ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஆத்துக்குப் போகனும் நாவலில் பெண்களின் சிக்கல்

முனைவர் பெ.கி.கோவிந்தராஜ் உதவப்பேராசிரியர் தமிழ்த்துறை இசுலாமியக் கல்லூரி (தன்னாட்சி) வாணியம்பாடி 635 752 31 Oct 2019 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்    
    தற்காலத் தமிழ் இலக்கியம் பெண்மையை ஒரு பேசும் ஓவியங்களாக மட்டுமே வீட்டில் வைத்திருக்காமல் அவர்களுக்கு முழுசுந்திரம் தந்து செயல்பட அனுமதித்து வருவதை காணமுடிந்தாலும், அச்சுதந்திரம் எல்லா பெண்களையும் சென்றடையவில்லை என்றே குறிப்பிடலாம். பெண்களின் பிரச்சினைகளை, தமிழ் படைப்பாளர்களும் தம் படைப்புகளில் விவரிக்கத் தவறுதில்லை. சமுதாயத்தில் பெண்ணின் நிலையை அறிந்த பாரதி.
    ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்திடுவோம்’ என்று கூக்குரல் கொடுப்பதை காணமுடிகிறது. தமிழ் இலக்கியம் பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவல்தூணாக இருப்பதே மறுப்பதற்கு இல்லை. உரிமையும், கடமையும் ஆண்களுக்கும், பெண்களின் வாழ்வில் ஒரு தாழ்வும், உரிமைகள் மறுக்கப்பட்டும் வருவதை காணமுடிகிறது. இவற்றை எதிர்த்து இராசாராம் மோகன்ராய், பாரதியார், பெரியார், பாரதிதாசன் முதலியோர் பெண்களின் எரிமைக்கும், வாழ்வுக்கும் பாடுபட்டு எள்ளனர். இவ்வகையில் லட்சுமிகண்ணனின் ஆத்துக்குப்போகனும் நாவலும் அமைந்துள்ளது. இந்நாவலில் வரும் பெண்களின் சிக்கல்களை இக்கட்டுரையில் காணலாம்.

குடும்பச் சிக்கல்கள்:
    ஆணும், பெண்ணும் இணைந்து ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி, அனுசரனையாக இருந்து வாழ்வதே குடும்பத்தின் நோக்கமாகும். முன்பு நிறைய கூட்டுக் குடும்பங்கள் இருந்தன. தற்போது தனிக்குடும்பங்கள் அதிகமாக காணடுடிகிறது. காலங்காலாமாக இருந்து வரும் நம் சமூக அமைப்பில் ஆணாதிக்கமும், பெண்ணை அடிமைப்படுத்துவதுடன், பெண்ணைத் தன் உடைமைப் பொருளாகப் பார்க்கும் ஆணின் மனநிலை இதற்குக் காரணமாகும், கல்வி கற்று, அலுவல்புரிந்து, பொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெண்ணைக் குடும்ப நிறுவனத்தில் தன் உடைமையாக, உண்ணி அடிமையாக நடத்தும் கணவன் அவளுடைய தனித்துவத்தை  ஏற்காமலும் மனைவியைத் தனக்கு இணையாக நடத்தாமலும் இருக்கிறான். மனைவியின் ஆளுமையைச் சிதைக்குமாறு கற்புக்கோட்பாடு, ஆதிக்கப்போக்கு இவைகளால் தளைப்படுத்துகிறான். இதனால் சிக்கல் ஏற்பட்டு குடும்பச் சிதைவு நிகழ்வதையும் காண முடிகிறது.1 
    குழந்தைப்பருவத்திலிருந்தே பெண் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டியவள் என்று குடும்பத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு பல கட்டுப்பாடுகளுடன் அவளை வளர்த்து, வளர்ந்த பின் ஒருவனோடு திருமணம் முடியும் வரை, பெற்றோர்கள் நெருப்பை மடியில் கட்டிவைத்திருப்பது போன்ற உணர்வு இன்றளவும் முறையில் உள்ளதாகும்.
    ஆத்துக்கு போகளுனும் நாவலில் இடம்பெறும் காயத்ரி சிறுவயதில் தன்னுடைய சிநேகதிகளுடன் விளையாடிவருவது அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சி, தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் விளையாட்டைப் பாதியில் நிறுத்திவிட்டு இருட்டி விடுவதற்குள் வீட்டிற்குச் சென்றுவிட வேண்டும் என்ற உணர்வு அவளை அறியாமலேயே ஏற்படுகின்றது.
            ஆத்துக்குப’ போகனும்
             …..ம்….. நா போகனும் நேரமாச்சி!2
    என்று கூறி ஓடிவிடுவாள் இது பெண்ணுக்கு தான் விரும்பும் நேரத்தில் விளையாடவும் அனுமதி மறுக்கப்படுகிறது என்பது மட்டுமின்றி, பெண் என்பவள் பொழுதோடு வீட்டிற்குள் சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டியவள் என்ற கருத்தையே இது உணர்த்துகின்றது. மேலும், காயத்ரியின் பாட்டி,
            மரம் ஏறாதே அழுக்கில் விளையாடாதே
            வீட்டிற்குள் ஓடாதே தனியாக இருட்டில் போகாதே3
எனக்கூறி சிறுவயதிலேயே பெண்களை பலவீனப் படுத்திவிடுவதை அறியமுடிகிறது.

