ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் திருக்குறள் பற்றிய அறிவு பரப்பு-ஓர் ஆய்வு

சு.காளீஸ்வரி, எம்.எட் ஆராய்ச்சி அறிஞர், என்.கே. திருமலாச்சாரியார் தேசிய பெண்கள் கல்வியியல் கல்லூரி,(தன்னாட்சி) சென்னை 11 May 2022 Read Full PDF

கட்டுரையாளர்: சு.காளீஸ்வரி, எம்.எட் ஆராய்ச்சி அறிஞர், என்.கே. திருமலாச்சாரியார் தேசிய பெண்கள் கல்வியியல் கல்லூரி,(தன்னாட்சி) சென்னை-600005.       

நெறியாளர்: டாக்டர்.எஸ்.மாலதி, இணைப் பேராசிரியர், என்.கே. திருமலாச்சாரியார் தேசிய பெண்கள் கல்வியியல் கல்லூரி,(தன்னாட்சி) சென்னை-600005.

ஆய்வுச்சுருக்கம்

  • ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் திருக்குறள் பற்றிய அறிவு பரப்பு - ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வின் முக்கிய நோக்கம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் திருக்குறள் பற்றிய அறிவு பரப்பினை கண்டறிவது ஆகும்.சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளை தெரிவு செய்து ஒரு பள்ளிக்கு 100 மாணவர்கள் வீதம் 300 ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவிகளை எளிய தன்நிகழ்வு மாதிரி கூறெடுத்தல் முறையில் தெரிவுசெய்யப்பட்டு ஆய்வு மாதிரிகளாக உட்படுத்தப்பட்டனர். திருக்குறள் தொடர்பான அறிவு பரப்பு அளவுகோல் வழிகாட்டி ஆசிரியர் உதவியுடன் பாட வல்லுனர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஆலோசனையின் அடிப்படையில் தரப்படுத்தப்பட்ட அறிவு பரப்பு அளவுகோல் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இந்த ஆய்வின் முடிவுகளாக திருக்குறள் அறிவு பரப்பிற்கும் தமிழ் அடைவுத்தேர்வு மதிப்பெண்ணுக்கும் ஒட்டுறவுக் கெழு உள்ளது. ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு இடையே திருக்குறள் அறிவு பரப்பு மற்றும் தமிழ் அடைவுத் தேர்வில்  வித்தியாசம் இல்லை .தமிழ்வழி கற்போருக்கும் ஆங்கிலவழி கற்போருக்கும் திருக்குறள் அறிவு பரப்பு மற்றும் தமிழ் அடைவுத்தேர்வில் வித்தியாசம் இல்லை.அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கிடையே திருக்குறள் அறிவு பரப்பு மற்றும் தமிழ் அடைவுத் தேர்வில் வித்தியாசம் உண்டு  என்று  கண்டறியப்பட்டுள்ளது.

திறவுச் சொற்கள் :  திருக்குறள் அறிவு பரப்பு, அடைவுத்தேர்வு, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள்.

ABTRACT

Thirukural is considered to be the masterpiece of the Tamil literary pantheon. It is short, pithy, concise and suggestive. In fact, it is the summum bonum of Tamil ethical values. The aim of this study is to explore the Thirukural knowledge and scope among IX standard students. The samples in this study were selected from Government schools, government-aided schools, and private schools in the Chennai district. Each school was randomly chosen with 100 students and 300 among IX standard students Simple random sampling was used to select 300 students from the general population. The data collection was done with the help of the guide teacher, based on standardized knowledge criteria and advice from experts and educators. Based on the findings of this study, there is a correlation between the knowledge scope of Thirukkural and the score of the Tamil achievement test. There is no difference between Thirukural knowledge scope and Tamil achievement test between among IX standard students. There is no difference between the Thirukural knowledge and Tamil achievement test for Tamil medium students and English medium students.  It was found that there is a difference between the Tamil achievement test and Thirukural knowledge scope for government school, government-aided school, and private school students.

Keywords: Thirukural  knowledge scope, achievement test, IX standard students.

