ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

நான் கண்ட கவிக்கோ என்ற போதிமரம் (I Saw a Bodhi Tree Called Kaviko)

ஆய்வாளர்.ம.ராகவன், முனைவர் பட்ட ஆய்வாளர், அகராதியியல் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம் 16 Feb 2023 Read Full PDF

நான் கண்ட கவிக்கோ என்ற போதிமரம் (I Saw a Bodhi Tree Called Kaviko)

ஆய்வாளர்.ம.ராகவன், முனைவர் பட்ட ஆய்வாளர், அகராதியியல் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம்

நெறியாளர்: முனைவர் சி.வீரமணி இணைப்பேராசிரியர் அகராதியியல் துறை
தமிழ்ப்பல்கலைக்கழகம் 

ஆய்வுச்சுருக்கம்:
    “போதி மரம்”; என்பது ஞானத்தின் குறியீடு ஆகும். போதி மரத்தின் நிழலில் இருந்து புத்தர் ஞானம் பெற்றார் என்பது வரலாறு. அப்படிப்பட்ட ஞானம் பெறுவதற்கு போதிமரமாய் போதித்து வாழ்ந்து வாழ்க்கை என்கிற ஞானத்தை சுவாசிப்பவர்களுக்கு வள்ளலாக விளங்கியவர். காலத்தால் அழியாது கற்பவர் உள்ளம் தூய்மையடைகின்ற வகையில் தமது கவிதையின் வரிகளில் படைத்து இயற்கையின் பேரழகை உணரச்செய்தவர். இவர் பேராசானாக தவறுகளைச் சுட்டிக்காட்டும் நீதிதேவனாக சொற்களைக் கொண்டு சித்திரம் வரைந்தவரும் வார்த்தைகளால் வையத்தை வார்த்தவர் ஆவார். வாழ்வின் இரகசியங்களைப் போதித்தவரின் கவிதை வரிகளை நினைவு கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Purpose:

          “ Bodhi tree” is the symbol of wisdom.

          History  is that Budha attained enlightenment  from the  shade of the Bodhi Tree. To attain such enlightenment he taught and lived as a Bodhi tree and become a refuge for those who breathe the wisdom of life. The purpose of this article is to recall the poetic lines of the one who drew pictures with words and taught the secrets of life.

திறவுச் சொற்கள்: ஞானத்தமிழ், போதிமரம், சீட்டு விளையாட்டு, நீர்குமிழி,  பேராயுதம்        

முன்னுரை:
    இயற்கை தன் படைப்புகளின் வாயிலாகத் தன்னை இவ்வுலகில் நிலைப்படுத்தி தன் இரகசியங்களை வெளிப்படுத்தும். அது போல தனக்கென புதியத் தடத்தினை அமைத்து கவிதைகளையும் கட்டுரைகளையும் படைத்துவந்தவர் கவிஞர் அப்துல்ரகுமான். சொற்களால் சித்திரங்கள் வரைவதில் சொற்கட்டு மிக்கவர் அவர் தொட்டு எழுதாதப் பொருள்களே இல்லை. அவர் மனித மானம் காக்கும் நிறைகுடமாய் புதுக்கவிதைகளில் புதுநெறிப்படைத்தவர்.
    அவருடைய கவிதைகள் கட்டுரை நூல்கள் சுவையான கனிகளைப் பிழிந்தெடுத்த சாறுபோலும் நறுமலர்கள் வெளிப்படுத்தும் அழகைப்போல கண்களுக்கு விருந்தாகும் ஓவியத்தமிழ் அறிவைப்பரப்பும் ஞானத்தமிழ் ஆகும். இத்தகைய கவிதைகள் கட்டுரைகளில் வெளிப்படும் வாழ்வியலின் தத்துவங்களை கற்பவர்களின் உள்ளத்தில் பதியச்செய்து நெறிப்படுத்தும் போதிமரமாக உள்ளது. 
அர்த்தம் வேறுபடும் வாழ்க்கை
    நெறிமுறை என்பது ஒன்றுதான். ஆனால் மனித வாழ்க்கையில் நெறிமுறை என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும் தன்மையாக அமைந்துள்ளது. அதாவது மனிதருக்கு மனிதரும் விலங்குகளுக்கு விலங்குகளும; வாழ்க்கை நெறிமுறைகள் மாறுபடும் நிலையில் இருந்து வருகின்றன அதனை கவிஞர் அப்துல் ரகுமான்

