தமிழகப்பாறை ஓவியங்களில் ஓரையான் என்னும் விண்மீன்தொகுதியின் பதிவுகள் - ஓா்ஆய்வு

- கா.பால கிருஷ்ணன், 25 April 2019 கட்டுரை Read Full PDF

- கா.பால கிருஷ்ணன்,

முதல்வர்

பாரதி மேல் நிலைப் பள்ளி

திருச்சி

 

ஆய்வுச் சுருக்கம்

இரவுவானில் வைரங்களாக மின்னும் விண்மீன் கூட்டங்களை வியந்து பார்க்காதவர் நம்மில்யாருமில்லை! இவ்விண்மீன்களைக் கண்டு அவற்றைப் பாறை ஓவியங்களிலும், பழங்கதைகளிலும் பதிவு செய்யும் வழக்கம் பல ஆயிரம் ஆண்டுகளாகவே நம்முன்னோர்களுக்கு உண்டு. உடுக்கணங்கள் என்றழைக்கப்படும் விண்மீன் தொகுதிகளில், அனைவரின் சிந்தையை ஈர்க்கும் ‘ஓரையான் விண்மீன்தொகுதியை’(Orion Constellation) தமிழர்கள் எங்ஙனம் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதைப்பற்றிய ஓர் ஆய்வே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

           

திறவுச்சொற்கள்

Orion, ஓரையான், ஓரை, பாறைஓவியம், விண்மீன், நட்சத்திரம்,Constellations

           

முன்னுரை

உலகவரை படத்தில் நகரங்களைப் புள்ளிகளாகக் குறித்துக்கொண்டு நாடு மற்றும் மாநில எல்லைகளை எல்லாம் அழித்துவிட்டால் வரைபடத்தில் புள்ளிகள் மட்டும் தெரியுமல்லவா! அதுபோலத்தான் மொத்தமாகப் பார்க்கும் போதுவானில் அத்தனையும் ஒரேமாதிரியாகக் காணப்படும் பலவிண்மீன்களாகத் தெரியும். அவற்றைச் சிறுகுழுக்களாகப் பிரித்துப் பெயரிட்டால் அவற்றை எளிதாக இனங்காண முடியுமல்லவா? அறிவியல் இன்றைய நிலைப்போல் வளா்ந்திராத அக்காலத்திலேயே பழந்தமிழர்கள் இவற்றை இனம் கண்டு அதனை பதிவு செய்ததன் மூலம் நமக்குப் பல தகவல்களையும் விட்டுச்சென்றுள்ளனர்.

நமது முன்னோர்கள் வானில் மின்னும் விண்மீன்களைப் பல தொகுதிகளாகப் பிரித்து அவற்றிற்குக் கற்பனையான வடிவம் கொடுத்துப் பெயரிட்டு அழைத்துள்ளனர். தாங்கள் அன்றாடம் பார்க்கும் விலங்குகள், பறவைகள், பொருள்கள், புராணக்கதைகளில் வரும்நாயகர்கள், பண்டையகடவுளர்கள் ஆகியோரை உருவகப்படுத்தி இந்த விண்மீன் தொகுதிகளுக்குப் பெயரிட்டு அழைத்தனர். ஓரையான், சிங்கம் அன்னம், தேள், கரடி, நாய், காகம், நண்டு, ஆடு, காளை, மீன்போன்ற பல விண்மீன் தொகுதிகளையும் உருவாக்கியிருக்கின்றனா். தற்போது, உலக அளவில், ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்பதற்காக வானவியலார், 88 விண்மீன் தொகுதிகளை வரையறுத்து அங்கீகரித்திருக்கின்றனர். இவை அனைத்தையும் ஒரே இடத்திலிருந்து ஒரே நேரத்தில் பார்க்க இயலாது. நாம் இருக்குமிடத்திலிருந்து எந்தெந்தக் காலங்களில் எந்தெந்த விண்மீன் தொகுதிகளைப் பார்க்க முடியும் எனத்தெரிந்து கொள்வது அவசியமாகும்.

           

விண்மீன்கள்எனப்படும் நட்சத்திரங்கள்

நீலநிறமாய் விரிந்திருக்கும் பகற் பொழுதுவானத்தில் மேகத்தையும் சூரியனையும் பார்க்கிறோம் ஆனால், சூரியன்மறைந்த பிறகு நாடகக்காட்சி மாறுகிறது. வைரங்களாக விண்மீன்களைப் பதித்த வானம் பகட்டாகக் காட்சியளிக்கிறது. முற்கா்லத்தில் வாழ்ந்தவா்களுக்கு வானம் ஒருசிறந்த ஆசிாியராக திகழ்ந்துள்ளது. வானத்தைத் தொடா்ந்து பாா்த்து கால நிலை மாற்றங்களைப் புாிந்துகொண்டு அதன்படி தங்கள் வாழ்க் கைமுறைகளை நம் முன்னோா்கள் அமைத்துக்கொண்டனா்.

சிறந்தவான் நோக்குபவா்களா கத்திகழ்ந்த அவா்கள் விண்மீன்கூட்டங்களை அடையாளம் காணமுற்ப ட்டு அவற்றிக்கு பல்வேறு பெயா்களிட்டு அழைத்தனா்.

