ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

கவிதை சொல்லாக்கமும் பொருண்மையும்

முனைவர் பவித்ரா.வி.இரா உதவிப் பேராசிரியர், சமூகவியல் கலை (ம) பண்பாட்டுப் புலம் உலகத் தமிழிராயிச்சி நிறுவனம், தரமணி,சென்னை 18 May 2021 Read Full PDF

முனைவர் பவித்ரா.வி.இரா

உதவிப் பேராசிரியர், சமூகவியல் கலை (ம)

பண்பாட்டுப் புலம் உலகத் தமிழிராயிச்சி நிறுவனம், தரமணி,சென்னை.

ஆய்வுச் சுருக்கம்:

மொழி என்பது சிக்கலான தொடர் பாடல் முறைமைகளைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்குமான வல்லமை ஆகும். குறிப்பாக இது இதற்கான மனித வல்லமையைக் குறிக்கும். தனித்தனியான ஒரு மொழி அல்லது குறியீடுகளையும் அவற்றை முறையாகக் கையாளுவற்கான விதிமுறைகளையும்  உள்ளடக்குகிறது.

திறவுச் சொற்கள்:

சொற்புணர்ச்சி , கடாசி  , பூரிது ,  கவிதை, சொல்லாக்கம்,பொருண்மை            

முன்னுரை

கவிதை என்பது அழகியல் உணர்ச்சியுடைய,ஓசை சந்தத்துடன் கூடய அல்லது ஒத்திசைய பண்புச் சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கியக் கலை வடிவம் ஆகும்.மேலும், மொழியில் உள்ள ஒலியல் அழகியல், ஒலிக் குறியீடுகள்,மற்றும் சந்தம் ஆகியவற்றுடன் இடம் , இயல்பான பொருள் ஆகியவற்றை வெளிப்படையாகக் காட்டுவதாகக் கவிதை உள்ளது. உணர்ச்சி, கற்பனை,கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.

தமிழ் நிலப்பரப்பின் மீதான ஏக்கம்

     கடந்து சென்ற நினைவூட்டல்களை எழுதுதலில் ஒரு குறிப்பிட்ட மொழி நடைக் குப் பங்குண்டு. அந்த மொழியில் ஒரு ஈரம் ஏக்கமாக வடிவதைக் காணலாம். அது தாங்கள் விரும்பும் தேசத்தில் நடைபெறும்  அநீதிக்கு எதிரான குரலாகவும் ஒலிக்கும்.

     அமெரிக்காவில் வாழ்ந்தாலும் தாங்கள் வாழ்ந்த தேசத்தின் மொழியின் நிலப்பரப் பாகிய தமிழ்/ இந்திய புலங்களின் மீதான அக்கறையை இவர்கள் கவிதைகள் எப்போ தும் உணர்வு தளத்தில் நின்று வெளிப்படுத்த தவறுவதில்லை. குறிப்பாக காந்தி கெயந்தி என்பது அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு ஒரு பொருட்படுத்த தக்க  நாள் இல்லை; மாறாக அதனைக் கவிஹை வடிக்கத் தூண்டுதலாக இருப்பவை அவர்தம் தாயக நினைவுகள். அக்கவிதை பின்வருமாறு அமைகிறது.

     இன்றைய இந்தியாவின்  அரசியல் போக்கை வெளிப்படுத்தும் கவிதையாக இக் கவிதை அமைகிறது. அதனை, காந்தி செய்னதி என்னும் பெயரில் அவர் பாடி யுள்ளார்.

பல்லுயிர் பறித்துக்கொண்டு
இன்னுமேன் ரத்தவெறி இந்த
இனவெறி ஜாதிவெறி மதவெறி
கொண்ட நெறியர்கள் போர்வையில்
வெறியர்களுக்கு

சிறு சந்தங்களை அடிப்படை கவிதை அலகாகக் கொண்டு கவிதை  நடை அமைகிறது. இக்கவிதை தமிழகம் வாழ் தமிழ் வாசகர் மனத்துள் ஒரு சிறுவர் கவிதைக்கான சந்த நயம் இருப்பதைக் கண்டுகொள்வார்; இதுதான் அயலக கவிதையின் முழுமையான மொழிநடை போக்க். அவர்களுக்குத் தமிழ் மிக எளிமையான மொழியாக அமைய வேண்டும் என்ற ஈடுபாடு மிக அதிகம்.

