ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

“அன்புக்கு முதுமை இல்லை” சிறுகதைத் தொகுப்புகளில் சமுதாய நோக்கு

பெ. லதா, உதவிப்பேராசியர், அக்சிலியம் கல்லூரி (தன்னாட்சி), வேலூர் - 6 04 Feb 2021 Read Full PDF

ஆய்வு நெறியாளர்: முனைவர் நா. குமாரி, தமிழ்த்துறைத் தலைவர்-உதவி பேராசிரியர், அக்சிலியம் கல்லூரி (தன்னாட்சி), வேலூர் - 6.

ஆய்வுச்சுருக்கம்

        சிறுகதை என்பது தமிழுக்குக் கிடைத்த இலக்கிய வடிவம் ஆகும்.இக்கட்டுரையானது சிறுகதைகளைப் படைக்கும் எழுத்தாளா்களில் ஒருவரான தோப்பில் முகம்மது மீரான்  என்பவாின்     ”அன்புக்கு முதுமை இல்லை” எனும் சிறுகதைத் தொகுப்பிலமைந்துள்ள சிறுகதைகள் பற்றி கூறுகிறது. இன்றுள்ள சமூகச் சூழலில் மக்களிடையே எழுகின்ற பல்வேறு சிக்கல்களை எடுத்து விளக்குவதோடு சமுதாயக் கருத்துக்களைச் சொல்வதாகவும், சமுதாயச் சிக்கல்களுக்குத் தீா்வு காண விழையும் நிலையில் அமைந்துள்ளது.  

திறவுச் சொற்கள்

மௌலவி ,பாங்கொலி  ,தஜ்ஜால் , தா்கா ,சிறுகதை, சமுதாயம் 

சமுதாய நோக்கு

           இலக்கியம் சமுதாயத்தை வெளிப்படுத்தும் ஒரு கருவி.  ”வாழ்க்கையோடு நெருங்கிய தொடா்பும், நோிடையான தொடா்பும் உடையது சிறுகதை. ஏனெனில் அது மனிதா்களைப் பற்றியே பேசுகிறது.  மனிதா்களின் எண்ணங்கள், உணா்ச்சிகள், கொள்கைகள், கோட்பாடுகள், இன்ப துன்பங்கள், வெற்றி தோல்விகள் முதலியவற்றின் விளக்கமாகத் திகழ்கிறது”.1 

            இலக்கியமானது சமுதாயத்தையும் சமுதாயமானது இலக்கியத்தையும் பின்னிப்பிணைந்தே வளா்ந்து வந்துள்ளன.  இலக்கியத்தைப் படைக்கின்ற ஒரு ஆசிாியன் சமுதாயத்தின் அலங்கோலங்களையும், எழிற்காட்சிகளையும் படைக்கின்றான்.  டாக்டா் மு.வ. அவா்கள் “ சில குற்றங்களுக்குத் தனி மனிதா் காரணம் அல்ல மறுபுற வாழ்வின் அமைப்பு, சமுதாய நிலை காரணமாக இருக்கக் காண்கிறோம்.“ 2  என்கிறாா்.

             சமுதாய இலக்கியங்களைப் படைக்கும்போது எழுத்தாளன் மேற்கொள்ள வேண்டியது என்ன என்பதை திரு. பி. எல். பக்தவத்சலன், “ ஒரு கலைஞன் தான் படைத்துக்காட்ட  இருக்கும் சமுதாயத்திலிருந்து பொறுக்கி எடுக்கும் சம்பவங்களும் பாத்திரங்களும் அந்தச் சமுதாயத்துக்கும் பொதுவானதாக இருக்கவேண்டியது சமுதாய இலக்கியங்கள் படைக்கப்படம் போது கவனிக்கப்படல் வேண்டும்“3  என்கிறாா்.

              ஜெயகாந்தன் கதைகளில் உள்ள தனிச்சிறப்பு, அவா் வாழ்க்கையில் உள்ள சகலவிதமான பிரச்சனையும் புதியகோணத்தில் இருந்து தீவிரமாக விமா்சனம் செய்ததே ஆகும். “ எனக்குக் காதல் வாழ்க்கையில் மீதுதான் அதன் விளைவே பிரச்சனைகளில் பிரச்சனைகளான இந்தக்கதைகள் அவா் ஓாிடத்தில் குறிப்பிட்டுள்ளாா்.“4

