ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

‘மதுரைக் காஞ்சி’ – பன்னோக்குப்பார்வை

முனைவர்.சு.விஜயா கலைவாணி,இணைப்பேராசிரியர்,தமிழ்த்துறை,ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி 08 Dec 2020 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்:

MaduraiKanchi is an Ancient Tamil poem in the sangam literature.  It is a didaitu poem and its title connotes the poetic counsel addressed to the king of Madurai composed by Mankuti Marutanar probably the chief court poet of the Pandya  Nedunjeliyan 11, the Madurai kanchi is the sixth poem in the pattupattu anthology.  Madurai kanji is the longest poem in the pattupattu collection with 782 lines of poetry.  The poem all his accomplishment and strengths.  The Maduraikanchi describes a well structured administration in Madurai.  Maduraikanchi shows the instability of life.

உலக இலக்கியங்களில் சங்க இலக்கியங்கள் சமயம் சாரா இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியங்கள் கற்பனையும் கனவும் பொய்யும் புனைவும் அற்ற தமிழ் சமுதாயம் உள்ளது உள்ளபடி காட்டும் படிமங்கலங்கள் என்று பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையும் வரலாற்றுப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியும் கருதுவர். தமிழ் இலக்கிய மரபில் எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் சிறப்பு மிக்கவையாகும்.

     “பத்துப்பாட்டாதிமனம் பற்றினார் பற்றுவரோ

     எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே”1

என்று பத்துப்பாட்டின் சிறப்பைப் பற்றி பேராசிரியர் சுந்தரம்;பிள்ளை மொழிகிறார்.

பழந்தமிழரின் வாழக்கை முறைகள் பழக்கவழக்கங்கள் பண்பாடு போன்றவற்றை விளக்கும் சங்க இலக்கியத் தொகுப்புகளில் ஒன்றான பத்துப்பாட்டில் இடம்பெறும் மதுரைக்காஞ்சியின் தமிழர் வாழ்வியல் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.

சங்க இலக்கியத்தின் தலையாய சிறப்பு குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்னும் ஐவகை நிலப்பிரிவுகளும் அவற்றையொட்டியமைந்த மக்கள் வாழ்க்கையும் திணை துறை காட்டும் பழக்கவழக்கங்களும் இடம் பெற்றுள்ளன.

“சமைப்பது பண்படுத்துவது எனும் பொருளைக் கொண்டு அமையும் சமயம்” பண்பாட்டின் உச்சநிலையாக விளங்குகின்றது. முனிதனை தெய்வத்தோடு ஒன்றரக் கலக்கச் செய்து பண்படுத்தும் ஆற்றலுடையது சமயமாகும். இச்சமயங்களின் கோட்பாடுகள் கொள்கைகள் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை மதுரைக்காஞ்சி வழி அறியலாம்.

நிலையாமைத் தன்மையை உணர்ந்து நல்வாழ்வு வாழ வேண்டும். உலகில் வாழும் வரை நல்லவைகளைக் கடைபிடித்து அல்லவைகளை நீக்கி அறநெறிகளைப் பின்பற்றினால் நல்உலகினை அடையலாம் என்பதனைக் குறித்த சிறப்பினை மதுரைக்காஞ்சி வழி அறியலாம்.

திறவுச் சொற்கள்: சங்க இலக்கியம் மதுரைக்காஞ்சி தமிழர் வரலாறு தமிழர் பண்பாடு பன்முகப்பார்வை

முன்னுரை:

     சங்க இலக்கியங்களின் துணையின்றித் தமிழரின் பண்டைய வரலாற்றையும் பண்பாட்டையும் அறிந்து கொள்ள முடியாது. அவ்வகையில் பத்துப்பாட்டு  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழகத்தை நம்முன் வளக்கிக் காட்டும் சொற்சித்திரமாகத் திகழ்கின்றது. இப்பத்துப்பாட்டினுள் மிகுதியான அடிகளை உடைய பாட்டு மதுரைக் காஞ்சி. எனவே ‘பெருவளமதுரைக்காஞ்சி’ எனச்சிறப்பிக்கப்படுகின்றது. இந்நூலின் பாட்டுடைத்தலைவன் தரையாலங்கானத்துச் செருவென்ற பாட்டியன் நெடுஞ்செழியன். பாடியவர் மாங்குடி மருதனார். மதுரைக்காஞ்சியின் சிறப்பியல்புகளை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மதுரைக்காஞ்சியின் சிறப்பு:

