ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சங்க காலப் பெண்பாற்புலவர் பாடல்களில் நாடகக் கதைக்கோப்பு

து. உமாமகேஸ்வரி 08 Oct 2019 Read Full PDF

து. உமாமகேஸ்வரி,

முனைவர் பட்ட ஆய்வாளர்

நெறியாளர்: முனைவர்.க.இரவீந்திரன்

நாடகத்துறை

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்

 

ஆய்வுச் சுருக்கம்
சங்க கால மக்களின் வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் அள்ளித் தரும் அட்சயப் பாத்திரங்களாய் விளங்கும் சங்க இலக்கியங்கள் ஒவ்வொன்றும் கருத்துச் செறிவிலும், கவிதை நயத்திலும், கதைக் கூறும் முறையிலும்; சிறந்த படைப்பாக விளங்குகின்றன. அக்காலத்தில் ஆணும் பெண்ணம் சம உரிமைப் பெற்றிருந்தனர் என்பதை பெண்பாற் புலவர்களைக் கொண்டு அறிய முடிகிறது. இப்பெண்பாற் புலவர் பாடல்களில்; பெண்ணியச் சிந்தனைகளையும், ஆண்மகனின் ஒழுகலாறுகளையும் மரபு வழியின்று வழுவாமற் பதிவு செய்துள்ளனர். சங்கப் பாடல்கள் ஒவ்வொன்றும் தன்னளவில் கட்டமைப்புடைய சின்னஞ்சிறு நாடக வடிவம் கொண்டதாகையால் காதற் கதையின் நிகழ்ச்சிகளையும், கதைச் சூழலையும் ஆராயுமிடத்து நாடகக் கதைக் கோப்பிற்கு உரிய கதைக் கூறும் பாங்கில் சங்க காலப் பெண்பாற் புலவர் பாடல்கள் திகழ்வதை இவ்வாய்வின் நோக்கம் ஆகும்.

 

திறவுச்சொற்கள்
சங்க இலக்கியம்-பெண்பாற் புலவர்-நாடகக் கவிதை-நாடகக் கூறுகள-கதைக் கோப்பு

 

முன்னுரை
சங்க காலத்தில் காதலையும், வீரத்தையும் பாடுபொருளாகக் கொண்டு பாடல்கள் இயற்றியுள்ளனர் புலவர் பெருமக்கள். அறம், பொருள் இன்பம் வீடடைதல் நுற்பயனே என்பது தமிழர் தம் கொள்கை. இந்நான்கையும் அகம், புறம் என்ற இரண்டனுள் அடக்கி கவிபாடி மகிழ்ந்தனர். இப்புலவர் பெருமக்களுள் ஆண் புலவர்களுக்கு இணையாக பெண்புலவர்களும் கவிதை பாடியுள்ளனர் என்பதை அறியும் போது அக்காலத்தில் பெண்களுக்கு அளிக்கப்பட்ட மதி;ப்பும், மரியாதையையும் கல்வியுரிமையையும்; அறிய முடிகின்றது. உலகம் வியந்து போற்றக் கூடிய அளவிற்கு சிறந்து விளங்கிய சங்கப் பெண்பாற் புலவர்கள், தற்காலத்தில் பெண்கவிஞர்களின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் எனலாம். ஆண்பாற் புலவர்களைவிட எண்ணிக்கையில் குறைந்து காணப்பட்டாலும் அவர்களின் பாடல்களில் காணப்படும் சொற்சுவையும், பொருட் சுவையும், கருத்தின் ஆழமும் நம்மிடம் நீங்கா இடம் பெற்றுத் திகழ்கின்றன. இத்தகு பெருமை வாய்ந்த பெண்புலவர்களின் பாடல்களில் அகப்பாடல்களில் கதை நிகழ்ச்சிகள் அமையும் போக்கை "சங்க காலப் பெண்பாற் புலவர் பாடல்களில் நாடகக் கதைக்கோப்பு" எனும் பொருண்மையில் இக்கட்டுரை நோக்கப்படுகிறது.