1.முன்னுரை

             திருக்குறள் எனக் குறிப்பிடப்படும் புகழ்பெற்ற தமிழ்மொழி இலக்கியம் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இந்நூல் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும். மக்கள் தம் அகவாழ்விலும், புற வாழ்விலும், இன்பமுடனும், இசையுடனும், நலமுடனும் வாழத் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இச்சிறப்புடைய திருக்குறள் மாணவர்களின் அறிவு பரப்பை வளர்க்கிறது. ஆகவே இந்த ஆராய்ச்சி ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் திருக்குறள் பற்றிய அறிவு பரப்பு-ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2. ஆராய்ச்சியின் தேவை மற்றும் முக்கியத்துவம்

           மாணவர்கள் மூன்றாம் வகுப்பு முதல் திருக்குறள் படிக்கின்றனர். திருக்குறள் மாணவர்களின் பாடப் புத்தகத்தில் மனப்பாடச் செய்யுளாக கொடுக்கப்படுவதால். மாணவர்கள் திருக்குறளின் கருத்துக்களின் பயன் அறிந்து படிக்காமல் மனப்பாடம் செய்து தேர்வு எழுதுவதற்கு மட்டும் படிக்கின்றனர். அதனால் திருக்குறளை பற்றிய அறிவு பரப்பு ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த அளவிற்கு உள்ளது என்பதை கண்டறிவதற்கு. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் திருக்குறள் பற்றிய அறிவு பரப்பு-ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் ஆய்வாளர் ஆராய்ச்சியை மேற்கொண்டு மாணவர்களின் பின்புல மாறிகளின் அடிப்படையில் உள்ள வித்தியாசங்களை கண்டறிய இந்த நடப்பு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

3. ஆய்வின் நோக்கம்

  • ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் திருக்குறள் அறிவு பரப்பிற்கும் தமிழ் அடைவுத்தேர்வு மதிப்பெண்ணுக்கும் இடையே ஒட்டுறவுக் கெழு கண்டறிதல்.
  • ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு இடையே திருக்குறள் பற்றிய அறிவு பரப்பு மற்றும் தமிழ் அடைவுத்தேர்வில் வித்தியாசம் கண்டறிதல்.
  • தமிழ்வழிக் கற்போருக்கும், ஆங்கிலவழிக் கற்போருக்கும் இடையே திருக்குறள் அறிவு பரப்பு மற்றும் தமிழ் அடைவுத்தேர்வில் வித்தியாசம் கண்டறிதல்.
  • அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கிடையே திருக்குறள் அறிவு பரப்பு மற்றும் தமிழ் அடைவுத் தேர்வில் வித்தியாசம் கண்டறிதல்.

4. ஆய்வின் கருதுகோள்கள்

•     ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் திருக்குறள் அறிவு பரப்பிற்கும் தமிழ் அடைவுத்தேர்வு மதிப்பெண்ணுக்கும் இடையே ஒட்டுறவுக் கெழு இல்லை.

  • ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு இடையே திருக்குறள் அறிவு பரப்பு மற்றும் தமிழ் அடைவுத்தேர்வில் வித்தியாசம் இல்லை.
  • தமிழ்வழிக் கற்போருக்கும், ஆங்கிலவழிக் கற்போருக்கும் இடையே  திருக்குறள் அறிவு பரப்பு மற்றும் தமிழ் அடைவுத்தேர்வில் வித்தியாசம் இல்லை.
  •    அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கிடையே திருக்குறள் அறிவு பரப்பு மற்றும் தமிழ் அடைவுத் தேர்வில் வித்தியாசம் இல்லை.

5. ஆய்வு மாதிரி

          சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளை தெரிவு செய்து ஒரு பள்ளிக்கு 100 மாணவர்கள் வீதம் 300 ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவிகளை எளிய தன்நிகழ்வு மாதிரி கூறெடுத்தல் முறையில் தெரிவுசெய்யப்பட்டு ஆய்வு மாதிரிகளாக உட்படுத்தப்பட்டனர்.

6. ஆய்வுக் கருவி

         “திருக்குறள் தொடர்பான அறிவு பரப்பு அளவுகோல் வழிகாட்டி ஆசிரியர் உதவியுடன் பாட வல்லுனர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஆலோசனையின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர் ஆய்வுக் கருவியை வடிவமைத்து 50 மாணவர்களிடம் குரோன்பாக் ஆல்பா என்னும் சோதனை முறையில் நம்பகத்தன்மை கணக்கிடப்பட்டது. நம்பகத்தன்மையின் மதிப்பு .73 ஆகும். அதன் வர்க்கமூலம் .85 ஏற்புடைமைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.ஆகவே தரப்படுத்தப்பட்ட அறிவு பரப்பு அளவுகோல் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டன.

7. புள்ளியல் பகுப்பாய்வு

          ஒன்பதாம் வகுப்பு மாணவர்களிடம் பெறப்பட்ட தரவுகளை, மதிப்பு புள்ளிகளாக மாற்றி, புள்ளியியல் பகுப்பாய்வுகளாக சராசரி, திட்டவிலக்கம், மற்றும் t-சோதனை போன்றவற்றின் மதிப்புகளை கண்டறிந்து கருதுகோள்கள் சோதித்து அறியப்பட்டன.

