ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

இலக்கியங்களில் திருமணச் சடங்குகள் -ஓர் ஆய்வு

முனைவர் சீ.பானுமதி 13 Oct 2020 Read Full PDF

நெறியாளர்:

முனைவர் சீ.பானுமதி,

முதல்வர்,

அரசு மகளிர் கல்லூரி,

                                                                                             தஞ்சாவூர்,

                                                                                             கைபேசி எண்: 94437 14330

 

 

ஆய்வாளர்:

பொ.பிரபு

முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்),         

அறிஞர்  அண்ணா  அரசு   கலைக்கல்லூரி,

நாமக்கல் - 637002

ஆய்வுச்சுருக்கம்:

            சங்க இலக்கியத்தில் களவு, கற்பு என்று பிரிக்கப்பட்ட நிலையில் களவு வாழ்வில்   கடைப்பிடிக்கப்பட்டு  வந்த சடங்குகளும், கற்பு   வாழ்வில் செய்து வந்த சடங்கு முறைகளும் பெண்களுக்குரிய சடங்கென   தெற்றென   தெரிகிறது.

திறவுச்சொற்கள்:

கரணம்,பொருத்தம் ,பரிசம், அன்பளிப்பு ,வதுவை மணம், சிலம்பு கழியும் சடங்கு

1.முன்னுரை:       

மனித  வாழ்க்கையில்  சடங்குகள் முக்கிய  இடம் வகிக்கின்றன. சடங்குகள் அனைத்தும் மூடநம்பிக்கை என்று ஒதுக்குதல் கூடாது. சடங்குகள் இல்லாமல் மானிட சமூக வாழ்க்கை சாத்தியமில்லை. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து இனக்குழு நாகரிக வாழ்க்கையிலிருந்ததே மந்திரங்களும், சடங்குகளும் சமூகவயமாக்கும் கருத்தியல் செயல்பாடுகளை செய்து வந்துள்ளன. சடங்குகளில் பெண்ணிக்குரிய சடங்குகள்  சங்க இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

2. சடங்குகள்   என்பதன்   வரையறை:

நம்பிக்கை அடிப்படையில் தலைமுறை தலைமுறையாகச் செயல்படும் செயல்கள் சடங்குகள் எனப்படும். மக்கள் அனைவரிடமும்  சடங்குகள பல இன்றும் காணப்படுகின்றன. பிறப்பு முதல் இறப்பு வரையில் வாழ்வின் எல்லா நிகழ்வுகளும் சடங்குகளுடன் பின்னிப் பிணைந்துள்ளன. பழந்தமிழரிடம் இருந்ததாக அறியலாகும் சடங்குகளை ஆய்வு செய்வதே இவ்வியலின் நோக்கமாகும்.      

2.1 மானிடவியல் அறிஞர் பார்வையில் சடங்குகள்:

சமூக முக்கியத்துவம் வாய்ந்த சடங்குகளைப் பற்றி ஆராய்ந்த டச்சு நாட்டு மானிடவியல் அறிஞரான அர்னால்டு வான் கென்னப் (யுசழெடன எயn பநnnயி) என்பவர் “வாழ்வியற் சடங்குகளை மிகவும் நுட்பமுடன் ஆராய்ந்து தகுதிப் பெயர்ச்சிச் சடங்குகள் என வரையறை செய்தார். ஓவ்வொரு தகுதிப் பெயர்ச்சிச் சடங்கும் மக்களை ஒரு நிலையிலிருந்து பிரித்து மறுநிலைக்கு அறிமுகபடுத்;தப்படுகிறது என முடிவுசெய்தார்”.1 சங்ககாலத் தமிழர் பண்பாட்டிலும் பல தகுதி பெயர்ச்சி நிலைகள் பிரிக்கபட்டுள்ளன. அவற்றில் பெண்ணிக்குரிய சடங்குகளை காண்போம். 

3. திருமணச் சடங்குகள்

“பொய்யும் வாழ்வும் தோன்றி பின்னர்

  ஐயர் யாத்தனர் கரணம் என்ப”2;

என்று தொல்காப்பியர் கூறுவதால் அவர் காலத்துக்கு முன்பே கரணம் என்ற திருமணச் சடங்குகள் இருந்தன என்று அறியலாம். பழந்தமிழரின் திருமணச் சடங்குகள் பின்வருமாறு:

“பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு

  உருவு றிருத்தக் காமம் வாயில்

  நிறையே அருளே உண்வொடு திருவென

  முறையுறக் கிளர்ந்த ஒப்பினது வகையே”3

என்று   தொல்காப்பியர்   கூறுதலின்    ‘பொருத்தம்’ பார்க்கும்   சடங்கு   இருந்தது எனத் தெரிகிறது. பெண்ணுக்குப்  ‘பரிசம்’    அளிக்கும்   முறையும்    இருந்தது.

