ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புமிகு தட்சிணாமூர்த்தியின் திருஉருவங்களும் அம்பர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் தட்சிணாமூர்த்தியின் சிற்ப வடிவமும் - ஓர் ஒப்பாய்வு

ஜெ.ச.சித்ரா, முனைவர் பட்ட ஆய்வாளர், சிற்பத்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 08 Dec 2020 Read Full PDF

நெறியாளர்: முனைவர்.பா.ஷீலா, பேராசிரியர்(ம)துறைத்தலைவர், சிற்பத்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம்ää தஞ்சாவூர்.                  

ஆய்வுச்சுருக்கம்:

     சங்க கால இலக்கியங்கள் கல்வெட்டுகளின் சான்றுகள் மூலமாக அம்பர் பிரம்மபுரீஸ்வரர் கோயில தென்முக கடவுள் தட்சிணாமூர்த்தியின் வடிவத்தை ஒப்பாய்வு செய்துள்ளேன். பல்வேறு காலகட்டங்களில் தட்சிணாமூர்த்தியின் வடிவங்களில் பல்வேறு மாறுதல்களை சங்க காலம் முதல் விஜயநகர மராட்டியர் காலத்தில் மன்னர்களின் ஆதிக்கத்தின்கீழ் இவ்வுருவம் எவ்விதம் எடுப்புவிக்கப்பட்டது என்பதை இவ்வாய்வு மூலம் அறியலாம்.

திறவுச் சொற்கள்;

     ஜடாமகுடம் மகரகுண்டலம் பத்ரகுண்டலம் உதரபந்தம் புரிநூல்.

 

சங்க இலக்கியங்களில் பத்துபாட்டுகளில் ஒன்றான சிறுபாணாற்றுப்படையில் ஆலமலர் செல்வன் பற்றிய குறிப்பு வருகிறது. (சிறுபாணாற்றுப்படை வரி 96,97)1

புறநானூறு ‘ஆலமர் கடவுள்’ என இத்தெய்வத்தைக் குறிப்பிடுகிறது. (புறநானூறு 198:9)2  

“கல்லால மரநிழலின் கீழ் தட்சிணாமூர்த்தியாய் இருந்து முனிவர் நால்வருக்கும் உபதேசித்தவரென (நற்றிணை நானூறு பாடல் 343-4)3 மற்றும் புறநானூறுற்றிலும் இச்செய்தி குறிக்க காண்கிறோம். (புறநானூறு 199-1)4

     பொ.ஆ 7-ஆம் நூற்றாண்டில் எழுந்த தேவாரம் இவ்வடிவத்தை “கல்லாலின் கீழ் அமர்ந்த பிரான்” என்றும். “நல்லார்க்கு அறப்பயன்....” என்றும் போற்றுகிறது.

     பிற்கால சோழர் கல்வெட்டு ஒன்று இவ்விறைவனை “நல்லார்க்கு அறம் உரைக்கும் நாயனார்” என்று புகழ்ந்து பேசுகின்றது. தட்சிணாமூர்த்தியோடு காட்டப்படும் ஜனகாதி முனிவர்கள் நால்வர் என சைவ ஆகமங்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் முறையே ஜனத்தனர் ஜனாதரர் ஜனத்குமாரர் ஆகியோர் ஆவர்.5 இவர்கள் தட்சிணாமூர்த்தியின் பக்கங்களில் தத்துவம் கற்கும் நிலையில் தனித்தனியாய் காட்டப்படுவது வழக்கம். சில சிற்பங்களில் தட்சிணாமூர்த்தி அமர்ந்துள்ள கயிலைமலையின் பக்கங்களில் காட்டப்படுவதுண்டு. சிவபெருமான் கொண்டருளிய 25 திருக்கோல மூர்த்தங்களில் இதுவும் ஒன்று.

     தட்சிணாமூர்த்தியின் உருவம்:

1.    ஞான தட்சிணாமூர்த்தி

2.   யோக தட்சிணாமூர்த்தி

3.   வியாக்யான தட்சிணாமூர்த்தி

4.   வீணாதர தட்சிணாமூர்த்தி

என நான்கு வகைப்படும்.6

சிவனது குருமூர்த்தமே தட்சிணாமூர்த்தி எனப்படும். ஞான உபதேசம் செய்யும் நிலை “ஞான தட்சிணாமூர்த்தி எனவும் யோகம் மேற்கொள்ளும் நிலை யோக தட்சிணாமூர்த்தி எனவும் வியாக்யானம் செய்யும் நிலை - வியாக்யான தெட்சிணாமூர்த்தி எனவும் இசையை உபதேசிக்கும் நிலை - வீணாதர தட்சிணாமூர்த்தி எனவும் பெயர் பெரும். பெரும்பாலும் கருவறையின் தென்புறத்தில் ஞானதட்சிணாமூர்த்தியின் சிற்பவடிவம் அமைக்கப்படுவது வழக்கம்.7

