ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

நிகண்டுகளில் அளவுப்பெயர்கள்

முனைவர் கி. சுமித்ரா உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை ஸ்ரீ மூகாம்பிகை கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்) மல்லுப்பட்டி, பாலக்கோடு, தருமபுரி 09 Nov 2021 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்

       நிகண்டு என்னும் சொல்லுக்கு ‘நீண்டது’ என்னும் பொருள் கொள்ளப்படுகின்றது. சொற்களின் பட்டியல் நீளமாகத் தரப்பட்டிருப்பதால், அல்லது சொற்களின் பட்டியல் நீண்டு கொண்டு போவதால் நிகண்டு என்னும் பெயர் உருவாகியிருக்கின்றது. நிகளுவது நிகண்டு எனவும் வழங்கப்படுகின்றது. இங்ஙனம் பொருள் கொள்ளின் நிகண்டு என்னும் சொல் தமிழ்ச்சொல் என்பது பெறப்படும். இச்சிறப்பு வாய்ந்த நிகண்டுகளில் திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, உரிச்சொல் நிகண்டு, கயாதர நிகண்டு, பாரதிதீப நிகண்டு, சூடாமணி நிகண்டு, ஆசிரிய நிகண்டு, பொதிகை நிகண்டு, நாமதீப நிகண்டு ஆகிய ஒன்பது நிகண்டுகளில் மட்டும் அளவுப்பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவ்அளவுப்பெயர்கள் குறித்து இக்கட்டுரை ஆராய்கின்றது.

திறவுச்சொற்கள்

               சிறிதின் பெயர், முழுதின் பெயர், நீளத்தின் பெயர், அகலத்தின் பெயர், எண்ணின் பெயர், அளவின் பெயர், துலாம், ஒரு பலம், கால் பலம், ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், நூறாயிரம், பத்து நூறாயிரம்.

முன்னுரை

இன்ன சொல்லுக்கு இன்ன பொருள், இன்ன பொருளுக்கு இன்ன பெயர் எனக்கொண்டு உருவான நூல்தான் நிகண்டு என்று கூறப்படுகின்றது. அளவுப்பெயர்களை தூரத்தின் பெயர், பரப்பின் பெயர், எல்லையின் பெயர், நீளத்தின் பெயர், அகலத்தின் பெயர், சிறுகலின் பெயர், வரையறையின் பெயர், அளவின்மையின் பெயர், பாதியின் பெயர், அளத்தலின் பெயர், அளவு வகையின் பெயர், நிறையின் பெயர் முதலான வகையில் தொகுத்து வகைப்படுத்தி ஆராயப்பட்டுள்ளன. ஒன்பது நிகண்டுகளில் பதிவாகியுள்ள அளவுப்பெயர்களை அடிப்படையாக வைத்து இக்கட்டுரை அமைகின்றது.

திவாகர நிகண்டு

 “கதிர்த்தொகுதி, மயிர்த்தொகுதி போல்வன கற்றை” (1361)

        கற்றையின் பெயர் (2) - 1. கதிர்த்தொகுதி, 2. மயிர்த்தொகுதி

        பருமையின் பெயர்

          “பரூஉவும் பீனமும் பருமை ஆகும்” (1364) - 1. பரூஉ, 2. பீனம்

        சிறிதின் பெயர்

          “கிலமே சிறிது ஆம்” (1366) - 1. கிலம்

        முழுதின் பெயர்

          “அகிலம் முழுதும்” (1367) - 1. அகிலம்

        மிகுதியின் பெயர் - 23

               “அமலை, உறு, தவ, நனி, உருப்பு, ஆற்றல்…” (1368)

1. அமலை, 2. உறு, 3. தவ, 4. நனி, 5. உருப்பு, 6. ஆற்றல், 7. கழிவு, 8. விதப்பு,
9. இறப்பு, 10. கதழ்வு, 11. கடுமை, 12. பெருமை, 13. சிறப்பு, 14. ஆன்றல், 15. மதர்வு,
16. பிறங்கல், 17. அதிகம், 18. புதுமை, 19. கயவு, 20. பரம், 21. பொற்பு, 22. பொக்கம்,
23. பொம்மல்

  உயர்ச்சியின் பெயர் - 12

“உவப்பே, துங்கம், உன்னதம், மோடே….” (1369)

1. உவப்பு, 2. துங்கம், 3. உன்னதம், 4. மோடு, 5. நிவப்பு, 6. சேண், 7. பிறங்கல்,
8. ஏந்தல், 9. ஓங்கல், 10. நிமிர்தல், 11. புரை, 12. உறை.

  தூரத்தின் பெயர் - 3

“சேணும் நீளிடையும் சேய்த்தும் தூரம்” (1370) - 1. சேண், 2. நீளிடை, 3. சேய்த்து

  இடம்பாட்டின் பெயர் - 2

“விசாலம், விபுலம், இடம்பாடு ஆகும்” (1371) - 1. விசாலம், 2. விபுலம்

  பரப்பின் பெயர் - 5

“பாய்தலும், ஞெமிர்தலும், பப்பும் பரப்பும்…” (1372)

1. பாய்தல், ஞெமிர்தல், 3. பப்பு, 4. தாவுதல், 5. பரவை

  நீளத்தின் பெயர்

“வார்தல், போகல், சேண், வரி, உறையே..” (1374)

1. வார்தல், 2. போகல், 3. சேண், 4. வரி, 5. உறை, 6. நீக்கம், 7. தீர்தல்,
8. நேர்பாடு, 9. ஒழுகல், 10. நெடுமை, 11. வடிதல், 12. நெடில்.

  அகலத்தின் பெயர் - 15

“அகறல், பாழி, ஆய்வு, பரப்பு, அகலுள்….” (1376)

1. அகறல், 2. பாழி, 3. ஆய்வு, 4. பரப்பு, 5. அகலுள், 6. கண்ணறை, 7. பாடு,
8. ஆர், 9. வியலிடம், 10. ஆன்றல், 11. பயன், 12. நனவு, 13. விரிவு, 14. மேல், 15. ஒளி.

 

  சிறுகலின் பெயர் - 6

“அஃகலும், அருகலும், அவிதலும், குறைதலும்…” (1377)

1. அஃகல், 2. அருகல், 3. அவிதல், 4. குறைதல், 5. சுருங்கல், 6. குன்றல்.

  அளவின்மையின் பெயர் - 3

“அபாரம், அனந்தம், அபரிமிதம், அளவின்மை” (1383)

1. அபாரம், 2. அனந்தம், 3. அபரிமிதம்

  அளவின் பெயர் - 9

“தாறு, கால், மாத்திரை, வரை, துணை, நேரம்…” (1414)

1. தாறு, 2. கால், 3. மாத்திரை, 4. வரை, 5. துணை, 6. நேரம், 7. காறு,
8. பரிமாணம், 9. அவதி.

