ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

நெடுநல்வாடையில் தொழில்நுட்பக் கூறுகள்

முனைவா; வி.கலாவதி 08 Oct 2019 Read Full PDF

முனைவா; வி.கலாவதி,

தமிழ்த்துறைதலைவா;

இராஜபாளையம் இராஜீக்கள் கல்லுரி

இராஜபாளையம்.

 

ஆய்வுச் சுருக்கம்:
நெடுநல்வாடையில் கட்டிடக்கலைசார்ந்த கூறுகளின் முக்கியத்துவம், மனை அமைத்துஅதைக் கட்டியமுறைதச்சுவேலையில் பின்பற்றப்பட்டகலைக்கூறுகள்,அரண்மனையின் முன்புறத் தோற்றம்,மழைநீர் சேகரிப்புமுறைகள் இவையாவும் பழங்காலத் தமிழகத்தில் நேர்த்தியுடனும் ஒருங்குடனும் செய்யப்பட்டமுறைகளைஅறியமுடிகின்றன.. பிறநாட்டுடன் வாணிகத் தொடர்புமட்டுமல்லகலைத் தொடர்பும் தமிழர்களுக்கு இருந்துள்ளதையவனநாட்டிலிருந்து பாவை கொண்டு வரப்பட்டு என்றவரிகள் புலப்படுத்துகின்றன. மேலும் பாண்டிமாதேவிஉறங்கியகட்டிலில் காணப்படும் தொழில்நுட்பக் கூறுகள் சங்க இலக்கியப் பெருமையைப் பறைசாற்றும் வகையில் விளங்குகின்றனஎன்பனபோன்றவற்றை இந்தஆய்வுக் கட்டுரைபுலப்படுத்துகின்றது.

 

திறவுச்சொற்கள்:
நெடுநல்வாடை, தொல்காப்பியம், நக்கீரர், தொழில்நுட்பம், பழந்தமிழ்

 

முன்னுரை

சங்க இலக்கியமாகி இன்றுசெவ்வியல் இலக்கியமாகமாறிய சூழலில் நூற்றாண்டுகள் பலகடந்தும் நிலைத்; பேறுடைய இலக்கியங்களாகப் பேசபடுவதற்கான சூழல் அவ்விலக்கியங்களில் காணலாகும் பலவகையான இலக்கியக் கூறுகளேசான்றாக விளங்குகின்றன.மக்களின் நாகரிகவளர்ச்சிப் போக்கினால் வாழ்க்கைத் தரத்திற்குஉட்பட்டபலவிதநிலைகளன்களைஉருவாக்கத் தொடங்கியதன் வளர்ச்சியேதொழில்நுட்பங்கள் தோன்றக் காரணமாய் அமைந்தது. தொழில் என்பது வாழ்வாதரத்திற்கான ஒன்றாகப் பார்க்கப்பட்டாலும் கலைநுட்பமுடைய,மனதிற்கு மகிழ்ச்சிதரக்கூடிய ஒன்றாக மக்கள் கருதிவந்தனர். ‘கலைநோக்கு’ என்பது தொழிலுக்கு அப்பாற்பட்டு மனிதமனதைஈர்க்கும் தன்மைஉடையதாகவிளங்கியது. எனவேசங்ககாலமக்கள் தொழிலால் கிடைக்கும் பொருளைவிடகலைக்குமுக்கியத்துவம் தந்தனர் என்பதைநெடுநல்வாடையில் தொழில்நுட்பக் கூறுகள் என்னும் கட்டுரை வழி அறியலாம்.

 

நெடுநல்வாடை

நக்கீரர் இயற்றிய நூல். நீண்ட நல்லவாடை என்னும் பொருண்மையில் அமைந்ததலைப்பு. வாடை காற்று எத்தகைய தன்மை உடையது என்பதை அதன் குளிர்மையையும் விளக்கும் செய்யுட்களைக் கொண்டது. கோவலர்கள் வாடைக் காற்றினால் எத்தகையதுன்பமுற்றனர் என்பதில் தொடங்கி,மன்னன் போர் பாசறையிலேவாடைக் காற்றையும் பொருட்படுத்தாமல் வீரர்களுக்குஆறுதல் மொழிகள் கூறியதுவரைவாடைக் காற்றின் தன்மைகளை இந்நூல் விளக்குகின்றது.

