ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

அகநானூறு காட்டும் சமூகம்

ச.வீரபத்திரன், முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்), அரசுக்கலை கல்லூரி, திருவண்ணாமலை - 606603 30 Apr 2021 Read Full PDF

கட்டுரையாளர்

ச.வீரபத்திரன்,

முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்),

அரசுக்கலை கல்லூரி,

திருவண்ணாமலை - 606603

நெறியாளர்

முனைவர் .ப. சுப்புலெட்சுமி

இணைப் பேராசிரியர்

தமிழ்த்துறை

அரசு கலைக் கல்லூரி

திருவண்ணாமலை-606603

*

ஆய்வுச் சுருக்கம்

    எட்டுத் தொகை என்ற பகுப்புக்குள் உள்ள ஒரு தொகைநூல் அகநானூறு ஆகும். அகம் பற்றிய 400 பாடல்களான இத்தொகை நூல் அடி நீண்ட பாடல்களை கொண்டது என்ற பொருளில் நெடுந்தொகை எனவும் வழங்கப்படும். ஆசிரியப்பாவால் இயற்றப்பெற்ற 400 அகப் பாடல்களான தொகை நூல். இந்நூல் 146 புலவர்கள் பாடியுள்ளனர். இவற்றில் சமூக அமைப்பின் முறையில் அரசியல் முறைகள், ஊர் அவையில் சீர்தூக்கி சிறப்பாக ஆட்சிமுறைகள் இருந்துள்ளன. வழிபாட்டு முறைகளில் நடுகல் வழிபாடுகள் தமிழ் சமூகத்தில் ஒன்றோடு ஒன்று  பிணைந்திருந்தன. உழவுத் தொழிலும் தமிழ் மக்களிடையே காலம் காலமாக இருந்து வந்துள்ளதை அறியலாம். மக்களின் பழக்க வழக்கங்கள் சங்க காலம் முதல் தற்காலம் முதல் மக்களோடு இடைவிடாது காணப்படுகின்றன.

திறவுச் சொற்கள்

ஒற்றி, விளி, பனிமலர், சிறுகோட்டு, திட்பம், கொழும், மூதாளர், புலைத்தி.

முன்னுரை

சங்கக்கால மக்கள் அறம் நிறைந்த வாழ்க்கை நெறியையும் சமயத்தைச் சார்ந்த ஆன்ம நெறியையும் கடைப்பிடித்தனர்.  வாழ்க்கையில் மிக உயரந்த அறங்கள்  ஒழுக்க நெறிகள் பண்பட்ட வாழ்வியல் நெறிகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதே விழுமியங்கள் எனச் சான்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.  ஆலமரத்தைத் தாங்கும் விழுதுகளை போல தமிழர்களின் அறவாழ்க்கையை சமூகம் சார்ந்த விழுமுயங்கள் தாங்குகின்றன. அக்காலத் தமிழ்சை சமூகம் அறவழியில் இருந்து நீங்காது உயர் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகினர்.   அகநானூறு காட்டும் சமூகத்தை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சமூகம்

சமூகம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவைக் குறிக்கும்.  மக்கள் குழுவையும் சமூகம் எனலாம் அல்லது ஒரே மாதிரியான அரசியல் அதிகாரத்திற்கு உட்பட்ட சமூகப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் குழுவையும் சமூகம் எனலாம்.

சமூகம் என்பது சமூகத் தொடர்புகளின் உண்மையான ஒழுங்கமைவு என்றும், பண்பாடு என்பது நம்மிக்கைகளிலும் குறியீட்டு வடிவங்களாலும் ஆனது என்றும் குறிப்பிட்டார். -- கிளிபர்ட் கீர்ட்ஸ்.

ரிச்சார்ட் யெங்கினசு

எனும் சமூகவியலாளர் சமூகம் என்பது மனிதர் எதிர்கொள்ளும் பல்வேறு இருப்பியல் பிரச்சனைகளைக் கையாளுகிறது என்கிறார்.

 

புலன்களால் உறைப்படும் உலகம் மனித அனுபவத்தின் ஒரு சிறு பகுதியே.  எனவே உலகைப் புரிந்து கொள்வதற்கு மனிதத் தொடர்புகளை அதாவது சமூகம் என்பதன் மூலம் உணர்ந்து கொள்ள வேண்டிருக்கிறது.