8. ஆய்வின் வரம்பு

          இந்த ஆராய்ச்சிக்கு சென்னை மாவட்டத்திலுள்ள 300 மாணவ மாணவிகள் மட்டுமே உட்படுத்தப்பட்டனர். வழிகாட்டி ஆசிரியர் உதவியுடன் ஆராய்ச்சியாளரால் அறிவு பரப்பு அளவுகோல் வடிவமைக்கப்பட்டு தரப்படுத்தப்பட்டது.

9. கருதுகோளை சோதித்து அறிதல்

கருதுகோள்-1

  • ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் திருக்குறள் அறிவு பரப்பிற்கும் தமிழ் அடைவுத்தேர்வு மதிப்பெண்ணுக்கும் இடையே ஒட்டுறவுக் கெழு இல்லை.

மாறிகள்

திருக்குறள் அறிவு பரப்பு

அடைவுத்தேர்வு

திருக்குறள் அறிவு பரப்பு

1

.593**

அடைவுத்தேர்வு

.593**

1

 

**ஒட்டுறவு கெழு அளவு 0.01 ஆகும்.

  • மேற்கண்ட அட்டவணை திருக்குறள் அறிவு பரப்பிற்கும் தமிழ் அடைவுத்தேர்வு மதிப்பெண்ணுக்கும் ஒட்டுறவுக் கெழு உள்ளது என உறுதிப்படுத்துகிறது. எனவே மேற்கண்ட கருதுகோள் நிராகரிக்கப்படுகிறது.

கருதுகோள்-2

  • ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு இடையே  திருக்குறள் அறிவு பரப்பு மற்றும் தமிழ் அடைவுத்தேர்வில் வித்தியாசம் இல்லை.

மாறிகள்

பாலினம்

மாணவர்களின் எண்ணிக்கை

சராசரி மதிப்பு

திட்ட விலக்கம்

t ன் மதிப்பு

முடிவு

திருக்குறள் அறிவு பரப்பு

ஆண்

 

பெண்

150

 

150

32.92

 

30.98

8.89

 

9.00

 

1.884

வித்தியாசம் இல்லை

அடைவுத்தேர்வு

ஆண்

 

பெண்

150

 

150

72.55

 

75.24

16.43

 

16.11

 

1.430

வித்தியாசம் இல்லை

 

  • மேற்கண்ட அட்டவணை ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு இடையே திருக்குறள் அறிவு பரப்பு மற்றும் தமிழ் அடைவுத் தேர்வில்  வித்தியாசம் இல்லை என உறுதிப்படுத்துகிறது. எனவே மேற்கண்ட கருதுகோள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

கருதுகோள்-3

தமிழ்வழி கற்போருக்கும் ஆங்கிலவழி கற்போருக்கும் இடையே திருக்குறள் அறிவு பரப்பு மற்றும் தமிழ் அடைவுத்தேர்வில் வித்தியாசம் இல்லை.

மாறிகள்

பயிற்று மொழி

மாணவர்களின் எண்ணிக்கை

சராசரி மதிப்பு

திட்ட விலக்கம்

t ன் மதிப்பு

முடிவு

திருக்குறள் அறிவு பரப்பு

தமிழ்

 

ஆங்கிலம்

150

 

150

32.19

 

31.71

9.11

 

8.88

.464

வித்தியாசம் இல்லை

அடைவுத் தேர்வு

தமிழ்

 

ஆங்கிலம்

150

 

150

72.73

 

75.06

17.04

 

15.49

1.237

வித்தியாசம் இல்லை

 

  • மேற்கண்ட அட்டவணை தமிழ்வழி கற்போருக்கும் ஆங்கிலவழி கற்போருக்கும் திருக்குறள் அறிவு பரப்பு மற்றும் தமிழ் அடைவுத்தேர்வில் வித்தியாசம் இல்லை என உறுதிப்படுத்துகிறது. எனவே மேற்கண்ட கருதுகோள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

கருதுகோள்-4

அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கிடையே திருக்குறள் அறிவு பரப்பு மற்றும் தமிழ் அடைவுத் தேர்வில் வித்தியாசம் இல்லை.

பள்ளிகளின் அடிப்படையில் திருக்குறள் அறிவு பரப்பு மற்றும் தமிழ் அடைவுத்தேர்வில் வித்தியாசத்தை காட்டும் அட்டவணை.

