ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

அறம் போற்றும் வாழ்வியல்

முனைவர் கோ.வசந்திமாலா 13 Oct 2020 Read Full PDF

முனைவர் கோ.வசந்திமாலா,இணைப்பேராசிரியர், பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி,பீளமேடு,கோவை.

ஆய்வுச்சுருக்கம்

                திருக்குறள் எல்லாக் காலத்திலும் மனித வாழ்வுக்கு ஏற்றவாறு அறக்கருத்துக்களை இரண்டு வரிகளில் பதிவு செய்திருக்கும் உயரிய நூலாகும். இதில் மனிதன் தன் வாழ்நாளில் தன்நிறைவுடன் வாழ்வதற்க்கு ஏற்ற கருத்துக்களை இக்கட்டுரையின் வழி ஆய்வதுடன் மேலும் சில கடமைகளையும் ஆற்றவே படைக்கப்பட்டுள்ளான். நிலையில்லாத இந்த வாழ்வில் நிலையான செல்வம் அறம். அத்தகைய வாழ்வியல் அறச்சிந்தனைகளை வள்ளுவரின் நூல் வழி ஆய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

 

திறவுச் சொற்கள்

வள்ளுவர் குறிப்படும் அறம் வள்ளுவர் தரும் அற இன்பம; இல்லறத்தில் அறம் அன்பின் வழியது அறம் கொடையும் ஈகையும் உண்மையே உயரிய அறம்.

 

முன்னுரை

உலகத்தின் தலைசிறந்த நூலாகத் திருக்குறள் போற்றப்படுகிறது. உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது இந்நூலின் தனிச்சிறப்பு என்று குறிப்பிடலாம். இந்நூல் மக்கள் வாழ்க்கையோடு முழுக்கமுழுக்க ஒன்றியதாகும். ஒவ்வொரு அதிகாரமும் மனிதனுக்கு ஒவ்வொரு அறத்தை போதிக்கிறது. எனவேதான் பாரதிஇ "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" (பாரதியார் கவிதைகள்.தேசீய கீதங்கள்.தமிழ்நாடு.பா.எண் : 07)என்று புகழ்கின்றார். ஒவ்வொரு குறளும் மனிதசமுதாயத்தின் நாகரிகத்தைப் பகர்கிறது. காலத்தை வென்றது. கருத்துக்கள் எந்த ஒரு சமுதாய(அ)நாட்டு மக்களும் எந்தக்காலத்திலும் ஏற்றுக்கொண்டு வாழும் பண்புடைய கருத்துக்களை வகுத்துக் கூறுவதால் இன்றும் வள்ளுவம் காலத்தையும் இயற்கையையும் வென்று வாழ்ந்து வருகின்றது. அறமும் வீரமும் இன்பமும் அரசியலும் புகழும் ஈகையும் அல்லாத மானிடவாழ்வு என்றுமே கிடையாது.

     இத்தயை அறிய அறவாழ்வினை உணர்த்தும் அறக்கருத்துக்கள் திருக்குறள் எங்கும் பரந்து காணக்கிடைக்கின்றன. எனினும் ஆய்வுச் சுருக்கம் கருதி திருக்குறள் என்ற கடலில் இருந்து சில துளிகளை மட்டும் தொட்டுக்காட்ட முயல்கிறேன.;

