ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சைவ வாழ்வியலில் சிவாகமங்கள் கூறும் சிவதீட்ஷையின் வகிபங்கு (THE ROLL OF SAIVAGAMIC SIVADHIKSA IN SAIVA LIFE)

திருமதி.கவிதா கதிரமலை (முதுதத்துவமாணி), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை 27 Feb 2023 Read Full PDF

சைவ வாழ்வியலில் சிவாகமங்கள் கூறும் சிவதீட்ஷையின் வகிபங்கு (THE ROLL OF SAIVAGAMIC SIVADHIKSA IN SAIVA LIFE)

கட்டுரையாளர்: திருமதி.கவிதா கதிரமலை (முதுதத்துவமாணி), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை | Mrs.Kavitha Kathiramalai (M.Phil ), University of Jaffna, Sri Lanka

நெறியாளர்: கலாநிதி. பிரம்மஸ்ரீ ம.பாலகைலாசநாதசர்மா, துறைத்தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர், சமஸ்கிருதத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.                                                                               

ஆய்வுச்சுருக்கம் - Abstract

'சைவம் என்பது சிவனை முழுமுதற்கடவுளாக போற்றப்படும் சமயமாகும்.' சைவம் சிவசம்பந்தமானது அப்பால் இயற்கையோடு இணைந்த தெய்வீக சக்தியையும் வளங்களையும் கொண்டு நித்தியமானது. காலத்தின் மிகத்தொன்மை என்பது காலந்தோறும் அறிஞர்களாலும் ஞானிகளாலும் சமயப்பெரியார்களாலும் போற்றப்பட்டு வருகின்றது. சைவம் 'மேன்மைகொள் சைவநெறி' என்ற உயர்ந்த விளக்கத்தைத் தருகின்றது.1

                              'இந்த சரீரம் நமக்குக் கிடைத்தது நாம்

கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம்'

ஈழத்து சைவமறுமலர்ச்சிக்கு வித்திட்டவராகிய நல்லைநகர் ஆறுமுகநாவலர் சைவவாழ்வை மேம்பாடு அடையச் செய்தார்.2

'அரிது அரிது  மானிடராதல் அரிது'

பிறவிகளிலே சிறந்த பிறவி மானிடப்பிறவி தலையாயது என்கிறார் ஒளவையார். அதேபோல் நாவுக்கரசரும் 'மனிதப்பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே' என்று கூறியுள்ளார். மனித வாழ்வின் இறுதி இலட்சியம் எல்லாம் வல்ல பரம்பொருளின் இணையடி சாரலே. சுழலும் சக்கரமாகிய வாழ்க்கையில் மனிதர் ஒவ்வொருவரும் தத்தமது  இலட்சியத்தை அடைய வேண்டும். நல்வாழ்வு வாழ வையத்துள்  வாழ்வாங்கு வாழ, மண்ணில் நல்ல வண்ணம் வாழ, சைவசமயம் வழிகாட்டுகின்றது. மனிதன் மனிதனாக வாழ்வதற்கு சிறந்த விழுமியப்பண்புகளைக் கொண்டு வாழவேண்டும். அவ்விழுமியப் பண்புகளில் ஒன்றாக சைவ ஆசார அனுஷ்டானங்களும் விளங்குகின்றன. ஆசார அனுஷ்டானங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் நிறைந்த பூரணத்துவம் கொடுப்பதாகும். ஆசார முறைகள் சைவசமயத்தில் முதன்மை பெறுகின்றது. அதை நல்லமுறையில் பேணிக்காப்பது சைவர்களின் முக்கிய கடமையாகும்.3 ஆய்வு என்பது மெய்மையினைக் கண்டறியும் புலமைப்பயிற்சியாகின்றது. அவ்வகையில்  சிவாகமங்களின் கிரியாபாதமே சிவதீட்ஷை பற்றி எடுத்தியம்புகின்றன. ஆகமங்களில் காமிகாகமம், அஜிதாகமம், வாதுளாகமம், மிருகேந்திர ஆகமம், காரணாகமம் போன்ற  மூலாகமங்களும் பத்ததி நூல்களாக அகோரசிவாச்சாரியாரின், சோமசம்பு பத்ததி போன்ற நூல்களும்  சிவதீட்ஷை பற்றி விரித்துரைக்கின்றன.4

தீட்ஷை என்பது எல்லா சமயங்களாலும் எடுத்தாளப்படும் முக்கிய சடங்காகவும், முக்திக்கான  மார்க்கமாகவும் உள்ளது. இச் சைவ மெய்யியல்களும் இதற்கு விதிவிலக்கல்ல தீட்ஷா குருவால் ஸாதகனுக்கு அல்லது சீடனுக்கு தவத்தையும், ஞானத்தையும் அளிக்கும் முறையாகத் தீட்ஷை எடுத்தாளப்படுகின்றது. இது அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞ்ஞானத்தைத் தருவது எனப் பொருள் கொள்ளப்படுகின்றது. சைவசமயத்தில் ஒருவர் பிறந்துவிட்டால் மாத்திரம் அவர் சைவராகிவிட முடியாது. தமது வாழ்வில் சைவ ஆசாரங்கள் சைவ ஒழுக்கங்களைக் கடைப்பிடிப்பவரே உண்மைச் சைவராவர் சிவநெறி நிற்கும் சைவர்களுக்கு உரிய சிவசின்னங்கள் வீபூதி, உருத்திராக்கம், சிவபஞ்சாட்சரம் என்பனவாகும். இச் சிவசின்னங்கள் சிவபெருமானைக் குறித்து நிற்பன சைவமக்களால் இவை அணியப்பெற்றும், துதிக்கப்பெற்றும் வருபவை. எனவே இச்சிவசின்னங்கள் அணிவதற்கும், துதிப்பதற்கும் முதலில் சைவராய்ப் பிறந்தோர் அனைவரும் சிவாகம முறைப்படி தீட்ஷை பெற்றுக்கொள்ள வேண்டும்.5