                           “கடுங்கண் கோசர் நியமம் ஆயினும்

  உறும் எனக் கொள்குநர் அல்லர்

  நறுதல் அரிவை பாசிழை விலையே”4

என்பது அகநானூறு. பரிசம் அன்று முலைவிலை, சிறுவிலை, பாசிழை விலை, பரியம் என்று அழைக்கப்பட்டது. பரியம் என்ற சொல்தான் “பரிசம்’  என்று மருவி வழங்கப்படுகிறது.

3.1 முதன்முதலாக திருமணம்:

மனித குலத்தில் எப்போது திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் தொடங்கியது  என்று   தெரியவில்லை. ஆனால் திருமணம்  செய்து  கொள்ளாமல் ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தும் வழக்கம் ஆரம்பம் முதலே இருந்து வந்திருக்கிறது. அப்போது ஒவ்வொரு மனிதனும் தனக்குப் பிடித்தமான பெண்ணைக்  கவர்ந்து  சென்று   அவர்களுடன்  குடும்பம் நடத்தியிருகின்றான். ஒரு  பெண்ணிற்காகச்  சண்டையிட்டிருக்கின்றான். குறிப்பிட்ட பெண்ணுடன் தான் குடும்பம் நடத்துவதற்காக அந்த பெண்ணின் பெற்றோருக்கு கைமாறாக உணவுப் பொருட்களையும், ஆடு, மாடுகளையும் அன்பளிப்பு என்ற பெயரில் பண்டைய மனிதன் வழங்கியிருக்கிறான். தன்னுடன் வாழும் பெண்ணை இடையில்  வந்தவர்கள் அழைத்துச் சென்றுவிடக் கூடாதே என்பதற்காக பரிசளித்தான். அதே போல் பெண்ணின் உறவினர்களும் மணமகனுக்கு அன்பளிப்புப்  பொருள்களைத்  தனித்தனியாக  வழங்கி தம்பதிகள் வாழ வேண்டும்  என்று  எண்ணினர்.

 

3.2 திருமணமும் கரணமும்:    

ஓர்  ஆடவனும், ஓர் பெண்ணும் கணவனும், மனைவியுமாக இல்லறம் நடத்தி  இசைந்து ஓன்று சேர்வதே திருமணமாகும். மணத்தல் கலத்தல் (அல்லது) கூடுதல் என்ற பொருளை உணர்த்தும் மண வாழ்க்கைக்கென்றே இறைவன் ஆணையும், பெண்ணiயும் படைத்திருந்தாலும் திருமணம் ஆயிரங்காலத்துப் பயிர்  என்பதாலும், தெய்வத்தையும், பல பெரியோர்களையும் சாட்சியாக வைத்து மணம் செய்து  கொள்கின்றனர்.

3.3 கரணம் என்பதன் பொருள்:            

திருமணத்திற்குரிய ஒப்பந்தம் அல்லது தாலிகட்டும் சடங்கு கரணம்’ எனப்படும். கரணம் செய்கை அது ஆட்சியை பற்றிய சடங்கை உணர்த்தியற்று. கரணத்தோடு கூடிய  திருமணத்தை வதுவை மணம் என்பது இலக்கிய வழக்கு. சில ஆடவர் மகளிரை மணக்கவில்லையென்று பொய்யுரைத்தும், அவரைக் கைவிட்டும், அவர் வாழ்க்கையைச் சீர்குலைத்தும் வந்ததினால் மக்கள் மீது அருள்கொண்ட பெரியோர் கரணம் என்ற திருமணச்சடங்கை ஏற்படுத்தினர். மணமகன் மணமகளைத் தன் நிலையான வாழ்க்கைத் துணையாகக் கொள்வதற்காகப்   பலரறிய   கடவுள்   முன்   இடுவதே  கரணமாகும்.

            “திருமணம் அல்லது விவாகம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஒரு ஆணும்,  பெண்ணும்  ஒருவருக்கு  ஓருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையை கூட்டுப் பொறுப்பில் பலர் அறியச் செய்து கொள்ளும் காரியமே கரணம்”5. திருமண நிகழ்ச்சி குறித்துப் பேராசிரியர் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.  தொல்காப்பியம்  கரணம்  பற்றி,

“கொடுப்போர் இன்றியம் கரணம்  உண்டே

 ஐயர் யாத்தனர் கரணம்

 கற்பெனப்படுவது    கரணமோடு   புணரக்

 கொளற்குரிய   மரபினோர்   கொடுப்பக்   கொள்வதுவே"6

என்று   கற்பியல்   நூற்பாவில்   கூறுகிறது.