 

தொழில்நுட்பம்

‘தொழில்’ என்பதுசெய்யும் செயலைக் குறிக்கும் காலப்போக்கில் பொருள் ஈட்டுவதற்கானகருவியாகச் சித்தரிக்கப்பட்டுவிட்;டது. இலக்கணவிதிகளின் படி அல்,தல்,அம், ஐ, கை, வை, கு, பு, உ,தி,சி,வி, உள்,காடு,பாடு,அரவு, ஆணை,மை, து என்னும் பத்தொன்பதும் தொழில் பெயருக்கானவிகுதிகளாகக் கூறப்படுகின்றன. இலக்கியங்களில் அரசர்,அந்தணர்,வணிகர்,வேளாளர் என்றபிரிவுகளாகதொழில்கள் விளங்கியுள்ளன. இத்தகையதொழில் முறைகளில் கையாளப்பட்டநுணுக்கமானவேலைப்பாடுகளைத் ‘தொழில் நுட்பம்’ என்றுசுட்டலாம். அறிவியலின் பயன்பாட்டிலும் தொழில்நுட்பமுறைகள் இடம் பெற்றிருக்கின்றன. நெடுநல்வாடையில் அறிவியல் தொடர்புடையதொழில்நுட்பமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனஎன்பதையும் அறியமுடிகின்றது. மனை அமைத்தமுறையில் ஜோதிடமுறைகள் பின்பற்றி‘திருமுளைச் சாத்து’என்னும் சடங்குசெய்யப்பட்டதுஎன்பதை,

 

           “விரிகதிர் பரப்பியவியல்வாய் மண்டிலம்

           இருகோல் குறிநிலைவழுக்காதுகுடக்குஏர்பு,

           ஒருதிறம் சாராஅரைநாள் அமையத்து,

           நூல் அறிபுலவர் நுண்ணுதின் கயிறு இட்டு,

           தேஎம் கொண்டுதெய்வம் நோக்கு,

           பெரும் பெயர் மன்னர்க்குஒப்ப மனை வகுத்து”

(நெ.வா.72 – 77)

 

என்றபாடலில் வடக்குதெற்காக இரு கோல்கள் நட்டப்பட்டுகிழக்கு,மேற்காகத் தாரையாகஓடும் சூரியனின் கதிர்பட்டுஉண்டாகும் நிழல் ஒருபக்கமாகவிழாமல் நேராகவிழும் சமையம் குறித்துகொள்ளப்படும் அந்நாளில் அரண்மனைஅமைப்பதற்கான‘திருமுளைச் சாத்து’ எனப்படும் வாஸ்து செய்யப்பட்டுகட்டடம் கட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றகருத்து இடம் பெற்றுள்ளதைநோக்கும் போதுகட்டிடம் கட்டஎத்தகையமுக்கியத்துவத்தை தந்துள்ளனர். “கட்டிடத்தை வடிவமைக்கக்கூடிய கலையே கட்டிடக்கலை எனப்படும் கட்டிடத்தின் முக்கியஅங்கமாகத் திகழ்வது கூரை,வளைவுகள்,சுவர்கள்,கதவுகள் மற்றும் ஜன்னல்கள் ஆகும். ஆர்கிடெக்சர் என்றவார்த்தை‘ஆர்க்’ என்ற வார்த்தையிலிருந்து தோன்றியது‘ஆர்க்’ என்றால் வளைவு அல்லது வளைவான நுழைவாயில் எனப்படும்.”(இந்தியக் கட்டடக்கலைவரலாறுமுனைவர் அ.ஹ.முகைதீன் பாதுஷா)

என்றுகட்டிடக்கலைப் பற்றியவிளக்கத்தைமுனைவர் அ.ஹ.முகைதீன் பாதுஷா மூலம் அறியமுடிகின்றது. இந்தியகட்டிடக்கலையின் சிறப்பைநோக்கும் போதுகட்டிடக்கலைத் தொடர்புடைய இலக்கண நூல்கள் இருந்துள்ளனஎன்பதை,“இந்தியஅறிஞர்களாலேவடமொழியில் எழுதப்பட்டவை இவற்றைசிற்ப நூல்கள்,வாஸ்து நூல்கள் அல்லது சாஸ்திர நூல்கள் என்பர். இவைபலவானாலும் இன்றுநமக்குகிடைப்பவேசிலவே. அவையாவனமானசாரம்,மயமதம்,விஸ்வர்மீயம், ஐந்திரமதம், மனுசாரம், காஸ்யபம் இவை சிற்பக்கலை, கட்டிடக்கலைஆகிய இரண்டையும் பற்றிப் பேசும் வாஸ்து நூல்கள்” (இந்தியகோவில் கட்டிடக்கலைவரலாறு,ஆர்.வி.ராமன்)