  எல்லையின் பெயர் - 3

“ஏணியும் வரைப்பும் வரம்பும் எல்லை” (1415) - 1. ஏணி, 2. வரைப்பு, 3. வரம்பு

  வரையறையின் பெயர் - 3

“அளவு, நிறை, எண், வரையறை ஆகும்” (1416) - 1. அளவு, 2. நிறை, 3. எண்

  கச்சம் என்னும் பெயர் - 2

“கச்சம், அளவையும், கடனும் ஆகும்” (1417) - 1. அளவை, 2. கடன்

  எண்ணின் பெயர் - 1

“அலகு, எண் ஆகும்” (1526) - 1. அலகு

பிங்கல நிகண்டு

  கூட்டுதலின் பெயர் - 2

“அடுத்தல் பொருத்தல் கூட்டுத லாகும்” (2166) - 1. அடுத்தல், 2. பொருத்தல்

  பகுத்தலின் பெயர் - 2

“பகிர்தல் பாத்தி பருத்த லாகும்” (2169) - 1. பகிர்தல், 2. பாத்தி

  பரப்புதலின் பெயர் - 3

“விரியல் விளம்பல் பாரித்தல் பரப்புதல்” (2179)-1. விரியல், 2. விளம்பல், 3. பாரித்தல்

  அடுக்குதலின் பெயர் - 1

“ஏற்ற லடுக்குதல்” (2180) - 1. ஏற்றல்

  விரிவின் பெயர் - 2

“….விசாலமும் விபுலமும் விரிவென லாகும்” (2217) - 1. விசாலம், 2. விபுலம்

  பரப்பின் பெயர் - 5

“பாய்தல் விரியல் பப்புப் பரவை…” (2218)

1. பாய்தல், 2. விரியல், 3. பப்பு, 4. பரவை, 5. தாவல்

 

  தூரத்தின் பெயர் - 3

“சேணு நீளமுஞ் சேய்மையுந் தூரம்” (2219) - 1. சேண், 2. நீளம், 3. சேய்மை

  அகலத்தின் பெயர் - 3

“நனவே கண்ணறை வியலிவை யகலம்” (2220) - 1. நனவு, 2. கண்ணறை, 3. வியல்

  கனத்தின் பெயர் - 2

“கனமே யடையு ஞாட்பு மாகும்” (2221) - 1. அடை, 2. ஞாட்பு

  எல்லையின் பெயர் - 7

“அவதியுஞ் சிம்முங் காடும்பரி யந்தமும்…” (2222)

1. அவதி, 2. சிம், 3. காடு, 4. பரியந்தம், 5. ஏணி, 6. வரைப்பு, 7. கொத்தம்.

  அளவின் பெயர் - 8

“தனையுங் காறுந் தாறுந் துணையும்…” (2223)

1. தனை, 2. காறு, 3. தாறு, 4. துணை, 5. வரை, 6. பிரமாணம், 7. மாத்திரை,
8. மட்டு

  அளவு இன்மையின் பெயர் - 4

“அபரிமிதமு மநந்தமு மபாரமு….” (2224)

1. அபரிமிதம், 2. அநந்தம், 3. அபாரம், 4. எல்லையின்மை

  பெருக்கம் பெயர் - 2

“பிறங்கலும் பெருகலும் பெருக்க மாகும்” (2229) - 1. பிறங்கல், 2. பெருகல்

  குறைதலின் பெயர் - 5

“சுருங்கலுங் குறையு மருகலுங் குன்றலு

மெஞ்சலுங் குறைதலி னியன்ற பெயரே” (2231)

1. சுருங்கல், 2. குறை, 3. அருகல், 4. குன்றல், 5. எஞ்சல்

  மிகுதியின் பெயர் - 16

“அமலை நனியே யாற்ற லிறப்பு…” (2232)

1. அமலை, 2. நனி, 3. ஆற்றல், 4. இறப்பு, 5. பெருகல், 6. கழிவு, 7. சிறப்பு,
8. பிறங்கல், 9. உருப்பம், 10. தவ, 11. மதர், 12. ஊக்கம், 13. அதிகம், 14. விதப்பு,
15. செறிதல், 16. பொங்கல்

  பாதியின் பெயர் - 4

“பாயல்பய லருத்தம் பங்கு பாதி” (2240)-1. பாயல், 2. பயல், 3. அருத்தம், 4. பங்கு

  பாதி (தொடர்ச்சி) பெயர் - 2

“கூறும் பாகமுங் கூறு மதற்கே” (2241) - 1. கூறு, 2. பாகம்

  முதலின் பெயர் - 8

“ஆதி தலைதா ளடிமுன் னெழுவாய்…” (2247)

1. ஆதி, 2. தலை, 3. தாள், 4. அடி, 5. முன், 6. எழுவாய், 7. மோனை, 8. மிராசயம்

  நடுவின் பெயர் - 5

“இடைசம மத்திமம் நாப்பண் பகனடு” (2248)

1. இடை, 2. சமம், 3. மத்திமம், 4. நாப்பண், 5. பகல்

  நடுவின் பெயர் (தொடர்ச்சி) - 2

“நள்ளென் பெயரு ரனந்தலையு மாகும்” (2249) – 1. நள், 2. நனந்தலை

  கடையின் பெயர் - 8

“இறுதியின் னெல்லை கடையீ றந்த..” (2250)

1. இறுதி, 2. பின், 3. எல்லை, 4. ஈறு, 5. அந்தம், 6. முடிவு, 7. முற்று, 8. முடிதல்

  மிகுதலின் பெயர் - 2

“தெறுத லுறுத்தல் மிகுத்த லாகும்” (2251) -1. தெறுதல், 2. உறுத்தல்

  மிக்கதின் பெயர் - 3

“மிஞ்சுதல் விஞ்சுதல் மீமிசை மிக்கது” (2252)-1. மிஞ்சுதல், 2. விஞ்சுதல், 3. மீமிசை

  நெருக்கதின் பெயர் - 4

“எக்கல் குவித்த னளிநிபிட நெருக்கம்” (2253)- 1.எக்கல், 2.குவித்தல், 3.நளி, 4.நிபிடம்