3.4 திருமணம் செய்யும் முறை:

மணமக்கள்  பெற்றோர்  மற்றும்  சுற்றம் சூழ  மணமக்கள்  வீட்டிற்கு  சென்று விருந்துண்டு  மணவினை நாளைக் குறித்துக்கொண்டு மீண்டும் வருவார்கள். மிக்க  இருள்   நீங்கிய அதிகாலையில் தீயகோள்கள் தன்னைவிட்டு நீங்கபெற்ற  விளைந்த வெள்ளி   திங்களானது தீமையில்லாத சிறப்புப் புகழுடைய  ரோகினி நட்சத்திரத்துடன் சேரும் நாளை நல்ல நாளாகக் கொண்டனர். சுற்றாருக்கும், நட்பினருக்கும் அழைப்பு விடுப்பர். குறித்த நாள் வந்ததும் பெண்வீட்டார் வாயிலிற் பந்தலிட்டு மணல் பரப்பி மாலைகளைத் தொங்கவிட்டு விளக்கேற்றி வைப்பர். நட்பும் சுற்றமும் வந்து அத்திருமணப் பந்தலில் அமருவர். இன்னிசை முழங்க குலதெய்வ வழிபாடு  இன்றி  ஐந்து மங்கல மகளிர்  சென்று  புதுக்குடங்களில் நீர் கொண்டு வந்து புதுத்தாழியில் ஊற்றி அந்நீருள் பூவையும், நெல்லையும் இடுவர். முதுமகளிர் மணவினை செய்வர்.

3.5 திருமணத்திற்கு முந்தைய நிலை:

பெண்கள் புகுந்த வீட்டிற்குச் செல்வதற்கு முன்பாக பொற்றோருடன் இனிமையாக வாழக்கூடிய சூழலே காலங்காலமாய் நடந்து வருகிறது. இயற்கையாக தலைவன்  தலைவியாக   காதல்  கொண்டதை,

“யாயும் யாயும் யாராகியரோ

                            எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளிர்

                            செம்புல பெயனீர் போல

                            அன்புடை நெஞ்சம் தாங்கலந்;தனவே”7

என்ற குறுந்தொகை பாடலும் அழகான விளக்கத்தை தருகின்றது. இதனைப்  பற்றி   திருவள்ளுவரும்.

“மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்

                            செல்வி  தலைப்படு  வார்”8

காதல்  வயப்பட்ட  பெண்ணொருத்தி  மிகத்  தெளிவாக உறுதியாக கற்போடு அமைந்த தன் தளரா நம்பிக்கையைக் கீழ்க்கண்டவாறு வெளிப்படுத்துகிறாள்

“நிலத்தினும் பெரிதே  வானினும் உயர்ந்தன்று                                                                                               

                            நீரினும் ஆரளவின்றே  - சாரற்

                            கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொணடு

                             பெருந்தேனிழைக்கும் நாடனொடு நட்பே.”9

என்ற பாடலின் இயற்கையை சுட்டிகாட்டி பரப்பிலும், .உயரத்திலும், ஆழத்திலும் பெரிது காதல் என்பதை மிகத் திடமாக உலகக்கு வெளிப்படுத்துகிறாள்.

4. பெண்ணிக்குரிய சடங்குகளின் படிநிலைகள் ::

            “அந்தோணி குட் என்னும் மானுடவியல் அறிஞர் இன்றைய தமிழ்ப் பண்பாட்டின் நான்கு முக்கிய வாழ்க்கை வட்டச் சடங்குகள் மூலம் பின்வரும் நிலை மாற்றங்கள் நிகழ்கின்றன என குறிப்பிடுகிறார். அவை என்று வகைப்படுத்துகிறார்.”10 இதன்; அடிப்படையில் சங்ககாலப் பெண்களின் வாழ்வானது.

1.         வெறியாட்டு சடங்கு – சிறுபெண்

2.         திருமணவாழ்க்கை – கன்னிப்பெண்

3.         குழந்தை  பிறப்பு சடங்கு - மனைவி, தாய்

4.         கணவனின்  இறப்பு   சடங்கு – கைம்பெண்

என்ற  நிலையில் வகைப்படுத்தலாம்.

4.1 களவு வாழ்க்கை:     

பழந்தமிழர் வாழ்வில் களவு மணமே பரவலான வழக்காக    இருந்தன.

“குவளை உண்கண்  கலுழ, நின்மாட்டு

                            இவளும் பெரும்பே  துற்றனள்  ஓடும்

                           தாயுடை நெடுநகர்த்  தமர்பா  ராட்ட

                           காதலின்  வளர்ந்த  மாதர்  ஆதலின்”11

என்ற அடிகளில் பெண் தம் வீட்டினரின் பாசப்பிணைப்பையும் மீறிக் காதலில்   ஈடுபட்ட   செய்தியை  சுட்டுகிறது.பெற்றோர்  அறியாது  பெண் வெளியே சென்று ஓர் ஆணுடன் களவொழுக்கத்தில் ஈடுபட முயலும்போது அவளைத் தாய் இல்லத்தில் வைத்துக் காவல் செய்யும் நடைமுறையும் இருந்தது.      

“விளையாடு ஆயமாடு ஓரை ஆடாது

                            இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல்

                              அறனும் அன்றே  ஆக்கம் தேய்ம்……….”12

இளம் மங்கையர் தம் தோழியர் கூட்டத்தோடு ஒரை ஆடாமல் வீட்டின் கண்ணே இற்செறிக்கப்பட்டமை அறநெறி ஆகாதே. அதனால் ஆக்கமும் தேய்ந்துபடும் எனக் கூறுவதன் மூலம் இற்செறிப்புப் பற்றி அறிய முடிகிறது.

