ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சங்கஇலக்கிய தளத்தில் தமிழனின் இறைக்கொள்கை

முனைவர் ஜீ. பாண்டியலட்சுமி உதவிப்பேராசிரியர் (ம) துறைத்தலைவர் தமிழ்த்துறை வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி சுப்பிரமணியபுரம் வாசுதேவநல்லூர் தென்காசி மாவட்டம். 08 Dec 2020 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்

     உலகில் உள்ள உயிரினங்கள் யாவற்றையும் விட மனித உயிரினம் தான் பரிணாமவளர்ச்சியால் தன்னை மீட்டெடுத்துக்கொண்ட உயிரினம் என்று கூறலாம். இவ்அண்டத்தில் பலகோடி உயிரினங்கள் வாழ்ந்தபோதிலும் மனிதன் மட்டுமே பல வியக்க வைக்கும் செயல்களையும் படைப்புகளையும்ää கண்டுபிடிப்புகளையும் செய்யும் ஆற்றல் மிக்க உயிரினமாகக் காணப்படுகின்றான். இது யாராலும் மறுக்க முடியாத உண்மை. அத்தகைய வளர்சிதை மாற்றத்தால் மனித இனத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும் இம்மனித இனம் தன்னைவிட வலிமையான பொருள் ஒன்று உள்ளதாக இன்றுவரை எண்ணிக்கொண்டு இருக்கிறது. அந்த வலியுடைய பொருளுக்கு மனிதன் இட்ட பெயர்தான் இறை இறைவன் கடவுள் பரம்பொருள் என்பதெல்லாம். இவ்இறை என்னும் வலியுடைய பொருளின் மீதான நம்பிக்கை மனிதனிடத்து குறிப்பாக தமிழனிடத்து தொன்றுதொட்டு வழங்கி வந்துள்ளதா? அல்லது தமிழன் இறைக்கொள்கையை எங்ஙனம் வெளிப்படுத்தினான்? என்னும் வினாக்களுக்கு விடைகாணும் விதமாகவே இவ்ஆய்வு நகர்கின்றது. தமிழனின் முதல் இலக்கணம் என்று போற்றப்படும் தொல்காப்பியம் தமிழனின் இறைக்கொள்கைக்கு வித்திடும் விதமாக ஆங்காங்க இறை என்னும் பொருள் தரும் சொற்களைச் சுட்டிச் செல்கின்றது. அதுமட்டுமல்லாது தொல்காப்பியம் முழுமையும் காப்பியனார் பயன்படுத்தியுள்ள சில சொல்லாடல்களும் இதற்கு வலுவூட்டுகின்றன. குறிப்பாக மொழிபää என்மனார் புலவர்ää என்னும் சொல்லாடல்களைக் கூறலாம். ஏனெனில்ää ஒரு படைப்பாளன் தான் வாழுகின்ற சடுமதாயச் சூழலுக்கு ஏற்றாற்போலத் தன்னுடைய படைப்புகளில் வெளிப்படுவது இயல்பு. அத்தகைய படைப்பின் வழி படைப்பாளனின் சமூகச்சூழலை நாம் அறிந்துகொள்ள முடியும். எனவேதான் தொல்காப்பியரும் தன்னுடைய படைப்பான தொல்காப்பியத்தில் அங்ஙனம் வெளிப்படுகிறார் அல்லது வெளிப்படுத்தப்படுகிறார் என்று கூறமுடிகிறது. அதுபோலவே தமிழனின் வாழ்க்கைக் கண்ணாடியாக விளங்கும் சங்க இலக்கியங்களும் அவனது இறைக்கொள்கையை வெளிப்படுத்துகின்றன எனில் மிகையில்லை. நற்றிணை தொடங்கி புறநாணூறு வரை சங்ககாலத் தமிழ்ச்சமூகத்தை தெற்றென வெளிப்படுத்தி நிற்கின்றன. இவ்விலக்கியங்கள் வாயிலகத் தமிழன் தன் வாழ்க்கை முறையினையும் பண்பாட்டுக் கூறுகளையும் பின்பற்றிய நெறிமுறைகளையும் அவனுக்கேஉரிய பழக்கவழக்கங்களையும் தன் வருங்காலச் சந்ததியினருக்கு விட்டுச்சென்றுள்ளான் என்றே கூறலாம். இச்சங்கஇலக்கிய தளத்தின் வழியாகத் தமிழனின் இறைக்கொள்கையைத் தேடிச்செல்வதே இவ்ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

 

திறவுச்சொற்கள்

     இறைக்கொள்கை தமிழனின் இறைää இறைநம்பிக்கை இறையுணர்வு

சங்கஇலக்கியம்

 

இறைவன் - சொற்பொருள் விளக்கம்

     இறை அல்லது இறைவன் எனும் சொல்லுக்கு ஆன்றோர்கள் பலவாறு பொருள் கூறுகின்றனர். அங்ஙனம் இறைவன் எனுஞ்சொல்லுக்குப் பொருளாக

•    உள்ளேயும் வெளியேயும் இறைந்து கிடப்பவன் ஆதலால் இறைவன் எனப்பட்டான் என்றும்

•    காலத்தாலும் இடத்தாலும் நம்முள்ளும் நம்மைக் கடந்தும் இறைந்து கிடப்பவன் ஆதலால் இறைவன் என்றானான் என்றும் கூறுகின்றனர். எவ்வாறெனில்ää

•    கிணற்றிலிருந்து நீரை எடுத்து வயலுக்குப் பாய்ச்சும் செயலுக்கு நீர்இறைத்தல் என்பது பொருள். அதுபோல இறைவன் தன்னையே நமக்குள்ளாகப் பாய்ச்சுகிறான் என்பதால் இறைவன் எனப்பட்டான் என்று கருதுகின்றனர். அதாவது

•    கண்போலக் காப்பதால் கண்ணன் என்றும் அரண்போலக் காப்பதால் அரசன் என்றும் போற்றப்பட்டான் என்று கருதுகின்றனர்.

