ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

பரணி இலக்கியத்தில் வைணவக்கூறுகள்

முனைவர் க. ஜெயந்தி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி, அம்மாப்பேட்டை, சேலம் 17 May 2022 Read Full PDF

ABSTRACT

In the ancient and glorious Tamil literature, the Vaishnava god Tirumal is specially revered. Worship is essential for the lives of the people. It wipes out suffering and gives pleasure. People will use it to remove defects and to request needs. It is said that the purpose of worship is that everyone should live in contact with the deity. When he speaks of the worship of God, he says, 'I have read, heard, worshipped, worshipped and worshipped.' Similarly, we know from the Tamil literature that the Tamils had the same methods of worship of gods from ancient times. Though there are many deities worshipped by Tamils, Tirumal is a notable deity among them. It is a fact of history that Tirumal is the deity who has been worshipped since the Vedic times. The purpose of this article is to study how vaishnava religious elements are found in bharani literature.

Keywords

  • Bharani Literature                               
  • Ghost Complaint                                       
  • The hero who killed a thousand elephants and got silver is praised.
  • The victorious Chancellor
  • Kulothungan commander Karunakaran
  • Kulothunga Chola I invaded the kalinga kingdom and conquered it.
  • Kulothunganam Sayankondarum
  • 12th  century A.D.
  • It sang the battles of the gods and religious philosophies.
  • Lord Krishna in Mahabharat in Bharani
  • He who is driving his wheel of rule over the whole world, surrounded by seven seas

ஆய்வுச் சுருக்கம்

பழமையும் சிறப்பும் வாய்ந்த தமிழ்மொழி இலக்கியங்களில் வைணவ சமயக் கடவுளான திருமால் சிறப்பாகப் போற்றப்படுகின்றார். மக்கள் வாழ்க்கைக்கு இறைவழிபாடு இன்றிமையாதது. அது துன்பத்தை துடைத்து, இன்பம் தருவது. குறைகளை நீக்கவும், தேவைகளை வேண்டவும் அதனை மக்கள் பயன்படுத்துவர். ஒவ்வொருவரும் தெய்வத்தோடு தொடர்பு கொண்டு வாழ வேண்டும் என்பதே வழிபாட்டின் நோக்கம் என்பர். இறை வழிபாட்டை கூறும்பொழுது, ‘வாசித்தும், கேட்டும், வணங்கி, வழிபட்டும், பூசித்தும் போக்கினேன்’ என்பர் திருமழிசையாழ்வார். அதைப்போல பண்டைக் காலந்தொட்டே தமிழரிடம் தெய்வ வழிபாட்டு முறைகள் இருந்து வந்தமையைத் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறிகின்றோம். தமிழர் வழிபட்ட தெய்வங்கள் பல இருப்பினும் அவற்றுள் திருமால் குறிப்பிடத்தக்கத் தெய்வமாகத் திகழ்கிறார். வேத காலந்தொட்டு வழிபடப் பெற்று வரும் தெய்வம் திருமால் என்பது வரலாறு காட்டும் உண்மையாகும். பரணி இலக்கியத்தில் எவ்வாறு வைணவ சமயக் கூறுகள்  இடம்பெற்றுள்ளது என்பதை ஆய்வதே இக்கட்டூரையின் நோக்கமாக அமைகின்றது.

திறவுச் சொற்கள்

  • பரணி இலக்கியம்
  • பேய் முறைப்பாடு
  • ஆயிரம் யானைகளைக் கொன்று வெள்ளி பெற்ற வீரனைச் சிறப்பித்துப்பாடும் சிற்றிலக்கியம்
  • வெற்றியடைந்த வேந்தர்
  • குலோத்துங்கன் தளபதி கருணாகரன்
  • முதல் குலோத்துங்க சோழன் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்றான்.
  • குலோத்துங்கனம் சயங்கொண்டாரும்
  • கி.பி. 12ஆம் நூற்றாண்டு
  • தெய்வங்களின் போர்களை சமயத் தத்துவங்களைப் பாடியது.
  • பரணியில் இடம்பெறும் பாரதத்தில் கண்ணன்
  • ஏழு கடல்களால் சூழப் பெற்ற இந்த உலகம் முழுவதும் தன் ஆட்சிச் சக்கரத்தைச் செலுத்திக் கொண்டிருப்பவன்

பரணி பெயர்க்காரணம் :-

      பரணி என்பது நட்சத்திரத்தின் பெயர். காளியையும் யமனையும் தெய்வங்களாக் கொண்ட நாள். பரணி நாளில் பிறந்தவன் பெரும் வீரனாவான் என்பதும் நம்பிக்கை. எனவே போர்க்களத்தில் யானைகள் பலவற்றைக் கொன்று பல உயிர்களையும் யமன் கவர்ந்து கொள்ளுமாறு செய்து, அரசனின் வீரம் வெளிப்பட போர்க்களத்தில் காளிக்குக் கூழ் சமைத்து வழிபட்ட நிகழ்சிகளைக் கூறுவதால் இந்நூல் பரணி என்று பெயர் பெற்றிருக்க வேண்டும். காளிக்கு உரிய நாள் பரணி. காளியைத் தெய்வமாகக் கொண்டு பாடப்படுவதால் இந்நூலுக்குப் பரணி எனப் பெயர் வந்தது  என்றம் விளக்கம் கூறுவர்.