     தொண்டை மண்டபத்தில் தட்சிணாமூர்த்தியின்  சிற்பவடிவம் திருகழுக்குன்றத்திலுள்ள பரமேஸ்வரவர்மன் காலத்தில் (தொ.ஆ.672-700) ஆலயத்தில் முதன் முதலில் காணக்கிடைக்கிறது.8 

காஞ்சிபுரத்தில் முதலாம் இராஜசிம்மன் (தொ.ஆ.710-728) காலத்தில் கைலாசநாதர் ஆலயத்தில் தெற்கு சுவரில் தட்சிணாமூர்த்தியின் பல்வேறு வடிவங்களைக் காணலாம். அதில் ஒரு உருவம் நான்கு கரங்களுடன் உட்குடி ஆசனத்தில் அமர்ந்துள்ளது. அதன் மேற்கரங்களில் அக்கமாலையும் அனல் தண்டும் உள்ளன. கீழ் இடக்கரம் முத்திரை காட்டும் கரமாக அமைய யோக பட்டம் எனும் இடைவார் இடது முழங்காலையும் இடுப்பையும் இணைக்கிறது. அவரது திருவடியின் அருகில் கலைமானும் பினை எனும் பெண்மானும் அமர்ந்தவாறு காட்டப்பட்டுள்ளது. மேற்புறம் சீறும் சிம்மமும் கந்தர்வரும் காட்டப்பட்டுள்ளது. இது பல்லவர் கால சிற்பியின் அற்புத படைப்பகும்.9

     வேலூர் மாவட்டம் தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி மாறுபட்ட கலைவடிவில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இங்கு தட்சிணாமூர்த்தி தனது வலது காலை வளைத்து. தரையில் ஊன்றியவாறும் இடது காலை சாய்த்து பீடத்தின் மீது எழிலாக வைத்தவாறும் அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளார்;. இவரது வட்டமாக சுருண்டு விரிந்த கேசத்தின் தலைக்கோலம் பிற ஆலயங்களில் காண முடியாத அற்புத காட்சியாகும்.10

     திருத்தணி வீரட்டேஸ்வரர் கோயில் தெற்கு கோட்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சிற்பவடிவம்-அபராஜிதவர்ம பல்லவன் காலத்தியது.11   திருவளளூர் அருகில் சுருட்டப்பள்ளி சிவாலயத்தில் போக  தட்சிணாமூர்த்தியின் அரிய சிற்ப வடிவினைக் காணலாம். இங்கு தட்சிணாமூர்த்தி முதுகில் சாய்துள்ள உமாதேவி உருவம் குறிப்பிடத்தக்கது. இங்கு உமையுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியினை தாம்பத்திய தட்சிணாமூர்த்தி எனக் கூறுவர்.12 பாண்டியர் கால அரிய தட்சிணாமூர்த்தி சிற்பவடிவினை கழுகுமலை வெட்டுவான்கோயில் விமானத்தில் காணலாம்.13     இச்சிற்ப வடிவம் தெற்குதிசை கோட்டத்தில் காணப்படுகிறது. இது தட்சிணாமூர்த்தி மிருதங்கம் வாசிக்கும் நிலையில் உள்ள அரிய சிற்பமாகும்.14

     இது பராந்தக நெடுஞ்சடையன் எனும் பாண்டிய மன்னன் காலத்தியது. காலம் பொ.ஆ 8-ஆம் நூற்றாண்டு.15

     சோழர் நாட்டில் விஜயாலய  சோழர் காலத்திய நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரத்தில் விமான கீரிவ கோட்டத்தில் வீணாதர தட்சிணாமூர்த்தி சிற்பவடிவம் உள்ளது.16

     முதலாம் ஆதித்ய சோழன் காலத்திய குடந்தை நாகேஸ்வரன் கோயில் விமான கீரிவ கோ~;டத்தில் தட்சிணாமூர்த்தி வீராசனத்தில் அமர்ந்த சிற்பவடிவம் உள்ளது.17