•    அங்ஙனம் இறைவனை வணங்கும்போது தலைதாழ்த்தி இறைஞ்சுகிறோம். அவனிடம் அருளை பொருளை அமைதியை வேண்டி இறைஞ்சுகிறோம். அதனால் இறைவன் என்றும் வழங்கப்பட்டான்.

•    இவ்இறை எனும் சொல்லுக்கு – அரசன் தலைவன் கை நிலவரி ஆசனம் (இருக்கை) இழு சிதறவிடு என்று அகராதிகள் பொருளுரைக்கின்றன.

இறை – அரசன்

இறை – தலைவன்

இறை – கை

இறைப்பணம் - நிலவரிப்பணம் (இறைநிலம் - இறையிலியாகத் தந்தநிலம் - அந்நிலத்திற்கான வரி)

     இறை – ஆசனம் (அமரும் இருக்கை)

     இறை - இழு (தண்ணீர் இறை)

     இறை – சிதறவிடு (தானியத்தை இறைக்காதே – தானியத்தைச் சிதறாதேää பணத்தை வீணே இறைக்காதே

                        என்றும் பொருள்கொள்ள முடியும்)

என்று பலவாறு பொருள் கூறப்படுகின்றது.

கடவுள் சொற்பொருள் விளக்கம்

     உள்ளத்தைக் கடத்தலால் கடவுள் என்றாயிற்று. கடவுள் என்னும் சொல்லை கட10வுள் என்று பிரித்தால் கட என்பது கடந்து செயல்படுவது என்றும் வுள் என்றால் உள்ளே இருந்து செயல்படுவது என்றும் பொருள் உணர்த்தப்படுகின்றது. கடந்து செயல்படுவது என்பதை ஜீவாத்மாவாகக் கொள்ளலாம். அதுபோல உள்ளே இருந்து செயல்படுவது என்பதை பரமாத்மாவாக் கொள்ளலாம். இத்தகைய ஜீவாத்மா பற்றித் திருமூலர் பின்வருமாறு தெளிவுறுத்துகிறார்.

           “சீவன் என்சிவன் என்னவே றில்லை

           சீவனார் சிவ னாரை அறிகிலர்

           சீவ னார்சிவ னாரை அறிந்;தபின்

           சீவனார் சிவனா யிட்டு இருப்பரே” என்னும் வரிகள் சீவன் என்னும் உயிர்தான் சிவன் என்னும் இறைவன் என்றும் அவ்வுயிராகிய சிவனை யாரும் அறியமுடிவதில்லை. அவர் உயிராகிய சீவன்தான் சிவன் என்னும் இறைவன் என்று அறிந்துவிட்டால் அதன்பின்னர் சீவனாகிய உயிரும் சிவனாகிய இறையும் ஒன்றாக இருப்பர் என்று பொருள் உணர்த்துகின்றன. இதன்மூலம் கடவுள் என்னும் சொல் உணர்த்தும் பொருளை அறியமுடிகின்றது. மேலும் இவ்இறைப்பொருளைக் கண்களால் காணமுடியாது என்னும் பொருள்படப் பின்வரும் பாடல் வரிகள் உணர்த்துகின்றன.

           “கரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான்

           பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்

           அருந்தவர்க் கல்லால் அனுகலு மாகான்

           விரைந்து தொழப்படும் வெண்மதி யானே” என்று இறைவன் கண்களுக்குப் புலப்படமாட்டான் என்றும் அவன் அருந்தவம் மேற்கொள்வார்க்கன்றி வேறு ஒருவரிடத்தும் அனுகமாட்டான் என்றும் பொருள் உணர்த்திச் செல்கின்றன.

பரம்பொருள் சொற்பொருள் விளக்கம்

     ‘பரம்’ என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் (எனர்ஜி) நுநெசபல என்று பொருள். அதுபோல் ‘பொருள்’ எனும் சொல்லுக்கு ஆங்கிலத்தில் ஆயவவநச என்று பொருள். ஆங்கிலத்தில் எனர்ஜி ஒலிக்குறிப்பிற்கு சக்தி என்றும்ää மேட்டர் என்ற ஒலிக்குறிப்பிற்கு செயல் என்றும் பொருள் கூறலாம். அதாவது ஆயவவநச என்பது விசயம் என்று பொருள் தரினும் விசயம் என்பது செயல்களின் வெளிப்பாடு. எனவே செயல்கள் ஏதும் நடக்கவில்லை என்றால் நடவாத அச்செயல் குறித்துப் பேசுவதற்கு விசயம் இல்லை என்றுதான் பொருள் அல்லவா. அதனாலேயே மேட்டர் என்ற ஒலிக்குறிப்பினுக்கு செயல் என்பதைப் பொருளாகக் கருதமுடிகின்றது. இதுவே “சக்தி இல்லையேல் சிவம் இல்லை” என்ற தத்துவத்திற்கான கருவாக அமைந்துள்ளது என்பதும் புலனாகிறது.