திருக்குறளில் வள்ளுவர் கூறும் அறம்

                         திருக்குறளில்  அறத்துப்பால்இ பாயிரம்இ இல்லறவியல்இ துறவறவியல்இ ஊழியல் என்ற நான்கு இயல்களாக அமைந்துள்ளன.  ஒவ்வொரு இயலும் தனக்கெனத் தனித்தனி  அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாகஇ இல்லறத்துக்கான அறங்களைப் பேசுவது இல்லறவியலாகவும்இ துறவறத்துக்கான அறங்களைப் பேசுவது துறவறவியல் எனவும் இல்லறவியல் துறவறவியலுக்கான வகைப்படுத்தலை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.. ஆனால் இப்படி எளிதாகக் கோடு போட்டுக் கொண்டு வாசிப்பது ஒருங்கிணைந்த வாசிப்பு அனுபவத்தைத் தருவதாக இல்லை. இல்லறவியலில் வைக்கப்படும் அறக்கருத்துக்களுக்கும் துறவிறவியலில் வைக்கப்படும் கருத்துக்களுக்கும் அப்படியொன்றும் பாகம் பிரிப்பது போல் பிரித்து விட முடியாது. எடுத்துக்காட்டாக கள்ளாமைஇ வாய்மைஇ வெகுளாமைஇ இன்னா செய்யாமை என்று துறவறவியலில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் கருத்துக்கள்இ துறவறவியலுக்கு மட்டுமே உரித்தானதாக அமையும்.

வாழ்வியல் அறம்

வாழ்வியல் - வாழ் – என்றால் முறைமை(அ) ஒழுங்கு என்றும்; வாழ்தல் என்றால்- சிறந்திருத்தல் என்றும் கௌரா தமிழ் அகராதி பொருள் தருகிறது. மனித வாழ்வு மாண்புபெற மனிதன் அறம் போற்றுதல் அவசியம். அறம் செய்க என்பது செயல் சார்ந்தது. அறம் செய்ய விரும்புவது என்பது மனம் சார்ந்தது. அறம் செய்யும் எண்ணத்தை மக்கள் மனங்களில் விதைக்கவேண்டும் என்பதற்காகத்தான் ஒளவை அறம் செய்ய விரும்பு என்று கூறியிருக்கிரார்.  இதுவே மனமாசு அகற்றுவதோடு சமுதாயத்தில் அறம் ஓங்கி உயர்ந்து நீதியான சமுகம் மலரும் என்ற நல்ல நோக்கத்தைப் பதிவு செய்கின்றது. மக்கள் அறத்தின் வழியில் இன்பம் துய்க்க விரும்பினால் பிறரோடு செய்யும் போரிலும் அறம் பிறழக்கூடாது என்று நம் சங்கத் தமிழர்கள் விரும்பினார்கள். இதனைப் புறம்

         “ஆவும் ஆன்இயற் பார்ப்பன மாக்களும்

          பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்

          தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

          பொன்போல் புதல்வப் பெறாஅ தீரும்

          எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்என

         அறத்தாறு நுவலும் ப10ட்கை” (புறநாநூறு.பா:எண் 9)

என்று கூறுவது தமிழரின் பேரறமாகும். அதாவது மிகவும் மென்மைத்தன்மையுடையது பசு.அதேதன்மை கொண்டவர்கள் பார்ப்பனர் பெண்டிர் எனவே அவர்களைப் பாதுபாப்பது ஒருஅரசின் அரசியல்அறம். மேலும் பிணியுடையவர்களால் போர்த்தொழிலில் ஈடுபடமுடியாது. பிள்ளைப்பேறு பெறாதவர்கள் போன்றவர்களிடம் இரக்கமும் அன்பும் பாராட்டுவது மிகச்சிறந்த மனித அறமும் கடமையும் ஆகும். என்ற உன்னதமான அறச்சிந்தனையைக் காட்டுகிறது ஒளவையாரின் இந்தப்பாடல் வரிகள்.

மேலும் மனக்கோட்டமும் ஆசையும் வெகுளியும் கடுஞ்சொல்லும் ஆகிய இந்நான்கினையும் ஒழித்து நடப்பது யாதொன்றும் அது அறமென்று சொல்லப்படும். இதனை வள்ளுவம்

     அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம் (குறள் எண் :35)

என்று குறிப்பிடுகின்றது. அழுக்காறு என்பது பிறர் ஆக்கப் பொறமையும் அவா என்பது புலன்மேற்செல்லுவது வெகுளி என்பது அவை ஏதுவாகப் பிறர்மேல் ஏற்படுவது இன்னாச்சொல் என்பது அது பற்றிக் கூறும் கடுஞ்சொல் இவற்றிலிருந்து நீங்கியிருத்தலே அறம் என்கிறார் பரிமேலழகர்.