என்று கட்டிடக்கலை இலக்கணமுறைகள் குறித்து நூல்கள் உள்ளனஎன்பதைஆர்.வி.ராமன் கூற்று மெய்ப்பிக்கின்றது. வரலாற்று அடிப்படையிலான ஆய்வுகளோடு இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளகருத்துக்களையும் ஒப்பிட்டுநோக்கும் போது,கலைவளர்ச்சிக்கு சங்ககாலமக்கள் எத்தகையமுக்கியத்துவம் தந்துள்ளனர் என்பதைவிளங்கிக் கொள்ளமுடிகிறது. அதுபோலகோபுரவாயில் வளைந்தஉயர்ந்தநிலைகளைக் கொண்டதுஎன்று கூறும் போதுதமிழக கட்டிடக் கலையில் பழமையான முறைகள் இன்றைய கட்டிடக் கலைஞர்களாலும் பின்பற்றப்பட்டு வருவதை அறிந்து கொள்ள முடிகிறது. இவை மூலம் நேர்த்தியான தொழில் நுட்பக் கூறுகள் சங்ககால மக்களால் பின்பற்றப்பட்டுள்ளனஎன்பதைஉணர்த்துகின்றது.

 

தச்சுவேலையில் தொழில்நுட்பக் கூறுகள்:

மனிதன் நாகரிக வளர்ச்சிஅடைய புதிய புதிய உத்திமுறைகளை கண்டுபிடித்து அவற்றை உலகிற்கு கொடையாக வழங்கியுள்ளான். அவ்வகையில் தான் வாழும் வாழ்விடத்திற்குதகுந்ததுபோல இயற்கைதந்தகொடைகளைக் கொண்டுகலைநயம் மிக்க சூழலைஉருவாக்கிஅதனுடன் தன்னையும்,தன்னைச் சார்ந்தோரையும் இணைத்துபழமையில் புதுமையைஉருவாக்கத் தலைப்பட்டான். சங்ககாலமக்களில் தலைமைவாய்ந்தமன்னர்களின் சமூகம் எதிரிகளின் தாக்குதலில் இருந்துதன்னைகாத்துக் கொள்ளமிகவும் வலிமையானபோர் கதவுகளைதனதுகோபுரவாயிலில் அமைத்திருந்தான். அத்தகையகோபுரவாயிலின் கதவுகள் பற்றிநெடுநல்வாடையில் ஆணிகள்,பட்டங்கள் யாவும் பருத்த இரும்புகளால் பிணிக்கப் பெற்றவை. அதில் தாழ்ப்பாள்கள் மிகவும் வலிமையானதாகவிளங்கினஎனச் சுட்டப்படுகின்றது. இவையாவும் “கைவல் கம்மியன”; என்று கூறப்படும் தச்சுவேலையில் நேர்த்திஉடையவர்களால் செய்யப்பட்டது.

 

           “ஒருங்குஉடன் வளைஇ ஓங்குகலைவரைப்பின்

           பரு இரும்புபிணித்துசெல்வரக்குஉரீஇ

           துணைமான் கதவம் பொருத்தி இணைமாண்டு” (78 – 80)

 