 

நாடகக் கவிதை
பெண்பாற்புலவர் பாடல்கள் ,சங்க இலக்கிய நுற்களான எட்டுத்தொகையில் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, பதிற்றப்பத்து ஆகிய ஐந்திலும், பத்துப் பாட்டில் பொருநராற்றுப்படையில் மட்டுமே காணப்படுகின்றன. தன்னுணர்ச்சி மிக்க சங்கப்பாடல்கள் ஒவ்வொன்றும் ஓர் காதற் கதையின் கருவினைத் தாங்கிப், படிப்பவர் மன அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வகைப் பாடல்கள் நாடகக் கவிதை எனும் பண்பை பெற்றுத் திகழ்வதை உணர்ச்சி மிகுந்த கூற்றுக்கள் வரியிலாகத் தலைவன் தலைவி வெளிப்படுத்துவதை அறிய முடிகின்றது. நாடகப் பாடல்கள் குறித்து மு. வரதராசனார்,

 

           சங்க இலக்கியத்தின் அகப்பாடல்களில் தலைவன், தலைவி, தோழி

           முதலானவர்களின் செயல்களை அவர்களின் கூற்றுகள் வாயிலாகவும்,

           அனுபவங்கள் வாயிலாகவும் புலவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

           முதற்பொருளான நிலமும் பொழுதும், விலங்கு, பறவை, தொழில்

           உணவு, தெய்வம், யாழ் போன்ற கருப்பொருள்களும் ஐவகை நிலத்தின்

           கண் நிகழும் புணர்தல், பரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் ஆகிய

           உரிப்பொருள்களும் அரங்கில் ஏற்படுத்தும் உணர்ச்சி செயற்பாடுகள்

           அமைந்த சங்கப் பாடல்களே நாடகப்பாடல்கள்1

என்பர் மு.வரதராசனார். இதனைமார்கப்பந்து சர்மா என்பவரும்

 

           தொடர்புள்ள பல நிகழ்ச்சிகளையும் அவற்றின்

           விளைவையும் புனையும் சங்கப் பாடல்களை

           'நாடகக் கவிதை| என்றுக் கூறலாம்.2'

என்றுக் கூறுவர்.

 

நாடகக் கூறுகள்
கதைத் தழுவி வரும் கூத்து நாடகம் எனப்படும். இது போலச் செய்தல் என்னும் இலக்கிய வடிவமாகும். நாடகம் பலக் கூறுகளால் கட்டமைக்கப்பட்டு மேடையில் நிகழ்த்தப்படுகிறது. அவை கதையின் கரு, கதைக்கோப்பு, பாத்திரப் படைப்பு, உரையாடல், பின்னணி, வாழ்க்கையின் பேருண்மைகள், உடை, ஒப்பனை, இசை போன்ற கூறுகளால் பார்வையாளனைச் சென்றடைகிறது. இந்நாடகக் கூறுகளை தா.ஏ.ஞானமூர்த்தி, இலக்கியத் திறனாய்வியல் என்னும் நூலில்

           1. கதைக் கோப்பு (Pடழவ)

           2. பாத்திரம் (ஊhயசயஉவநச)

           3. உரையாடல் (னுயைடழபரந)

           4. பின்னணி (டீயஉமபசழரனெ ளநவவiபௌ)

           5. வாழ்க்கையின் பேருண்மைகள் ( Phடைழளழிhல ழக டுகைந)3

என ஐந்து வகைக் கூறுகளாகப் பகுத்துக் கூறுகின்றார்.

 

கதைக் கோப்பு
நாடகக் கூறுகளில் முதன்மையானது கதைக் கோப்பு ஆகும். கதைக் கோப்பு என்பது நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியைக் குறிப்பாதாகும். நிகழ்ச்சிகள் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தியும் அவற்றைக் காரண காரிய(உயரளந யனெ நககநஉவள) முறையில் அமைக்கும் திறத்திலும் கதைக் கோப்பு உருவாகிறது.

           கதைக்கோப்பு என்பதை முரணாகிய முடிச்சுப் பிணித்து

           அவிழ்க்கும் நிகழ்ச்சியின் ஒழுங்கு முறை என்பார்4

கதைக்கோப்பிற்கும் கதைக்கும் உள்ள வேறுபாட்டை,

           அரசன் இறந்தான்; அதன் பிறகு அரசி இறந்தார். - இது கதை.