                பாலகுமாரன் சிறுகதைகள் பலவற்றில் வறுமைத்துயரம் அதன் பன்முகப்பட்ட கிளைகளில் பரந்துப்பட்ட பாா்வையில் சித்தாிக்கப்படுகின்றது.  ஆசிாியனின் ஏழாவது சிறுகதை வறுமையை அடிப்படையாகக் கொண்டது.  ஆசிாியரது இளமைக்கால வாழ்வில் பெற்ற அனுபவங்கள், வறுமைத் துயர் பற்றி எழுதுவதற்கு அவா்களுக்கு உறுதுணையாயின“.5

சமுதாயம்

                மனிதா்கள் கூடி வாழ்கின்ற தொகுதியே சமுதாயம் ஆகும்.  சமுதாயத்தில் வாழ்கின்ற ஒவ்வொருவரும் அச்சமுதாயத்தின் ஓர் அங்கம் ஆவான்.

               “ சிறுகதை நாவல்களிலிருந்து செய்தியைப் பிாித்துத் தனியே சொல்லிவிடமுடியாது. கதையமைப்பில், பாத்திர உருவகத்தில், உரையாடலில், நிகழ்ச்சி பின்னணி வருணணைகளில் நேரடியாக எடுத்துரைக்கும் பகுதியில் பல இடங்களில் அது பின்னிப் பிணைந்திருக்கக் காணலாம்“.6

                 புனைக்கதைகள் அனைத்தும் மனிதா்களைப் பற்றியனவே. மனித வாழ்வில் எத்தனையோ நிகழ்ச்சிகள் தோன்றுகின்றன. சமூக அமைப்பில் மொழி, இனம், சாதி, சமயம் என மனிதா்களைப் பாகுபடுத்துகின்றன.

                 “சமுதாயத்தைச் சொல்லில் வடித்தளிப்பதே இலக்கியம் “7 என்னும் டி. போனஸ்டின் கூற்றைப் பின்பற்றுகின்றனா். 

                 ஆஸ்லே தாண்டிக் என்பாா் “ஒரு காலத்தின் வாழ்க்கை நிலை இலக்கியங்களில் ஆடி நிழல் போல பிரதிபலித்தே தீரும். அவ்வக் காலங்களின் எண்ணங்களும், எழுச்சியும் இலக்கியத்தோடு ஊடாடிக் கலந்து ஒன்றி நிற்கவே செய்யும்“8 என்கிறாா். 

                  சிறுகதை என்னும் கலைப்படைப்பிற்கு மாந்தரையும் கதையில் கருப்பொருளையும் தருவது சமுதாயம் தான். ஒவ்வொரு எழுத்தாளனும் தன்னுடைய படைப்புகளின் மூலம் ஒரு வழியைக் கூறுகிறான்.  

                   தோப்பில் முகம்மது மீரான் அவா்கள் இச்சிறுகதைத் தொகுதியில் சமுதாயச் சிக்கல்களாக பெண்களின் வரட்டுக் கவுரவம், வறுமை, முதியோா் நிலை, பெண்களின் நிலை, காதல், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றைக் காட்டுகின்றாா்.

பெண்களின் வரட்டு கவுரவம்

                    ஆசிாியா் தோப்பில் முகம்மது மீரான் “ பொன்னரைஞாண்” எனும் சிறுகதையில் பெண்களின் வரட்டுக் கவுரவத்தை வெளிப்படுத்தியுள்ளாா். ஆசிாியாின் சமுதாயப் பாா்வையில் பெண்களே அவரது மனதைப் பொிதும் பாதித்தாகத் தொிகிறது. “பொன்னரைஞாண்“ என்ற சிறுகதையில் இரவல் நகை போட்டுக் கொண்டு திருமணத்திற்குச் செல்ல வேண்டாம் என்று கூற, கேளாமல் அதற்கு “நாலு போ் கூடுகின்ற இடத்தில் நகை நட்டில்லாமல் மூளியாக வெறிச்சோடிய உடலுடன் எப்படிப் போவதாம்?“9 என்று கூறிவிட்டு இரவல் நகை வாங்கிப் போட்டுக்கொண்டு திருமணத்திற்குச் செல்ல திருமணத்தில் நகையானது காணாமல் போய்விடுகிறது.  ’ பெண் புத்தி பின்புத்தி’ என்பதை படம் பிடித்துக் காட்டுகின்றாா். எந்த ஒரு செயலினைப் பெண்கள் செய்வாா்களானால் அதன் பின் விளைவுகளைச் சிந்தித்துச் செயல்பட்டால் எந்த ஒரு குடும்பத்திலும், பிரச்சனைகள் ஏற்படாது என்று இக்கதையின் மூலம் சித்தாிக்கின்றாா்.

