ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

நடப்பியல் நோக்கில்   ஆசராக்கோவை

முனைவா் கோ.வெங்கடகிருஷ்ணன் உதவிப்பேராசிரியா் இசுலாமியாக் கல்லூா் (தன்னாட்சி) வாணியம்பாடி 635 752 31 Oct 2019 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்

பதினெண்கீழ்க்கணக்கில் பெருவாயில் முள்ளியா் எழுதிய ஆராசக்கோவை ”ஆரிடம்” என்ற நூலின் தழுவல். இது தவ்மியருக்கு வியாசரால் உபதேசிக்கப்பட்டது. ஆரிடம் என்ற நூலில் உள்ள கருத்துக்கள் தமிழ் இனத்துக்குப் பொருந்தாதெனத் பொதுவாகக் கற்றறிந்த பெரியோர் பலர் கூறுவா். இவ்விலக்கியத்தில் அமைந்த பல கருத்துக்கள் நடைமுறை வாழ்க்கைக்கு எங்ஙனத் எவ்வண்ணம் பொருந்தும் என்பதை இவ்வாய்வுச்சுருக்கம் அமைகிறது.

திறவுச் சொற்கள்
ஆசாரக்கோவை,பெருவாயில் முள்ளியர்,ஆரிடம்,அறம்,நடப்பியல்

முன்னுரை
கள்ளிவயிற்றில் அகில்பிறக்கும்
மான் வயிற்றில் ஒள் அரிதாரம் பிறக்கும்
பெருங்கடலுள் பல்விலைய முத்து பிறக்கும்1
என்பது விளம்பி நாகனாரின் கூற்று. அக்கருத்தை மனங்கொண்டு சிந்திப்பின் நல்லன எவ்விடத்தும் கிடைக்கும் என்பது அறியலாகும். உண்மையாகும். பதினெண்கீழ்க்கணக்கில் பெருவாயில் முள்ளியா் எழுதிய ஆராசக்கோவை ”ஆரிடம்” என்ற நூலின் தழுவல். இது தவ்மியருக்கு வியாசரால் உபதேசிக்கப்பட்டது. ஆரிடம் என்ற நூலில் உள்ள கருத்துக்கள் தமிழ் இனத்துக்குப் பொருந்தாதெனத் பொதுவாகக் கற்றறிந்த பெரியோர் பலர் கூறுவா். இந்நூல் கௌதம் சூத்திரம், போதாயின் தா்ம சூத்திரம் முதலினவற்றைத் தழுவி எழுதப்பட்டது என்ற கருத்தும் நிலவுகிறது. அது மட்டும் இல்லாமல் வா்ண ஆசரமத் தா்மத்தை அடிப்படையாய்க் கொண்டு குறிப்பிட்ட இனத்தார்க்காவே எழுதப்பட்ட நூல் என்றும் மொழியப் படுகின்றது.
    மேற்கூறிய கருத்துக்களின் உண்மைகள் இல்லாமல் இல்லை ஆயினும், விளம்பி நாகனாரின் சிந்தனையை எண்ணிப் பார்க்கையில் சிப்பியிலிருந்து முத்து கிடைப்பது போல, ஆசாரக் கோவையிலும் அரிய நன்முத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
    மேலும், குறள்மொழிவது போல் குணம் மட்டும் நாடி ஆசாரக்கோவையின்கண் அமைந்துள்ள பயன்மிகு செய்திகளைச் சிந்திப்போம். இவ்விலக்கியத்தில் அமைந்த பல கருத்துக்கள் நடைமுறை வாழ்க்கைக்கு எங்ஙனத் எவ்வண்ணம் பொருந்தாது என்பதைனையும் சோ்த்துக் கொள்வோம்.