மாறிகள்

 

சதுரங்களின் கூட்டுத்தொகை

df

சராசரி

F

முடிவு

அறிவு பரப்பு

குழுக்களுக்கு உள்ளே

 

குழுக்களுக்கு இடையே

 

மொத்தம்

1031.88

 

 

 

23123.46

 

 

24155.34

2

 

 

 

297

 

 

299

515.94

 

 

 

77.85

 

 

 

 

 

6.62

 

 

 

        0.01

வித்தியாசம் உண்டு

அடைவுத்தேர்வு

குழுக்களுக்கு உள்ளே

 

குழுக்களுக்கு இடையே

 

மொத்தம்

5253.60

 

 

 

74230.19

 

 

79483.79

2

 

 

 

297

 

 

298

2629.80

 

 

 

249.93

 

 

10.510

 

 

0.01

வித்தியாசம் உண்டு

 

  • மேற்கண்ட அட்டவணையின் படி பள்ளிகளின் அடிப்படையில் திருக்குறள் அறிவு பரப்பு மற்றும் தமிழ் அடைவுத்தேர்வில் வித்தியாசம் உண்டு என உறுதிப்படுத்துகிறது. எனவே மேற்கண்ட கருதுகோள் நிராகரிக்கப்படுகிறது.
  • எந்தெந்த பள்ளிகளுக்கு இடையே வித்தியாசம் உண்டு என்பதை பல ஒப்பீடு சோதனை மூலம் கண்டறியப்பட்டதை பின்வரும் அட்டவணை விளக்குகிறது.

கீழ்க்கண்ட அட்டவணை எந்தெந்த பள்ளிகளுக்கு இடையே வித்தியாசம் உண்டு என்பதை காட்டுகிறது

மாறிகள்

 

 

சராசரி

முடிவு

அறிவு பரப்பு

அரசு பள்ளி

அரசு உதவி பெறும் பள்ளி

3.26*

 

 

 

 

 

வித்தியாசம் உண்டு

 

 

அரசு உதவி பெறும் பள்ளி

தனியார் பள்ளி

4.37*

வித்தியாசம் உண்டு

 

 

தனியார் பள்ளி

அரசு பள்ளி

 

1.11

 

 

 

வித்தியாசம் இல்லை

 

அடைவுத்தேர்வு

அரசு பள்ளி

அரசு உதவி பெறும் பள்ளி

5.21

 

 

 

 

வித்தியாசம் இல்லை

 

 

 

 

அரசு உதவி பெறும் பள்ளி

தனியார் பள்ளி

10.25*

வித்தியாசம் உண்டு

 

தனியார் பள்ளி

அரசு பள்ளி

5.04

 

 

 

 

வித்தியாசம் இல்லை

 

 

*சராசரி வேறுபாடு அளவு 0.05 ஆகும்.

10.    ஆய்வின் முடிவுகள்

  • திருக்குறள் அறிவு பரப்பிற்கும் தமிழ் அடைவுத்தேர்வு மதிப்பெண்ணுக்கும் ஒட்டுறவுக் கெழு உள்ளது.
  • ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு இடையே திருக்குறள் அறிவு பரப்பு மற்றும் தமிழ் அடைவுத் தேர்வில்  வித்தியாசம் இல்லை.
  • தமிழ்வழி கற்போருக்கும் ஆங்கிலவழி கற்போருக்கும் திருக்குறள் அறிவு பரப்பு மற்றும் தமிழ் அடைவுத்தேர்வில் வித்தியாசம் இல்லை.
  • அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கிடையே திருக்குறள் அறிவு பரப்பு மற்றும் தமிழ் அடைவுத் தேர்வில் வித்தியாசம் உண்டு.

 11. முடிவுரை

  • இந்தியாவின் எதிர்காலம் மாணவர்களின் வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது. அறிவில் சிறந்து விளங்கும் மாணவர்களிடம் திருக்குறள் அறிவு பரப்பு குறைந்து காணப்பட்டால், திருக்குறளில் கூறப்படும் பயனுள்ள கருத்துக்கள் மாணவர்களுக்கு பயனளிப்பதாக அமையாது. எனவே, பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களின் திருக்குறள் அறிவு பரப்பு வளர்க்கப்பட வேண்டும். ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் திருக்குறள் அறிவு பரப்பை வளர்ப்பதன் மூலம் சிறந்த குடிமக்களை உருவாக்க முடியும் என்பதை இவ்வாய்வு வலியுறுத்துகிறது.

References