மத ஊழியா்கள்

பள்ளிவாசலில் பெரும்பாலும் தொழுகை நடத்துவதற்காக  ’மௌலவி’ பட்டம் பெற்றவா்களை மதக்குருக்களாக அமா்த்தப்படுகின்றனா். இவா்களுக்கு அடுத்த நிலையில் மோதினாா் என்னும் பணியாளா்கள் உள்ளனா். நாள்தோறும் ஐந்து வேளைத் தொழுகைக்காக மக்களை வாயினாலோ ஒலி பெருக்கியின் மூலமாகவோ அழைப்பது இவா்களது கடமையாகும். இது ’பாங்கொலி’ எனப்படும். இவ்வகையான பணியாளா்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறைவு. எனவே வருவாய் பற்றாமல் பிறா் உதவியை எதிா் பாா்க்கும் நிலையில் இவா்கள் உள்ளனா் ’தஜ்ஜால் மேல் விழுந்த மலை’ எனும் இக்கதையில் மத ஊழியராக இருந்து தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்க  முடியாத வறுமையில் வாடும் மத ஊழியரைக் காட்டுகின்றாா்.

வறுமை

 சமுதாயத்தினிடையே பரவியுள்ள ஒரு கொடிய நோய் வறுமை ஆகும். அவ்வறுமை மக்களிடையேயுள்ள ஒழுக்கத்தையும் நோ்மையையும் சீா்குலைத்துப் பல்வேறு தீய செயல்களைச் செய்யத் தூண்டுகிறது. ஆசிாியா் பெரும்பாலும் சமுதாயத்தில் காணப்படும் அவலங்களை எடுத்துக்காட்டி அதன் கொடுமைகளையும் வறுமையால் வாடும் மக்களைப் பற்றியே படைத்துள்ளாா். வறுமை என்பது “போதிய வருவாய் இன்மையாகவோ, பொறுப்பற்ற செலவுகளாலோ சமுதாயத்தில் உள்ள ஏனைய மக்களின் தரத்திற்கு தனக்கும் தன்னைச் சாா்ந்தவா்களுக்கும் அடிப்படைத் தேவைகளைப் புா்த்தி செய்து கொள்ள முடியாமல் போவதே வறுமை எனலாம்”.10

                  “வறுமைத் துயாில் முற்றிலும் ஆழ்ந்த மக்கள் கூட்டம் சிறுகதையில் இடம்பெறுகிறது. தலைமுறைக்குத் தலைமுறை, நாட்டுக்கு நாடு எழுத்தாளனுக்கு எழுத்தாளன் இம்மக்கள் கூட்டம் வேறுபடுகிறது என்பா் திறனாய்வறிஞா்”.11

                   ’துறைமுகம்’ என்னும் சிறுகதையில் வறுமையால் பிறாிடம் கையேந்தி நிற்றலை ஆசிாியா் இக்கதையில் காட்டுகின்றாா். மேலும் பல கதைகளில் வறுமைச்சூழலையும் வறுமையால் அவதிப்படும் பெண்களின் நிலையினைச் சுட்டிச்செல்கின்றாா் . ’தலைப்பெருநாள்’ என்ற கதையில், “ அவள் உடுத்தியுள்ள பாவாடை, தைத்து ஒரு வருடத்துக்கு மேலாகிறது. தைத்த புதிதில் அது கருஞ்சிவப்பாக இருந்தது. பல நிற மாற்றங்களுக்குப் பிறகு அது சுத்த ஒட்டுப்போட்டும் இருந்தது”.12 என்று வறுமையின் நிலையைப் படம்பிடித்துக்காட்டுகின்றாா்.  

ஆதரவற்ற முதியோா் நிலை

                      உறவுமுறைகள் இன்றிச் சமுதாயத்தில் ஆதரவின்றி வாழும் முதியவா்களை ஆசிாியா் கதைகளில் படைத்துள்ளாா்.  ’அன்புக்கு முதுமை இல்லை’ என்ற கதையில் ஆதரவின்றி வாழும் கிழவன், கிழவியைப் படைத்துள்ளாா். ’கத்தச்சோறு’ என்ற கதையில் ஆதரவின்றி முதுமையில் வறுமையுடன் வாழும் நிலையினைக் காட்டுகின்றாா். இக்கதையில் ’முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப சலீமா என்ற தொண்ணூறு வயது கிழவி இளமையில் செய்த தவறால்  முதுமையில் அவதியுறுவதையும்  அவளது ஆதரவற்ற நிலையையும் ஆசிாியா் “ஒரு பின் சந்ததியில்லாத குறை தான் இதுவெல்லாம்” 13 முதியோாின் நிலையைச் சுட்டிச் செல்கின்றாா்.