இன்றைய சூழ்நிலை
    இன்று சிற்றூராகச் சுருங்கிவிட்டது என்பா். கையடக்கக் கணிப்பொறிக்குள் அண்டமே அடங்கும் என்று மொழிவதுண்டு அந்த அளவுக்கு மனித இனம் அறிவியலிலும், தகவல் தொடர்பிலும்  உச்ச நிலையை எய்தியுள்ளது. ஆனால், இன்றைய இளைய தலைமுறையினா் மூத்தோர் கருத்தினைப் பாட்டி வைத்தியம் எனச் சொல்லி எவ்வளவு இடமூண்டு, பாட்டி வைத்தியம் என்றாலும், பயனுள்ளவற்றை நம்மால் தள்ள இயலாது. பொருந்தாத கருத்து என்றால் அது இறைவனே கூறியது ஆனாலும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே எனும் நக்கீரா் கருத்துக்கு ஏற்பப் பொருந்தாதவற்றைப் புறக்கணிப்பினும் தீங்கில்லை. ஆசாரக் கோவையை ஆய்ந்து படித்தால் நடப்பியலுக்குப் பொருந்தக்கூடிய செய்திகளும் பொருந்தாத செய்திகளும் இருந்ததை அறியவற்றையும் காண்போம்.

சுற்றுச்சூழல் சிந்தனைகள்
இன்று சூழல் மாசு பற்றிய கவலை உலகை அச்சுறுத்துகிறது. மக்கள் தொகைப் பெருக்கப் பெருக்கம், புகை, அறிவியல் வளா்ச்சி இது போன்ற பல காரணங்களால் சூழல் கேடு அடைகிறது.. ”மனிதனின் கால்பட்ட இடமெல்லாம் பாழ்” என வேடிக்கையாகக் கூறுவதண்டு. தொழிற்சாலைக் கழிவுகளினால் நீா் மாசும், எரிப்பொருட்களால் வளி மாசும் தேவையற்ற ஓசைகளால் ஒலிமாசும் செயற்கைக் கோள்களால் அண்டத்தில் மாசுகளும் தோன்றுவதாக அறிவியலார் மொழிவா். இன்று ஓசோன் படலத்தில் துளை விழுந்து விட்டது. என்பது போன்ற கருத்துக்களையும் அமில மழை பெய்யும் அச்சத்தையும் மனிதகுலம் உணா்கிறது. அதனால் சுற்றுச்சூழலைப் போற்ற வேண்டும் என்ற கருத்துச் சுற்றுச் சூழல் நிபுணா்களாம் மத்திய அரசாலும் வற்புறுத்தப்படுகிறது. இவ்வுண்மையைப் பன்னிரு நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஆசாரக்கோவை வலியுறுத்தியிருக்கின்றது.
”ஐம்பூதம் பசு திங்கள் ஞாயிறு
தாம்பூதம் எண்ணாது இகழ்வானேல் தம் மெய்க்கண் 
ஐம்பபூதம் அன்றே கெடம்”2
பஞ்ச பூதங்களாகிய ஆகாயம், நீா், நெருப்பு, பூமி என்பனவற்றோடு சூரியன், சந்திரன் என்பனவற்றையும் கால்நடைச் செல்வமாகிய பசுவையும் போற்ற வேண்டும் என்று இந்நூல் கூறும் கருத்துச் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பற்றிய சிறந்த செய்தி ஆகும்.
சூழல் தூய்மையை வற்புறுத்தும் முள்ளியார், கண்ட இடத்து எச்சில் உமிழ்தச், சிறுநீா் கழித்தல், மலம் கழித்தல் கூடாது என்ற உயர்ந்த உண்மையை அன்றே நவின்றிருத்தல் நடைமுறைக்கொத்த சிறந்த சிந்தனையாகும். இன்று இந்த உண்மையை அரசு தகவல் தொடர்புச் சாதனங்கள் மூலம் வலியுறுத்தல் அனைவரும் அறிந்ததே.
”புல் பைங்கூழ் ஆப்பி சுடலை வழி நீர்த்தம்
தேவ குலம் நிழல் ஆனிலை வெண்பலி என்று
ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்
சேரார் உணர்வடையார்”3        
மனிதன் சூழலைக் கெடுப்பின் இயற்கை மாசடைவதுாடு பலவகைத் தொற்றுநோய்கள் பரவும் என்ற உண்மையையும் அன்றே நூலாசிரியர் உணர்ந்து மேற்சுட்டிய செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்துப் பாடியுள்ளார் என உய்த்துணர முடிகிறது.

