ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் நிகழ்நிலை வகுப்பின் மூலம் தமிழ் இலக்கணம் கற்பதில் ஏற்படும் மனப்பான்மை பற்றிய ஓர் ஆய்வு

இரா. லட்சுமி, என் கே திரு திருமலாச்சாரியார் தேசிய பெண்கள் கல்வியியல் கல்லூரி (தன்னாட்சி) சென்னை 11 May 2022 Read Full PDF

கட்டுரையாளர்: இரா. லட்சுமி, என் கே திரு திருமலாச்சாரியார் தேசிய பெண்கள் கல்வியியல் கல்லூரி (தன்னாட்சி) சென்னை-600005.

நெறியாளர் : முனைவர் டாக்டர் எஸ்.மாலதி, என் கே திரு திருமலாச்சாரியார் தேசிய பெண்கள் கல்வியியல் கல்லூரி (தன்னாட்சி) சென்னை-600005.

ஆய்வுச்சுருக்கம்

ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் நிகழ்நிலை வகுப்பின் மூலம் தமிழ் இலக்கணம் கற்பதில் ஏற்படும் மனப்பான்மை பற்றிய ஆய்வானது செய்யப்பட்டது. சென்னை மாவட்டத்திலுள்ள 300 ஒன்பதாம் வகுப்பு பள்ளி  மாணவர்களை எளிய தன் நிகழ்வு ஆய்வு முறையில் ஆய்வு மாதிரிகளாக தேர்வு செய்யப்பட்டனர். எளிய தன்நிகழ்வு மாதிரி தரவு வடிவமைக்கப்பட்டது மற்றும் தரவை ஆய்வாளர் வடிவமைத்தார் ஆராய்ச்சி தரவை சேகரிக்க அணுகுமுறை அளவுகோல் ஆய்வாளரால் செய்யப்பட்டது. சேகரிக்கப்பட்ட தரவினை பயன்படுத்தி சோதிக்கப்பட்டது சராசரி புள்ளியியல் பகுப்பாய்வு Deplanation ,T -testமுதலியன மேற்கொள்ளப்பட்ட

ஆய்வின் விளைவாக

  • உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே நிகழ்நிலை வகுப்பில் இலக்கணம் கற்பதில் ஏற்படும் மனப்பான்மையில் எவ்வித வேறுபாடும் இல்லை. தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு இடையே நிகழ்நிலை வகுப்பில் இலக்கணம் கற்பதில் ஏற்படும் மனப்பான்மையில் எவ்வித வேறுபாடும் இல்லை. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இடையே பள்ளியின் வகையைப் பொருத்து வேறுபாடு இல்லை.
  • முக்கிய வார்த்தைகள்:

நிகழ்நிலை, மனப்பான்மை, இலக்கணம், ஒன்பதாம் வகுப்பு, வித்தியாசம்

Synopsis

The study was conducted on the attitude of ninth grade students towards learning Tamil grammar through the contextual class. 300 ninth grade school students in Chennai district were selected as study models in a simple self-study method. Simple Spontaneous Sample Data was designed and designed by the Data Analyst The approach to collecting research data was done by the Criterion Analyst. Tested using collected data Average statistical analysis Result of study conducted by Deplanation, T-test etc.

There is no difference in the attitudes that occur in high school students learning grammar in the actual class. There is no difference in the attitude towards learning grammar in the classroom between the students studying in Tamil and English. There is no difference between high school students depending on the type of school.

Keywords: Context, Attitude, Grammar, Ninth Grade, Difference

1. முன்னுரை

கல்வியில் சிறந்த மனப்பான்மை பெறுவதற்கு கற்றல் சூழல் என்பது மிக அவசியம் கற்றலுக்கான வாய்ப்புகளை பயன் தரும் வகையில் நாம் அடைய பல வழிகளில் நாம் கல்வியை பெறுகின்றோம்.

 தமிழ் மொழிகளில் இலக்கணம் இலக்கியம் என்பது மிக முக்கியமானது. இலக்கணம் மாணவர்களின் மனப்பான்மையுடன் ஒன்று உள்ளதா அதனால்  மாற்றம் அடைகிறது. என்பதை  கண்டறிய இவ்வாய்வு தேவைப்படுகிறது.

இலக்கண முறையில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இம்முறையில் செயல்படுகிறார்கள் என்பதைப் பற்றிய ஓர் ஆய்வு தற்போது காலகட்டத்தின் வாயிலாக இலக்கணம் கற்பதில்  ஏற்படும் மனப்பான்மையை அறிய இந்த ஆய்வு பயன்படுகிறது.