என்றவரிகளில் சங்ககாலமக்களின் கைத்திறனுடன் சேர்ந்தகலைநயத்தைஅரண்மனைக்குபொருத்தப்பட்;ட கதவுகள் உணர்த்துகின்றன. மேலும் இன்றுபெரும்பாலானவீடுகளின் நிலைக்களுக்குமேலேகாணலாகும் ‘கஜலெட்சுமி’ வடிவம் இழைத்தஉத்தரம் நெடுநல்வாடையிலே இடம் பெற்றுவிட்டது. உத்திரத்தின் மேலேஅதாவதுநிலைக்குமேலேகற்பலகையில் குவளையின் புதியமலர்களைஉயர்த்தித் தங்கள் துதிக்கைகளால் ஏந்தியபிடிகளின் உருவங்களும் அதன் நடுவில் திருமகள் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும். இத்தகையதொழில்நுட்பங்கள் யாவும் சங்ககாலமக்கள் வழங்கியகொடைஎனில் அதுமிகையாககாது. மக்களின் பொழுதுபோக்கிற்காக இருந்தகலை இன்றுவளர்ச்சியடைந்துதொழில்நுட்பக் கூறுகளில் ஒன்றாகமாறிவிட்டது. சிறந்தகலைக் கூறுகளோடுமனிதர்களால் செய்யப்பட்டதொழில் ;நுட்பங்கள் யாவும் கணினிஉதவியுடன் இன்றையகாலத்தில் உருவாக்கப்படுவதால் கலைநேர்த்தி இன்றிகட்டிடக்கலை,தச்சுக் கலைதரம் மாறிவிட்டது. மேலும் கலைக்கூறுகளைகைகளால் இழைத்துசெய்யப்படும் தரம் குறைந்துஅழகியல் நோக்கும் சிதைந்துவரும் அவலநிலையில் தொழில்நுட்பக் கூறுகள் மாறிமுடங்கிக்கிடக்கின்றன. நெடுநல்வாடைக்குஉரைவகுத்தநச்சினார்கினியர் கஜலெட்சுமிஉருவம் பொறித்தகற்பலகைக்குவிளக்கம் தரும் போது,“நடுவில் திருமகளும், இருபுறத்தும் இரண்டுசெழுங்கழுநீர்ப்பூவும், இரண்டுபிடியுமாகவகுத்தஉத்தரக் கற்கலி” என்றுஅழகுபடஉரைக்கின்றார். இத்தகையகாட்சிகலித்தொகையில் 44 ஆம் பாடலிலும் காணமுடிகின்றது.

 

           “வரிநுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதரப்

           புரிநெகிழ் தாமரைமலரங்கண் வீறுஎய்தித்

           திருநயந்து இருந்தன்ன”

 

என்று கூறப்பட்டுள்ளது. பழங்காலகலைகநள் நிலைத்ததன்மைஉடையனஎன்பதற்கு இதுவேதக்கச் சான்றாகும்.

 

அரண்மனையில் மழைநீர் சேகரிப்பு
தமிழகத்தில் நீர் ஆதாரமாகவிளங்கும் ஆறுகள்,குளங்கள்,ஏரிகள் எனஅனைத்துவற்றிக் கிடக்கும் சூழலில் எல்லாவீடுகளிலும் மழைநீர் சேகரிப்புமுறைபின்பற்றவேண்டும் என்றுஅரசின் ஆணையை வழி மொழிந்துஒருகாலகட்டத்தில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் கட்டப்பட்டன. ஆனால் மழைநீர்ச் சேகரிப்பைபழந்தமிழகத்தில் அரசனேபின்பற்றிசெயல்பட்டிருக்கின்றான் என்பதற்குஆதாரமாகநெடுநல்வாடைவிளங்குகின்றது. ‘நிலாமுற்றம்’எனப்படும் பால்கனியிலிருந்துமழைநீரைவெளியேற்றும் குழாய் கலைத்திறத்துடன் மகரமீனின் வாய் போலவடிவமைக்கப்பட்டவழியின் மூலம் வெளியேறியது. என்பதை,

 

           “நிலவுப்பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்து

           கிம்புரிப் பகுவாய் அம்பணம் நிறைய

           கலித்துவீழ் அருவிப் பாடுவிறந்து அயல”(95 – 97)

 

என்றுமாடங்களில் விழும் நீர் சேமிக்கப்பட்டசெய்தியைநெடுநல்வாடைசுட்டிக் காட்டுகின்றது.

 

சிற்பக்கலைத் தொழில்நுட்பம்

சிற்பக்கலையின் வளர்ச்சிசேர,சோழ,பாண்டியர் காலங்களில் வளர்ச்சிபெற்றதுஎனினும் அதன் தோற்றம் வேதகாலத்தில் இருந்துள்ளதுஎன இந்தியசிற்பக்கலைகுறித்துஆராயும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நம் தமிழகத்தில் சங்ககாலமன்னர்கள் கடல் தாண்டிபோர் புரிந்தனர் என்பதோடல்லாமல் அங்கு இருக்கும் கலைகளைதமிழகத்திற்குகொண்டுவந்துகலையைப் போற்றும் அல்லதுபரப்பும் பணியையும் செய்துள்ளனர் என்பதற்கு“யவனர் இயற்றியவினைமாண் பாவை”என்னும் வரிசான்றாகின்றது. யவனநாட்டினர் தங்களின் தொழில் திறம் விளங்குமாறுஉருவாக்கியபாவைகளின் கைகளில் விளக்குகள் ஏந்தியுள்ளனஎன்பதன் மூலம் தொழில்திறம் என்பதுநுட்பமாகச் செய்யப்பட்டவேலைப்பாடுகள் உடையபாவைஎன்பதைபடிப்போர் உணரச் செய்யும் விதமாகவிளங்குகின்றது. அதுபோல இரும்பின் பயன்பாடுகுறித்த“இரும்புதிரிகொளுவிய”என்றவரிகளால் அறியலாம.;

