ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

திருவருட்பாவில் பறவைகள்

இரா.இராமன், முழுநேர முனைவர்; பட்ட ஆய்வாளர், பச்சையப்பன் கல்லூரி சென்னை-600 030 30 Apr 2021 Read Full PDF

கட்டுரையாளர்:

இரா.இராமன்,

முழுநேர முனைவர்; பட்ட ஆய்வாளர்,

பச்சையப்பன் கல்லூரி

சென்னை-600 030.

நெறியாளர்:

முனைவர்.எம்.எஸ்.புனிதவதி

இணைப்பேராசிரியர்

தமிழ் உயராய்வு மையம் மற்றும் ஆராய்ச்சித்துறை

பச்சையப்பன் கல்லூரி

சென்னை

ஆய்வுச்சுருக்கம்

     ஆன்மீகப்பேரொளி வள்ளல்.அகத்தே கருத்தும் ,புறத்தே வெளுத்தமனிதர்.செடிகொடிகளுக்கு பாசமுள்ள அன்னையுண்டு என்று உலகிற்கு அறிவித்தவர்.‘ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு,பசி நெருப்பை அணைப்பதே ஜீவகாருண்யம்’என்ற புதியவேகத்தை தோற்றுவித்தவர்.அன்னதானம், சம்போஜனம் என்ற விதிகளை முதலில் விதைத்தவர்.பொருளை அள்ளிஅள்ளிக் கொடுத்த வள்ளல்களை விட அருளை அள்ளிஅள்ளி வழங்கிய அருட்பிரகாசர்;. வள்ளலார் உயிர்களிடத்து அன்புசெய் என்றவர். இத்தகைய சிறப்பினை பெற்ற வள்ளலார் பறவைகளையும் வர்ணித்தும் ,அன்புசெலுத்தியும் பாடியுள்ளார். இதனை திருவருட்பாவில் காணமுடிகிறது.இவற்றில் ஒப்புமை,அழகு, காட்சி, சிறப்பு முதலியவை சுவைபட கற்பனை நயத்தோடு பதிவுச்செய்துள்ளார் வள்ளலர்.அவற்றினை ஆய்தறிவதே இவ்வாய்வாகும்.

திறவுச் சொற்கள்:

     வள்ளலார்,  பறவை,புள், வர்ணனை, ஒப்பீடு

முன்னுரை

     பறவை பறக்கும் உயிரினம்.ஐந்தாம் அறிவினை உடையது.விலங்கினத்திற்கும் பறவையினத்திற்கும் வேறுபாடுகள் உண்டு.இனப்பெருக்க முறையிலும் வேறுபாடுகள் உண்டு.பறவையினை சங்கமக்கள் ‘புள்’ என்று கூறினர்.இதனை சங்கஇலக்கியத்தின் வழி அறியமுடிகிறது.பக்தி இலக்கியங்களிலும் பறவைகளுக்கு முக்கிய இடம்உண்டு.இதனை வழிபடும் மரபாகவும் கொண்டுள்ளனர்.தெய்வ வழிபாடுகளில் பறவைகளுக்கென்று தனிச்சிறப்பு உண்டு.இன்றும் இந்நிலை காணமுடிகிறது.அவ்வகையில் சன்மார்க்க நெறியினை பரப்பிய வள்ளலார் தம்வாழ்விலும்,தனது பாடல்களில் உயிரினங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அவற்றில் ஒன்றான திருவருட்பாவில் பறவைகளை வர்ணித்தும் சிறப்பித்தும் கூறும் செய்திகள் பல உண்டு. இத்தகைய செய்தியினை ஆராய்ந்து அறிந்து விளக்குகிறது.

வள்ளலாரும் உயிரினங்களும்

வள்ளலார் உயிரினங்களுக்கு தனியிடம் கொடுத்து பாடியுள்ளார்.உயிரினங்களுக்கு இரக்ககுணம் உண்டு என்பதை ஜுவக்காருண்யம் வழி எடுத்துரைக்கிறார். உயிர்பலி கொடுத்தலை எதிர்கிறார்.சிறுதெய்வ வழிபாட்டினை வெறுத்து ஒதுக்குகிறார்.தம்பாடல்களில் தாவரம்>விலங்கு>ஊர்வன,நீர்வாழ்வன,பறப்பன என்று வகைப்படுத்தி கையாண்டுள்ளார்.‘பாடல்களில் கடமைக்கு – கழுதை> கரடி> குதிரை> குரங்கு> சிங்கம்> நாய் என்றும் நன்றிக்கு – புலி>பு+னை>மாடு> மான்,யானை,நாய் என்றும் ர்வனவற்றிக்கு– எறும்பு, சிலந்தி> தேள்>பல்லி>பாம்பு>புழு என்றும் நீர்வாழ்வனவற்றிக்கு – ஆமை>தவளை>திமிங்கலம்>மீன்>முதலை என்றும்> பறப்பனவற்றிக்கு-அன்னம்> ஆந்தை> ஈ> கழுகு> காக்கை> கிளி> குயில், கொசு, கோழி> சேவல்> நாரை> மயில்>வண்டு என்றும்’ வகைப்படுத்தி திருவருட்பாவில் குறிப்பிட்டுள்ளார்.