பரணியின் அமைப்பு:-

      பரணி இலக்கியம் பத்து உறுப்புகளைப் பெற்று விளங்குகிறது. பத்து உறுப்புகள் அனைத்துப் பரணி நூல்களுக்கும் உரியன. ஒரு சில பரணிகளில் இந்தப் பத்து உறுப்புகள் அல்லாது ஒரு சில உறுப்புகள் கூடுதலாகவும் உள்ளன. இந்த உறுப்புகள் பண்டைய பரணி நூல்களுக்கே பொருந்தும். பிற்கால நூல்களுக்குப் பொருந்தாது. சான்றுக்குச் சீனத்துப் பரணி ஆகும்.

பரணி இலக்கியத்தின் உறுப்புகள்

1)     கடவுள் வாழ்த்து

2)    கடை திறப்பு

3)    காடு பாடியது

4)    கோயில் பாடியது

5)    தேவியைப் பாடியது

6)    பேய்களைப் பாடியது

7)     பேய் முறைப்பாடு

8)    காளிக்கும் கூளி கூறியது

9)    களம் பாடியது

10)    கூழ்அடுதல்

மேற்கூறிய பத்து உறுப்புகள் பண்டைய பரணி நூல்கள் அனைத்திற்கும் உரியன. இவை அல்லாமல் இந்திரசாலம் (பேயின் மாயாசாலம் பற்றியது) இராசபாரம்பரியம் (சோழர் பரம்பரை பற்றிய விளக்கம்), அவதாரம் (பாட்டுடைத் தலைவனின் பிறப்பு பற்றியது) ஆகிய உறுப்புகள் கலிங்கத்துப் பரணியில் காணப்படுகின்றன. பரணியின் உறுப்புகள் கடவுள் வாழ்த்து முதலாக ஒரே அமைப்பாக எல்லாப் பரணி நூல்களில் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பரணி இலக்கியத்தில் வைணவக்கூறுகள்:-

      பரணி என்பது போர்க்களத்தில் ‘ஆயிரம் யானைகளைக் கொன்று வெள்ளி பெற்ற வீரனைச் சிறப்பித்துப்பாடும் சிற்றிலக்கியம் பரணி ஆகும்.’

      "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற

       மாணவனுக்கு வகுப்பது பரணி"1             இலக்கண விளக்கம்

     

"வஞ்சி மலைந்த உழிஞை முற்றித்

       தும்பையிற் சென்ற தொடுகழல் மன்னனை

       வெம்புசின மாற்றான் தானைவெங் காலத்தில்

       குருதிப் பேராறு பெருகுஞ் செங்களத்து

       ஒரு தனி ஏத்தும் பரணியது பண்பே"2        பன்னிரு பாட்டியல்

     

"மூண்ட அமர்க்களத்து மூரிக் களிறட்ட

        ஆண்டகை யைப்பாணி யாய்ந்துரைக்க - ஈண்டிய

       நேரடியா யாதியா நீண்டகலித் தாழிசை

       ஈரடி கொண்டாது யுடனீறு"3                    வெண்பாப் பாட்டியல்

என்ற அடிகளின் வழி அறியப்படுகிறது

      இந்நூலானது வெற்றியடைந்த வேந்தர் தன் பெயரால் வழங்கப்படாமல், தோல்வி பெற்ற மன்னன் பெயரைச் சார்ந்தே வழங்கப்படும் பரணி இலக்கியம் கி.பி.12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றியது.

பரணி உருவான கதை :-

      கலிங்கத்துப்பரணி உருவானதற்கான காரணம் குலோத்துங்கன் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்தான். அப்போது தென்னவர், வில்லவர் முதலிய மன்னர்கள் திறை (தோற்ற மன்னர் தன்னை வென்ற மன்னர்க்குக் கொடுக்கும் நிதி) செலுத்திப் பணிந்தனர். வடகலிங்க மன்னனின் அரண்கள் வலிமை உடையனவாம். அவற்றை அழித்து வாருங்கள். அவனுடைய யானைகளை வென்று வாருங்கள் என்று கூறினாள். அந்த அளவில் குலோத்துங்கன் தளபதி கருணாகரன் எழுந்து நானே சென்று கலிங்கனை அடக்குவேன் என்று சபதம் இட்டான். பின்னர்க் கலிங்கப் போர் மூண்டது. சோழர்கள் வெற்றி வாகை சூடினர்.