 

அந்தப்புரத்தின் தோற்றத்தில் தொழில்நுட்பம்

கட்டிடக்கலையின் கூறுகளில் முக்கியமானது முன்புறத் தோற்ற வேலைப்பாடாகும். மனையாகிலும்,பொது கட்டிங்களாகிலும்,கோயிலாகிலும் முன்புறத் தோற்றத்தை வைத்தே அக்கட்டிடத்தின் அழகுத் தன்மையைஉணரமுடியும். அந்தவகையில் பாண்டியமன்னனின் மனைவி பாண்டிமாதேவி தங்கி இருக்கும் அந்தப்புரத்தின் முன்புறமதிலின் தோற்றம் கலை நேர்த்தி கொண்டதாக இருப்பதை,

 

           “வரைகண்டன்னமாத்திரள் திண்காழ்

           செம்பு இயன்றன்னசெய்வுஉறுநெடுஞ்சுவர்

           உருவப் பல்பூூ ஒருகொடி வளைஇ

           கருவொடுபெயரியகாண்பு இன் நல் இல்”(108 – 113)

 

என்றபாடல் வரிகளில் அந்தப்புரத்தின் உட்பகுதி சாந்து பூசப்பட்டு தூண்களை உடையதாக பலவல்லிசாதியாகிய கொடிகள் எழுதப் பெற்று அழகுடன் விளங்குவதாக காட்சியளித்தது என்றுஅந்தப்புரத்தின் புறத்தோற்றத்தை கூறுவதன் மூலம் கட்டமைப்புகளில் சீரானஅழகியல் கூறுகள்,தொழில்நுட்ப கூறுகள் பின்பற்றப்பட்டுள்ளமையைஅறியமுடிகின்றது. இத்தகையமுன் சுவர் பற்றியசெய்திக் குறிப்புமதுரைக் காஞ்சியில் “செம்பு இயன்றன்னசெஞ்சுவர் புனைந்து”என்றுசுட்டப்பட்டுள்ளது.

 

கட்டிலின் தொழில்நுட்ப கூறுகள்

பாண்டிமாதேவிஉறங்குவதற்காகசெய்யப்பட்டகட்டிலின் கலைவேலைப்பாடுகள் நெடுநல்வாடையில் சுட்டப்பட்டுள்ளதைநோக்கும் போது 3000 ஆண்டுகளுக்குமுற்பட்டதமிழகமக்களின் வாழ்க்கைமுறைகளில் எத்தகையஅருமையானகலைக் கொடை இன்றையகலைவிரும்பிகளுக்கும்,தொழில்நுட்பவல்லுநர்களுக்கும் கிடைத்துள்ளதுஎன்பதைஅறியமுடிகின்றது. பாண்டில் என்றுசொல்லப்படும் கட்டில் எப்படிசெய்யப்பட்டதுஎன்பதைநெடுநல்வாடைவிளக்கும் போதுநாற்பதுவயதுநிரம்பியமுரசுபோன்றகால்களைஉடையபோரில் இறந்தயானையின் தானேவிழுந்ததந்தங்களால் செய்யப்பட்டது. தச்சன் தனது கூர்மையானசிறியஉளியால் நுட்பாகச் செதுக்கிவட்டக் கட்டிலைஉருவாக்கினான். மேலும் அதன் இடையில் இலைவடிவங்கள் விளங்குமாறுசெய்யப்பட்டதுஎன்று கூறும் போதுநுண்ணியவேலைப்பாடுஉடையகட்டில் (அ) பாண்டில் செய்யசிற்றுளிபயன்பாடுமாறவில்லைகாலங்கள் மாறினாலும்,கலையும்,தொழிலும் மாறாதுஎன்பதற்கு இதுவேதக்கச் சான்றாகும். கட்டிலின் மேல் சிங்கம் வேட்டையாடுவதுபோன்றகாட்சிதகடுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. தூரிகைகொண்டுவண்ணங்களால் சித்திரம் தீட்டுவதைக் காட்டிலும் தகடுகளில் உருவங்கள் பொறிப்பதுஎன்பதுகடினமானதாக்கும் என்றும் கலைதன்மைகொண்டகலைஞர்களுக்குஅதுஎளிதாகிப் போகின்றது.