கல்வி
    கல்வி கற்பது அறிவைப் பெற்று, அறியாமையைப் போக்குவதற்குரிய ஒரு சாதனமாகும். இருபாலர்க்கும் பொதுவானது. பெண்கள் சமத்துவ நிலையை அடைய வேண்டுமானால், ஆண்களுடன் சமநிலை பெற வேண்டுமானால் பெண்கள் கல்வி கற்பது இன்றியமையாத ஒன்றாகும்;
            கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் அங்குப்
            புல் விளைந்திடலாம் நல்ல புதல்வர்கள் விளைவதில்லை
என்றார் பாரதிதாசன். கல்வி பயின்ற பெண்ணை திருமணம் செய்ய நினைக்கும் ஒருவன் உயர்கல்வி, உயர்பதவி, உயர்ந்த வருமானம், உயர்ந்த குடம்பம், கைநிறைய வரதட்சனை கொண்டுவரும் பெண்ணையே தேடித்திரிந்து தன் வாழ்க்கையில் பாதி நாட்களை கழிக்கும் ஆண்வர்க்கத்தை இன்றைய சமுதாயத்தில் பரவலாகக் காண முடிகிறது. இதனால் திருமணமாகாத முதிர்கன்னிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற அவல நிலையைக் காணமுடிகிறது.
    லட்சுமிகண்ணனின் நாவலிலும் பெண்கள் திருமணமாவதற்கு முன்பு பிறந்த வீட்டில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஷீலா, கிரிஜா ஆகிய கதாப்பாத்திரங்கள் வழியே வெளிப்படுத்துகின்றார்.
    ஷீலா ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். அழகும் அறிவும் குணமும் ஒருங்கே அமையப் பெற்றவள். இவள் கல்வி பயின்று, வேலை கிடைத்தும் பணமும் சம்பாதித்தாரும் தகுந்தவயதில் திருமணமாகதாதகுறை இவள் வாழ்க்கையில் காணப்படுகிறது. ஷீலா எங்கே சென்றாலும் உறவினர்களும் நண்பர்களும் அவளுடைய திருமணத்தைப் பற்றி விசாரித்து இரக்கம் காட்டுவது இவளைப் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாக்கி விடுகிறது. இவளின் தாய் தன்னுடைய மகளுக்கு தகுந்தவயதில் திருமணமாகாததை நினைத்து அவளைக் குடும்பத்திற்குப் பெரிய பாரமாக நினைக்கிறாள். 
            என்னமோ போங்க! எங்க வீடு அழகாக
            இருக்கலாம், ஆனால் எங்கவீட்டில் உயிரே இல்லை4
என்று மகள் திருமணத்தை மனதில் வைத்துப் பேசுகிறாள். பருவ வயதை எட்டிவிட்ட பெண்கள் குறிப்பிட்ட வயதிற்குள் திருமணமாகி கணவன் வீட்டிற்குச் செல்லவில்லை என்றால் அவள் குடும்பத்தில் ஒரு ஊனமாகவே கருதப்படுவதை அறியமுடிகிறது.
    மேலும், இந்நாவலில் கிரிஜா என்னும் பெண்ணை அவருடைய வீட்டில் ஒரு குறிப்பிட்ட வகுப்புக்குப் பிறகு படிப்பை நிறுத்திவிட்டு, ஒரு பையனைத் தேர்ந்து எடுத்து திருமணம் செய்துவைத்துக் கைகழுவிக் கொள்கின்றனர் படித்து வேலைக்குச் சென்று சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற கிரிஜாவின் விருப்பத்தை அவளின் பெற்றோர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
            பி.ஏ படித்த பெண்ணிற்கு என்ன வேண்டும்
            ஒரு பெண்ணிற்கு? கல்யாணம்தான் 5
    என்று முடிவு செய்யும் கிரிஜாவின் பெற்றோர்களைப் போன்றவர்களின் கையில் பெண்களின் வாழ்க்கைச் சிக்கி சிதைவதை ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார்.