மேலும் பரம் எனும் சொல்லுக்கு – திருமால் உறையும் இடமான வைகுண்டம் என்றும் உடல் கேடயம் உடற்கவசம் குதிரைக்கலனை அதாவது குதிரையின் மேல் அமரும் இருக்கை அத்தி என்பன போன்ற பொருள்களும் கூறப்படுகின்றன.

இத்தகைய பரமாகிய இறையை எண்ணுவதால் கிட்டும் மோட்சம் திவ்யம்ää பிறவிநீக்கம்ää மேவிடம் போன்ற பொருள்களையும் வழங்குகின்றது. இவ்வாறு பரம்பொருள் எனும் சொல் இறைவனைக் குறிக்கும் சொல்லாக விளங்குவதை உணரமுடிகின்றது.

ஏன் இறைவன் எனும் பொருள் மனிதனுக்குத் தேவைப்பட்டது? அல்லது தேவைப்படுகிறது?

     மனிதன் முதன்முதலாக எவற்றை எல்லாம் கண்டு திடுக்கிட்டானோ அவற்றை எல்லாம் தன்னைவிட (சக்தி) வலிமையில் உயர்ந்தது என்று நம்பினான். அதனால் தான் அதனிடமிருந்து அவன் தள்ளி நின்றான். எப்படி பணத்தால்ää புகழால் கல்வியால் உயர்ந்தவரிடத்துää சாதாரணப்பட்டவன் தள்ளி நிற்பானோ அதைப்போல இறை சக்தியிடத்தும் அவன் தள்ளியே நின்றான் எனக் கூறலாம். அதனை உணரும்போதெல்லாம் வியந்தான். மிரட்சி கொண்டான். வலியில் உயர்ந்த ஏதோ ஒன்று தன்னை வழிநடத்துவதாக எண்ணினான். அதனால் அதனை வணங்கினான். அதற்கு இறைவன் கடவுள் பரம்பொருள் என்றெல்லாம் பெயர்கூறிப் புனிதப்படுத்தினான். அதனைப் புனிதமானதாக உணர்ந்தான் உயர்த்தினான்.  

எப்போது மனிதன் இறைவன் எனும் பொருளை ஏற்கிறான்? அல்லது அதற்கு உருவம் பெயர் கொடுக்கக் காரணம் என்ன?

     மனிதன் இவ்வுலகைக் காண ஆரம்பித்த நாட்கள் முதலாக இன்றுவரை இயற்கையின் சூட்சமங்களை அவனால் அறியஇயலவில்லை. காரணம் அவனது கண்களுக்கு இயற்கையின் சூட்சமங்கள் தெரிவதில்லை. இங்ஙனம் கண்களுக்குத் தெரிகின்ற மற்றும் தெரியாத இயற்கைப் பொருட்கள் எனும் இவ்விரண்டின் மீதும் கொண்ட அச்சம்தான் கடவுள் எனும் பொருளை மனிதன் ஏற்கக் காராணமாகின்றது.

     அதாவது ஓடுகின்ற ஆறு எரிகின்ற நெருப்பு இடி மின்னல் மழை இல்லா வானம் ஆகியனவற்றை அவன் காண்கின்றான். காற்றை உணர்கின்றான். இவை யாவும் அவனுக்கு தேவையானதாக அழகானதாக விளங்குகின்றது. ஆனால் சில நேரங்களில் இயற்கையின் சூட்சம வெளிப்பாடுகளானää காட்டாற்று வெள்ளம் பற்றி எரிகின்ற காட்டுத்தீ பலத்த இடியுடன் கூடியமழையைத் தரும்போது வானத்தின் அகோரமான தோற்றம் புயல் சூறாவளி கடலின் கொந்தளிப்பு நிலநடுக்கம் அதனால் ஏற்படும் பிளவு இவை யாவும் மனிதனை மிகுந்த அச்சம் அடையச் செய்;கின்ற பொருள்களாக மாறுகின்றன. இவையாவும் நிகழுகின்ற அந்த சமயத்தில் மட்டுமே கண்களுக்கு அவ்அகோரமான தோற்றங்கள் தோன்றுகின்றன. ஆனால் மற்ற நேரங்களில் இவை கண்களுக்குத் தெரிவதில்லை. அதனால் தான் அவனுக்கு அவற்றின் மீது இருந்த அச்சஉணர்வு ஏற்படுகின்றது. இவ்அச்சஉணர்வே அதே பொருள் மீதான நம்பிக்கையாகவும்ää பக்தியாகவும் மாற்றம் அடைகின்றது.

இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால்ää இருளில் செல்கின்றோம். நாம் செல்லுகின்ற பாதையில் கிடக்கும் கயிறைப் பாம்பு என்று எண்ணி அச்சம் கொள்கின்றோம். சில நேரங்களில் நம் நிழலைக் கண்டு நாமே அச்சம்கொள்வதும் உண்டு. பின்னர் வெளிச்சம் வந்ததும் பாம்பு என்று எண்ணியது கயிறாகவும் கருத்த உருவமாகத் தெரிந்தது நிழல் என்பதும் புலப்படுகின்றது.

