ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நிகழ்நிலை வகுப்பில் தமிழ் கற்றலில் உள்ள பிரச்சனைகள் - ஓர் ஆய்வு

க.ஜெ.வேம்பு, பதிவு எண் - 20MED15, கல்வியல் மேல்நிலை இரண்டாம் ஆண்டு, NKT National College of Education for Women, No:41, Dr . Besent Rd  , Triplicane , Chennai 11 May 2022 Read Full PDF

கட்டுரையாளர்: க.ஜெ.வேம்பு, பதிவு எண் - 20MED15, கல்வியல் மேல்நிலை இரண்டாம் ஆண்டு

நெறியாளர்: Dr. மாலதி M.A,..M.Sc..(G&C )..,M.E.d..M.Phil..,ph.D, NKT National College of Education for Women, No:41, Dr . Besent Rd  , Triplicane , Chennai 600005

Abstract:

Educational learning around the world has been greatly affected by the great epidemic of Covid-19. Due to this all the educational institutions were closed. Have switched to virtual learning sites to pursue educational activities. However in preparation for e-learning, questions about design and performance are not yet clearly understood, especially for developing countries such as India where technical restrictions such as device availability and bandwidth availability pose a serious challenge. This study focuses on the problems in learning Tamil in the ninth grade students in the actual class through an online survey of 300 students. This will help in shaping the learning environment in an effective contextual class. The results indicate that the majority of those surveyed (50%) were willing to choose the actual class to manage the curriculum during this epidemic period. Most students prefer to use the cell phone for real-class learning. The study looks at students in government and government-aided schools who face problems in learning Tamil in real-life classrooms due to power outages and network problems due to inability to pay for cell phones and internet connection.

ஆய்வுச் சுருக்கம்:

         கோவிட் -19  பெரும் தொற்றுநோயின் காரணமாக கல்வி  கற்றல் என்பது உலகம் முழுவதும் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டதன. கல்விச்  செயல்பாடுகளை தொடர நிகழ்நிலை கற்றல் தளங்களுக்கு மாறிவிட்டன. எவ்வாறாயினும் மின் கற்றலில் தயார் நிலையில், வடிவமைப்பு மற்றும் செயல்திறன் பற்றிய கேள்விகள் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளப்படவில்லை, குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு சாதனங்களில் பொருத்தம் மற்றும் அலைவரிசை கிடைப்பது போன்ற தொழில்நுட்ப கட்டுப்பாடுகள் கடுமையான சவாலாக உள்ளது.  இந்த ஆய்வில் 300 மாணவர்களின் இணையவழி கணக்கெடுப்பின் மூலம் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நிகழ்நிலை வகுப்பில்  தமிழ் கற்றலில் உள்ள பிரச்சனைகள் பற்றியதில்  கவனம் செலுத்தப்படுகிறது. இது பயனுள்ள நிகழ்நிலை வகுப்பில் கற்றல் சூழலை வடிவமைக்க உதவியாக இருக்கும் .   இவ்வாராய்ச்சியில் ஈடுபட்ட பெரும்பாலானோர் (50%)  இந்த தொற்றுநோய்க் காலத்தின்  போது பாடத்திட்டத்தை நிர்வகிக்க நிகழ்நிலை வகுப்பை தேர்வு செய்யத்  தயாராக இருப்பதாக முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன  . பெரும்பாலான மாணவர்கள் நிகழ்நிலை  வகுப்பு  கற்றலுக்கு திறன்பேசியை  பயன்படுத்த விரும்புகின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் திறன்பேசி இல்லாமலும் அதற்கு இணைய கட்டணம் செலுத்துவதற்கு முடியாமலும் மின்சார தடையினாலும்  வலைப்பின்னல் பிரச்சினையாலும்  மாணவர்களுக்கு நிகழ்நிலை வகுப்பில்  தமிழ் கற்றலில் உள்ள பிரச்சனைகளை எதிர்கொள்வதாக இந்த ஆய்வில் ஆராயப்படுகிறது.இதன் காரணமாக நிகழ்நிலை வகுப்பில் தமிழ் கற்றல் என்பது மாணவர்களுக்கு பிரச்சனையாக  உள்ளது என்று மாணவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

திறவுச்சொற்கள்: கருத்து, உள்ளடக்க ஆய்வு, பிரச்சனைகள், நிகழ்நிலை வழிக்கற்றல், கொரோனா தொற்றுநோய்

முன்னுரை:

கல்வி என்பது ஒருவர் இந்த உலகத்தில் பெற்ற அறிவு,அனுபவம்,ஆற்றல் ஆகியவற்றின் தொகுப்பே கல்வி எனப்படும். ஒருவர் பெற்ற கல்வி அவரது ஆளுமைக்கும்,ஆற்றலுக்கும் அடித்தளமாக  இருந்தது. அவரின் ஒவ்வொரு செயலையும் சிறப்பாக செய்ய வழி அமைக்கும்படி மாறிவரும் நிலைகளில் பெற்ற அறிவில் ஏற்ற முறையில் பயன்படுத்துதல் இன்றைய கல்வி முறை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இன்றைய சூழ்நிலை மாற்றத்தால் கல்வி என்பது முழுமையாக நிகழ்நிலை கல்வியாக மாறி உள்ளது. நிகழ்நிலை வகுப்பின் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை ஆராய்ச்சியாளர் நிகழ்நிலை வகுப்பில் மாணவர்களுக்கு தமிழ் கற்றலில் ஏற்படும் பிரச்சனைகள் என்ற தலைப்பில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆராய்ச்சியின் தேவை மற்றும் முக்கியத்துவம்:

இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் பள்ளிகளில் கல்விசார் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வி என்பது மாணவர்களுக்கு நேரடி வகுப்பு இல்லாமல் முழுமையாக  நிகழ்நிலை வகுப்பாக மாறியுள்ளது. மாணவர்களிடம் கற்றல் திறன் என்பது சரியான முறையில் பின்பற்ற முடியவில்லை. இதன் விளைவாக மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வம் இன்றி காணப்படுவதோடு கற்றலிலும் பிரச்சினையாகவும்  உள்ளது.மாணவர்களுக்கு திறன்பேசி  இல்லாமலும், திறன்பேசி சரிவர கட்டணம் செலுத்த முடியாமலும், வலைப்பின்னல், மற்றும்  மின்சாரத்தினால் ஏற்படும் பிரச்சினைகளாலும் மாணவர்களுக்கு கற்றலில் முழுமையான ஈடுபாடு இல்லாமல் போகிறது.  எனவே மாணவர்களுக்கு நிகழ்நிலை வகுப்பில் தமிழ் கற்றல் என்பது பிரச்சனையாக உள்ளது. இதன் அடிப்படையில் நடப்பு ஆராய்ச்சியானது உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடையே நிகழ்நிலை வகுப்பில் தமிழ் கற்றலில் உள்ள பிரச்சனைகள் என்ற தலைப்பில் ஆய்வாளர் ஆராய்ச்சியை மேற்கொண்டு மாணவர்களின் பிரச்சினைகளை கண்டறிய இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் நோக்கம்:

உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடையே நிகழ்நிலை வகுப்பில் தமிழ் கற்றலில் பிரச்சனைகள் அரசு பள்ளி, தனியார் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களிடையே வேறுபாடு உள்ளதா என்பதை கண்டறிதல். தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் பயிலும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இடையே நிகழ்நிலை வகுப்பில் தமிழ் கற்றலில் ஏற்படும் பிரச்சனைகளில் வேறுபாடு உள்ளதா என்பதை கண்டறிவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

ஆய்வின் கருதுகோள்:

ஒன்பதாம் வகுப்பு மாணவ மற்றும் மாணவிகளை பொருத்தவரை நிகழ்நிலை வகுப்பில் தமிழ் கற்றலில் புள்ளியியல் ரீதியான வேறுபாடு இல்லை. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் நிகழ்நிலை வகுப்பில் தமிழ் கற்றல் என்பது ஆங்கில வழி மாணவர்களுக்கும் தமிழ்வழி மாணவர்களுக்கும் புள்ளியல் ரீதியான வேறுபாடு இல்லை. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நிகழ்நிலை வகுப்பில் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் புள்ளியல் ரீதியான வேறுபாடு இல்லை. கூட்டு குடும்பம் மற்றும் தனி குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கு தமிழ் கற்றலில் புள்ளியல் ரீதியான வேறுபாடு இல்லை.

ஆய்வு மாதிரி:

ஆய்வு மாதிரி கூறாக சென்னை மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாதிரி கூறாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பள்ளிகளின் அடிப்படையிலும், பாலின அடிப்படையிலும், தனிக் குடும்பம் கூட்டுக்குடும்பம் என்ற அடிப்படையிலும், மொத்தம் 300 மாணவர்கள் ஆய்வின் மாதிரியாக உட்படுத்தப்பட்டனர்.