     திருவையாறு ஐயாறப்பன் கோயிலில் உள்ள தெற்கு கோட்டத்தில் அரிய தட்சிணாமூர்த்தி சிற்பவடிவினைக் காணலாம். இங்கே தட்சிணாமூர்த்தியின் வலது திருவடியின் கீழ் ஆமை உருவம் உள்ளது குறிப்பிடத்தக்கது.18

          தஞ்சை மாவட்டம் திருந்து தேவன்குடி தட்சிணாமூர்த்தியின் வலது திருவடியில் படம் எடுத்து ஆடும் பாம்பு காட்டப்பட்டுள்ளது. தஞ்சை கலைக்கூடத்தில் காணலாம்.

முதலாம் பராந்தக சோழன் காலத்திய சிற்ப தட்சிணாமூர்த்தி சிற்ப வடிவினை புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில் விமான கீரீவ கோட்டத்தில் காணலாம்.19

கடலூர் மாவட்டம் எறும்பூர் கடம்பவனேஸ்வரர் கோயில் தேவகோட்டத்தில் வலக்காலை மடித்து இடக்காலை தொங்விட்டு அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தியின் கற்திருமேனியைக் காணலாம்.20

     மயிலாடுதுறை மாவட்டம் திருவேள்விக்குடி மணவாளநாதர் கோயில் தெற்கு தேவகோட்டத்தில் முந்தைய சோழர் காலத்திய தட்சிணாமூர்த்தியின் சிற்பவடிவினை காணலாம்.21    

திருச்சி மாவட்டம் லால்குடி “சப்தரி~ஸ்வரர்’ திருக்கோயில் தென்திசை தேவக்கோட்டத்தில் வீணாதர தட்சிணாமூர்த்தி இசை நாயகனாக நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் பெருமிதமாக காட்சியளிக்கிறார். நான்கு கரங்களில் முன்வலக்கரம் வீணையை தாங்கிப்பிடித்தும்; இடது பின்கரம் வீணையை வாசிக்கும் நிலையில் காட்டப்பட்டுள்ளார் அவரது பின் வலக்கரம் அக்கமாலையை பிடித்துள்ளது. தலையில் ஜடாபாரம் சுருண்டு விரிந்து தோள் வரை சரிந்துள்ளது. வலக்காதில் மகரகுழையும் இடக்காதில் ஓலைக்குழை எனும் பத்ர குண்டலமும் தரித்து மலர்ந்த புன்னைகையுடன் நீண்ட வீணையை மார்போடு அனைத்த வண்ணம் இசைக்கும் காட்சி ஒரு அரியப்படைப்பாகும். இது முற்காலச்சோழரின் அருங்கலைப் படைப்பாகும்.22

     சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயில் தெற்கு கோட்டத்தில் உத்குடி ஆசனத்தில் அமர்ந்த தட்சிணாமூர்த்தியின் அரிய சிற்ப வடிவினை காணலாம். இச்சிற்பம் இரண்டாம் பராந்தகன் ஆன சுந்தர சோழன் காலத்தியது. தொ.ஆ 10-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை சார்ந்தது.23

நாகை மாவட்டம் “திருநனிப்பள்ளி (புஞ்சை) நற்றுணையப்பர் கோயில் தெற்கு தேவ கோட்டத்தில் ஆதித்ய கரிகாலன் காலத்திய  (தொ.ஆ 960 – 969) ஆலமர் செல்வனின் அரிய சிற்ப வடிவினைக் காணலாம்.24

     விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு அருகே உள்ள தாதாபுரம் (இராஜராஜபுரம்) இரவிக்குல மாணிக்கேசுவரர் கோயிலில் ஆலின்கீழ் அமர்ந்து தத்துவம் போதிக்கும் தட்சிணாமூர்த்தி வடிவத்தைக் காணலாம். இச்சிற்ப வடிவம் பச்சைக்கல்லில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இவ்வுருவம் சுந்தர சோழனின் மகளும் வந்தியத்தேவனின் பிராட்டியும் இராஜஇராஜனின் தமக்கையுமான குந்தவை பிராட்டியார் காலத்தியது.25     காஞ்சிபுரம் மாவட்டம் மரக்காணம் பமீஸ்வரர்கோயிலில் தெற்கு கோட்டத்தில் ஆலின்கீழ் அமர்ந்த ஆலமர் செல்வனின் சிற்ப வடிவினைக் காணலாம். இது முதலாம் இராஜஇராஜனின் 11-ம் ஆட்சியாண்டை (தொ.ஆ.996) சார்ந்தது    