கலிங்கத்துப்பரணி :-

      பரணி நூல்களில் காலத்தால் முற்பட்டது இந்நூல். முதல் குலோத்துங்க சோழன் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்றான். இந்த வெற்றியைச் சிறப்பித்துப் பாடியதே கலிங்கத்துப்பரணி ஆகும்.

நூலாசிரியர்:-

      கலிங்கத்துப்பரணியின் ஆசிரியர் சயங்கொண்டார் ஆவார். பரணிக்கு ஓர் சயங்கொண்டான் என்று பலப்பட்டடைச் சொக்கநாதப்புலவர் இவரைப் பாராட்டி உள்ளார். இவரது இயற்பெயரை அறிய முடியவில்லை. புலவர் பலரும் சொற்போர் நிகழ்த்துவது வழக்கம். இத்தகு சொற்போரில் வென்றதால் இவருக்குச் சயங்கொண்டார் எனற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பர். இவருடைய ஊர் தீபங்குடி.

குலோத்துங்கனம் சயங்கொண்டாரும் :-

      குலோத்துங்கன் கலிங்கத்துப் போரில் வெற்றி பெற்றான். வெற்றிக்குப் பின்பு சயங்கொண்டாரோடு உரையாடிக் கொண்டிருந்தான். அப்போது புலவரை நோக்கி, புலவரே கலிங்கத்தைச் சயங்கொண்டமையால் நானும் சயங்கொண்டான் ஆயினேன் என்று கூறினான். இதனைக் கேட்ட சயங்கொண்டார் உளம் மகிழ்ந்தார். அப்படியானால் சயங்கொண்டாரைச் சயங்கொண்டான் பாடுவது மிகப்பொருத்தம் எனக் கூறி கலிங்கத்துப்பரணியைப் பாடினார்.

பரணி பாடுபொருள் மாற்றம் :-

      கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரை தோன்றிய பரணி நூல்களுக்குத் தலைவர்களாக இணையற்ற வீரர்கள் தமிழகத்தில் இருந்தார்கள். ஆனால் அதன்பின் தமிழக ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டது.

      அதன்பின் இணையற்ற வீரர்கள் அவ்வளவாகத் தமிழகத்தில் தோன்றவில்லை. எனவே பரணி நூல்கள் சமயச் சார்புடையனவாக அமைந்தன. வீரர்களின் போர்க்களத் திறனைப் பாடிய உள்ளம் தெய்வங்களின் போர்களை சமயத் தத்துவங்களைப் பாடியது.

பரணியில் இடம்பெறும் பாரதத்தில் கண்ணன்:-

      பாரதத்தில் கூறப்பட்டுள்ள மேலான கடவுளாகிய கண்ணனின் தூய நல்ல கதைகளும், பழமையாகிய வேதங்களில் சொல்லப்பட்டுள்ள செய்திகளுமே, சோழ மன்னரின் வரலாற்றுக்கு ஒப்பானவை ஆகும். வியாசர் சொல்ல விநாயகர் பாரதத்தை மேருமலையில் எழுதியதைப்போல, சோழர் வரலாற்றை இமயமலையில் எழுத வேண்டும் என நாரதர் கண்ணனின் வரலாற்றைக் கரிகாலனிடம் கூறினார் என்பதை,

      "பாரதத்தின் உளவாகிய பவித்ர கதை, எம்

           பரமன் நற்சரிதை மெய்ப் பழைய நான் மறைகளே,

       நேர் அதற்கு இதனை நான் மொழிய , நீ எழுது முன்

           நெடிய குன்றின்மிசையே, இசைவதஎன கதைமுன்"4 

கலிங்கத்துப்பரணி, பா-182

இப்பாடலடிகளின் வழி அறியப்படுகிறது.

பரணியில் கண்ணபிரானைச் சிசுபாலன் வைதவரலாறு:-

      பாரதக் கதையின் கதாநாயகரான தருமர் இராசசூயம் என்னும் சிறந்த யாகம் ஒன்றைச் செய்யத் தொடங்கினார். அந்த யாகத்தின் முடிவில் அவர் வியாசமுனிவர் கட்டளையின்படி கண்ணபிரானுக்கு முதற்பூசை செலுத்த முயன்றார். அப்போது சிசுபாலன் கடுஞ்சினம் எய்திக் கண்ணபிரானை நோக்கி, ‘கிருஷ்ணா' பல மன்னர்கள் நிறைந்த இச்சபையில் இடையனாகிய நீ முதற்பூசை பெறுவது சரியா? எனப் பலவாறு இகழ்ந்து பேசினான். அதனால் கண்ணபிரான் கோபமுற்று தனது சக்கராயுதத்தால் அவன் தலையை அறுத்துத் தள்ளினான். கண்ணபிரான் குலோத்துங்கனாகத் தோன்றியுள்ளதால் பேய்கள் புகழ்ந்து வாழ்த்தின என்பது கருத்தாகும். இதனை,