ஒளிமாசற்ற அக்காலத்தில் தெளிவாக தொிந்தவானம், தற்காலங்களில் நகரத்தின் ஒளியினாலும், வாகனங்கள், தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் புகை, தூசிகளாலும் நம்மால் தெளிவாகப் பார்க்கப்படும் வான்பரப்பு குறைந்துநகா் புறங்களிலிருந்து விண்மீன்களை அடையாளம்கா ண்ப தென்பது கடினமாகிவிட்டது.நிலவுஇல்லாத, தெளிவான வானத்துடன், நகரங்களின் விளக்கொளியிலிருந்து விலகியிருந்தால் நாம் இவ்வழகினை இரவு முழுவதும் கண்டு இரசிக்கமுடியும்.

அவ்வாறு பார்க்கும் நமக்கு எத்தனை விண்மீன்களை அடையாளம் காணமுடியும் என்று சொன்னால்வி யப்பாக இருக்கும்.

ஆம்… நிலவு இல்லாத வானவெளியில் வெறுங்கண்ணால் நம்மால் தோராயமாக 300 விண்மீன்களைப் பார்க்கமுடியும்.

ஆனால்,முதலில் விண்மீன்களின் எண்ணிக்கை நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும். அவற்றைத் தனித்தனியே அடையாளம் காணமுடிந்தால் மட்டுமே அடுத்தநிலைக்குச் செல்லமுடியும். அவற்றை எளிதாக அறிந்துகொள்ள சிலவழிமுறைகளை அறிந்துகொள்ளுதல் வேண்டும். உடுக்கண ங்கள் அல்லது விண்மீன் தொகுதிகள் அல்லது நட்சத்திரக்கூட்டங்கள் என்றால்என்ன? இவற்றை எப்படி அடையாளம் காண்பது? என்பதைப் பற்றி முதலில் அறிந்துகொள்வது அவசியமான து.

உடுக்கணம் என்பதற்கு விண்மீன் கூட்டம் எனப்பொருளாகும்.வான்வெளியில் 88 விண்மீன் தொகுதிகளில் சூரியப்பாதையில் காணப்படும் 12 தொகுதிகளைத்தான் 12 இராசி மண்டலங்கள் என்கிறோம். மொத்தமுள்ள 88 தொகுதிகளில் ஏறத்தாழ 20 தொகுதிகளை நம்மால் எளிதில் அடையாளம் காணமுடியும். ஆரம்பநிலை வான்நோக்குபவர்கள், இவற்றை அடையாளம் கண்டு இவற்றின் வழியேமற்ற தொகுதிகளை அடையாளம் காண இயலும். முதலில் ஓரையான், பெருங்கரடி, தேள், சிங்கம் போன்ற எளிதில் இனம் கண்டுகொள்ளக்கூடிய விண்மீன் தொகுதிகளைப் பார்த்து அறிந்துகொண்டபின் ஏனையவற்றையும்காண முயலாம். ஒருசில விண்மீன் தொகுதிகள் நமக்கு மற்ற விண்மீன்கள் இருக்கும் இடத்தைச்சுட்டு ம்கலங்கரை விளக்கங்களாகத் திகழ்கின்றன. எனவே நாம் அவற்றிலிருந்து மற்றவற்றைத் தெரிந்து கொள்ளமுயல்வ தேநன்று. அந்த வகையில் ஓரையான் என்னும் வேட்டைக்காரனை முதலில் பார்ப்போம்.

(படம்1) (எனதுகள ஆய்வில் நான் எடுத்தபடம்)

           

ஓரையான்

வான்நோக்குவர்களுக்கு ஆரம்பத்தில் எளிதாகக் கண்டுகொள்ளக்கூடியதும் பார்ப்பவர்களின் கருத்தைக் கவரக்கூடியதுமான விண்மீன் தொகுதிகளில் ‘ஓரையான்’முதன்மையானது. குளிர்காலம் முழுவதும் வானில் தோன்றும் இதன் வேட்டைக்காரன் தோற்றமும், பொலிவுமிக்க ‘பீட்டில்ஜீஸ்’ ‘ரைஜல்’ ஆகிய முதல் தரபொலி வெண்கொண்ட விண்மீன்களும் நமது ஆர்வத்தைத் தூண்டும் என்பதில் ஐயமில்லை. வேட்டைக்காரன் ஒருவன் தனது வலக்கையில் தடியொன்றைத் தூக்கியவாறும், இடக்கையில் கேடயத்தை ஏந்தியவாறும் நின்ற வாறுள்ள தோற்றத்திலிருக்கும் விண்மீன் தொகுதிதான் ஓரையான்.

மூன்று வாிசையான விண்மீன்களைக் கொண்ட இடைப்பட்டையில் கத்தி ஒன்று தொங்கிக்கொண்டி ருக்கும். இந்த விண்மீன் தொகுதியிலுள்ள ஒளிமிகுந்த வான் பொருள்களைக் காண்போமா?

