ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

முரசும் போர்முறையும் | Murasum A WarSystem

கி.வான்மதி, முனைவர்பட்டஆய்வாளர், அரசுகலைக்கல்லூரி, திருச்சி-22 16 Nov 2022 Read Full PDF

முரசும் போர்முறையும்

(Murasum A WarSystem)

கட்டுரையாளா்  :  கி.வான்மதி, முனைவர்பட்டஆய்வாளர், அரசுகலைக்கல்லூரி, திருச்சி-22

நெறியாளா்: முனைவா்.பெ.பகவத்கீதா, உதவிப்பேராசிாியா், அரசுகலைக்கல்லூாி, திருச்சிராப்பள்ளி -22

Abstract:                                                               

The  traditional identify of the tamil people was to start the war in a baltte field only after the blow of veera Murasu or the Drums.The roaring luats of  Murasu induced  the will power  and energized the warriors  to fight against their enemies and to won the battle. This percussion instrument was not only used for the military purposes and it was also used during all the glorious events of the country.The peculiar features of the Murasu.

 Veera Murasu martial drum  a little drum used for the military purposes.The blow of Murasu declares the eminence,glory and the power of the king, who won the battls. The thunder sound of the Murasu threatens  the monsters in the battle  field.The  tumbling  sound of Murasu marks  the beginning and the end of the war.Murasu  has a special place in the external life of the people of Tamilnadu.

Key Words:

            Murasu,Announcement,Instrument,Warfare,Murasu Sound,Symbol of Victory,Type of Murus,Use of Murasu,Bravery,Chivalry,Non-Belligerence

ஆய்வுச்சுருக்கம்:

தமிழகமக்களின்பண்பாட்டுஅடையாளமாககருதப்படும்முரசுபோர்மறவர்களின்மனவெழுச்சியைத்தூண்டிபகைவரோடுபோரிட்டுவெற்றிவாகைசூடுவதற்குபெருந்துணைபுரிகின்றன.போர்க்காலங்களில்மட்டும்அல்லாது,நாட்டில்நடைபெறும்நிகழ்வுகளிலும்முரசினைமுழக்குவதுசிறப்பு.இத்தகையசிறப்புபொருந்தியமுரசுபலவகைப்படும்.அவைநாடாளும்வேந்தர்களின்வெற்றி,புகழ்,பெருமை,வீரம்ஆகியவற்றைவெளிப்படுத்தும்.பகைவர்க்குஅச்சத்தைஉண்டாக்கும்முரசின்ஒலிஇடியோசைபோன்றுமுழங்கும்.இவ்வோசையேபோரின்தொடக்கத்தையும்,முடிவையும்தெரியப்படுத்துகிறது.இவ்வாறுதமிழகமக்களின்புறவாழ்வில்ஓர்தனித்தஇடத்தைப்பெற்றுவிளங்குவதுமுரசாகும்.

.திறவுச்சொற்கள்:

      முரசு, போர்முறை, முரசின்வகை, அறிவிப்புக்கருவி, முரசின்ஒலி, வீரவுணர்ச்சி, வெற்றியின்அடையாளம், போரற்றநிலை, முரசின்பயன்பாடு.