4.1.1 வதுவைச் சடங்கு:

வதுவை சடங்கினை வாலாய் கருத்தியல் சடங்காகக் குறிப்பிடுகிறார். ‘அந்தோணிகுட் என்பவர் வதுவை சடங்குகளைத்  தாய்மை சார்ந்த மங்களகரமான சடங்குகளாகப் குறிப்பிடுகிறார்’. பெண்ணின் களவு வாழ்க்கை வதுவையின் கற்பு வாழ்க்கையாகிறது. இரு வீட்டார்களாலும், ஊர்ப்பெரியவர்களாலும் தீர்மானிக்கப்பட்டது வரைதல் அன்றைய  நடைமுறைப்  பண்பாட்டின்  சடங்குகளாக  இருந்தது.

“நனைவிளை நறவின்தேறல் மாந்தி,

                            புனைவிளை  நல்இல் திருமணல் குவைஇ,

                            வதுவை அயர்த்தினர் நமரே”13

என்ற பாடல் அடிகள்  மூலம், பெண்வீட்டில் பரப்பப்பட்ட புதுமணலில் கூடிய பெரியவர்கள் தங்கள் மகளுடைய மணத்தை முடிவுசெய்து, மகிழ்ச்சியில் தேறல் மாந்தி பின்னர் ‘வதுவை என்ற சடங்கினை அயர்ந்தார்கள்  என்று  பாடல்  கூறுகிறது.

4.1.2 சிலம்புகழிச் சடங்கு:

மணமாகும் வரை பெண்கள் பாதங்களில் சிலம்பு அணிந்திருந்தார்கள். மணவினைத் தொடங்குவதற்கு முன்னதாகத் தாய் வீட்டில் அவளுக்கு ‘சிலம்பு கழியும் சடங்கு’செய்தனர். சிலம்பு கழிப்புச் சடங்கிற்குப்   பின்னர்  ‘வதுவை நல்மணம்’ நிகழ்ந்தது. இதனை,

“நும்; மனைச் சிலம்பு கழீஇ அயரினும்

                            எம் மனைச் வதுவை நல்மணம் கழிக எனச்

                            சொல்லின்  எவனோ  மற்றே  வெண்வேல்

                            மைஅற விளங்கிய கழல்  அடி

                            பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே”14

என்ற அடிகள் கூறுவது பெண் வீட்டில் சிலம்பு கழித்தல் சடங்கு வதுவையின் போது  நிகழ்த்தப்பட்டதை உணர்த்துகின்றன. சங்க காலத்தில் நிகழ்த்தப்பட்ட திருமண நிகழ்வு பற்றி அகநனூற்றில்“உழுந்து தலைபெய்த” எனத் தொடங்கும் 8-வது பாடலும், ‘மைப்பு அறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு’எனத் தொடங்கும் 136-வது பாடலும் எடுத்தியம்புகின்றன இவ்விரு பாடல் வழி அறியலாகும். தமிழர் மணமுறை தமிழ் மரபின் பாற்பட்டதாக வைதீகச் சார்பற்றதாகக் காணப்படுகிறது.

1.   திருமணம் பெண் வீட்டில் நடத்தப்பட்டது.

2. நற்சகுணம் பார்த்து,திங்களும் உரோகினி விண்மீனும் சேரும் நல்ல நாளில் புள் நிமித்தம் பார்த்தும் விடியற்காலமே வதுவை தொடங்கப்பட்டது.

3.   கடவுளை முதலில் வணங்கினர்.

4.   மணமுரசும்,மணமுழவும் முழங்கப்பட்டன.

5.  மணப்பெண்ணின் உறவினர் அவளுக்கு வாகை இலையும் அருகம்புல் மொட்டும் கலந்து தொகுத்த காப்புநூலைச் சூட்டி, மணப்புடவை அணிவித்தனர்.

6. மணவினையை நிகழ்த்தும் முதிய பெண்கள் தம் உச்சியில்   குடத்தையும்  புது   மண்பாண்டத்தையும் வைத்திருந்தார்கள்.

7. இவர்கள் மணவினைக்குரியவற்றை முன்னும் பின்னும் முறைமுறை தரத்தர புதல்வர்களைப் பெற்ற திதலை பெற்று மகளிர்  நால்வர் மணப்பெண்ணைச் சூழ்ந்து இருந்து சடங்குகளைச் செய்தார்கள்.

இச்சடங்குகள் பண்டையத் தமிழ் இனத்தின் மணமுறையில் இருந்த செழிப்புச் சடங்குகளை  இனம் காட்டுகின்றன.

