ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஞானசம்பந்தரின் வருகையும் திட்டக்குடியும்

முனைவர் பெ.சுப்ரமணியன், கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, திருவள்ளுவர் பல்கலைக்கழக கலை மறறும் அறிவியல் கல்லூரி, திட்டக்குடி 27 Jul 2021 Read Full PDF

முனைவர் பெ.சுப்ரமணியன், கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, திருவள்ளுவர் பல்கலைக்கழக கலை மறறும் அறிவியல் கல்லூரி, திட்டக்குடி

ஆய்வுச்சுருக்கம்

பண்டைத் தமிழ் மக்களின் பண்பாடு பற்றிய ஆராய்ச்சிகளில் முக்கியமாக திகழ்வதே மானுடவியல் ஆராய்ச்சி. அதனுள் ஒருகூறு திருக்கோவில் பற்றிய ஆராய்ச்சியாகும். திருக்கோவில்கள் தோன்றிய வரலாறு, புராணம், அக்கோவிலில் உள்ள சிற்பக்கலை, வார்ப்புக்கலை, இசைக்கலை, நடனக்கலை, ஓவியக்கலை போன்றவை நாட்டு மக்களின் பண்பாட்டு கருவுலமாகத் திகழ்ந்து வருவதைக் காணலாம். இந்த எண்ணத்தில் தோன்றியதே இவ்வாய்வு ஆகும்.

திட்டக்குடி வட்டாரத்தில் எழுந்தருளியுள்ள சைவத் திருக்கோவிலின் வரலாறு, கோவில்களின் அமைப்பு முறை, வழிபாட்டுமுறை, அக்கோவில்களின் நடைபெறும் விழாக்கள் ஆகியவற்றை ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே,

அறம் போதிக்கும் அறிவுக்களஞ்சியமாகத் திகழும் திருக்கோவில்களுக்கு அதனைச் சுற்றி வாழும் சமுதாயத்திற்கும் இடையேயுள்ள தொடா்பினை அறிந்து கொள்ளவும், திருக்கோவில்களின் மீது மக்கள் கொண்டுள்ள ஈடுபாடு, வழிபாட்டு முறைகள், மக்கள் தெய்வங்களின் மீது கொண்டுள்ள நம்பிக்கைகள் ஆகியவற்றை மக்களுக்குத் தெரியப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

 

திறவுச் சொற்கள்: திருஞானம்பந்தர்,திட்டக்குடி,சைவம், சிவபெருமான்,திருத்தலங்கள்.

 

முன்னுரை

திருஞானசம்பந்தர் நடுநாட்டுத் திருத்தலங்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டு பதிகங்களை அருளிச் செய்துள்ளார். அவ்வகையில் இவ்வட்டத்தில் திருவட்டத்துறைக்கு வந்து 11 பதிகம் பாடியுள்ளார். மேலும், இத்தலத்திற்கு வந்ததினால் முத்து பல்லாக்கு, முத்துக்குடை, முத்து சீவிகையைப் பெற்று இறைவனை வழிபட்டுள்ளார். நடுநாட்டின் 22 திருத்தலங்களில் திட்டக்குடி வட்டாரத்தில் திருவட்டத்துறையில்,

“துங்கவட யிலாய முதலா ஐந்து துள ஒன்று

தொண்டை வடநாடு எண்ணான்கு

தங்கு நடுநாடு இருபத்திரண்டு பொன்னித்தலம் நூற்றித்

தெண்ணூற்று தலைநாட்டு ஒன்று

கொங்கேழு சிங்களத்தில் இரண்டு வைகைகொழி தமிழ்நாட்டு

ஈரேழு முதலாற் சூலச்

செங்கையார் தலம் இருநூற்று எழுபா நான்கு”1

 

என 274 தலங்கள் உள்ளதாக அறிய முடிகிறது. மேலும் புதிதாக இரு தலங்கள் கிடைத்துள்ளன. இவையும் சோ்த்து 276 தலங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வகையில் சைவ நெறி பரப்ப திருஞானசம்பந்தர் நடுநாட்டுத் திருத்தலங்களான திட்டக்குடி வட்டாரத்தில் அமைந்த திருவட்டத்துறைக்கு வந்து வழிபாடு செய்து 11 பதிகம் பாடியுள்ளார்.