           

பீட்டில்ஜீயஸ் எனப்படும் திருவாதிரை

வேட்டைக்காரனின் வலத்தோளில் இளஞ்சிவப்பு நிறத்துடன் பொலிவுடன் விளங்கும் இவ்விண்மீன் நமது சூரியனை விட 300 மடங்குப்பெரியது. இது ‘ரெட்ஜெயண்ட்’ எனப்படும் செம்பூதவிண்மீன் வகையைச் சேர்ந்தது. ஒரு விண்மீன் தொகுதியிலுள்ள விண்மீன்களில் பொலிவு அதிகமாக உள்ளவிண்மீனை அத்தொகுதிப் பெயருக்கு முன்னால் ஆல்பா என்ற வார்த்தையைச் சேர்ப்பர், அந்தவகையில் இது “ஆல்ஃபாஒரரையானிஸ்’ என்றவான வியல் பெயரைப் பெறுகிறது. தமிழ் மரபில் ‘திருவாதிரை’ எனவும் வடநாட்டு மரபில் ‘அர்த்ரா’ எனவும் வழங்கப்படும் இம்மீன் நம்மிலிருந்து 520 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

           

ரைஜல் எனப்படும் வான்ராஜ்

வேட்டைக்காரனின் இடதுகாலில் உள்ளமற்றொரு பொலிவுமிக்க விண்மீன் ரைஜல் ஆகும். ஓரையான் விண்மீன் தொகுதியில் இரண்டாவது பொலிவு மிக்க இம்மீன் பீட்டா ஓரையானிஸ் என்றவான் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்திய மரபில் வான்ராஜ் என அழைக்கப்படும் இம்மீன் திருவாதிரையை விட அளவில் பெரிதாக இல்லை என்றாலும் நம் சூரியனைப் போல் 60,000 மடங்கு பொலிவானது. வெளிர் நீலநிறத்துடன் பொலிவுடன் விளங்கும் ரைஜல் நம்மிலிருந்து 900 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

           

அல்நிலம், அல்நிதக், மின்தகா

வேட்டைக்காரனின் இடுப்புக்கச்சையில் காணப்படும் வரிசையான மூன்று விண்மீன்களைப் பார்க்காதவர்களே இருக்கமுடியாது.வாிசையான மூன்று விண்மீன்களை நாம்எளிதில் அடையாளம் காணமுடியும், அவைஅல்நிலம், அல்நிதக், மின்தகா ஆகும். இவற்றில் அல்நிலம், அல்நிதக் ஆகியவை 1600 ஒளியாண்டுகள் தொலைவிலும், மின்தகா 1500 ஒளியாண்டுகள் தொலைவிலும் உள்ளன.

           

ஓரையான் நெபுலா எனப்படும் M42

ஓரையானின் இடுப்புக்கச்சையில் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தியானது நம்மை ஈர்க்கும் வான்பொருளாகும். வெறும் கண்ணால் பார்கும்போது நடுவில் ஆவிபோலத் தெரியும் இதை இருகண் தொலைநோக்கி ஒன்றின் வழியேபார்க்கும் போது வியப்பான காட்சியை நமக்களிக்கும்.இளம்பச்சை நிறத்தில் பஞ்சு போன்று தோன்றும் இவ்வான் பொருள் ஒரு நெபுலா ஆகும். புதிதாகப் பிறந்திருக்கும் விண்மீனிலிருந்து வெளிப்படும் ஒளியானது அதைச் சுற்றிக் காணப்படும் பெரிய தூசி மண்டலங்களால் பிரதிபலிக்கப்படுவதால், இந்த ஆவி போன்ற தோற்றம் ஏற்படுகிறது. இருகண் தொலை நோக்கி வழியே இளம்பச்சை நிறத்தில் தோன்றினாலும் இதன் உண்மை நிறம் இளஞ்சிவப்பாகும். இதுநம்மிலிருந்து 1500 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

(படம்2)

(எனதுகள ஆய்வில் நான் எடுத்தபடம்)

           

ஓரையான் என்னும் கலங்கரை விளக்கம்

ஒரு நகரத்திலுள்ள ஊரை அடையாளம் காண அதனருகில் இருக்கும் பேரூரைசுட்டி அதிலிருந்து எத்திசையில் எவ்வளவு தொலைவில் இவ்வூர் உள்ளது எனக்கூறுவோம் அல்லவா. அதுபோலத்தான் ஓரையானைக் கொண்டு பல விண்மீன்களை நாம் அடையாளம் காணலாம். இவ்வாறு, மற்ற விண்மீன்களை இடங்காண ஓரையான் ஒரு கலங்கரை விளக்கமாக விளங்குகிறது.

(படம் 3)

ஓரையானின் ’பெல்லாட்ரிக்சையம்’ ‘பீட்டில்ஜுஸையும்’ இணைத்துஅக்கோட்டை நீட்டினால் அக்கோடு ‘புரோசியோனை’ அடையும். அவனது இடுப்பில் உள்ள மூன்று விண்மீன்களையும் இணைத்து ஒரு கோடு வரைந்தால் அக்கோட்டின் இடப்புறம் ‘சிரியஸை’ நோக்கியும், வலப்புறம் ‘அல்டிபெரானை’ நோக்கியும் இருக்கும். இடுப்பிலுள்ள மூன்று விண்மீனிலிருந்து ஓரையானின் இடதுகாலானரைஜல் வழியே கோடு வரைந்தால் அக்கோடு ‘அக்கிர்னர்’ என்ற விண்மீனைச் சுட்டும். இடுப்பிலிருந்து வலதுகாலான ‘சைப்பை’ இணைக்கும் கோட்டை நீட்டினால் அக்கோடு ‘கேனபஸை’ அடையும். அவன் இடுப்புக்கச்சையிலிருந்து ‘பெல்லாட்ரிக்ஸ்’ வழியாக நீட்டப்படும் கோடு ஆரைகாவின் ‘காப்பெல்லாவை’ அடையும். ‘மின்தகாவிலிருந்து’ ‘பீட்டில்ஜுஸை’ இணைக்கும் கோடு ஜெமினியின் ‘காஸ்டரை’ அடையும். இவ்வாறு மற்ற விண்மீன்களை அடையாளம் காண்பதற்கான கலங்கரை விளக்கமாக ஓரை யா் விளங்குகிறது.