திருவருட்பாவில் பறவைகள்

     திருவட்பா பக்தி இலக்கியமாகவும்>சமூதாய சீர்ருத்த இலக்கியமாகவும் விளக்குகிறது.இவற்றில்> விலங்குகள்> பறவைகள் உவமையாகவும்>அடிப்படை வர்ணனையாகவும் பயன்படுத்தியுள்ளார் வள்ளலார். ஜீவக்காருண்யம் பிற உயிரினங்களுக்கு தீங்கு செய்யாமை ஜோதிவழிபாடு முறையினையும் வலியுறுத்துகிறார். இதன்வழி வள்ளலார் திருவருட்பாவில் பதின்மூன்று பறவைகளைப் பற்றின செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.அவற்றுள்> அன்னம்> ஆந்தை> ஈ> கழுகு> காக்கை> கிளி> குயில், கொசு> கோழி> சேவல்,நாரை>மயில்,வண்டு என்று பறவைகளைக் குறிப்பிட்டுள்ளார்.

அன்னம்

     சங்ககாலம் முதல் இக்காலம் வரை அன்னப்பறவையைக் குறிப்பிடாதவர் எவரும் இலர்;. இதனை இறைவனோடு நெருங்கி ஒப்பிடுவர்.வெண்மைநிறம் கொண்டவை. இப்பறவை பாலிலிருந்து நீரை பிரித்து குடிக்கும் என்ற கருத்து மக்களிடையே உள்ளது.இதற்கு தகுந்தசான்றுகள் இல்லை. சங்கஇலக்கியத்திலும் காணப்படவில்லை. இக்கருத்தினை பி.எல்.சாமியும் குறிப்பிட்டுள்ளார்.இவை இயற்கைக்கு முரணானது என்றும் வடமொழியில் இருந்து தமிழ்மொழிக்கு வந்தவை என்றும் கூறுவார்.அன்னம் தமிழ்நாடு மற்றும் இந்தியப்பறவையும் அன்று.இப்பறவைகள் வெளிநாடுகளில் இருந்து பருவநிலை மாறுபடும்பொழுது வெப்பமான பகுதிகளில் இருந்து குளிர்ந்தப்பகுதிகளை நோக்கிச் செல்லும்.அவ்வகையில் காஸ்மீர் போன்ற குளிர்பிரதேசத்தில் பள்ளத்தாக்குகளில் காணப்படும்.பிறகு பருவகாலம் முடிந்தப்பிறகு மீண்டும் அதே இடத்திற்கு சென்றுவிடும்.இவை வாத்தினத்தை சாரும். உயர்ந்தப்பகுதிகளில் பறந்துசெல்லும். இப்பறவையைப் பற்றி வள்ளலார் திருவருட்பாவில் குறிப்பிட்டுள்ளார். மேலும்,வள்ளலார் பெண்களின்; நடையழகிற்கும் இடைமெலிவிற்கும் அன்னத்தினை உவமையாகக் குறிப்பட்டுள்ளார். இதனை>

          ‘துடிஎன்னும் இடை அனம் பிடி என்னும் நடைமுகில்

         துணைஎனும்  பினையல் அளகம்

         சு+தெனும் முலைசெழுந் தாதெனும் அலைபுனல்

         கழிஎன்ன மொழிசெய் உந்தி

         வடிஎன்னும் விழிநிறையும் மதிஎன்னும் வதனம்என

         மங்கையர்

                                       (திருவருட்பா.பா.3)

என்பதில் அன்னத்தினை மகளிரின் நடையழகிற்கு உவமையாகக் கையாண்ட திறத்தைக் காணமுடிகிறது. மேலும்>பிரம்மதேவனின் வாகனமும் அன்னப்பறவை என்பதையும் வள்ளலார் குறிப்பிட்டுள்ளதை காணமுடிகிறது. இதனை>

          ‘அன்ன ஊர்தி போல் ஆகவேண்டினையோ’

                                       (திருவருட்பா.பா. 883)

என்றும்>

          ‘அன்ன ஊர்தியும் மாலும்நின் றலற

         அடியா; தங்களுள் அமர்ந்தருள் அமுதே’

                                       (திருவருட்பா.பா.1155)

என்பதில் அன்னவு+ர்;தி-அன்னப்பறவையை ஊர்தியாகவுடைய பிரமன். மால்-திருமால். இருவரும் சிவனுடைய முடியையும் அடியையும் முறையே காணமுயன்று புலம்பினரென புராணச்செய்திகள் உள்ளதென குறிப்பிட்டுள்ளதை அறியலாகிறது.