     காஞ்கிபுரம் மாவட்டம் “ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சிவபுரம் ஸ்ரீ இராஜஇராஜ ஈஸ்வர உடையார் கோயிலில் முதலாம் இராஜஇராஜ சோழன் காலத்தில் (தொ.ஆ.1007) அரிய தட்கிணாமூர்த்தி சிற்ப வடிவத்தை காணமுடிகிறது. அண்ணல் அமர்ந்துள்ள ஆலவிரு~த்தில் ஆந்தை பாம்பு கைபை ஆகியன அழகாக செதுக்கப்பட்டுள்ளன.26  

கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் இராஜேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழீஸ்வரம் கோயில் தென்திசை மாடத்தில் உள்ள ஆலமர் செல்வனின் சிற்பம் காலத்தால் பிற்பட்டது. அதன் அருகிலுள்ள முனிவர்களின் சிலைகளோ கோயிலின் சமகாலத்தவை.27

     முதலாம் இராஜேந்திரனின் இராஜகுரு சர்வசிவ பண்டிதர் எசாலத்தில் எழுப்பிய இராமீஸ்வரர் கோயில் தெற்கு கோட்டத்தில் அடர்ந்த ஆலமரத்தின் கீழ் வீராசனத்தில் அமர்ந்து ஜனாகாதி முனிவர்களுக்கு தத்துவம் போதிக்கும் நிலையில் உள்ள உருவம் பேரழகு வாய்ந்தது. இது முதலாம் இராஜேந்திரசோழன் காலத்திய அரிய சிற்ப வடிவமாகும். முதிர்ந்த ஆலின் நடுமரத்தில் உள்ள பொந்தில் ஆந்தை ஒன்று வெளிப்படுவதும் அம்மரக்கிளைகளில் தூக்குப்பபையும் மேலாடையும் ஆடும் அரவம் தொங்கும் காட்சி காணத்தக்கது.28

     திருவண்ணாமலை மாவட்டம் கூழம்பந்தல் எனும் ஊரில் இராஜேந்திர சோழனின் சிவகுரு ஈசானப்பண்டிதர் எழுப்பிய கங்கை கொண்ட சோழீஸ்வரம் எனும் கோயிலில் உள்ள ஆலமர் செல்வனின் சிற்ப படைப்பும் இராஜேந்திரன் காலத்திய தென்முக கடவுளின் சிற்பவடிவத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.29

     கங்கைகொண்ட சோழீஸ்வரம் கோயில் தென் திசைக்கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி வீராசனத்தில் எழுந்தருளியுள்ளார். இவரது தலையின் பின்புறம் முதிர்ந்த ஆலமரம் அடர்ந்த இலைகளோடு செதுக்கப்பட்டுள்ளது. அவரது திருவடியின் கீழுள்ள முயலகன் முதுகினை அண்ணலுக்கு அற்பணித்து மண்டியிட்டு வீழ்ந்துக்கிடக்கிறான். இச்சிற்பம்; இராஜேந்திர சோழர் காலச் சிற்ப கலைக்கு சான்றாக அமைந்துள்ளது.30   

மேலைக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டிருக்கு வேண்டுமென எஸ்.ஆ.பாலசுப்பிரமணியம் அவர்கள் கருதுகிறார்.31

     இக்கோயில் கருவறையைச் சுற்றியுள்ள தெற்கு தேவக்கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி சிற்பம் உள்ளது.32

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வள்ளலார் கோயில் மேதா தட்சிணாமூர்த்தி நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். நந்தியின் அமர்ந்த கோலத்தில் தட்சிணாமூர்த்தி அமைந்திருப்பதை வேறு எங்கும் காண இயலாது.33

     தஞ்சை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி பெரும் சிறப்புடையது. அந்த மூர்த்தியால் அது குருவின் திருத்தலமாக போற்றப்படுகிறது.34

அம்பர் எனும் பெருந்திருக் கோயில் தென்திசை மாடத்தில் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தியின் சிற்ப வடிவம் இருந்தது. கால வெள்ளத்தில் சிதைக்கப்பட்டு மீண்டும் தட்சிணாமூர்த்தியின் சிற்ப வடிவினை விஜயநகர காலத்தில் புதிதாய் வடிவமைத்துள்ளனர். பல்லவர் பாண்டியர் சோழர் காலத்திய தட்சிணாமூர்த்தியின் சிற்பவடிவங்களை பின்பற்றி விஜயநகர காலத்தில் அமைக்கப்பட்ட அழகிய சிற்ப வடிவமாகும் இது.