     ‘காஞ்சி’ என்பது நிலையாமையைக் குறித்துப்பாடும் ஒரு திணை. பாடப்பெறும் ஆண் மகனது புகழ் கொடை வீரம் கருணை பற்றிப் பாடப்பெறுவது பாடாண்திணை. அதே போன்று எப்பொழுதும் போர் பற்றிய சிந்தனையிலேயே மூழ்கிக் கிடக்கும் அரசனுக்கு உலக நிலையாமையை எடுத்துக்கூறி அவனாற்ற வேண்டியபிற கடமைகளையும் விளக்கி அவன் வீடு பேறு அடைவதற்கான அடிகளைப்பாடுவது காஞ்சித்திணை ஆகும் இப்பாடல் மதுரையை ஆண்டு கொண்டிருக்கும் மன்னனை முன்னிறுத்திப் பாடப்பெறுவதால் மதுரைக் காஞ்சி எனப் பெற்றது. பாண்டியன் சிறப்பு ஆட்சிச் சிறப்பு மூவேந்தரையும் சிற்றரசர்களையும் வென்றமை பரிசில் வழங்கும் திறன் புகழ் படைத்த வாழ்க்கை மதுரையின் வளம் வனப்பு அரண்மனையைச் சுற்றிய அகழி மதில் நாளங்காடி அல்லங்காடி மக்களின் வாழ்க்கை முறை மாலை முதல் காலை வரையிலான பொழுதுபோக்கு மங்கையர் ஒழுக்கம் கள்வர் செயல் காவலர் தொழில்திறன் விடியற்காலையில் அந்தணர் வேதம் ஓதும் மரபு மற்றும் மதுரையின் விழாக்கள் ஆகியன காட்சி ஓவியமாக மதுரைக்காஞ்சி நமக்குக் காட்டி மகிழ்விக்கின்றது.

வாழ்க்கை முறை:

     பண்டைத் தமிழர் இன்பமான வாழ்க்கையை வாழ்ந்தனர். மிகச்சிறந்த இல்லறத்தை நடத்தினர். அரசர்கள் மக்களைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்தனர். மக்களைக் காப்பதையே தனது கடமையாகக் கருதினர். பொதுவாக அக்கால மக்களு; தமிழ் மன்னர்களின் குடையின்கீழ் மகிழ்ச்சியான வாழ்க்கையை மேற்கொண்டனர். பசியும் பிணியும் நீங்கி இன்பத்தில் திழைத்தனர். அவர்கள் துயரம் என்பது என்னவென்று அறியாதவராய் இருந்தனர். விலங்குகள் கூடத்துன்புறாமல் இருந்தன. மக்களுக்குப் பசியைப் போக்குவதிலும் அவர்களை நோயிலிருந்து பாதுகாப்பதையும் அக்கால மன்னர்கள் முக்கிய குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். இவர்களுக்குக் கிடைத்த அமைச்சர்கள் கூடப் பொய் கூறத் தெரியாதவராய் இருந்தனர். இச்செய்திகளை மதுரைக் காஞ்சியின் பின்வரும் அடிகள் உணர்த்துகிறது.

     “நோயிகந்து நோக்கு விளங்க

     மேதக மிகப்பொலிந்து

     ஓங்குநிலை வயக்களிறு

     கண்டு தண்டாக் கட்கின்பந்து

     உண்டுதண்டா மிகுவிளத்தான்

     உயர்பூரிம் விழுத்தெருவில்

     பொய்யறியா வாய்மொழியால்

     புகழ்நிறைந்த நன்மாந்தரோடு”2

ஐந்திணை வளம்:

     மதுரைக்காஞ்சி பாண்டிய மன்னனுக்கு நிலையாமையை உணர்த்தினாலும் அதில் ஐந்திணை வளங்களும் மிகச் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இது மதுரை நகரின் சிறப்பு மற்றும் வளத்தினையே குறிக்கின்றது.

     மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம் எனப்படும். மதுரைக்காஞ்சியில் குறிஞ்சி நிலவளத்தை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் ஆசிரியர். மலையிலுள்ள மணம் கமழும் அகில் மற்றும் சந்தனமரங்களை வெட்டி சீராக்கிய இடத்தில் சிறிய கதிர்களை உடைய தோரை என்ற நெல்லும் வெண்சிறு கடுகும் ஐவன நெல்லும் அதனுடன் பிணைந்து வளர்ந்த இஞ்சியும் மஞ்சளும் பசும் மிளகு கொடியும் வளர்க்கப்பட்டிருக்கும். இப்பயிர்க்ள அனைத்தும் குறிஞ்சி நிலத்தின் கருப்பொருட்களாகும் இதனை

     “நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய

     குறுங்கதிர்த் தோரை நெடுங்கால் ஐயளி

     ஐவன வெண்ணெலோடு அரிக்கொள்புநீடி

     இஞ்சி மஞ்சள் மைங்களி பிறவும்

     பல்வேறு தாரமொடு கல்லகத்தூண்டி”3

எனக் குறிப்பிடப்டுகி;னறது.

     காடும் காடு சார்ந்த இடமும் முல்லை நிலமாகும் மதுரைநகர் காட்டுவளத்திலும் மிகச்சிறந்த விளங்கியதை மதுரைக்காஞ்சியின் பாடல் சித்தரிக்கின்றது.

     “சிறுதினை கொய்ய கவ்வை கறுப்ப

     கருங்கால் வரகின் இங்குரல் புலர

     ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர

     எழுந்த கடற்றில் நன்பொன் கொழிப்ப

     பெருங்காவின் பெற்ற சிறுதலை நௌவி”4

எனää முல்லை நிலத்தில் விளையும் உணவுப்பொருட்களான தினை எள் வரகு பற்றிக் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர் மாங்குடி மருதனார்.

     வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதத்திணையாகும். விவசாயம் ஒரு நாட்டின் விளப்பத்தின் முதுகெலும்பாகும். மதுரைக்காஞ்சி மதுரை நகரின் வயல்களின் வளi மற்றும் சிறப்பினை மிக அழகாகச் சித்தரிப்பதன் மூலம் மதுரை நகரின் வயல்களின் வளமை மற்றும் சிறப்பினை மிக அழகாகச் சித்தரிக்கின்றது. விவசாயம் செழிக்க மிகவும் தேவையான ஆறு குளம் நீர்நிலைகள் மற்றும் கிணற்றில் காணப்படும் நீரின் ஆதாரம் இடியுடன் கூடிய மழை பெய்த காட்சி மதுரைக்காஞ்சி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது.

     “அதனால் குணக்கடல் கொண்டு குடகடல் முற்றி

     இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாது

     அவலும் மிகையும் நீதி திரன்பு ஈண்டி

     கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்ப

     கழைவார் சாரல் களிற்றினம் நடுங்க

     வரைமுதல் இரங்கும் ஏறொரு வான்நெமிர்ந்து”5

என மழை பொழியும் காட்சியை அழகாக எடுத்தியம்புகின்றார் ஆசிரியர்.

     “நீரின்றியமையாது உலகு” என்பது தெய்வப்புலவர் வாக்கு. மனிதன் உயிர் வாழத்தேவையான பிராண வாயுவிற்கு அடுத்தப்படியாக மனிதனுக்கு இன்றியமையாததாக விளங்குவது நீராகும் ஒரு நாட்டின் செல்வவளம் அந்நாட்டின் நீர்வளத்தைப் பொறுத்தே அமையும். கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய நெய்தல்நிலம் மீன்வளம் தவிர விலை மதிப்பு மிக்க முத்துக்களின் பிறப்பிடமாகும். “பாண்டி நாடு முத்துடைத்து” என்ற சொல்லடைக்கு ஏற்ப மதுரைக்காஞ்சி பாட்டிக்கடலில் கிடைக்கும் முத்துவளம் மற்றும் கடல் வணிகத்தின் பெருமைகளை மிக அழகாகக் கூறுகின்றது. யவனம் முதலிய நாடுகளிலிருந்து வந்து மதுரையின் பேரணிகலங்களை தங்கள் நாட்டிற்கு தொண்டு செய்வதற்காக வந்துள்ள மற்றும் பண்டமாற்றம் அதனால் செழித்து விளங்கும் நெய்தல் நிலத்தின் செல்வச் செழிப்பை மருதனார் குறிப்பிடுகிறார்.