மற்றவெறிகளை பின்னுக்குத்தள்ளி
மதவெறிதனை முன்னிறுத்தும்
ரத்தவெறி காட்டேரிகள் உன்வழி
உன் பாதை பயணிக்கும் நாள்தனை
எதிர்பார்த்து ஏங்குகிறோம்

-வெ. மீனாட்சி சுந்தரம்

காந்தியரின் நினைவாக இக்கவிதை எழுதப்பட்டுள்ளது. இக்கவிதைக்குள் இன்றைய இந்திய அரசியல் போக்கு குறித்த கூர்மையான விமர்சனம் ஒன்று உள்ளுறைந்திருப்பதைக் காணமுடிகின்றது.

சொற்புணர்ச்சி

     அயலகம் வாழ்க்கவிஞர்களின் மற்றுமொரு கவிதை மொழிநடை பல சொற்களை மிக லாவகமாக பிணைத்து புணர்ச்சிக்கு உட்படுத்தி பயன்படுத்துகின்றனர். இது மொழி யை மிக அழகான படிமமாக மாற்றுகிறது. மொழியில் நடைபெறும் இத்தகைய உட்கூறு பிணைப்பு அயலகத் தமிழ்க்கவிகளின் பொதுமையான புனைவு போக்காக இனங்காண முடியும். சான்றாக,

பல்லுயிர், நினைவூட்டல், இன்னுமேன், ( காந்தி செயந்தி கவிதை) வள்ளலவன் ( கண்ணதாசன் குறித்த கவிதை)  கடவுளவனை

இத்தகையச் சொல்லாட்சிகள் மிக முதன்மையாக புணர்ச்சி நிலையில் காணப் படுவதை அவதானிக்க முடிகிறது.  கவிதைகளில் இத்தகைய நிலைப்பாடு குறிப்பிட்டுக் கூறக் கூடிய ஒன்று எனலாம்.

புதிய சொல்லாளுகை

     உலக அரங்கிலிருந்து பார்க்கையில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த இனமக்கள் எழுதியக் கவிதைகளை, அல்லது மொழியாடல்களைக் கூர்ந்து அவதானிப்பதன் காரணமாகத் தங்கள் கவிதைகளில் புதிய பாடுபொருட்களையும் புதிய மொழிகளையும் கையாளுதல் என்பதை அமெரிக்க அல்லது ஆஸ்திரேலியா வாழ் தமிழர் களிடையே காணமுடியும்.

வடமொழிக் கலப்பு

     தமிழகத்தில் நடைபெற்றது போன்று அயலகம் மொழிக் கலப்பிற்கான எந்த ஒரு இயக்கமும் பிரான்சிலோ அல்லது அமெரிக்கவாழ் தமிழர்களிடத்தோ அல்லது இலங்கையிலோ உருகாமையின் காரணமாக, வடமொழிச் சொற்களை அவ்வாறே கவிதைக்குள்ளும் இணைத்து பயன்படுத்தும் மொழிநடை உருவானது. சான்றாகப் பினவ்ரும் கவிதையில் காணலாகும் வடமொழிச் சொற்களைத் தெரிவு செய்தால், சகாப்தம், சாம்ராஜ்ஜியம், என்ற இரு முதன்மையான சொற்களுமே தமிழல்லாத மொழியில் எழுதப்பட்டுள்ளது.

காந்தி எனும் சரித்திரசகாப்தம்
என்றும் எம் நினைவில் ஏந்தி
காந்தி கண்ட சாம்ராஜ்யம்
என்று வருமென மனம் ஏங்கி
காந்தி ஜெயந்தி நினைவூட்டல்!

காந்தி ஜெயந்தி குறித்த இக்கவிதையினுள் பயன்படுத்தப்பட்டுள்ள மொழிநடை மிக எளிமையான சொற்கூறுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது; ஆனால், அவைகளுக்குள் வடமொழி வார்த்தைகளின் கலப்பையும் காண முடிவது ஒரு முடிவை ஆய்விற்குள் ஏற்படுத்துகிறது. தமிழகம் சந்தித்த வடமொழி கலப்பைத் தூய தமிழ் எழுத்துவகை போன்றன அறுபதுகளில் முன்னெடுக்கப்பபட்ட போராட்டங்கள்  மேலை நாடுகளின் தமிழ்ச் சூழலில் பெரிதும் நடைபெறவில்லை. இக்காரணத்தால் வடமொழி மீதான வெறுப்பு என்பது கவிதை தளத்திற்கு நகரவில்லை; இது ஒருவிதத்தில் ஆரோக்கியமான போக்காகவே காணப்படுகிறது எனலாம்.

தொடர்க் காட்சிப்படிமம்

     தமிழில் புதுக்கவிதை போக்குகள் தொண்ணூறுகளில் வருகையில் அனைத்தையும் பட்டியல் இட்டு பின்னர் அவைகளுக்கான எதிர்பாரத முடிவை முன் வைக்கும் முத்தாய்ப்பாக உருவானது. இத்தகையக் கவிதைப்போக்கை தமிழ்ப் புதுக் கவிதை சூழலில் இரண்டாமாயிரம் ஆண்டிலிருந்து தொடங்கி நடைபெற்றுவருவதைக் கூர்மையாக அவதானிக்கும் வாசகன் கண்டுகொள்ள இயலும்.