        வாழ்க்கை என்பது
        அதிசயக் கவிதை
        உனக்கோர் அர்த்தம்
        எனக்கோர் அர்த்தம்1
என்கிறார்.
    வாழ்க்கையை கவிஞர் ஓர் கவிதை எனக் கூறாமல் “அதிசயக்”; கவிதை என்கிறார். “அதிசமயம்”; என்பது ஆச்சரியம் நிறைந்த அறிவின்  மூலம் அறியப்பட இயலாத்தைக் கூறுவதைப்போல் இந்த வாழ்க்கையை அதிசயக் கவிதை என்று கூறுகிறார்.
    வாழ்க்கை அனைவருக்கும் ஒன்றுபோல் இருப்பதில்லை. அவரவர் புரிதலுக்கு ஏற்ப மாறுபடுகிறது என்றும் வானில் கலைந்துச் செல்லும் மேகங்களில் தெரியும் உருவங்கள் அவரவர் பார்வைக்கு ஏற்றார்போல் வெவ்வேறாகத் தெரிவதுபோல் இந்த வாழ்வும்  அவரவர் பார்வைகளுக்கு ஏற்ப அர்த்தம்  உடையதாக அமைந்துள்ளது என்கிறார்.
நிலையில்லாத வாழ்க்கை
    பொதுவாக வாழ்க்கை நிலையற்றது. இதில் நாம் நிலைத்திருக்க வேண்டுமானால் மனித சமூகத்தின்  மேம்பட்ட கருத்து விழுமியங்களை கொண்டவராகவும் சான்றோர் போற்றக்கூடியவராகவும் விளங்கிட வேண்டும். அப்போதுதான் நாம் இறந்த பின்னும் சமூகத்தினரால் நாம் வாழ்ந்து கொண்டிருப்போம். என்ற கருத்தமைந்த கவிதை
        வாழ்க்கை 
        மரணவேடன் விரித்த
        அழகான வலை
        நாம்
        அதில் அகப்பட்ட பறவைகள்2
ஆகும்.
    இந்த வாழ்க்கை என்பது அவரவர்களின் புரிதலுக்கு ஏற்ப அர்த்தம் உடையது என்று கூறியக் கவிஞர் அப்துல் ரகுமான் தம் கவிதை வரிகளின் மூலம் வாழ்வு என்பது இப்புவியில் தோன்றிய அனைத்து உயிர்களும் மரணம் என்ற வலையில் பிறந்தது முதல் அகப்பட்ட பறவைகளானோம் என்றும் ஆகவே மரணம் என்பது இவ்வுலகில் உள்ள  அனைத்துயிர்களுக்கும் பொதுவானது எனவும் வாழ்வு நிலையில்லாதது எனவும் வெளிப்படுத்துகின்றார்.
வாழ்க்கை ஒரு சீட்டு விளையாட்டு
    சீட்டு விளையாட்டு என்பது சூதின் குறியீடாகும். அதாவது சூது நிறைந்த இவ்வுலகில் பொய் களவு வஞ்சகம் இவற்றை அறிவின் துணைகொண்டு எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்து காட்டுவதே வாழ்க்கை.
    சீட்டு விளையாட்டில் ஒருவன் தனக்கு வரும் சீட்டுகளை அறிவு நுட்பத்தால் வரிசைப்படுத்தி ஆட்டத்தில் வெற்றி கொள்வதைப்போல் வாழ்க்கையிலும்  தனது நுண்ணறிவு திறனால் ஆய்ந்து செயல்பட்டு வெற்றிபெறுவார். இதனை
        வாழ்க்கை என்பது
        சீட்டு விளையாட்டு
        வருகின்ற  சீட்டுகளை
        வைத்துதான்
        விளையாட வேண்டும்3
என்கிறார்.
    இந்த வாழ்வானது நீயோ நானோ தீர்மானிக்க இயலாத ஒன்றாகும். அதாவது திசைமாறி வீசும் காற்றைப்போல பருவம் தவறி பெய்யும் மழையைப்போல தீர்மானம் செய்ய இயலாததாக அமைந்தாலும; நமக்கு ஏற்படுகின்ற சூழ்நிலைக்கு ஏற்ப வாழத் தன்னை தகவமைத்துக் கொள்வதே இப்புவியில் நிலைத்து நிற்க முடியும் என்கிறார் கவிஞர்.