     பாலைக்கென்று தனிநிலம் கிடையாது. கோடையில் குறிஞ்சி நிலமும் முல்லைநிலமும் தன் இயல்பு மாறி வறண்டு காணப்படுவதே பாலையாகும். மதுரைக்காஞ்சியில் பாலைநிலத்தின் இயல்பினை மிக அழகாகச் சித்தரித்துள்ளார். மூங்கில் காட்டில் தோன்றிய நெருப்பினால் உணவுக்கு இளந்தளிர்கள் இன்றி யானைப் பசியால் தளர்வுடன் காணப்படும். ஐவகை நிலமும் அழகு பெற விளங்கும் நாடு பாண்டி நாடாகும் என்பதனை மதுரைக் காஞ்சி வழி அறியலாம்.

மதுரைக்காஞ்சியும் சமயமும்:

     “மனிதன் தன் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஆற்றல் மீது நம்பிக்கை கொண்டு அவனுடைய ஆன்மீகத் தேவைகள் மற்றும் நிலையான வாழ்க்கையைப் பெற முயற்சித்து அதைத் தன் வழிபாடு மற்றும் தொண்டுகள் வழி வெளிப்படுத்துதல் சமயம் ஆகும்.” என்று விளக்கமளிக்கின்றது நீதிகள் மற்றும் சமயக் கலைக்களஞ்சியம் இச்சமயங்களின் தன்மைகள் வழிபாட்டு முறைகள் பண்பாட்டு நெறிமுறைகள் மதுரைக்காஞ்சியில் இடம்பெற்றுள்ளன. சைவம் வைணவம் சமணம் பௌத்தம் பற்றிய குறிப்புகளும் மதுரை நகரில் இடம்பெற்றுள்ள கோயில்களில் நடைபெறுகின்ற விழாக்களும் விளக்கப்பட்டுள்ளன.

     வைதீக சமயங்களின் ஆதாரமாக மூலமாக அமைவது வேதங்களே. அவ்வேதங்களை ஓதுகின்ற அந்தணப்பள்ளிகள் பிரம்மவித்துக்கள் தங்கியிருக்கும் இடமாக குறிப்பிடப்படுகின்றன. அவர்கள்

     “சிறந்த வேதம் விளங்கப்பாடி

     விழுச்சீர் எய்திய ஒழுக்கமோடு புணர்ந்து

     நிலம் அமர் வையத்து ஒரு தாம் ஆகி”6 (468-470)

என்று போற்றப்படுகிறார்கள். 

     ஐம்பூதங்களாகிய ஆகாயம் காற்று நெருப்பு நீர் நிலம் என்று ஐந்து பூதங்களையும் மழுப்படையாகிய வாளினையுடையோன்” பெரியோன் முதன்மையானவன் என்பதை

     “நீரும் நிலனும் தீயும் வளியும்

     மாக விசும்போடு ஐந்து உடல் இயற்றிய

     மழுவார் நெடியோன்”7

என்று போற்றப்படுகிறார். சிவபெருமான்.

     “மாயோன் மேய காடுறை உலகமும்” எனும் முல்லை நிலத்திற்குரிய தெய்வமாகச் சுட்டப்படும் மாயோன் திருமாலைக் குறித்து

     “கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்

     மாயோன் மேய ஓண நல்நாள்”8

என்று அவர்களை வென்றவன் கருமையான நிறத்தை உடையவன் ஓண நாளில் பிறந்தவன் எனத் திருமாலைக் குறித்து குறிப்பிட்டுள்ளார் ஆசரியர்.

     “தாமரை புரையும் அழகிய திருவடிகளையும் செக்கச் சிவந்த ஆடையினையும் குன்றினைப்போன்று பிளந்த வேலினையும் உடையவன்” என்று போற்றப்படுபவர் முருகன். “சேயோன் மேய மைவரை உலகமும்” என்று குறிஞ்சி நிலத்திற்குரியவனாகவும் குன்று தோறும் இருப்பவனும் மதுரை நகரில் திருப்பரங்குன்றத்திலும் வீற்றிருப்பவனாகிய முருகனைப்பற்றிக் குறிப்பிடுகின்றது மதுரைக்காஞ்சி.

     “அருங்கடி வேலன் முருகொடு வளைஇ

     அரிக்காடு இன் இயம் கறங்க நேர் நிறுத்து

     கார் மலர்க் குறிஞ்சிச் சூடி கடம்பின்

     சீர்மிகு நெடுவேட்பேணி தழுஉப் பிணைடயுஉ

     மன்று தொறும் நின்ற குரவை”9

என்பதில் தலைவிக்கு அச்சத்தைச் செய்பவன். கார் காலத்தில் மலரும் குறிஞ்சி கடம்ப மலர்களைச் சூடுபவன் குரவைக் கூத்தாடுபவன் என்றும் சுட்டப்படுகின்றது.