முன்னுரை:-

தமிழரின்  பண்பாட்டு அடையாளமாக விளங்கும் முரசு என்னும் இசைக்கருவி போரிலே பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப் பெற்ற தோல்கருவிகளில் ஒன்று. புறத்திணையின் வழி போர்முறைக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் தங்களின் போரெழுச்சிக்கு  உறுதுணையாக   சங்கு,  முரசு, பறை  போன்ற   இசைக்கருவிகளைப் பயன்படுத்தினர்.பண்டைய தமிழகவேந்தர்களின் புறஅடையாளமாகத் திகழும் முரசானது ஒலித்த பிறகு தான் மாற்றானோடு போரிடுவதற்காக போர்க்களத்தில் அணிவகுத்து நிற்கக்கூடிய நால்வகைப் படைகளும் போரிடத்துவங்கும்.போருக்குப் புறப்படுவதற்கு இரண்டுநாட்களுக்கு முன்பு வள்ளுவன் யானைமீது ஏறி முரசறைந்து தலைநகரத்தார்க்குத் தெரிவிப்பான். ஆண்மையின் சின்னமாகக் கருதப்படும் படைமுரசானது போருக்குப்புறப்படும் நாளன்று முழங்கும். இம்முழக்கத்தினைக் கேட்ட மறவர்கள் படைக் கருவிகளைக் கையில் தாங்கி, போருக்குரிய அடையாள பூவைச்சூடி, வெற்றித் தெய்வமாகிய கொற்றவைக்குப் பலியிட்டு போரில் வெற்றி பெறுவோம் என்று வஞ்சினம்கூறிபுறப்பட்டுச்  செல்வர். போர்முடித்து வெற்றியுடன் திரும்பும் நிலையிலும் இம்முரசானதுமுழங்கும்.

பகைவரோடுபோரிட்டுவெற்றியும்,புகழையும்தரவல்லபோர்முரசைவீரர்கள்சூழ்ந்துநின்றுவழிபடுவதுதமிழரின்மரபாகும். இதனைப் புறப்பொருள்வெண்பாமாலையும் எடுத்தியம்பியுள்ளது. பொன்னாலான உழிஞைமாலையைச்சூடியவீரர்கள்ஆட்டுக்குட்டியைவாரால்பிணித்துக்கட்டப்பட்டமுரசுக்குபலியிட்டனர்என்றசெய்தியை “முரசஉழிஞை” என்ற துறை மூலம் அறிய முடிகின்றது.

      “பொன்புனை உழிஞைசூடி மறியருந்தும்

      திண்பிணி முரச நிலை யுரைத் தன்று”

      (பொ.வெ.சோமசுந்தரனார் (வி) 2000: பு.வெ.மாலைப-103)

போருக்குமுன்னறிவிப்பாக விளங்குவதோடு வீரர்களுக்கு ஆற்றலை அளித்து உற்சாகமூட்டும் தமிழரின்பண்பாட்டு அடையாளக்   கருவியாக

விளங்குகின்றது.

அறிவிப்புக்கருவியானமுரசின்புறவடிவம்:-

      அறிவிப்புக்கருவியானமுரசின்புறவடிவமானதுகாளையின்தோல், எருதின்தோல், காவல்மரம்ஆகியவற்றால்அமைக்கப்பட்டுள்ளன.

காளையின்தோல்:-

வேந்தனின்தோல்வியையும்வெற்றியையும்இவ்வுலகிற்குபறைசாற்றும்முரசானதுகொல்லும்தன்மைஉடையகாளையின்மயிர்நீக்கப்படாததோலால்செய்யப்பட்டதாகஎன்றாலும்இம்முரசுஒலித்தபிறகுதான்பகைவேந்தனோடுபோர்செய்தனர்.

      “கொல் ஏற்றுப் பைந் தோல் சீவாது போர்த்த

      மாக் கண் முரசம் ஓவு இல கறங்க”

(ஞா.மாணிக்கவாசகன் (தொ):2016 மதுரைக்காஞ்சிபா.அடிகள் 732,733)

என்னும்பாடல்வரிகளும்,

“வெம்மைவாய்ந்தபுலியைவீறுடன்தாக்கிக்கொம்பினால்பீறிக்கொன்றபெருங்காளையின்தோலாற்செய்யப்படுவதேவீரமுரசு”

(ரா.பி.சேதுப்பிள்ளை (ஆ):2009: தமிழர்வீரம்: பக்-19,20)

என்னும் கூற்றின் வழியும் முரசானது வீரத்தோடு தொடர்புடையது என்பதைஅறியமுடிகின்றது.போர்க்காலங்களில்இம்முரசின்ஒலியைக்கேட்டபின்புதான்போர்மூளும்.அத்தகுவீரத்தோடுதொடர்புடையமுரசைவலிமைமிக்கபுலியைக்கொன்றதிண்மைப்பொருந்தியகாளையின்தோலால் செய்யப்பட்ட நிலையில் வீரத்தின் அடையாளம் அதனோடு தொடர்புறுகின்றது எனஅறியலாம்.