திறவுச்சொற்கள் :- தீட்ஷை, சிவாகமம், தோத்திர நூல்கள், பத்ததி, கிரியாக்ரமஜோதி

Keywords : Diksa, Saivagamic, strotram, Paddhatis, Kriyakramajothy

அறிமுகம் - Introduction

இலங்கையில் சைவர்களில் பெரும்பாலானோர் தீட்ஷை பெறுகின்றனர். ஆரம்பகாலங்களில் வாழ்ந்த பெரியார்கள் அதற்கு வழிகாட்டியாக இருந்துள்ளனர். உதாரணமாக ஆறுமுகநாவலரைக் குறிப்பிடலாம். இவர் தனது சொற்பொழிவுகளிலும், பிரசங்கங்களிலும், துண்டுப்பிரசுரங்களிலும் சைவசமயத்தவர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்று கூறியுள்ளார். 'சைவசமயத்தவர்கள் ஒவ்வொரு வரும் உண்மைச் சைவராக வாழ வேண்டும். அசைவ உணவு முதலான மாமிசம் புசிக்கக்கூடாது. மது அருந்தக்கூடாது. நெற்றியில் திருநீறணிந்து சிவசின்னங்களுடன் திகழவேண்டும். என்றும் தனது பிரசங்கத்தில் கூறியுள்ளார். சைவசமயத்தின் தொன்மை, கடவுள் வடிவங்களின் தத்துவக் கருத்துக்கள் சிவசின்னங்களின் மகிமை, சைவசமயத்தவரின் ஒழுக்கவிதிகள் இம்மை மறுமைப் பயன்கள், தீட்ஷையின் புனிதம் சிறப்புத்தன்மை போன்றன முக்கிய விடயங்களாக அமைந்தன.6 இப் பிரசங்கத்தைக் கேட்ட சைவசமயத்தோர் பலர் மாமிசம் உண்பதையும் மதுபானம் அருந்துவதைக் கைவிட்டனர். முறையாக சிவதீட்ஷை பெற்று கோயிலுக்கு சென்று தோத்திரம் பாடச் சென்றனர். சைவாச்சிரம தர்மங்களை கடைப்பிடித்தனர். மேலும் துயஅநள உயசiஅயஅ என்பவர் தன்னுடைய ர்iனெரளைஅ in ஊநலடழn என்ற நூலில் 'யாழ்ப்பாணத்துச் சைவர்களிடம் பூணூல் அணியும் பழக்கமும் சிவதீட்ஷை பெறும் வழக்கமும் இருந்துள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து ஈழத்தவர்கள் ஆரம்ப காலங்களிலேயே நடைமுறை வாழ்வில் தீட்ஷை பெற்றுள்ளனர். அத்தோடு சிவசின்னங்களையும் பேணி அணிந்துள்ளனர் என்;பதை அறியமுடிகின்றது.

தற்காலத்தில் ஈழத்தைப் பொறுத்தவரையில் தீட்ஷையின் வகிபாகம் பிரதேசத்திற்கு பிரதேசம் மாறுபட்ட நிலையில் காணப்படுகின்றது. அப் பிரதேசத்தின் கலாசாரம் பண்பாடுகளின் அடிப்படையில் தீட்ஷை பெறும் வீதம் அதிகரித்தும் குறைந்தும் காணப்படுகின்றமையை அவதானிக்கலாம். இந்துக்கள் செறிவாக வாழும் வடக்கு மாகாணம், மற்றும் கிழக்கு மாகாணப் பகுதிகளில் தீட்ஷையின் சிறப்புக்களும் செல்வாக்கும் ஏனைய மாவட்டங்களை விடவும் அதிகமாக உள்ளது என்று கூறலாம்.7 அவ் பிரதேசத்தில் உள்ள ஆலயத்திலேயே ஆலய குருக்களால் தீட்ஷை அளிக்கப்படுகின்றது. மேலும் இந்துசமய நிறுவனங்கள் ஆதீனங்கள் மடங்கள், அருள்நெறி திருக்கூட்டம் சிவதொண்டன் சபை, இளந்தொண்டர் சபை, பாடசாலைகள் சைவ ஆச்சிரமங்கள் ஊடாகவும் தீட்ஷை வழங்கப்பட்டு நடைமுறை வாழ்வில் பேணப்படுகின்றது. சைவசமயத்தில் ஏழுவயதில் தீட்ஷை பெறவேண்டும் என்ற சிறப்பு விதி கூறப்பட்டுள்ளது. எனினும் இலங்கையைப் பொறுத்தமட்டில் தீட்ஷையின் முக்கியத்துவத்தை நோக்கினால் தீட்ஷை பெறுவதற்கு வயதெல்லை வரையறை இல்லாமையைக் காணமுடிகிறது. இறந்த பிரேதத்திற்கும் தீட்ஷை வைப்பதை உதாரணமாகக் கொள்ளலாம்.