     இங்ஙனம் கண்களுக்குப் புலப்பட்டவுடன் அவற்றின் மீதிருந்த அச்சஉணர்வு குறைகின்றது. இதனாலேயே மனிதன் இறைவன் எனும் ஒரு வலியுள்ள பொருளை அதன்மீது இருந்த அச்சத்தால் அதற்கு எதிர் செயலான தன்னுடைய துணிச்சலைக் கைவிடுகின்றான். மாறாக அதனால் தனக்கு ஏதேனும் நன்மை நேரும் என்ற நம்பிக்கை கொண்டு அத்தகைய சக்திக்கு உருவமும் பெயரும் கொடுத்துத் தன் அச்சஉணர்வைப் போக்கிக்கொள்ள அவற்றை வழிபடலாயினான் என்று ஒருவாறு வரையறை செய்யலாம்.

தொல்காப்பியம் சுட்டும் இறைக்கொள்கை

     சங்கஇலக்கிய தளத்தில் எத்தகைய ஆய்வு மேற்கொள்ளினும் தொல்காப்பியத்தைத் தொட்டுச் செல்லாதிருக்க இயலாது. ஏனெனில்ää தமிழ்மொழியின் முதல் இலக்கணமும் முழுமையாகக் கிடைத்ததுவும் தொல்காப்பியமே. அத்தகைய இலக்கணம் தமிழனின் இறைக்கொள்கையைப் பதிவு செய்துள்ளதா? என்று ஆராய்கையில் இலக்கணம் என்பது இலக்கியம் தோன்றிய பின்னர் தோன்றியதா? அல்லது இலக்கணத்தை அடிப்படையாகக்கொண்டு தான் இலக்கியங்கள் படைக்கப்பட்டனவா? என்ற கேள்வி கண்முன் நிற்கிறது. இக்கேள்விகளுக்கு விடையாகää 

           “இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே

           எள்ளின்று ஆகில் எண்ணெயும் இன்றே

           எள்ளினின்று எண்ணெய் எடுப்பதுபோல

           இலக்கியத் தினின்று எடுபடும் இலக்கணம்” என்று அகத்தியப்பாடல் ஒன்று விளம்புகின்றது. அதாவது எள் எனும் எண்ணெய்வித்து இருந்தால்தான் அதிலிருந்து எண்ணெய் எடுக்கமுடியும். அதுபோல இலக்கியம் என்பது இருந்தால்தான் இலக்கணம் வரையறை செய்ய முடியும் என்று உணர்த்துகிறது.

உதாரணமாகää ஒரு புதுமனத்தம்பதியிரிடத்து விரைவில் ஒரு பெயரக்குழந்தையைப் பெற்றுக்கொடு என்றுதான் கூறமுடியுமே அன்றி இத்தகைய கண் மூக்கு கைகால்களுடன் கூடிய வடிவுடன் குழந்தையைப் பெற்றுக்கொடு என்று கூறுவது ஏற்புடையது ஆகாது. ஏனெனில் குழந்தை பிறந்த பின்னரே அதன் கண் மூக்கு என உடல் அங்கங்கள் அதன் தோற்றப்பொலிவு போன்ற பண்புக் கூறுகளை எடுத்துக்கூற இயலும். அதுபோலவே இலக்கியங்கள் படைக்கப்பட்ட பின்னரே அதில் உள்ள மொழிநடை அணிநயம் பொருள்வளம் சொற்கோவை யாவற்றையும் சீர்தூக்கிப்பார்த்து இனி இலக்கியங்களில் எவ்வௌற்றைப் பின்பற்ற வேண்டும் எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று விதிமுறைகளை எல்லைகளை வரையறைகளை உருவாக்க இயலும். அங்ஙனம் இலக்கியங்களின் பின்னர் படைக்கப்பட்டது தான் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்கள் என்று நாம் தெளிவுறலாம்.

     தொல்காப்பியர் எழுத்து சொல் பொருளுக்கு இலக்கணம் வகுத்துள்ளார் என்பது யாவரும் அறிந்ததே. இதில் பொருளுக்கு இலக்கணம் கூறும்போது அகத்திணையை முதலில் விளக்குகின்றார். அகத்திணைகளை ஏழாகப் பகுக்கின்ற தொல்காப்பியர் அவற்றுள் ஐந்துதிணைகள் மட்டுமே நிலம் உடையவை என்றும் பகுத்துரைக்கின்றார்.

           “நடுவண் ஐந்திணை நடுவணதுஒழியப்

           படுதிரை  வையம் பாத்தியப் பண்பே” எனும் வரிகளின் வாயிலாகத் ஐந்திணைகளை உணர்த்தும் தொல்காப்பியர் அவற்றை முதல் கரு உரிப்பொருள்களுக்குள் அடக்குகின்றார். இம்மூன்று பொருள்களைப் பேசமுற்படும் தொல்காப்பியர்ää காரணத்தோடுதான் நிலமும் பொழுதும் முதற்பொருள் என்கிறார். அதனையும்ää