ஆயுவுக்கருவி:

            நிகழ்நிலை வகுப்பிலுள்ள தமிழ் கற்றல் பிரச்சனைகளில் அளவுகோலை பாட வல்லுனர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆலோசனையின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் வழிகாட்டுதலின்  பேராசிரியரோடு வடிவமைக்கப்பட்டு தரப் படுத்தப்பட்டது.  ஆய்வு கருவிக்கு ஏற்புடைமை மற்றும் நம்பகத்தன்மை கணக்கிடப்பட்டது.மேற்கண்ட அளவுகோலுக்கு குரொன்பாக் ஆல்பா நம்பகத்தன்மை மதிப்பு .93 என்று கண்டறியப்பட்டது. அதன் வர்க்கமூலம் மதிப்பு .96 ஏற்புடைமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதலாம் பருவத் தேர்வின்  மதிப்பெண்கள் அடைவுத்தேர்வு மதிப்பெண்களுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆய்வுக் கருவிகள் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டன.

புள்ளியல் பகுப்பாய்வு:

உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம் பெறப்பட்ட தரவுகளை மதிப்புப்  புள்ளியாக மாற்றி, புள்ளியல்  சராசரி திட்ட விளக்கம் மற்றும் t  சோதனை போன்றவற்றின் மதிப்புகளை கண்டறிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 ஆய்வின் வரம்பு:

இந்த ஆய்வுக்கு ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவிகள் மட்டும் ஆய்வுக்கு மேற்கொள்ளப்பட்டது. அரசு பள்ளி, தனியார் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகள் மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். சென்னையில் உள்ள மாணவர்கள் மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆய்வுக்கான 300 மாணவர்கள் மாதிரிகள் மட்டும் எடுத்துக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கருதுகோளை சோதித்து அறிதல் (Testing the hypothese):

கருதுகோள் -1:

                 உயர்நிலைப் பள்ளி மாணவர்களின்  வகுப்பில் உள்ள கற்றல் பிரச்சினைகளில் பாலினம், பள்ளியின் வகை, பயிற்றுமொழி, குடும்ப வகை, போன்றவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட வேறுபாடு இல்லை

அட்டவணை -1 :  t  சோதனை உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் நிகழ்நிலை வகுப்பிலுள்ள தமிழ் கற்றல் பிரச்சனைகள் பற்றிய வேறுபாடுகள்.

மாறிகள்

துணை மாறிகள்

எண்ணிக்கை

சராசரி

திட்ட விளக்கம்

t-ன் மதிப்பு

முடிவு

பாலினம்

ஆண்

150

201.14

29.89

.96

வி.

பெண்

150

197.56

34.25

பயிற்று மொழி

தமிழ் வழி

177

205.28

28.76

3.9

.01 வி.

ஆங்கில வழி

123

196.82

34.84

குடும்ப வகை

தனிக்

குடும்பம்

141

203.08

32.39

1.90

வி.

கூட்டுக்

குடும்பம்

159

196.04

31.64

மாணவர்களின் நிகழ்நிலை வகுப்பில் தமிழ் கற்பதில் உள்ள பிரச்சனைகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே வேறுபாடுகளைக் கண்டறிய பயன்படுத்தப்பட்ட புள்ளியியல் பகுப்பாய்வில் t  மதிப்பானது .96 ஆகவும்

பயிற்று மொழியின் அடிப்படையில் t  3.9 ஆகவும் காணப்பட்டது

கருதுகோள் -1:

பாலினம்:

நிகழ்நிலை வகுப்பில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ் கற்றல் பிரச்சனைகளில் பாலினம் அடிப்படையில் வித்தியாசம் இல்லை.

பயிற்று மொழி:

பயிற்று மொழி அடிப்படையில் நிகழ்நிலை வகுப்பில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தமிழ் கற்றல் பிரச்சனைகளில் உள்ள வித்தியாசத்தை கண்டறிதல்.

             நிகழ்நிலை வகுப்பில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ் கற்றல் பிரச்சனைகளில் தமிழ் வழி, ஆங்கில வழி, கற்பவர்களில் தமிழ் வழி கற்பவரிடம் பயிற்று மொழி அடிப்படையில் வித்தியாசம் உண்டு.

குடும்ப வகை:

குடும்ப வகை அடிப்படையில் நிகழ்நிலை வகுப்பில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தமிழ் கற்றல் பிரச்சனைகளில் உள்ள வித்தியாசத்தை கண்டறிதல்.