தீட்ஷை -

தீட்ஷை என்பது மலத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுப்பது அதாவது அஞ்ஞானத்தைப் போக்கி மெஞ்ஞானத்தை தருவது

சைவசித்தாந்திகள் தீட்ஷையே

1.            சமய தீட்ஷை

2.            விசேட தீட்ஷை

3.            நிர்வாண தீட்ஷை

4.            ஆச்சாரிய அபிஷேகம் எனப் பிரித்துரைப்பார்.

மேலும் தீட்ஷை பெற்றவர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நியதிகள் உள்ளன. இதனை சிவாகமங்களும், ஆறுமுக நாவலரின் சைவவினாவிடை நூலும் எடுத்துரைக்கின்றன. தீட்ஷை பெற்றவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களை அநுட்டானம் என்பர்.8 இவ்வொழுக்கங்களிலே நீராடல், சந்தியா வந்தனம், செபம், தியானம் குரு சேவை, சிவனடியார் சேவை, சரியைத் தொண்டு முதலியன அடங்கும். சந்தியாவந்தன வழிபாட்டில் நீராடல் சிறிதளவு தூய நீரை உட்கொள்ளலாகிய ஆகமம் மூச்சை உள்ளே இழுத்து சிறிது நேரம் நிறுத்திவைத்து ஒழுங்குமுறைப்படி மூச்சுப்பயிற்சி செய்ய விடுதலாகிய பிரணாயாமம் மந்திர செபம், தியானம் போன்ற அனுட்டானங்கள் இடம்பெறும். சமயதீட்ஷை பெற்றவர்களிற்கு பஞ்சாட்சர மந்திரம் ஓதுதல் மிகவும் முக்கியமானதாகும். மேலும் அநுஸ்டானம் செய்யும்போது விபூதியை திரிபுண்டரமாகத் தரித்தல் வேண்டும். அத்துடன் தீட்ஷை பெற்றவர்கள் தம் பொதுவாழ்க்கையில் கொல்லாமை, கள்ளாமை, கள்ளுண்ணாமை, பிறர்மனை நயவாமை முதலிய இயம ஒழுக்கங்களையும் தவம், இறைநம்பிக்கை, ஈகை முதியோர் வணக்கம் மெஞ்ஞான சிந்தனை, செருக்கின்மை நன்மை தீமைகளை பிரித்தறிதல் முதலிய நியம ஒழுக்கங்களை கடைப்பிடித்தல் பஞ்சபுராணம் ஓதுதல், புராண பாராயணம் செய்தல் ஆலயத் தொண்டு செய்தல், ஆலய வழிபாடு போன்ற நற்கருமங்களிலும் ஈடுபடல் வேண்டும். இத்தகைய செயல்களைத் தீட்ஷை பெற்ற ஒருவன் கட்டாயம் ஆற்ற வேண்டும். இல்லையேல் பெற்ற தீட்ஷை பயனற்றுப்போகும். மேலும் தீட்ஷை பெற்றவர்கள் மாமிச உணவை புசித்தல் ஆகாது அந்தவகையில் ஈழத்தில் தீட்ஷை பெற்ற ஒருவன்  மேற்குறிப்பிட்டபடி வாழ்கின்றானா? என்பது ஐயத்துக்குரியதாகும். குருவானவர் அனைவருக்கும் தீட்ஷை அளிப்பதில்லை ஓர் ஆன்மா ஆன்மீக உயர் நிலை காண தயார் நிலையில் இருப்பதைக் கண்டு அதற்கு மட்டுமே குருவால் தீட்ஷை வழங்க முடியும். எனினும் தற்காலங்களில் மனிதன் தனது நோக்கத்தை அடையும் பொருட்டு தீட்ஷை பெறுவதை அவதானிக்கலாம். இவ்வாறு தீட்ஷை பெற்றவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நியதிகளை9 சரியான முறையில் கடைப்பிடிப்பதில்லை. சைவர்களாக இருக்க வேண்டியவர்கள் அசைவர்களாக இருக்கின்றனர். கட்டாயம் தீட்ஷை பெற வேண்டும் என்று எந்த ஒரு சைவசமய இலக்கியங்களிலும் குறிப்பிடவில்லை. ஒருவரது வற்புறுத்தலால் தீட்ஷை பெற வேண்டிய அவசியமும் இல்லை. தீட்ஷை என்பது ஞானம் என்னும் வேள்விக்கு ஊற்றப்படும் நெய் தீட்ஷை அகவுலகுக்கு தரப்படுவது புறவுலகுக்கு அல்ல அவ்வாறு பெறப்படும் தீட்ஷையால் எந்தவொரு பயனும் கிட்டப்போவதில்லை.