உயிர்கள் பற்றி டார்வின்
    18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரிட்டன் இயற்கை ஆர்வளர் சார்லஸ் டார்வின். 1859-ம் ஆண்டு உயிரினங்களின் தோற்றம் பற்றி மக்கள் அரிந்து கொள்வதற்கு தனது  புத்தகத்தை வெளியிட்டார். இந்த ஆய்வின் பன்முகத்தன்மை கடவுளிடமிருந்து வந்ததல்ல. அறிவியலில் இருந்து வந்தது என விளக்கமளித்ததோடு ஆராய்ச்சி செய்வதற்கான வழியையும் வகுத்தவர் டார்வின் ஆவார். இவர் கூற்றாவது
    “எந்த இனம் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறதோ அந்த
    இனம் உலகில் உயிர் வாழும் என்றும் தன்னை மாற்றிக்கொள்ளாத
    இனம் அடுத்த சந்ததி இல்லாமல் மறையும்”
ஆகும்.
    இந்த அறிவியல் உண்மைகளை 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர் தான் இயற்றிய சிவபுராணத்தில்
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மராமாகிப்
    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாய்
    கல்லாய் மனிதராய்ப் பேயாக் கணங்களாய்
    வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லா அ நின்ற இத் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் 4
என்று குறிப்பிட்டுள்ளார்.
    இவ்வாறு அறிவியலில் இன்று ஆராய்ந்து கூறும் உண்மைகளை அன்றே மாணிக்கவாசகர்  கூறியிருப்பதைப்போல் கவிஞர் அப்துல் ரகுமான் தம் கவிதைகளில்…
        நீரில் தோன்றி நீந்தினேன்
        நிலத்தில் வளர்ந்தனன்
        பாரில் உளர்ந்து சென்றனன்
        பறவையாய் பறந்தனன்
        சீரிலாத மிருகமாய்த் 
        திரிங்கனன் திரிந்தியே
        நேசிலாத மனிதனாய்
        நிமிர்தினா யென் னேசனே5
எனக் கூறியுள்ளார்.
    அதாவது பிறப்பின்  இரகசியத்தை விடுவிக்கும்  பொருட்டு நீரில்தான் முதல் உயிரினம் தோன்றின என்ற டார்வின் கோட்பாட்டை கவிக்கோ நீந்தும் மீனாய் ஊர்ந்து செல்லும் உயிராய் பறக்கும் பறவையாய் மிருகமாய் பரிணாம வளர்ச்சி அடைந்து  இறுதியில் மனிதனாய் என்னை நிமிர்த்தியது இயற்கை என்ற பேராயுதம் என்று விளக்குகிறார்.
வாழ்க்கை என்பது மிகப்பெரிய அதிசயம்
    இந்த வாழ்வை கூர்ந்து கவனித்து ஆழ்ந்து சிந்தித்தால் வாழ்க்கை என்ற படைப்பு இரட்டைத்தன்மை உடையவனாக உள்ளது. அவை பிறப்பு - இறப்பு ஒலி - இருள் இன்பம்- துன்பம் இரவு – பகல் என்று அமைந்துள்ள வாழ்வு குறித்தும் புரியாத வாழ்வை புரியும்படி வாழ்;க்கை என்பது மிகப்பெரிய அதிசயம் என்ற தலைப்பில் கவிஞர்
        உலகத்தில்
        மிகப்பெரிய அதிசயம்
        வாழ்க்கை என்ன வென்றே
        தெரியாமல்
        நாம் வாழ்வதுதான் 6
என்று கூறுகின்றார். வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்து  மறையும்  உயிரினங்கள் தான் நாம் எனவும் இதுதான் வாழ்க்கையின் அதிசயம் என்று ஆராய்ந்து கூறியுள்ளார்.
