ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சிற்பங்கள் காட்டும் கொற்றவை வழிபாடு

கி. சரவணன், உதவிப் பேராசிரியர், பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர் முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி செய்யாறு. 27 Jul 2021 Read Full PDF

கட்டுரையாளர்

        கி. சரவணன்,

        உதவிப் பேராசிரியர்,

        பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர்

       முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,

       அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி

       செய்யாறு.

 நெறியாளர்      

   முனைவர் .கு.சீனிவாசன் எம்,ஏ,எம்.ஏ,(யோகா) எம்பில்,பிஎச்டி

   முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,

   அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி

   செய்யாறு.

 

முன்னுரை
                ஆதி சமூகத்தில் வேட்டைச் சமூகமாக வாழ்ந்தான் மனிதன். இவன் கால்நடைகளைப்  பழகி மேய்ச்சல் குழுவாக மாறினான். பின்னர், பெண்கள் பழகிய உழவுத் தொழிலை செய்து கால்நடைகளையும் அவற்றோடு வளர்த்தெடுத்தான்.வாழ்வியல் முறையில் பெண் என்பவள் உற்பத்தியின் வடிவமாக காணப்பட்டாள்.அதனால் பெண்ணை மண்ணில் உருவானவள் என்று புராணங்கள் கூறுகின்றன. இப்பெண் தெய்வங்களில் காடு அமர் செல்வி என்று சங்க இலக்கியத்தில் கூறப்படுகின்ற கொற்றவையின் வடிவமும் அந்தப் பெண் தெய்வத்தை வழிபட்ட முறைமையும் சிற்பங்கள் வழி பிற்காலத்தில் காணமுடிகின்றது.


              கொற்றவை என்பதற்கு பல்வேறு பெயர்கள் அகராதிகள் கூறுகின்றன. சூலி, பிடாரி, காளி, துர்க்கை, அமரி, குமரி, கவரி, சமரி,  நீலி என 

மதியின் வெண்தோடு சூடும்
சென்னிநுதல் கிழித்து விழித்த இமையா
நாட்டத்துப்
பவள வாய்ச்சி தவளவாள்
நகைச்சி
நஞ்சு உண்டு கறுத்த கண்டி

வெஞ்சினத்து
அரவு நாண் பூட்டி நெடுமலை
வளைத் தோள்
துளை எயிற்று உரகக் கச்சுடை
முலைச்சி
வளியுடைக் கையில் சூலம் ஏந்தி
...................
அமரி, குமரி, கவுரி, சமரி
சூலி, நீலி, மால் அவற்கு
இளங்கிளை
ஐயை,  செய்யவள், வெய்யவாள்
தடக்கைப்
பாய் கலைப்  பாவை அருங்கலப்  பாவை1

இது போன்று சூழலில் பல்வேறு பெயர்களில் அழைக்கப் படுவதாக கூறியுள்ளார்.
          கொற்றவை என்பவள் பாலை நிலத்துக்குரிய தெய்வமாகப் மறவர்களால் கூறப்படுகின்றாள். பாலை என்பது தனி நிலம் அன்று முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் வடிவம் கொள்ளுமே என்பதை தொல்காப்பியம் வழியும்இலக்கியங்கள் வழியும் அறியமுடிகின்றது.
 

தொல்காப்பியத்தில் கொற்றவை

தொல்காப்பியம் கொற்றவையை பாலைநில கடவுளாகக் கூறுகின்றd என அறிஞர்கள் பலu; கூறுகின்றனர். எனினும் தொல்காப்பியம் புறத்திணையியல் ஒரு துறையாகக்  கூறுகின்றது.

மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த கொற்றவைநிலையும்      அத்திணை புறனே2

என்று தொல்காப்பியம் மாற்றார் உடன் போருக்கு செல்லும் வீரர்கள் வெற்றி வேண்டி வணங்கிச் செல்லும் நிலையே  'கொற்றவை நிலை' என்பதாகும்.
சிலம்பு நா செல்வராசு தம் ஆய்வொன்றில் சங்க காலத்து கொற்றவைகுறித்துப்  பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