2. ஆராய்ச்சியின் தேவை மற்றும் முக்கியத்துவம்:

ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் நடைமுறையிலுள்ள கல்வி அமைப்பு முறை தான் அடங்கியுள்ளது என்பது அசைக்க முடியாத ஒன்றாகும்.

கல்விமுறை சிறப்பாக செயல்படுத்த வேண்டுமெனில் கல்வித்திட்டங்கள் தேவைக்கேற்பவும் காலத்திற்கு ஏற்பவும் மாற்றியமைக்கப்பட வேண்டும் .

மாற்றி அமைக்கப்படும் செயல்திட்டங்கள் சிறப்பான முறையில் கல்வி அமைப்பு செயல்படுத்த வேண்டும் கல்வி செயல்திட்டங்களை வகுப்பிலும் அல்லது நிகழ்வின் மூலம மாணவர்களுக்கு கற்க முடியும் என்பதற்கு கல்வி ஆராய்ச்சி மிக முக்கியமாக தேவைப்படுகிறது.

இவ்வாய்வின் வளர்ச்சி நிற்காமல் இருக்க மிக மிக முக்கியமானது இவ்வகை தொகுப்பானது எந்த அளவு பயனுள்ளதாக இருந்தது என்பது கண்டறியவே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களிடம் நிகழ்நிலை வகுப்பின் மூலம் தமிழ் இலக்கணம் கற்பது ஏற்படும் மனப்பான்மை மற்றும் அறிவுத்திறனை பற்றி ஆய்வை மேற்கொண்டேன்.

3. ஆய்வின் நோக்கம்:

  • அரசு , தனியார் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே நிகழ்நிலை வகுப்பின் மூலம் இலக்கணம் கற்பதில் வேறுபாடு உள்ளதா என்பதைக் கண்டறிதல்.
  • தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களிடையே நிகழ்நிலை வகுப்பின் மூலம் இலக்கணம் கற்பதில் உள்ள வேறுபாட்டினை கண்டறிதல்.
  • ஆண் பெண் இருபாலருக்கும் நிகழ்நிலை வகுப்பின் மூலம் இலக்கணம் கற்பதில் வேறுபாடு உள்ளதா என்பதைக் கண்டறிதல்  .

4. ஆய்வின் கருதுகோள்கள்

  • ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் நிகழ்நிலை வகுப்பின் மூலம் இலக்கணம் கற்பதில் உள்ள மனப்பான்மையின் பரப்பு சராசரியாக இருக்கும்.
  • ஆண் பெண் இருபாலருக்கும் மனப்பான்மை ஒரே மாதிரியாக இருக்கும் .
  • தனியார் பள்ளி அரசு பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களின் மனப்பான்மையில் எவ்விதமான மாற்றமும் இல்லை.
  • தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களிடையே வேறுபாடு  மாதிரி இல்லை.

5. ஆய்வு மாதிரி

  • சென்னை மாவட்டத்தில் உள்ள 3 உயர்நிலைப் பள்ளிகளில் அரசு பள்ளி தனியார் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளிகளை தேர்வு செய்து ஒரு பள்ளிக்கு 100 மாணவர்கள் வீதம் 300 மாணவர்களை  நிகழ்வு மாதிரி கூறெடுத்தல் முறையில் தெரிவு செய்யப்பட்டு ஆய்வு மாதிரிகளை உட்படுத்தப்பட்டது.

6. ஆய்வுக் கருவி

  • நிகழ்நிலை வகுப்பில் இலக்கணம் கற்பதில் ஏற்படும் மனப்பான்மை பாட வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஆலோசனையின் அடிப்படையில் ஆய்வுக்கு ஏற்புடைமை உருவாக்கி ஐம்பது மாணவர்களிடம் சோதனை, மறு சோதனை முறையில் நம்பகத்தன்மை கணக்கிடப்பட்டது.
  • நம்பகத்தன்மை மதிப்பின் r=0.94 மனப்பான்மை அளவுகோல் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டன.