காலந்தோறும் தட்சிணாமூர்த்தியின் சிற்பவடிவங்களும் அம்பர் பிரம்மபுரீஸ்வரர் பெருங்கோயில் தட்சிணாமூர்த்தி அம்பர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் தென்திசை தேவகோட்ட மாடத்தில் தட்சிணாமூர்த்தியின் சிற்பம் கயிலை மலை மீது வீராசனத்தில் வீற்றிருக்கும் நிலையில் காட்சியளிக்கிறது. இவ்வுருவத்தின் இருபுறம் ஜனகாதி முனிவர்கள் நால்வர் வியாக்கியானம் கற்கும் நிலையில் காட்டப்பட்டுள்ளனர்.

     தென்முக கடவுளான இவ்வுருவம் இடக்காலை மடித்து வலக்காலைத் தொங்க விட்டு நான்கு கரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தியின் வலது திருவடி அபஸ்மாறன் எனும் முயலகன் முதுகில் மேல் பதிந்த நிலையில் உள்ளது.

     தட்சிணாமூர்த்தியின் தலைப்பகுதியை நேர்த்தியான வேலைப்பாடு மிக்க ஜடாபாரம் அலங்கரிக்கின்றது. அவரது ஜடாமுடி சுருண்டுவிரிந்து இருப்பக்கங்களிலும் எழிலாக சரிந்துள்ளன. அழகிய சுருண்டமுடிகள் தாழ்சடையாக தோள்வரை வனப்புடன் விரிந்து காணப்படுகிறது. ஜடாபாரத்தின் பக்கங்களில் இடை இடையே முடிச்சுக்கள் காணப்படுகின்றன. தட்சிணாமூர்த்தியின் நெற்றியைச் சுற்றிலும் முத்துக்கள் கோர்த்த நெற்றிப்பட்டம் அழகுச்செய்கிறது. வலக்காதில் மகரக்குண்டலமும் இடக்காதில் வட்டமான பத்ரக் குண்டலமும் அணிச்செய்கிறது. கழுத்தில் முத்துமாலை ஒன்றும் உதிராட்ச மாலை ஒன்றுமாக இரு கழுத்தணிகள் அழகுச்செய்கின்றன. இடது தோளிலிருந்து புரிநூல் சரிந்து வலது வயிற்றின் மீது வீழ்ந்துள்ளது மேல் வயிற்றில் சிறுமுத்துக்கள் கோர்த்த உதரபந்தம் எனும் வயிற்றுக்கச்சையாக கட்டப்பட்டுள்ளது. மேல் தோளிலும் மற்றும் முன் கைகளிலும் தோள்வளை கைவளை போன்ற அணிகள் காட்டப்படவில்லை. இடுப்பிலிருந்து மேல் தொடைவரை இடைக்கச்சை அணிச் செய்கிறது. இடையைச் சுற்றிலும் அரைப்பட்டிகை அழகுச்செய்கிறது. கால்களில் கழல்கள் அழகுச் செய்கின்றன. வலது முழங்கால் கீழ் கிங்கிணி எனும் அணி காட்டப்பட்டுள்ளது.

     வலது திருவடியின் கீழுள்ள முயலகன் மண்டியிட்ட நிலையில் முகத்தை பக்கவாட்டில் திருப்பியுள்ளான். அவன் தலையைச் சுற்றிலும் வனப்போடு விரிந்த மகுடமும் காதுகளில் குழைகளும் இடையில் ஆடையும் தரித்துள்ளான். அவனது வலக்கரத்தில் சிறிய நாகம் ஒன்று காட்டப்பட்டுள்ளது.

     தட்சிhணமூர்த்தியின் பரந்த முகம் அகன்ற நெற்றி தூக்கிய புருவம் கீழ்நோக்கிப் பார்வைச் செலுத்தும் அரைக்கண்கள் எடுப்பான மூக்கு குறுங்கழுத்து விரிந்த திருவாய் அழகான தாழ்வாய் அளவான மேலுடல் வனப்பான அங்கங்கள் எழிலான உடற்கட்டு யாவும் கொண்ட நிலையில் இவ்வுருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இச்சிற்ப வடிவின் அமைப்பும் தலைக்கோலமும் ஆடை அணிகளின் தோற்றமும் கொண்டு இதனை கி.பி.15-ம் நூற்றாண்டைச் சார்ந்த கலைவடிவமாகக் கருதலாம். இச்சிற்பம் விஜயநகர கலைப் பாணியில் அமைந்துள்ளது.இச்சிற்பம் உச்சிமுதல் பாதம்வரை தோள்பட்டை 22செ.மீ உயரமும் 40 செ.மீ அகலமும் கொண்டு அளவாக கொண்டுள்ளது.