திருஅரத்துறையான திருக்கோவில்

திட்டக்குடிக்கும், பெண்ணாகடத்திற்கும் இடையில் 6 கி.மீ தூரத்தில் கொடிக்களம் என்னும் ஊரில் இருந்து தெற்கே 2 கி.மீ தொலைவில் வெள்ளாற்றங்கரையில் அமைந்துள்ளது திருவட்டத்துறை இங்கு அமைந்திருக்கும் திருக்கோயிலை திருஅரத்துறையான் திருக்கோவில் என்றும், தீா்த்தபுரீஸ்வரா் திருக்கோவில் என்றும் அழைப்பா்.

 

புராணச்செய்தி

திருக்கோவில்களில் பாடல்கள் பாடிய திருவள்ளுவா் முதலிய எழுவரை ஈன்ற கலைமகள் அவதாரமாகிய ஆதி என்பாள் தன் நீசத்துவம் நீங்கி முக்தியடைந்ததால் திருவட்டத்துறையே தீர்த்தத்தலமாக அழைக்கின்றார்கள்.

முன்னொரு காலத்தில் வாயு பகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் தங்களில் யார் வல்லமை படைத்தவா் என்பது குறித்து கடும் போட்டி ஏற்பட்டது. அப்போது ஆதிசேஷன் “மேருமலையைச்” சுற்றி வளைத்து இறுகப் பற்றிக்கொண்டான். உனக்கு வல்லமை இருந்தால் என் பிடியிலிருந்து இம்மலையைப் பெயர்த்து எடு என்று வாயு பகவானை நோக்கி கூறினார். தனது முழு வலிமையைப் பயன்படுத்தியும் கூட, மேருமலையை அசைக்க முடியாததால் நாரதமுனி உதவியை நாடினார் வாயுபகவான். நாரமுனி வாயுபகவானுக்கு உதவும் எண்ணத்தோடு தன் கையிலிருந்த “மஹதீ” என்ற வீணையைக் கொண்டு தேவகானம் இசைத்தார். இனிய இசையால் மனதைப் பறிகொடுத்த ஆதிசேஷன் ஒரு கணப்பொழுது தன் பிடியைத் தளர்த்தினான். இதனை எதிர்பார்த்து விழிப்புடன் காத்திருந்த வாயு பகவான் சீறிப் பாய்ந்து மேருமலையைப் பெயர்த்து விட்டார். செய்தறியாது திகைத்த ஆதிசேஷன் சினம்கொண்டு வாயு பகவானை வென்றே தீர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க தென்திசை நோக்கி புறப்பட்டு “நீவாநிதி” என்று அழைக்கப்படும் புண்ணிய நதியான வெள்ளாங்கரையில் இறைவன் எழுந்தருள கடும்தவம் கொண்டார். 

ஆதிசேஷன் தவத்தின் விளைவால் ஏற்பட்ட வெப்பம் தாங்காமல் துன்பப்பட்ட தேவர்கள் கைலைக்குச் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனா். தேவ ரிஷிகளைக் காக்கவும்,ஆதிசேஷனுக்கு அருளவும் திருவுள்ளம் கொண்ட எம்பெருமான், அன்னை பார்வதிதேவியுடன் ஆதிசேஷனுக்குக் காட்சி தந்து அருள்மழை பொழிந்தார் என்று இத்தலச் சிறப்பினைக் கூறுவா்.

”ஐயனின் திருக்காட்சியைத் தரிசித்து, சினம் தனிந்த ஆதிசேஷன் தான் தரிசனம் பெற்ற இவ்விடத்தில் தன்னுடைய பெயா் நிலைத்திருக்க அருள்பாலிக்க வேண்டி வரம் கேட்டார். அதற்கு இணங்க, ஆதிசேஷனின் தவ வலிமையைக் கண்டு மனம் மகிழ்ந்த ஈசனும் இத்தலத்திற்கு ’அரவத்துறை’ என்னும் நாமத்தை அருளினார்“2 (அரவன் + துறை). இறைவனிடம் அருளைப்பெற தவம் செய்த போது இப்பகுதி வெப்பமானதால், இத்தலத்தின் மேல் கருடன் வலம் வராது.

