அறிவுறுத்தல்கள்

 1. அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழுக்கு கல்லூரி மற்றும் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், துறைச்சார்ந்த வல்லுனர்கள், கல்வியாளர்கள் ஆய்வு மாணவர்கள் கட்டுரை எழுதி அனுப்பலாம்.
 2. இளசுந்தரம் 4- size 12 எழுத்து இடைவெளி 1.5
 3. ஆய்வுக் கட்டுரைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வரவேற்கப்படுகின்றன. ஒருவரே தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரை அனுப்பலாம். உலக அளவில் நமது தமிழைக் கொண்டு செல்ல இவ்வாராய்ச்சி கட்டுரைகள் ஆங்கிலத்திலும் எழுத முயற்சி எடுக்க வேண்டும். அதற்கான களமாக உங்களுக்கு இந்த மின்னிதழ் உதவும். எனவே ஆங்கிலத்திலும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. உங்கள் தமிழ் ஆய்வுக் கட்டுரை மட்டுமல்லாது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் அனுப்பலாம். இரண்டும் பதிவிடப்படும்.
 4. ஆய்வுக் கட்டுரையானது, ஆய்வாளரின் சொந்த ஆக்கமாக இருத்தல் வேண்டும். மொழிபெயர்ப்பு, தழுவல், போலச் செய்தல் போன்றவை கூடாது. ஆய்வு நெறிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி எழுதப்பட வேண்டும் . ஆய்வுச் சிக்கல், கருதுகோள், ஆய்வு அணுகு முறை, ஆய்வு நடை போன்ற கூறுகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். சான்றுகள் நம்பகத்தன்மையுடன் இருத்தல் வேண்டும்.
 5. ஆய்வுக் கட்டுரைகள் எழுத்துப் பிழைகள், இலக்கணப்பிழைகள், தொடரமைப்பு பிழைகள், தட்டச்சுப் பிழைகள், தகவல் பிழைகள் இன்றி அமைய வேண்டும்.
 6. வேறு நூல்களிலிருந்து நகல் எடுத்து அனுப்புதல் கூடாது. ஆய்வுக்குத் தேவையான சரியான தரவுகளுடன் ஆராய்ந்து தக்க முடிவுகளுடன் கூடிய ஆய்வுக்கட்டுரைகள் மட்டுமே வரவேற்கப்படுகின்றன.
 7. ஆய்வுக் கட்டுரைகள் தக்க சான்றுகளுடன் நிறுவப்பட்டிருக்க வேண்டும். கட்டுரைக்குப் பயன்பட்ட அடிக்குறிப்புகள் , துணை நின்ற நூல்கள் அல்லது வேறு பல தரவுகள் ஆகியவற்றைக் கட்டுரையின் முடிவில் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். கட்டுரைகளில் எடுத்தாளப்படுகின்ற இலக்கியப் பாடல்களின் எண்ணையும் அடிகளையும் (குறுந்.231:3-4) கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். அத்தகைய கட்டுரைகள் மட்டுமே ஆசிரியர் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும்.
 8. ஆய்வுக்கட்டுரைகள் பின்வரும் முறையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்

  Abstract / ஆய்வுச் சுருக்கம்/
  key words/ திறவுச்சொற்கள்
  Introduction / அறிமுகம்
  Research Elaborations / ஆய்வு விரிவுரை
  Results or Finding / முடிவுகள் அல்லது கண்டுபிடிப்பு
  Conclusions / தீர்மானம் அல்லது இறுதி முடிவு
 9. கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: aranjournal@gmail.com