அரசியல் முறைகள்

ஆட்சி முறைகள்:

பண்டைத் தமிழக மூவேந்தரின் நாடுகள் ஒவ்வொன்றும் ஆடசி இதை நடைபெற வேண்டிக் கோட்டங்ளாகவும், தனியூர்களாகவும் பிரிந்தப்பட்டு இருந்தனர்.  நாட்டின் பொது வாழ்வு, தொழில் வாணிகம் முதலிய துறைகள் நன்கு நடைபெறுவதைச் கருதிச் சிறுசிறு குழுக்களையும் பண்டைய மன்னர்கள் அமைந்திருந்தனர்

ஊர் அவை

மிக்க சிறப்பு வாய்ந்த கள்ளுர் என்னும் ஊரின் கண் நெறி தவறிய ஒருவன் செய்த     தவற்றினை அவ்வூர் மன்றத்தார் கேட்டறிந்து அக்கொடியவனை மரங்கிளையில் இறுகல் பினித்தார்.  அவனுடைய தலையின் மீது சாம்பலைப் பெய்து அவமானப்படித்தி தண்டித்தனர் என்ற செய்தியை

     கரும்பு அமல் படப்பை பெரும் பெயரக் கள்ளார்த்

     திருநுதல் குறுமகள் அணிநலம் வவ்விய

     அரணிலாள னறியே னென்ற

     திறனில் வெஞ்சூ ளறிகரி கடாஅய்

     முரியார் பெருங்கிளை செறியப்பற்றி

     நீறுதலைப் பெய்த ஞான்றை

     வீறுசாலவையத்து ஆர்ப்பினும் பெரிதே.  (அகம்-256-16-22)

என்னும் அகநானூற்றுப் பாடல் வழியே காணலாம்.

தேர்தல் முறைகள்

சங்க காலத் தமிழகச் சிற்றூர்களில் ஆட்சி மன்றங்கள் இருந்தன.  அம்மன்ற உறுப்பினர்கள் ஊர்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  ஊரின் ஒவ்வொரு பகுதியினரும் தங்கள் பகுதியை  சேர்ந்த ஒருவரை ஒலை மூலம் தேர்ந்தெடுத்தனர்.  வாக்காளரின் ஓலைகள் ஒரு குடத்தினுள் இடப்படும்.  அக்குடத்தின் மேல் அரசாங்க முத்திரையை நீக்கி ஒவ்வொர் ஒலையாகப் படிப்பார். இவ்வாறு பெரும்பாலோரால்தேர்ந்தெடுக்கப்படுபவர் ஊர் மன்றத்தில் உறுப்புனராவர் என்பதனை

கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்

   பொறிகண்டு அழிக்கும் ஆவணமாக்கள்     (அகம் – 77 –  7- 8)

என வரும் அகநானூற்றில் நாட்டை ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க குடவோலை முறை பழக்கத்தில் இருந்ததென்ற அரசியல் செய்தி அகநானூறு வழி தெரிகிறது.

நடுகல் வழிபாடு:

இளைஞன் போரில் ஈடுபட்டு விழுப்புண் பட்டு (அ) வீரன் – வீழ்ந்த வீர்ரைக் கல்லில் அமைத்து வழிபடுவதே நடுகல் வழிபாடாகும், வீர்ரின் பெயரையும் பெருமையையும் எழுதி வழிதோறும் மயில்தோகை அணிந்து விளங்கிய நடுகல் பற்றி,

     நல்லமர் கடந்த நானுடை மறவர்

     பெயரும் பீடும் எழுதிஅமர்தொறும்

     பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்.        (அகம் – 67 – 8 – 10)

                                                          எனவரும் அகநானூற்றுப் பாடலின் வழியே தெளிவாக காணலாம் இந்த காட்சியை நட்ட கல்லில் மயிலின் தோகையைச் சூட்டி அரிக்கப்பட்ட கள்ளைச் சிறிய கலத்தில் ஊற்று வைக்கவும் கொள்ளான்.  பக்கம் உயர்ந்து விளங்கும் மலையமைந்த நாட்டுடன் கொடுக்கவும் கொள்ளாத அவன் இதனை

நடுகல் பீலி சூட்டி நாரரி

 சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லோ

 நடுதல் பீலிசூட்டி துடுப்படுத்து

 தோப்பிக் கள்ளோடு துரூஉப் பலிகொடுக்கும்  (புறம் – 232-3-6).