இன்றைய பெண்களின் நிலை
    பெண் திருமணத்திற்கு முன்பு பெற்றோரையும், திருமணத்திற்கு பின்பு கணவனையும் சார்ந்தே இருக்க வேண்டியது இந்திய சமுதாய மரபு தாய்வீட்டு உரிமை கூட பெற்றோர் இருக்கும் வரைதான் அவளுக்கு உரியதாக உள்ளது. அவர்களுக்குப்பின் அவ்வுரிமை தம் சகோதர மனைவிமாரால் தடுக்கப்பட்டு மறுக்கப்படுகிறது. இந்நிலையில் அவள் கணவனையே முழுவதும் சார்ந்திருக்க வேண்டியதாகிறது.

பாலியல் சிக்கல்
    பாலியல் தொந்தரவு என்பது உடல் ரீதியிலான தொந்தரவு மட்டுமல்ல. மன ரீதியிலான உளைச்சலும் இதில் அடங்கும் என்பதை அனைவரும் அறிவர். ஆதன்படி பார்த்தால். இன்று வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்கள் காண்பவர்களின் மனதைக் கலங்கடித்து மனதளவில் பாலியல் தொந்தரவைக் கொடுக்கின்றன. திரைப்படத்திற்குச் செல்வோர் அதனை விரும்பித்தானே செல்கின்றனர். என்று சிலர் கூறலாம். அப்படிப் பாhத்தால், ஊரெங்கும் அரைகுறை நிர்வாணப் பலகைகளை எதில் சேர்க்க வேண்டும்? நிச்சயம் இவை அனைத்தும் மனதளவில் நிகழ்த்தப்படும் பாலியல் தொந்தரவுகளே. 
    அரைகுறையாக உடையணிவதை பேஷன் என்று கூறுகின்றனர். :உடையணிவது சொந்த விருப்பம். ஊன் பார்வையைச் சீர் செய்துகொள்.” என்று சில பெண்ணியவாதிகள் கருத்து கூறுகின்றனர். ஆனால் இவர்கள் அந்தப் பெண்களை மனதளவில் அனுபவிக்க விரும்புகின்றனர் என்பதே உண்மை. அரைகுறை ஆடையுடன் ஆண்களுக்கு முன்னால் வரும் பெண்களும், சாகசச் செயல்களைச் செய்வதுபோன்று பெண்களுக்கு முன்னால் சீன் போடுமு; ஆண்களும். முனதளவில் எதிர் பாலினருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கின்றனர். ஆனால், இதனை யாரும் தட்டிக்கேட்பதில்லை. “முறையாக உடையுடுத்துங்கள்” என்று பெண்களுக்கு அறிவுறுத்தினால்.  நம்மை ஆணாதிக்க சக்தி என்று முத்திரை குத்துவோர் பலர் உள்ளனர். அவ்வாறு முத்திரை குத்தாவிடில், மனதளவிலான பாலின்ப சுகத்திற்கு தடைவ ந்துவிடும் என்பதே அவர்களது அச்சம்.
    இன்றைய சமுதாயம் முழுக்கமுழுக்க பாலியல் தொந்தரவை அடிப்படையாகக் கொண்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகன், பணிபுரியும் இடங்கள். பேருந்து நிலையம், இரயில் நிலையம். பொது இடங்கள் என எல்லா இடங்களிலும் பாலியல் தொந்தரவுகள் மனதளவில் சகஜமாக நிகழ்கின்றன்.6 என்பதை சுட்டப்படுகிறது.
மேலும், சமுதாயத்தில் மனித உறவுகளிடையே பாலுணர்வு ஏற்படுத்தும் தாக்கத்தைப் பல்வேறு அறிஞர்கள் விளக்கிக்காnயுள்ளனர். மனித வாழ்வுக்கு உன்னும் உணவைப்போல், நீரைப்போல் இன்றியமையாது வேண்டப்படுகின்ற ஓர் இயற்கையான தேவையே பாலுறவு7 என்ற கருத்தும் பெண்ணியத்தின் நுட்பமான கருத்தினைப் பேசுவனவாகும்.
பாலுணர்ச்சி என்பது அனைத்து உயிர்களிடத்தும் காணப்படுகிறது. பிற உயிரினங்களில் பாலுணர்ச்சி இனவிருத்தி நேரத்தில் மட்டும் வெளிப்படுகின்றது. ஆனால், மனித இனத்தில் தேவைக்களுக்கேற்ப அது வெளிப்படுத்தப்படுகின்றது. ஆண் ஒரு பெண்ணின் பேச்சு, இங்க அசைவு போன்றவற்றை தனக்கு சாதகமாக்கி காமவயப்படுகிறான். பேண் சற்றே வேறுபாடுகிறாள், இவள் உடலாலும், உள்ளத்தாலும் நிறைவு எய்துபவள் இவ்வேறுபட்டால் ஆண் பெண் இருபாலரிடத்தும் சிக்கல் ஏற்படுகின்றது. அதிலும் பெண்ணையே அதிகப்பாதிப்பிற்கு ஆட்படுத்தும் இவ்வகைப் பிரச்சனை லட்சுமிகண்ணனின் ஆத்துக்குப் போகனும், நாவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
லட்சுமிகண்ணனின் ஆத்துக்குப் போகனும் நாவலில் வரும் காயத்ரி தன் கணவன் சங்கரின் பாலுறவு வன்முறையை மறைமுகமாக எடுத்துக்காட்டுகிறான். குhயத்ரி அலுவலகத்திலும், ஓயாமல் கபலெல்லாம் அலுவலை செய்துவிட்டு வந்து, வீட்டிற்கு வந்தும் வேலை செய்து சோர்வடைந்து படுத்துறங்கிறாள். இவ்வேளையில் சங்கர் மனைவியின் கூந்தலை வருடி, காதில் காதல் மொழியை கிசுகிசுத்து அவனின் கைகள் காயத்ரி உன்னுடன் இம்மாதிரி இருந்தால் எனக்கு எப்படி இருக்கு தெரியுமா? ஏன வினவுகின்றான்.
நடுக்கடலில் புயலுடன் போராடிய கப்பலுக்கு நங்கூரம் பாய்ச்சகிடைத்த மண்போல…. ஆலைந்து திரிந்த யாத்திரிகள் கடைசியில் ஒரு குளுமையான ஆசிரமத்தை அடைந்தாற்போல… பட்டுப்போல இந்தச் சருமம், இந்த அருமையான உடம்பு… இதில் எனக்கு வீடு வந்து சேர்ந்தாற்போல இருக்க காயத்ரி இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்8 என்று கூறுகிறான். இந்தக் கூற்று பெண்ணுக்கான பாலுணர்வுகள் இல்லாத நேரத்திலும், ஆணுக்கு ஒத்துழைக்க நிர்பந்தம் செய்யப்படுகிறாள் என்பது புலனாகிறது. பாலியல் சிக்கலைக் கண்டறிய அரசு  பெண்கள் பணிபுரியும் இடத்தில்  பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர். அதை தைரியமாக வெளியில் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக சூஆந வுழழ என்ற பெயரில் பல தகவல்கள் சமீப காலத்தில்சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.