இதில் அழுக்காறு காரணமாக பொறமையும் அதன் விளைவாக அவாவும் இதன் காரணமாக புலன்மேற் செல்லுவதும் இதன் விளைவாக கோபமாகிய வெகுளியும் இதனால் கடுஞ்சொல்லும் தோன்றுகின்றது என்ற வள்ளுவர் கூறும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன என்றமனிதத்தின் உளவியல் கண்டறிய முடிகின்றது.

பண்டையத் தமிழரின் வாழ்வியல் அறம்

    சமூக நெறிமுறைகளை அறம் பொருள் இன்பம் என மூன்றாகப் பகுத்துக் கூறுவது பண்டையத் தமிழ் மரபு. இதில் அறம் என்பது தலைசிறந்த ஒன்றாக விளங்கியது என்று சொன்னால் மிகையாகாது. எனவே தான்

 “இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு” ( தொல்.களவியல்.நூற்பா.எண் :1)

என்று கூறுகிறது தொல்காப்பிய நூற்பா. இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும் இன்பத்தைத் தழுவி நிற்கும். இன்ப நுகர்ச்சிக்குத் தேவைப்படுவது பொருள். அப்பொருள் அறவழியில் வரவேண்டும் இத்தகைய பண்டைய தமிழரின் வாழ்வியல் அறநெறிப்பட்டயாகும். இல்லறம் மேற்கொண்ட தலைவன் தான் ஈட்டிய பொருளைத் தக்கார்க்குப் பகுத்துக் கொடுத்து வாழும் வாழ்க்கையே சிறந்த அறமுடைய வாழ்க்கை என்று கருதினான். அதனை விடுத்துத் தன் தாயத்தால் வரும் செல்வத்தைக் கொண்டு  இன்பம் நுகர்வானாயின் அவன் இறந்தவனாகவே கருதப்படுவான. மேலும் இச்செயல் இரந்து உண்டு வாழ்வதை விட இழிவானதாகும் என்று கருதினர். எனவே தான் இத்தகைய அறவாழ்வினை மேற்கொண்டனர். இதனைக் குறுந்தொகை

“உள்ளது சிதைப்போர் உளரெனப்படாஅர்

   இல்லோர் வாழ்க்கை இரவினும் இளயிவுஎனச்

சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்

        சென்றனர் வாழி தோழி” (குறுந்தொகை.பா:எண்:283)

என்று பதிவு செய்யக் காணலாம்.

    மேலும் பொருள் இல்லார்க்கு ஈதலே சிறந்த அறம் அதனை விடுத்துத் தான் துய்ப்பது அறமற்ற செயல் என்று கருதியதோடு அத்தகைய வாழ்க்கையை வாழ்ந்தும் காட்டினர் என்பதனை

    “ஈதலும் துய்த்தலும் இல்லோக்கு இல்எனச்

  சேயவினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு

  அம்மா அரிவையும் வருமோ?”(குறுந்தொகை.பா.எண்.63:1-3)

என்ற குறுந்;தொகைப் பாடல் சுட்டிக்காட்டுவதை  வழி அறவாழ்வின் மாண்பினை அன்றைய மக்கள் வாழ்வின் நனிநாகரீகமாக மேற்கொண்டு வாழ்தனர்.என்ற மக்களின் உயர்ந்த பண்பாட்டினை அறியமுடிகின்றது. அத்தகைய அறத்தை 'அறம் செய்ய விரும்பு'என்ற ஔவையின் வாக்குகொண்டு அறிகிறோம். இதனைத்தான் வள்ளுவர் (ஒளவையார்.ஆத்திச்சூடி.பா.எண்.1)

“சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு”(குறள் எண்:31)

என்று அறத்தின் இலக்கணம் இயம்புகிறார்.