  தூக்கின் பெயர் - 2

“தூக்குத் துலாங்கா” (2254) - 1. துலாம், 2. கா

  தூக்கின் நிறை பெயர் - 1

“நூற்றுப் பலநிறை” (2255) - 1. நூற்றுப்பலம்

  ஒரு பலத்தின் பெயர் - 1

“தொடியென் கிளவி யொருபல மாகும்” (2256) - 1. தொடி

  துலாம் இருபஃதின் பெயர் - 1

“பார மென்பது துலா மிருபஃதே” (2257) - 1. பாரம்

  கால் பலத்தின் பெயர் - 1

“கஃசு காற்பலம்” (2258) - 1. கஃசு

  மாகாணிப் பலத்தின் பெயர் - 1

“வீசமா காணிப்பலம்” (2259) - 1. வீசம்

  ஒன்றின் பெயர் - 1

“ஏக மொன்றே” (2260) - 1. ஏகம்

  பத்தின் பெயர் - 1

“தசம்பத் தாகும்” (2261) - 1. தசம்

  நூறின் பெயர் - 1

“சதநூ றாகும்” (2262) - 1. சதம்

  ஆயிரத்தின் பெயர் - 1

“சகசிர மாயிரம்” (2263) - 1. சகசிரம்

  பதினாயிரத்தின் பெயர் - 1

“ஆயுதம்பதி னாயிரம்” (2264) - 1. ஆயுதம்

  நூறாயிரத்தின் பெயர் - 1

“நியுதநூ றாயிரம்” ( 2265) - 1. நியுதம்

  பத்து நூறாயிரத்தின் பெயர் - 1

“பிரயுதம் பத்து நூறா யிரமே” (2267) - 1. பிரயுதம்

  கோடியின் பெயர் - 1

“பிரயுதம் பத்தே கோடி யென்ப” (2267) - 1. பிராயுதம் பத்து

  அற்புதத்தின் பெயர் - 1

“கோடி பத்தே யற்புத மாகும்” (2268) - 1. கோடி பத்து

  நிகர்ப்புதத்தின் பெயர் - 1

“அற்புதம் பத்தே நிகர்ப்புத மாகும்” (2269) - 1. அற்புதம் பத்து

  கும்பத்தின் பெயர் - 1

“நிகர்ப்புதம் பத்தே கும்ப மாகும்” (2270) - 1. நிகர்ப்புதம் பத்து

  கணகத்தின் பெயர் - 1

“கும்பம் பத்தே கணக மாகும்” (2271) - 1. கும்பம் பத்து

  கற்பத்தின் பெயர் - 1

“கணகம் பத்தே கற்ப மாகும்” (2272) - 1. கணகம் பத்து

  நிகற்பத்தின் பெயர் - 1

“கற்பம் பத்தே நிகற்ப மாகும்” (2273) - 1. கற்பம் பத்து

  பதுமத்தின் பெயர் - 1

“நிகற்பம் பத்தே பதும மாகும்” (2274) - 1. நிகற்பம் பத்து

  சங்கத்தின் பெயர் - 1

“பதுமம் பத்தே சங்க மாகும்” (2275) - 1. பதுமம் பத்து

  சமுத்திரத்தின் பெயர் - 1

“சங்கம் பத்தே சமுத்திர மாகும்” (2276) - 1. சங்கம் பத்து

  அந்நியத்தின் பெயர் - 1

“சமுத்திரம் பத்தே யந்திய மாகும்” (2277) - 1. அந்நியம் பத்து

  பராத்தத்தின் பெயர் - 1

“அந்நியம் பத்தே பராத்த மாகும்” (2278) - 1. பராத்தம் பத்து

  மத்தியத்தின் பெயர் - 1

               “அந்நியம் பத்தே மத்திய மாகும்” (2278) - 1. அந்நியம் பத்து

  பரார்த்தத்தின் பெயர் - 1

“மத்தியம் பத்தே பரார்த்த மாகும்” (2279) - 1. மத்தியம் பத்து

  பூரியத்தின் பெயர் - 1

“பரார்த்தம் பத்தே பூரிய மாகும்” (2280) - 1. பரார்த்தம் பத்து

  பிரம கற்பத்தின் பெயர் - 1

“பூரியம் பத்தே பிரம கற்பமென்

றோதின ரெண்ண ருறுமப் பெயரே” (2281) - 1. பூரியம் பத்து

  பிரம கற்பத்தின் பெயர் - 3

“மாறுதல் பகர்தல் கூறுதல் விற்றல்” (2292) - 1. மாறுதல், 2. பகர்தல், 3. கூறுதல்

  விலையின் பெயர் - 1

“நொடையென் கிளவி விலையென நுவல்வர்” (2293) - 1. நொடை

  கூட்டுதலின் பெயர் - 3

“ஆற்றலும் போற்றலு மீட்டலுங் கூட்டுதல்” (2294)-1. ஆற்றல், 2. போற்றல், 3. ஈட்டல்

  கூட்டுதல் (தொடர்ச்சி) பெயர் - 1

“ஓம்ப லென்பது மாங்கதன் மேற்றே” (2295) - 1. ஓம்பல்

உரிச்சொல் நிகண்டு

  அகலம், உயர்வு, நீளம், பாரம் இவற்றின் பெயர்கள் - 6+1+4+2 = 13

“மேய விசாலம் விரிவு வியல்விபுல…” (161)

  அகலத்தின் பெயர் - 6

1. விசாலம், 2. விரிவு, 3. வியல், 4. விபுலம், 5. ஆய்வு, 6. நியக்குரோதம்

  உயர்வின் பெயர் (1) - 1. மீ

  நீளத்தின் பெயர் (4) – 1. நேர்மை, 2. ஒழுகல், 3. நெடுமை, 4. நெடில்

  பாரத்தின் பெயர் (2) - 1. சீர்மை, 2. கனம்

  எல்லாம் பெயர் - 6

“மதமபிமா னங்களிப்பு மத்தஞ் செருக்கோ…” (162)

1. சகலம், 2. நிகிலம், 3. முழுதும், 4. அகண்டம், 5. அகிலம், 6. முற்றும்

பாரதிதீப நிகண்டு

  உயர்ச்சி, தூரம், சிறிது, விரிவாமிடம் இவற்றின் பெயர்கள்

“உரைநிவப் பேந்தல் பிறங்கல் நிமிர்த லுகப்புன்னதம்…” (373)

  உயர்ச்சியின் பெயர் - 8

1. உரை, 2. ஏந்தல், 3. பிறங்கல், 4. நிமிர்தல், 5. உகப்பு, 6. உன்னதம், 7. புரை,
8. ஓங்கல்

  தூரத்தின் பெயர் (3) – 1. சேண், 2. சேய்மை, 3. நீளிடை

  சிறிதின் பெயர் (1) - 1. இலஞ்

  விரிவாமிடத்தின் பெயர் (3) - 1. பரப்பு, 2. விசாலம், 3. விபுலம்

பரவுதல், நீளம் இவற்றின் பெயர்கள் - 4 + 10 - 14

               “பரவை ஞெமிர்தல் பரப்புடன் பாய்தல் பரவுதலாம்..” (374)

  பரவுதலின் பெயர் (4) - 1. பரவை, 2. ஞெமிர்தல், 3. பரப்பு, 4. பாய்தல்

  நீளத்தின் பெயர் (10)

1. விரிவாதல், 2. போகல், 3. ஒழுகல், 4. நெடுமை, 5. நெடில், 6. நிரை, 7. சேண்,
8. நீக்கல், 9. தீர்தல், 10. நேர்பு

  அகலத்தின் பெயர்

“…… முணரிலகறல் வியலிடம் பாழியுடன கலுள்

நணுகு நளிகண் ணறையே யகலத்தி னாமங்களே” (375)

  1. அகறல், 2. பாழி, 3. அகலுள்

  அளவின்மையின் பெயர்

“………. நீடனந்த மலைவி லபார மபருமித மும்மவ்….” (378)