நிகழ்நிலை வகுப்பில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ் கற்றல் பிரச்சனைகளில் தனி குடும்பம், கூட்டுக் குடும்பம் என்ற அடிப்படையில் வித்தியாசம் இல்லை.

பள்ளியின் வகை:

பள்ளிகளின் அடிப்படையில் நிகழ்நிலை வகுப்பில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தமிழ் கற்றல் பிரச்சனைகளில் உள்ள வித்தியாசத்தை கண்டறிதல்.

மாறிகள்

 

Sum of Squares

df

சராசரி

F

முடிவு

கற்றல் பிரச்சனை

குழுக்களுக்கு உள்ளே

5724.560

2

2862.280

2.804

வி.

குழுக்களுக்கு  வெளியே

303169.7

297

1020.773

மொத்தம்

308894.3

299

 

நிகழ்நிலை வகுப்பில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் அரசு பள்ளி தனியார் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி என்ற அடிப்படையில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும் தமிழ் கற்றலில் வித்தியாசம் இல்லை.

ஆய்வின் முடிவுகள்:

1. ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ மற்றும் மாணவிகளின் நிகழ்நிலை வகுப்பில் தமிழ் கற்றலில் உள்ள பிரச்சனைகளில் வித்தியாசம் இல்லை எனவே இக்கருதுகோள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

2. நிகழ்நிலை வகுப்பில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ் கற்றல் பிரச்சனைகளில் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி கற்பவர்களில் தமிழ்வழி கற்பவர்களிடம் பயிற்று மொழி அடிப்படையில் வித்தியாசம் உண்டு எனவே இக்கருதுகோள் நிராகரிக்கப்படுகிறது.

3. நிகழ்நிலை வகுப்பில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ் கற்றலில் உள்ள பிரச்சனைகளில் தனி குடும்பம், கூட்டுக் குடும்பம் என்ற அடிப்படையில் வித்தியாசம் இல்லை எனவே இக்கருதுகோள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

4. நிகழ்நிலை வகுப்பில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களில் அரசு பள்ளி, தனியார் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி என்ற அடிப்படையில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும் தமிழ் கற்றலில் வித்தியாசம் இல்லை எனவே இக்கருதுகோள்  ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

முடிவுரை:

இந்தியாவின் எதிர்காலம் மாணவர்களின் வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது. இன்றைய சூழ்நிலையில் கல்வி கற்றல் என்பது முழுமையாக நிகழ்நிலை வகுப்பாக மாறியுள்ளது  மாணவர்களுக்கு மிகவும் பிரச்சனையாகும் உள்ளது. திறன்பேசியின் வாயிலாக கல்வி கற்பதன் மூலம் மாணவர்களுக்கு உடல்  ரீதியான மற்றும் மன ரீதியான   பிரச்சனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. நிகழ்நிலை வகுப்புக ள் இல்லாமல் நேரடி வகுப்புகள் மேற்கொள்வதன் மூலம் மாணவர்கள் பள்ளி பருவத்தில் தங்கள் திறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அறிவு வளர்ச்சியிலும் சிறந்து விளங்க முடியும் என்பதே இவ்வாய்வு வலியுறுத்துகிறது.


REFERENCE:

  • Students’ perception and preference for online education in India during COVID -19 pandemic Author links open overlay panelT.MuthuprasadaS.AiswaryabK.S.AdityaaGirish K.Jhaa https://doi.org/10.1016/J.SSAHO.2020.100101
  • Trautwein et al., 2006 U. Trautwein, O. Lüdtke, C. Kastens, O. Effort on homework in grades 5–9: Development, motivational antecedents, and the association with effort on classwork Child Development, 77 (4) (2006), pp. 1094-1111 View PDFCrossRefView Record in ScopusGoogle scholor
  • Smith et al., 2003 P.J. Smith, K.L. Murphy, S.E. Mahoney Towards identifying factors underlying readiness for online learning: An exploratory study Distance Education, 24 (1) (2003), pp. 57-67
  • Barrot, J. S. (2016). Using Facebook-based e-portfolio in ESL writing classrooms: Impact and challenges.
  • Barrot, J. S. (2020). Scientifc mapping of social media in education: A decade of exponential growth.
  • Journal of Educational Computing Research. https://doi.org/10.1177/0735633120972010.
  • Barrot, J. S. (2021). Social media as a language learning environment: A systematic review of the literature (2008–2019). Computer Assisted Language Learning.