4.1.3 மணமும், சிலம்புகழிதலும்:

சிலம்பு கழித்தல் பற்றி உ.வே.சா அவர்களுக்கு இருவேறுபட்ட கருத்து நிலவியுள்ளதனைக் குறுந்தொகை பதிப்பின் வாயிலாக அறியமுடிகின்றது. அவர் குறுந்தொகை பதிப்பின் நூலாராய்ச்சி என்ற பகுதியில் வழக்கங்களில் ஒன்றாகச் சிலம்பு கழிதல் நோன்பினை சுட்டும்போது “மணம் செய்த பின்னர் மகளிர் சிலம்பு கழிக்கும் ஒருவகை நோன்பு பண்டைய காலத்தில் செய்யப்பட்டுள்ளது”15 என்று குறிப்பிட்ட பின்னர் நூற்பகுதியின் விளக்கவுரையில் மணம் புரிவதற்கு முன்  மணமகளது காலில் பெற்றோர்களால் அணியப்பட்ட சிலம்பை நீக்குவதற்கு ஒரு சடங்கு செய்யப்படும். அது சிலம்பு கழித்தல் நோன்பு’ என்பர்.

5.கற்பு வாழ்க்கை சடங்குகள்:

களவு வாழ்வில் ஈடுபட்டு வந்த தலைவனும், தலைவியும் தங்களது பெற்றோர்களின் விருப்பத்திற்கிணங்க ஊரார்களின் வாழ்த்துரைகளோடு திருமணம் செய்து கணவனும் மனைவியுமாக இணைந்து இல்லற வாழ்க்கை  நடத்துவதற்கு சடங்குச் செய்து ஏற்றுக்  கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறாக, இவர்கள் நடத்தும் வாழ்க்கைக்கு கற்பு வாழ்க்கை அல்லது இல்லற வாழ்க்கை என்று பெயர்.

 

 

5.1 பூப்புச் சடங்கு:

‘அந்தோணிகுட்  என்னும் மானுடவியல் அறிஞர் “பூப்புச் சடங்கினை தீட்டு சார்நத மங்களமான சடங்கு”16 என்று வகைப்படுத்துகிறார். “பெண் உடல் ரீதியாகக் குழந்தைப் பருவத்திலிருந்து கருத்தரிக்கும் தகுதியை அடைகின்ற நிலைக்கு  மாறிச் செல்லுவதைக்  குறிப்பது பூப்பு ((puberty) என்கிறோம்”17.சடங்குகளைப் பற்றி சங்க  இலக்கியம்   குறிப்பிடுவதாவது,

“தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்புற

                            நாள் அணிந்து உவக்கும் கணங்கறை யதுவே

                            கேள் அணங்குற மனைக் கிளந்துள்ள கணங்கறை

                           கணங்கறைப் பயனும் ஊடல் உள்ளதுவே”18

என்ற அடிகள் மனைவி பூப்படைந்தததை, பரத்தை வீட்டிலிருக்கும் கணவனுக்கு  செவ்வணி அணிந்து குறிப்பால் உணர்த்தியதைக் காணலாம். பூப்படைந்த ஈராறு நாளில் சுணங்கின் (புணர்ச்சி) முக்கியத்துவம் இங்கு உணர்த்தப்படுகிறது.

5.2 திருமணத்திற்கு  பெண்  கேட்டல்  சடங்கு:

பழங்காலத்தில் தலைவனே  உறவினர்களுடன்   சேர்ந்து தலைவியை பெண் கேட்டுப்  போகும்  பழக்கம்  இருந்துள்ளது.  இதனை,

“எந்தையும் யாயும் உணரக் காட்டி

                             ஓளித்த செய்தி வெளிப்படக்கிளர்ந்த பின்

                              மலைகெழு வெற்பன்தெலைவந்து இரப்ப

                                   நன்றுபுரி கொள்கையின் ஒன்றா கின்றே”19

என்ற   குறுந்தொகை   பாடல் வரிகள் உணர்த்துகின்றன.  இதே பழக்கம் இன்றளவும்   தமிழ் மக்களிடம்   இருக்கிறது.

மேலும், வயது முதிர்ந்தோரைப் பெண்  கேட்க அனுப்பும் செய்தி இல்லற வாழ்வில் தமிழ்மக்களின் உயர்ந்த சடங்கினை உணர்த்துகிறது. பெண் கேட்க வரும்போது எல்லாம் நன்மையாக முடிய வேண்டும் என்ற கருத்தில் ‘நன்று நன்று’ எனச் சொல்லிக்கொண்டே வருவார்கள். அவர்களை வரவேற்போரும் நீங்கள் வந்த நாள் நன்னாள்’ என்று சொல்லிக் வரவேற்பார்கள். இத்தகைய வாழ்த்தும், வரவேற்பும் அந்நிகழ்வு  நிறைவேறும் என்பதற்கான அறிகுறிகளாகவே   கொள்ளப்பட்டன.   இதனை,

   “தண்டுடைக் கையர், வெண்தலைச் சிதவலர்         

                  நன்று நன்று என்றும் மாக்களோடு

                  இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே”20

என்னும் குறுந்தொகைப பாடல் வரிகள் உணர்த்துகின்றன.  இன்றும் வயது முதிர்ந்த   நல்ல அனுபவம் நிறைந்த முதியவர்களோடு பெற்றோரும், பெண் பார்க்க முதலில் செல்கிறார்கள்.  அப்படி  அவர்கள்  செல்லும்போது பல வகையான   அறிகுறிகள்   அல்லது   நிமித்தம்   பார்த்துச்   செல்கின்றனர்.