ஜனகாதிமுனிவர்கள் நால்வர்:

     தத்துவம் போதிக்கும் அண்ணலின் முன்புறம்; வயது முதிர்ந்து தலையில் ஜடாபந்தம் தரித்து முகத்தில் மீசையும் தாடியும் கொண்ட ஜனகாதி முனிவர்கள் நால்வர் தத்துவம் கற்கும் நிலையில் அமர்ந்தக் கோலத்தில் காட்டப்பட்டுள்ளனர்.

     தட்சிணாமூர்த்தியின் வலப்புறம் வீற்றிருக்கும் இரண்டு முனிவர்களும் இருகாலை மடித்து மறுகாலை குத்திட்டநிலையில் கொண்டு வீற்றிருக்கின்றனர்.

முனிவர் 1:

     இவர் வலக்கையை தொடைமீது ஊரு முத்திகையில் ஊன்றியுள்ளார். மற்றொரு கரம் உயர்த்தி  முத்திரை காட்டுகிறது.

முனிவர் 2:

     இவர் இடக்கையில் ஓலைச்சுவடியை ஏந்தியுள்ளார். இவ்விரு முனிவர்களின் சிற்பவடிவங்கள் மட்டும் (தொ.ஆ) 11-ம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர்களின் கலைப்படைப்பாக கருதலாம்.

     தட்சிணாமூர்த்தியின் இடப்புறம் மேலும் இரு ஜனகாதி முனிவர்கள் பீடத்தின் மீது அமர்ந்துள்ளளனர். இவர்கள் இருவரது கால்களும் பத்மாசனத்தில் அமைந்துள்ளன. இவர்களின் முதல் முனிவர் வலக்கையில் ருத்ராட்ச மாலையுடன் ஞான முத்திரை காட்டுகிறார். இவரது இடக்கரம் தொடைமீது ஊரு முத்திரையில் உள்ளது. இரண்டாவது முனிவரின் வலக்கரம் ருத்ராட்ச மாலையை ஏந்திய வண்ணம் சின்முத்திரை எனும் ஞானமுத்திரையை காட்டுகிறது. இடக்கரம் புத்தக முத்திரையில் ஏட்டு சுவடி (ஓலைச்சுவடி) ஏற்றியுள்ளது. இருவரது தலைகளில் ஜடாபந்தகாவகள் அணிச்செய்கின்றன. முடியை சுற்றிலும் ருத்ராட்ச மாலைகளும் நெற்றியை சுற்றிலும் ருத்ராட்ச அணிகளும் கழுத்தில் ருத்ராட்ச மாலையும் அணிச்செய்கின்றன. இவர்கள் இடையில் கச்சை தரித்துள்ளனர். இவ்விரு முனிவர்களின் சிற்பங்கள் (தொ.ஆ) 18-ம் நூற்றாண்டை சார்ந்தவை. மராட்டியர்கள் இத்திருக்கோயிலை திருப்பணி செய்தபோது இவ்விரு உருவங்களை செய்தளித்துள்ளனர். எனவே தட்சிணாமூர்த்தியின் சிற்பதொகுப்பு. விஜயநகர மற்றும் மராட்டிய காலங்களில் செய்தளிக்கப்பட்டுள்ளன என அறியமுடிகிறது.

     ஜனகாதி முனிவர்கள் நால்வரும் அளவுகள் முறையே கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனகாதி முனிவர் 1:

     உயரம்     - 38செ.மீ

     அகலம்    - 15செ.மீ

     தோள்பட்டை    - 10செ.மீ

ஜனகாதி முனிவர் 2:

     உயரம்     -36செ.மீ

     அகலம்    -19செ.மீ

     தோள்பட்டை    -14செ.மீ

 

ஜனகாதி முனிவர் 3:

     உயரம்     -33செ.மீ

     அகலம்    -18செ.மீ

     தோள்பட்டை    -12செ.மீ

ஜனகாதி முனிவர் 4:

     உயரம்     -33செ.மீ

     அகலம்    -19செ.மீ

     தோள்பட்டை -14செ.மீ

 

