ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

இலக்கியத்தில் சூழலியல் பதிவுகள்

முனைவர். சு. பேச்சியம்மாள், தமிழியல் துறை, உதவிப் பேராசிரியா், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 31 Oct 2019 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்

      சங்க இலக்கியப் பனுவல்கள் இயற்கை, பண்பாடு ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றன. இப்பனுவல்களில் மக்களின் வாழ்வியல், சுற்றுச்சூழல் ஆகியவைச் சார்ந்த செய்திகள் பரவலாகப் பதிவாகியுள்ளன. மனிதச் சமூகத்திற்கும் இயற்கைக்குமிடையிலான உறவை விளக்குவதே சூழலியலாகும். மனிதச் சமூகமும், பண்பாடும் தகவமைத்தலின் உற்பத்திப் பொருட்களாக அல்லது விளைவுகளாக ஒரு குறிப்பிட்ட இயற்கைச் சூழலில் வெளிப்படுகின்றன என்பதை அடிப்படை நோக்கமாகும். மனிதன் தான் வாழும் நிலவியல் எல்லையில் அமைந்திருக்கும் சுற்றுச்சூழலைத் தன்னுடைய சமூக வாழ்க்கையோடு இணைத்துக் கொள்வது மரபு. வாழ்வியல் ஆதாரம், பாதுகாப்பு போன்றவை இயற்கைச் சூழல்களை மையமாகக் கொண்டு அமைகின்றன. இதனடிப்படையில் இக்கட்டுரை இலக்கியங்களில் பதிவாகியுள்ள சூழலியியல் குறித்த சிந்தனைகளை விளக்கம் முற்படுகிறது.

திறவுச் சொற்கள்   

   சுற்றுச் சூழலியல், வளா்ச்சி, அறிவியலால் ஏற்பட்ட மாற்றங்கள்

முன்னுரை

   அண்மைக் காலத்தில் உலகெங்கிலும் பேசப்படும் ஒரு புதிய கருத்தாக்கம்  சூழலியல். தற்கால சமூகங்களில் நவீன முறையில் உலகில் ஏற்படுகின்ற பேரழிவுகளைக் குறித்து சூழலியலாளர்கள் விவாவித்தும் பேசியும் வருவது குறிப்பிடத்தக்கது.பரிணாம வளர்ச்சிப்படி குரங்கிலிருந்து படிப்படியாக  வளர்ச்சி பெற்ற மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகள் வளர்ச்சியை நோக்கி சென்றாலும் அவற்றினால் ஏற்படும் பின் விளைவுகள் எதிர்காலத் தலைமுறையினரைப் பெரிதும் பாதுக்கின்றன என்பதை நாம் கண் கூடாகப் பார்த்து வருகிறோம். பாதிப்பின் அவசியத்தை எல்லா ஆய்வு புலங்களையும் விழிப்படைய செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து இலக்கிய ஆய்வுகளிலும் இந்த சிந்தனை வெளிப்படத் தொடங்கியுள்ளது.. சங்க கால மக்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த மக்களின் பண்பாடு அந்தந்த நிலத்திற்கேற்ப அமைந்திருந்தால் தான்  அதனை இயற்கைநெறிக்காலம் என்றனர்..   சங்க இலக்கியங்கள் முதல், கரு, உரிப்பொருள்களை அடிப்படையாக் கொண்டு பாடப்பட்டுள்ளன. ஒவ்வொரு செய்யுளும் ஏதேனும் ஒரு நிலத்தை அல்லது அது சார்ந்த கருப் பொருட்களைப் பின்புலமாக கொண்டே உரிப் பொருளை விளக்கும் விதத்தினை அகப்பாடல்களில் காணமுடிகிறது. சூழலியல் என்பது இன்று ஓர் அறிவு சார் துறையாக வளர்ந்த போதிலும் பழந்தமிழரிடத்தே அவ்வாறு அல்லாமல் ஒரு அவதான நிலையில் பயன்பட்டுள்ளமை புலனாகிறது.சூழலியல என்பது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவை ஆராய்வது. இன்று சூழலியலின் தேவை மனிதனிடம் செல்வாக்குச் செலுத்தி வருவதோடு இதன் விளைவாக நம்மை சுற்றியுள்ளவை மாசடைந்து வருவதையும் பார்க்கிறோம்.  சூழலை ஆங்கிலத்தில்  Environment என்பர். இதன் பொருள் The Surroundings In which A person, Animal or Plant Lives. The National World என Oxford Dictionary   பொருள் தருகிறது.குறுந்தொகையில்

நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும்

    கலந்த மயக்கம் உலகம் என்கிறது(தொல்.பொருள்)

ஐம்பூதங்களாகிய நிலம், நெருப்பு, நீர், காற்று, ஆகாயம், முதலானவை கலந்தது தான் உலகம்.தொல்காப்பியம்

மண் திணிந்த நிலனும்

    நிலன் ஏந்திய விசும்பும்    (புறம்.)

நிலம், நீர், தீ, வளி, விசும்பு இந்த ஐந்தும் சேர்ந்ததுதான் இயற்கை.இந்த இயற்கை சுழலை சார்ந்து மனிதன் இயங்கினான்.மனிதன் வாழ கற்று கொடுத்ததும் அதன் கட்டுப்பாட்டிலும் பண்டைய தமிழர் வாழ்ந்து வந்தனர் பழந்தமிழ் மக்கள்  சுற்றுச்சூழலை சார்ந்து வாழ்ந்து வந்ததால் மக்கள் பாதுகாப்புடன் முன்னேற்றத்துடனும் வாழ்ந்து வந்தனர் என்பதை சங்க அகப்பாடல்கள் தெரிவிக்கின்றன. சான்றாக பழங்காலத்தில் இயற்கை உரம் குறித்தப் பதிவுகள் சங்க இலக்கியத்தில உள்ளது. கால்நடைகளின் எரு மற்றும் செடிகொடிகளின் உதிர்ந்த சருகுகள் நிலப்பரப்பில் தாதுக்களாக இயல்பாக கிடைக்கும் செய்திகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

முல்லை தாய கல்லதர்ச் சிறுநெறி

     அiயாது இருந்த அங்குடிச் சீறுர்த்

     தாதெரு மறுகின் ஆபுறந் தீண்டும்     (நற்.343)

................ தாது எரு மன்றத்துக்

    தூங்கும் குரவையுள்                                    (கலி.108)

கவைக்கதிர் வரகி னவைப்புறு வாக்கல்

     தாதெரு மறுகிற் போதோடு பொதுளிய (புறம்.215)

தாதெரு மறுகின் மாசுண விருந்து            (புறம்.311)

தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து       (பதிற.13)

இடுமுன் வேலி எருப்படு வைரப் பின்   (பெரும்.154)

   கால்நடைகள் செல்லும் வழிகள் தோறும் எருக்கள் கிடப்பதாக இலக்கியம் பதிவு செய்துள்ளது. அதனை உபயோகித்து வேளாண்மை நுட்பமும் வெளிப்படுகின்றது. பழந்தமிழகம் மண்வளமுடன் காணப்பட்டது மூதூர், முற்றம், பாசறை என்று வளமான மண் இடங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

தாதுஎரு மறுகின் மூதூர்              (அகம்.165

தாது எருத் தநைந்த முற்றம்       (மலை.531)

தாதொரு மறுகிற் பாசறை பொழிய  (புறம்.33)

இயற்கையில் கிடைத்த இலை, தழைகளால் ஆன குப்பைக் கூளங்களை உரமாகப் பயன்படுத்தப்பட்டமை அறிய முடிகிறது. மேலும் பழங்காலத்தில் இரவில் ஆடுகளை மேய்ச்சல் நிலத்துக்கே கொண்டு சென்று உரஉற்பத்தி செய்ததற்கு ‘கிடைகட்டுதல்’ என்ற பெயர் உள்ளது. மழை பொழிந்த வேளையில் இடையர்கள் ஆடுகளை ஓட்டிக் கொண்டு செல்லும் காட்சியினைப் பல சங்கப்பாடல்கள் பதிவு செய்துள்ளது.

வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்

    பறிப்புறத்து இட்டபால் நொடை இடையன்

   சிறுதலைத் தொழுதி ஏமார்த்த அல்கும் புறவினதுவே    

                                                                                                           (நற்.142)

தொழு உரத்தின் பயன்பாடு சங்க இலக்கியத்தில் இருந்தமையை உறுதி செய்வது போன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

காடு உறை இடையன் யாடுதலைப் பெயர்க்கும்

    மடிவிடு வீளை வெரிஇ குறுமுயல்

    மன்ற............   (அகம்.394)

இடையர்கள் கிடை கட்டும் இயற்கை வேளாண்மை நுட்பத்தைக் கையாண்டமை அறிய முடிகிறது. அகம் 274 பாடல் இடை போடும் இடையன் வாழ்வினையும், அவன் ஆட்டு கிடையைப் பாதுகாக்கும் திறத்தையும் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆடுகளின் கழிவுகளால் ஆன தொழுவுரம் முல்லை நிலத்தை வளப்படுத்தியமையும் புலனாகிறது. சங்க காலத்தில் வேதியியல் உரங்கள் எதிர்கால சந்நதிகளின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்று முன்னோர்கள் அறிந்து இருந்ததால் வேளாண்மைக்குப் பயன்படுத்தும் நிலத்தை மரங்களின் சாம்பலைக் கொண்டும் பண்படுத்தியுள்ளனர். குறு. (198), குறு (291), பயன்படாத பண்படுத்த முடியாத காட்டில் உள்ள மரங்களை எரித்து சாம்பலை உரமாக்கியுள்ளனர். சாம்பல் உரம் இடப்பட்ட தினைப்புனம் செழித்து வளர்ந்ததால் கிளிகள் தினைப்புனத்தை நோக்கி வருகின்றன. களைப்பிடுங்காப் பயிர்கால் பயிர்” என்ற வழக்கு உள்ளது. மண்ணின் வளம் கெடாமல் களை நீக்கினால் உற்பத்தித் திறன் கூடும். சங்க காலத்தில் இயற்கையான வழி முறையில் களை நீக்கப்பட்டுள்ளது.

   அருவிப்பரப் (குறு.100), குறுந். (392), (அகம். 184) உழவர்கள் கைகளால் களை நீக்கியதோடு களைப் பறித்து எறிவோர் துளர்எறி வினைஞர் என்று சங்க இலக்கியத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் நிலத்தடி நீரைச் சேமிக்கும் மரங்கள் பயிர் வளர உறுதுணை புரிகின்றது. உழவர்கள் மரங்கள் அருகே பயிரிடுகின்றனர்.

கழனிமா அத்து....         (குறு.8)

கழனி மருதின்            (ஐங்.70)

.............சாய்ப் புறம் பரிப்ப கழனிக்

   கருங்கோட்டு மாஅத்து

                                                           (அகம்.236), (நற்.350), (அகம்.367)