           “முதல் எனப்படுவது நிலம்பொழுது இரண்டின்

           இயல்பு எனமொழிப இயல்புணர்ந்தோரே” என்று கூறுகிறார். இதில் நாம் கவனத்திற்கொள்ள வேண்டிய சொல்லாடல் - இயல்புணர்ந்தோரே என்பது. ஏனெனில் நிலமும் பொழுதும்தான் முதற்பொருள் என்று கூறிவிட்டு அதை நான் மட்டும் கூறவில்லை. நிலத்தின் இயல்பினையும் பொழுதின் இயல்பினையும் உணர்ந்தவர்கள் ஏற்கனவே அவ்வாறு கூறியுள்ளனர். அதனால் நானும் உரைக்கிறேன் என்கிறார். இங்ஙனம் தொல்காப்பியர் கூறுவதினின்று நாம் ஒன்றைத் தெளிவாக உணரமுடியும். என்னைää தொல்காப்பியர் இலக்கணம் படைக்கும் முன்னமே பல சான்றோர்கள் பல்வேறு படைப்புகளைப் படைத்துள்ளனர் என்று. எனவே அவற்றை உணர்த்துமுகமாகவே தொல்காப்பியர் நூல் முழுமையும் பொழிப மொழிப இயல்புணர்ந்தோர் முன்னிதின் உணர்ந்தோர் என்ற சொல்லாடல்கள் பலவற்றைப் பயன்படுத்தியுள்ளார் எனத் தெளியலாம்.

     இங்ஙனம்  ஐந்திணைகளாகிய நிலங்களைக் குறிக்கும் தொல்காப்பியர் அவற்றை வெறுமனே காடு மலை கடல் சார்ந்த இடம் என்று கூறாமல்

           “மாயோன் மேய காடுறை உலகமும்

           சேயோன் மேய மைவரை உலகமும்

           வேந்தன் மேய தீம்புனல் உலமும்

           வருணன் மேய பெருமணல் உலகமும்

           முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

           சொல்லிய முறையால் சொல்லவும் படுமே” என்கிறார். இதில் எண்ணத்தக்கது யாதெனில்ää ‘சொல்லிய முறையால் சொல்லவும் படுமே’ என்று முன்னோர்கள் வழிவழியாகச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். அதுமட்டுமல்லாதுää வெறுமனே நிலத்தை மட்டும் கூறாது குறிப்பாக அந்நிலத்தில் வழிபடப்படும் தெய்வத்தை முதலில் கூறிப் பின்னரே நிலத்தைக் கூறுகின்றார். இதன்மூலம் தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழனிடத்து இறை வழிபாடும் இறைநம்பிக்கையும்ää இறைக்கொள்கையும் கொட்டிக்கிடந்துள்ளது என்பதை வெள்ளிடைமலையாக உணரமுடியும்.

     அதேபோல் கருப்பொருளைக் காட்சிப்படுத்துகையிலும் அந்தந்த நிலத்தின் தெய்வத்தை முதலில் பகுத்துரைத்த பின்பே மனிதன் முதலாக அவனுடன் அந்நிலத்தில் வாழும் உயிரினங்களையும் அவற்றின் வாழ்வாதாரத் தேவைகளான உணவு நீராதாரம் உறைவிடங்களும் மனிதன் வாழ்க்கைத் தேவைகளில் ஒன்றான தொழிலும் களைத்த வேளையிலும் துன்பத்தால் துவண்ட வேளையிலும் இன்பங்கொண்டு களித்த பொழுதிலும் அவனின் செயல்பாடுகளான பறை யாழ் ஆகிவற்றின் பண்கள் பற்றியும் எடுத்துரைக்கின்றார் என்பதும் சிந்திக்கற்பாலது. மேலும் தொல்காப்பியர் இறை என்னும் பொருள் தரும் சொற்களான அணங்கு அமரர் இமையோர் கூற்றம் தேவர் வானோர் வேந்தன் பால்வரைத் தெய்வம் என்பனவற்றையும் பயன்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

     இங்ஙனம் தொல்காப்பியர் அந்தந்த நிலத்தில் மக்கள் பன்னெடுங்காலமாக வழிபட்டுவந்த தெய்வத்தை முன்னிறுத்துவதன் மூலம் தமிழனின் இறைக்கொள்கை ஆணிவேர் போன்றது என்பதை உணரமுடிகின்றது.

எட்டுத்தொகை நூல்களுள் கடவுள்வாழ்த்து

     பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்று போற்றப்படுவது சங்கஇலக்கியம். பழந்தமிழனின் வாழ்வியலைக் காட்டும் காலக்கண்ணாடி. தொகுக்கப்பட்ட காராணத்தால் தொகைநூல் என்று வழங்கப்பெறும் எட்டுத்தொகை நூல்களைப் பின்வரும் பழம்பாடல் வகைசெய்கின்றது.

           “நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்குபரிபாடல் - கற்றறிந்;தார்

ஏத்தும் கலியொடு அகம்புறம் என்று

இத்திறத்த எட்டுத் தொகை” என்று இயம்புகின்றது.

அவ்எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு அகநானூறு புறநானூறு என்னும் ஐந்து நூல்களில் மட்டுமே கடவுள்வாழ்த்து காணப்படுகின்றது. இக்கடவுள்வாழ்த்துப் பாடல்கள் முறையே திருமால் - நற்றிணை முருகன் - குறுந்தொகை சிவன் - ஐங்குறுநூறு சிவன் - அகநானூறு சிவன் - புறநானூறு என்னும் கடவுள்களை வாழ்த்தும் பாடல்களாக அமைந்துள்ளன. மேலும் இக்கடவுள்வாழ்த்துப் பாடல்கள் ஐந்தையும் இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்னும் ஒரே புலவர் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது காலம் கி.பி. 700க்கு முன்னர் என்றும்ää கி.பி. 9ஆம் நூற்றாண்டு என்றும் கருதப்படுகின்றது. மேலும் இவர் தொண்டைநாட்டினர் என்பதைச்