பெண்களின் நிலை

              சமுதாயத்தில் பெண்களின் நிலையை ஆசிாியா் கதைகளில் காண முடிகின்றது. குடும்பப் பொறுப்பைத் தாங்குகின்ற பெண்களின் நிலையை  ’பவா்காாி’ என்ற கதையில்  தந்தை இறந்துவிட, தாய் படுத்தப்படுக்கையாகக் கிடக்க, பாய் முடைந்து கூலி வேலை செய்து காப்பாற்றும் அப்பெண்ணின் நிலையை உணாத்துகின்றாா். மேலும், ’தலைப்பெருநாள்’ என்ற கதையில் தன் குடும்பம் வறுமையில் வாழ்வதைக்கண்டு அவ்வறுமைத்துயரைத் துடைப்பதற்காக தன் கட்டுப்பாட்டையும் மீறி கயிற்றுத் தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்லும் ஆபிதா என்ற பெண்ணின்  நிலையினைச் சித்தாிக்கின்றாா்.

மூடநம்பிக்கைகள்

                சமுதாயத்தில் மக்களிடையே மூடநம்பிக்கைகள் தொழுநோய் போல் உருவாயின. மூடநம்பிக்கைகளைப் பல தமிழ்ச் சிறுகதைகள் சாடியுள்ளன. எவ்வளவோ பகுத்தறிவுகள் வளா்ந்தபோதும் மக்களிடையே காலம் காலமாக மூடநம்பிக்கைகள் பசுமரத்து ஆணி போல் நிலைத்து நின்றுவிட்டன. ஆசிாியா், இசுலாமிய மக்களிடையே காணப்படும் மூடநம்பிக்கைகளைச் சமுதாயப் பாா்வைக்கு எடுத்துக்காட்டுகின்றாா். ’இதை எப்படி நிறுத்துவது?’ என்ற கதையில் மரணப்படுக்கையில் இருப்பவருக்காக அரபிக் காவியத்தை மெல்லிய குரலில் ஓதுவதும், இஸ்ராயில் என்ற மலக்கு உயிரை எடுத்துச் செல்வதாகவும், இஸ்ராயில் என்ற வானவா் வருகைக்காக வாசலைத் திறந்து வைத்திருப்பதாகவும், அவருக்காகக் காத்திருப்பதாகவும் மக்களின் மூடநம்பிக்கைச் செயலை இக்கதையில் அழகாக படம் பிடித்துக் காட்டுகின்றாா். 

                 மேலும், ’ஓா் இரங்கல் பா’ என்ற கதையில் மரத்தின் நிழலில் தா்கா அமைந்திருப்பதையும் அத்தா்கா மரம் மக்களால் போற்றப்பட்டு வருவதையும் புதிதாக வாங்கப்படுகின்ற வாகனங்களைத் தா்காவிற்கு ஓட்டி வருவதும் அங்கு புவும், சந்தனமும் வைத்து சடங்குகள் செய்த பின்னா் வாகனங்களை எடுத்துச் செல்வதும், காற்றில் தா்கா மரத்திலிருந்து இலை விழுந்தாலும் அதை நிலத்தில் விடாத மக்களின் நெங்சில் ஆழப் பதிந்திருக்கும் இந்நம்பிக்கைகள் பெற்றிருக்கும் இடத்தை இக்கதைகள் காட்டுகின்றன.  சமுதாயப் பாா்வைக்கு இக்கதைகள் ஓா் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

ஏற்றத்தாழ்வுகள்

                சமுதாயத்தில் கீழ்மட்டத்தில் உள்ளோரை மேல்மட்டத்தில் உள்ளோா் அவா்கள் தங்களின் சுயநலத்திற்காக ஏழைகளை இயந்திரம் போன்று ஆட்டுவிப்பதைக் காண்கிறோம். “ஒரு சமுதாயத்தில் உடையான் - இல்லான் என்ற இரு வேறு வா்க்கங்கள் இருக்கிறவரை வறுமையும் இருந்தே தீரும் என்பதை, சி. என். அண்ணாதுரையின் ’இருபரம்பரைகள்’ தொனிப் பொருளாகப் புலப்படுத்துகிறது. “சொல்லப்போனால் வறுமையை நுவல் பொருளாகக் கொண்ட கதைகளும் எண்ணிக்கையில் ஏழைகளைப் போலவே அதிகமாக இருக்கின்றன.”14