           அரசன் இறந்தான், பின்பு வருத்த மிகுதியால் அரசியும் இறந்தாள்.

- இது கதைக்கோப்பு என்று இ.இ.பாஸ்டர் என்பவர் குறிப்பிடுவதாக தா.ஏ ஞானமூர்த்தி விளக்குகிறார்.5

 

நாடகத்தில் கதைக்கோப்பு வகைகள்
ஒரு நாடகத்திற்கான கதைக் கோப்பு ஐந்து நிலைகளாகப் பகுக்கப் பெறுகிறது. அவை பாத்திர அறிமுகம் தொடங்கி, அவர்களைத் தொடர்ந்து படிப்படியாக வளர்ச்சி; பெறுகிறது. இவ்வளர்ச்சி ஏதேனும் ஒரு சிக்கலை மையமிட்டு உச்சம் அடைகிறது. இதனைக் கடந்து கதை நிகழ்ச்சிப் போக்கு முடிவை நோக்கிச் செல்லும் பகுதியே வீழ்ச்சி ஆகும். முடிவை நோக்கிய இன்பம், துன்பம் இரண்டில்; ஒரு முடிவு காணப்படும். இதனை செர்மானி நாட்டுத் திறனாய்வாளராகிய குஸ்டாவ் பிரேடாக் (புரளவயஎ குசநபவயப) என்பவர் நாடகக் கதைக் கோப்பை ஐந்து வகையாகப் பிரிக்கிறார்.

           1) அறிமுகம் அல்லது தொடக்கம் ( ஐவெசழனரவழைn ழச நஒpழளவைழைn).

           2) வளர்ச்சி (சுளைiபெ யஉவழைn)

           3 உச்சம் (ஊசளைளை ழச உடiஅயஒந)

           4) வீழ்ச்சி (குயடடiபெ யஉவழைn)

           5)விளைவு அல்லது முடிவு(ஊயவயளவசழிhந)6

இதனை நாடகவியலார்,

           முகமே பிரிதிமுகமே கருப்பம்

           விளைவு துய்த்தலோ டைவகை யாகும். (32)

என்று முகம், பிரிதி முகம், கருப்பம், விருப்பம், துய்த்தல் என ஐந்து வகையாகக் குறிப்பிடுகின்றார்.

 

இலக்கியத்தில் கதைக் கோப்பு
மக்களினத்தில் ஆணும் பெண்ணும் காதலராய் அன்பாற் பிணைந்து நடத்தும் இல்வாழ்க்கையில் இருவரும் கணவன் மனைவியராகி வாழ்வதற்குரிய அமைதி கூறுவது அகத்திணை ஆகும். இவ்வக இலக்கியத்தில் கதைக் கோப்;பு அமைப்புஇயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியற் கூட்டம், தோழியின் முயற்சி, பகற்குறி, இரவுக்குறி, வரைவுக் கடாதல், வரைவு நீடல், வரைவின் பொருட்டு பிரிவு, அறத்தொடு நிற்றல், உடன்போக்கு, மணமனை நிகழ்ச்சி, பரத்தையர் பிரிவு என்ற நிலைகளில் அமைந்து காணப்படுகின்றன.

 

அறிமுகம்
கதை மாந்தர்கள் அறிமுகம். இரண்டு உணர்ச்சிகளுக்கிடையே ஏற்படும் மோதல் காரணமாகத் தோன்றும் முரண் ஆகும். தலைவன் முதன்முதலாகத் தலைமகளைக் கண்டு காதலுறுவதும் அதுபற்றித் தலைவன் தன் நண்பனொடு கலந்து தெளிவுறுதலும், பின்பு அவளை முன்பு கண்டவிடத்தே கண்டு தன் காதலைப் புலப்படுத்துவதும், அவளுடைய குறிப்பின் வழிச் சென்று அவளது உயிர்த்தோழியை அறிந்து அவள் உதவி பெற்றுத் தலைவியொடு ஏற்படுத்திக் கொண்ட காதலுறவை வளர்த்துக் கொள்ளல்; என அவ்வொழுக்கம் இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், தோழியற் கூட்டம் நான்கு வகைப்படும்.