சமய தீட்ஷை

'சமய தீட்ஷையானது ஒருவர் சைவ சமயத்திற் புகுதற்காகச்செய்யப்படுவது' ஆசாரிய அபிசேகம் பெற்ற கிரியா குரு ஒருவரிடம் முதலில் பெறும் தீட்ஷையாகும் அனுஷ்டானம் பஞ்சாட்சரசெபம் சமயத்தொண்டுகள் மற்றும் கிரியைகள் யாவற்றையும் செய்யவும் செய்விக்கவும் தகுதி நல்குவதாகும். இத் தீட்ஷை பெற்றவரே சைவசமயி ஆவார் இத் தீட்ஷை சரியை நெறியைக் கடைப்பிடிப்போர்க்கு உகந்தது.

சைவக்கிரியை விளக்கம் சு.சிவபாத சுந்தரனார் சமயதீட்ஷையின் முற்கிரியை தீட்ஷை செய்யும்போது, மாணாக்கனுக்கு விசேஷசுத்தி செய்தல் வேண்டும். இது சிவாக்கினியாற் செய்யப்படுவது இதற்கு ஒரு யாகமண்டபம் வேண்டும். யாக மண்டபத்திலே நாலுவகையான பூசை நடைபெறும் எனக் குறிப்பிடுகின்றார். அவையாவன,

  1. மண்டபத்தைச் சூழ்ந்திருக்கும் மூர்த்திகளுடைய பூசை
  2. மண்டபத்தைக் காப்பவராகி யாகரட்சகருக்குக் கும்பத்திலே பூசை
  3. யாகத்திற்குத் தலைவராகிய மண்டலேசுரருக்குப் பூசை
  4. யாகத்தில் உண்டாக்கப்படும் சிவாக்கினியிற் சிவபூசை என்பன குறிப்பிடப்படுகிறது.

விசேட தீட்ஷை

இந்த தீட்ஷை பெற்றவரே யோகநெறிக்கு உரித்துடையவராவர். சமயதீட்ஷை பெற்றுச் சாதனம் செய்து பக்குவம் முதிர்ந்த பின் ஆசாரியரிடத்தில் இரண்டாவதாகப் பெறும் தீட்ஷையாகும் இது பெற்றவர்கள் ஆன்மார்ந்த பூசை செய்து புறமும் உள்ளும் இறைவனின் அருவுருவத்திருமேனியை வணங்கலாம் இவர்களே சிவபூசைக்காரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இத் தீட்ஷை கிரியை நெறியைக் கடைப்பிடிப்போர்க்கு உகந்தது.

நிர்வாண தீட்ஷை

முதல் இரண்டு தீட்ஷைகளும் பெற்றுப் பக்குவம் முதிந்தவர்கள் ஆசாரியரிடம் இத் தீட்ஷை பெறுவர் இத் தீட்ஷை அசத்தியோ நிர்வாண தீட்ஷை முற்றாகவே பற்றற்ற நி;லையல் இருப்பவர்க்கு உடனே வினைப்பயனை அனுபவித்து முடிந்தபின் முத்தியை கொடுப்பது. இது பெற்றவர்கன் அருவத்திருமேனியாய்ச் சிவத்தை அகத்திலே வழிபாடு செய்வார்கள் இத் தீட்ஷை ஞான நெறியைக் கடைப்பிடிப்போர்க்கு உகந்தது. நிர்வான தீட்ஷை பெறுவோர்கள் அபரமுத்தி முதலிய போகங்களை விரும்புவோர்க்கு செய்யப்படுவது லோக தர்மினி மற்றவர்களுக்கு செய்யப்படுவது சிவதர்மினி பெறுவோருள் உடனே முத்தியடைவோர் அசத்தியோ நிர்வாணத்தையும் பெறுவர்.

சத்தியோ நிரவாணதை:

சத்யோ என்றால் விரைவாக என்று பொருள். இது தீட்ஷை செய்தவுடன் உடனடியாக முத்தி கொடுக்கும் தீட்ஷையாம். பதினாலாம் நூற்றாண்டில் உமாபதி சிவாச்சாரியார் தன்னிடம் அனுப்பப்பட்ட பெற்றான் சாம்பான் என்பவனுக்கும், அதன் பின்னர் முள்ளிச்செடி ஒன்றுகும் உடனடியாக உயிரை உடலைவிட்டு நீக்கி பரமுத்தி கொடுத்தது இந்த தீட்ஷையாலேயாம். இது நிர்வாண தீட்ஷையில் அதிதீவிரத்தில் அதி தீவிரமான நிலையிலுள்ள சத்திநிபாதருக்கு வழங்கக்கூடிய தீட்ஷயாகும்.

அசத்தியோ நிர்வாணதை:

இது தீட்ஷையின் பின்னரும் உயிர்வாழ்ந்து, பிராரப்த வினையைக் கழித்து, உடலை விட்டு உயிர்நீங்கியதும் முத்தி அடையும்படியாகச் செய்யப்படும் நிரவாண தீட்ஷையாகும். இது அதிதீவிரத்தில் மந்ததரம், மந்தம், தீவிரம் முதலிய நிலைகளிலுள்ள சத்திநிபாதர்க்குச் செய்யப்படும் தீட்ஷையாகும்.