வாழ்க்கை என்பது புரியாதப் புதிர்
    வாழ்க்கை என்பது புரியாதப் புதிர் சில நேரங்களில் அது புரியாமல் இருப்பதே நல்லது புரிந்துவிட்டால் துன்பம் நிறைந்ததாகதான் இருக்கும்.
    நாம் எந்த தாயின் கருவறையில் ஏன் எப்போது எப்படி பிறப்போம் என தெரியாமலே பிறந்தோம். அதைப்போலவே எப்போது எங்கே எப்படி மறிப்போம் என்பது அறிய இயலாமல்; அமைந்துள்ளது. இவை புரியாமல் இருப்பதனால் தான் இந்த இடைப்பட்ட நாளில் ஆனந்தமாக உற்சாகமாக வாழ்கிறோம். புரிந்தால் துயரம்தான் என்பதைக் கவிகோ
        புரியாமலேயே இருக்கட்டும்
        வாழ்க்கை
        புரிந்து விட்டால்
        சுவை இருக்காது7
எனக் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கை அறியாதவரை ஆனந்தமாகவும் சுவையாகவும் இருக்கும் என்று குறிப்பிடும் கவிஞர் நிலையில்லா வாழ்க்கைப்பற்றி
        காலையில் இருந்தவர்கள்
        மாலையில் இல்லையே
        மாலையி;ல் இருந்தவர்கள்
        காலையில் இல்லையே
        சாலையில் புறப்பட்டார்
        தடையம் ஏதும் இல்லையே
        சோலையில் மலர்ந்த பூவின்
        சுகந்தம் போல் மறைந்ததே8
என வகைப்படுத்தியுள்ளார். வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் நீண்ட பயணம் போல் தோன்றும். ஆனால் பிரபஞ்சத் தோற்றத்தை வைத்து கணக்கிட்டால் ஒவ்வொருவரின் வாழ்வின் காலம் ஒரு நீர்குமிழி தோன்றி மறைவதைப்போல் உள்ளது.
வினோதமான வாழ்க்கை
    வாழ்க்கையை நிலையில்லா வாழ்க்கை என்று கூறிய கவிஞர் இது ஒரு விளையாட்டு என்றும்  இந்த விளையாட்டை கண்ணாமூச்சி  விளையாட்டு என்கிறார். இக்கண்ணாமூச்சி விளையாட்டிற்கு குறைந்தது இரண்டுபேர் தேவை. ஒருவர் மறைந்திருக்க மற்றொருவர் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் இந்த வாழ்க்கையின் விளையாட்டில் மறைந்திருப்பதும் நாமே தேடுவதும் நாமே என்று தன்னை அறிதலே வாழ்வு என்கிறார் கவிஞர்
            வாழ்க்கை
            ஒரு வினோதமான
            கண்ணாமூச்சி
            ஒளிந்திருப்பதும் நாமே
            தேடுவதும் நாமே9
குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு வினோதமான வாழ்வு பற்றி விளக்குகிறார்.
வாழ்க்கை நமக்கு தரப்படும் அவகாசம்
    வாழ்க்கை என்பது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட  காலத்தின் அவகாசம் இவற்றில் அவரவர்களின் சூழல் அறிவு அனுபவம் போன்றவற்றைக் கொண்டு வாழ்ந்து போகிறார்கள் எனவே மனிதனாகப் பிறந்தவன் மனிதனாக வாழ்வதே பெறும் தவம் என்கிறார். அக்கவிதை
        மனிதவடிவில் பிறந்தவன்
        மனிதனாவதற்காகக்
        தரப்படும் அவகாசம்தான்
        வாழ்க்கை 10
என்பதாகும். இப்படி மனிதனாகப்பிறந்து மனிதவடிவில் மனிதனாவதற்கு தரப்படும் என வாழ்க்கையைச் சொல்லுவதோடு நின்றுவிடாமல் கவிஞர் குறிப்பிடுவனää