எருதின்தோல்:

வலிமையுடைய இருஎருதுகள் மோத அவற்றில் வெற்றிபெற்ற எருதின்தோலால் ஆக்கப்பட்ட முரசானது முழங்கின பிறகுதான் போர்க்களத்தில் போர்கள்  நடைபெறும் என்பதை கீழ்க்காணும் பாடல் வரிகள் உணாத்துகிறது.

      “அண்ணல் நல்ஏறு இரண்டு உடன் மடுத்து

              வென்றதன் பச்சை சீவாது போர்த்த

       திண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க”

(ஞா.மாணிக்கவாசகன் (உ.ஆ):2016: புறநானூறுபா.எண் -288)

      எருதின் தோலால் செய்யப்பட்ட வீரமுரசின் சத்தத்தைக் கேட்டவுடனே யானைப்படையோடு சென்ற பல்யானை செல்கெழுகுட்டுவன் மாற்றானோடு போரிட்டு போரில் வெற்றிபெற்றான்.

என்பதை, 

      “போர்ப்பு உறு முரசம் கறங்க ஆர்ப்பச் சிறந்து”

(ஞா.மாணிக்கவாசகன் (உ.ஆ): 2016: பதிற்றுப்பத்து: பா.எண்.-21)

என்ற பாடல் வரிகள் உணர்த்துகின்றன.

காவல்மரம்:

இமயவரம்பன்நெடுஞ்சேரலாதன் புடைசூழ நின்ற மறவர்களை அழித்து,    கடம்பர்கள் வணங்கும் காவல் தெய்வமான கடம்பமரத்தை அடியோடு வெட்டி வெற்றி முழக்கமிடும் வீரமுரசினை அமைத்துக் கொண்டான்.

      “பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங் கடம்பின்

      கடியுடைமுழு முதல் துமிய ஏஎய்

      வென்று எறி முழங்கு பணை செய்த வெல்போர்”

(ஞா.மாணிக்கவாசகன் (உ.ஆ):2016: பதிற்றுப்பத்துபா.எண்-11)

எனும் பதிற்றுப்பத்து பாடல்வரிகள்  எடுத்துரைக்கின்றது.

வேப்பமரம்:

    மாற்றனோடு போரிட்டு போரில் வெற்றிக்கனியைப் பறிப்பதற்கு, வீர உணர்ச்சியைத் தட்டி எழுப்பிபோரிடச்செய்வதுமுரசின்தொழிலாகும். இவ்வாறுபோர்த்தொழில்புரியும்இம்முரசுகடம்பமரத்தாலும், எருதின் தோலாலும் மட்டுமல்லாமல் வேப்பமரத்தாலும் அமைக்கப்பட்டுள்ளது என்பதைகாணமுடிகின்றது.

“………. அவன் வேம்பு முதல் தடிந்து

முரசு செய முரச்சி, களிறு பல பூட்டி

ஒழுகை உய்த்தோய்!”

(ஞா.மாணிக்கவாசகன் (உ.ஆ) 2016: பதிற்றுப்பத்து: பா.எண்.-44)

மோகூர்மன்னன் நன்னனின் காவல்மரமான வேப்பமரத்தை அடியோடுவெட்டி அதை சிறுசிறுதுண்டுகளாக்கி முரசுஅமைக்கவேண்டும் என்பதற்காகவே யானைபூட்டிய வண்டியின் உதவியோடு கொண்டு வந்தவன் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்னும் செய்தியின் வழி வேப்பமரமும் முரசினைஉருவாக்கப் பயன்பட்டுள்ளதுஎன்பதை அறியமுடிகின்றது.