5.3 மகப்பேறு காலச்சடங்கு :

“குழந்தைப் பிறப்பினை தீட்டு சார்ந்த மங்களகரமான சடங்கு என்கிறார் அந்தேதாணிகுட்”21 பெண் கருவுயிர்த்தல் ,குழந்தை பெறுதல் பற்றிய செய்திகளுமஇ;;அவை தொடர்பான சடங்குகளும் சங்க இலக்கியத்தில் பாடப்பட்டுள்ளன. வீட்டில் குழந்தை பிறந்தால் ,குழந்தை பெற்ற பெண்ணின் தலையில் வெண்சிறுகடுகைத் தடவித் தலைமுழுக்கட்டும் நிகழ்வைச் செய்தனர். இதனைஇ

“திருந்து இழைமகளிர் விரிச்சிநிற்ப

                           வெற்உற விரிந்த அறுவை மெல் அனைப்

                           புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துந்ச்

                           ஐயவி அணிந்த ரெய்யாட்டு ஈராணிப்

                           பசுரெய் கூர்ந்த மென்மை யாக்கைச்

                            சீர்கேழு மடந்தை ஈர்இமை பொருந்த”22

என்ற பாடலடிகள் வழி அறிய இயலும். வீட்டில் குழந்தை பிறந்தால், பிறந்த குழந்தையைப்  பெற்ற தாய் ஆகியோரைப் பேயிடமிருந்து காக்க ஐயவி பூசுதலைச்   சங்ககால   மக்கள்   சடங்காகச்   செய்தனர்.

5.4 கைம்மைச் சடங்கு:                            

போர்க்களத்தில்  இறந்துவிட்ட வீரனின் மனைவிக்கு அக்காலச் சமூகத்தால் விதிக்கப்பட்ட கைம்மைச் சடங்குகள் அவளைப் பாலியல் வாழ்க்கைக்குத் தடை விதிப்பதாகச் செய்யப்பட்டன. இவ்வகையிலான “இறப்பு சார்ந்த சடங்கினை அந்தோணிகுட் தீட்டு சார்ந்த அமங்களமான சடங்கு என வகைப்படுத்துகிறார்”23. கைம்மையில் ஒரு வழக்கமாகப் பெண்ணின் கூந்தல் மழிக்கப்பட்ட செயலை,

“விரி உளைப் பொலிந்த பரியுடை நன்மான்

                            வேந்தர் ஒட்டிய ஏந்துவேல் நன்னன்     

                            கூந்தல் முரற்றியின் கொடிதே.”24

என்ற     பாடல்கள்   மூலம்   அறியலாம்.

5.முடிவுரை:

            தமிழர் தம் வாழ்வில் சடங்குகள் முக்கிய பங்கு வகித்தன. அவற்றை முறையே பின்பற்றி வாழ்ந்து வந்தனர். அதிலும் குறிப்பாக பெண்கள் சார்ந்த சடங்குகளை  தலைமுறைகளாக பின்பற்றினர். சங்க இலக்கியத்தில் களவு, கற்பு என்று பிரிக்கப்பட்ட நிலையில் களவு வாழ்வில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த வதுவைச் சடங்குகளும், மணமாகும் முன் காலில் சிலம்புகழிச் சார்ந்த சடங்குகளும், கற்பு வாழ்வில் செய்து வந்த திருமணத்திற்கு பெண் கேட்கும் சடங்கு முறைகளும் தெற்றென தெரிகிறது.

அடிக்குறிப்புகள்:

1.பக்தவத்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல்,  பக்கம்: 542

2.தொல்காப்பியர், தொல்காப்பியம்,பொருளதிகாரம், கற்பியல்,நூற்பா:143

3.மேலது, கற்பியல், நூற்பா:119

4.கபிலர், அகநானூறு, களிற்றியானை நிரை, பா.எண்:181, வரி:19-21

5.பெரியார் ஈ.வெ.ரா, சிந்தனைகள்,  பாகம் 1,  பக்கம்:184

6.தொல்காப்பியர், தொல், கற்பு,   நூற்பா: 141 - 140

7.செம்புல பெயனீரர்,  குறுந்தொகை,   பாடல் எண்: 40   வரிகள்:  1-5

8.திருவள்ளுவர்,  திருக்குறள்,  இன்பத்துப்பால்,  கற்பியல், குறள் எண்: 1289

9.தேவ குலத்தார்,  குறுந்தொகை,  பாஎண்:  49, வரிகள்: 1-4

10.பக்தவத்சல,பாரதி,   மானிடவியல் கோட்பாடுகள்,   பக்கம் எண்: 306

11.நக்கீரனார்,  அகம்,  நித்திலக் கோவை, பா.எண்: 310 வரிகள்: 5-8

12.பிரான்  சாத்தனார்,  நற்றிணை, பா.எண்: 68,  வரிகள் : 1-3

13.கயமனார், அகம்,  மணிமிடை பவளம், பா.எண்:221 ,  வரிகள்: 18-20

14.ஒதலாந்தையார், ஐங்குநுறூறு,  மறுதரவு பத்து,   பா.எண்:399, வரிகள்: 1-4

15.குறுந்தொகை  மூலமும்  உரையும், நூலாராய்ச்சி உ.வே.சா.பதிப்பு, பக்கம்: 83

16.பக்தவத்தசல பாரதி,   மானிடவியல் கோட்பாடுகள்,   பா.எண்:302

17.ராஜ்கௌதமன், பாட்டும் தொகையும் தமிழ்ச்   சமூக  உருவாக்கமும், ப.79

18.குன்றம் பூதனார்,  பரிபாடல்,  செவ்வேள,  பா.எண்:9,  வரிகள்: 19-22

19.உறையூர்   பல்காயனார், குறுந்தொகை, பா.எண்:374,  வரிகள்: 1-4

20.வெள்ளி வீதியர்,குறுந்தொகை,  பா.எண்:146,   வரிகள்: 3-5

21.பக்தவத்சல பாரதி,  மானிடவியல் கோட்பாடுகள், பா.எண்:306

22.கோண்மா  நெடுங்கொட்டனார்,  நற்றிணை,  பா.எண்:40  வரிகள்:4-9

23.பக்தவத்சல பாரதி,   மானிடவியல் கோட்பாடுகள், பா.எண்: 306

24.பரணர்,  நற்றிணை,   பா.எண்:270   வரிகள்: 7-10

 

தூணைநூற்பட்டியல்:           

1.சண்முகம் பிள்ளை.மு  -            தொல்காப்பியம் பொருளதிகாரம் முதல்       

                                                                       தொகுதி

  முல்லை நிலையம்,

                                                                       9, பாரதி நகர் முதல் தெரு,

                                                                       தியாகராய நகர்

                                         சென்னை – 600 017

                                                                      முதற்பதிப்பு – செப்டம்பர் - 1996

                                                                      மறுபதிப்பு -2004

2.சண்முகம் பிள்ளை.மு  -           தொல்காப்பியம் -பொருளதிகாரம் –

                                                                      இரண்டாம் தொகுதி

                                                                      முல்லை நிலையம்,

                                                                      9, பாரதி நகர் முதல் தெரு,

                                                                       தியாகராய நகர்

                                                                       சென்னை – 600 017

                                                                      முதற்பதிப்பு – செப்டம்பர்-1996

                                                                      மறுபதிப்பு: 2004

3.சண்முகம் பிள்ளை.மு -            தொல்காப்பியம் - பொருளதிகாரம் –

                                                                      மூன்றாம் தொகுதி,

                                                                      முல்லை நிலையம்,

                                                                       9,பாரதி நகர் முதல் தெரு,

                                                                      தியாகராய நகர்

                                                                      சென்னை – 600 017

                                                                      முதற்பதிப்பு – செப்டம்பர் - 1996

                                                                       மறுபதிப்பு - 2004           

4.குறிஞ்சுச் செல்வர். டாக்டர்

  கொ.மா. கோதண்டம்   -                திருவள்ளுவர்-திருக்குறள்     

                            (இளைஞர்களுக்கான   எளிய உரை)

                                                                        நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,

                                                                  41- D, சிட்கா   இண்டஸ்டிரியல்  எஸ்டட்,

                                                                       அம்பத்தூர்,

                                                                       சென்னை-600098

                                                                       முதற்பதிப்பு – ஆகஸ்ட் 2011

                                                                       மூன்றாhம் பதிப்பு – 2012

                                                                       நான்காம் பதிப்பு - 2014 

5..புலியூர் கேசிகன்           -                நற்றிணை பாகம் - 1

                                                                       முத்தமிழ் பதிப்பகம்,

                                                                   9யு, மேக்மில்லன் காலனி,

                                                                   நங்கைநலல்லூர்,

                                                                   சென்னை - 600061

                                                                      முதற்பதிப்பு – 2013

6. புலியூர் கேசிகன்         -                  நற்றிணை பாகம் - 1

                                                                      முத்தமிழ்  பதிப்பகம்,

                                                                   9யு, மேக்மில்லன்  காலனி,

                                                                   நங்கைநலல்லூர்,

                                                                    சென்னை - 600061

                                                                        முதற்பதிப்பு – 2013

7. புலியூர் கேசிகன்     -                       குறுந்தொகை,

                                                                        முத்தமிழ்   பதிப்பகம்,

                                                                     9யு, மேக்மில்லன் காலனி,

                                                                     நங்கைநலல்லூர்,

                                                                   சென்னை – 600061

                                                                       முதற்பதிப்பு – 2013

8. புலியூர் கேசிகன்     -                       ஐங்குநுறூறு (குறிஞ்சி, பாலை)