     “சீருறும் பாடல்பன் னீராயிரமுஞ் செழுந்தமிழுக்கு

     வீரர்தஞ் சங்கப்பலகையி லேற்றிய வித்தகனார்

     பாரதம்பாடும் பெருந்தேவர் வாழும் பழம்பதிகாண்

     மாருதம்பூவின் மனம்வீசிடுந் தொண்டை மண்டலமே” என்று தொண்டை மண்டலச் சதகம் குறிக்கின்றது. மேலும்ää கடைச்சங்க காலத்து பெருந்தேவனார் என்பார் பாடிய பாடல்கள் சங்கஇலக்கியத்துள் காணப்படுகின்றன. எனினும்ää இவர் அவரல்லர். ஏனெனில் இவரது காலம் கி. மு. 400 – கி. பி. 100க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் என்று கருதப்படுகின்றது.

எனவே பெருந்தேவனார் குறித்த சர்ச்சைகள் நிலவியபோதும்ää பாரதம் பாடிய பெருந்தேவனாரின் கடவுள்வாழ்த்துப் பாடல்களைத் தொகைநூல்களுள் சேர்க்காது தனியே விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே காலத்தாற் பிற்பட்ட இக்கடவுள்வாழ்த்துப் பாடல்களைக்கொண்டு மட்டும் தமிழன் இறைக்கொள்கையை அறுதியிடமுடியாது என்பது தீர்வாகின்றது.

குறுந்தொகையில்..

      தொகைநூல்களுள் முதலாவதாகத் தொகுக்கப்பட்ட நூல் என்ற பெருமைக்குரியது. இந்நூலுள் இரண்டாம் பாடலாகப் பயின்றுவரும்ää “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி….” எனும் பாடல்ää திருவிளையாடற் புராணத்தின் ஊற்றாக அமைந்த பாடல் எனில் மிகையன்று. மேலும் தருமியின் வரலாற்றை அறிய உதவும் பாடல் என்பதும் அறிந்ததே. இப்பாடலை இயற்றியது இறையனார் எனும் ஒரு புலவரே எனக்கொண்டாலும் அப்பெயரில் உள்ள ‘இறை’ எனும் சொல் கடவுள் எனும் பொருளை உணர்த்துகிறது என்பது தெளிவு. இப்பெயரை அடிப்படையாகக் கொண்டோமானால் தமிழன் இறைக்கொள்கை பெற்றிருந்தான் என்பது பெறப்படும். ஏனெனில் சங்ககாலப் புலவர்களின் பெயர்களை ஆராயும்போது எங்கும் இறை என்ற சொல்லில் அமைந்த பெயர்களைக் காணஇயலவில்லை என்பதும் நோக்கத்தக்கது. எனினும் குறுந்தொகையில் தமிழனின் இறைநம்பிக்கை குறித்தான பாடல்கள் காணக்கிடைக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

     மேலும் இக்குறுந்தொகையினைத் திருநாவுக்கரசர் “பாவநாசக் குறுந்தொகையில்” எத்தவத்தைச் செய்யினும் எவ்வொழுக்கத்தில் நிற்பினும் அவரவரும் எங்கும் சிவமாய்த் திகழும் இறைவனது இறைமைத் தன்மையைப் பற்றிய திண்ணிய உணர்வு உடையராதல் வேண்டும் என்கிறார். இங்ஙனம் நாவரசர் விதந்து போற்றுகின்ற காரணத்தால் குறுந்தொகையினைத் தமிழன் புனிதமானதாகக் கருதியுள்ளான் என்பது தெளிவு.

 

புறநானூற்றில்…ää

     புறப்பொருளை உணர்த்தும் நூலான புறநானூற்றில் இறைவன் பற்றிய கருத்தாடல்களும் சொல்லாடல்களும் காணக்கிடைக்கின்றன. அவை முறையே சிவன் திருமால் முருகன் கூற்றுவன் இந்திரன் பலதேவன் இராமன் சீதை அனுமன் என்னும் கடவுளர்களை எடுத்தியம்புகின்றன.

           “ஓங்கு மலைப்பெரு வில் பாம்புஞான கொளீஇ

           ஒருகணை கொண்டு மூஎயில்; உடற்றி

           பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த

           கறைமிடற்று அண்ணல் காமர் சென்னிய

           பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல…” (புறம் - 55) என்னும் வரிகள் சிவபெருமான் முப்புரம் எரித்த செய்தியை உணர்த்துகின்றன. இப்பாடலில் பாண்டியன் இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நன்மாறன் போற்றப்படுகின்றான். அதுபோல

           “ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை

           மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்

           கடல்வளர் புரிவளை புரையு மேனி

           விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்

           மணிமயி லுயரிய மாறா வென்றிப்

           பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென

           ஞாலங் காக்குங் கால முன்பிற்…..” (புறம் - 56) என்றமைந்த பாடலில் சிவன் திருமால் முருகன் மற்றும் கூற்றுவன் ஆகியோர் பாண்டியன் இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நன்மாறனுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளனர். இப்பாடலடிகள் மட்டுமல்லாது பல பாடல்கள் அக்காலத் தமிழர் நாடாளும் மன்னரை இறைவனோடு ஒப்பிட்டுப் புகழும் பண்பு வாய்க்கப் பெற்றவராகத் திகழந்தனர் என்று உணரமுடிகின்றது. இதன்மூலம் பண்டைத்தமிழர் இறைக்கொள்கை உடையவராக விளங்கினர் என்பதும் பெறப்படுகிறது.