      முரசின்செயல்பற்றியும், அதன் சிறப்புபற்றியும் செம்மொழிநூல்கள் எடுத்துக்கூறியுள்ளன. அதாவது முரசானது போர்த்தொடங்குவதற்கு முன்பு ஒலிக்கப்படும். நாடாளும் வேந்தன்பகைவேந்தனோடுபோர்த்தொடுக்கப்பயணிக்கிறான்என்றசெய்தியைநாட்டுமக்களுக்குமுரசறிந்துஅறிவிப்பர். இவ்வாறு ஒரு அறிவிப்புக் கருவியாகப் பயன்படும் முரசின் வலிமைவாய்ந்த எருதின்தோலால்ஆக்கப்பட்டுள்ளதுஎன்பதைபுறநானூறு,பதிற்றுப்பத்துபோன்றநூல்களுமமணிமேகலைகாப்பியமும்எடுத்துரைத்துள்ளன..

      முரசானதுவெற்றிகொண்டஆண்சிங்கத்தின்தோலால்மூடப்பட்டதும்,   உரும் போன்று முழக்கத்தைக் கொண்டதும், எமனை அறைகூவி அழைப்பது போன்று குருதிக்கரைபடிந்த விருப்பமுடையதுமான வீரமுரசைக் குருந்தடிகொண்டு, நகரில் நடைபெறக்கூடிய விழாவினைஅறிவிப்பதற்கு, யானையின் எருதின்மேல் ஏற்றிவைத்தான் முரசறிவிப்போன். முரசானது போரை அறிவிக்கும் தொழிலைமட்டும் செய்யாமல் நாட்டில் நடைபெறும் விழா செய்தியையும் அறிவிக்கின்றது.

      “………… மணம்கெழுமுரசம்

      கச்சையானைப் பிடர்த்தலை ஏற்றி

      ஏற்றுஉரி போர்த்த இடிஉறு முழக்கின்

      கூற்றுக்கண் விளிக்கும், குருதி வேட்கை

      முரசு கடிப்பு இடூஉம் முதுகுடிப் பிறந்தோன்”

(துரைதண்டபாணி (உ.ஆ)2016: மணிமேகலை: விழாவறைகாதைபா.வ.28-32)

போர்அறத்தில்முரசின்பங்கு:

ற்றறிதல்:

      பகைவர் நாட்டில் நடக்கும் செய்திகளை ஒற்றர்கள் மூலம் அவ்வப்போது   தெரிந்துகொள்வது அரசனின் தொழில்மட்டுமல்ல அதுவேஅவனுடையகண்களாகவும்கருதப்படுகிறது.

            “ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்

            தெற்றென்க மன்னவன் கண்”

      (மு.வரதராசன் (உ.ஆ):2014: திருக்குறள்: கு.எ -581)

என்ற ஐயனின் திருக்குறள் உணர்த்துகின்றது.

உளவறியக் கூடிய ஒற்றர்களின் கடமையுணர்ச்சியை திருக்குறள்.

            “கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்

            உகாஅமை வல்லதே ஒற்று”

      (மு.வரதராசன் (உ.ஆ): 2014: திருக்குறள்: கு.எ.585)

என்றுஎடுத்துரைத்துள்ளது.