“அரவம்” என்னும் ஆதிசேஷன், தவம் செய்த இடம் வெள்ளாற்றங்கரையோரமான துறை. ஆகையால், அரவன் + துறை = அரவத்துறை என பெரியோர்களால் அழைக்கப்பட்டது.2

இது, பிற்காலத்தில் நெல் பயிர்கள் சூழ்ந்த பசுமையின் காரணமாக, திருநெல்வாயில் என்றும் அழைக்கப்பட்டது. தற்பொழுது திருவட்டத்துறை என்று அழைக்கின்றனர். திருஞானசம்பந்தர் இரண்டு பெயரையும் சேர்த்துப் பாடியிருப்பதைக் காணமுடிகிறது.

இத்தலத்து இறைவனை ஆனந்தீஸ்வரா், அரத்துறைநாதர், தீர்த்தபுரீஸ்வரா் என்றும் அம்பிகையை ஆனந்நாயகி, அறத்துறை நாயகி, திரிபுரசுந்தரி என்றும் அழைத்து வழிபடுகின்றனர். கர்வம் கொண்டு வரும் அனைவரையும் தன் முக அழகினால் மனமாற்றம் அடையச் செய்யும் வண்ணம் தாயார் முகம் அழகுடையது. புன்சிரிப்புடன் காணப்படும் தாயாரைக் கண்டவுடன் அமைதி நிலைக்கச் செய்கின்றாள் என்பது இத்தலச் சிறப்பாகும்.3

வரலாற்றுச் செய்தி

“ஆதிசேஷனுக்கு ஆடவல்லான் திருக்காட்சி தந்ததால் மனம் மகிழ்ந்த வால்மீகி மகரிஷி இத்தலத்தில் தங்கியிருந்து வழிபாடுகள் மேற்கொண்டார். அப்போது சூரிய குல மன்னனான திருபுனச் சக்கரவர்த்தி திருத்தலங்கள் தோறும் யாத்திரை மேற்கொண்டு, வழிபட்டு வந்தபோது திருவட்டத்துறை வந்தார். வால்மீகி மகரிஷியின் மூலம் இத்தலத்து ஈசனின் பெருமைகளைக் கேட்டறிந்து, அகம் மகிழ்ந்து பொன்னையும், பொருளையும் அள்ளித்தந்து இவ்விறைவனுக்கு கி.பி.630ல் திருக்கோவில் எழுப்பி திருப்பணிச் செய்துள்ளார்”. 4.

இத்தலத்து பெருமைப் பலருக்கு உணர்த்தியதால் வால்மீகி ரிஷிக்கு தனிச்சன்னதி உள்ளதைக் காண முடிகிறது.

இவரைத் தொடர்ந்து தமிழகத்தைச் சிறப்பாக ஆட்சிச் செய்து வந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், சைவ நெறி தழைத்தோங்க தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இதனால் இவர்கள் பெயராலேயே ஆத்மார்த்த மூர்த்திகளாக சேரலிங்கம், சோழலிங்கம், பாண்டியலிங்கம் என மூன்று லிங்க திருமேனிகளை இக்கோவிலின் உள் சுற்றுப்புறத்தில் மேற்கு திசையில் எழுந்தருளச் செய்துள்ளார்கள். எந்தந்த மன்னர்கள் என்ற குறிப்பு இல்லாததால் பொதுப் பெயராலே சூட்டியுள்ளார்கள்.

பதிகங்கள் மூலம் அறியும் செய்திகள்

இத்தலத்து இறைவன் மீது திருஞானசம்பந்தர் 11 பதிகங்கள் பாடியுள்ளார். இத்தகு சிறப்பு கொண்ட இக்கோவில் பெருமையினைக் கீழ்க்கண்ட திருஞானசம்பந்தா் பாடல் மூலம் அறிய முடியகிறது.