   வயல்களும் மரங்களும் செழித்து இயற்கை வேளாண்மை பாதுகாக்கப்பட்டு சூழல் மாசு அடையமால் வாழ்ந்த பதிவுகள் சங்க இலக்கியத்தில் பதிவாகியுள்ளது. மேலும் ஊட்டச்சத்து மிக்க உணவினை உண்டதோடு நோயின்றி வாழ்ந்துள்ளனர். இயற்கை உரங்களுக்கு கால்நடைகளின் கழிவு மற்றும் மரம், செடி, கொடிகளின் கழிவு பயன்பட்டமையால் உற்பத்தித்திறன் அதிகரித்ததுடன் அஃறிணை உயிர்களின் உணவு மூலதனமும் சிதைக்கப்படாமல் இருந்துள்ளன. குறிஞ்சி நில மக்கள் இனக்குழுவாக வாழ்ந்த போது இயற்கையாகக் கிடைத்த உணவைத் தேடிச் சேகரிக்கும் சூழலும், வேட்டையாடி உணவு பெற்ற வாழ்க்கை நிலையைக் குறிப்பிடுகிறது. உணவின் தேவை பற்றாக்குறையான போது காடுகளை அழித்து காட்டெரிப்பு (1987,72,214) யும், மலைச்சாரலில் மலைநெல்லை விதைத்து அருவியின் நீா்கொண்டு பயிர் செய்தமையும் (100,31) வேட்டையாடியும் (2)) வாழ்ந்து வந்தனர். குறிஞ்சி மலைப் பகுதியில் தேன் சேகரித்தல் (3,60,176) தரைக்கடியிலிருந்து கவலைக்கிழங்கை (233,379) தோண்டி எடுத்து உணவு உண்டனர். இம்மக்களின் உணவு முறை அந்நிலம் சார்ந்தாக இருந்தது. அவா்களின் குறிஞ்சி மலைத் தெய்வமான முருகன், மக்கள், குறவன், குறத்தியர், காட்டெரிந்து வேளாண்மை செய்த கானவர்கள், தினை, மலைநெல், விதைத்தற்கான நிலமும் புலி, கரடி, சிங்கம் வாழக் கூடிய மலைப்பகுதிகளையும் குறிஞ்சிப் பூ காந்தள் நிலத்தில் இருந்தால் ஆநிரை போர்களில் குறிஞ்சி, பூ சூடி வந்தனர். காட்டெரிப்பு வேளாண்மை செய்த பின் வேட்டையாக் கிடைத்த விலங்குகளை காட்டுத்தீயில் சுட்டு உணவு உண்ணும் சூழல் ஏற்பட்டது.  திணை விதைத்து பரண் அமைத்து பகலில் பெண்களும் இரவில் ஆண்களும் கிளிகளை விரட்டி தினைப்புனம் காத்தனர்.      

     முல்லைக் நில மக்கள் கால்நடை வளா்ப்பு எளிய விவசாயம் ஆகியவற்றின் மூலம் தங்களது உணவுத் தேவைகளை நிறைவு செய்தனர். குறிஞ்சி நிலத்தில் கிடைத்த உணவு பொருட்களில் அளவை விட முல்லை நிலத்தில் தினை, வரகு, நெல், அவரை, பருப்பு ஆகியவற்றின் பயன்பாடு பெருக்கமடைந்தது.   பொருள் தேடிப் போகும் தலைவன், தன்னுடைய தலைவியிடம் சொல்லிவிட்டுப் போகிற ஆறுதலைச் செப்பும் பட்டனப்பாலை 301 அடிகளைக் கொண்டது. அவற்றுள் 296 அடிகளில் காவிரியின் பெருமையையம் காவிரிப்பூம்பட்டினத்தின் புகழையும் பாடுகிறார் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

 நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும்

   வான் இன்று அமையாது ஒழுக்கு  (குறள்)

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாம நீர் வேலி யுலகிற்கவன் அளிபோல மேனின்று தான்சுரத்த லான் இளங்கோவடிகள்.

   காவிரி போற்றுதும் காவிரி போற்றுதும் தமிழ்நாடு தழைத்தோங்கத் தடைகளைத் ஓடி வரும் காவிரி போற்றுதும் காவிரி போற்றுதும் காவிரி போற்றுதும் தமிழ்ர்தம் வாழ்வு மலர ஓடி வரும் காவிரி போற்றுதும்.

உழவ ரோதை மதகோதை

    உடைநீ ரோதை தண்பதங்கொள்

   விழவ ரோகை சிறந்தார்ப்ப

   நடந்தாய் வாழ காவேரி

 பூவர் சோலை மயிலாலப் புரிந்து குயில்கள்  இசைபாட

      காமர் மாலை அருசுசைய நடந்தாய் வாழ காவேரி

இளங்கோவடிகள் தன்னுடைய சிலப்பதிகாரத்தில் காவிரியை இவ்வாறு புகழ்ந்து பாடுகிறார். தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணாவதும் சோழ மண்டலமே “ என்று பாடுகிறார் கம்பர்.

   செங்கதிரச் செல்வன் நான்கு திக்குகளிலும் தோன்றினாலும் வெள்ளி விண்மீன் தென்திக்கு செல்லினும் அழகிய குளிர்ந்த காவிரி, வாய்க்கால்களாகப் பிரிந்து ஓடி உயிர்களை ஊட்டி வளர்ப்பதை,

இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும்

    அந்தன் காவிரி வந்து கவர்பூட்ட

என்று புறநானூறு கூறுகிறது.