  1. அபரிமிதம், 2. அபாரம், 3. அனந்தம்

வரையறை, எல்லை, அளவை இவற்றின் பெயர்கள்

               “…… ரளவே நிரையெண் வரையறை யேணிய துவரைப்போ

டுளவரம் வரம்பெல்லை கச்ச மளவை யுறுகடனே” (386)

  வரையறையின் பெயர் - 1. அளவு, 2. நிறை

  எல்லையின் பெயர் - 1. வரம்பு

  அளவையின் பெயர் - 1. கச்சம்

  அளவின் பெயர் - 4

               “காறு துணைவரை நேர்பிர மாணமக் காலமுடன்……” (387)

1. துணை, 2. வரை, 3. நேர், 4. பிரமாணம்

சூடாமணி நிகண்டு

  மிகுதியின் பெயர் - 22

“மதம்நனி பெருகல் ஊக்கல் மற்றைய விதப்புச் சால…” (531)

1. மதம், 2. நனி, 3. பெருகல், 4. ஊக்கல், 5. விதப்பு, 6. சால, 7. அதிகம், 8. சிறப்பு, 9. இறப்பு, 10. அலை, 11. தவ, 12. அமலை, 13. ஆன்றல், 14. கதழ்வு, 15. பிறங்கல்,
16. கூர், 17. கழுமல், 18. பூரிப்பு, 19. ஊங்கு, 20. புதுமை, 21. உருத்தல், 22. பொங்கல்.

  உயர்ச்சியின் பெயர் - 22

“மன்னுமோடு ஊக்கம் ஓங்கல் வார்தல்சேண் ஒழுக்கம்…” (532)

1. மோடு, 2. ஊக்கம், 3. ஓங்கல், 4. வார்தல், 5. சேண், 6. ஒழுக்கம், 7. பொங்கல், 8. நிமிர்தல், 9. புங்கம், 10. பரி, 11. புரை, 12. உச்சம், 13. துங்கம், 14. நிவப்பு, 15. உகப்பு, 16. மிசை, 17. மேடு, 18. பிறங்கல், 19. ஏந்தல், 20. உன்னதம், 21. சிகரம், 22. உத்துங்கம்

 

விரிவு, பரப்பு, பருமை இவற்றின் பெயர்கள் - 2+6+3 - 11

“விரிவின்பேர் விசால மாகும் விபுலமு மாம் பரப்புப்…” (533)

  விரிவின் பெயர் (2) - 1. விசாலம், 2. விபுலம்

  பரப்பின் பெயர் - 6

1. பரவை, 2. பப்பு, 3. அழுவல், 4. தாவல், 5. பாய்தல், 6. ஞெமிர்தல்

  பருமையின் பெயர் (3) - 1. பினம், 2. பனம், 3. பரூஉ

  அகலம், தூரத்தின் பெயர்கள் - 8 + 3 - 11

               “அகறல் கண்ணறையே பாழி யாய்வொடு படர்தல் ஆன்றல்…” (536)

  அகலத்தின் பெயர் - 8

               1. அகறல், 2. கண்ணறை, 3. பாழி, 4. ஆய்வு, 5. படர்தல், 6. ஆன்றல், 7. அகலுள், 8. வியலிடம்

  தூரத்தின் பெயர் (3) - 1. சேண், 2. சேய்மை, 3. நீளிடை

நீளம், முழுவதின் பெயர்கள் - 13 + 10 = 23

“வடிதலே யொழுகல் போகல் வரியுறை வார்தல் ஈர்தல்…..” (537)

  நீளத்தின் பெயர் - 13

1. வடிதல், 2. ஒழுகல், 3. போகல், 4. வரி, 5. உறை, 6. வார்தல், 7. ஈர்தல்,
8. நெடிதல், 9. ஆய்தம், 10. நேர்பு, 11. நெடுமை, 12. சேண், 13. கொடி

  முழுவதின் பெயர் - 10

1. அடைய, 2. எல்லாம், 3. சமத்தம், 4. அடங்கல், 5. அகிலம், 6. யாவும், 7. முடிய, 8. அனைத்து, 9. அகண்டம், 10. முற்றும்

  குறைதலின் பெயர் - 10

“குறைதலின் பேர்நி ரப்பே குன்றலே யருகல் அஃகல்…” (538)

1. நிரப்பு, 2. குன்றல், 3. அருகல், 4. அஃகல், 5. சிறுகல், 6. ஈனம், 7. ஊம்,
8. சிங்கல், 9. எஞ்சல், 10. தேய்வு

நிறைந்திடல், பாதியின் பெயர்கள் - 9 + 5 = 14

“பிறங்குதல் திளைத்தல் ஆர்தல் பெருகுதல்கழுமன் மல்கல்….” (539)

  நிறைந்திடலின் பெயர் - 9

1. பிறங்குதல், 2. திளைத்தல், 3. ஆர்தல், 4. பெருகுதல், 5. கழுமல், 6. மல்கல்,
7. துவன்றல், 8. பூரணம், 9. கமம்.

  பாதியின் பெயர் (5) - 1. பால், 2. பயல், 3. அருத்தம், 4. பாகம், 5. கூறு

  அளத்தலின் பெயர் - 3

               “அளவையே கடனே கச்சம் அளத்தலின் நாமமுப்பேர்…” (541)

  1. அளவை, 2. கடன், 3. கச்சம்

அடி, இடை, கடை இவற்றின் பெயர்கள் - 6 + 5 = 13

“அடிமுதல் எழுவாய் மோனை யாதிபூருவந்த லைத்தாள்…” (542)

  அடியின் பெயர் - 6

               1. முதல், 2. எழுவாய், 3. மோனை, 4. ஆதி, 5. பூருவம், 6. தலைத்தாள்

  இடையின் பெயர் - 5

  1. சமன், 2. பகல், 3. நாப்பண், 4. மத்தியம், 5. நள்

  கடையின் பெயர் - 7

               1. இறுதி, 2. அந்தம், 3. பின், 4. முற்று, 5. முடிவு, 6. எல்லை, 7. ஈறு

அளவு, எல்லையின் பெயர்கள் - 9 + 5 = 14

               “தாறொடு வரையே மானந் தனைதுணை யவதி மட்டே…” (543)

  அளவின் பெயர் - 9

               1. தாறு, 2. வரை, 3. மானம், 4. தனை, 5. துணை, 6. அவதி, 7. மட்டு, 8. காறு,
9. பரிமாணம்

  எல்லையின் பெயர் (5) - 1. கொற்றம், 2. வரைப்பு, 3. காட்டை, 4. பரியந்தம், 5. ஏணி

  இலாபத்தின் பெயர் - 6

               “ஆக்கமே பலன்பயம் பேறு அதிகம்ஊ தியம்இ லாபம்…” (565)

               1. ஆக்கம், 2. பலன், 3. பயன், 4. பெறு, 5. அதிகம், 6. ஊதியம்

  உவமையின் பெயர் - 24

               “அன்னவே யனைய சேத்தே யாங்குஒப்பப் புரையப்போல…” (602)