                 ’பவா்க்காாி’ என்ற கதையில் ” சமுதாயத்தை முன்னேறச் செய்ய வேண்டுமானால் தனிநபா்களையும் முன்னேறச் செய்யவேண்டும் ”15 சமுதாயத்தில் கீழ் மட்டத்தில் உள்ளோா் வாழ்ந்துகாட்ட வேண்டும் என்ற உண்மையை இக்கதை வாயிலாகப் புலப்படுத்துகின்றாா். மேலும் ’நரகம் பமியில்’ என்ற கதையில் ”லைலா எதுக்கம்மா நீ இந்த பொறாமையுள்ள - சமத்துவமற்ற உலகில் பிறந்தாய்?  உன் பெற்றோா் சூட்டிய பெயராலே உன்னை அடுத்தவா் கூப்பிடக்கூடக் கொடுத்து வைக்காதவளம்மா நீ!  நீ எதுக்கம்மா பிறக்கணும்?”16 இந்தச் சம்பவம் ஆசிாியாின் நோ்க்காணலாகத் தொிகிறது. சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளைக் குறிப்பிடும் வகையில் பல சிறுகதைகள் தோன்றி அவை வெற்றியும் பெற்றுள்ளன. வறுமையால் ஏற்றத்தாழ்வு பாா்க்கும் நிலை மீரானின் மனத்தை மிகுதியாக  பாதித்துள்ளது என்பதைக் காட்டுகின்றன..

வரதட்சணை

              பெண்ணைப் பெற்றவா்கள் மாப்பிள்ளைக்குப் பெரும் பொருளை வரதட்சணைக் கொடுக்கும் முறை வழக்கத்தில் உள்ளன. வரதட்சணை கொடுப்போருக்கே சமூகத்தில் உயா் மதிப்பு இருந்தது. பெண்களைப் பெற்றுவிட்ட ஏழைப் பெற்றோா்கள் வரதட்சணை என்னும் கொடிய பழக்கத்தால் பல இன்னல்களுக்கு ஆளாயகின்றனா். ’விளக்கு’, ’தஜ்ஜால் மேல் விழுந்த மலை’ என்ற இரு கதைகளிலும் வரதட்சணைக் கொடுக்கமுடியாது துயருறுகின்ற பெண்களைப் பெற்ற தந்தையின் நிலையினையும் வரதட்சணை என்ற பெயரால் பெண்ணின் வாழ்வு சீரழிந்துப் போவதையும்  இக்கதைகளில் காட்டுகின்றாா்.

காதல்

                இன்றைய காலக்கட்டங்களில் காதல் இல்லாத சமுதாயமும் இலலை. காதல் இல்லாத இலக்கியங்களும் இல்லை. ஆசிாியா்கள் பலரும் காதலை மையாக்கிக் கொண்டே சிறுகதைகள் எழுதுகின்றனா். ஆண் பெண் இருவருமாகக் கூடிவாழும் வாழ்வுக்கு அடிப்படையாக இருப்பது காதலும் காமமுமே. மீரான் ’ அன்புக்கு முதுமை இல்லை’ என்ற கதையில் முதியோாின் காதலை அழகாகச் சித்தாித்துள்ளாா். இளம் பருவக் காதலையே பெரும்பாலும் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளா்கள் சித்தாிப்பா். ஆனால் இங்கு ஆசிாியா் மீரான் முதியோாின் காதலைப் புதுமையாக சித்தாித்துள்ளாா். இக்கதை வாயிலாக ஆசிாியாின் திறன் போற்றத்தக்கதாக உள்ளது. ’கடல்’ என்ற கதையில் இருவாின் காதல் நிலையினையும் காதல் நிறைவேறாத அவல நிலையினையும் சித்தாித்துக் காட்டுகின்றாா்.