ஆந்தை

சங்க இலக்கியங்களில் புலவர்கள் பயன்படுத்திய பறவைகளில் ஆந்தையும் ஒன்று.இவை ஐந்து வகைகள் உண்டு.கூகை>குடிஞை>குரால்>ஊமன்>ஆண்டலை ஆகும். இவற்றில் புள்ளி ஆந்தை>கொம்பு ஆந்தைகளும் உள்ளன.இப்பறவைகளுள் கூகை> ஆந்தை வள்ளலார் பாடல்களில் குறிப்பிடுகிறார்.இவை பல்லி> புழு> பு+ச்சிகள்> சிறுகுருவிகள்> பாம்புகள்> எலிக்குட்டிகள் முதலியவை உணவாக உண்டு வாழ்கின்றதை குறிப்பிடுகிறார்.மேலும்>இப்பறவைகள் இரவு நேரங்களில் குரல் எழுப்பியதைக் கண்டு மனம் வருந்தியதாகவும் நடுங்கியதாகவும் வள்ளலார் குறிப்பிடுகிறார். இதனை>    

          ‘பல்லிகள் பலவா யிடத்தும் உச்சியினும்

         பகரும்நோ; முதற்பல வயினும்

         சொல்லிய தோறும் பிறர;துயா; கேட்கச்

         சொல்கின் றவோ எனச் சு+ழ்ந்தே

         மெல்லிய மனம் நொந் திளைத்தனன்

         வெங்குரல் செயுந்தொறும் எந்தாய்

         வல்லியக் குரல்கேட் டயா;பசுப் போல

         வருந்தினேன் எந்தை நீ அறிவாய்’

                                   (திருவருட்பா.பா.3432)

என்று வடலூர் வள்ளல் ‘மெல்லிய மனம் நொந்து இளைத்தனன்’எனக் கூறுகிறார். கூகையைப் பேராந்தை எனவும்>கோட்டான் எனவும் வழங்குவர்.இதன் குழறு குரலும் கேட்போர்க்கு அச்சம் விளைப்பதாகவும்> தீங்குரைப்பதாகவும் நாட்டு மக்கள் கருதுபவர்களின் ‘கூகை வெங்குரல் செயும் தொறும் வருந்தினேன்’என வினவுகிறார். வல்லியம்-வன்னை மிக்க புலி.தமது மெல்லிய மனத்துக்குக் கூகையின் குரல்,புலி முழக்கம் போல்கிறதெனவும்>அம்முழக்கம் கேட்ட பசுவின் மனம் அச்சத்தால் நடுங்குவது போலத் தமது மனம் நடுங்கிய திறம் விளங்க>‘வல்லியக் குரல் கேட்டு அயர் பசுப்போல வருந்தினேன் எனவும் குறிப்பிடுகிறார்; வள்ளலார்;.மேலும்>

          ‘தாக்கிய ஆந்தைக் குரல்செயப் பயந்தேன்’

                                   (திருவருட்பா.பா.3433)

என்றும்>இக்குரலின் மூலம் தீமை மற்றும் உயிரிழப்பு நிகழக்கூடும் என்பதையும் வருந்தி பாடியுள்ளதை திருவருட்பா மூலம் குறிப்பிடுகிறார்;.

ஈயினம்

    ஈக்கள் பலவகையுண்டு.வீட்டுஈ> மாட்டுஈ> பழஈ ஆகும்.இவ்வகையான ஈயினத்தை வள்ளலார்; திருவருட்பாவில் பாடியுள்ளார்.வள்ளலார் ஈயின் குணத்தினை தன்னோடு ஒப்பிட்டுப்பாடியுள்ளார். இதனை>

          ‘ஈயில் சிறயேன் அவா;அழகை இன்னும்

         ஒருகால் காண்பேனோ..’

                                   (திருவருட்பா.பா.2739)

என்றும்>மேலும் ஈயின் பறக்கும் இயல்பினை>

          ‘ஈயெனப் பறந்தேன் எறும்பென உழன்றேன்

         எட்டியே என மிகத்தழைத்தேன்’

                                   (திருவருட்பா.பா.3578)

இவற்றுள் ஈயானது ஓரிடத்திலும் நிலையாக நிற்காது.அங்கும் இங்கும் பறந்து திரியும். எறும்புகளும் திரியும். அவ்வாறே தானும் நிலையான மனத்தை உடையவராய் இல்லாது>சஞ்சலப்பட்டுக் கொண்டு அங்கும் இங்கும் திரிவதாகக் குறிப்பிடுகிறார்; வள்ளலார்;. மேலும்>ஈயானது பலஇடங்களில் உணவினைத் தேடிதிரியும் நிலையினையும் தன்னோடு ஒப்பிட்டு குறிப்பிடுகிறார்.இதனை>

‘ஒவுறாதுழல் ஈஎனப் பலகால்

 ஓடி ஓடியே தேடுறும் தொழிலேன்’

                                   (திருவருட்பா.பா.3303)

என்றும் குறிப்பிடுள்ளதையும்>தானும் வயிற்றுப்பிழைப்பிற்;கே ஓடி அலைகிறேன் என்றும்>தான் ஆன்ம ஈடேற்றத்திற்காக உழைக்கவில்லை என்பதையும் தெளிவுறுத்த இங்கு ஈயின் இயல்பினைக் கூறித் தன்பண்புகளைத் தெளிவாக வெளிப்படுத்துவதைக் காணமுடிகிறது.