''கொற்றவை பற்றிச் சங்க இலக்கியங்கள் தரும் தகவல்கள் மிகக் குறைவு, கொற்றவை என்ற சொல்லாட்சியே சங்க இலக்கியங்களில் இல்லை.பெருங்காட்டுக் கொற்றிக்குப்  பேய் நொடித்தாங்கு (கலி. 89) எனவும் நெற்றி விழியா நிறைத் திலகம் இட்டாளே கொற்றவைக்  கோலங்  கொண்டு ஓர் பெண் (பரி. 11) எனவும் வருவன  சங்கப்  பிற்காலச் சான்றுகளாகும். அவ்வாறே,  கொற்றவை சிறுவ( திரு. முருகு. 250) என முருகன் சுட்டப்பெறும்  ஓரிடத்துக் கொற்றவையின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. விறல்கெழுசூலி (குறு. 218) எனவும் உருகெழு மரபின் அயிரை(பதி. 79.90) எனவும் குறிக்கப்பெறும் தொடர்கள் கொற்றவைக்  குறிப்பிடுவதாகக்  கூறுவர். அச்சம் தரத்தக்க இத்தெய்வம் வெற்றிக்குரியவள் என்பதும் அவள் மலைக்காடு வாழ்  தெய்வம் என்பதும் மேல் குறிப்புகள் தரும் தகவல்கள் ஆகும். இவை தவிரக் கொற்றவை வழிபாடு பற்றிய வேறு செய்திகளைச் சங்க இலக்கியங்கள் வழி அறிய இயலவில்லை( சிலம்பு நா. செல்வராசு, சங்க இலக்கிய மறுவாசிப்பு ப. 12).


சங்க இலக்கியத்தில் கொற்றவை

சங்கப்பாடல்களில் கொற்றவை மற்றொரு பெயரில் வழங்கப்பட்டுள்ளது. அவை விறல் கெழுசூலி (குறு 218), உருகெழு மரபின் அயிரை(பதி. 79, 90) என்று குறிக்கப் பெறுகின்றாள். பின்னர் தோன்றிய கலித்தொகை, பரிபாடல்,  திருமுருகாற்றுப்படையில் கொற்றவை எனும் சொல்லாட்சியை காணமுடிகின்றது. அவை,

பெருங்காட்டுக் காட்டுக் கொற்றிக்குப் பேய்நொடித்தாங்கு (கலி. 89)

நெற்றி விழியா நிறைத்திலகம் இட்டாளேகொற்றவைக் கோலங்

 கொண்டு ஓர் பெண்

சங்க இலக்கியத்தில் கொற்றவை அச்சம் தரும் தெய்வமாக காட்டப்பட்டுள்ளாள்.

இவ்வாறு கட்டப்பட்ட கொற்றவையின் வழிபாடுகுறித்து சிலப்பதிகாரத்தின் வேட்டு வரியில்விரிவாகப்  பேசப்பட்டுள்ளது.  பாலைநிலத்தில் வாழுகின்ற எயினர்கள்வணங்குகின்ற தெய்வமாக கொற்றவை காட்டப்படுகிறாள்.ஆறலை கள்வராகிய எயினர்கள் வழிப்பறி செய்பவர்களாகவும், ஆநிரைகளைக்  கொள்ளை அடிப்போராகவும் சங்கப் பாடல்களில் பதிவுகள் உண்டு. எண்ணரும் வேட்டுவரும் ஒன்று எனக் கூறும் பல பாடல்களைச்  சங்க இலக்கியத்தில் காணலாம். வேட்டுவ வரியில் எயினர்கள் ஆநிறை கவர்ந்துக் கொற்றவையை வழிபட்டதாகவும், பிறகு தம்மை கொற்றவைக்குப் பலியிட்டுக் கொண்டதாகவும் வேட்டுவரி விவரிக்கிறது.   எயினர்க்கு ஆநிரை கவர்தல் போரில் வெற்றி தருபவளாக கொற்றவை காட்டப்பட்டுள்ளாள் இவள் வெற்றியின் தெய்வம் என்பதைக் கூறுவதே வேட்டுவரின் மையமாகும்.

சான்று பாடல்

மேலும், சிலப்பதிகாரத்தில் கொற்றவையின் தோற்ற திணை விரித்துப்  பேசுகிறது. கொற்றவை சந்திரப்பிறை சூடியக்கலை, நெற்றிக் கண் பவளவாய்,  முத்துப் போன்ற சிரிப்பு, நஞ்சுண்ட கறுத்த கழுத்து
பாம்பையே கயிறாக்க  கொண்டு மேரு மலையை வில்லாக வளைத்த வில்லி, துளை அமைந்த பலருடைய வெடி பாம்பையே கச்சு அணிந்த மார்பு வலிகள் அணிந்த கையில் சூலம் யானைத்தோல் போர்வை புலித்தோல் மேகலை, இடப்புறக் காலில் சிலம்பு,  வலப்புறக்  காலில் கழல், வெற்றி கொடுக்கும் வாளேந்திய கை, எருமைக் கடாவின் தலையில் நிற்பவள், எல்லோரும் தொழும் குமாரி கருப்பு ஊரின் அதிதேவதை சூலம் ஏந்திய பெண் நீல நிறத்தவள்எம்  தலைவி, செய்யவள் தடக்கையில் கொடிய வாளேந்திய நங்கை பாயும் ஆண் மீது ஏறி வருபவன் மலைமகள் கலைமகள் திருமகள் இன் உருவம் இளங்குமரி என்பன போன்ற தோற்ற பொலிவினை கொண்டவளாய் இருப்பாள் என்று சிலப்பதிகாரம் நமக்கு அடையாளம் காட்டுகிறது. இத்துடன் கொற்றவைக்கு மான் வாகனம் உண்டு என்ற குறிப்பும் சிலம்பில் வருகின்றது.