புதுக்கவிதைக்குள் படிமம் இடம்பெற வேண்டிய தேவையைக் குறித்து ஒரு இயக்கத்தையே இங்கிலாந்தில் எஸ்ராபவுண்ட், டி.எஸ் எலியட் ஆகியோர் தொடங்கினர். இவர்கள் கருத்துப்படி ஒரு நல்ல கவிஞன் தன் வாழ்நாளில் ஒரு ஆகச்சிறந்த படிமத்தை வழங்கினாலே போதுமானது என்றனர். அவ்வகையான படிம வகைகளில் ஒன்று காட்சிப்படிமம். காட்சிப்படிமம் என்பது, தொடர்ந்து அடுக்கப்பட்ட பட்டியலாக வருகையில் அதனைக் தொடர்காட்சிப் படிமம் என்பது வழக்கம்

     இதனைத் தமிழ்ச்சூழலில் நா.முத்துக்குமார், கவிஞர் பச்சியப்பன், தாமரை, போன்ற கவிஞர்கள் ஆகச்சிறப்பான வடிவமாகக் கையாண்டார்கள். அவ்வகையில்,

மழைஒழுகும் வீடு
மல்லிகை உதிர்ந்த முற்றம்
கைக்கெட்டிய தூரத்தில் நீரள்ளும் கிணறு
தொண்டை வீங்கக் கத்தும் தவளையின் சப்தம்
மண்வாசத்தோடு வீசும் காற்று
மழையில் ஆடாதே என்று கத்தும் அம்மா
வேலையிலிருந்து தொப்பையாக நனைந்துவரும் அப்பா
புயல் கரைகடந்ததாய் பொய்சொல்லும் வானொலி
டமடமவென இடிக்கும் வானம்
இருள் அடையும் பொழுது
கறுத்துச்சூழும் மேகம்
ஓரக்கண்ணால் முகம் பார்த்துக் கத்தும் காகம்
இங்கொன்றும் அங்கொன்றுமாய் கிரீச்சிடும் சிட்டுக்குருவிகள்
காற்றில் கிளையாட இலைசொட்டும் மழைதேங்கிய நீர்
பசியில் பரபரக்கும் வயிறு
பள்ளிக்கு போகயிருக்குமோ இருக்காதோ எனும் படபடப்பு
மழையொழுகும் வீட்டினுள் நிரம்பிய
பாத்திரத்திலிருந்து எழும் கூரையின் வாசம்
மண் கிளறி மழையோடு நுகர்ந்த மண்வாசமென
எல்லாவற்றோடும் விடாது ஒட்டிக்கொண்டிருந்தது மனசு..

மனதை என்னசெய்வேன்.. ?

அடுக்குமாடி கட்டிடத்தின் மேலமர்ந்துக்கொண்டு
மறக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்..

(பாஸ்கரன்,தமிழ்முரசு,சிட்னி, ஆஸ்ரேலியா, 28.03.2021)

இக்கவிதை ஆஸ்ரேலியாவின் தலைநகரான சிட்னியிலிருந்து வெளிவரும் கவிதை. தமிழ்முரசு இதழில் வெளியான இக்கவிதையின் சிறப்பு அதன் நேர்த்தியான படிம வகைக்குட்பட்ட பட்டியலாக்கத்தில் உள்ளது. இக்கவிதைக்குள் தொடர் காட்சிப் படிமம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இக்கவிதையில் மிக வலி மையான காட்சிப்படிமாக,

மழையில் ஆடாதே என்று கத்தும் அம்மா

என்னும் வரியைக் குறிக்கலாம். இதற்குள் இக்காட்சிப் படிமத்தின் இழப்பை வலியாக வாசகனுக்குள் சிட்னியிலிருந்து கவிஞனால் கடத்திவிட முடிகிறது. இதனை மைய இழையாகக் கொண்டே கவிதையின் அனைத்து படிம முடிச்சுகளும் பின்னப்பட்டிருக் கின்றன.