 

வளர்ச்சி
தலைவன் தலைவியைச் சந்திப்பதும் காமுறுவதுமாகிய பாடல்கள் பெண்பாற்புலவர் பாடல்களில் காணப் பெறவில்லை. பாங்கன் கூட்டம் நிகழ்த்தும் துறையும் இல்லை. பாங்கற் கூட்ட வகையில் தலைவன் தான் எய்திய காதலைப் பாங்கனிடம் உரைப்ப, அவன் இசையாது மறுத்தானாகத் தலைவன் அவற்றுக்கு விடைகூறுவதாக வரும் துறைப்பகுதியே முதலாவதாகக் காணப்படுகிறது. ஞாயிறு கதிர்பரப்பும் வெம்மை வாய்ந்த பாறையில் கையிழந்த ஊமையன் தன் கண்ணாகக் காக்கும் வெண்ணெய் அவன் கட்டுக்குள் நில்லாமல் உருகியது போல் எனக்குள் பரவிய காமநோயைப் பொறுத்துக் கொண்டு நீக்குதல் அரிது என

           இடிக்கும் கேளிர்! நும்குறை ஆக

           நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல;

           ஞாயிறு காயும் வெவ்அறை மருங்கில்

           கைஇல் ஊமன் கண்ணின் காக்கும்

           வெண்ணெய் உணங்கல் போலப்

           பரந்தன்று இந்நோய், நோன்று கொள்வதற்கு அரிது! (குறு: 58)

என்ற பாடல்வழி வெள்ளிவீதியார் தலைவன் தன் காம நோயின் அருமையை கதைக்கோப்பிற்கான வளர்ச்சியாகக் குறிப்பிடுகின்றார்.

 

தோழியற் கூட்டம்
தலைவன் தலைவியைக் கூட்டுவிக்க வேண்டுவது ஆகும். தோழியிடம், தலைவி எனக்குக் கிட்டாமல் போனால் ஏற்படும் விளைவைத் தலைவன் உரைப்பதாக அமைகிறது. இவ்வின்பம் கிட்டாமல் பிரிவு நேருமாயின் அவளையே நினைந்து நான் பனை மடலால் செய்த குதிரையின் மீது ஏறித் தெருவில் நின்றாலும் அவளுக்குத்தான் பழி; அப்படியே நான் அவலத்தில் உயிர் வாழ்வதாலும் எனக்கும் பழியையேத் தருவதாக,

           பொழுது இடை தெரியின் பொய்யே காமம்,

           மாஎன மடலொடு மறுகில் தோன்றித்

           தெற்றெனத் தூற்றலும் பழியே;

           வாழ்தலும் பழியே பிரிவு தலைவனே. (குறுந். 32: 3-6)

என்று அள்ளுர் நன்முல்லையார் பாடுகின்றார். பெண்ணொருத்தியின் மீது புதுக்காதல் கொண்ட இளந்தலைமகன் மறுத்தவழி அடைந்த மனவேதனையை இப்பெண்புலவர் பாடியுள்ளார்.

 

தோழியின் முயற்சி
வருமுலையாரித்தி என்ற புலவர் தலைவன் தோழியிடம் வேண்டத் தோழி, தலைவியிடம் அவனது துயரத்தையும், மன நிலையையும் குறை நயப்ப எடுத்துக் கூறும் பாடலாக குறிப்பிடுகின்றார். ஒருநாள்இருநாள் வந்தவனல்லன், பலநாள்கள் வந்து பணிமொழி பேசி எனது நல்ல நெஞ்சத்தை நெகிழச் செய்த தலைவன் வரவில்லையே அதனால் வேறு புலங்களையுடைய நல்ல நாட்டினில் பெய்த இடியோசையுடன் கூடிய மழை, கலங்கி வருவதுபோல் எனது மனமும் அமைதியற்று அவன் நினைவில் கலங்குகின்றது எனத் தோழி உரைப்பதாக,

           ஆசுஆகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?