               1. அன்ன, 2. அனைய, 3. சேத்து, 4. ஆங்கு, 5. ஒப்ப, 6. புரைய, 7. போல,
8. என்ன, 9. பொருவ, 10. எள்ள, 11. இகல, 12. கடுப்ப, 13. மான, 14. கேழ், 15. தகவு,
16. தூக்கு, 17. துணை, 18. இணை, 19. நிகர, 20. நேர, 21. வீழ்வு, 22. உறழ, 23. அற்று, 24. மலை

ஒரு பலம், கற்பலம், தூக்கு, நூறுபலம், ஒன்று, பத்து, ஆயிரத்தின் பெயர் - 1+1+2+1+1+1+1+1 = 9

               “தொடியொரு பலமாங் கஃசு சொற்றகாற் பலமாந் தூக்கு…

  ஒருபலத்தின் பெயர் - 1. தொடி

  காற்பலத்தின் பெயர் - 1. கஃசு

  தூக்கின் பெயர் - 1. கா, 2. துலாம்

  நூறுபலத்தின் பெயர் - 1. நிறை

  ஒன்றின் பெயர் - 1. ஏகம்

  பத்தின் பெயர் - 1. தசம்

  நூறின் பெயர் - 1. சதம்

  ஆயிரத்தின் பெயர் - 1. நூற்றுப்பத்து

ஆசிரிய நிகண்டு

               “….மொழிமதங் கன்னிபா ரந்தெவுளல் பெருகல்…” (187)

  நிறைதல் பெயர் - 27

1. மொழிமதம், 2. கன்னபாரம், 3. தெவுளல், 4. பெருகல், 5. முற்றிய, 6. காமம்,
7. கண்டம், 8. மந்தம், 9. புட்கரம், 10. கெழுமல், 11. பூரணம், 12. மலிதல், 13. மல்கல்,
14. குணைதல், 15. பொங்குதல், 16. ஆர்தல், 17. விம்மல், 18. புல்லியதெவிட்டல்,
19. உடனேததும்பல், 20. நிரம்புதல், 21. பிறங்குதல், 22. கிளைத்தல், 23. நட்புளதிளைத்தல், 24. உயர்தும்பல், 25. தொங்கல், 26. நடவிய துவன்றல், 27. மலிரல்

குறைதல், அளத்தல், பாதி, எல்லாம் இவற்றின் பெயர் - 17+3+7+14 = 41

               “அருகலூ னங்குன்ற லெஞ்ச (லீனஞ்சி)ங்க…” (188)

  குறைதலின் பெயர் - 17

               1. அருகல், 2. ஊனம், 3. குன்றல், 4. ஏஞ்சல், 5. ஈனம், 6. சிங்கல், 7. அவிதல்,
8. கயம், 9. அஃகல், 10. சிறுகல், 11. அகவல், 12. ஒல்குதல், 13. சுருங்குதல், 14. நிரப்பு,
15. தேய்தல், 16. அரியதவல் ஒடு, 17. தவ்வல்

  அளத்தலின் பெயர் (3) - 1. அளவை, 2. ஒடுகான், 3. கச்சம்

  பாதியின் பெயர் (7) - 1.பங்கு, 2.பாகம், 3.பால், 4.அருத்தம், 5.அத்தம், 6.தருகூறு, 7.பகல்

  எல்லாம் பெயர் - 14

1. அகண்டம், 2. சத்தம், 3. அகிலம், 4. சாருவம், 5. சிதலம், 6. நிகிலங்கள், 7. ஒடு, 8. யாவையும், 9. தக்கமுடியவும், 10. அடையவும், 11. வருமுழுதும், 12. முற்றும்,
13. முழுவதும், 14. அடங்கலும்

மிகுதி, நீளம் இவற்றின் பெயர் - 60+14 = 74

“அதிகம்நனி யமலையறு சனிகட்கு வெள்ளைகூ….” (194)

  மிகுதியின் பெயர் - 60

1. அதிகம், 2. நனி, 3. அமலை, 4. அறுசனி, 5. கட்டு, 6. வெள்ளை, 7. கூர்,
8. அலை, 9. ஊக்கம், 10. வெள்ளை, 11. வெள்ளம், 12. ஆற்றல், 13. பகளி, 14. கடி,
15. இறப்பு, 16. சிறப்பு, 17. பெருகல், 18. ஆரை, 19. நகம், 20. பிறங்கல், 21. புதுமை,
22. சண்டம், 23. கருமை, 24. துப்பு, 25. தவம், 26. கழு, 27. பல, 28. பூரி, 29. பிறும்பு,
30. மறவு, 37. பொம்மல், 38. ஏற்றந்து, 39. ஆம், 40. தாவு, 41. மிக்கோள், 42. மிகப்பு,
43. பெருக்கம், 44. விறம்பு மதம், 45. மலிதல், 46. கணை, 47. பொங்கல், 48. மருதல்,
49. ஒக்கம், 50. பொக்கம் மறல், 51. கஞறல், 52. கதழ்வு, 53. மிஞ்சல் மல்கல், 54. அமறல், 55. உகப்பு, 56. உருப்பு, 57. சால, 58. மருவிய உறுகல், 59. சிதைவு, 60. மிகுதி.

  நீளத்தின் பெயர் - 14

1.  கொடி, 2. நெடுமை, 3. தீர்தல் வரி வளர்தல், 4. நெய்தல், 5. சேண், 6. போதல், 7. உறை, 8. நீடு, 9. ஒழுக்கம், 10. நெடில், 11. ஆய்தம், 12. தெரியல், 13. வடி, 14. நீளம்

உயர்ச்சி, தூரம், பக்கம் இவற்றின் பெயர் - 34+5+19 = 58

               “புரையுவப் புச்சிகர மேடுமிசை சேணுந்தி….” (195)

  உயர்ச்சியின் பெயர் - 34

               1. புரை, 2. உவப்பு, 3. சிகரம், 4. மேடு, 5. மிசை, 6. பூசண், 6. உந்தி, 7. புங்கம், 8. உத்துங்கம், 9. உச்சம், 10. புரி, 11. மோடு, 12. உம்வலம், 13. இனும், 14. பொம்மல்,
15. உம்அன்னிதம் நிவம்பு, 16. குடவு, 17. தாக்குவரி, 18. பரி, 19. ஒழுக்கம், 20. துங்கம்,
21. நுனி, 22. கப்பு, 23. உடன், 24. கிளர்வி, 25. பகர், 26. ஊக்கம், 27. நிமிர்தல்,
28. வார்தல், 29. ஞெள்ளல், 30. ஏந்தல், 31. எழுச்சி, 32. ஒடு, 33. பிறங்கல், 34. உயர்ச்சி

  தூரத்தின் பெயர் (5) - 1. சேயத்து, 2. நீளிடை, 3. சேண், 4. உடன், 5. சேய்

  பக்கத்தின் பெயர் - 19

               1. சிறை, 2. புடை, 3. மருங்கு, 4. ஞாங்கள், 5. அருகு, 6. அணித்து, 7. கிட்டல்,
8. பகடு, 9. பால், 10. பாரிசம், 11. அயல், 12. மாடு, 13. பாங்கர், 14. புறம், 15. முன்,
16. அடுக்கல், 17. உழி, 18. சாம்பல், 19. அபிமானம்

  அகலத்தின் பெயர் - 13

“அங்கண்வி யன்கால் சேணான்றல் வயமாய்வு…” (198)

1. அங்கண், 2. வியன், 3. கால், 4. சேண், 5. அன்றல், 6. வியம், 7. அய்லு, 8. நளி, 9. அகலுள், 10. இவர்தல், 11. படர்தல், 12. அயர்தல், 13. பாழி.