           

நடராஜர்

பழந்தமிழர்கள் விண்மீன் தொகுதியாகிய ஓரையானைச் சிவனின் வடிவமாகப் பார்த்தனர். இருதோள்கள்

,இருகால்கள் இருப்பிலுள்ள மூன்று விண்மீன்கள் ஆக ஏழுவிண்மீன்களும் ஒரு உடுக்கை வடிவத்திலிருக்கும் இதன் ஏழுவிண்மீன்களையும் சிவ வடிவாகப் பார்த்தவர்கள் சிவன் நடனமாடும் காட்சியாக உருவகப்படுத்தினர். இடக்காலை தூக்கியபடி ஆடும் தாண்டவம் பிரபஞ்ச நடனம் (Cosmic Dance) என அழைக்கப்படுகிறது. தமிழில் திருவாதிரை என அறியப்படும் பீட்டில் ஜூஸ் வடமொழியில் ஆருத்ரா என அழைக்கப்படுகிறது. இது வானில் உயர்ந்து தோன்றும் நாளில்தான் ஆருத்ரா நடனம் என்னும் நிகழ்ச்சி சிவாலயங்களில் நடைபெறுகிறது. ஓரையானின் தோற்றத்தை யேசிவன் ஆடியஆருத்ரா நடனம் என்கின்றனர்.

(படம்4)

           

காலபைரவர்

ஓரையானின் வலதுகாலுக்குக் கீழே நாய் ஒன்று நிற்பதுப்போன்ற தோற்றத்தில் ஒருவிண்மீன் கூட்டம்காணப்படும். இதுபெருநாய் (Canis Major) என்றழைக்கப்படும். இதில் தான் விண்னீன்களிலேயே பொலிவுமிக்கதான சிாியஸ்(Sirius) உள்ளது. சூாியன் இதனருகில் காணப்படும் காலமேகத்திாி வெயில் என அழைக்கப்படுகிறது. இது நாய் வடிவத்தின் தலைப்பகுதியில் காணப்படுவதால் நாய்நட்சத்திரம் (Dog Star) என அழைக்கப்படுகிறது.

இந்த சிாியஸ் உதிக்கும் காலங்களில் நைல்நதியில் அந்த அண்டுக்கான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அப்பகுதியை வலிமையானதாக்கியது. எனவே, இதுகிழக்கே உதிக்கும் காலத்தை எகிப்தியா்கள் திருவிழாவாகக் கொண்டாடினர். ஓரையான்வானில் உயா்ந்து தோன்றும் காலங்களில்தான் சைவ, வைணவ கோயில்களில் விழாக்கள் நடத்தப்படுகின்றன.நின்றவாறுள்ள மனிதத் தோற்றத்தில்வலது காலுக்கு கீழே இருக்கும் நாயுடன் சோ்த்து காலபைரவராகக் கொண்டனா். இக்கட்சியைத்தான் பலகோயில்களில் இன்று நாம் சிற்பங்களாகக் காண்கிறோம்.

(படம்5)

           

கங்காதரர்

கங்கைநதியைத்தன் சடாமுடியில் கொண்ட சிவனின் வடிவமான கங்காதரரை சிவன் கோயில்களில் சிற்பவடிவில் காணலாம். காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் எட்டாம் நூற்றாண்டில் வடிக்கப்பட்ட சிற்பமொன்றில் இவ்வுருவம் உள்ளது.முயலகன் என்னும் அரக்கன் மேல் ஒருகாலை வைத்தவாறு கங்காதரர் நிற்கும் சிற்பத்தில் தனது தலையில் கங்கா தேவியையும் கொண்டுள்ளார். மேலும் நாய், வடிவமும் காட்டப்பட்டுள்ளது. சிவனுக்கருகே முயலும், நாயும் ஏன் காட்டப் பட்டுள்ளன? தலையில் கங்கை ஏன் உள்ளது?

முதலில் தலையிலுள்ள கங்கையைப் பார்ப்போம். நாம் இருக்கும் பூமி சூரியக் குடும்பத்தில் இயங்குகிறது. நமது சூரிய குடும்பமோ ஆகாயகங்கை (Milky way Galexy) என்னும் பால்வீதி மண்டலத்தில் இயங்குகிறது. வானில் பாலைக் கொட்டிவிட்டதைப் போன்ற தோற்றத்தின் காரணமாக மேலை நாட்டினர் பால்வீதி மண்டலம் (Milky way Galexy) எனப் பெயரிட, இந்திய மரபிலோ இதுவானில் காணப்படும் கங்கையாக உருவகப்படுத்தப்பட்டு ஆகாயகங்கை எனப்பெயர் பெறுகிறது. நாம் ஆகாயகங்கைக்குள் இருப்பதால் அதன் முழுவடிவத்தைக் காண இயலாவிடினும் அதன் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் காணலாம். அதாவது ஆகாயகங்கையின் விளிம்புகளைக் காணலாம். குறுக்கு வெட்டில் ஆயிரம் ஒளியாண்டுகள் நீளம்கொண்டபால்வீதி மண்டலத்தின் மையத்திலிருந்து 2/3 தொலைவில் நமது சூரியக் குடும்பம் இயங்குகிறது, எனவேஇதன் குறுக்கு வெட்டுத் தோற்றம் கோடைக்காலபால்வீதி, குளிர்காலபால்வீதி என இருநிலைகளில் தென்படும். இவற்றில் கோடைக்கால பால்வீதி பொலிவானத் தோற்றத்தில் தென்படும். குளிர்காலபால்வீதி ஓரையானின் தலைப்பகுதி வழியே செல்கிறது. ஓரையானின் தலைப்பகுதி வழியே செல்லும் இந்த ஆகாயகங்கையே கங்காதரரின் தலையில் உள்ள கங்கா தேவியாரக்காட்டப்பட்டுள்ளது.