                                                                        AA BOOK WORLD,

                                                                    நம்பர்: 5|3, செல்வகணபதி கோயில் தெரு,

                                                                    உள்ளகரம்,       

                                                                    சென்னை - 600091

                                                                        முதற்பதிப்பு – 2013

9. புலியூர் கேசிகன்          -                   ஐங்குநுறூறு(முல்லை)

                                                                         AA BOOK WORLD,

                            நம்பர்: 5|3, செல்வகணபதி கோயில் தெரு,

                                                                     உள்ளகரம்,

                                                                    சென்னை - 600091

                                                                        முதற்பதிப்பு – 2013     

10. புலியூர் கேசிகன்     -                      ஐங்குநுறூறு(மருதம்,நெய்தலும்)

                                                                          AA BOOK WORLD,

                                                                     நம்பர்: 5|3, செல்வகணபதி கோயில் தெரு,

                                                                     உள்ளகரம்,      

                                                                     சென்னை - 600091

                                                                        முதற்பதிப்பு – 2013

11.புலியூர் கேசிகன்          -                  பரிபாடல்

                                                                         முத்தமிழ் பதிப்பகம்,

                                                                     9A, மேக்மில்லன் காலனி,

                                                                     நங்கைநலல்லூர்,

                                                                     சென்னை - 600061

                                                                         முதற்பதிப்பு – 2013

12.புலியூர் கேசிகன்          -                  சங்க இலக்கியம் – அகநானூறு                                

                                                                         களிற்றியானை   நிரை

                                                                         AA BOOK WORLD,

                                                                      நம்பர்: 5|3,செல்வகணபதி கோயில் தெரு,

                                                                      உள்ளகரம்,     

                                                                      சென்னை - 600091

                                                                          முதற்பதிப்பு – 2013

13. புலியூர் கேசிகன்        -                    சங்க இலக்கியம்  - அகநானூறு  

                                                                          மணிமிடை   பவளம்) 

                                                                           ஆனந்த் எண்டர்பிரைசஸ்,

                                                                       நம்பர்:14-21, நேரு காலனி,

                                                                       18 - வது தெரு,

                                                                        பழவந்தாங்கல்,

                                                                        சென்னை - 6000114

                                                                           முதற்பதிப்பு – 2013

14. புலியூர் கேசிகன்         -                    அகநானூறு - நித்திலக் கோவை 

                                                                           முத்தமிழ் பதிப்பகம்,

                                                                       9D, மேக்மில்லன் காலனி,

                                                                        நங்கைநலல்லூர்,

                                                                       சென்னை - 600061

                                                                           முதற்பதிப்பு – 2013

15..பக்தவச்சல பாரதி.சீ   -                  பண்பாட்டு   மானிடவியல்,

                                                                           மணிவாசகம் பதிப்பகம்,

                                                                           55,இலிங்கத் தெரு,

                                                                           சென்னை-600001

                                                                           முதற்பதிப்பு-1989

16.முனைவர் சுதந்திரம் கா.ப.    -   பொதுச் சடங்ககளில் இலக்கியங்கள்,

                                                                           பாடுமீன் பதிப்பகம்,

                                                                            புதிய எண்:16 பழைய எண்: 32

                                                                            முதல் தளம், இரண்டாவது  வீதி,        

                                                                            பாலாஜி நகர், ராயப்பட்டை,

                                                                            சென்னை – 600 014.

                                                                            முதற்பதிப்பு – செப்டம்பர் 2002 

17.காந்தி.கா.                      -                     தமிழர்  பழக்கவழக்கங்களும்,                   

                              நம்பிக்கைகளும்,

                                                                             உலக தமிழராய்ச்சி நிறுவனம்,

                                                                        இரண்டாவது  முதன்மைச்  சாலை,

                                                                        மையத் தொழில்நுட்பப் பயிலக

                                                                             வளாகம்,

                                                                        தரமணி,                    

                                                                             சென்னை-20

                                                                             முதற்பதிப்பு-1980.

18.முனைவர் தட்சிணாமூர்த்தி.அ-தமிழர் நாகரிகமும் பண்பாடும்

                                                                              யாழ் வெளியீடு

                                                                              தென்றல் குடியிருப்பு

                                                                              மூன்றாவது தெரு

                                                                              மேற்கு அண்ணாநகர்

                                                                              சென்னை  - 600 040

                                                                              மறுபதிப்பு – 2005

19.ஈ.வெ.ரா              -                                     பண்பாட்டு சிந்தனைகள் தொகுதி – 1

                                                                         பல்லவி பதிப்பகம்,

                                                                              ஈரோடு                        

                                                                             முதற்பதிப்பு -1994