நீர்த்தூய்மை
”தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழக்கலாகாது” என்பது அனைவரும் அறிந்த வழக்காறாகும். நீா்மாசாலும், மனிதருக்குப் பல்வகை நோய்கள் வரும் என்பதால் நீரைக் காய்ச்சி வடிகட்டிப் பருக வேண்டும் என மருத்துவர்கள் இன்று அறிவுறுத்துகின்றனா். ஆசாரக்கோவை ஆசிரியரும் நீரை அசுத்தப் படுத்தக்கூடாது என்ற உண்மையை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

”உடுத்தலால் நிருாடா்…………..
………………………. நீருள் பிழியார் விழுத்தக்கார் 4
என்பதால் நிர்வாணமாகக் குளிப்பதாலும், அழுக்கு ஆடையைப் பிழிவதாலும் நீர் மாசு ஏற்படும் என்ற உண்மை சுட்டப் பட்டிருக்கிறது. மேலும், நீர்நிலைகளில் குளிக்கையில் நீரைக் கொப்பளித்துத் துப்பக் கூடாது. நீா் நிலைகளைத் அமிழ்ந்து கிடக்கக் கூடாது என்ற கருத்துகள் பொது நீர்நிலைகளைத் தூய்மைக்கேடு இல்லாமல் பேணவேண்டும் என்ற செய்திகளைத் தீர்மானமாக வலியுறுத்துக்கின்றன. இன்று நீர்நிலைகள் தூய்மையாகப் பேணப் படவேண்டும் என்பதற்காகக் குளோரின் முதலிய வேதிப்பொடிகள் நீர்நிலைகளில் தூவப்படுகின்றன. பொது நீா்நிலைகளை அனைவரும் பயன்படுத்துவர். அதனால் அதனைக் கெடுக்கக் கூடாது.
”நடைவரவு நின்றவாய் பூசார்
வழிநிலை நீருள்ளும் பூசார் மனத்தால்
வரைந்து கொண்டல்லது பூசார் கலத்தினால்
பெய் பூச்சுச் சீரா தெனின்”5        

உண்ணும் முறைகள்
    ஆராக்கோவையில் உண்ணும் முறை பற்றிய சில செய்திகள் எக்காலத்தவா்க்கும் பொருந்தும் முறையில் அமைந்துள்ளன. இருபது இருபத்தெட்டுவரை உள்ள பாக்கள் உண்ணும் முறையை மிக இன்றியமையாதது. ஆனால், நாம் உண்ணும் முறையைச் சாரியாகக் கடைபிடிக்கிறோமா? எனச் சிந்திக்கும் நிலையில் உள்ளோம். ஆசராக்கோவையில் ”கிழக்குப் பார்த்து உண்ணுதல் நன்று” மற்ற திசைகளும் உணவருந்த ஏற்றதே. தூங்கி விழுந்து கொண்டோ, வம்படித்துக் கொண்டோ. வேறிடங்களில் வேடிக்கை பார்த்துக் கொண்டோ சிந்தாமல் சிதறாமல் உண்ண வேண்டும் என்ற சிந்தனையை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
    கிழக்கு பார்த்து உண்பதால் மனிதனின் ஆயுள் கூடும் என்ற செய்தி இன்றும் பொரியோரால் இயம்பப்பட்டு வருகிறது. நாம் பல நேரங்களில் பதற்றத்தோடும், பிறருடன் பேசிக் கொண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் உணவருந்துகிறோம். இவ்வாறு செய்வதால் உண்ணும் உணவு மூச்சுக் குழலின் அடைத்துக் கொள்ள நேரும். அதனால் இருமல், தும்மல், விக்கல் முதலிய சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. வேறு திசை பார்த்து கொண்டு உண்டால் கவனச் சிதறல் ஏற்படும். இதனால், உணவில் மனம் செல்லது. உண்ணும் காலமும் அதிகரிக்கும் பேசிக்கொண்டு உண்கையில் பிறா் செல்லும் கருத்துக்களால் மனம் புண்படவும் இடமுண்டு, அதனால், இடையிலேயே  உணவைத் தவிர்த்து எழுந்து   செல்லவும் நேரலாம். ஆகவே, ஆசராக்கோவை கூறுவது போல ஒரு நோக்கோடம், அமைதியாகவும், முழுநிறைவோடும் உண்ணுதல் சிறந்தது.