பாதோத்தக தீட்ஷை:

இதைவிட ஆச்சாரியாரின் பாதம் கழுவிய தீர்த்தத்தை அளித்தல் பாதோத்தக தீட்ஷையாம். சீடன் அதனைத் தனது சிரசில் புரோட்சித்து ஆசமனம் செய்ய (அருந்த) வேண்டும். வீரசைவ மரபில் இது தவறாது கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

ஆச்சாரிய அபிஷேகம்

நிர்வான தீட்ஷை பெற்ற ஒருவர் குருப்பட்டம் பெறுவதற்காக செய்யப்படும் கிரியை ஆச்சாரிய அபிடேகம் எனப்படும் குருப்பட்டம் பெற்றோர் பிறருக்கு தீட்ஷை கொடுக்கவும் பரார்த்த பூசை செய்யவும் தகுதியைப் பெறுவர் இவர் சிவாச்சாரியார் எனவும் அழைக்கப்படுவார் சிவாச்சாரியருக்கு இருக்க வேண்டிய தகமைகளை சிவாகமங்கள் கூறுகின்றன.

  • திருமணம் முடித்து இல்லறம் நடத்துபவராக இருக்க வேண்டும்
  • உடல் உளக் குற்றமற்றவராக இருத்தல் வேண்டும்
  • கல்வி அறி;வும் ஒழுக்க மேம்பாடும் மிக்கவராக இருத்தல் வேண்டும்
  • சைவ நாற்பாதங்களில் பயிற்சி உடையோராக இருத்தல் வேண்டும்
  • சீடர்களுக்குச் சிறந்த ஒழுக்கத்தையும் சைவ பாரம்பரியத்தையும் போதிப்பவராக இருத்தல் வேண்டும்
  • பதினாறு முதல் எழுபது வயதிற்கு உட்பட்டோராக இருத்தல் வேண்டும் .

சமயதீட்ஷை. விசேட தீட்ஷை, நிர்வாண தீட்ஷை ஆகிய மூவகைத் தீட்ஷைகளையும் கிரியா குரு, அளிக்கும்போது ஏழு வகையில் ஏதாவது ஒருவகையில் சீடனின் பக்குவ நிலைக்கேற்ப தீட்ஷை வழங்குவர் அவை எவை என நோக்குவோம். ஆயினும் சமய தீட்ஷை, விசேட தீட்ஷை, நிர்வாண தீட்ஷை ஆகிய மூன்று தீட்ஷைகளும் பெற்று ஆச்சாரியாபிக்ஷேகமும் பெற்று இல்லற மார்க்கமாகிய குடும்ப வாழ்க்கையில் உள்ள, ஆதி சைவமரபில் வரும் அந்தணர்களே திருக்கோவில்களில் சிவலிங்கத் திருமேனியைத் தொட்டு உலக நன்மைக்காகவும், மக்களின் நன்மைக்காகவும் செய்யும் பரார்த்த பூசையைச் செய்யும் தகுதி உடையவர்கள் ஆவர் என்று, ஆகமங்கள் கூறும். ஆலயங்களின் அமைப்பு, கிரியைகள், உற்சவங்கள், வழிபாடு என்பவற்றின் தத்துவ மற்றும் நடைமுறை விளக்கங்கள் ஆகமங்களிலேயே உள்ளன. இவை வேதங்களிலோ, வேதாந்தமான உபநிடதங்களிலோ அல்லது ஸ்மிருதிகளிலோ இல்லை ஆகவேதான் ஆகமவழியைச் சாராத ஆசமார்த்த வைதிக அந்தணர்களுக்கு இந்த தகுதி இல்லை என்று கூறப்படுகின்றது.

இல்லற வாழ்வில் இருக்கும் குடும்பஸ்தர்களுக்கு அவ்வாறு இல்லற வாழ்வில் தனது மனைவியுடன் வாழும் இல்லற ஆச்சாரியாரே தீட்ஷை செய்வதற்கு உரியவர் என்று சிந்திய ஆகமத்தில் 'பௌதிகோபி விசேஷேண தர்ம்பத்னீ ஸமன்வித' என்று கூறப்பட்ட சுலோகத்தைக் காட்டி தமது 'சிவாச்சிரமத்தெளிவு' என்ற நூலில் துறவற நெறியில் நின்ற திருவாவடுதுறை ஆதீனத்தின் முப்பத்திரண்டாவது குருமகா சன்னிதானமாகத் திகழ்ந்த ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நிறுவியுள்ளார்கள். இவர் மெய்கண்ட சாத்திரங்களுக்குப் பிற்ப்பட்ட சைவசித்தாந்த தத்துவ நூல்களான பண்டார சாத்திரங்கள் பதினான்கில் பத்து நூல்களை எழுதியவர். பண்டார சாத்திரங்கள் பதினான்கும் திருவாவடுதுறை ஆதீனத்து பண்டார சன்னிதிகளால் எழுதப்பட்டவையாகும்.