முடிவுரை
    இந்நாவலில் ஆராயப்பட்ட செய்திகளின் அடிப்படையில் குடும்பத்தில் பெண்களின் நிலை, குடும்ப உறவில் அவர்களின் பங்களிப்பு, இளமையில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், பருவ சயதில் தரும் அச்சுறுத்தல்கள், திருமணச் சிக்கல்கள் ஆகியவும், கணவனின் எதிர்பார்ப்பகளுக்கு ஒத்துழைக்க வேண்டிய கட்டாயம், சுமக்க வேண்டிய குடும்ப பாரம், கடமைகள் ஆகியன விளக்கமாக படைப்பாளர் ஆராய்ந்துள்ளார். சமுதாயத்தில் பெண்களின் நிலையை படம்பிடித்துக் காட்டியுள்ளார் நாவலாசிரியர்.
    ஆண்கள் மட்டுமே பொருளீட்டுவதற்குரிள உடல் ரீதியான தகுதியுடையவர்கள் என்ற நிலைமாறிப் பெண்களும் வேலைக்குச் சென்று பொருள் ஈட்டி வாழ்க்கையை செம்மையுற அமைக்க அரசாங்கமும் ஒத்துழைத்து வருகிறது. பேண்கள் தடம் பதிக்காத துறைகளே இல்லாத அளவிற்கு இன்னும் வளர பல படைப்பாளர்கள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்புகளைப் படைக்க வேண்டும். வருங்காலம் பெண்கள் கையில் தஞ்சம்புகும் என்பதில் ஐயமில்லை.

அடிக்குறிப்புகள்
1.    வெங்கடராமன் சு., எண்பதுகளில் தமிழ்ப்புனைக்கதைகளில் பெண்ணியம், பக் 25-26
2.    லட்சுமிகண்ணன், ஆத்துக்குப்போகனும்ஈ ப.13
3.    மேலுது, ப.15
4.    மேலுது,ப.15
5.    மேலுது,ப.15
6.    பகவத் தரிசனம் நவம்பர் 2018 ப.12
7.    Russel Bertrand, Marriage and Morals,p.195
8.    லட்சுமிகண்ணன், ஆத்துக்குப்போகனும். ப.23