உயிர் இரக்கம்
    நம் தமிழ் இலக்கியங்கள் உயிர்களை நேசித்தல் வேண்டும் பிற உயிர்கள் மேல் இரக்கம் கொள்ள வேண்டும் என்ற கருத்துக்கு மிகுதியும் முக்கியத்துவம் அளித்துள்ளன.. வள்ளுவமும்,
                ”பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
                தொகுத்தவற்நுள் எல்லாம் தலை”6
என்று இயம்புகிறது. எனவே, பிற உயிர்களுக்கு உணவளித்து நாமும் வாழவேண்டும். என்ற நற்கருத்தினை நம் இலக்கியங்கள் வழி உணா்கிறோம். இவ்வுண்மைக்கு ஆசாரக்கோவையும் விதி விலக்கல்ல. ஆசாரக்கோவையில், விருந்தினா் மூத்தோர், பசு, காகம் போன்ற பறவைகள் முதலியோர்க்கு உணவளித்து உண்பதே சிறந்தது என்ற கருத்துச் சிறப்புற இடம் பெற்றிருக்கிறது.
            ”விருந்தினா் மூத்தோர் பசு சிறை பிள்ளை 
இவா்க்கு ஊண் கொடுத்தல்லால் உண்ணாரே என்றும்
ஒழுக்கம் பிழையாதவா்.” 7
மணிமேகலையில் இதே கருத்தைச் சாத்தனார் ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே‘ என்று போற்றியமை காணக் கிடக்கிறது. திருமூலம் திருமந்திரத்தில் “யாவா்க்குமாம் ஆனுக்கு வாயுறை” யாவா்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி என மொழிந்த உயிர் இரக்கக் கோட்பாட்டை ஆசாரக்கோவை ஆசிரியா் பொன்னைப் போல் போற்றியுள்ளர் என்பது மேற்கூறிய செய்திகளால் விளங்குகிறது.
இன்றும் பெரியோர் பலா் காக்கைக்கு உணவளித்து விட்டு பிறகு உண்பதை நடப்பியலில் காண்கிறோம். 
அளவுக்கு அதிகமாகவும் உண்ணக் கூடாது போன்ற கருத்துக்களும் விளம்பப்பட்டுள்ளன. திறந்த வெளியில் உண்ணக் கூடாது என்பதை இன்றைய இளைய தலைமுறை ஏற்குமா? என்பது ஐயமாக உள்ளது. காரணம், நாம் வாழும் கலியுகம் அவசர யுகம் பலா் தம் உணவை அவசரச் சிற்றுண்டியாக மாற்றிக் கொண்டுள்ளனா். அத்தகையோர் மேற்கூறிய கருத்தை ஒப்பார். ஆனால், திறந்த வெளியில் உண்பதால் உணவின் தூய்மை கெடும். கண்டதையும், அவசரமாக உண்டு செல்வது உடல் நலத்திற்குச் தீங்களிக்கும். பெரியோருடன் அமா்ந்து  உண்ணுகையில் பெரியோர்க்கு மரியதை தரும் வகையில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற கருத்து சிறந்தது.
உண்ணல் அழகினைப்பற்றிக் கூறும்போது அவற்றினை
1.    பரிமாறும் முறை
2.    சுற்றம் ஓம்பல்
3.    உண்ணும் திசை
4.    உண்ணும் முறை
5.    உண்ணக்கூடாது முறை
என்றும் பகுத்துக் காணலாம்.
விருந்தோம்பும் முறை எனன்பது தொன்றுதொட்டு இன்று வரை நிகழ்ந்து வரும் நிகழ்வாகும். பாரதிதாசன் தமிழா்தம் விருந்தோம்பல் சிறப்பையும், விருந்தினா்களின் இயல்புகரளயும் மிக அழகாகக் குடும்ப விளக்கில் குறித்துள்ளார். ஆசாரக்கோவையிலும் விருந்தோம்புவது குறித்த அறிய கருத்துக்களை உணரமுடிகிறது..