           வேறுபலன் நல்நாட்டுப் பெய்த

           ஏறுடை மழையின் கவிழும்என் நெஞ்சே (குறுந். 176: 5-7)

           என்று பாடுகிறார். பெண்ணொருத்தியின் கூற்றைப் பெண்பாலார் பாடுவது பொருத்தமாகவுள்ளது.

 

உச்சம்
முரண்பட்ட இரண்டு ஆற்றல்களும் தத்தம் வலிமையைத் தொடர்ந்து சமநிலையில் செலுத்த முடியாது. உச்சம் இயற்கையாகவும் முன் நிகழ்ச்சிகளின் விளைவாகவும் தோன்றும். இலக்கிய நிலையில் உச்சமாக தலைவன் தலைவியின் காதல் வாழ்க்கை வளர்ந்து இருவரும் சந்திக்கும் இடங்களாக, இரவுக்குறி, பகற்குறியும் அமைகிறது.

 

இரவுக்குறி
ஊராவர் தெருவில் விழாவயற்கின்ற பொழில்களில் ~தாம் அமர் துணையொடு வண்டு இமிரும், யானே புலம்பு கொள் அவலமொடு கண் படையிலனே. இதனால் நிலவும் ஊரும் பிறவும் கலந்த உலகம் என்னோடு பொருங்கொல் உறக்கங்கள் கொள்ளாமல் உலகமொடு பொருங்கொல் என் அலவுறு நெஞ்சே என்று மொழிகின்றாள்

 

           நிலவே, நீல்நிற விசும்பில் பல்கதிர் பரப்பி

           பால்மலி கடலின், பரந்து பட்டன்றே;

           ஊரே ஒலிவரும் சும்மையோடு மலிதொகுபு,ஈண்டிக்,

           கலிகெழு மறுகின் விழவு அயரும்மே; (நற். 348: 1-4)

 

என்ற பாடல்வழிதலைவி தோழிக்கு உரைப்பாளாய் நிலவோ பாற்கடற்போல் பரந்து விளங்குகிறது எனத் தலைவி, இரவில் தலைவனைக் காண முடியாமல் ஊரார் விழித்திருந்து தடுப்பதாகப் புலம்பும் பாடலாக அமைகிறது.

 

பகற்குறி
காதல் பெருக்கெடுத்துப் பகற்காலத்தில் இருவருமே பிறர் தெரிந்துகொள்ளாதபடி மறைந்திருந்து உரையாடி இன்புறுவதற்கு என்று காணப்படும் இடம் பகற்குறி எனப்படும். இக்குறியிடம் கண்டு கூடுமிடத்து இருவரும் தம்முள் பேசிக் கொள்வது பொருளாகப்; பாடல்கள் இல்லை. குறியிடம் பற்றித் தலைவனும் தோழியும், தோழியும் தலைவியும் பேசுவன பொருளாகக் கொண்டே பாடுகின்றனர். காதலரோடு நாம் இனிமையாக இருந்து விளையாடிய இக்கடற்கரைச் சோலையானது நமக்கு இனி எவ்வாறு அமையுமோ? என்று

 

 

           நெய்தல் கூம்ப, நிழல்குணக்கு ஒழுக,

           கல்சேர் மண்புலம் சிவந்து நிலம் தணிய

           பல்பூங் கானலும் அல்கின்ற றன்றே;

           இனமணி ஒலிப்பப், பொழுதுபடப் பூட்டி......( நற். 187: 1-4)

 

என்ற பாடல்வழி பகற்குறியை எண்ணி ஏங்கியத் தலைவி அவனொடு விளையாடி மகிழ்ந்த கானற்சோலையும், அவன் நீங்குதற்குக் காரணமாகிய மாலைப்பொழுதின் கழிவும் அவள் நெஞ்சைக் கவலையுறச் செய்வதாக இப்பாடல் அமைகிறது.