கழுகு

கழுகுகள் பலவகையுண்டு. பெரிய கழுகு>சிறிய கழுகு, வெள்ளைக்கழுகு, பாறுக்கழுகுகள்> செந்தலைக்கழுகு என்பர்;.இவை,பெரும்பாலும் வானிலே வட்டமிட்டுபவை. தனக்கு தேவையான இறையினை பு+மியில் உள்ள உயிரினங்களை தன்கூர்;மையான பார்வையினால் கண்டு தன்இரையைப் பிடித்து உண்ணுபவை.இவை எலி>முயல்>பாம்பு,சிறிய பறவைகள் முதல் பலவித உயிரினங்களை உண்டு வாழ்பவை. காடுகளில் உள்ள பெரிய விலங்குகள் இறந்தாலோ அங்கு கூட்டம் கூட்டமாக வட்டமிட்டு இறந்த உயிரினத்தை உண்ணுபவை.இச்செய்தியை சங்க இலக்கியங்களில் காணலாம். போர்க்களங்களில் இறந்த வீரர்களின் உடல்களைச் சுற்றி உண்பதையும்>தன்குஞ்சுகளுக்கு இவ்விறட்ச்சியினை எடுத்துச் செல்கின்றதை அறிமுடிகிறது. வள்ளலாரும் கழுகினைப் பற்றியும் கூறுகிறார்.இதனை>

          ‘அணங்கெழுபோ; ஓசையொடும் பறையோசை

         பொங்கக் கோரணிக்கொண் டந்தோ

         பிணங்கழுவி எடுத்துப் போய்ச் சுடுகின்றீர்;

         இனிச்சாகும் பிணங்களே நீர்;

         கணங்கழுகுண் டாலும் ஒரு பயனுண்டே

         என்ன பயன் கண்டீர் சுட்டே

         எணங்கெழுசாம் பலைக் கண்டீர; அதுபுன் செய்

         எருவுக்கும் இயலா தன்றே’

                                       (திருவருட்பா.பா.5609)

இப்பாடலின் இறந்தாரை உயிரடக்கம் செய்யும் தருணத்தில் அவரைச் சுட்டு எரித்தல் சுத்த சன்மார்க்கக் கொள்கைக்கு விரோதம்.ஆகையினால் புதைத்தல் வேண்டும் என்பதை>மறை முகமாகச் சுட்டுகின்றார். இறந்தாரைச் சுட்டால் இது கொலைக்குச் சமம் என்றும் இவர் விளக்குகின்றார்.இவ்விடத்தில் கழுகுக்காவது இறந்தாரை இரையாக்கலாம் அன்றித் தீயிட்டுக் கொளுத்துதல் அதனை விடப்பாவம் வேறேதும் இல்லை என்று கூறுகிறார் வள்ளலார்.

காக்கை

     காக்கையினை அறியாதவர் எவரும்இலர்;.காக்கை அண்டங்காக்கை>ஊர்;க்காக்கை என்று இருவகையுண்டு. காக்கை கரைந்தால் வீட்டிற்கு விருந்தினர் வருவர்; என்ற நம்பிக்கையுண்டு.இவை அசைவ உணவு முதல் சைவஉணவுகள் வரை உண்ணும் இயல்பினை உடையதால் பொதுஉண்ணி என்பர். காக்கையானது எங்கும் காணும்பொழுது தன் உரத்தக்குரலில் கரைந்துக் கொண்டே தன் கூட்டத்துடன் திரியும். உணவினை இலாவகமாக களவாடியும் உண்ணும்.சங்கஇலக்கியத்தில் காக்கைப்பற்றின செய்திக்கள் மிகுதியாக உள்ளன.இவற்றில், காக்கை>சிறுவெண்காக்கை>கடற்காக்கை என்று குறிப்பிடப்பட்டுள்ளதை அறியலாம்.சங்க இலக்கியத்தைப் போன்று வள்ளலாரும் காக்கைப் பற்றி திருவருட்பாவில் ஆறுபாடல்களுக்கு மேலாக குறிப்பிட்டுள்ளார்.காக்கையின் பண்புகள் மனித இனப்பண்புகளுக்கு உவமையாக்கப்பட்டுள்ளார். வள்ளலார் காக்கையினை ‘காக்கைகள் கூவ’, ‘வீண்கதை உதிர்’> ‘காகம் கரைய’என்ற முறைகளில் கையாளுகின்றார். இவற்றை>

          ‘காக்கைகள் கூவக் கலங்கினேன்

         பருந்தின கடுங்குரல் கேட்டுளங் குலைந்தேன்’

                                       (திருவருட்பா.பா.3433)

என்றும்>காக்கையின் குரல் கேட்டோருக்கு இன்பம் பயக்காது.மூடர் தம்செயலும் இன்பம் பயக்காதனவாம் என்றும் குறிப்பிடுகிறார்.மேலும்>காகம் கரைந்து பொழுது விடிவதை அறிவுறுத்தும் இயல்பினை வள்ளல்