பொதிகை நிகண்டு

அளவுப் பெயர்கள் - 6

               “….மொருபலமே தொடிகஃசு காற்பலமா நிறையே….” (305)

               1. தொடி, 2. கஃசு, 3. நிறை, 4. எடை, 5. துலாம், 6. தூக்கு

               “இரட்டொழிமூ முத்திரிமூன் றாஞசதுகும் பாத்து….” (306)

எண்ணின் பெயர் - 26

               1. இரண்டு, 2. மூன்று, 3. திரி, 4. நான்கு, 5. சதுர், 6. ஐந்து, 7. பஞ்சம், 8. ஆறு,
9. சட்கு, 10. ஏழ், 11. சத்தம், 12. எட்டு, 13. அட்டம், 14. நவம், 15. ஒன்பது, 16. தசம்,
17. பத்து, 18. சதம், 19. நூறு, 20. ஆயிரம், 21. சகத்திரம், 22. பதினாயிரம், 23. ஆயுதம்,
24. நூறாயிரம், 25. இலக்கம், 26. நியுதம்.

நாமதீப நிகண்டு

  இலாபத்தின் பெயர் - 10

               “ஊதியம்வி ருத்திபிர யோசனமி லாபம் வியன்….” (645)

1. ஊதியம், 2. விருத்தி, 3. பிரயோ, 4. சனம், 5. இலாபம், 6. வியன், 7. பயப்பு,
8. அதியம், 9. வட்டி, 10. பலன்

  உவமையின் பெயர் - 31

               “நேரெதிர்தூக் கன்ன நிகர்மலைவாய் கேய்விணை வீ…” 675)

               1. நேர், 2. எதிர், 3. தூக்கு, 4. அன்ன, 5. நிகர், 6. மலைவு, 7. ஆங்கு, 8. எய்வு,
9. இணை, 10. வீழ், 11. ஏர், 12. படி, 13. சமம், 14. தகை, 15. போல், 16. இன்ன,
17. கடுப்ப, 18. துணை, 19. கேழ், 20. ஒப்பு, 21. அனைதல், 22. மானல், 23. கதழ்வு,
24. எள்ளல், 25. உறழ், 26. துல்லியம், 27. இகல், 28. புரை, 29. வத்து, 30. அற்று,
31. உவமானம்

மெலிவு, குவிதல், விரிதல் இவற்றின் பெயர் - 7+4+7 = 18

               “தேம்பன் மெலிவிளை கரசஞ் சிரமஞொட்கல்…” (761)

  மெலிவின் பெயர் - 7

               1. தேம்பல், 2. மெலிவு, 3. இளைத்தல், 4. கிரசம், 5. சிரமம், 6. ஞொட்கல்,
7. ஞாம்பல்

  குவிதலின் பெயர் (4) - 1. கூம்பல், 2. முகிழ்த்தல்,3. சாம்பல், 4. குவிதல்

  விரிதலின் பெயர் - 7

               1. விரிதல், 2. மலர்தல், 3. நெகிழ்தல், 4. விள்ளல், 5. அவிழ்தல், 6. விகசித்தல்,
7. அலர்தல்

கலப்பு, வளர்த்தல் இவற்றின் பெயர்கள் - 12+2 = 14

               “மிச்சிரஞ் கீரணஞ்ச மேதமளா வல்விரவல்….” (762)

  கலப்பின் பெயர் - 12

               1. மிச்சிரம், 2. சங்கீரணம், 3. சமேதம், 4. அளாவல், 5. விரவல், 6. சகிதம்,
7. கீலகம், 8. துழாவல், 9. அசி, 10. அயிக்கம், 11. கலம்பகம், 12. கலப்பு

  வளர்த்தலின் பெயர் (2) - 1. நீட்டல், 2. வளர்த்தல்

  வகுப்பின் பெயர் - 12

               “கூன்கோண் குலாவல் வளாவல்குடி லங்குரங்கல்….” (768)

               1. நிரல், 2. ஒழுங்கு, 3. தாமம், 4. முறை, 5. பாந்தம், 6. நிரை, 7. பந்தி, 8. வரிசை, 9. அணி, 10. நேர், 11. வார், 12. வகுப்பு

  உயர்ச்சியின் பெயர் - 19

               “உன்னதமே டேற்றநிவப் புச்சமிசை யுத்துங்க…” (771)

               1. உன்னதம், 2. மேடு, 3. ஏற்றம், 4. நிவப்பு, 5. உச்சம், 6. மிசை, 7. உத்துங்கம்,
8. மன்னல், 9. புங்கம், 10. ஏந்தல், 11. கப்பு, 12. வார், 13. நிமிர்பு, 14. புரை, 15. ஒங்கல், 16. யோகம், 17. சிகரம், 18. சேண், 19. உயர்ச்சி

சருவத்தின் பெயர், கொஞ்சத்தின் பெயர் - 14+9 = 23

               “சாங்கநிகி லஞ்சகல முற்றனைத்த கண்டமுழு…” (774)

  சருவத்தின் பெயர் - 14

1. சாங்கம், 2. நிகிலம், 3. சகலம், 4. முற்று, 5. அனைத்து, 6. அகண்டம், 7. முழுது, 8. அடைய, 9. யாவும், 10. அகிலம், 11. சமத்தம், 12. அடங்கல், 13. சருவம், 14. எல்லாம்.

  கொஞ்சத்தின் பெயர் - 9

               1. தோகம், 2. அற்பம், 3. புன்மை, 4. சின்மை, 5. சற்று, 6. ஆசு, 7. ஒட்டு,
8. இட்டிமை, 9. கொஞ்சம்

நிறைவின் பெயர், அந்நிறைவின் மிச்சிரத்தின் பெயர், அந்நிறைவினுள்ளடங்கலின் பெயர் - 11+1+1 = 13

               “பூரணம்ப ரந்திளைத்தல் மல்கல்விட்டு ணுத்துவன்ற…” (774)

   நிறைவின் பெயர் - 11

               1. பூரணம், 2. பரம், 3. திளைத்தல், 4. மல்கல், 5. விட்டுணு, 6. துவன்றல்,
7. ஆர்தல், 8. வியாபகம், 9. பிறங்கல், 10. பெருக்கு, 11. நிறைவு