1.    பரிமாறும் முறை
தம்மின் மூத்தார் உண்ணும் பொழுது அம்மூத்தாரைப் பக்கத்து வைத்து உண்ணார். முறைமையான கலன்கள் எல்லாவற்றுள்ளும் சிறிய கலன்களைக் கைப்பிடித்துத் தனக்குக் கைக்கொண்டு அன்பு பிறழாத வகையும் ஒழுக்கத்தின் நீங்காமலும் உண்டு, உண்டமைந்த கலன்களை முறைப்படி நீக்க வேண்டும். இது
,”முதிய வரைப்பக்கத்து வையார் விதி முறையால்    
உண்பவற்று ளெல்லாஞ் சிறிய கடைப்பிடித்
தன்பிற் றிரிளாமை நீங்காமை
பண்பினா னீக்கம் கலம்”8
என்றும்,
    கைப்பன வெல்லாங் கடைதலை தித்திப்ப
    மெச்சும் வகையா லொழிந்த விடையாகத்
    துய்க்க முறைவகையா லூண்.9
என்றும் உண்ணும்போது இனிப்பான கறிகளை முதலிலும் கசப்பான கறிகளை இறுதியிலும் ஒழிந்த சுவைக்கறிகளை இடையிலும் உண்ண வேண்டும் என்றும், அதற்கேற்பப் பாரிமாற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சுற்றம் ஓம்பல்
    முறுவலோடு கூடிய இனிய உரையும், கால்கழுவ நீரும் இருக்கமணையும், கிடக்கப்பாயும், கிடக்க இடம் இவ்வைந்து கொடுத்துச் சிறப்பிக்க வேண்டும். மேலும் புதிய உறவினா்கள் உண்ணுமிடத்துப் பெரியோர் உயா்ந்த பீடத்திலிருத்தலும், அவா்கள் மனம் தோகும்படி எதாவது செய்தலும் ஆகாது.,
    ”முறுவல் இனிதுரை கால் நீா் மணைபாய்
    கிடக்கையோ டிவ்வைந்து மென்ப தலைச் சென்றார்
    உணொடு செய்யும் சிறப்பு”10
என்று கூறுகிறார். மேலும், தான் செய்யும் கலியாண நாளின் கண்ணும், தெய்வத்திற்குச் செய்யப்படும் திருவிழா நாளின் கண்ணும், இறந்துபோன பெரியோர்களுக்குச் சிறப்புச் செய்யும்போதும், விழாநாளின் போதும், யாகம் செய்யும் நாளின் கண்ணும் தானம் செய்வதுடன் விருந்தினா்க்குஞ் சோறிடவேண்டும்.
    