“எந்தை ஈசன்எம் பெருமான் ஏறமா்

கடவுள் என்று ஏத்தச்

சிந்தை செய்வார்க்கெல்லாற்

சென்று கைகூடுவதென்றால்

கந்த மாமலருத்திக் கடும்புனல்

நீவா மல்கு கரைமேல்

அந்தண் சோனால நெல்வாயில்

அரத்துறையடிகள் தம் அருளே”5

திருஞானசம்பந்தா் நெல்வாயில் அரத்துறையானை வழிபட நடைபயணமாக வந்தபோது அவரது பாத மலா்கள் சிவந்து, புண்ணாகி நடக்க இயலாமல் துன்பப்பட்டார்.

 

சம்மந்தரின் வருத்தத்தைப் போக்க திருவுள்ளம் கொண்ட எம்பெருமான். அன்றிரவு அரத்துறையில் உள்ள அந்தணா்கள் அனைவரின் கனவிலும் தோன்றி “எமது குழந்தை ஞானசம்பந்தன் ” வருகின்றான். நீங்கள் முத்துக்குடை முத்துசீவிகை, முத்துபல்லாக்கு ஆகியவற்றை எடுத்துச்சென்று வரவேற்று வாருங்கள் என்றருளினார். மறுநாள் காலை திருக்கதவு திறக்க, கனவில் கூறியது போல் மூன்றும் இருப்பதை கண்டு வியந்து போனார்கள். இறைவனின் எல்லையற்ற கருணையை எண்ணி, மனம் உருகினார்கள்.

திருஞானசம்பந்தரின் கனவிலும் உமையொருபாகன் தோன்றி உனது திருத்தொண்டு தடைபடாமல் இருக்க யாம் உனக்கு அளித்தருளும் சீவிகை, பல்லாக்கு, குடை, முதலியவற்றை ஏற்றுக்கொள்வாயாக எனத் திருவாய் மலர்ந்தருளினார். சம்பந்தரும் ஈசனின் கருணையை நினைத்து நினைத்து மனமுருகி பாடல்கள் பாடி துதித்தார்.6

பஞ்சாட்சர மந்திரத்தை ஓதியப்படி சீவிகையில் அமா்ந்து திருக்கோவிலுக்குச் சென்று வழிபட்டு, இறைவன் மேல் 11 பதிகங்கள் பாடி இறைவனின் அருளைப் பெற்றார்.

தலச்சிறப்புச் செய்திகள்

சூரிய குடும்பத்தில் அங்கம் வசிக்கும்செவ்வாய். சனி கிரகங்கள் ஒரு சமயத்தில் ஏற்பட்ட வினைப் பயனால் சூரிய சந்திரங்களின் சாபத்தினைப் பெற நேரிட்டது. 

செவ்வாயும், சனியும் பிரம்ம தேவனை அணுகி சாப விமோசனத்திற்கு வழிகூறி அருளும்படி வேண்டினர். பிரம்மதேவனும் அவா்களின் நிலையைக் கண்டு மனம் இரங்கி புலோகத்திற்குச் சென்று அரத்துறை ஈசனை நோக்கி தவம் இயற்றுமாறு வழி கூறியருளினார். அவ்வாறு செவ்வாயும், சனியும் நீவா நதியில் நீராடி கடுந்தவம் புரிந்தார்கள். தவத்தினால் மகிழ்ந்தத இறைவன் அவா்களுக்கு காட்சி கொடுத்து அவா்களது துன்பத்தை நீக்கி அருள்புரிந்தார்“7  

குறைதீர்த்த செவ்வாயும், சனியும் பல்லாண்டு காலங்கள் இத்தலத்து ஈசனை வணங்கி மகிழ்ந்தார்கள், செவ்வாய் தோஷம் காரணமாக நீண்ட நாட்களாகத் திருமணமாகாமல் உள்ளவா்கள் இத்தலத்து ஈசனை வழிபடுவதன் மூலம் நல்லதெரு வாழ்க்கைத் துணை அமையப்பெறறு வளம் பெறுவார்கள் என நம்புகின்றனா், அஷ்டமச்சனி, ஏழரைச்சனியின் ஆதிக்கத்தால் துன்பப்படுபவார்கள். இத்தலத்தில் வந்து முறைப்படி வழிபாடு செய்தால், சனி பகவானுக்கு ஏற்பட்ட இன்னல்களைக் களைத்தது போல் பக்தா்களின் இன்னல்களையும் தீா்த்து தடுத்தாட்கொள்வது பலரும் அனுபவத்தில் கண்ட உண்மையாகும். சனி பகவானுக்கு இங்கே தனி சன்னதி உள்ளது. 