    அதாவது அறம் சிறப்பையும் அளிக்கும். சேல்வத்தை அளிக்கும். ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மை தருவது வேறு எதுவும் இல்லை என்ற உறுதிப்பொருளை எடுத்துகாட்டுகிறார் வள்ளுவர். எனவே ஒரு நாட்டை ஆளும் அரசனது இயல்பைக் கூறும்போது

“படைகுடி கூழ்அமைச்சு  நட்புஅரண்  ஆறும்

உடையான் அரசருள் ஏறு” (திருக்குறள்.எண்:381)

என்றுகுறிப்பிடுகின்றார்.

படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனேஅரசருள் ஆண் சிங்கம் போன்றவன். என்று அரசனது பிற இயல்புகளைக் குறிப்பிடும் வள்ளுவரின் சிந்தனையில் அறம் செய்யும் அரசனே இத்தகை பிறவற்றை பெறமுடியும் என்பதனை சுட்டுகிறார்.

இன்பத்தின் இருப்பிடம் வள்ளுவம்

                ஒரு இல்லறம் நல்லறமாக அமைய வேண்டுமெனில் அவ்வில்லத்தில் பெண் அறஉணர்வும் ஒழுக்கமும் நிறைந்தவளாக இருக்கவேண்டும்.  இதனையே  வள்ளுவர்

“இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை”(திருக்குறள்.எண்:53)

என்று பெண் மாண்புடையவலானாள்  அவ்வில்லத்தில் இல்லாதது எதுவுமே இல்லை என்று உயர்த்திக்காட்டும் பெண்ணின் பெருந்தகைமை குணங்கள் இன்றும் என்றும் எல்லோரும் ஏற்கத்தக்கதாகும்.

இல்லறத்தில் நல்லறம்

                "இல்லறம் இல்லையேல் நல்லறம் இல்லை" என்பர் சான்றோர். அனைவரிடத்திலும் பழகுதல்; புதிதாக வரும் விருந்தினர்க்கு உணவிட்டு உதவிசெய்தல் எப்போதும் இனிய சொற்களையே இயம்புவது பிறர் செய்த நன்றியை மறவாமல் மனத்தில் வைத்திருப்பது. நீதிக்கு மாறாக நடக்காமல் நடுநிலைமையிலேயே நடப்பது. கெட்ட வழியில் செல்லாமல் நல்லவழியிலே அடங்கிநடப்பது. எந்த நெருக்கடி நேர்ந்தாலும்  நல்லொழுக்கத்தைக் கைவிடாமல் வாழ்வது.  பிறர்புரியும் தீமைகளைக் கண்டுஅஞ்சி அவைகளைச் செய்யாமல் இருப்பது.  இன்னபிற ஆண்களும் பெண்களும் பின்பற்றவேண்டிய இல்லறக்கடமைகள் என்று வள்ளுவர் வாய்மொழிவதைக் காணலாம். சான்றாக

“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு” ( திருக்குறள்.(பரிமேலழகர் உரை)எண்:81)

என்ற குறளைக் கூறலாம். 

      அதாவது ஒருவன் இல்லறத்தில் வாழும் வாழ்க்கைப் பொருளுடைய வாழ்கையாக அமைய வேண்டும் எனில் (அ) அவனது கடமை யாது எனில் விருந்து ஓம்பிவாழ்வதே ஆகும். என்று தனி மனித வாழ்வை பொருளுடைய வாழ்வாக வாழ அறம் கூறுகிறார்.                மேற்கூறிய வள்ளுவரின் வாழ்வியல் கருத்துக்களை நம் சங்கப்பாடலான புறநானூற்றில்

“உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினும் இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே முனிவிலர்

துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

அன்னமாட்சி அனைய ராகித்

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே”  (புறனாநூறு.பா:எண்:182)

 என்ற வரிகளில் ஒப்பிட்டு உணரலாம்.