          ‘காகம் கரைந்து காலையும் ஆயிற்று’

                                       (திருவருட்பா.பா.541)

என்கிறார்.மேலும்>மனிதவாழ்வின் பெரும்பயனை ஈதலின் அடையலாம்.காக்கையின் இயல்பினை இவர் தம்மேல் ஏற்றிக்கூறும் முகமாக>

          ‘கூவு காக்கைக்குச் சோற்றில் ஓர் பொருக்கும்

         கொடுக்க நோ;ந்திடாக் கொடியாpல் கொடியேன்’

                                       (திருவருட்பா.பா.3003)

என்று கூறுகிறார்.உணவு உண்ணும் முன்னர் காக்கைக்கு உணவு படைத்துப்பின்னர் தாமுண்ணல் சிறந்த பண்பாகத் தொன்றுத்தொட்டுத் தமிழர் தம்மரபாக இருந்து வருகின்றன.இப்பண்பு கூட இல்லாதார் கொடியர் என்று வள்ளலார் குறிப்பிடுகிறார்.

கிளி

     மக்கள் எளிதில் நினைவில் கொள்ளும் பறவை.பச்சை நிறமுடையவை. மனிதர்கள் போன்று பேசும் திறம்கொண்டவை.சங்கஇலக்கியத்தில் கிளிகள் பற்றிய குறிப்புகள் பற்பல. தூதுவிடுதல்> தலைவி> தலைவனுக்கு ஒப்பிடுதல்>உவமை போன்ற பலவர்ணனைகள் மிகுதியாக பாடப்பட்டுள்ளன;.கிளிகள் தினைப்புனங்களில் சென்று தினையை உண்ணும் இயல்பினையும் வர்ணனைகளும் கூறியுள்ளனர். இத்தகைய கிளியினை வள்ளலாரும் தன் திருவருட்பாவில் குறிப்பிட்டுள்ளார்.வள்ளலார் கிளியைத் திருவொற்றியு+ர்; இறைவனிடம் தலைவித் தூதுவிடுவதாக அமைகிறது. ஒற்றியு+ர் இறைவன் வலம் வந்ததைக்கண்டு மயக்கமுற்ற தலைவி சுகங்களைத் தூது விட்டதை வள்ளலார் பாடலில்>

          ‘மன்னுங் கருணை வழிவிழியார் மதுரமொழியார்; ஒற்றிநகா;த்

         துன்றும் அவா;தம் திருமுன் போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ

         மின்னும் தேவா; திருமுடிமேல் விளங்கும் சடையைக்கண்டவள் தன்

         பின்னுஞ் சடையை அவிழ்த்தென்றும் பேசாள் எமைப் பிhpந்தென்றே’                                                        

(திருவருட்பா.பா.1504)

என்று குறிப்பிட்டுள்ளார்.இப்பாடலைப் போன்று ஏனையப்பாடல்களும் அமைந்துள்ளன. மேலும்>மற்றொரு பாடலில் ‘இலவுகாக்கின்ற கிள்ளை போல’ என்ற பழமொழிக்கு ஏற்றார்போன்று தன் ஒருபாடலில் வள்ளலார்;>       

          ‘இலவு காக்கின்ற கிள்ளைபோல உழன்றாய்’

                                       (திருவருட்பா.பா.882)

என்பதில் ‘இலவ மரத்தின்காய் முற்றியப் பழமாகும் வரையில் தின்ன விரும்பிக் காத்திருக்கும் பச்சைக்கிளி காய் முற்றியப் பழமாகி வெடித்;தவுடன் உள்ளீடு முற்றும் பஞ்சும் கொட்டையுமாகிக் கிளிக்கு உணவாகதொழியும்; காத்துக்கிடந்து ஏமாந்ததுதான் கிளிக்கு அமைந்ததாம்’.அதுபோற் பயன்படாச் சிலரை நம்பி மக்கள் ஏமாந்து போவதுண்மை புலப்பட ‘இலவு காக்கின்ற கிள்ளை போல் உழன்றாய்’என்றும் இறைவனை குறிப்பிட்டுள்ளதை அறியமுடிகின்றது.இத்தகைய சிறப்பினை உடைய கிளியை வர்;ணனைச்செய்யாதவர் எவரும் இலர்.அவற்றில் வள்ளலாரும் ஒருவர்.