சிறந்த வழிபாட்டுத் தலம்

முத்துச்சிவிகை பெற்ற சம்பந்தா் இத்தலத்தில் ஈசனை வணங்கி தந்தையாக ஏற்றுக்கொண்டதால் இங்கு வழிபாடு செய்பவா்கள் மூதாதையா்களின் ஆசிகளைப் பெறுகின்றனா். இங்கு நடைபெறும் மாசிமகப் பெருவிழாவில் பத்தாம் நாள் தீா்த்தபுரீஸ்வரா் வெள்ளாற்றில் தீா்த்தவாரி நடத்தி, மூதாதையா்களின் பாவங்களைப் போக்கி முக்தியளித்தார். இன்றும் மாசிமகத்தின் போது வெள்ளாங்கரையில் ஏராளமானோர் மூதாதையா்களை வணங்கி புசை செய்து அளவிட முடியாத புண்ணியத்தைப் பெறுகின்றனர்.

“நீண்ட நாட்களாக உடல்நலிவு ஏற்பட்டவா்கள், தீராத நோய்களால் அவதிப்படுபவா்கள் வெள்ளாற்றில் புனித நீராடி தீர்த்தபுரீஸ்வரரை வணங்கினால் உடல்நலிவு நீங்கப்பெற்று மன நிம்மதி பெறுவார்கள்”.8

திருக்கோயில் அமைப்பு

நான்கு ஏக்கர் சுற்றளவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. கிழக்கு கோபுரம் மட்டும் தான் உள்ளது. கோபுரத்திலிருந்து உள்ளே சென்றவுடன் வலது புறத்தில் தாயார் சன்னதி உள்ளது. 

ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி என்ற திருநாமத்துடன் காட்சியளித்து அருள்பாலிக்கின்றாள். கருவறையில் தாயார் தென்திசையைப் பார்த்தவாறு நின்ற நிலையில் ஆனந்தக்காட்சி அளிக்கிறாள்.

கருவறையில் அரத்துறையான சதாசிவ வடிவில் கிழக்கு நோக்கி பக்தா்களுக்கு அருள்புரிகிறார். இந்த வடிவம் சுமார் இரண்டடி உயரம் இருக்கும்.

நந்தி

பொதுவாக சைவ திருக்கோவில்களில் நந்திதேவா் இறைவனை நோக்கியவாறு அமைந்திருப்பார். ஆனால் இத்தலத்தில் நந்திதேவா் சற்று தெற்கு பார்த்தவாறு காணப்படுகிறார். “ஊழிக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது தேவா்களும், முனிவா்களும் அரத்துறையானை வணங்க, வரும் பேரழிவில் இருந்து எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொண்டதின் காரணமாக நந்தி தேவருக்கு அரத்துறையார் இட்ட கட்டளையின்ப “நீரை” உட்கொண்டார் என்பது புராணச் சான்று”9

வழிபாடும்-திருவிழாக்களும்

திருவட்டத்துறை திருக்கோவிலில் தினபுசைகள் நான்கு வேளையும் நடைபெறுகின்றன. பிரதோஷம், அமாவாசை, கிருத்திகை போன்ற சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

மாசிமகத் திருவிழா

ஆண்டுதோறும் மாசித் திங்களில் 10 நாட்கள் விழா நடைபெறும். இதனை மாசிமகப் பெருவிழா என்பர்.

 

நந்தவனம்

திருக்கோவிலின் புசைக்கான மலா்களுக்குரிய மரங்கள், நத்தவனத்தில் வளா்க்கப்படுகின்றன். புசைக்குரிய மலா்கள் தொடுக்க தனிநபா் நியமனம் செய்துள்ளார்கள். இங்கு,

  • நாகலிங்கம் 10
  • மனோரஞ்சிரதம் 11
  • பின்ன மரம் அதிகமாக உள்ளன.