 

           “தசநான்குஎய்தியபணைமருள் நோன்தாள்

           இகல் மீக் கூறும் ஏந்துஎழில் வரிநுதல்

           பொழுதுஒழி,நாகம் ஒழிஎயிறுஅருகுஎறிந்து

           சீரும் செம்மையும் ஒப்பவல்லோன்

            கூர் உளிக் குயின்றஈர் இலை இடை இடுபு”(115 – 119)

 

என்றசெய்யுள் வரிகளில் கட்டிலைதச்சன் செய்தமுறையைக் கூறியுள்ளது. மேலும் பாண்டில் பற்றிமலைப்படுகடாமில் “நுண் உருக்குற்றவிளங்குஅடர்ப்பாண்டில்”என்று கூறப்பட்டுள்ளமைநோக்கும் போதுபாண்டில் பற்றிசங்க இலக்கியங்களில் சுட்டப்பட்டுள்ளதைமட்டுமேஆய்வாகஎடுத்துக் கொண்டால் கலை இலக்கியவளர்ச்சியில் பெரும் ஆய்வாகஅமையும். பாண்டிமாதேவியின் சேக்கையாகியபடுக்கைவிரிப்பிலும் தொழில்நுட்பத்தைகாணமுடிகின்றது. பழங்காலத்தில் பின்பற்றப்பட்டமுறைகள் இன்றுபின்பற்றப்படும் போதுதொழில் நுட்பங்கள் மாறவில்லை. தொழில்நுட்பக் கருவிகளேமாறிஉள்ளதைஅறியமுடிகின்றது. அன்றையதொழில்நுட்பக் கூறுகளின் வளர்ச்சியைமனிதனின் பங்களிப்பு இருந்தது. இன்றையதொழில்நுட்பக் கூறுகளின் வளர்ச்சியில் கணினியேவிஞ்சிநிற்கின்றது. படுக்கைவிரிப்பானதுகஞ்சிபோடப்பட்டுகசங்காமல் இருந்ததுஎன்றகுறிப்பைநெடுநல்வாடை கூறுகின்றதுபோலவே,

 

           “சோறுஅமைவுற்றநீர் உடைக் கலிங்கம்” (மதுரைக் காஞ்சி 721)

என்றுமதுரைக்காஞ்சியும் எடுத்துரைக்கின்றது. மேலும் 3 முதல் 6 அடி பேரெல்லைகொண்டகுறுந்தொகையில்,

 

           “நலந்தலைப் புலத்திபசைதோய்த்துஎடுத்துத்

           தலைப்புடைப் போக்கித் தண் கயத்து இட்ட

           நீரிற் பிரியாப் பரூஉத்திரி”

 

என்றுபுலத்திபசைப் போட்டுஎடுத்துகுளிர்ந்த ஆடையை கயிற்றில் இட்டாள் என்றுஆடைக்குகஞ்சிபசைப் போட்டுபயன்படுத்தியமுறையைசங்க இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.

 