ஓரையானின் காலடியில் இருக்கும் ‘வெப்பஸ’ (Lepus) விண்மீன் தொகுதி முயலின் வடிவத்தைக் கொண்டது. இதை அகந்தை கொண்ட முயலகனை கங்காதரர் அடக்குவதாக உருவகப்படுத்தியுள்ளனர். மேலும், அவரின் தலைக்கு வலப்பக்கத்தில் நாய் ஒன்றும் காட்டப்பட்டுள்ளது. ஆனால் சிவனின் மற்றொருவடிவமான காலபைரவர்தன் காலுக்கருகே நாயைக் கொண்டிருப்பார். பெருநாய் (Canis Major), சிறுநாய் (Canis Minor) என இரு விண்மீன் தொகுதிகளை ஓரையானுக்கு அருகேகாணலாம். இவற்றில் சிறுநாய் ஓரையானின் தலைக்கு அருகேயும், பெருநாய்காலுக்கு அருகேயும் தென்படும், எனவே கங்காதராின் தலைக்கருகே காணப்படும் நாய் வடிவம் சிறுநாய்(Canis Minor) ஆகும்.

(படம் 6)

தமிழ் மரபில் ஓரையான் பற்றி ஏதேனும் குறிப்பு உள்ளதா என்று ஆராய்ந்தபோது கிடைத்ததக வல்நம்மைவியப்பில் ஆழ்த்துகிறது.

ஏனெனில் ஓரையான் என்ற சொல்லே தமிழ் சொல்தான்.அதனைக் குறித்து பார்ப்போம்.தமிழில் ஓரை என்பது காலத்தைக் குறிக்கும் அலகாகும். அதனால்தான் ஓரையானைக் காலபைரவராகவணங்குகின்றனர். இந்த ஓரை என்ற தமிழ்சொல் தான் பின்பு “ஹோரை“ என்றானது.

           

 • 2 கண்ணிமை – 1 கைந்நொடி
 • 2 கைந்நொடி – மாத்திரை
 • 2 மாத்திரை – 1 குரு
 • 2 குரு – 1 உயிர்
 • 2 உயிர் -1 சனிகம்
 • 12 சனிகம் - 1 விண்ணடி
 • 60 விண்ணடி -1 நாழிகை
 • 2.5 நாழிகை- 1 ஓரை (ஒருமணிநேரம்)
 • 3.75 நாழிகை -1 முகூர்த்தம்
 • 2 முகூர்த்தம் 1- கணம்
 • 2கணம் -1 பொழுது
 • 2 பொழுது -1 நாள்
 • 15 நாள் -1 பக்கம்
 • 2 பக்கம் - 1 மாதம்
 • 6 மாதம் - 1 அயனம்
 • 2 அயனம் - 1 ஆண்டு
 • 60 ஆண்டு -1 வட்டம்

           

(தமிழ்எழுத்துப்பயிற்சி - டாக்டர்கே. பாலசுப்ரமணியன், சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சை – ப- 1 9)

பீட்டில்ஜுயஸ் எனப்படும் திருவாதிரை ,ஆருத்ரா எனவும் அழைக்கப்படுகிறது. குளிர்கால இரவுகளில் ஆருத்ரா நட்சத்திரம் வானில் உயர்ந்து காணப்படும் மார்கழி மாதத்தில் சிவனின் நடனக்காட்சியான ஆருத்ரா நடனம் சிவாலயங்களில் கொண்டாடப்படுகின்றது. ஆருத்ரா தமிழில் மூதிரை எனவும் அழைக்கப்படுகிறது. இதுபோன்று சூரியப் பாதையில் அமையும் 27 விண்மீன்களுக்கும் தமிழ்ப் பெயர்கள் உண்டு. ஓரையானைக் கடவுளாக உருவகப்படுத்தி வணங்கும் இப்பண்பாடு ஒரே நாளில் உருவாகி இருக்கமுடியாது. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழக்கிலிருந்து மாற்றம் பெற்று இந்நிலையை அடைந்திருக்கவேண்டும். அப்படியானால் அது குறித்த தொல்பதிவுகள் இருக்க வேண்டுமல்லவா? பழங்காலத்தில் வாழ்ந்த நம்முன்னோர்கள் தாங்கள் வாழ்ந்ததற்கான பதிவுகளைப் பாறை ஒவியங்களாகக் குகைகளில் வரைந்து அவற்றைக் காட்சிப்படுத்தியும் இருக்கிறார்கள். இன்று பல பாறை ஓவியங்களில் காணப்படும் மனிதவடிவங்கள் ஓரையானைக் குறிப்பதாகும். பாறை ஓவியங்களில் காணப் படும் எல்லா மனித வடிவங்களும் ஓரையானைக் குறிக்கும் என்று நாம் கருதவேண்டியதில்லை. அவை காணப்படும் இடங்களின் அமைப்பு அருகிலுள்ள மற்ற உருவங்களின் அமைப்பு, இவற்றைக் கொண்டு உறுதி செய்யமுடியும்.