பகையரசர்களோடுபோர்தொடுப்பதற்குமுன்புஅரசன்பகையரசர்களின்நாட்டில்நடக்கும்நிகழ்வுகளைதமதுஒற்றர்கள்மூலம்அறிந்துகொண்டுபிறகுபோர்தொடுத்துச்செல்வான்.ஒற்றர்கள்யாருக்கும்தெரியாமல்பகைவர்நாட்டில்உலாவித்திரிந்துதன்உயிரைப்பொருட்படுத்தாதுஅங்குநடக்கும்நிகழ்வுகளைத்தெரிந்துகொண்டுதம்நாட்டுமன்னனுக்குத்தெரிவிப்பதுவழக்கம். ஒற்றறியும் திறம்வாய்ந்த ஒற்றர்கள் வஞ்சிமாநகரில் மன்னனுக்கு செய்திகொண்டு செல்வதை சிலப்பதிகாரம்குறிப்பிடுகிறது. வேந்தன் சேரன்செங்குட்டுவனுக்கு எவ்விதஆபத்தும் நேரிடாது என்பதை அறிந்துகொண்ட பிறகு மன்னன் வடதிசை நோக்கிபடையெடுத்துச் செல்கிறான் என்னும் செய்தியை தம்நாட்டு மக்களுக்கு முரசறிவித்து தெரிவியுங்கள் என்று அமைச்சர்களுள் ஒருவரான அழும்பில் வேள் குறிப்பிடுவது போர்அறத்தின் வழியே பண்டைதமிழக வேந்தர்கள் படைநடத்திச் சென்று வெற்றி பெற்றுள்ளனர் என்பதோடு தாம் மேற்கொள்ள இருக்கும் போரை முரசறிவித்து பின்னர்தான் மேற்கொள்வர் என்பதையும்,

            “நாவலம் தண் பொழில் நண்ணார் ஒற்றுநம்

            காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா

            வம்பணி யானை வேந்தர் ஒற்றே

            தம் செவிப் படுக்கும் தகைமைய அன்றோ

            அறைபறை என்றே அழும்பில் வேள் உரைப்ப”

 (ஞா.மாணிக்கவாசகன் (உ.ஆ):2016: சிலப்பதிகாரம், காட்சிக்காதைபா.அடி173-177)

என்னும்சிலப்பதிகாரவரிகள்சுட்டுகின்றன.

முன்னறிவிப்பு செய்தல்:

      அன்றையகால கட்டத்தில் நாட்டில் என்ன நிகழ்வு நிகழ்ந்தாலும் அதைமக்களுக்கு அறிவிக்கும் பொருட்டு முரசறைந்து வெளிப்படுத்திஉள்ளனர். இன்றையகாலத்திலும் கிராமங்களில் பறைஅடித்து மக்களுக்கு செய்திகளை தெரிவிக்கின்ற நிலையையும் காணமுடிகின்றது.அவ்வாறே சேரன்செங்குட்டுவன் இமயமலையிலிருந்து  கற்புக்கரசியான கண்ணகிக்குச் சிலை செய்ய கல்    எடுப்பதற்காக செல்லும் பொழுது வடதிசையில் உள்ள மன்னர்களே எம் அரசனோடு போரிடத் துணியாமல் அவருக்கு கப்பமாக திறைப்பொருளை செலுத்தி தாங்கள் பணிந்து நடந்துகொள்ளவில்லை என்றால் தோல்வியைத் தழுவீர்கள். கடல் நடுவே உள்ள பகைவர்களின் கடம்பமரத்தை அழித்தவனும் இமயமலையில் விற்கொடியைப் பொறித்தவனும் எம்வேந்தன் என்று முரசறிவிப்போம். யானையின் பிடரின் மேல் முரசை ஏற்றிதானும் அமர்ந்து நகரமெங்கும் உள்ள வீதிகளில் முரசறிவித்து கூறுவதை,

            “வில் தலைக் கொண்ட வி யன்பேர் இமயத்து ஓர்

            கற்கொண்டு பெயரும் எம் காவலன் ஆதலின்

            வடதிசை மருங்கின் மன்னர் எல்லாம்

            இடு திறை கொடுவந்து எதிரீர் ஆயின்”

                         கடற்கடம்பு எறிந்த கடும்போர் வார்த்தையும்

                         விடாச் சிலை பொறித்த வியன் பெரு வார்த்தையும்

                        கேட்டு வாழுமின் கேளீர் ஆயின்”

                            ……………………….

                         இறை இகல் யானை எருத்தத்து ஏற்றி

         அறைபறை எழுந்ததால் அணிநகர் மருங்கு என”

(ஞா.மாணிக்கவாசகன் (தொ)2016. சிலப்பதிகாரம்: காட்சிக்காதைபா.அடி 183-189, 193-195)

என்னும்சிலப்பதிகாரவரிகள்எடுத்துரைக்கின்றன.

