விதிமுறைகள்

 1. ஆய்வுக் கட்டுரை, புதிய ஆக்கமாக இருக்க வேண்டும். புதிய ஆய்வுக்களங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் . ஆய்வுக் கட்டுரை, எந்தக் கருப்பொருளிலும், எந்தத் தலைப்பிலும் இருக்கலாம்
 2. அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழில் முதன்முறையாக ஆய்வுக் கட்டுரை எழுதும் ஆய்வு மாணவர்கள் தங்கள் நெறியாளரின் அனுமதி பெற்ற கடிதத்துடன் இணைத்து கட்டுரைகள் அனுப்புதல் வேண்டும்.
 3. கட்டுரைகள் அனுப்பும் போது அதனுடன் உங்களது அஞ்சல் தலை அளவிலானப் புகைப்படம் மற்றும் உங்களைப் பற்றிய சிறு குறிப்புகளுடன், உங்களைத் தொடர்பு கொள்ள வீட்டுமுகவரி அல்லது அலுவலக முகவரி, அலைப்பேசி எண் ஆகியவற்றுடன் அனுப்புதல் வேண்டும். (இதற்கான பதிவுப் படிவம் இணைக்கப்பட்டுள்ளது.
 4. ஆய்வுக்கட்டுரைகள் எழுதும் போது அதற்குத் தேவையான காணொளி, குரல் பதிவு, நிழற்படங்கள் ஆகியவற்றையும் இணைக்கலாம். (காப்புரிமையை மீறாத வகையில் படைப்புக்கேற்ற படங்கள், காணொளி, குரல் பதிவு அனுப்புதல் வேண்டும்) அந்தந்தத் துறை சார்ந்த அறிஞர் பெருமக்களால் மதிப்பீடு செய்து அனுமதி பெற்றப்பின்னரே அரண் பன்னாட்டு தமிழாய்வு மின்னிதழில் உங்களது கட்டுரைகள் பதிவிடப்படும். ஆசிரியர் குழுவால் நிராகரிக்கப்படும் கட்டுரைகள் பதிவிடப்படாது .
 5. ஆய்வுகள் நன்னோக்கத்துடன், ஆக்கப்பூர்வமாக அமைய வேண்டும். அதன் மூலமாக தமிழாய்வு மேலும் உலகளாவிய ஆய்வாக உலகம் முழுமையும் கொண்டு செல்ல நமது ஆய்வுகள் முன்னோடியாக அமையும்படி இருக்க வேண்டும்.
 6. ஆய்வுக் கட்டுரைகள் அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் குறிப்பிடும் கடைசி நாளுக்குள் அனுப்புதல் அவசியம்.
 7. அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழுக்கு அனுப்பும் ஆய்வுக் கட்டுரைகள் வேறு கருத்தரங்கில் அல்லது இதழ்களில் வெளிவந்திருக்கக் கூடாது.
 8. தமிழில் பிற துறைகளை இணைத்து ஒப்பிட்டோ அல்லது வேறுபடுத்தி ஆராயவோ பிற துறை அறிவும் நமக்குத் தேவை. அதனால் இக்குழுவில் பலத் துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள் இணைந்துள்ளார்கள். அதனால் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் நமது ஆய்வு பார்வை மேலும் விரிவடையும். இன்னும் எளிதாக நமது இலக்கை சென்றடைய வாய்ப்பு கிட்டும். அத்தகைய ஒப்பிட்டாய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
 9. ஆய்வுக்கட்டுரைகளுக்கான கட்டணமாக ரூபாய் 500 (இந்தியா ) (வெளிநாடு $50) பெறப்படும். மற்ற மின்னிதழ்களின் கட்டணத்தைவிட இந்தத் தொகை மிக குறைவானது என்பதை ஆய்வாளர்கள் அறிவீர்கள். இந்தக் கட்டணம் மின்னிதழ் பணிகளுக்காகப் பெறப்படுகிறது. வியாபார நோக்கத்திற்காக அல்ல.
 10. அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழில் பதிவிடத் தேர்ந்தெடுத்த கட்டுரைகளுக்கு மட்டுமே கட்டணம் பெற்றுக் கொள்ளப்படும். நீங்கள் கட்டுரை அனுப்பிய ஒரு வாரத்திற்குள் உங்களது கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்பது பற்றிய விபரம் உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுவிடும்.
 11. அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழில் பதிவிட்ட அனைத்து கட்டுரையாளர்களுக்கும் சான்றிதழ் மின்னிஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.
 12. ஆய்வுக் கட்டுரைகளில் சொல்லப்படும் கருத்துகளுக்கு ஆய்வுக் கட்டுரை ஆசிரியர்களே பொறுப்பாவர்.
 13. அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழில் இடம்பெற்ற கட்டுரைகள் பிற இதழ்களில் வெளியிடுதல் கூடாது. அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் கட்டுரையாளருக்கு முழு உரிமையானது. எனவே அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழில் வெளியிட்டப் படைப்புகளை படைப்பாளரின் பெயரோடு, நன்றி அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் என்று குறிப்பிட்டுப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 14. தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் அனைத்தும் அந்ததந்த மாதங்களில் வெளியாகும் இதழில் இடம்பெறும். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் அறிவிப்பும், கட்டுரை அனுப்பு வேண்டிய கடைசி நாள் பற்றிய அறிவிப்பும் அறிவிக்கப்படும். அறிவிக்கப்பட்ட மாதத்தில் உங்கள் கட்டுரை இடம் பெறவில்லையெனில் அக்கட்டுரை நிராகரிக்கப்பட்டதாக எடுத்துக் கொண்டு அடுத்தமுறை மீண்டும் வேறு தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்கலாம்.
 15. அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழுக்கு அனுப்பப்படும் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடவோ அல்லது நிராகரிக்கவோ நிர்வாக ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.மேலும் படைப்பாளர்களின் கருத்துகள் மாறாதபடி அரண் பன்னாட்டு மின்னிதழுக்கு ஏற்றவாறு சுருக்கவோ ,திருத்தம் செய்யவோ ஆசிரியர் குழுவிற்கு முழு உரிமையுண்டு.
 16. அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழில் வெளிவரும் ஆய்வுக் கட்டுரைகள் வரும் காலங்களில் நூலாக்கம் செய்யும் உரிமை அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் நிறுவனத்திற்கு உண்டு.
 17. கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: aranjournal@gmail.com