எனப் புறப்பாலின் மூலமும் அறிந்து கொள்ளலாம். மேலும் வீரன் கல், வீரக்கல், நடுதல் எனவும் நினைத்தும் என்றும், இச்சொற்கள் அழைக்கப்படுகின்றன.

நட்ட போலும் நடா நெடுங்கல்       (அகம் – 269-7)

எனும் அகநானூற்றுப் பாடல்களின் வழியில் நடுக்களின் தன்மையை போற்றுகிறது. வீரனின் நினைவாக கல் நடப்படுகிறது என்பதனை இதன் மூலம் அறியலாம்.

உழவுத் தொழில்

சுழன்றும் ஏர்பின்னாது உலகம் என்பதால் உணவை விளைவிக்கும் உதவுத் தொழிலே முதன்மையானது என்பதை திருவள்ளுவர்

          “சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால்

          ஊழந்தும் உழவே தலை        குறள் – 1031)

வள்ளுவர் உலகத்தில் உழவுத்தொழில் முதன்மையானது என்பதனை பதிவு செய்கிறார். ஒரு நாட்டு வாழ்விற்கும், முன்னேற்றத்திற்கும் அடிப்படை உழவுத் தொழிலேயாகும். மனித உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதது உணவு ஆகும் அகநானூற்று பாடலின் வழியே உழவுத் தொழிலை பின்வரும் பாடலில் கருத்துக்களை தெரியக் காணலாம்.

அவை,

    மறந்து அவன் அமையார் ஆயினும் கறங்கு – இசைக்

     கங்குல் ஓதைக் கலிமகிழ் உழவர்

                                   (அகம் – 37 – 1 – 2)

என அகநானூற்று பாடலின் வழியே அறியலாம்                                      

உழவுத் தொழிலுக்கு இன்றியமையாததாக அமைவது நீராகும். நீர் தேவையின் அவசியமும் நீர் மிகுதியாக அமைந்திருப்பதை,

          நீர்முதிர் பழனத்து மீனுடன் இரிய     (அகம் – 40 – 4)

மிகுதியான நீர் காணப்படுவதால் நீர் மிக்க வயல் நிலங்களில் மீன்கள் மிகுதியாக காணப்படுவதை அகநானூற்றுப் பாடல் உணர்த்துகிறது. நெல் விளைச்சல் சங்க காலங்களில் இருந்து வந்துள்ளதை பின்வரும் பாடலின் வழியாக அறியலாம்.

        பிண்ட நெல்லின்             (அகம் – 40 – 14)

என்பதின் வாயிலாக உழவுத் தொழிலின் அவசியத்தையும், விளைச்சல் தண்மையையும் எடுத்தியம்புகிறது.

வணிகம்:-

     மனித வாழ்க்கைக்கு முதன்மையானதாக வேண்டப்படுந் தொழில்கள் வணிகம் என்பதாகும். வணிகத்தின் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி செய்வதன் வாயிலாக கலை, பண்பாடு, நாகரீகம், ஆடை, உணவு முறைகள் போன்றவை இரண்டற கலந்துவிடுகின்றன. மேலை நாட்டினர் பொன்னைக் கொணர்ந்து தமிழகத்திலிருந்து மிளகை எடுத்துச் சென்றனர் என்பதனை,

     யனவர் தந்த வினை மா ணன்கலம்

     பொன்னாடு வந்து கறியோடு பெயரும்  (அகம் – 149 – 9 – 10)

எனும் அகநானூற்றுப் பாடலின் வழியே காணலாம். மேலும் பெரிய மரக்கலங்களாகிய கப்பல்களுக்கு நாவாய், படகு, ஓடம் என்னும் பெயர் வழங்கியமை போன்றே அக்காலத்தில் வங்கம் என்னும் பெயரும் மரக்கலங்களைப் பற்றி கூறுகிறது என்பதை,

     உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்

     புலத்திரைப் பெருங்கடல் நீரிடைப்போழ் (அகம் – 255 – 1 – 2)

நெய்தல் நில மக்கள் தாங்கள் பிடித்த மீன்களைப் பெண்கள் ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்வர் என்பதனை,

     தழைஅணி அல்குல் செல்வத் தகையர்

     விழவு அயர் மறுகின் விலை         (அகம் – 320)

என்ற வரிகள் உணர்த்துகின்றன. இதே போன்று ஆடை வெளுக்கும் தொழிலை மேற்கொண்ட பெண்களைப் புலத்தி என்பர். இதனை,

     பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்தூட்டிய

     பூந்துகில் இமைக்கும் பொலன் காழ் அல்குல்  (அகம் – 387 – 6 – 7)

இதன் மூலம் ஆடை தூய்மைப்படுத்தும் பெண்ணான புலத்தி ஓவ்வொரு ஊரிலும் இருந்தால் என்பதையும், அவளுக்கு ஊதியமாக நெல் கொடுக்கப்பட்டத்தையும் காணலாம்.