நாகலிங்கம் G+வினை இறைவனின் பாதத்தில் வைத்து வீட்டுக்கு எடுத்துவரும்போது சூனியம் விலகும் என நம்புகின்றனா்.

தலமரம்

இக்கோவிலின் தலமரம் ஆல் ஆகும். இது காசியில் இருக்கும் ஆலமரத்தைவிட சிறப்புடையது. இறந்தவா்களுக்குத் தா்ப்பணம் செய்யும் போது ஆல இலையை வைத்து செய்தால் புண்ணியம். இன்று இக்கோவில் எதிரே காணப்படும் மரம் மூன்றாவது தலைமுறையாகும்.

இத்திருக்கோவிலின் சிறப்பு

ஆனந்தீஸ்வரரை அரவம் வணங்கி, வலிமைப் பெற்றதால் இங்கு வாழும்மக்களை இன்றுவரை அரவம் தீண்டியதில்லை.

செவ்வாய் தோஷம் நீங்க வழிபாடு செய்யும் கோவில்.

சனி பகவானால் துன்பப்பட்டவா்களின் துயரம் நீங்க, நீவா நதியில் நீராடிசனி பகவானை வணங்கி, தீா்த்தபுரிஸ்வரை வணங்கினால், சனியின்பாதிப்பு நீங்கும்.

கருடன் திருத்தலத்தின் மேல் வலம் வராது.

 

 

முடிவுரை

திருவட்டத்துறையில் திருஞானசம்பத்தா்பாடல்கள் பாடி அருளும் பெற்றுள்ளர்கள். இன்று திருவட்டத்துறை என்றும் அழைக்கும் இவ்வுா் ஆதிகாலத்தில் நெல்வாயில் என அழைக்கப்பட்டது. அதற்கு காரணம் நெற்பயிர்கள் சூழந்த பயிர்கள் மத்தியில் தீா்த்தப்புரிஸ்வரா் எழுந்தருளினார். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் திருவட்டத்துறையில் ஆகும். வாயும் பகவானை மீண்டும் வெல்ல வலிமைபெற வேண்டி அரவம் தவம்கொண்ட இடம் திருவட்டத்துறையாகும். இதனால் இவ்T+ர் திருஅரவத்துறை என பெயர் பெற்றது. திருஞானசம்மந்தரின் வருகையை உணர்ந்த ஈசன், சம்பந்தரின் பாதம் நோகாமல் இருக்க முத்துப் பல்லாக்கு, குடை, சீவிகை ஆகியவை வழங்கப்பட்ட இ்டம் இதுவே ஆகும். மாசி மக விழா பெரும் சிறப்போடு கொண்டாடப்படுகிறது. அன்று இறந்தவா்களுக்கு “திதி” கொடுக்கும் நாளாகவும் அந்நாள் கொள்ளப்படுகிறது.

 

அடிக்குறிப்பு

  • கோவில் ஜெயராமன், 1998, சீர்மீகு திருக்கோயில், பாவை  

பதிப்பகம்,திருக்கோவிலூர், ப - 7

  • குமரன், 1950, திருக்கோயில வரலாறு திருவட்டத்துறை, முருகன் அச்சகம், 

பெண்ணாடம், ப - 2

3.  மேலது, ப - 12

4.  மேலது, ப - 22

5.  மேலது, ப - 6

6. ராஜகோபலன் ஏ.எம், 2006, குமுதம் சோதிடம், குமுதம் பப்ளிகேசன்ஸ், 

சென்னை, ப - 2

  • செந்துறை முத்து, 1976, திருக்கோவில் வழிபாடு, மணிவாசகர் பதிப்பகம் 

சென்னை, ப - 70

  • செந்துறை முத்து, 1976, திருக்கோவில் வழிபாடு, மணிவாசகர் பதிப்பகம் 

சென்னை, ப - 43

  • சேக்கிழார், 1974, பெரியபுராணம், குமரகுருபரன் சங்கம், ப - 223