     அம்பர் பிரம்மபரீசுவரர் கோயிலின் தட்சிணாமூர்த்தியின் சிற்ப வடிவத்தின் பின்புறம் ஆலவிருட்சம் எதுவும் காட்டப்படவில்லை. மிக எளிமையான முறையில் கயிலை மலைமீது வீராசனத்தில் வீற்றிருக்கும் இச்சிற்பவடிவம் திருவேள்விக்குடி ஸ்ரீமணவாளேஸ்வரன் கோயில் தட்சிணாமூர்த்தி.35

 

     கோனேரிராசபுரம் கோயில் தட்சிணாமூர்த்தி.36 மேலப்பாதி சுரகரேசுவர் கோயில் தட்சிணாமூர்த்தி.37 மற்றும் மயிலாடுதுறையில் மய10ரநாதர் கோயில் தட்சிணாமூர்த்தி.38

     ஆகிய சிற்பங்களுடன் அம்பர் தட்சிணாமூர்த்தி சிற்பவடிவம் ஒப்புநோக்கதக்கது. மேற்படி கோயில்களில் உள்ள தட்சிணாமூர்த்தியின் சிற்பவடிவம் யாவும் ஆல விருட்சங்கள் ஏதும் காட்டப்படாமல் தட்சிணாமூர்த்தி வடிவம் மட்டும் காட்டப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது ஆகும்.

அடிக்குறிப்பு

1.    சிறுபாணாற்றுப்படைää வரி 96,97

2.   புறநானூறு 198:91

3.   நற்றிணை நானூறு பாடல் 343-4

4.   புறநானூறு 199-

5.   ஆ.சிங்காரவேலு முதலியார் - “அபிதான சிந்தாமணி ஏசியன் எஜிகேசனல் சர்வீஸ்ää புதுடில்லி -1991 ப.860

6.   எஸ்.நாராயணசுவாமி - “படிம திருக்கோலங்கள் (பிரதிமா லட்சணம்)ää திருவாடுதுறை ஆதினம் 1998ää பக்கம் 88-94

7.    இரா.சிவானந்தம் -“திருமாணிகுழி (பதிப்பாசிரியர்) முனைவர்.தி.ஸ்ரீதர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு      சென்னை - 2010 பக்கம்:21.

8.   கோ.எழில் ஆதிரைää செம்பியன் மாதேவி கலைக்கோயில்கள் தொகுதி-ஐ கோனேரிராஜபுரம் இயல் பதிப்பகம்    தஞ்சாவூர்    2015 பக்கம். 219

9.   (K.R. Srinivasan – Temple of Later Pallavas in Promod Chandra (Ed) Studies in Indian Temple Architecture, New Delhi.1975 AIIS. PP. 197/239)

10.   எம்.ராஜகோபலன் - “திருவருள் வழங்கும் திருத்தலங்கள் இந்து பப்ளிகே~ன்ஸ் சென்னை 1997: பக்கம்: 60 – 61    படம்   எண்.4

11.   பெ.தங்கவேல - திருத்தணி தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை சென்னை 2010 பக்கம்:29-30

12.   கி.ஸ்ரீதரன் - சுருட்டப்பள்ளி திருக்கோயில் திருவள்ளூர் மாவட்ட தடயங்கள் (பதி) நடன.காசிநாதன் மா.சந்திரமூர்த்தி மணிவாசகர் பதிப்பகம் சென்னை 2014 பக்கம்:141

13.   C. Sivaramurthi – Kazhugumalai and early pandiya Rockcut Caves Temple, PP.22, Plate.5

14.   பொ.இராஜேந்திரன். சொ. சாந்தலிங்கம் - “கோயிற்கலை  நியூசெஞ்சரி புக் ஹவுஸ் (Pஎவ) பக்கம்:98 2014

15.   மா.சந்திரமூர்த்தி – கலைகள் - “சிற்பக்கலை - பாண்டியர்” காலம்ää தமிழ் வளர்ச்சி இயக்கம் சென்னை-108 2000

16.   எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் ‘நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம்-தமிழ்நாட்டு சிவாலயங்கள்(தொ.ஆ) மா. சந்திரமூர்த்தி மணிவாசகர் பதிப்பகம் 2004 பக்கம்:32-54 படம் பக்கம்:325.