 

வரைவு கடாதல்:
பகற்குறிக் கூட்டம் தொடர்ந்து நடைபெறின் களவு வெளிப்படும் என்ற அச்சத்தால் தலைவன் வரவு தடைப்படும். அதனால் காணும் பொழுதிலும் காணாப் பொழுது மிகுதியாகும். அதனைப் பெறாத தலைமகள் உள்ளம் வருந்தி மேனி வேறுபடுவள். அதனை உணரும் தோழி, இவ்வேறுபாடு பிறர் அறிய புலப்பின் விளைவு வேறாகும் என்று கருதி, தோழி தலைவனை திருமணத்திற்கு வற்புறுத்தப்படுவதாக் பூங்கண் உத்திரையார் பாடுகின்றார் (குறுந்;. 48). தலைமகன் வருவது கண்ட தோழி அவனைத் தனியிடத்தே நிறுத்தி காதல் ஒழுகலாற்றை அன்னை அறிந்து இல்லத்தில் அடைத்துவிட்டாள். இதனால் எங்கள் இளநலம் முதிர்ந்து கழிகிறது என்றுக் கூறி தலைவன் அறிவை நன்குத் தூண்டுவதாக ஒளவையாரும் (நற்-295) தோழி கூறுவதாகப் பாடுகின்றனர்.

 

வரைவு நீடல்: அறம்புரிதல், பொருளீட்டல், நாடு காத்தல், பகை கெடுத்தல் முதலிய உலகியல் வாழ்க்கைக்குரிய கடமைகளை உடையவன் தலைவன். வரைதற்குரிய முயற்சிகள் மேற்கூறிpய கடமைகளால் இடையீடு வருவது வரைவு நீடல் ஆகும். இதனை நல்வெள்ளியார் (குறுந் - 365) ஆம் பாடலில் குறிப்பிடுகிறார். தலைவன் வரையாது நீட்டித்ததற்கு; காரணம் அறிய வேலனைக் கொண்டு கழங்கு வைத்து அறிவோமா எனத் தலைவிக்குத் தோழி கூறுவதாக

           நாறுகொள் பிரசம் ஊதுநா டற்குக்

           காதல் செய்தலும் காதலம் அன்மை

           யாதெனிற் கொல்லோ? தோழி! வினவுகம்,

           பெய்ம்மணல் முற்றம் கடிகொண்டு

           மெய்ம்மலி கழங்கின் வேலற் தந்தே. (நற். 268: 5-9)

என்னும் வெறிபாடிய காமக் கண்ணியார் பாடுகின்றார். இவ்வாறு தலைவியை உறவினர், ஊரார் பயமின்றி அடைய திருமணமே சரி என்று சிறைப்புறமாக நிற்கும் தலைவனுக்கு உணர்த்தத் தோழியும், தலைவியும் நடத்தும் நாடகத்தைப் பெண்பாற் புலவர்கள் பதிவு செய்திருப்பது கொண்டு அப்புலவர்களின் ஆளுமைத் பண்பை அறிய முடிகிறது.

 

வீழ்ச்சி
உச்சம் தொடர்ந்து முடிவை நோக்கிச் செல்லும் பகுதி ஆகும்.

 

வரைவின் பொருட்டு பிரிவு
காதலொழுக்கம் பூண்ட தலைவன் பொருள் காரணமாகவும் வேறு பல கடமைகள் காரணமாகவும் பிரிந்த விடத்து தலைவிக்கு பிரிவு ஆற்றாது தீமையே விளைவிக்கும். அவருடைய மேனியும் நிறம் பசந்து மெலிவு எய்தும் நிலையில் அவள் தனது ஆற்றாமையைத் தோழிக்கும் கூறுவாள். வரைவின் பொருட்டு பரிந்த தலைவன் வராமையினால் தலைவியன் நிலை வருத்தத்திற்கு உரியதாக மாறுவதாகையால் குளத்தில் வீசப்பட்ட மீன் வலையில் விலங்கு தானே அகப்பட்டது போன்று வரைவிற்குரிய அயலவரின் முயற்சியினால் பயன் என்ன? என்று குறுந்தொகையில்

 

           மீன்வலை மாப்பட் டாங்கு

           இது மற்று எவனோ, நொதுமலர் தலையே (குறுந். 171: 3-4)

 

என்னும் பாடல் வரிகள் உணர்த்துவதாக பூங்கண் உத்திரையர் குறிப்பிடுகிறார்.