   அதாவது  சங்க கால மக்கள் அமிழ்தம் ஆயினும் தனித்து உண்ணார். புழி எனில் அஞ்சுவர்.புகழ் எனில் உயிரையும் கொடுப்பர.; உலகையே பெரினும் பழிச் செயல்களைச் செய்ய மாட்டார்கள். மேலும் தனக்காக வாழும் சுயநல வாழ்க்கையை ஒருபொழுதும் விரும்பமாட்டார்கள்.புறர்நலம் போற்றி வாழும் வாழ்வையே விரும்பி ஏற்றனர். என்ற சங்ப்பாடல்      வாழ்விளையும் வள்ளுவரின்

                           “விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

           மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று”(குறள்எண் : 82)

 என்ற குறளையும் ஒப்பிட்டு நோக்கும் பொழுது வாழ்வின் உயரிய அறம் புலப்படும்..

அன்பின் வழியது உயிர்நிலை

                அன்பு என்று சொல்லப்படுவது கருங்கல் போன்ற கடினமான மனத்தையும் கனிபோன்று இனிமையாக்கும் பண்புடையது என்பது எக்காலத்திலும் பொருந்தும் உண்மையும்ää நிலைப்பேறுடையகருத்து. மனிதனின் உடல்வளர்ச்சியுடன் அன்பின்வளர்ச்சியும் அமையவேண்டும். அப்போதுதான் பிறருக்கு நன்மை செய்து சிறப்புடன் வாழமுடியும். அத்தகைய வாழ்க்கைதான் பண்பட்டää நல்லபண்பு நிறைந்த வாழ்க்கையாக அமையமுடியும் என்பதனை

“அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு” (திருக்குறள்.எண்:80)

என்ற குறளின் வழி அறியலாம். சான்றாக சிலம்பில் பாண்டிய மன்னன் தவறு உணர்ந்து "யானேகள்வன்" என்று கூறி அவர் உயிர்துறக்க அவள்மனைவியும் உடன்மாண்டு போனாள். எனின் அன்பின் வழியது உயிர்நிலை என்ற அன்பின் உயரிய எல்லையை உணர்ந்து வாழ்வியல் உண்மையை அறிந்து வாழ வழிவகை செய்வதை அறியலாம்.

ஈகையும் - கருணையும்

                மனித வாழ்வில் ஈகை என்பது மனித இனம் தோன்றியது முதல் இன்று வரை கடைபிடிக்கப்படும் தனி அறம் என்றே கூறலாம். ஈகைப் பண்பு இல்லையெனில் வறுமை என்றபாவி நாட்டுமக்களின் வயிறுள் புகுந்து அவர்களை உயிரற்ற ஜடமாக்கிவிடும் என்ற உண்மையை

              “இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்

       இன்மையே இன்னா தது” (திருக்குறள்.எண்:1041)

என்ற குறளில் பதிவுசெய்கிறார்.

எனவே வறுமை என்ற கொடிய துன்பம் மிகவும் கொடியது. இதனைப் பொக்க வேண்டும் எனில்

ஈகை குணம் உடையவர்களாக மக்கள் வாழவேண்டு;ம் இது வறுமையை மடடும் போக்குவதுடன்

அறச் சிந்தனையையும் வளர்க்கிறது. புகழையும் தருகிறது. என்பது உள்ளிட்ட கருத்துக்களையும்

பெறமுடிகின்றது. மேலும் இதனையே ஔவையாரும் 

  “கொடியது கேட்கின் நெடிவெல் வேலோய்

  கொடிது கொடிது வறுமை கொடிது

  அதனினு கொடிது இளமையில் வறுமை

  அதன்னும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்

  அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்

  அதனினும் கொடிது இன்புற அவர்கையில் உண்பது தானே”(ஒளவையார் தனிப்பாடல் திரட்டு பா:எண் -55)

என்ற தனிப்பாடலில் பதிவு செய்யக் காணலாம். அதாவது கொடியது வறுமையே. அதிலும் இளமையில் வறுமை.அதனினும் கொடிது அன்பு

இல்லாத பெண்டிர். ஆதனைக் காட்டிலும் கொடிது அவர் கையால் இன்புற உண்பது.என்று

குறிப்பிடு;பாடலில் வறுமையின் உச்ச கட்டத்தினைத் தொட்டுக் காட்டியுள்ளார்.