குயில்

     குயிலில்லா இடமில்லை.குயிலின் குரலை வர்ணிக்காதவர்கள் எவருமில்லை. ‘குரலோசை இல்லையெனில் குயிலோசையைக் கேளீர்’என்ற பழமொழிக்கு சொந்தக்காரர்.இத்தகைய பறவையினை வள்ளலார்; திருவருட்பாவில் குறிப்பிட்டுள்ளார். இத்திருவருட்பாவில் குயில்கள் திருத்தணிகையில் உலவுகின்ற நிலையை>        

          ‘குயில்மேல் குலவும் திருத்தணிகைக்

குணப்பொற் குன்றே கொள்கல

         மயில்மேல் மணியே நின்திருத்தாள்

அடியேன் முடிமேல் வைப்பாயே’

                                   (திருவருட்பா.பா.267)

சோலைகளிடத்தே குயில்கள் இருந்து கூவிமகிழும் திருத்தணிகையில் எழுந்தருளும் அழகிய குணக்குன்றாகிய பெருமானே,தோகையுடைய மயில்மேல் இவர்ந்தருளும் மாணிக்கமணியே வெயிலிடைப் பட்ட புழுப்போலப் பொருட்பெண்டிரின் வெவ்விய இச்சை மயக்கத்தில் வீழ்ந்து கெடாமைப் பொருட்டுக் கரிய வேற்படையைக் கையில் ஏந்துகிற நின்னைப் புகழ்ந்து பரவும் அடியார் கூட்டத்தில் யானும் சேருமாறு நின்னுடைய திருவடிகளை அடியேன் தலைமேல் வைத்தருள வேண்டுகிறேன் என்கிறார். மேலும்>

          ‘எதிரும் குயில்மேல் தவழ்தணிகை இறையே’

                                   (திருவருட்பா.பா.332)

இப்பாடலின் வழியாக குறிப்பிட்டுள்ளதை அறியமுடிகிறது.மேலும்>மற்றொரு பாடலில் குயிலை தத்துவக் கருத்தாக அமைகின்றன என்றும் குயில் ‘நாதம்’என்றும்,மயில் ‘விந்து’ என்றும் பொருள் கொள்கிறார் வள்ளலார்.

கோழி

     கோழியைப் பற்றி அறியாதவர் இலர்.ஆண் கோழியை‘சேவல்’என்றும் பெண் கோழியை ‘கோழி’> பெடை’என்றும் கூறுவர்.கோழிகளில் நீர்க்கோழி> கானங்கோழி> தாமரைக்கோழி> மயிற்கோழி பல வகையுண்டு. சாதாரணமாக கோழிகள் முட்புதர்கள் வேலிகள்,காடுகளில் தன்இரையை தேடித் உண்ணும் இயல்பினை உடையது. இவைகள் பு+ச்சிகள்> புழுக்கள்> நத்தைகள்> தானியங்களை உணவாக உட்கொள்ளும். இத்தகைய கோழிகளைப் பற்றி வள்ளலார் ஒருபாடலில் கோழி முருகனுக்கு கொடி என்று குறிப்பிடுகிறார். இதனை>

          ‘சேவலங் கொடி கொண்ட நினை’

                                   (திருவருட்பா.பா.26)

என்றும்>

          ‘கூh;கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும் அருட்

         காh;கொண்ட வன்மைத் தணிகாசலமும் என்கண்ணுற்றதே’

                                   (திருவருட்பா.பா.42)

என்று குறிப்பிட்டுள்ளதை அறியமுடிகிறது.மேலும்>இறைவனின் உருவவர்ணனையில் கோழி இடம் பெற்றுள்ளதையும் குறிப்பிடுகிறார்.மேலும்>கோழிகள் விடியற்காலையில் கூவுகின்ற நிலையினை வள்ளலார் கூறுகையில்>

     ‘காணுறு பசுக்கள் கன்றுகள் கதறிய போதெல்லாம் பயந்தேன்

    ஏணுறு மாடு முதல்பல விருகம் இளைத்தலை கண்டுளம் இளைத்தேன்

    கோணுறு கோழி முதல்பல பறவை கூவுதல் கேட்டுளங் குலைந்தேன்

    வீணுறு கொடியா; கையிலே வாளை விதிர்த்தல் கண்டென்’                                                        (திருவருட்பா.பா.3469)

இப்பாடலின் வழியாக ‘கோழிகள் கூவுதல் எதற்காகவோ? என்று மனம் குலைந்ததாகக் கூறுவதிலிருந்து> கோழியைக் கொன்றுண்ணும் இயல்புடையோர் அதனைக் கொல்லப்புகும் நேரத்தில் அவை கதறக் கொண்றதைக்கண்டு இவர் உள்ளம் வெதும்பிருக்கலாம்.இதனால் கோழி மனிதனால் கொல்லப்படுவதற்கு முன்னர் அதனையறிந்து கூவுகின்றனவோ? என்று வருந்துகின்றாரோ? என்று எண்ண வேண்டியுள்ளது. இவ்வாறே பிற பறவைகளும் கூவும் நிலைக்கு வருந்துகிறார்’ வள்ளலார்.