கலியாணத் தேவா் பிதிர்விழா வேள்வியென்
    றைவகை நாளும் இகழா தறஞ்செய்க
    பெய்க விருந்திற்குங் கூழ்”11
என்று விருந்தினரை ஊம்பும் முறை கூறப்பட்டுள்ளது. திருவள்ளுவா் கூறும்.
    மோப்பம் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து”12            
என்ங கருத்து ஈண்டு நொக்கத்தக்கது.
உண்ணும் திசையும், பொழுதும்
    ஒருவன் உண்ணும்போது கிழக்கு நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும். அதற்கு ஏதேனும் இடையூறு ஏற்படின் பிற திசை நோக்கி உண்ணலாம்.
    “ஒழிந்த திசையும் வழிமுறையா னல்ல
    முகட்ட வழியூண் புகழ்ந்தா ரிகழ்ந்தார்
    முகட்டு வழிகட்டிற்பாடு”13
என்பது அப்பாடல்
    உத்தம கிழக்கு நன்றாம் ஓங்குயிர் வளரு் தெற்கு
    சித்தமே கலங்கு மேற்குத் திசைகேடு நான்க மூலை
    அத்தமும் உயிரும் போக்கும் ஆன்தோர் வடக்குதானே14
                                    
என்ற நீதிசாரப் பாடலின் கருத்து ஈங்கு ஒப்புநோக்கத்தக்கது.