     "முடிசூடும் முடியொன்றே 

           முதலபயன் எங்கோமான்

       அடிசூடு முடியெண்ணில்

           ஆயிரம் நூறாயிரம்"5 கலிங்கத்துப்பரணி, பா-66

என்ற பாடலடி உணர்த்துகின்றது. மேலும், சில பேய்கள், காவிரியாற்றுத் துறையை உடையவன் வாழ்க என வாழ்த்தின. தாமிரபரணி நதியின் கரையை உடையவன் என்று சில பேய்கள் வாழ்த்தின. ஏழு கடல்களால் சூழப் பெற்ற இந்த உலகம் முழுவதும் தன் ஆட்சிச் சக்கரத்தைச் செலுத்திக் கொண்டிருப்பவன் திருமாலாகியவன் குலோத்துங்கன். உலகத்திலுள்ள உயிர்கள் அனைத்தும் யுகங்கள் தோறும் கடைத்தேறுப்டி அறங்களைச் செய்து அவற்றைக் காக்கும் இயல்பு உடையவர் அவன் என்பதை கலிங்கத்துப்பரணி வழி அறிய முடிகின்றது.

முடிவுரை

  1. பரணி என்பது நாளின் நட்சத்திரத்தின் பெயராகும். பரணி நாளில் போர் வெற்றியைச் சிறப்பித்துப் பாடியதால் பரணி என்னும் பெயர் வழங்கலாயிற்று.
  2. போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி பெற்ற வீரனைப்hடுதல் பரணி என்று வழங்கினர் என்பது புலப்படுகிறது.
  3. பரணி இலக்கியத்தில் திருமாலைத் துதிப்பாடுவதும், வணங்கி நிற்பதும் முதன்மைக் கடனாகக் கடைபிடிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டன.
  4. மகாபாரதக் கதைகளில் இடம்பெற்ற கண்ணனின் சிறப்புகள் பரணி இலக்கியங்களில் மிகுதியாகக் கையாளப்பட்டிருப்பதிலிருந்து பக்தி இயக்க காலத்தில் மட்டுமல்லாமல் பிற்காலத்திலும் இறையுணர்வு மக்களிடம் மேலோங்கி இருந்ததைக் காணமுடிகின்றது.
  5. சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத்தமிழ், பரணி ஆகிய இலக்கியங்களுள் வைணவ சமயக் கருத்துக்கள் பெரும்பான்மையாக கையாளப்பட்டிருப்பதை ஆராய்ந்தவிடத்து கண்டறியப்பட்டன.

துணை நூற்பட்டியல்

புலியூர் கேசிகன். (ப.ஆ.)   

-

கலிங்கத்துப்பரணி,

பாரி நிலையம், 

சென்னை.

முதற்பதிப்பு - மார்ச், 1958.

 

அரங்க சுப்பையா.        

                 

           

                 

-

இலக்கியத்திறனாய்வு, 

வேதவல்லி பதிப்பகம், 

மதுரை. 

முதற்பதிப்பு - 1996.       

அருட்கவி அரங்கசீனிவாசன்

-

வைணவத் தத்துவ ஞான அடிப்படைகள்

காவ்யா பதிப்பகம்

புதுவை. 

முதற்பதிப்பு - 1994. 

அருணாச்சலம். ப.,

-

பக்தி இலக்கியம், 

சாரதா பதிப்பகம், 

சென்னை. 

4ம் பதிப்பு - 1999  

 

சங்கரநாராயணர்

-

சைவமும் வைணவமும், 

கஸ்தூரிபா சாந்தி கன்யா

குருகுலம் வெளியீடு,

தஞ்சாவூர்,

முதற்பதிப்பு - 1990.

 

செல்வராஜ். பொ. (ப.ஆ)   

-

தமிழ் வளர்ச்சிக்குச்

சமயங்களில் பங்கு,  சைவ சித்தாந்த

நூற்பதிப்புக் கழகம், 

சென்னை-18.       

 

தனபாக்கியவதி. திருமதி    

     

       

 

-

தமிழ் இலக்கியத்தில்

திருமால் வழிபாடு, 

மீனாட்சி புத்தகநிலையம், 

மதுரை. மறுபதிப்பு-2003. 

     

தீரன். ஆ.,

-

வைணவம் தந்த வளம், 

கங்கை புத்தக நிலையம், 

சென்னை-17. 

முதற்பதிப்பு - 1997.       

 

 

தோதாத்ரி. எஸ்

-

வைணவம், 

சைவசித்தாந்தப் பதிப்பு, 

சென்னை.

மூன்றாம் பதிப்பு - 1994. 

-