           

ஓரையானின் கிரேக்கப் புராணக் கதைகள்

இந்தியாவில் உள்ளது போலவே பண்டைய கிரேக்கத்திலும் ஓரையான் பற்றிய புராணகதைகள் பல உண்டு.வானில் உள்ள விண்மீன்களைக் கூட எண்ணிவிடலாம் பண்டைய கிரேக்கத்தில் இருந்த கடவுளர்களை எண்ணமுடியாது என்ற அளவில் கடவுளர்களும் அவர்தம் கதைகளும் கிரேக்கத்தில் உலவின. கடவுளர்களுக் கிடையே புராணக்கதைகளும் அதையொட்டி ஏராளமான பாத்திரங்களும் படைக்கப்பட்டன. ஓரையானை ஒட்டியும் பலகதைகள் சொல்லப்பட்டன.ஓரையான் ஒரு பெரிய வேட்டைக்காரன். அவனுடைய பெயரைக் கேட்டாலே விலங்குகளுக்குக்குலை நடுக்கம் எடுக்கும். அவன் வைத்த குறிதப்பாது. அவனுக்கு, பெரிய வேட்டை நாயொன்றும், சிறிய வேட்டை நாயொன்றும் துணையாக இருந்தன.

(படம் 7)

ஒரு முறை சூரியக்கடவுளான அப்பல்லோவின் தங்கைடயனா ஓரையானின் புகழைக் கேள்வி ப்பட்டு காதலுறுகிறாள். இக்காதல் அப்பல்லோவிற்குப் பிடிக்கவில்லை, ஏனெனில், இறப்பில்லா தேவர் குலத்தில் பிறந்த தன் தங்கை ஒரு மானுடனைக் காதலிப்பதை விரும்பாததுதான்.

இக்காதலை முறிக்க அப்பல்லோ ஒருசதி செய்கிறார். டயனா அம்பெய்வதில் திறமையானவள், அவள் குறியிலிருந்து எதுவும்தப்பாது. ஒருநாள் அவளிடம் அப்பல்லோ ஒரு சவால் விடுகிறார்.

‘உன்னால் நான் சொல்லும் இலக்கை குறிவைக்க முடியாது’

என்கிறார்.

‘எதைத் தாக்க வேண்டும் எனக் கூறுங்கள், அம்பெய்து காட்டுகிறேன்’

என்றுடயனா

பதில்கூற,

‘அதோ அந்தக்கடல் அலைகளுக்கு மேலே தென்படும் தலையை வீழ்த்து பார்ப்போம்’

அப்பல்லோ காட்டிய தலையை நோக்கி டயனா அம்பெய்ய, தலையும் தனியே துண்டாகிப்போய் விழ, தனியே போய் விழுந்ததலையைப் போய் பார்த்தடயானா மயங்கி விழுகிறாள்.

அது …

ஓரையானின்தலை …

அப்பல்லோவின் சதியால் தனது காதலனின் தலையையே கொய்தடயனா, தன் அண்ணனிடம் உருக்கமாக வேண்டிக்கொள்ள அப்பல்லோவும் மனமிரங்கி ஒரையானை உயிர்த்தெழச் செய்கிறார். ஓரையான் தன் வேட்டைத்திறனை, தன் பெருமைகளை அடிக்கடிதம்பட்டமடித்துக் கொள்வான். ஒருமுறை ஓரையான் மேல் பூமி கடுங்கோப முற்று அவன் கதையை முடிக்க முடிவெடுக்கிறாள். அவனைக் கொல்வதற்காகத் தேள் ஒன்றை ஏவிவிடுகிறாள்.பயங்கரமான அந்தத்தேளும் ஓரையானைத் தீண்ட ஓரையான் இறக்கிறான். இக்கதையில் வரும்பாத்திரங்களைக் கடவுள்வானத்தில் விண்மீன்களாகப் படைத்துவிட்டார். கிழக்கே தேள் எழும்போது மேற்கே ஓரையான் மறையும், அதாவது தேள் தீண்டி ஓரையான் இறக்கிறான்.

(படம் 8)

           

தமிழகப்பாறை ஓவியங்களில் ஓரையான்

ஓரையான் விண்மீன் தொகுதியை பழங்காலப் பாறை ஓவியங்களிலும் காண முடிகிறது. எங்கள் குழுபுதுக் கோட்டை மாவட்டத்திலுள்ள ஆளுருட்டிமலையில் இந்த ஓரையானின் தோற்றத்தை ப்பதிவு செய்துள்ளோம்.எனதுகள ஆய்வில் கண்டறிந்த பாறை ஓவியத்தில் ஓரையான் பற்றிய பதிவை 2014 ஆம் ஆண்டு தினமணியில் பதிவுசெய்திருந்தேன்.