17.   தமிழ்நாட்டு சிவாலயங்கள் - தொகுதி – 2 – பக்கம்:254

18.   சு.இராஜகோபால் - “திருவையாறு” – தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு சென்னை-1978 பக்கம்:80இ படம் எண்:88

19.   இரா.நாகசாமி “கவின்மிகு சோழர் கலைகள் தமிழ் ஆர்ட்ஸ் அகடெமி சென்னைää 2011 பக்கம்:9 படம்:9

20.   பொ.இராசேந்திரன் சொ.சாந்தலிங்கம் - கோயிற்கலை – “நிய10 செஞ்சரி புக்ஹவுஸ் சென்னை-2016 பக்கம்-91

21.   மா.சந்திரமூர்த்தி அர.வசந்த கல்யாணி “திருவேள்விக்குடி ஸ்ரீமணவாளேஸ்வரர் திருக்கோயில்” மணிவாசகர் பதிப்பகம் சென்னை 2016 பக்கம்:72-76       

22.   கி.ஸ்ரீதரன் - கோ.முத்துசாமி – திருத்தவத்துறை திருத்தல வரலாறு அருள்மிகு சப்தரி~ஸ்வரர் திருக்கோயில் வெளியீடு லால்குடி 2011 பக்கம்:32,33 படம் பக்கம்:29

23.   முனைவர் க.ஆ. கவிதா-சுந்தரசோழன் கால கற்றளி கலைத்தாய் பதிப்பகம் சென்னை-2017

24.  மா.சந்திரமூர்த்தி – தமிழ்நாட்டு சிவாலயங்கள் தொகுதி-2 பக்கம்:98

25.   முத்து எத்திராசன் - மா.சந்திரமூர்த்தி-“குந்தவையின் கலைக்கோயில்கள் சேகர் பதிப்பகம் சென்னை-78 முதற்பதிப்பு 1992 பக்கம்;:148.

26.   பா.சகீலாபானு-சிவபுரம் “தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை சென்னை 2015 பக்கம்:12,13 படம்:112

27.   இரா.நாகசாமி-கங்கை கொண்ட சோழபுரம் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுதுறை வெளியீடு 1986 பக்கம்:18ää படம் பக்கம்:1

28.   மா.சந்திரமூர்த்திää ச.கிரு~;ணமூர்த்தி சேகர் “எசாலம் வரலாற்றுப் புதையல்” சேகர் பதிப்பகம் சென்னை1995 பக்கம்:201-203

29.   மா.சந்திரமூர்த்தி -“இரண்டாம் கங்கை கொண்ட சோழபுரம் - கூழம் பந்தல்  SILHOUETTF OF SOUTH INDIAN HISTORY, ARCHAEOLOGY, EPIGRAPHY, CULTURE AND TOURISM (EDITOR) J. SOUNDARAJAN, DEPT. OF ANCIENT HISTORY AND ARCHAEOLOGY, UNIVERSITY OF MADRAS. PREETHI PUBLICATION, PALLIKARANAI, CHENNAI -100, 2016, PAGE:168-171

30.   மேலது பக்கம்:168-171

31.   எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்-‘சோழர் கலைப்பாணிஇ’ பக்கம்:152

32.   டாக்டர்.எ.ஏகாம்பரநாதன்-“தமிழகச் சிற்ப ஓவியக்கதைகள் கழக வெளியீடு சென்னை-108 பக்கம்:61

33.   சிற்பக்கலை செ.வைத்தியநாதன் மெய்யப்பன் பதிப்பகம் சிதம்பரம் 2003 பக்கம்:161

34.  மேலது பக்கம்:160

35.   மா.சந்திரமூர்த்திஅர.வசந்த கல்யாணி திருவேள்விக்குடி ஸ்ரீமணவாளேஸ்வரர் திருக்கோயில் மணிவாசகர் பதிப்பகம் பாரிமுனை சென்னை-108 முதற்பதிப்பு 2016 பக்கம்:72-75 படம்:74

36.   முனைவர் கோ.எழில் ஆதிரை “செம்பியன் மாதேவி கலைக்கோயில்கள”; தொகுதி-1 கோனேரி ராசபுரம் இயல் பதிப்பகம் - தஞ்சாவ10ர் முதற்பதிப்பு 2015 பக்கம்:281-282

37.   தமிழ்நாட்டு சிவாலயங்கள் தொகுதி-2 (தொகுப்பாசிரியர்) மா.சந்திரமூர்த்தி மணிவாசகப்பதிப்பகம் சென்னை-108 முதற்பதிப்பு-2004 பக்கம்:121-122

38.   மேலது பக்கம்:150 படம்:183