கலித்தொகையில்…

     தலைவியைக் காணத் தலைவன் இரவுக்குறியின்கண் வருகின்றான். அவன் வருகின்ற வழிப்பாதையின் துன்பத்தையும்ää தலைவியின் நிலையையும் உணர்ந்த தோழி அவனை விரைவில் வரைவு கடாதலின் இன்றியமையாமையை எடுத்துரைக்கின்றாள். அங்ஙனம் எடுத்துரைக்கையில்

          “இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்நதணன்

           உமையமர்ந் துயர்மலை இருந்தன னாக

           ஐயிரு தலையின் அரக்கர் கோமான்

           தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை

           எடுக்கல் செல்லா துழப்பவன் போல” (கலி – 38) என்று கையிலை மலையை இராவணன் எடுக்க முற்பட்டான். அப்போது இறைவன் தன்கால் கட்டைவிரலால் அழுத்திய பொழுது அவன் எங்ஙனம் உழன்றானோ அவ்வாறு துன்பப்படுகின்ற தலைவனே! என்று விளிக்கின்றாள் தோழி. இங்ஙனம் இறைவனின் திருச்செயல்களைத் தங்கள் வாழ்வோடும்ää சூழ்நிலைகளோடும் புனைந்து பேசும் பாங்குடையவர்களாக அக்காலத் தமிழர் விளங்கினர் என்பதற்குச் சான்றாய் அமைகின்றது. மேலும் முல்லைக்கலியில்ää

“வள்ளுருள் நேமியான் வாய்வைத்த வளைபோலத்

தௌ;ளிதின் விளங்குஞ் சுரிநெற்றிக் காரியும்

ஒருகுழை யவன்மார்பில் ஒண்தார்போ லொளிமிகப்

பொருவறப் பொருந்திய செம்மறு வெள்ளையும்

பெரும்பெயர்க் கணிச்சியோன் மணிமிடற் றணிபோல

           இரும்பிண ரெருத்தி னேந்திமிற் குராலும்

           அணங்குடை வச்சிரத்தோன் ஆயிரங் கண்ணேய்க்குங்

           கணங்கொள் பல்பொறிக் கடுஞ்சினப் புகரும்

           வேல்வலா னுடைத்தாழ்ந்த விளங்குவெண் துகிலேய்ப்ப

           வாலிது கிளர்ந்த வெண்காற் சேயுங்

           கால முன்பிற் பிறவுஞ் சால

           மடங்கலுங் கணிச்சியுங் காலனுங் கூற்றுந்

           தொடர்ந்துசெல் லமையத்துத் துவன்றுயி ருணீஇய 

           உடங்குகொட் பனபோற் புகுத்தனர் தொழூஉ” (கலி - 105) எனும் வரிகள் முல்லை நிலத்து ஏறுகளை வரிசைப்படுத்துகின்றன. அவற்றுள் சங்கினைப்போலச் சுட்டியைக்கொண்ட நெற்றியை உடைய கரியஏறு சிவந்த மறுவினைக்கொண்ட வெள்ளியஏறு குரால்நிறங்கொண்டஏறு பலவாகிய புள்ளிகளைக்கொண்டஏறு வெள்ளிய கால்களைக்கொண்ட சிவந்தஏறு இன்னும் காலனதுவலி போன்ற வலிமையுடைய ஏறுகளும் தொழுவத்தில் புகுத்தினர் என்று கூறுகையில் முறையே ஒவ்வொரு ஏறும் திருமால் பலராமன் சிவன் இந்திரன் முருகன் மற்றும் கூற்றுவன் ஆகியோருடன் ஒப்புமைப்படுத்தப்பட்டு அடையாளப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்ஙனம் அக்காலத் தமிழர் வாழ்வோடு இணைந்த ஒரு பொருண்மையாக இறைக்கொள்கை விளங்கியது என்பதை உணரமுடிகின்றது.

அகநானூற்றில்…

     நெடுந்தொகை என்று அழைக்கப்பெறும் அகநானூற்றில்ää தலைமகன் பிரிவால் வேறுபட்ட தலைவிக்குத் தோழி கூறுவதாக அமைந்த பாடலில்ää கண்ணன் பற்றிய குறிப்பு தென்படுகின்றது. “மரஞ்செல நிமிர்ந்த மாஅல் போல” (அகம் - 59) என்னும் வரியானதுää குருந்தமரம் வளைந்திட மிதித்துத் தந்த கண்ணன் போலää ஆண்யானையானது தன் பெண்யானைக்கு இளந்தளிர்களை உண்ணுதற்கு யாமரத்தினை வளைத்துத் தந்துää கண்ணத்தில் படியும் வண்டுகளை ஓட்டும் என்று கூறித் தலைவியைத் தேற்றுகிறாள் தோழி. இதில் யானையின் செயல்பாடுகளுடன் கண்ணனின் செயலை ஒப்பிட்டுக் கூறியமையால் பண்டைக்காலத் தமிழர் இறைக்கொள்கை உடையவராகத் திகழ்ந்தனர் என்பது பெறப்படுகிறது. மேலும்ää