நயன தீட்ஷை

ஆசாரியார் சிவமாக நின்று சீடனைத் தலை தொடக்கம் கால் வரைக்கும் அருட்பார்வையாற் பார்த்து அவனுடைய ஆணவத்தை கெடுத்தல் கண்ணால் பார்த்தல் குரு அருளோடு சீடனைப் பார்த்து ஆணவ மலத்தை நீக்கலாகும் இது கருட தியானி தன் பார்வையால் விஷம் ஏறப் பெற்றவனுக்கு விஷம் நீக்குதல் போன்றது. திருஞானசம்பந்தருக்கு சிவபெருமான் தனது பார்வையாலே நயனதீட்ஷை திருத்தோணிபுரத்தில் வழங்கப்பட்டது. சிவபெருமான் சம்பந்தருக்கு சிவஞானம் கலைஞானம் வழங்கியபோது சம்பந்தர் 'தோடுடைய செவியன்' என்ற பதிகம் பாடினார்.

                              'சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்

                              பவமதனை அரமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்

                              உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞானம்

                              தவ முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்'

எனப் புராணத்தைப் பாடியுள்ளார். எனவே சம்பந்தருக்கு தீட்ஷை வழங்கிய பின்புதான் இறைவனின் திருநாமங்கள் புகழ்களைப் புகழ்ந்து பாடியுள்ளார். திருநாவுக்கரசர் சிவபெருமானிடம் திருவடி தீட்ஷை பெற்றார் திருத்தூங்கானை மடத்தில் சூலக்குறியும், இடபக்குறியும் தோளில் பொறிக்கப்பெற்றுத் தூயவரான நாவுக்கரசர் பலதலங்களையும் வணங்கிச்சென்று தில்லையம்பலப் பெருமானை வணங்கிப் பலவகைப் பதிகங்களைப் பாடித் தொழுது இருந்தார். அக்காலத்தில் ஞானசம்பந்தப்பிள்ளை மூன்று வயதில் ஞானப்பாடல்களைப் பாடுவதை அறிந்து அவரை தரிசிக்க வேண்டுமெனும் பெருவிருப்பால் சீர்காழிக்குப் போனார் பிள்ளையாரைக்கண்டு வணங்கி இருவரும் பலநாட்கள் திருஞானசம்பந்தப் பிள்ளையாரின் மடத்தில் இருந்து வழிபாடு செய்து வந்தனர். பின்னர் சோழநாட்டுத் தலங்களை வணங்க வேண்டுமெனும் பெருவிருப்பால் சம்பந்தரிடம் விடைபெற்றுத் திருச்சத்தி முற்றத்தைச் சென்றடைந்தார் அங்கு சிவக்கொழுந்தீசரை வணங்கி நின்று பெருமானே சொல்லுந் தொழிலுடைய கூற்றுவன் என்னுயிரை இவ்வுடம்பினின்றும் பிரித்து வருத்துவதற்கு முன்னமே நின்னுடைய செந்தாமரை மலர்போலும் அழகிய திருவடிகளை என்தலைமேல் சூட்டி அருள்வாயாக என வேண்டிப் பாடினார்.

                              'கோவாய் முடுகி யடுதிறந் கூற்றம்

                              அமைப்பதன் முன் பூவாரடிச் சுவடென்மேல்

                              பொறித்துவை போவிடில் மூவா

                              முழுப்பழி மூடுகண்டாய் முழங்குந்தழற்கைத

               தேவா திருச்சக்தி முற்றத்துறையும் சிவக்கொழுந்தே'

(தேவாரம்)

எனவரும் பதிகத்தைப் பாடிப்போற்றினார். இவ் வேண்டுகோளை செவிமடுத்த சிவபெருமான் திருநல்லூருக்கு வா எனப் பணித்தார். அவ் அருள்மொழி கேட்ட அப்பரடிகள் திருநல்லூரையடைந்தார்; அங்கு திருவடி தீட்ஷை சூட்டப் பெற்றார். திருநாவுக்கரசர் தனக்கு திருவடி தீட்ஷை தந்த பெருமானை நினைத்து திருத்தாண்டகம் பாடித்துதித்தார்.

'நினைந்துருகும் அடியாரை நையவைத்தார்

நில்லாமே தீவினைகள் நீங்கவைத்தார்

சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்

செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்துவானோர்

இனந்துருவி மணி மகுடத் தேறத்துற்ற

இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப்பிலகி

நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார்

நல்லூரெம் பெருமானார் நல்லவாறே' (திருத்தாண்டகம்)

புறச்சான்று

திருத்தொண்டர் புராணத்தில் சேக்கிழார் சுவாமிகள்

நன்மை பெருகுஅருள்நெறியே வந்தனைந்து நல்லூரில்

மன்னு திருத்தொண்டனார் வணங்கி மகிழ்ந்தெழும் பொழுது

உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம் என்றவர்தம்

சென்னிமிசைப் பாதமலர் சூட்டினார் சிவபெருமான். (புராணம்)

நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியில் நற்றவன் நல்லூர்ச் சிவன்பாதம் தன்சென்னி வைக்கப் பெற்றவன். எப்பொழுதும் திரு நல்லூர்ப் பெருமானை வழிபடுபவர்களின் தலையில் சடாமுடி சூட்டப்படும் என சைவசித்தாந்தம் எடுத்துரைக்கின்றது.