   சனி புகைந்தாலும் தூமகேது தோன்றினாலும், விரிந்த கதிரினையடைய வெள்ளி என்னும் கோள் தென் திக்கு செல்லினும், காற்று மோதும் குடகுமலையின் உச்சியில் இடியுடன் முகில் நீர் பெழியும் வளத்தைக் குடமலைப் பிறந்த பொருள்களோடு கடல் வளம் நோக்கி வரும் காவிரிப் புது நீர் என்று தடை பல கடந்து வரும் காவிரிப் புது நீரைச் சிலப்பதிகாரம் புகழ்ந்து பாடுகிறது.

வான்பொய்ப்பினும் தான் பொய்யா

எனப் பட்டினப்பாலை காவிரியைப் போற்றுகிறது.                    

 அன்னாய் வாழி வேண்டன்னை நம்

   படப்பை தேன் மயங்கு பாலினும் இனிய அவா்நாட்டு

   உவலைக் கூவல் கீழ் மான் உண்டு எஞ்சிய கலுழிநீரே                   

                                                                                              (ஐங்.203)

என் தலைவன் நாட்டில் கிடைக்கும் நீர் மான் உண்டு எஞ்சிய அழுகிய சிறிதளவு நீர் தான் என்றாலும் அதன் சுவை, நம்முடைய வீட்டில் தோட்டத்தில் கிடைக்கும் இனிய தேனோடு கலந்த பசுவின் பாலைவிட இனிமையானது என்கிறாள் தலைவி இங்கு மான் உண்டு எஞ்சிய கலுழிநீா் சங்க காலத்தில் இனிமையாக இருந்தது தற்போது அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக காகித, சா்க்கரை , செயற்கை இழை, துணிகளுக்கு சாயம் ஏற்கும் தொழிற் கூடங்கள்  ஆகியன ஆயிரக்கணக்கில் இயங்கி அதிலிருந்து வெளிவரக் கூடிய கழிவு நீர்கள் நிலம், நீா் வளிமண்டலம், அனைத்தையும் பாதிப்படையச் செய்கிறது.. கடல் ஆறு போன்றவற்றில் கலந்து அருகில் உள்ள ஏராளமான பயிர்களில் நச்சு தன்மை கலந்த காவிரியாக மாறிவிட்டன. அன்று மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை, அது போர்த்துக் கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி என்று அன்று இளங்கோவடிகள் பாடினார். இன்று நச்சு நீரினைச் சுமந்து கொண்டு நடந்தாய் வாழி காவேரி என்று பாட வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல இன்று பல தொழிற்சாலை கழிவுகள் ஓடை, ஆறு, கடல் நிலத்தில் விடுகின்றன. இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூச்சிக் கொல்லிகள் பயன்பட்டு வருகின்றன. இவற்றால் மக்களுக்கு புற்றுநோய், ஒவ்வாமை, வாந்தி, தலைவலி, தலைக்கற்றல், கை, கால் வலி போன்றவை ஏற்படுகிறது. அன்று இயற்கையோடு இயற்கை உணவினை உண்டு ஆரேக்கியமாக வாழ்ந்தான் மனிதன்.