நாரை

     நாரைகள் நீண்ட கால்களும்>நீண்ட கழுத்தினையும் கொண்டவை.இவை செங்கால்நாரை> வெள்ளைநாரை> கருங்கால்நாரை> குருட்டுநாரை> குள்ளநாரை என்று பலவகையுண்டு.இவ்வகையான நாரைகளை மக்கள் மிகுதியாக கண்டும் காட்சிப்படுத்தியும் தன்படைப்புகளில் பதிவுச்செய்துள்ளனர். அவற்றிலொன்று சங்கஇலக்கியம். பொதுவாக,சங்கஇலக்கியத்தில் இப்பறவைகள் பற்றின செய்திகள் மிகுதி. அவை>கற்பனை>நயம்>உவமை>வர்ணனை போன்று மிகுதியாக பயன்படுத்தியுள்ளனர்.வள்ளலாரும் திருவருட்பாவில் நாரைகள் பற்றின செய்திகள் மிகுதியாக பயன்படுத்தியுள்ளார்.அவற்றில் நாரை தூது விடுகின்ற நிலையினை ஐந்துபாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக திருவெற்றியு+ரில் உள்ள இறைவனிடம் தலைவியானவள் தூதாக அனுப்புகின்றதை வள்ளலார்>

 

     ‘கண்ணன் நெடுநாள் மண்ணிடத்தும் காணக் கிடையாக் கழலுடையார்

    நண்ணும் ஒற்றி நகரார்க்கு நாராய் சென்று நவிற்றாயோ

    அண்ணல் உமது பவனிகண்ட அன்று முதலாய் இன்றளவும்

    உண்ணும் உணவோ டுறக்கமுநீத துற்றான்  என்றிவ் வொருமொழியே’

                                       (திருவருட்பா.பா.1965)

 

என்று தூதுவிடுகின்ற தலைவி நாரையிடம் தலைவன் நோக்கி>நும் திருஉலாக் காட்சியைக் கண்டநாள் முதல் உண்ணும் உணவும் உறக்கமும் இன்றி வாடுகிறாள் என்று மொழிவர் என்று கேட்பதாக அமைகிறது.

 

பருந்து

    இறைச்சியினை உண்டு வாழ்பவை.உயிரினங்கள் இறந்துகிடக்கும் இடத்தினை வட்டமிட்டுக் கொண்டே இருப்பவை.முன்னோர்கள் இதனைக்கண்டால் பலனுண்டு என்ற நம்பினர்.மக்களிடையே இந்நிலை இன்றும் காணமுடிகிறது.இத்தகைய பருந்தினைப் பற்றி வள்ளலார்>

 

              ‘பருந்தின் கடுங்குரல் கேட்டுளங் குலைந்தேன்’

                                       (திருவருட்பா.பா.3433)

 

இப்பாடலில் பருந்தின் குரலைக்கேட்டு தன்இரக்கம் உள்ளம் கொண்டநான் நடுங்கிப்போனேன் என்று வருந்துகிறார். மேலும்>இப்பறவைகள் குரலெழுப்பும் முறைகளை கண்டு நல்லன தீயனவற்றை அறியும் பழக்கத்தினை>

              ‘கொடுஞ்சகுன வீக்களால் மயங்கினேன்’

                                       (திருவருட்பா.பா.3433)

பருந்தின் வருத்தப்போக்கினை புலப்படுத்துவதாகவே உள்ளது என்கிறார்.மேலும்>இத்தீயசகுனங்களால் உயிர்களுக்கு உயிர்;தும்பம் வரும் என்று வள்ளலார் வருந்துகிறார்.

 

மயில்

     மிகஅழகிய பறவை.பலவண்ணநிறம் கொண்டவை.காண்போரை கவனம் சிதைக்கும் வடிவழகினை கொண்டவை.பறவைகளிலே இவை மிகஅழகுடையவை.நீண்ட தோகையுடையவை. இத்தகைய சிறப்புமிக்க மயிலை திருவருட்பாவில் வள்ளலாரின் வர்ணனைக் காணமுடிகிறது.‘மயில் முருகவேலின் வாகனமாகவும்,திருவெற்றியு+ர் வடிவுடையம்மையை மயிலாக உருவகிப்பதாகவும் பெரும்பாலான இடங்களில் கையாளப்பட்டுள்ளார்.ஏறத்தாழ 35.இடங்களுக்கு மேலாக மயிலை வள்ளலார் கையாண்டுள்ளார்’. மேலும்>முருகனின் வாகனமாக அமைகின்ற நிலையை வள்ளலார் பின்பற்றுகின்றார். வள்ளலார்‘இருபது இடங்களுக்கு மேலாக முருகனுக்கு மயில் வாகனமாக அமைவதைக் குறிப்பிடுகின்றார்’. இதனை>

 

         ‘பரதம் மயில் மேல் செயும் தணிகை பரனே’

                                       (திருவருட்பா.பா.265)

         ‘மயில்மேல் மணியே’ நின் திருத்தாள்

         அடியேன் முடிமேல் வைப்பாயே’

                                       (திருவருட்பா.பா.266)

         ‘மயில் ஊh;ந்தோங்கி’                   (திருவருட்பா.பா.377)

         ‘மயில் ஏறிய நாயகனே’              (திருவருட்பா.பா.404)

 

 

என்று பலவாறு மயிலை பற்றி வர்ணனைக் குறிப்பிட்டுள்ளதை அறியமுடிகிறது.