ஸ்பரிஸ தீட்ஷை

ஆசாரியர் தம்முடைய கையை சிவபெருமானுடைய திருக்கரமாக பாவித்து சீடனுடைய தலையில் வைத்து அவனுடைய மாயாமலத்தை கெடுப்பதாகும். அதாவது சிஷ்யனை வலப்பக்கத்தில் இருத்தி அவனுடைய ஆத்மாவை சிவாசனமாகிய இருதயத்தில் இருத்தி அவனுக்கு விபூதி பூசி தம்முடைய கையை சிவபெருமானது திருக்கரமாக்கி அவனுடைய தலையில் வைத்து சிவமந்திரத்தை உச்சரித்து சரீரம் முழுவதும் தடவி மாயாவலியைக் கெடச்செய்தல். பின்னர் சிஷ்யன் மண்டலேஸ்வரருக்கும், குடும்பங்களுக்கும் அவன் கையினால் பூவைச்சாத்த வைத்து வணங்கப்பண்ணி வலப்பக்கத்தில் இருத்தப்படும். சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிவபெருமான் திருவெண்ணெய் நல்லூரில் வழங்கிய தீட்ஷை பரிசதீட்ஷையாகும். யோகர் சுவாமிகள் ஹவாய் இன்னாளில் சைவசித்தாந்த குருமடம் தாபித்த சுப்பிரமணிய சுவாமிகளுக்கு முதுகில் ஓங்கி அறைந்து இந்த ஓசை அமெரிக்காவரை கேட்கும் என்று கூறியது பரிச தீட்ஷையாம். குருவானவர் மந்திரத்தை அல்லது மகாவாக்கியத்தை சீடனுக்கு உபதேசித்தலாம். 'யாரடா நீ? தீரடா பற்று' என்று செல்லப்பா சுவாமிகள் தன்னை முன்முதலில் சந்தித்த சதாசிவம் என்னும் யோகர் சுவாமிகளுக்குச் சொன்னது வாசக தீட்ஷையாம்.

'மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர்

               வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பாரா பரமே' என்று தாயுமானார் பாடலும்

'சாத்திரத்தை ஓதினர்க்குச் சற்குருவின் தன்வசன

மாத்திரைக்கே வாய்க்கு நலம் வந்துறுமோ'

என்று திருக்களிற்றுப்படியாரும் கூறுவது இந்த வாசக தீட்ஷையையே. குருவானவர் சொல்லும் ஒன்றிரண்டு வார்த்தைகளுடன் பக்குவ ஆன்மாக்களுக்கு ஞானம் கைகூடிவிடும். 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த தில்லைத் தீட்ஷிதர்களில் ஒருவரான உமாபதிசிவம் பல்லக்கிலே தீவர்த்தி போன்ற ஆரவாரங்களுடன் திரும்பும் பொழு து தெருவிலே திரிந்து கொண்டிருந்த மறைஞான சம்பந்தர் கூறிய 'பட்ட கட்டையிலே பகற்குருடு போகிறது' என்ற வசனம் அவருக்கு அக்கணத்திலேயே ஞானத்தைக் கொடுத்தது. இதையே 'குறியறிவிப்பான் குருபரனாமே' என்று திருமந்திரம் கூறுகின்றது.

வாசக தீட்ஷை

திருவைந்தெழுத்தையும் பதினொரு மந்திரங்களையும் அந்தந்த எழுத்துக்குரிய மந்திரங்களோடு உபதேசித்தல் குருமந்திரங்களைச் சீடனுக்கு உபதேசித்து அவனை ஆசீர்வதித்தல். அதாவது பரிஸதீட்ஷை பயனுறுவதற்காகவும் மந்திரபூசையாகவும் மூலத்தால் நூறாகுதியும் பிரமாங்கத்தால் பத்துப்பத்து பூர்ணாகுதியும் செய்து எல்லாக் குற்றங்களும் தீர்தற்காக மூலத்தால் நூற்றெட்டு பூர்ணாகுதியும் செய்க. பின்பு மந்திரங்களை உபதேஷித்து சிவனுக்கும் அக்கினிக்கும் அவனைக்கொண்டு பூசை செய்வித்து மூர்த்திகளை விமர்சனங்களை குருமந்திரங்களைச் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறும், பொருந்துமாறும் மாணவனுக்கு உபதேசிப்பது வாசகதீட்ஷை மணிவாசகருக்கு சிவபெருமான் திருப்பெருந்துறையில் இருந்த மரநிழலில் உபதேசித்தமை வாசக தீட்ஷையாகும்.

மானச தீட்ஷை

யோகமார்க்கத்தால் ஆசாரியர் சீடனுடைய மனதிற் பிரவேசித்து ஆன்மபோகத்தை நீக்கி சிவபோகத்தை உண்டாக்குதல் குரு சீடனைத் தனது அருள் உருவாய்ப் பாவித்து யோக மார்க்கத்தால் அவன் மனதில் பிரவேசித்து ஆன்ம போகத்தை நீக்கல் இது ஆமை நீர் நிலையின் கரையில் இருந்தவாறே முட்டையை மனோபாவனையால் குஞ்சாக்குவது போன்றதாகும்.