           “முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை

           வெல்போர் இராமன் அருமறைக் கவித்த

           பல்வீழ் ஆலம் போல

           ஒலியவிந் தன்றிவ் அழுங்கல் ஊரே” (அகம் - 70) என்னும் வரிகள்ää இராமன் இலங்கைமேற் செல்லுதற் பொருட்டுத் திருவாணைக்கரையின் இடமிருந்த பெரிய ஆலமரத்தின் கீழே தனக்குத் துணையாயினவரோடு அரிய மறைகளை ஆராயும் வண்ணம் அங்குள்ள பறவைகள் (புள்) ஒலியாதிருக்க தன் ஆணையால் அடக்கினான் என்று கூறுவர். அங்ஙனம் ஆரவாரமுடைய ஊர் ஒலியடங்கப் பெற்றது என்று பொருள் உரைக்கின்றன. இங்ஙனம் இராமன் பற்றிய குறிப்பினை பொருத்தமுறக் கூறுமிடத்து தமிழர் இறைக்கொள்கை உடையது புலனாகின்றது.

பரிபாடலில்…

     அகமும் புறமும் விரவியதாகக் கருதப்படும் பரிபாட்டு இசையால் அமைந்த நூல் பரிபாடல். இந்நூல் திருமால்ää செவ்வேள்ää வையைää மதுரை மற்றும் காளி பற்றிய பாடல்களை உள்ளடக்கியது என்று கூறப்படினும் இன்று நம்மிடையே கிடைப்பன சிலவே. அவற்றுள்ளும் திருமால் செவ்வேள் மற்றும் வையை பற்றிய பாடல்களே கிட்டியுள்ளன. காளி பற்றிய ஒரு பாடலும்ää மதுரை பற்றிய நான்கு பாடல்களும் நமக்குக் கிட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில்ää இந்நூலுள் பெரும்பான்மை இறைவன் பற்றிய செய்திகளே காணக்கிடைக்கின்றன என்பதும் தமிழனின் இறைக்கொள்கைக்கு வித்தாக அமைகின்றது.

நற்றிணையில்…ää

     எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்துப் பேசப்படும் நூல் நற்றிணை. நல்ல திணை என்று திணையே பெயராகி ‘நல்’ என்னும் அடைமொழியோடு விளங்கும் நூல் எனினும் ஒக்கும். அத்தகைய நூலுள் தமிழனின் இறைக்கொள்கையை வெளிப்படுத்தும் விதமாகää தெய்வத்திற்கு பலிபொருட்கள் இட்டு வழிபட்ட முறைமை காணப்படுகின்றது.

           “நெடுவீழ் இட்ட கடவுள் ஆலத்து

           உகுபலி அருந்திய தொகுவிரற் காக்கை” (நற் - 343) எனும் வரிகள்ää கடவுளுக்கு ஆலமரத்தின் கீழே பலிபொருள் படைத்தனர் என்றும்ää அதனைக் காக்கைகள் எடுத்துச் சென்றன என்றும் கூறிச்செல்கின்றன. மேலும் அங்ஙனம் படைக்கப்படும் பலிபொருளை கடவுளே பெறுதலும் உண்டு என்றுää

           “பலிபெறு கடவுட் பேணிக் கலிசிறந்து” (நற் - 252) எனும் வரியானதுää மெய்ப்பிக்கின்றது. தலைவி இற்செறிக்கப்பட்ட நிலையில்ää அன்னை ஆடு முதலிய பலியைப் பெறுகின்ற முருகவேளுக்கு வெறியாடல் நிகழ்த்தத் திட்டமிடுகிறாள் என்று தலைவி வருந்துவதாக அமைந்த பாடலாக அமைகின்றது. இதன்மூலம் அன்றைய தமிழரிடத்து வழிபாட்டு முறைகளும்ää இறைவன் மீதான நம்பிக்கையும் இறைக்கொள்கையாக பின்னிப்பிணைந்திருந்தன என்பது பெற்றித்தாகும்.

     இவ்வாறு அக்காலத் தமிழர்கள் தங்களின் வாழ்வியலோடு இறைக்கொள்கையினையும் நட்டுவைத்து வளர்த்துள்ளனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் அனைத்திலும் வெளிப்படக் காணலாம். (ஆய்வினிற் சான்றுகள் ஒருசிலவே கொடுக்கப்பட்டுள்ளன. காரணம் சங்கஇலக்கியம் முழுமையும் தமிழரின் இறைக்கொள்கையானது உண்ணும் உணவு முதல் தான் வாழும் வாழ்வியற் கூறுகள் ஒவ்வொன்றிலும் இரண்டறக்கலந்துள்ளமையைக் கான முடிகின்றது என்பதேயாம்.)

ஆய்வுக்குத் துணைநின்ற நூல்கள்:

1.    தொல்காப்பியம் – ச. வே. சுப்பிரமணியன் உரை – மணிவாசகர் பதிப்பகம்.

2.    தொல்காப்பியம் பொருளதிகாரம் – இளம்பூரணர் உரை – சாரதா பதிப்பகம்.

3.    நற்றிணை – பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரை – கழக வெளியீடு

4.    பரிபாடல் – பொ. வே. சோமசுந்தரானார் உரை – கழக வெளியீடு

5.    அகநானூறு – ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – கழக வெளியீடு

6.    கலித்தொகை – நச்சினார்க்கினியர் உரை – கழக வெளியீடு

7.    புறநானூறு – சு. துரைசாமிப் பிள்ளை உரை – கழக வெளியீடு

8.    குறுந்தொகை –  பொ. வே. சோமசுந்தரானார் உரை – கழக வெளியீடு