பாண்டிமாதேவியின் அணிகலன்களில் தொழில்நுட்பக் கூறுகள்

ஆதிமனிதன் வேட்டையாடிஉணவுஉண்டான். தழையாடைகள் அணிந்தான்.மேலும் தனக்குதேவையானதைதானேஉருவாக்கி இயற்கைச் சார்ந்தவாழ்க்கையில் தன்னை இணைத்துக் கொண்டான். அதன் பின்னர் தன்னைஅலங்கரித்துக் கொள்ள இயற்கைச் சார்ந்தபொருட்களைப் பயன்படுத்தியவன் உலோகங்களின் கண்டுபிடிப்பின் விளைவாக இரும்பு,செம்புஆகியவற்றாலானகருவிகளின் பயன்பாடுமிகுந்தகாலத்தில் அவற்றால் அணிகலன்களைச் செய்துஅணிந்துள்ளான். 3000 ஆண்டுகளுக்குமுற்பட்டசங்ககாலமனிதன் பயன்படுத்தியஅணிகலன்கள் இன்றும் அதேவடிவங்களில் மக்கள் விரும்பிஅணிகின்றனர் என்பதைமெய்பிக்கும் விதமாகநெடுநல்வாடையில் பாண்டிமாதேவிஅணிகலன்கள்; மற்றும் அதன் நேர்த்தியானவடிவமைப்புகுறித்துநாம் உணரமுடிகின்றது. முத்துக்கள் பதித்தகச்சாடைஅணியவேண்டியவள் அதைதவிர்த்தாள் என்றும் கணவனைபிரிந்து இருப்பதால் மங்கலநாண் மட்டுமேஅணிந்திருந்தாள். மேலும் பொன்னாலானமகரக்குழை,தாளுருவிகள் போன்றஅணிகலன்கள் பாண்டிமாதேவிபயன்படுத்தியசெய்தி நெடுநல்வாடை மூலம் அறியமுடிகின்றது. பழந்தமிழ் இலக்கியங்களில் தாலியின் பயன்;பாடுபற்றியகருத்துக்களில் முரண்பாடுகள் ஏராளமாக இருக்கின்றன. தொல்காப்பியம்,

 

           “பொய்யும் வழுவும் தோன்றியபின்னர்

           ஐயர் யாத்தனர் கரணம் என்ப”(தொல் - பொருள்)

 

என்றுகரணம் என்னும் திருமணமுறைபற்றிதொல்காப்பியம் கூறும் போதுபொய்,குற்றம் செய்தல் போன்றவைமக்களிடம் காணப்பட்டதால் தாலி (அ) மங்கலநாண் அணியும் வழக்கம் வந்ததுஎன்றுஎடுத்துரைக்கின்றது. ஆடைகள் பூ வேலைப்பாடுடையபருத்தி ஆடையை அணிந்தபாண்டிமாதேவிபட்டாடையைத் தவிர்த்தாள் என்றகருத்தின் மூலம் நேர்த்தியானஆடைகள் நெய்துஅவற்றைசிறந்தமுறையில் பராமரித்துவந்தகருத்தினையும் நெடுநல்வாடைசுட்டிக்காட்டுகின்றது.

 

முடிவுரை

பழந்தமிழ் இலக்கியப் புதையலில் தேடிக்; கொண்டேசென்றால் காணக்கிடைக்காதகருத்துக் கருவூலங்கள் தென்படும். அவையாவும் இன்றைய சமுதாய வாழ்க்கையோடு தொடர்பு படுத்திபார்க்கும் போதுதமிழர்கள் எத்தகையநுட்பமானதொழில்நுட்பக் கூறுகளைஅறிந்துஅதன் மூலம் ஆழமானவேலைப்பாடுகளைச் செய்துகலைத் திறனின் வளர்ச்சிக்குவழிகாட்டியிருக்கின்றனர் என்பதைஉணரமுடிகின்றது. நேர்த்தியானமுறையில் தொழில்திறம் வளர்த்தகாலம் சங்ககாலம் என்றால் அதுபொருத்தமுடையதாகஅமையும். அந்தவகையில் நெடுநல்வாடையில் மனை (அ) வீடுஅமைக்கும் முறைகளில் இருந்துபெண்கள் அணிந்திருந்தஅணிகலன்கள் வரையிலானதொழில்நுட்பக் கூறுகள் பி;ன்பற்றப்பட்டுள்ளமுறைமையை இக்கட்டுரை வழி அறியமுடிகின்றது.

 

மேற்கோள் நூல்கள்: மூலநூல் : பத்துப்பாட்டு -1
பதிப்பாசிரியர்கள்: முனைவர் அ.மா.பரிமணம்
முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன

 

1. இந்தியக் கட்டடக்கலைவரலாறு: முனைவர் அ.ஹ.முகைதீன் பாதுஷா
2. (இந்தியகோவில் கட்டிடக்கலைவரலாறு: ஆர்.வி.ராமன்
3. நுண்கலைகள்:மயிலைசீனி.வேங்கடசாமிநாட்டார்
4. தமிழககோயில் கலைகள்:நாகசாமி
5. தமிழர் வளர்த்தஅழகுகலைகள்: மயிலைசீனி.வேங்கடசாமிநாட்டார்