(படம்9)

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையிலுள்ள ஆளுருட்டிமலை அடிவாரத்தில் உள்ள குடவரையின் வடபுறத்தில் பழமையான பாறை ஓவியங்கள் எங்களது குழுவால் கண்டறியப்பட்டுள்ளன. அச்செய்தியில் குறிப்பிட்டவிடயமாக ,நார்த்தா மலை பகுதியில் கண்டறியப்பட்டுள்ள இப்பாறைகளில் வரையப்பட்டுள்ள வெள்ளை நிற ஓவியங்களின் அடிப்படையில் இவற்றின் காலம் 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. முதல்கட்ட ஆய்வின் வெளிப்பாடாக இப்பாறை ஓவியங்கள் வானியல் சமபந்தப்பட்ட ஓரையான் எனும் உடுக்கணத்தைக் குறிப்பிடுவது போல தெரியவருகிறது. நம் முன்னோர்கள் வான்மண்டலத்தில், குறிப்பாகக் குளிர்காலத்தின் போது ஆகாயமண்டலத்தில் காட்சித்தரும் உடுக்கணத்தை, வேட்டைக்காரன் (காலப்புருஷர்), ஓரையான் என்னும் ஓரு கற்பனை மனித உருவமாக அடையாளப்படுத்தியுள்ளனர். இந்த ஓரையான் எனும் மனித உருவம் தனது வலக்கரத்தில் தடியும், இடக்கரத்தில் கேடயமும் ஏந்திநிற்கும் வடிவமாகவும், உடுக்கை போன்ற உடலும், இடுப்பில் இருகரங்ளை வைத்து நின்றநிலையில் காட்சித்தருவதும் ஆகும். இந்த உருவத்தின் இடுப்பு அரைக்கச்சையிலிருந்து வாள் ஒன்று இருக்கும் படிவரையப்பட்டுள்ளது.

(படம்10)

ஆளுருட்டி மலை ஓவியங்களில் காணப்படும் ஓரையான் குறித்து அமெரிக்கவானியல் ஆய்வறிஞர்கேரி. ஏ. டேவிட் அவர்களின் கருத்து:

           

Comments of Gary A David

‘I am the Author of ‘The Orion Zone’ and four more books on Archaeo-Astronomy, concentrating on the southwestern area of the United States. I have also have been featured on international radio interviews and on U.S. television programs.

Since 1997, I have studied Orion and various man-made structures and Rock Art that represent this Constellation. All over the globe, Orion- pattern in the sky is frequently reproduced by certain megalithic constructions on the ground. (Mega- means ‘large’ and lithic means ‘stone.’) In essence, the earth structures mirror the pattern in the sky. In addition, the rising and setting of Orion- stars are sometimes lined up with certain astronomical markers. Various cultural sites in Peru, Mesoamerica, North America, Great Britain, Ireland, Europe, Africa, and Egypt, along with other locations across the world, concentrate on this particular constellation with an archetypal intensity. Now we have a solid proof of the ‘Orion archetype’ found in the pictographs (rock paintings) of Narthamalai, Tamil Nadu, dated to 1500 BC or earlier. Painted in white, a human figure is seen with the typical upraised right arm as well as the left arm holding either a shield or club or spear. Associated with this figure is a representation of two triangles with their apexes touching.

This type of figure is also found in Rock Art of the Americas and Africa. In North America it signifies warfare between Native American tribes. For the Igbo tribe of Nigeria it signifies the Great Mother Goddess called Mbari. In India this double-triangle may represent the Female- Male complex. It may also represent the ‘hurglassdrum’or ‘dumroo’,a two-headedsacred drum of Lord Shiva.

Shree T.L.SubashChandiraBose - Archaeo-Symbolist, K. Balakrishnan and V. Kannan have discovered a number of important Rock Paintings with a great astronomical, mythological, and spiritual significance. It is my wish and hope that in the future the cultural heritage of India and the world be further explored and documented.

‘Cosmic Symbolism Found at Various Rock Art Sites in Tamil Nadu’என்றதலைப்பில் 2014 ஆம்ஆண்டுநான்எழுதியகட்டுரையிலிருந்து,

The Cosmos is a complex and orderly system, such as our universe. The sky watchers identified the Star or Group of Stars as Constellations in the shapes of their own imagination and also comparing with the earthly beings and non-beings. BimanBasu* said; ‘They also named those constellations after Mythological Gods, Heroes, Living Creatures or Common objects’. (*The joy of star watching; Published by National book trust, India. P. 13.)The ancient sky watchers lived in a land presently known as Tamil Nadu, registeredtheir observation of those constellations as Rock Arts. Among those ‘the Milky Way Galaxy, and the Orion Constellation,’ are to be noted.

           

The Orion

The Orion is a prominent Constellation located in the celestial equator and visible in the entire world. It is one of the most commonly visible and recognizable constellation. The distinctive pattern of Orion has been recognized in numerous cultures around the world, and many myths have been associated with it. It has also been used as a symbol in the modern world.

At Narthamalai there is a Pictograph of a Hunter and other Pictographs of three different human figures as single group are drawn in white color. It is drawn on celling of the Shelter, which is underneath of a hill known as Aalurutimalai.

           

The Milky Way Galaxy

The Milky Way galaxy is drawn in the form of Petroglyph at Yerbet, Nilgiri District, and Tamil Nadu in India. This site was found by Mr. K.T.Gandhirajan and others. ‘This Petroglyphconsists of symbols such as a Serpent, a Human like figure and also a Scorpio like figures.Almost similar Rock Art without Scorpius is also found in Wardaman painting inAustralia*. In which the human figure said to be sky boss and the Serpent at the bottomsaid to be the Milky Way.

(படம்11)

(Thanks to Bill YidumdumaHarney for the picture).* Ray P.Norris and Duane W Hamacher, Astronomical symbolism in Australian Aboriginal Rock Art, Accepted in Rock art Research (2010) p.2.During December and January months the Milky Way Galaxy can be seen at the tailside of Scorpius Constellation. In this Petroglyph the Milky Way is drawn like a Serpent below the Scorpio.