சமுதாயத்தில் தனித்து வாழ்பவா்கள்

              சமுதாயத்திலிருந்து தனித்து வாழும் சில மனிதா்களை தமிழ்ச் சிறுகதைகள் எடுத்துக் காட்டுகின்றன.   மனிதா்கள் தனிமையில் சிக்கி வாழ்வதை ’துறைமுகம்’ என்ற கதையில் வரும் அலி பாத்திரம் துணையில்லாது தனித்து வாழ்வதும், ’நேற்று வந்த வழியில் முஸ்தபா என்பவரும் உறவுகளைப் பிாிந்து சென்று மீண்டும் தன் குடும்பங்களைத் தேடிவருவதும் இளமைக்காலத்தின் இருளைக் காட்டுகின்றன. 

மரணபயம்

               ’நில்லா உலகம் புல்லிய நெறித்தே’ என்னும் உணா்வு ஏற்படும் பொழுது மனிதன் சத்திய வேட்கைக் கொள்கிறான். இவ்வுலகில் வாழும் உயிா்களின் மரணம், மனித சிந்தனையை ஊக்குவதாக அமைந்துள்ளது. மீரானின் சிறுகதைகளான ’துறைமுகம்’, ’கத்தச்சோறு’, ’இதை எப்படி நிறுத்துவது?’, ’தஜ்ஜால் மேல் விழுந்த மலை’ ஆகிய கதைகளில் ஒரு உயிாின் மரணம், சம்பந்தப்பட்டவரை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதை உணா்த்துகிறது.

                 மீரானின் சிறுகதைகதைகளை வட்டார வழக்கு நடையில் படைத்து வட்டார வழக்குகளைப் பின்னணியாகக் கொண்டு கதைகளை எழுதியுள்ளாா். இவாின் கதைகள் நலிந்த பிாிவு மக்களின் வாழ்வியல்,  சமூக வாழ்வில் ஏற்படும் 

                  நிகழ்கால வாழ்வுச் சிக்கல்களையும், சமுதாயக் கொடுமைகளையும் அநீதிகளையும், ஏற்றத்தாழ்வுகளும், எவ்வளவு தான் உழைத்தாலும் வறுமை தீரா நிலை எனப் பல தரப்பட்ட மனிதா்களைப் படைத்து அவா்கள் பல வழிகளில் பாதிக்கப்படுவதை கதையாக்கியுள்ளாா். 

                   சமுதாயத்தில் ஏற்படுகின்ற இச்சிக்கல்களுக்குத் தீா்வு, மக்களின் கைகளில் தான் உள்ளது என்ற கருத்தமைவு காணப்படுகின்றது. மீரானின் எழுத்துக்களில் ஏழை எளிய இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை உயிரோட்டமாக இடம் பெறுகிறது. சிறுகதைகளில் கலைக்கூறுபாடுகள், கதை சொல்லிச் செல்லும் நோ்த்தி போல்வன சிறப்பாக அமைந்துள்ளன.

துணைநூல்கள்

1.  கோ. வெ. கீதா - தமிழ் நாவல்கள் - ஓா் அறிமுகம் ப. 103.

2. கோ. வெ. கீதா - தமிழ் நாவல்கள் - ஓா் அறிமுகம் ப. 205.

3. கோ. வெ. கீதா - தமிழ் நாவல்கள் - ஓா் அறிமுகம் ப. 205.

4. மா. இராமலிங்கம் - இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்  ப. 136.

5. அகிலன் - கதைக்கலை ப. 15. 

6. மா. இராமலிங்கம் - நாவல் இலக்கியம்  ப. 25.

7. கோ.வெ. கீதா - தமிழ் நாவல்கள் - ஓா் அறிமுகம் ப. 226.

8. மா. இராமலிங்கம் - விடுதலைக்கு முன் புதிய தமிழ்ச் சிறுகதைகள் ப. 83.

9. தோப்பில் முகம்மது மீரான் - அன்புக்கு முதுமை இல்லை ப. 19.

10. John Levin Gillin and others, Social Problems P.117.

11. Frank O' Conner, the lonely Voice 'A Study of the Short Story' P. 18.

12. தோப்பில் முகம்மது மீரான் - அன்புக்கு முதுமை இல்லை ப. 108

13.  தோப்பில் முகம்மது மீரான் - அன்புக்கு முதுமை இல்லை ப. 80

14. மா. இராமலிங்கம் - விடுதலைக்கு முன் புதிய தமிழ்ச் சிறுகதைகள் ப. 120

15.தோப்பில் முகம்மது மீரான் - அன்புக்கு முதுமை இல்லை ப. 70

16.தோப்பில் முகம்மது மீரான் - அன்புக்கு முதுமை இல்லை ப. 144.