  அந்நிறைவின் மிச்சிரத்தின்பெயர் - 1. வியாத்தி

  அந்நிறைவினுள்ளடங்கலின்ன் பெயர் - 1. வியாப்பியம்

குறைவு, கோணத்தின் பெயர்கள் - 13+6 = 19

               “ஆனமஃகல் சிங்கல்கன்ற லெஞ்சல்கிஞ்சந் தேய்வருக…” (776)

  குறைவின் பெயர் - 13

               1. ஈனம், 2. அஃகல், 3. சிங்கல், 4. குன்றல், 5. எஞ்சல், 6. கிஞ்சம், 7. தேய்வு,
8. அருகல், 9. ஊனம், 10. நூனம், 11. சிறுகல், 12. அல்கல், 13. குறைவு

  கோணத்தின் பெயர் (6) - 1. கோட்டம், 2. கோண், 3. ஆரம், 4. அச்சிரம், 5. சதுரம்,
6. நாற்கோணம்

அணு, அகலம், நீளம், தூரம் இவற்றின் பெயர்கள் - 7+7+7+3 = 24

               “நுண்மைநொசி வாய்வுநுழை நுட்ப நுணுகணுவாங்…” (778)

  அணுவின் பெயர் (7)

1. நுண்மை, 2. நொசிவு, 3. ஆய்வு, 4. நுழை, 5. நுட்பம், 6. நுணுகு, 7. அணு

  அகலத்தின் பெயர் (7)

1. கண்ணறை, 2. யா, 3. யாமம், 4. வியல், 5. அகறல், 6. அகலம், 7. மாயம்

  நீளத்தின் பெயர் (7)

1. நீளம், 2. நெடில், 3. நேர், 4. நெடுமை, 5. சேண், 6. கொடி, 7. ஆயதம்.

  தூரத்தின் பெயர் (3) - 1. சேண், 2. சேய், 3. தூரம்

  விசாலத்தின் பெயர் - 11

               “விரிவழுவந் தாவல்விசா லம்விபுல மல்லல்…” (779)

1. விரிவு, 2. அழுவம், 3. தாவல், 4. விசாலம், 5. விபுலம், 6. மல்லல், 7. பரவை,
8. ஞெமிர், 9. பா, 10. பரப்பு, 11. பப்பு

அளவு வகையின் பெயர், நிறையின் பெயர் - 4+4 = 8

               “கரிற்கடுக முட்டிணங்கா யங்காழ்ப் புறைப்பு…” (797)

  அளவு வகையின் பெயர் (4) - 1. எண்ணல், 2. எடுத்தல், 3. முகத்தல், 4. நீட்டல்

  நிறையின் பெயர் (4) - 1. எண், 2. இலக்கம், 3. தூக்கம், 4. நிறை

  இரண்டின் பெயர் - 6

               “முந்திரிகை நான்காகுங் காணியது நான்குமா…” (798)

               முந்திரிகை நாலு கொண்டது     - காணி

               காணி நாலு கொண்டது                              - மா

               மா நாலு கொண்டது                     - கால்

               கால் நாலு கொண்டது                 - அரை

               அரை நாலு கொண்டது                               - ஏகம்

               1. இரண்டு, 2. இணை, 3. துவம், 4. துணை, 5. உகளம், 6. உபயம்

மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, எட்டு, ஒன்பது, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், நூறாயிரம் இவற்றின் பெயர்கள் -2+2+2+2+2+2+2+2+2+2+2+3-25

               “நான்குசது ரைந்துபஞ்ச மாறுசட்டேழ் சத்தமெட்டே…” (799)

        மூன்றின் பெயர்                      - 1. மூன்று, 2. திரி

        நான்கின் பெயர்                      - 1. நான்கு, 2. சதுர்

        ஐந்தின் பெயர்                         - 1. ஐந்து, 2. பஞ்சம்

        ஆறின் பெயர்                          - 1. ஆறு, 2. சட்டு

        ஏழின் பெயர்                           - 1. ஏழ், 2. சத்தம்

        எட்டின் பெயர்                        - 1. எட்டு, 2. அட்டம்

        ஒன்பதின் பெயர்                    - 1. நவம், 2. ஒன்பது

        பத்தின் பெயர்                         - 1. தசம், 2. பத்து

        நூறின் பெயர்                          - 1. சதம், 2. நூறு

        ஆயிரத்தின் பெயர்                 - 1. ஆயிரம், 2. சகத்திரம்

        பதினாயிரத்தின் பெயர் - 1. பதினாயிரம், 2. அயுதம்

        நூறாயிரத்தின் பெயர்     - 1. நூறாயிரம், 2. இலக்கம், 3. நியுதம்

கோடியின் பெயர், கோடிமேற் கோடி கொண்டது பெயர் - 2+19 = 21

               “கோடியென்ப நூறிலக்கம் கோடியொன்றாய்க்கோடிமா…” (800)

   கோடியின் பெயர் (2) - 1. கோடி, 2. நூறிலக்கம்

   கோடிமேற் கோடி கொண்டது பெயர் - 19

               1. மகாகோடி, 2. சங்கம், 3. மகாசங்கம், 4. விந்தம், 5. மகாவிந்தம், 6. பதுமம்,
7. மகாபதுமம், 8. சமுத்திரம், 9. மகாசமுத்திரம், 10. தாமரை, 11. மகாதாமரை,
12. வெள்ளம், 13. மகாவெள்ளம், 14. பிரளயம், 15. மகாப்பிரளயம், 16. தோரை.
17. மகாதோரை, 18. யோசனை, 19. மகாயோசனை

   கோடிகளின் பெயர் - 12

               “கற்ப நிகற்பங் கனிமகரந் தண்பனையே…” (801)

               1. கற்பம், 2. மகாகற்பம், 3. நிகற்பம், 4. மகாநிகற்பம், 5. மகரம், 6. மகாமகரம்,
7. தண்பனை, 8. மகாதண்பனை, 9. உற்பலம், 10. மகாவுற்பலம், 11. அற்புதம், 12. மகா அற்புதம்

நாழி, நாழியிற்பாதி, உரியிற் பாதி, உழக்கிற் பாதி, நானாழி, இருநாழி இவற்றின் பெயர்கள் - 3+2+2+1+3+1 = 12

        நாழயின் பெயர்                              - 1. நாழி, 2. பிரத்தம், 3. படி

        நாழியிற்பாதியின் பெயர்             - 1. உரி, 2. மானிகம்

        உரியிற் பாதியின் பெயர்               - 1. உழக்கு, 2. குடுபம்

        உழக்கிற் பாதியின் பெயர்           - 1. ஆழாக்கு

        நானாழியின் பெயர்                       - 1. ஆடகம், 2. கஞ்சம், 3. கலசம்

        இருநாழியின் பெயர்                     - 1. பாத்திரம்

குறுணி, நாற்குறுணி, குறுணியிணை, முத்தூணி, மூவேழ் குறுணி, உழக்கிற் பத்திலொன்று இவற்றின் பெயர்கள் - 3+1+3+1+1+1 - 10

               “குறுணிசிவ மெண்ணாழி நாற்குறுணி தூணி…..” (803)

   குறுணியின் பெயர்                                - 1. குறுணி, 2. சிவம், 3. எண்ணாழி