 

முடிவு
தலைவியின் உடல் மாற்றத்திற்கு கட்டுவிச்சியை அழைத்து வெறியாடல் நிகழ்த்திய அன்னையிடம் தோழி அவளது களவு வாழ்க்கையைக் கூறி அறத்தோடு நின்ற நிலையை

 

           அன்னை அறியினும் அறிக அலர்வாய்

           அம்மென் சேரி கேட்பினும் கேட்க:

           பிறிது ஒன்று இன்மை அறியக் கூறி, (அகம். 110: 1-3))

 

என்னும் போந்தைப் பசலையார் பாடல் வழி அறியலாம். தோழியால் தலைவியின் களவுக் காதலுன்மை அறிந்த செவிலி, நற்றாய்க்கு அறத்தொடு நிற்கும் துறையில் ~செவிலி மகள் உடன்போக்கு சென்ற தலைவியின் களவு வாழ்க்கையை நற்றாயிடம்

 

           சேயிலை வெள்வேல் விடலையொடு

           தொகுவளை முன்கை மடந்தை நட்பே (குறுந். 15: 6-7)

என ஒளவையார் பாடுகின்றார்.

 

உடன்போக்கு:
கற்பொடு புணர்ந்த கௌவை எனப் பலத்திறமாகச் சான்றோர் வழங்குவர். தலைவி தலைமகனோடு போவது தெரிந்து தேடிச் சென்றவருள் செவிலி முதுபெண்டாதலின், அவள் தலைவி சென்ற நெடிய காட்டின்வழி; போகி;ன்றாள். எதிரே எண்ணிறந்தேர் வரக்கண்டு பெருவருத்த முற்றுப் புலம்புவதாக வெள்ளிவீதியார்

 

           காலே பரிதப் பினவே கண்ணே

           நோக்கி நோக்கி வாள்இழந் தனவே (குறுந். 44: 1-2)

 

பாடலொன்றில் பாடுகின்றார். ஒளவையாரும் (குறுந். 388), உடன் போக்கில் நேரும் துன்பத்தைக் கூறும் தலைவனிடம் தோழி. 'உம்மோடு வந்தால் கானமும் இனிமையே பயங்கும்" என்று கூறுவதாக பாடுகிறார்.

 

வரைவு மலிதல்:
தோழி நம் கூட்டத்தினர் தண்டுடைய கையினரும், நரைத்த தலையில் துணியை உடையவரும், நன்று நன்று எனக் கூறுகின்ற தலைவனைச் சார்ந்த மக்களொடு, இன்று வரப்பெற்றமையால் இந்நாள் சிறப்புடையதாக

 

           அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப்

           பிரிந்தோர்ப் புணர்ப்பவர் இருந்தனர் கொல்லோ (குறுந். 146: 1-2)

 

என வெள்ளிவீதியார் திருமணம் பேச வந்த பெரியோரைச் சுட்டுகிறார். களவு காலத்தில் பெரிய துன்பங்களையும் பொறுத்திருந்தீர் தலைவியுடன் கூட இனி எந்தத் தடையுமில்லை எனத் தோழி தலைவனுக்கு உரைத்ததாக,

           அயிரை பரந்த அம்தண் பழனத்து

           ஏந்துஎழில் மலர தூம்படைத் திரள்கால்

           ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்;கு இவள்

           இடைமுலைக் கிடந்தும், நடுங்கல் ஆனீர் (குறுந். 178: 1-4)

 

பாடல்வழி நெடும்பல்லியத்தையும் போன்ற பெண்பாற் புலவர்கள் மணம் முடிந்து, மனையில் நிகழும் நிகழ்ச்சிகள் குறித்து தம் பாடல்கள்வழி எடுத்துயம்புகின்றனர்.