காலகாலமாய் கட்டிக்காத்த கொள்கைகளை

கடாசி விட்டு அறிவுக்கு ஒவ்வாத அவன்

கொள்கைகளைப் பின்பற்றி அவனோடு கூத்தடிப்பான்

தமிழன் ரொம்ப நல்லவன்

 மாற்று இனத்தான் தன்னை மெச்சுவதற்காக

தன் இனத்தானை அவனிடம் காட்டிக் கொடுத்து

அவனிடம் கைத்தட்டல் பெறுவான்

தன்மொழி பள்ளியிருக்க பிறமொழி பள்ளிக்கு

தன் பிள்ளைகளை அனுப்பி அந்த மொழியில்

தன் பிள்ளைகள் பேசுவதைக் கண்டு பூரிது போவான்

தமிழன் ரொம்ப நல்லவன்

(தமிழ் ஆலயம்,  சம்திர குப்பன் காப்பர்,2000)

இக்கவிதைகளைக் குறிக்கோள் இல்லாமல் வழும் தமிழர்கள் பற்றியக் கிண்டலாகவும் இடித்துரைப்பாகவும் அமைகிறது. இக்கவிதை மரபின் சாயப் பூச்சினைக் கொண்டுள்ளது. அது இதனுடைய பொருண்மைக்கு ஏற்ற வடிவமாகவும் அமைந்துள்ளது என்பது குறிக்கத்தக்கது,

     உரை நடையின் வடிவத்திற்கும் கவிதைமொழியின் வடிவத்திற்கும் இடையில் ஒரு தளத்தில் இக்கவிதை மொழி அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.

கவிதைக்குள் இருண்மை மொழி

     இருணமை என்னும் கருத்தக்கம் புரியாமை என்பதல்ல; மாறாக புலப்படாமை என மொழியாக்கம் செய்யலாம். அதாவது கவிதைக்குள் உள்ளுறைந்துள்ள கருப் பொருள் ஒன்றின் செயலின்மை அல்லது அதன் உட்கருவினை வாசகனுக்கு உணர்த் துவதில் உள்ள சிக்கல் எனலாம். கவிதைக்குள் இருண்மை என்னும் புரிதலை நோக்கிய பண்பு உருவாகாமை குறித்து பிரம்மராஜன் என்னும் தமிழின் நவீன கவிஞர் பின்வ ருமாறு எழுதுகிறார்.         

கவிதைகளுக்குள் பொருள் புலப்பாடு என்பதில் ஏற்படும் சிக்கல்களில் முதன்மையானது, ஆழ்ந்தகன்ற படைப்பாளனின் உணர்வுகளை அடர்த்தி குறையாமல் வாசகனுக்கு மொழிவழியாகக் கடத்தும் சிக்கலாகும். படைப்பாளன் தனது உணர்வுத்தளத்தை கலைந்தவாறே படம் பிடிக்கிறான். அது மொழிக்குள் ஒரு ஒழுங்கின்மையாகவே ஊடுருவியுள்ளது; இதனை வாசகன் தேடியலைய ஒரு வாசகவெளி அவசியமாகிறது. இதனாலேயே கவிக்குள் இருண்மை என்பது காலங்களாகத் தொடர்கிறது.  (பிரம்மராஜன்,இலை உதிராக்காடு, ப.322)

இத்தகைய இருணமை கவிதைகள் தமிழில் பிரமிள், ந.பிச்சமூர்த்தி காலத்திலிருந்தே தொடர்ந்து வந்துகொண்டுள்ளன எனலாம். தமிழ் நவீனக் கவிதைக்கு உரிய அடையாளமாக இதனை 1990 கள் வரை கருதினர், இத்தகைய இருண்மையான மொழி வெளிப்பாடு உலகம் முழுவதிலும் பலரால் முன்னெடுக்கப்பட்டது. அதில் ஜார்ஜ் லூயி போர்ஹேயின் கவிதை வெளி முதன்மையானதாகும்.

முடிவுரை:

                                 கவிதை என்ற சொல்லை நீக்கி வேறு ஒரு சொல்லை இங்கு அமைத்தால் கருத்தும் அமைப்பும் சிறக்காது என்று கருதும் அளவிற்கு இன்றியமையாத சொற்சேர்க்கையைக் கொண்டு திகழ்வது கவிதை. படிப்போரும் கேட்போரும் மகிழும் வண்ணம் நல்ல நடை உடையதாக விளக்க வேண்டியது கவிதைக்கு அவசியமானதோர் இலக்கணமாகும். கருத்து, உணர்ச்சி, கற்பனை, வடிவம் ஆகியவற்றால் பிற எல்லாவற்றிலும் சிறந்து இருக்க வேண்டியது கவிதைக்கு மிக தேவையான பண்பாகும்.

    1.  ஆயும் பெரும்பனுவர் ஆசுகவி மதுரகவி

அரிய சித்திர கவிதை வித்-

தாரகவி இடும் முடிப்புக் குளம் மயங்காமல்

அடியவர்க்கு அருள் குருபரன் (திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்)

    1. திருக்குறளில் உள்ள

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்.