நிலையாமைக் கூறுகள்:

     நிலையாமை ஒன்றே நிலையான உண்மை என்று கௌதமபுத்தரும் தோற்றம் உண்டேல் மரணம் உண்டு என்று சுந்தரரும் உயிரும் யாக்கையும் செல்வமும் இளமையும் நிலைபேறில்லாத உலகியற்கையைப் பொருந்திய நன்னெறியை உடையவை என்று நச்சினார்க்கிணியரும் விளக்கம் தருகின்றார். இவ்வுலகில் எதுவும் நிலையற்றதாகும் அதனை தொல்காப்பியர்

     “காஞ்சி தானே பெருந்திணைப் புறனே

     பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றானும் 

     நில்லா உலகில் புல்லிய நெறித்தே”10

என்று காஞ்சித்திணைக்கு விளக்கும் தருகிறார்.

     மணிமேகலைக் காப்பியத்தில் நாகர்களின் தலைவனுக்கு சாதுவன் கூறும் அறிவுரைகளில்

“பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்

உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்

நல் அறம் செய்வோர் நல்உலகு அடைதலும்

அல்லது செய்வோர் அருநரகு அடைதலும்

உண்டென உணர்த்தலின் உரவோர் களைந்தனர்”11

என்ற பாடலில் இவ்வுலக வாழ்வென்பது இன்றைக்குள் கையில் இருப்பது போன்றது. ஆதலால் நாளை என்று இருக்காமல் இன்றே அறம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முடிசூடும் மன்னரு; அவர் அடிதழிஇ வாழ்வானும் இறுதியில் வேறுபாடின்றி இறந்து பிடிசாம்பலாய்ப் போவது உறுதியே என்பதனை ஆன்றோர்கள் பாடியுள்ளனர்.

     “நெடுநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை படைத்திவ்வுலகு”12

என்கிறார் திருவள்ளுவர்.

     இளமை ஆற்றுநீர் ஓடுதல் போல மிக வேகமாகவே ஓடி மறைதலும் குளத்துநீர் போல் ஒரு காலைக் கொருகால் குறைந்துபடுதலும் இளமையும் வாழ்நாளும் மூப்பும் மரணமும் கனவு நிகழ்ச்சி போன்று மாறிவிடுவதை மதுரைக்காஞ்சியில்

     “பொய் அறியா வாய்மொழியால்

     புகழ் நிறைந்த நல்மாந்தரொடு

     நல்ஊழி அடிப்படர

     பல்வெள்ளம் மீக்கூற

     உலகம் ஆண்ட உயர்தோர் மருக”13

எனவும்ää

     “பணைகெழு பெருந்திறல் பல்வேல் மன்னர்

     கரைபொருது இரங்கும் கணை இரு முந்நீர்த்

     திரைஇடு மணலினும் பலரே உரை செல

     மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோ”14

எனவும் அறிவுறுத்தப்பட்டு இளமை முதல் உலகத்துப்பொருள் அனைத்தின் நிலையாமைத் தன்மையையும் மிக நுண்மையாக மதுரைக்காஞ்சி படம்பிடித்துக் காட்டுகின்றது.

     “இளமையும் காமமும் நின்பாணி நில்லா”15

என்ற கலித்தொகைப்பாடல் கூறும் நிலையாமை மதுரைக்காஞ்சியோடு ஒப்புநோக்கற்பாலது. உலகமும் உலகத்துத் தோன்றும் யாவும் என்றும் நிலையில்லாதன. நிலை பேறுடையது சிறந்த புகழ் ஒன்றே என்பதனையும் மதுரைக்காஞ்சி எடுத்தியம்புகின்றது.

இயற்கை வளம்:

     இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கைத் தொல் தமிழர்க்கு மட்டும் உரியதன்று. தொன்மாந்தர்க்கெல்லாம் பொதுமையதே எனலாம். இயற்கையோடு இயைந்த வாழ்வு நிகழ்த்தியதால் சங்கப்புலவர் தம் உணர்வுகளை இயற்கை நிகழ்ச்சியின் மீது ஏற்றிக்காட்டினா. கற்பனையும் வருணனைகளும் இயற்கை கலந்தே புலப்படுத்தப்பட்டன வானோங்கு மரை பொங்கு வீழருவி நிரைந்தொளிரும் நீர்நிலை தெளிந்தோடும் ஆறு ஆகியவற்றை எழில் ததும்பும் ஓவியங்களாகத் தீட்டிக் காட்டும் நிலைகளும் காணப்படுகின்றன.