   நாற்குறுணியின் பெயர்                        - 1. தூணி

   குறுணியிணையின் பெயர்                   - 1. கும்பம், 2. பந்துரோணம், 3. பெறுபதக்கு

   முத்தூணியின் பெயர்                            - 1. கலன்

   மூவேழ் குறுணியின் பெயர்                - 1. கோட்டை

   உழக்கிற் பத்திலொன்றின் பெயர் - 1. சோடு

சிறங்கை, இரண்டு சிறங்கை, நெல்லெடை, எண்மா, இரண்டு மஞ்சாடி, இருபது மஞ்சாடி இவற்றின் பெயர்கள் - 2+1+1+1+1+2 - 8

               “சிறங்கையொன்றின் பேர்களுகை யஞ்சலியி ரண்டு….” (804)

        சிறங்கையின் பெயர்                            - 1. சிறங்கை, 2. சுளுகை

        இரண்டு சிறங்கையின் பெயர்  - 1. அஞ்சலி

        நெல்லெடையின் பெயர்                     - 1. மா

        எண்மாவின் பெயர்                               - 1. மஞ்சாடி

        இரண்டு மஞ்சாடியின் பெயர்            - 1. வல்லம்

        இருபது மஞ்சாடியின் பெயர்             - 1. நிட்கம், 2. கழஞசு

பலம், நூறுபலம், ஐம்பது பலம், இருபத்தைந்து பலம், முப்பது துலாம், இருபது துலாம், காற்பலம் இவற்றின் பெயர்கள் - 5+2+1+1+1+1+2 - 13

               “வெப்பில்பிர குஞ்சமுட்டி வில்வந் தொடிபலநூ….” (805)

        பலத்தின் பெயர் (5) - 1. பிரகுஞ்சம், 2. முட்டி, 3. வில்வம், 4. தொடி, 5. பலம்

        நூறு பலத்தின் பெயர் (2)                         - 1. துலாம், 2. நிறை

        ஐம்பது பலத்தின் பெயர்                         - 1. எடை

        இருபத்தைந்து பலத்தின் பெயர்  - 1. தூக்கு

        முப்பது துலாத்தின் பெயர்                     - 1. கண்டி

        இருபது துலாத்தின் பெயர்                     - 1. பாரம்

        காற்பலத்தின் பெயர் (2)                          - 1. கருடம், 2. கஃசு

எண்மூன்றணு, எட்டுக் கசாக்கிரகம், நான்கு இலீக்கை, எட்டு யூகை, மூன்று யவை, பன்னிரண்டு அங்குலம் இவற்றின் பெயர்கள் - 1+1+1+1+1+1 - 6

               “ஆகுங் கசாக்கிரக மவ்வணுவெண் மூன்றதுவெட்…” (806)

        எண்மூன்றணுவின் பெயர்                                 - 1. கசாக்கிரகம்

        எட்டுக் கசாக்கிரகத்தின் பெயர்                        - 1. இலீக்கை

        நான்கு இலீக்கையின் பெயர்                            - 1. யூகை

        எட்டு யூகையின் பெயர்                                      - 1. யவை

        மூன்று யவையின் பெயர்                                   - 1. அங்குலம்

        பன்னிரண்டு அங்குதலத்தின் பெயர்               - 1. சாண்

இரண்டு சாண், நான்குசாண், இரண்டு தனு, ஈராயிரம் தண்டம், நான்கு குலோசம் இவற்றின் பெயர்கள் - 2+2+1+2+2 - 9

“சாணோ ரிரண்டு முழங்கர மாநான்கே….” (807)

        இரண்டுசாணின் பெயர்                   - 1. முழம், 2. கரம்

        நான்குசாணின் பெயர்                      - 1. தனு, 2. புருடம்

        இரண்டு தனுவின் பெயர்                - 1. தண்டம்

        ஈராயிந் தண்டத்தின் பெயர்   - 1. குரோசம், 2. கூப்பாடு

        நான்கு குரோசத்தின் பெயர்  - 1. யோசனை, 2. புகை

மூன்று குரோசத்தின் பெயர், இரண்டு குரோசத்தின் பெயர், நானூறு விற்கிடையின் பெயர் - 3+1+2 - 6

               “காதமொடு சாமரத்தங் காவதமுக் கூப்பாடாங்….” (808)

           மூன்று குரோசத்தின் பெயர் - 1. காதம், 2. சாமரத்தம், 3. காவதம்

           இரண்டு குரோசத்தின் பெயர் - 1. கவியூதம்

               நானூறு விற்கிடையின் பெயர் - 1. கோழிப் பறவைத்தூரம், 2. இரவுஞ்சம்

முடிவுரை

அளவுப்பெயர்களை கற்றையின் பெயர், பருமையின் பெயர், சிறிதின் பெயர், முழுதின் பெயர், மிகுதியின் பெயர், நீளத்தின் பெயர், அகலத்தின் பெயர், விரிவின் பெயர், தூரத்தின் பெயர், தூக்கு, பலத்தின் பெயர் முதலான வகையில் பிரித்து ஆராயப்பட்டுள்ளன.

சொற்களின் பட்டியல்தான் ஒரு மொழியின் வரலாறு காட்டுபவை. சொற்களின் பட்டியலை வெளியிட்ட நூல்களைப் பாதுகாப்பதும், அவற்றை அடுத்த தலைமுறையினருக்குக் காட்சிப்படுத்தி அவைபோல இன்றைய சூழலில் புதியதாகத் தொடங்குகின்ற அனைத்துத் துறைகளுக்கும் சரியான பொருளுடைய சொற்களை உருவாக்கிப் பயன்படுத்திப் பாதுகாப்பது தான் தமிழ் வளர்ச்சிக்கான படியாக அமையும்.

துணைநூற்பட்டியல்

  1. ச.வே. சுப்பிரமணியன் (ப.ஆ), தமிழ் நிகண்டுகள் (தொகுதி - 1,2), மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம் - 608 001.  முதற்பதிப்பு, டிசம்பர் - 2008.     
  2. மு. சண்முகம் பிள்ளை, நிகண்டுச் சொற்பொருட் கோவை, பதிப்புத் துறை, மதுரைகாமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 625 021. முதற்பதிப்பு, (1982).
  3. மா. சற்குணம், தமிழ் நிகண்டுகள் ஆய்வு, இளவழகன் பதிப்பகம், இராயப்பேட்டை, சென்னை - 14. ஆகஸ்டு, 2002.
  4. வீ.ஜே. செல்வராசு, தமிழ்ச் சொற்றொடர் அகராதி (தெசாரசு), மெய்யப்பன் பதிப்பகம், 53 புதுத்தெரு, சிதம்பரம் - 608 001. முதற் பதிப்பு மே, 2003.
  5. வெ. பாலமுருகன், இரா. மோகனா, நிகண்டு ஆய்வு, மெய்யப்பன் பதிப்பகம், புதுத்தெரு, சிதம்பரம் - 608 001. முதற் பதிப்பு நவம், 2009.