசின் செயல்பாடுகளும் அரசியல் தலைவர்களுமே என்பதை இவ்வாய்வு வெளிப்படுத்தி இந்திய மக்களின் சமூக, பொருளாதார வசதிகள் எவ்விதத்திலும் அதிகரிக்கவில்லை என்பதையும் இவ்வாய்வு உறுதி செய்கின்றது.

 

நூல் குறிப்புகள்

1. மு.மேத்தா என்னுடைய போதி மரங்கள் ப.42.
2. அருணாச்சலம் மு.இன்குலாப் கவிதைப்படைப்புலகம் ப.5
3. மு.மேத்தா என்னுடைய போதிமரங்கள் ப.49
4. மு.மேத்தா அவர்கள் வருகிறார்கள். ப.16
5. மு.மேத்தா காத்திருந்த காற்று ப.41
6. மு.மேத்தா கனவுக்குதிரை ப.25
7. மு.மேத்தா காத்திருந்த காற்று ப.18
8. மு.மேத்தா திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் ப.21
9. வே.கலியமூர்த்தி, இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஆய்வும், அணுகுமுறையும் ப.39.
10. மு.மேத்தா முகத்துக்கு முகம் ப.52
11. மு.மேத்தா கண்ணீர்ப்பூக்கள் ப.54
12. மேலது ப.47
13. மேலது ப.91
14. மேலது ப.44
15. மேலது ப.63
16. மு.மேத்தா ஊர்வலம் ப.59
17. மேலது ப.46
18. மு.மேத்தா முகத்துக்கு முகம் ப.52