விழிநுதற்  குமாரி,  விண்ணோர் பாவை 

 மையறு சிறப்பின் வான நாடி 

ஐயை தன் கோட்டம் அடைந்தனர்

 ஆங்கு என்3

என்று மதுரை நகருக்கு கவுந்தியடிகள் உடன் நடந்து வந்த கண்ணகியும்,கோவலனும் முதலில் ஒரு கொற்றவை கோவிலை தான் வணங்கினார் என;gijf; காட்சிப்படுத்தியுள்ளார். ,jid,
        கலையமர் செல்வி கடல் உணின் அல்லது 

சிலையமர் வென்றி கொடுப்போள் அல்லள்

மட்டு உண் வாழ்க்கை வேண்டுதீர் ஆயின்

கட்டு உண் மக்கள் கடம் தரும் என்  ஆங்கு4

இப்பாடலில் கலையமர் செல்வி என்று கூறுவது மான் மீது அமர்ந்த பெண் என சொல்லி உள்ளார் என்பது  ஆகும் பின்வரும் சிற்பங்களில் காட்சியை காண முடிகின்றது.

வேலூர் மாவட்டம் திம்மாம்பேட்டையில் காணப்படும் கொற்றவை சிற்பமானது பாலாற்றின் கரையோரம் பழமையான துரிஞ்சி மரத்தடியில் 3 அடி உயரமும் 31/2 அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது. கொற்றவை நீண்ட காதுகள் உடனும் எட்டுக் கரங்களுடனும் காட்சி அளிக்கிறாs;. கரங்களில் வில் வாள் திரிசூலம் போன்ற ஆயுதங்கள் காணப்படுகின்றன இடது காலை தரையிலும் மறுகாலை அமர்ந்த நிலையில் உள்ள மானின் மீது வைத்திருக்கின்ற இடது காலில், வலதுகாலை அமர்ந்த நிலையில் உள்ள மானின் மீதும் வைத்திருக்கிறாள் இடது காலில் அருகில் எருமைத்தலை வடிக்கப்பட்டுள்ளது.

 

இச்சிற்பத்திற்கு பெண்களே படையில் போடுவதாக கூறுகின்றனர். மேலும் சைவ உணவுகளையும் படையலாக படைக்கின்றனர் மழை பொழியாத வறட்சி காலங்களில் அங்கு வாழுகின்ற உழவர்கள் தானியங்களை கொண்டு வந்து சிற்பத்தின் அருகே வைத்து பூசை செய்து பிறகு அங்கு இருக்கும் மண்ணை அள்ளி எடுத்து சென்று தங்களது நிலங்களில் தூவினால் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்று நம்புகின்றனர்.


        வரலாற்றுத் துறை பேராசிரியர்ரான சேகர் கூறுகையில் பிற்கால சோழர்களின் தொடக்க காலமான கிபி பத்தாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கக்கூடும் எனக் கூறுகின்றார். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் வில்லியனூர் என்ற கிராமத்தில் 1200 ஆண்டு கால பழமை யான பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.அக்கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் பின்புறம் உள்ள காளி கோயிலில் இந்த கொற்றவை சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. ஒரு பலகைக் கல்லில் படிப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது இதன் உயரம் 170 சென்டி மீட்டர் அகலம் 105 சென்டிமீட்டர் தடிமன் 10 சென்டி மீட்டர் ஆகும் கொற்றவை நேராக நின்ற நிலையில் இருக்கின்றாள்.