     முல்லை நிலத்தில் பள்ளங்களிலெல்லாம் நீர் நிறைந்துள்ளது. அதில் தொய்யில் மலரும் நெய்தல் மலரும் நிறைந்து காணப்படுகின்றன. அது வேலனுக்கு வெளியாடல் நிகழ்த்திய களம்போலத் தோன்றியதாகக் கூறுகிறது. இதனைää

     “வல்லோன் தைஇய வெறிக் களங்கடுப்ப

     முல்லை சான்ற புறவணிந்தொரு”16

என்று கூறுவதால் புலப்படுகின்றது.

குறிஞ்சி நில மலைப்பக்கச் சாரலில் அருவியின் ஓசையுடன் கருமை நிறமுடைய பன்றியைக் கொல்லும் புலியின் ஓசையை ஏனைய ஓசைகளும் கேட்கின்றன. இதனைää

     “இலங்கு வெள்ளருவியோடு சிலம்பகத்திரட்டக்

     கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பணிந்து

     அருங்கடி மாமலை தழிஇ ஒருசார்”17

முடிவுரை:

     சங்க இலக்கியங்கள் நம் தமிழர்களின் கருத்துக் கருவூலங்களாகி இவை இன்றும் அழியாத இன்ப இலக்கியங்களாய் விளங்கி வருகின்றன. பத்துப்பாட்டில் அடியளவில் மிகப்பெரிய நூலாகத்திகழ்வது மதுரைக்காஞ்சி ஆகும். இந்நூல் 782 அடிகளைக்கொண்டது. பெருகுவள மதுரைக்காஞ்சி என்று அழைக்கப்படும் சிறப்பினைப் பெற்றது. புறத்தினைகளுள் ஒன்றாகிய நிலையாமையை உணர்த்தும் காஞ்சித்திணைப் பொருண்மையுள்ளது. வாழ்க்கையின் சிறந்த ஒழுகலாறுகளை எடுத்தியம்புகின்றது.

அடிக்குறிப்புகள்:

1.    பேராசிரியர் சுந்தரம்பிள்ளை மனோன்மணியம் அ.எண். 21

2.   மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சி பா.அ.எண். (13-20)

3.   மேலது பா.அ.எண் (286-290)

4.   மேலது பா.அ.எண் (271-275)

5.   மேலது பா.அ.எண் (238-243)

6.   மேலது பா.அ.எண் (468-470)

7.    மேலது பா.அ.எண் (453-455)

8.   மேலது பா.அ.எண் (590-591)

9.   மேலது பா.அ.எண் (611-615)

10.   தொல்காப்பியர் தொல்காப்பியம் பொருளியல் புறத்திணை

11.   சீத்தலை சாத்தனார் மணிமேகலை)1686-1690)

12.   திருவள்ளுவர் திருக்குறள் பாடல் எண். 336

13.   மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சி பா.அ.எண். (19-23)

14.   மேலது பா.அ.எண் (234-237)

15.   கலித்தொகை பாடல் அடி எண். 14

16.   மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சி பா. அ.எண். (284-285)

17.   மேலது பா.அ.எண் (299-301)

துணைநூற்பட்டியல்

1.    சீத்தலை சாத்தனார் மணிமேகலை கிழக்குப் பதிப்பகம் 16 கற்பகாம்பாள் நகர் மயிலாப்பூர் சென்னை.

2.   பொ.வே. சோமசுந்தரனார் - பத்துப்பாட்டு 2 தொடுதீள் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை.ச

3.   திருவள்ளுவர் - திருக்குறள் புலியூர்க்கேசகன் உரை பூம்புகார் பிரசுரம் 109 மன்னார் சாமி கோயில் தெரு சென்னை - 13. 1976.

4.   நச்சினார்க்கினியர் (உ.ஆ) கலித்தொகை திருநெல்வேலி தென்னிந்தி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை - 1975.

5.   நச்சினார்க்கினியர் (உ.ஆ) - தொல்காப்பியம் (பொருளதிகாரம்) உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் தரமணி சென்னை - 600 113.