பழக்க வழக்கங்கள்

சூதாடுதல்

சங்க காலத்தில் சூதாடுகின்ற வழக்கம் இருந்துள்ளது என்பதை தொகை நூல்களில் கூறப்பட்டுள்ளன. வளம் பெற்றிருந்த ஊரின் குடிமக்கள் சென்று விளையாடுவதற்கு பாழ்பட்ட மன்றத்தின் கண்ணே நரையுடைய முதியோர் நடுங்குகின்ற தமது தலையை கவிழ்த்துக் கொண்டு உள்ளார்ந்த மனதோடு சூதாடிய காட்சியை,

கொழுங்குடி போகிய பெரும் பாழ் மன்றத்து

 நரைமூதளர் அதிதலை யிறக்கிக்

 கவை மனத் திருத்தம் வல்லை        (அகம் – 377 – 6 – 8)

எனும் அகநானூறு பாடல் வரிகள் காட்டுகின்றன. இப்பாடலின் மூலம் சங்ககாலத்தில் சூதாடுதல் முறை இருந்தன என்பதை அறியலாம். சங்க காலத்தில் நரை முடித்து நடுங்குகின்ற முதியோர் சூதாட்டம் விளையாடினர் என்பதை அறியலாம். தற்காலத்தில் அனைவரும் சூதாட்டம் aaஆடுகின்றனர் என்பதை அறியலாம்.

கழங்கு குறிபார்த்தல்

குறி பார்க்கும் பழக்க, வழக்கம் பழந்தமிழரிடையே இருந்துள்ளன ஆயினும் கழங்கினைக் கொண்டு குறி பார்க்கும் பழக்கம் இருந்தமையை ஈண்டுக் கூறலாம் ஆடைகள் சூழ்ந்த ஒரு பெரிய உச்சியிணையையும், சிறிய பை தொங்கவிட பெற்ற பல தலையையுடைய வளைந்த கோலினையும் உடையவனாக இருந்தான். வெறியாடும் வேலன் அவன் மேல் நிகழ்வதனை அறிந்து கூறுபவன் அறிவுடையவனாக இருந்தான்.

மழை பிரிந்த தாய் அந்த வேலனிடம் இரவில் அமையாது துயருறும் எம்முடைய கண்கள் நீருடன் கண் கலங்கி அழுகின்றன. இனிது துயிலும் பொருட்டு எமது மனையின் கண் முற்படக் கொணர்ந்து தருமோ அன்றி தன் மனைகன் முற்படசொல்வானா? தலைமைகள் உட்கருத்து யாதோ.? கழங்கின் திண்ணிய குறியைக் கூறுவாயாக என்று கேட்பது என்பதனை,

மாதோநின் கழங்கின் திட்பம்

 மாறா வருபனி கலுழுங் கங்குலின்

 ஆனாது துயருமெங் கண்ணினது படீஇயிர்

 எம்மனை முந்துறத் தருமோ

 தன்மனை உய்க்குமோ யாதவன் குறிப்பே     (அகம்-195-15-19)

என்ற அகநானூற்றுப் பாடலின் வழி அறியலாம்.

குளக்கரை காவல்.

மழைகாலத்தில் குளத்தில் நீர் இறைத்தல் இயல்பு குளத்தில் உள்ள நீர் குளக்கரை உடைngந்து போதல் உண்டு. இதனால் இழப்பு ஏற்படும் பழங்காலத்தில் இழப்பு ஏற்படாமல் இருக்க வேண்டி குலத்தைக் காவல் புரிவது வழக்கம். குளத்தை காவல் புரிபவன் இரவுப்பகலாக எப்பொழுதும் காவல் புரிவது வழக்கம் இந்த வழக்கத்தை,

ஈங்கைத் துய்யவீழ் பனிருதிரவீசி

 தோழின் மழை பொழிந்த பானாட் கங்குல்

 ஏறுதிரைத் திவலை தூஉந்சிறு கோட்டுப்

 பெருங்குளக் காவலன்         (அகம்- 252-9-13)

என்ற அகநானூற்றுப் வரிகள் மூலம் காணலாம்.