         தலையில் கரண்ட மகுடம், காதுகளில் பனை ஓலை, கழுத்தில் சுவடி, சரப்பளி அணிகலன்கள் மார்பில் சன்ன வீரத்துடன்  காணப்படுகின்றாள். மார்புக்கச்சை தோள்பட்டையுடன் காட்டப்பட்டுள்ளது பின்புறம் இருக்கிறது.இடதுபுறம் கலைமான் வாகனங்கள் காட்டப்பட்டுள்ளது.எட்டு கரங்களுடன் காட்சியளிக்கிறாள் கொற்றவை.இடது பின் கரங்களில் சங்கு வில் கேடயம் உம் இடது முன் கரம் கடியில் நிலையிலும் உள்ளது.வலதுகை அருகே கிளியும் இடதுபுறம் சிங்கமும் காட்டப்பட்டுள்ளது.யானையின் தோலை இடுப்பில் கட்டி அதன் மேல் சிங்கத்தின் தோலை மே கலையாக அணிந்திருக்கிறாள்.


         கொற்றவையின் காலருகே தன் தலையை தானே அறிந்து பலியிட்டுக் கொள்ளும் நவகண்ட வீரன் ஒருவன் இருக்கிறான்.இடது பாக்கம் வணங்கிய நிலையில் அடியார் ஒருவர் இருக்கிறார்.கால்களில் கழலும், சிலம்பும் உள்ளது.காலடியில் எருமையின் தலை காட்டப்பட்டுள்ளது.

 

சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் கொற்றவையின் அமைப்பை ஒத்த நிலையில் இந்தக் கொற்றவை சிற்பம் அமைந்துள்ளது.கி.பி.8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர்கால கொற்றவை சிற்பம் என்று சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனார்.

தேன் தமிழ்த் துணைவன் செவ்வாய் 26, பிப்ரவரி 2019 கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டப் பகுதியில் சேலம் வரலாற்று ஆய்வாளர் அங்குள்ள காட்டுமயிலூர் கிராமத்தில் பல்லவர்கால கொற்றவை கண்டுபிடித்தனர். இக்கொற்றவை வழிபாடு பல்லவர்கள் வலுவிழந்த 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பமாக இதைக் கூறுகின்றனர்.ஒரு பலகைக் கல்லில் படைப்புச் சிற்பமாக கொற்றவை வெட்டப்பட்டுள்ளது.இதன் உயரம் 132 செ.மீ அகலம் 73 செ.மீ ஆகும்.

கொற்றவையின் தலையில் கரண்ட மகுடம், காதுகளில் பத்ர குண்டலம், கழுத்தில் சுவடி, சரபளி போன்ற அணிகலன்கள்  காணப்படுகின்றன. மார்ப்புக் கச்சை பட்டையுடன் காட்டப்பட்டுள்ளது.பின்புறம் சூலம், எட்டு கரங்களும் காணப்படுகின்றன.வலது பின்கரங்களில் பிரயோகச் சக்கரம், நீண்டவாள், மணி போன்றவையும், வலது முன்கரம் அபயமுத்திரையிலும் உள்ளது.

இடதுபின் கரங்களில் சங்கு, வில், கேடயம் போன்றவையும் உள்ளன.இடதுமுன்கரம் கடியங்க நிலையில் உள்ளது.இடுப்பில் அரையாடையும் ஆடைமுடிமுடிச்சும் காட்டப்பட்டுள்ளது.கீழ் வலது புறம் நவகண்டம் கொடுத்துக் கொள்ளும் வீரன் உள்ளார். போரில் வெற்றிப் பெறத் தன் உடலில் உள்ள ஒன்பது பாகங்களை வெட்டி கொற்றவைக்கு படையலிட்டு தன்னைத்தானே பலிகொடுப்பவன் இவ்வாறு கொற்றவையின் சிற்பத்தை தமிழ்நாடு முழுவதும் காணமுடிகின்றது.

முடிவுரை

கொற்றவை என்னும் பெண் தெய்வம் வெற்றி தருபவள். அம்மகளுக்கு உருவம் தந்து இன்று வரை கோவில்களில் சிற்பமாக வழிபடுகின்ற முறையையும் காலம் காலமாக மன்னர்களின் வெற்றியை கணிக்கும் பெண் தெய்வம் பற்றி அறிந்துக் கொண்டோம்.

அடிக்குறிப்புகள்

1. இளங்கோவடிகள்,சிலப்பதிகாரம், வேட்டுவவரி் பாடல் வரி:50-70.

2. தொல்காப்பியர்,தொல்காப்பியம்,புறத்திணையியல் கொற்றவைநிலை:4.

3. இளங்கோவடிகள்,சிலப்பதிகாரம், வேட்டுவவரி பாடல்:வரி 16-17 

4. மேலது காடுகாண்காதை, பாடல்:210-215.

பார்வை நூல்

  • சங்க இலக்கியம் (நியூ செஞ்சுரி புத்தக நிலையம்)
  • சிலப்பதிகாரம் (முழு உரையுடன்)
  • தினமணி
  • தேன் தமிழ் துணைவன் இதழ்