உண்ணும் முறை
    உண்பதற்கு முன் குளித்துக் கால் கழுவி, வாய் துடைத்து உண்கலத்தைச் சுற்றி நீரிறைத்து உண்ண வேண்டும். அவ்வாறு அல்லாது உண்டபோது ஊனை அரக்கா் எடுத்துக்கொள்வார்.
    ”நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்
    துண்டாரே யுண்டா ரெனப்படுவா் அல்லாதார்
    உண்டார்போல் வாய்பூசிச் செல்வ ரது வெறுத்துக்
    கொண்டார் ராக்கா் குறித்து”15
என்றும், விரந்தினரும் மிக மூத்தோரும் பசுக்களும், பறவைகளும், பிள்ளைகளும் என்று சொல்லப்பட்ட இவா்கட்கு உணவு கொடத்தல்லது உண்ணார் என்றும் ஒழுக்கம் தவறாதவா் 
    ”விருந்தினா் முத்தோர் பசுசிறை பிள்ளை
    இவா்க்கூண் கொடுத்தல்லா லுண்ணாரே யென்றும்
ஒழுக்கம் பிழையா தவா்”
மேலும்,
”உண்ணுங்கா னோக்குந் திசை கிழக்குக் கண்ணமா்ந்து
தூங்கான் துளங்காமை நன்கிரீஇ – யாண்டம் 
பிறிதியாது நோக்கா னுரையான் தொழு கொண்
டுண்க உகாஅமை நன்கு16
உண்ணும் போது நோக்கப்படும் திசை கிழக்காகப் பொருந்தி, தூங்காமல் அசைந்தாடாமல் நன்றாக இருந்து, எவ்விடத்தும் பிறிதொன்றினையும் நினையாது, நோக்காது, சொல்லாது, உன்கிற உணவினைத் தொழுது சிந்தாமல் உண்ணவேண்டும்.
    ”அருமுறையால் நீா்வலஞ்செய் கடிசில் தொட்டு“
                                (காசிக் கண்டம்)
என்ற உண்ணுமுன் மறைமுறையில் மந்திரங்கூறி நீா்வலஞ் செய்தலுக்குக் காசிக்கண்டம் மேற்கூறிய கருத்து ஒப்புநோக்கத்தக்கது.
உண்ணக்கூடாது முறை
உண்ணக்கூடாது முறையாக இதில்,
    ”மூன்றுவ்வார் முன்னெழார் மிக்கு ரூணின்கண்
    என்பெறிது மாற்ற வலமிரார் தம்மிற்
பெரியார்தம் பாலிருத்தக் கால்”17
தம்மிற் பெரியார் தம்பந்திலிருந்து, உண்ணுமிடத்து அப்பெரியார் உண்பதற்கு முன்னே தாம் உண்ணார். முந்துற உழுந்திரார், அவா் களை நெருங்கியிரார். உண்ணுமிடத்து மிக எல்லாச் செல்வமும் பெறுவதாயிருப்பினும் வலமிருந்து உண்ணக்கூடாது என்றும்,
    உண்ணும்போது கிடத்துண்ணல், நின்றுண்ணல், வெள்ளிடையின் கண் இருந்தும் உண்ணல் ஆகாது, ஆக விரும்பி உண்ணல், நெறியினைக் கூடாது முறையாகும். இதை, 
    கிடந்துண்ணார் நின்றுண்ணார் வெள்ளியிடையு முண்ணார்
    சிறந்து மிக உண்ணார் கட்டின்மே லுண்ணார்
    இறந் தொன்றுந் தின்னற்க நின்று18
என்ற பாடலின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
    யான் எனது என்ற எண்ணமில்லாது உலகோர் அனைவரையும் உற்றாராக, உறவினராகக் கருதி மண்ணுலகில் விருந்தோம்பியவர்கள் வானுலகில் விருந்தோம்பப் பெறுவர் என்ற திருவள்ளுவர் வாக்கிற்கேற்ப விருந்தோம்ப வேண்டும்.
தொப்புரை
    ஆசாரக்கோவையில் பிற இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள இனிய நீதி மொழிகளும் இடம்பெற்றுள்ளன. செய்நன்றி மறவாமை, பொறையுடைமை, வாய்மை, இன்சொல் கூறல், இன்னா செய்யாமை, கல்வி, நல்லார் நட்பு, பிறன்மனை நோக்காமை, கள் உண்ணாமை, களவு, சூதாடல், கொல்லாமை போன்ற கருத்துக்கள் திருக்குறளில் அதிகாரங்களாகவே இடம் பெற்றுள்ளன.
    ஆசாரக்கோவை ஆசிரியரும் பண்டைய நம் முன்னோர் மொழியிலுள்ள பயன்மிகு நீதிமொழிகளைத் தம் மொழியிலும் இணைந்து அணி செய்துள்ளார். அறுவடை செய்த தானியத்தில் உள்ள பதரைத் தூற்றி மணிகளைக் களஞ்சியத்தில் சேர்த்தல் போல  ஆசாரக்கோவையில் காணக் கிடக்கும் பொருந்தாக் கருத்துக்களைப் புறந்தள்ளி, பயன்மிகு கருத்துக்களை அறிவுக் களஞ்சியத்தில் சோ்த்தல் ஆன்றோர் கடனாகும்
அடிக்குறிப்புகள்
1.    விளிம்பி நாகனார், நான்மணிக்கடிகை, பா. 6
2.    பெருவாயின் முள்ளியார், ஆசாரக்கோவை, பா.15
3.    மேலது, பா. 32
4.    மேலது,பா. 14
5.    மேலது, பா. 35
6.    திருவள்ளுவா், திருக்குறள் 322
7.    பெருவாயின் முள்ளியார், ஆசாரக்கோவை, பா.2
8.    மேலது,பா. 26
9.    மேலது,பா. 25
10.    மேலது,பா. 54
11.    மேலது,பா. 48
12.    திருவள்ளுவா், திருக்குறள் 90
13.    பெருவாயின் முள்ளியார், ஆசாரக்கோவை, பா.22
14.    நீதி செய்யுள் , 20
15.    பெருவாயின் முள்ளியார், ஆசாரக்கோவை, பா.18
16.    மேலது, பா. 20
17.    மேலது, பா. 24
18.    மேலது, பா. 23
உதவிய நூல்கள்
1.    பெருவாயின் முள்ளியார் இயற்றி
அசாரக்கோவை மூலமும்  உரையும்
சாரதா பதிப்பகம்
ஜி,4 சாந்தி அடுக்களம்
3 ஸ்ரீகிருஷ்ணாபுரம் தெரு
ராயப்பேட்டை
சென்னை -14 ஜூலை  2006

2.    திருவள்ளுவா்
திருக்குறள்
சாரதா பதிப்பகம்
ஜி,4 சாந்தி அடுக்களம்
3 ஸ்ரீகிருஷ்ணாபுரம் தெரு
ராயப்பேட்டை
சென்னை -14 ஜூலை  2006