        வாழ்க்கை என்பதென்னவோ?
        வலியும் துயறும் இறப்புமோ?
        வாழ்க்கையின் இலச்சியம்
        மரணமோ? நியாயமோ?
        வாழ்க்கையின் இலச்சியம்
        மரணமாயின் வாழ்க்கை ஏன்?
        வாழ்க்கையின் ரகசியம்
        மகேசனே! உணர்த்துவாய்11
ஆகும். இப்படி படைத்தவனைப் பார்த்து கேட்கும் கேள்விகளாகும். இவ்வாறு கேள்வி கேட்கும் இறுதியில் வாழ்க்கை என்பதை
        அன்புதான் ஆண்டவன்
        அன்புதான் சமயமாம்
        அன்புதான் ப10சையாம்
        அன்புதான் புனிதமாம்
        அன்புதான் மானுடம்
        அன்புதான் வாழ்க்கையே12
;என்கிறார். ஒருவரின் வாழ்க்கையில் நின்று நிலைத்து மகிழ்ச்சியைத் தந்து அது தலைத்து எல்லோரிடத்திலும் நம்மை அடையாளப்படுத்துவது அன்பு ஒன்றுதான் என்று தம் கவிதைகளின் மூலம் தெளிவுபடுத்துகின்றார். 

தொகுப்புரை
    வாழ்க்கை என்பது கவிஞர் பார்வையில் ஒரு தூக்கமாகி கண்ணாமூட்சியாகி புரியாதப் புதிராகிää வினோதக் கனவாகி மரணவேடன் விரித்த வலையாகி சீட்டு விளையாட்டாகி அதிசயக்கவிதையாகி புரியாதப் பயணமாகித் தொடரும் இந்த வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்து அன்புதான் வாழ்க்கை என்று கூறி அன்பாக இருங்கள் ஆனந்தமான வாழ்வு நிலைப்படும் என்று கூறுகின்றார்.
முடிவுரை
    வாழ்வின் மிக உயர்ந்த குறிக்கோள் என்பது பிறர் துயர் துடைத்தல் ஆகும். பிறர் துயர் துடைக்க வேண்டுமாயின் அவன் புலனடக்கம் உள்ளவராக இருத்தல் அவசியம். அவ்வாறு புலனடக்கம் உள்ளவரிடம்  தன்னலம் இல்லாது  அனைத்து உயிர்களிடத்தும்  நேசக்கரம் நீட்டி அன்பை வெளிப்படுத்தி அருள் தன்மையோடு அனைத்தையும் சரிநிகர் சமமாக ஏற்றுக்கொள்வார். 
அடிக்குறிப்பு விளக்கம்
1. கவிக்கோ கவிதைகள் கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை ப-749
2. கவிக்கோ கவிதைகள் ரகசியப்பூ  ப-518
3. கவிக்கோ கவிதைகள் கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை ப- 753
4.மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் - சிவபுராணம் பா.வரி-26-31.
5. கவிக்கோ கவிதைகள் தேவகாணம் ப- 683.
6. கவிக்கோ கவிதைகள் கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை ப- 741
7. கவிக்கோ கவிதைகள் ரகசியப்ப10 ப- 560
8. கவிக்கோ கவிதைகள் தேவகாணம் ப- 648
9. கவிக்கோ கவிதைகள் ரகசியப்பூ ப- 541    
10. கவிக்கோ கவிதைகள் கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை ப- 736.
11. கவிக்கோ கவிதைகள் தேவகாணம் ப- 711
12. கவிக்கோ கவிதைகள் தேவகாணம் ப- 715