போரற்ற நிலையில் முரசின்பயன்பாடு:-

விழாமுரசு:

      கிராமங்களில் நடைபெறும் விழாக்களில் மத்தள ஓசை, பறைஓசை எழுந்தனவாக இருப்பது போல பூம்புகார்பட்டினத்தில் உள்ள அங்காடி வீதிகளில் எப்போதும் முழவு ஓசையோடு முரசின் ஓசையும் ஒலித்த வண்ணமாகவே இருக்கும் என்பதை

            “முழவதிர முரசியம்ப”

(ஞா.மாணிக்கவாசன்(தொ):2016:பட்டினப்பாலை,புறநானூறு,பா.எ.157)

என்னும் பட்டினப்பாலை வரிகள் குறிப்பிடுகின்றது.

இவ்வகை முரசானது  “விழாமுரசு” எனவும் சுட்டுவதற்குரியது.

மங்கலமுரசு:

      முரசுகளில் போர்முரசு, வெற்றிமுரசு, விழாமுரசு என்றிருப்பது போல மங்கலமுரசும் ஒன்று உள்ளது. இம்முரசுசோழன் நலங்கிள்ளி அரண்மனை முற்றத்தில் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

            “முனிவில் முற்றத்து இனிது முரசு இயம்ப”

(ஞா.மாணிக்கவாசன் (உ.ஆ):2005:புறநானூறு,பா.எ.29)

அறிவிப்புக்கருவி:

      பண்டைத் தமிழகமக்கள் பொழுதுபுலர்வதை வானத்தில் தோன்றும் கோள்களைக் கொண்டும் சேவல்கூவுதலைக் கொண்டும் அறிந்துகொள்வது வழக்கம். ஆனால் நாடாளும் வேந்தர்களுடைய வெற்றியையும்,   வீரத்தையும் குறிக்கும் முரசானது பொழுதுபுலரக் கூடியகாலை நேரத்தை அறிவிக்கும் பள்ளி எழுச்சி முரசாகவும் அமைந்துள்ளது.

            “இமிழ் முரசு இரங்க ஏறு மாறு சிலைப்ப”

      (ஞா.மாணிக்கவாசகன் (தொ) 2016: மதுரைக்காஞ்சிபா.அடி.272)

      இரவுப்பொழுது நீங்கி பகல்பொழுது வருவதை அறிவிக்கும் விதமாக குயில்கூவும் சூரியன் ஒளிறுவான், மொட்டுகள்மலரும், வெண்ணிலாவின்ஒளிமறையும்.ஆனால் இவை மட்டுமன்றி, போர் நடைபெறுவதற்கு முன்னமே முழங்கக் கூடிய முரசும், வலம்புரிச் சங்கும் காலைப்பொழுது வருவதை அறிவிக்கும் விதமாக முழங்கின.

            “இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப”

      (ஞா.மாணிக்கவாசகன் (உ.ஆ):2005: புறநானூறு: பா.எ-397)

     

போரின் தொடக்கமே போர்அறம் :

      பழந்தமிழக வேந்தர்களின் புறஅடையாளச் சின்னமான முரசானது முழங்கினபிறகு தான் போரானது நடைபெறும். இதுவே அறமாக இருந்துள்ளது .

                         மலையமான் திருமுடிக்காரி, கூர்மையான பல்லுடைய நாகப்பாம்பு அஞ்சிநடுங்கும்படி இடி ஓசை போன்று முரசானது முழங்கியவுடனே அவன் தம் யானைப்படையோடு போர்க்களத்தை நோக்கிச்சென்று, பகைவர்களோடு போரிட்டு அவர்களது படையைக் கொன்றழித்தான்.