இவ்வாறாகத் தமிழகம் மட்டுமல்லாமல் பல இடங்களில் காணப்படும் பாறை ஓவியங்களில் ஓரையான் பற்றிய குறிப்புகள் நிறைய கிடைக்கிறது நீலகிரி மாவட்டத்திலுள்ள கொணவக்கரையில் மலைச்சரிவு ஒன்றின் குகையின் சுவற்றில் சில உருவங்கள் கீறப்பட்டுள்ளன. இவற்றில் முதன்மையாக நின்றவாறுள்ள மனிதத்தோற்றமும், தேளின் உருவமும்கவனிக்கத்தக்கதாக உள்ளது. நின்றவாறுள்ள மனிதனில் இடப்பக்கம் மேலே தேள் ஒன்று உள்ளவாறு கீறப்பட்டிருக்கும் இவ் உருவங்கள் ஓரையான் மற்றும் விருச்சிகம் (தேள்- ஸ்கார்ப்பியஸ்-Scorpius) விண்மீன் தொகுதிகளைக் குறிக்கும்.ஓரையானும், விருச்சிகமும் வானை அலங்கரிக்கும் பெரியவிண்மீன் தொகுதிகள்.ஓரையான் மேற்கேமறையும் போது விருச்சிக ம்கிழக்கே உதிக்கும் காட்சி இதைக்கீறியவர்களின் கருத்தை கவர்ந்து அதை ஓவியமாகக்கீறியிருக்கலாம். மேலும், அம்மனித உருவதிற்கு கீழே பாம்பு போன்ற நீண்ட உருவமும் கீறப்பட்டுள்ளது. இதே போன்ற தொரு பாறை ஓவியம் ஆஸ்திரேலியாவிலும் உள்ளது. அங்குள்ளவர்கள் இம்மனிதனை இந்த பிரபஞ்சத்தைகட்டுப்படுத்து பவனாகவும் நீண்ட பாம்பு போன்ற உருவத்தை பால்வீதி மண்டலமாகவும் பார்க்கின்றனர்.

இன்னும்சிலர் அதை பெரியபாம்பாகவும் கூறுகின்றனர். இந்த பாம்பு போன்ற நீண்ட உருவம் எரிதானஸ்(Eridanus) என்னும் ஆற்றைக் குறிப்பதாகவும் இருக்கலாம். எரிதானஸ் என்பது 88 விண்மீன் தொகுதிகளில் 6 ஆவது பெரியத் தொகுதியாகும். இது நீண்ட பாம்பு போலவளைந்துச் செல்லும் இது ஓரையானின் காலுக்குக் கீழ் இருக்கும். கிரேக்க புராணக்கதையொன்றில் ஓரையான் இந்த ஆற்றில இறந்துவிழுவதாக உள்ளது. நீண்ட பாம்பு போல இருப்பதாலும், மனித உருவத்திற்கு கீழே இருப்பதாலும் இது எரிதானஸைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இதைக்கீறியவர்கள் எரிதானஸை வேறு பெயரிலும் அழைத்திருக்கலாம். எனவே. கொணவக்கரையில் காணப்படும் பாறைக் கீறல்கள் வானியல் தொடர்பானவை என்றும் இதில் ஓரையான், விருச்சிகம், எரிதானஸ் ஆகிய விண்மீன் தொகுதிகளைக் குறிக்கின்றன எனவும் கூறமுடியும்.

(படம்12)

           

முடிவுரை

சிறந்தவான் நோக்குபவர்களாகத் திகழ்ந்த நம் முன்னோர்கள் வானில் பார்த்து வியந்தவற்றைக் கடவுளாகவடித்து, அதுதொடர்பான புராணக்கதைகளையும் உருவாக்கி வைத்தனர். இந்தியாவில்,ஓரையான் விண்மீன் தொகுதியை வாழ்வியலோடு தொடர்புப் படுத்தி நடராஜர், காலபைரவர்,கங்காதரர் போன்ற சிவவடிவங்களாக வணங்கினர். ஓரை என்ற தமிழ் பெயர் வடமொழிக்கு சென்று ‘ஹோரை’ என்றாகிபின்னர் ‘ ஓரையான்’ என்ற உலகப் பொதுப் பெயராக மாறியது என்பதிலிருந்து பழந்தமிழரின் வானியல் அறிவு எத்தகையது என்பதை நம்மால் உணர இயலும் என்று நம்புகிறேன்.

(படங்கள் :ஓவியர்சின்ராஜ்)

           

பார்வைநூல்கள்

 • விண்மீன்கள்கண்டுரசிப்போம் - பீமன்பாசு
 • மின்னும்மின்னும்விண்மீனே -முனைவர்த.வி. வெங்டேஸ்வரன்
 • Astronomy - Prof. S. Kumaravelu
 • விண்இயற்பியலின்சிலஅம்சங்கள் - டாக்டர்மெ. மெய்யப்பன்
 • Orion Zone - Gary A David
 • தமிழ்எழுத்துப்பயிற்சி -டாக்டர்கே. பாலசுப்ரமணியன்,
 • The Orion Zone - Gary A. David, P.O. Box 4282, Chino Valley, AZ 86323 USA,www.theorionzone.com email:garydavid52@hotmail.com
 • The19th Congress ofRock Art Society of India held at Pondicherry. (December4th - 6th, 2014 )Papers Presented byK.Balakrishnan www.arivomarivippom.blogspot.com/2015/04/?m=1
 • DinamaniAuthor: dnPublished o