 

வண்டு

     அறுங்காற் பறவை,தாதூண் பறவை என்ற சிறப்பினைக் கொண்டவை வண்டுகள்.தொல்காப்பியர் ‘பறக்கும் அனைத்து உயிரினங்களும் பறவை இனத்தே சாரும் என்கிறார்’ இத்தகைய கூற்றின்படி சங்கப் புலவர்களும் வண்டு> கொசு> ஈக்களை பறவையினத்தோடு ஒப்பிடுகின்றனர்.இச்சிறப்பினை உடைய வண்டுகள் சங்க இலக்கியங்களில் மிகுதியாக கூறப்பட்டுள்ள பறவையினம் இவையாகும்.இவை> தலைவன்> தலைவிக்கு  உவமையாக கூறப்பட்டுள்ளது.இத்தகைய வண்டினங்களை வள்ளலாரும் தன்பாடல்களில் பயன்படுத்தியுள்ளார். மலரில் வண்டுக்கள் மொய்க்கும் பொழுது>

 

          ‘வண்டாலும் கொன்றை மலரோய்’       (திருவருட்பா.பா.965)

என்றும்>

         ‘வண்டு கொண்டார் நறுங்கொன்றை யினான் தன்மலரடிக்கு’

                                       (திருவருட்பா.பா.2349)

 

ஆம்பல் மலரில் வண்டுகள் மொய்க்கும் இயல்பினை விளக்குகிறார். மேலும்> இறைவன் திருவருளை விழைந்து நிற்கும் தன்மையை வண்டுகள் மலரைச் சு+ழ்ந்து மொய்க்கும் நிலைக்கு ஒப்பிடுகின்றார். இதனை>

 

          ‘பு+மாந்தும் வண்டென நின் பொன்னருளைப் புண்ணியா;கள்

         தாமாந்தி நின்னடிக்கீழ்ச் சார்ந்து நின்றார்

                                   (திருவருட்பா.பா.736)

 

என்றும்>மற்றொரு பாடலில் ‘உண்ணல்ஒன்றே வாழ்வின் குறிக்கோளாக அமைந்து வாழும் உலகமாந்தர் தம் குறையினை தம்மேல் ஏற்றிப்பாடுகின்றதை பாடல்.எண்.3363 வழியாக வள்ளல் புலப்படுகின்றதை அறியமுடிகிறது.

 

முடிவுரை

     சன்மார்க்க நெறியினை வலியுறுத்தியவர்.பு+மியிலுள்ள விலங்குகள்>பறவைகள்> தாவரங்கள் அனைத்திற்கும் மனிதர்களோடு சமநிலை உரிமையைக்கொண்டு வாழ்வில் நிலைநிறுத்தியவர். உயிரினங்களை மிகவும் போற்றி வாழ்ந்தவர்.சிந்தைக்கு அருட்பெருஞ்Nஐhதி என்பர்.செயலுக்கு தனிப் பெருங்கருணை என்பர். வாடியப்பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர்.ஜீவகாருண்ய போன்ற நிலைகளுக்கு முன்நின்று மொழிந்தவர். சாதி>மத>சமயம் கடந்த சன்மார்க்க சத்திய சங்கம்.இந்த சரணத்தை இயற்றியது வள்ளலார்.இதுவரை யாரும் கூறாதது; வாழ்ந்து காட்டாதது.உயிர்களிடத்து அன்புசெய்> பசிபோக்கு,தயவுகாட்டு அவற்றுக்கு மனதாலும் தீங்கு நினைக்காதே என்ற வள்ளலாரின் புதிய சிந்தனைகள்.மேலும்>வள்ளலார் உயிரினங்களையும் ஆய்ந்து வா;ணித்துள்ளார்.இதனை>இவரின் பாடல்களின் வழியே அறியமுடிகிறது.வள்ளலார் ஏறத்தாழ பத்திற்கும் மேற்பட்ட பறவை இனங்களை தெளிவாக குறிப்பிட்டு>அதன் சிறப்பினையும் திருவருட்பாவில் விளக்கியுள்ளார். மேலும்,இதன் வழியாக பல பறவையினங்களை தம்வாழ்வியலோடும்>தன்மீதும்>பிறர்மீதும் ஏற்றியும் ஒப்பிட்டும்> உவமையாகவும்> நயம்படவும் விளக்கிய காரூண்ய வள்ளல். மாணிக்கவாசகரிடம் உருகி ஞானப்பாதையில் நடந்து,சைவ சித்தாந்த எல்லைகளைக் கடந்து> சன்மார்க்கம் என்னும் சிகரத்தை தொட்டவர் ஜீவகாருண்ய வள்ளல் பெருமான் வள்ளலார்.

…..

பார்வை நூல்

1.எட்டுத்தொகை மூலமும் உரையும்-நியுசெஞ்சுரி புக்ஸ் அவுஸ்>அம்பத்தூர்>சென்னை.

2.வள்ளலார்; வழங்கிய திருவருட்பா- நர்மதா பதிப்பகம்>சென்னை.

3.திருவருட்பா- பாரி நிலையம்>பிராட்வே>சென்னை.

4.தொல்காப்பியம் தெளிவுரை -பாரி புத்தக நிலையம்>பிராட்வே>சென்னை.