            “அரவு எறி உருமின்  முரசு எழுந்து இயம்ப”

      (ஞா. மாணிக்கவாசன் (உ.ஆ): 2005: புறநானூறு,பா.எ – 126)

என்ற பாடல் அடியானது, பழந்தமிழகத்தில் நடைபெற்ற போரானது முரசுஒலி கேட்டபிறகு தான் நடைபெற்றது  என்ற செய்தியை அறியமுடிகின்றது.

      கடையெழுவள்ளல்களில் ஒருவன் அதியமான். அவனுக்கும் திருக்கோவிலூரை ஆட்சிபுரிந்த வேந்தனுக்கும் பகைமைஏற்பட்டது. அதன்பொருட்டு அவனோடு போரிடத் துணிந்தான். தமிழக வேந்தர்கள் மேற்கொள்ளும் போர்அறநெறிப்படி முரசுஒலித்தவுடனே பெரும்படையைக் கொண்ட ஏழரசர்களுடனும் போரிட்டு வெற்றியைத் தன்னகத்தே கொண்ட பெருமைக்குரியவன் அதியமான்.என்பதை,

            “ இமிழ்குரல் முரசின் எழுவரோடு முரணிச்

                              சென்று அமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய”

      (ஞா.மாணிக்கவாசகன் (உ.ஆ) 2005: புறநானூறு, பா.எ-99)

என்னும்பாடல்வரிகள்தெரிவிக்கின்றன.

            “உரும் உரற் றன்ன உட்குவரு முரசமொடு”

       (ஞா.மாணிக்கவாசன் (உ.ஆ) 2005: புறநானூறு,பா.எ – 197)

என்ற பாடல் வரியும் புலப்படுத்துகிறது.

முடிவுரை:

முரசானது வேந்தர்களின் போர்வாழ்வில் எவ்வாறு சிறப்பிடம் பெற்றறுள்ளன என்பது சுட்டப்பட்டுள்ளன. போர்முரசாக மட்டும்அல்லாமல் அறிவிப்புக் கருவியாகவும் அமைந்துள்ளன. முரசின் புறவடிவம் காளை, எருது, காவல்மரம் போன்றவற்றால் அமைக்கப்பட்டுள்ளன போன்ற செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. முரசின்ஒலி எவ்வகையில் வீரர்களுக்கு வீரஉணர்ச்சியை உண்டாக்கின என்ற செய்தி இடம்பெற்றுள்ளது. போர்தொடக்கம், முடிவு, போர்தொடங்குவதற்கு முன்பு என்னென்ன செயல்பாடுகள் நிகழப்பெறும் ஆகியவை கூறப்பட்டுள்ளன. முரசானது போர்நடைபெறும் காலங்களில் மற்றும் போரில்லாக்காலங்கள் அதன்செயல்பாடு எத்தன்மை உடையதாக விளங்கும் போன்ற செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. முரசானது பண்டைத் தமிழகவேந்தர்களை அடையாளப்படுத்தும் புறசின்னம்.

துணைநூற்பட்டியல்

  1. மாணிக்கவாசகன்.ஞா(உ.ஆ)., பதிற்றுப்பத்து, உமாபதிப்பகம், சென்னை. 2016

2.மாணிக்கவாசகன்.ஞா(உ.ஆ)., பத்துப்பாட்டு, உமாபதிப்பகம், சென்னை. 2016.

3.மாணிகக்கவாசகன்.ஞா(உ.ஆ)., புறநானூறு, உமாபதிப்பகம், சென்னை. 2005.

4.மாணிக்கவாசகன்.ஞா(உ..ஆ)., சிலப்பதிகாரம், உமாபதிப்பகம், சென்னை. 2016

5.சேதுப்பிள்ளை.ரா.பி. தமிழர்வீரம், தமிழ்நிலையம், சென்னை. 2009

6.சோமசுந்தரனார்.பொ.வே., புறப்பொருள்வெண்பாமாலை, திருநெல்வேலி, தென்னிந்தியசைவசித்தாந்தநூற்பதிப்புக்கழகம், சென்னை. 2000

7.வரதராசன்.மு.வ., திருக்குறள், கழகவெளியீடு, சென்னை. 2014.