      இன்று ஏற்பட்ட மாசுகளினால் பூமி வெப்பமடைந்து மனிதனும் மாசுடைய வெப்ப மண்டலாக ஒவ்வொரு உறுப்பையும் இழந்து கொண்டு அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறான். சுற்றுச்சூழலில் தீமைகள் அகற்ற அரசு முன் வர வேண்டும். நெகிழிப் பயன்படுத்த கூடாது என்று கூறும் அரசு, அதே பொருளை உற்பத்தி செய்வதற்கும் உறுதுணை புரிகிறது . இன்று நிலம் நச்சு தன்மை ஆனதால் அதில் வரக்கூடிய நிலத்தடி நீரும் நச்சுத்தன்மை ஆகிவிட்டன. மனிதன் மட்டும் பாதிக்கப்படாமல் உலகில் இயங்கிக்கொண்டிக்கும் அசைவுயிர்கள் அனைத்தும் பாதிப்புக்குள்ளாகின்றன. இன்று எத்தனையோ குளங்கள் மீன் வளா்ப்புக்காக மாற்றப்ட்டு மீனுக்கான உணவும் வேதிப் பொருளும் கலக்கப்பட்டு அந்நீர்கள் பாசன வாய்க்கால்களில் நீரை வடித்து விடுவதைப் பார்க்கின்றோம். கங்கை கொண்டான் “சிப்காட்“ டில் உள்ள இரண்டு குளிர்க் குடிநீர் ஆலைகள் கையூட்டுப் பெற்றுக் கொண்டு நீர் எடுக்க ஒப்புதல் கொடுத்ததோடு தண்ணீா் பஞ்ச சூழலை் உருவாக்குகிறது.  சங்க காலத்திற்கு முன் இறந்த உடல்கள் தாழிகளில் இட்டு புதைத்தனர். காசிக்கு சென்று புனித நீராடுவதும் ஆனால் இறந்தவா்களின் சாம்பல் கங்கையில் கரைத்தால் மோட்சம் இட்டும் என்று மக்களின்  நம்பிக்கை. ஆண்டுதோறும் எத்தனை உடல்கள் இன்று அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் கங்கையில்  வீசப்படுகின்றன. கங்கை புனிதமானது அதை தூய்மைப்படுத்துவது என்பது எளிமையான சொல்அன்று. அன்று மனிதன் இயற்கையிலிருந்து கிடைத்த  நீரை  அருந்தி  நோய்கள் வராமல் பாதுகாப்புடன் வாழ்ந்தான். ஆனால் இன்று நாம் குடிக்கும் நீரில் வேதிப்பொருள் கலப்பதால்  பல விதமான நோய்கள் வருவதைப் பார்க்கின்றோம். சங்க கால தமிழா்கள் பெருமழை பெய்யும் போது மழை நீரைத் தேக்க, ஏரி, குளம், ஆறு, கால்வாய்களை வெட்டி பாதுகாத்த இடங்களில்  அதன் மேல் கட்டிடங்கள் கட்டி வருகிறோம்.அடுத்ததாக பறவை, விலங்குகள், சங்க பயிர் விளையும் நிலம் அழிக்கப்பட்டதால் குருவிகளுக்கு நல்ல உணவும் காடுகள் அழிக்கப்படுவதாலும் காட்டுத் தீயாலும் கூடிகட்டி வாழ்ந்து வந்த இனத்தை பெருக்க வழியில்லாத சூழல் ஏற்பட்டுவிட்டது. வேதியல் பொருட்களின் பயன்பாட்டாலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதால் அணைகளுக்காக மரங்களையும் வெட்டியும் நிலக்கரி,கல்லெண்ணெய் கூடங்களால்  மழை சுழற்சி கெடவும் தட்டவெப்பம் பருவநிலை  மாறுபட்டு சுற்றுச் சூழல் பாதிப்படைவதைக் கூறி கொண்டே போகலாம். சோற்றுக் தான் காசு என்றாலும் காற்றுக்கும் காசாகிவிட்டது. குரங்கு கை பூமாலை போல் இப்பூலகம் கண்டுபிடிப்புகளை தவறாகப் பயன்படுத்தி நானிலத்தைச் சூடாக்கி சூறாவளி, நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கையின் பேரிடா்கள் நிகழ்வுகளாலும் உயிர்கள் பாதிப்படைகிறது.

துணைநூற் பட்டியல்

1. குமாரசாமி. ரா, சுற்றுச்சூழல் ஒ கண்ணோட்டம்

2. ஜானகி. பி. சுற்றுச்சூல கல்வி.

3. செல்லையா. சு. தமிழக வேளாண்மை நிகழ்வும் வாய்ப்பும்.

4. அரிமாப்பாமகன். ஆ, சங்க இலக்கியத்தில் சூழலியல், இராசகுணா  

    பதிப்பகம், சென்னை.

5. ஸ்டீபன். ஞா, அற இலக்கியமும் பண்பாட்டுச் சூழலியலும்.

6. தனஞ்செயன். ஆ, சங்க இலக்கியமும் பண்பாட்டுச் சூழலியலும்