அம்புலிக்காட்டல்

சங்க காலம் தொட்டு தற்காலம்வரை மகளிர் தங்கள் குழந்தைக்கு அம்புலி காட்டும் பழக்கம் உடையவர்களாக இருந்தார்கள். தாய் ஒருத்தி தனது கருத்தை தன்னுடைய புதல்வனுக்கு அம்புலியைkக் காட்டினால் அரும்பும் நிலவினால் விளங்கும் இளையமதியே!. பொன்னாலாகிய தாலியினையுடைய தாய் என் மகனை நினைத்து இங்கு வருவாயின் உனக்கும் பால் தருவேன் என்று கூறி தன்னுடைய காந்தள் மலரைப் போன்ற மென்மையான நீண்ட விரலை அசைத்து நிலவினை அழைத்தால் இதனை,

முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்

 பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி,

 வருகுவை ஆயின் தருகுவென் பால் என

 விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றித்

 திதலை அல்குல் எம் காதலி

 புதல்வன் பொய்க்கும்     (அகம் – 54-17-22)

எனும் அகநானூற்றில் பாடலின் வழியே அறியலாம்.

மேலும்,

மறப் புளியுரைத்து மதியங் காட்டியும்       (புறம் – 160-22)

ஒரு தாய் பசி மிகுந்த குழந்தைக்கு உணவு ஊட்டப் நிலவு காட்டி உணவு ஊட்டப்பட்டது என்பதை சங்க கால  சமுதாயம் படம் பித்து காட்டுகிறது.

முடிவுரை:-

     சங்க காலத்தில் நாகரீகம் தோன்றும் காலத்திற்கு முன்பாகவே மனிதன் கூட்டமாகவே வாழ்ந்திருந்தான் தான் இருக்கும் இடத்திற்கேற்ப தன வாழக்கை சூழ்நிலையை மாற்றி அமைத்துக் கொண்டான். அவ்வாறு வாய்க்கச் செய்யும்போது அந்நிலத்திற்கேற்ப தொழில் மேற்கொண்டான். நீர் நிலைகள் நிறைந்துள்ள இடத்தில் மக்கள் குழுவாக வாழ்ந்தனர். இவ்வாறு வாழும் பொழுது அறத்தொடு தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்தனர். இவர்களுக்கான தலைமை பொறுப்பிற்கு தேர்தல் முறையான குடவோலை முறையாகும். இக்கால தேர்தலுக்கு வித்திட்டனர். போர் நடைபெறும்போது போரில் ஈடுபட்டு வீரமரணம் அடையும் வீரனுக்கு நடுக்கல் வழிபாட்டு முறைகள் தோற்றின. உழவுத் தொழில், வணிகம் துறைமுகங்களில் நடைபெற்றுள்ளது. மனிதனின் தலைசிறந்த பண்பாக விளங்கும் ஒழுக்கம் போற்றப்படுகிறது. அக்கால மக்களின் பழக்க வழக்கங்களில் சிறந்து விளங்கியுள்ளனர். நானிலம் வியக்குமாறு வாழ்ந்தனர்.

துணை நூற்பட்டியல்

  1. க. அன்பழகன்             -    தமிழர் திருமணமும், இன மானமும்

பூம்புகார் பதிப்பகம், சென்னை

முதல் பதிப்பு – 1994

  1. வை.மு.கோபாலகிருஷ்ண ஐயர்           -    திருக்குறள், பரிமேலழகர் உரை

முதல் பதிப்பு – 1965

  1. சுசிலா கோபாலகிருஷ்ணன்    -    சங்க இலக்கியத்தில் நிமித்தங்கள்

ஆய்வு நூல், பாலாஜி பதிப்பகம்,

மதுரை

முதல் பதிப்பு – 1982

  1. செயபால். இரா            -    அகநானூறு

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

சென்னை,

முதல் பதிப்பு – 2004

  1. முனைவர். தட்சிணாமூர்த்தி. அ -    தமிழர் நாகரிகமும், பண்பாடும்

யாழ் வெளியீடு,

மேற்கு அண்ணா நகர், சென்னை

  1. புலியூர் கேசிகன்            -    புறநானூறு

13, தீனதயாளு தி.நகர், சென்னை

முதல் பதிப்பு – 2010.