வாய்மையே வளமை

                வாய்மை எனப்படுவது சொல்லின் தூய்மையை உணர்த்துவதாகும். மனத்தூய்மையை நாம் உண்மை என்று கூறுகிறோம்.  இதைப்போலவே செயல் தூய்மையையும் மெய்மை என்று அழைக்கிறோம். நல்லபண்பாளர்கள் இந்த உலகத்து மக்கள் அனைவராலும் போற்றப்படுவார்கள். பாராட்டவும் படுவார்கள். ஆகவே உள்ளத்தால் பொய்யாது ஒழுகும் உயர்பண்பாளர்களாக விளங்கிட வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்து. இவ்வாறு வாழும்போது அவர்கள் இந்த உலகத்து மக்களின் உள்ளம் எல்லாம் நிறைந்திருப்பார்கள் என்பதனை

“உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன்”  (திருக்குறள்.எண்:294)

என்கிறார். இத்தகைய உண்மையான வாழ்வின் பயனாக "மகாத்மா" என்று உலக மக்கள் மனங்களில் நிறைந்து விளங்குவதை அனைவரும் அறிவோம்.

எனவே மனிதனாக வாழ்ந்த ஒரு ஆன்மா மகாத்மா நிலையை அடைய வேண்டும் எனில் அவ்வான்மா ஏதேனும் ஒரு அறத்தையாவது பின் பற்றினால் தான் தன் வாழ்வின் நோக்கத்தை அடைய முடியும் என்ற உண்மையானது பெற முடிகின்றது. மேலும் அறம் என்பது

"இருப்பதில் கொடுப்பது சிறப்பு என்றால்

    இருப்பதையே கொடுப்பது சிறப்பினும் சிறப்பு"

என்ற அகத்தியரின் வார்த்தைக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர்கள் தமிழர்கள். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என தனக்கென தனியொரு வரையறையை வகுத்துக் கொண்டு ஒழுக்க நெறியில் தான் மட்டுமே உயராதுää பிறரது நலனிற்காகவும் அயராது உழைப்பதே வாழ்வியல் அறமாகும். இவ்வாறு அறத்தின் வழி அகத்தைப் பண்படுத்தி வாழ்ந்தோரே தமிழர்கள். எனவே வள்ளுவர் வாய்மொழியை வாழ்வியலாக ஏற்று இவ்வையகம் சிறக்க மனித சமுதாயம் வாழ்வாங்கு வாழ அறம் செய்வோம்! ஒழுக்கம் ஏற்போம்! வறுமையொழிப்போம்!  வாய்மை கொள்வோம்!  வாழ்வாங்கு வாழ்வோம்!

 

பார்வை நூல்கள்

1.            திருக்குறள் பரிமேலழகர்உரை)

      கழக வெளியீடு.

      1.140 பிரகாசம் சாலை

      சென்னை. 1973.

2.            தொல்க்காப்பியம் (பொருளதிகாரம்)

       பேராசிரியர் உரை

       அண்ணாமலைப் பல்கலைக் கழகம். 1985.

3.            குறுந்தொகை

 போ.வே.சோமசுந்தரனார்

 சைவ சித்தாந்த நூற்பதிப்புக்; கழகம்.

 சென்னை – 600008.

 

4.            திருக்குறள்.ச.வே.சுப்பிரமணியம்

மணிவாசகர் பதிப்பகம். சேன்னை.1998.

 

5.            ஒளவையின் ஆத்திசூடி.

  தமிழ் நீதிச்செல்வம்.

  சாந்தா பப்பிகேசன்ஸ்..

 

6.            தனிப்பாடல் திரட்டு. முதற் பகுதி

 ஊரையாசிரியர் புலவர். அ . மாணிக்கம்.

   பூம்புகார் பதிப்பகம்.சென்னை – 600108.

 

    7.  பாரதியார் கவிதைகள் : பாரதியார்.

 மணிவாசகர் பதிப்பகம் . 2000.

 

8.              புறனாநூறு

திருநெல்வேலித் தென்னிந்திய

      சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடேட்..

      திருநெல்வேலி. சென்னை – 1. 1952.