7. புள்ளியியல்  பகுப்பாய்வு

  • உயர்நிலை பள்ளி மாணவர்களிடம் பெறப்பட்ட தரவுகளை மதிப்பு புள்ளிகளாக மாற்றி புள்ளியல் பகுப்பாய்வு களான சராசரி திட்ட விலக்க மற்றும் t-சோதனை போன்றவற்றின் மதிப்புகளை கண்டறிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

8. ஆய்வின் வரம்பு

  • இந்த ஆராய்ச்சிக்கு சென்னை மாவட்டத்திலுள்ள 300 மாணவ மாணவிகள் மட்டுமே உட்படுத்தப்பட்டனர்.
  • ஆராய்ச்சியாளர் மெய்நிகர் வகுப்பில் மாணவர்களின்  அளவுகோல் வடிவமைக்கப்பட்டு தரப்படுத்தப்பட்டது.

9. கருதுகோளை சோதித்து அறிதல்

  • சோதனை – உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் மனப்பான்மையில் உள்ள வேறுபாடுகள்:

அட்டவணை:

மாறிகள்

துணை மாறிகள்

எண்ணிக்கை

சராசரி

திட்ட விலக்கம்

t என் மதிப்பு

முடிவு

பாலினம்

ஆண்

148

156

122.91

123.48

17.65

20.44

.906

இல்லை

பெண்

பள்ளியின் வகை

அரசு பள்ளி

 

104

 

122

 

74

-7.83717

-9.95192

7.83717

-2.11475

9.95192

2.11475

2.49431

2.84230

2.49431

2.75376

2.84230

2.75376

.008

.002

.008

.745

.002

.745

இல்லை

தனியார் பள்ளி

 

அரசு உதவி பெறும் பள்ளி

பயிற்று மொழி

தமிழ் வழி

187

113

126.14

118.29

17.44

20.71

1.27982

1.94828

இல்லை

ஆங்கில வழி

மேற்கண்ட அட்டவணை:

கருதுகோள்கள் உயர்நிலை பள்ளி மாணவர்களின் மனப்பான்மை பற்றிய ஆய்வினை கண்டறிந்து பாலினம் மற்றும் பள்ளியின் அமைவிடம் பயிற்றுமொழி போன்றவற்றின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு எதுவுமில்லை.

ஆய்வின் முடிவுகள்

  • உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே நிகழ்நிலை வகுப்பில் இலக்கணம் கற்பதில் ஏற்படும் மனப்பான்மையில் எவ்வித வேறுபாடும் இல்லை.
  • தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு இடையே நிகழ்நிலை வகுப்பில் இலக்கணம் கற்பதில் ஏற்படும் மனப்பான்மையில் எவ்வித வேறுபாடும் இல்லை.
  • உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இடையே பள்ளியின் வகையைப் பொருத்து வேறுபாடு இல்லை.

முடிவுரை

இந்தியாவின் எதிர்காலம் வருங்கால மாணவர்களின் வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது. எனவே மாணவர்களின் கற்றல் என்பது மிக மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இது நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிகிறது. நாளைய தலைமுறையை நல்ல தலைமுறையாக மாற்ற இக்காலக் கல்விமுறை பெரிதும் துணைபுரிகிறது. இத்தகைய கற்றல் மாறிவரும் இயற்கை சூழல் ,பேரிடர், பெரும் தொற்று(கோவிட் ) , காரணமாக நிற்காமல் தொடர்ந்துவருகிறது. மாணவர்கள் கற்றலை நிகழ் நிலை வகுப்பின் மூலமாக கற்பித்து அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி அவர்களுக்கு சமுதாயத்தில் எல்லா சூழல்களிலும் எல்லா சந்தர்ப்பங்களையும் எதிர்த்து போரிட மாறிவரும் தொழில்நுட்பங்கள் பற்றியும் கற்பித்து எல்லா சூழலிலும் சிறந்த மாணவனாக மாற்ற வேண்டும் என்பதே  நிகழ்நிலை வகுப்பின் முக்கிய நோக்கமாகும். அவ்வகுப்பில் மாணவரின் இலக்கணம் மற்றும் மனப்பான்மை சிறந்ததாகவே உள்ளது என்பதை இவ்வாய்வின் மூலம் விளக்குகிறோம்.

மேற்பார்வை நூல்கள்;

கல்வி ஆராய்ச்சியில் அடிப்படைகள்

பேராசிரியர் முனைவர் அ.மீனாட்சி சுந்தரம்

•    ஆன்லைன் கற்றலின் நன்மைகள் மற்றும் தீமைகள்  -e-learning industry.

•    ஆன்லைன் பாடத்திட்டத்தை வடிவமைப்பதற்கான நிபுணர் உத்திகள்    

https://www.insidehighered.com/digital-learning/advice