 

பொருள் வினைப் பிரிவு:
அன்பாற் பிணிப்புற்றிருக்கும் தலைமக்களின் இன்ப வாழ்விற்கும் பிரிவு போலத் துன்பம் தருவது பிறிதில்லை. பிரிவு இன்றியமையாதவிடத்துத் தலைவன், தலைவியின் ஆற்றாத் தன்மையை எண்ணித் தானே சொல்ல முடியாமல் தோழி வாயிலாக உணர்த்துவான்; தலைவி சில குறிப்புரைகளால் உய்த்துணரச் செய்வாள். மனைத் தலைவர்கள் தலைவியைப் பிரிந்து செல்வாரென்றும் அவர் வரும் வரையும் அவள் மனையறம் புரிந்து கொண்டு தனித்து இருப்பார்; என்பதை ஒளவையார்

           பொம்மல் ஓதி! நம் இவண் ஒழியச்

           செல்ப என்ப, தாமே: சென்று,

           தம் வினை முற்றி வரூஉம் வரை, நம் மனை

           வாழ்தும் என்ப, நாமே, அதன் தலைக் (நற். 129: 3-6)

பாடல்வழி விளக்குகிறார்.

 

பரத்தையர் பிரிவு
தலைவி அதற்கு மறுப்புக் கூறி தன் நிலைக் குறித்துப் பேசுவதும் (குறுந்.202) அள்ளுர் நன்முல்லையார் பாடுகின்றார். நெடும்பல்லியத்தையும் (குறுந்.203) உன்னுடைய பரத்தையர் துயரம் தருகின்ற பழிச் சொற்களுடன் எம்முடன் வீதியில் இனிமேல் வரக் கூடாது என்று,

 

           பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந்த தாஅங்கு

           இன்னாது இசைக்கும் அம்பலொடு

           வாரல், வாழியர்! ஐய எம் தெருவே. (குறுந்.139: 4-6)

 

என ஒக்கூர் மாசாத்தியார் பாடுகின்றார். முடிவுரை
அகத்திணையில் தலைவன் தலைவிக்கும் இடையே ஏற்படும் அறிமுகம் தொடங்கி தோழி, பாங்கன் ஆகியோர்pன் முயற்சியின் ஊடே காதல் வளர்ந்து, இரவுக்குறி, பகற்குறி ஆகிய குறிகளால் சந்திப்பு நேரும் நிலையில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவது உச்சநிலையாகும். இதனால் திருமணத்திற்காகப் பொருள் சேர்க்கும் பொருட்டு பிரிவு ஏற்படுவதும் பிரிவு தாங்காமல் தவிக்கும் மனநிலையும் வீழ்ச்சியாக அமைகிறது. முடிவில் தலைவியின் களவு வாழ்க்கை வெளிப்பட்டு அறத்தொடு நிற்றலும், தலைவன் தலைவியுடன் உடன்போக்கு மேற்க்கொள்வதும், திருமணம் முடிந்தலும், என்பன் முடிவாகக் காணப்படுகிறது. கற்பு வாழ்க்கையில் பொருள் வினைப் பிரிவும்,பரத்தையர் பிரிவும் ஊடல் தீர்ந்து சேர்த்தலும் முடிவாக அமைகிறது. இவ்வாறு பெண்பாற் புலவர் பாடல்கள் தனித்தனிப் பாடல்களாக அமைந்தாலும் அவை தொடர் நிகழ்ச்சிகளைக் கொண்டே காணப்படுகின்றன.. இவ்வகையில் காரண காரிய முறையில் கதை நிகழ்ச்சிகள் அமைந்து நாடகக் கூறான கதைக் கோப்பினை பாடல்களில் பதிவு செய்துள்ளமையை அறியும் போது இப்புலவர் பெருமக்கள் நாடக ஆளுமைத் தன்மை மிக்கவர்களாகப் போற்றப்படுகிறார்கள் என்பதை மேற்க்கண்டவற்றான் அறிய முடிகிறது.

 

அடிக்குறிப்பு

           1. பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை, மு.வரதராசனார். பக். 14

           2. குறிஞ்சிக்கலி, வழித்துணை விளக்கம் முன்னுரை, எஸ்.ஆர். மார்க்கபந்து சர்மா. பக்.

           3. இலக்கியத் திறனாய்வியல், தா.ஏ.ஞானமூர்த்தி பக். 282

           4. வுயஅடை டநஒiஉழn எழட.iஎ.P. 2363

           5. இலக்கியத் திறனாய்வியல், தா.ஏ.ஞானமூர்த்தி, 283-284

           6. துழாn எயn னசரவநn pடயல றசiபாவ யளடழ PP 30-3