யோக தீட்ஷை

குரு சீடனுடைய இதயத்தில் பிரவேசித்து ஆன்மாவை சிவத்தோடு சேர்த்தல் சிவயோகத்தை அப்பியாசிக்கும்படி உபதேசித்தலாகும். மாணாக்கனுடைய கையிலே தர்ப்பை அடியைக்கொடுத்து நுனியைத் தன்னுடைய முழங்காலில் சந்திலிடுக்கி மாணாக்கனது இடதுநாடியையும், வலது நாடியையும், தன்னுடைய வலதுநாடி இடதுநாடிகளோடு முறையே தொடுத்து அவனுடைய சிற்சக்தியை அவனது வலதுநாடியாலும் தனது இடதுநாடியாலும் எடுத்து தன்னுடைய சிற்சக்தியோடு சேர்த்துச் சிவத்தன்மையை அடைவித்து பின்பு அவனில் சேர்த்துவிடுதல். சிவாக்கினியால் சுத்தி அக்கினியிலே சங்கிதை மந்திரத்தால் மாணாக்கனுடைய தலையிற் சமபாத ஓமம் செய்க. சமபாத ஓமமாவது ஆகுதி செய்யும்போது ஒரு பகுதியை அக்கினியிலும் மிஞ்சியதை அவனது தலையிலும் விடுதல். குரு மாணாக்கனை சிவயோகம் பயிலச்செய்தல் யோகதீட்ஷையாகும். தட்சணாமூர்த்தியாகிய சிவபெருமான் சனகர், சனாதனர், சனந்தனர், சனக்குமாரர் அகிய நான்குபேருக்கும் மெய்மை புரிய வைத்தமை யோகதீட்ஷையாகும்.

சாஸ்திர தீட்ஷை

சைவசமய உண்மைகளையும் ஆசார அனுஷ்டானங்களையும் சுருக்கி அறியச்செய்தலாகும். விஷேச போதனை கடவுளையும் வேதாகமங்களையும் குருவையும் அவமதிக்கலாகாது. நிர்மாலியத்தையேனும் கோபுர நிலையேனும் மதிக்கலாகாது. சிவபூசை, குருபூசை, அக்கினி பூஜைகளை விடலாகாது.61 குரு மாணவனுக்கு சிவாகமங்களையும் திருமுறைகளையும் ஓதுவித்தல் சாத்திர தீட்ஷையாகும். மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் திருப்பெருந்துறையில் வைத்து பதி பசு பாசம் விளக்கம் வழங்கியமை.

ஒளத்ரி தீட்ஷை

பொதுவாக சைவமக்களுக்கு செய்யப்படும் தீட்ஷையாகும். ஆன்மாக்களாகிய உயிர்களை வீடுபேற்றை அடையும்பொருட்டு ஆசாரியாரால் அக்கினிகாரியத்துடன் செய்யும் அங்கி தீட்ஷையே ஆகம். ஓமம் சம்பந்தமானது குண்டம், மண்டலம் அமைத்து அக்கினி வளர்த்துச் செய்யப்படுகிறது. இது கிரியாவதி என்றும் ஞானாவதி என்றும் இரண்டு வகைப்படும்.

சிவதீட்ஷை நடைமுறை வாழ்வில் பேணுதகமை (Maintain Ability of the Deeksha in Practical Life)

ஈழத்தில் மேலும் தீட்ஷை வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. சைவர்களுக்கு இன்று ஈழத்தில் சமய சம்பந்தமான பரீட்சை எழுதுவதற்கு முன்பாக முதல் தகுதியாக தீட்ஷை பெற வேண்டும். தீட்ஷை பெற்ற பின்னர் தான் பரீட்சை எழுத முடியும் என்று உறுதியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். உதாரணமாக சைவப்புலவர் தேர்வு, இளஞ் சைவப்புலவர், பிரவேச பண்டிதர், பாலபண்டிதர், சித்தாந்த பண்டிதர், தர்ம ஆசிரியர் இளந்தொண்டர் சபையில் சித்தாந்த ரத்தினம், திருநெறிச் செல்வர் பட்டம் பெறும் பயிலுநர்கள் ஒருவர் கொண்டிருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகளில் ஒன்றாக சிவதீட்ஷை பெற்றிருத்தல் வேண்டும் என்பதையும், சிவதீட்ஷையினுடைய முக்கியத்துவமும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈழத்தில் வருடாவருடம் பலர் இவ்வாறான பரீட்சைகளிற்கு தோற்றுகின்றனர். அந்தவகையில் பல சைவர்கள் தீட்ஷை பெறுகின்றனர். மேலும் ஈழத்தில் பல நிறுவனங்கள் சைவர்களுக்கு தீட்ஷை அளிப்பதை நோக்காகக் கொண்டு இயங்குகின்றன. உதாரணமாக சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தை குறிப்பிடலாம். இந் நிறுவனம் தனது குறிக்கோள்களில் முக்கியமான ஒரு குறிக்கோள்களாக தீட்ஷை வழங்குதலைக் கொண்டுள்ளது. இன்றுவரை இந் நிறுவனம் இப்பணியைத் தொடர்ந்து ஆற்றி வருகின்றது.

தீட்ஷை வழங்கும் நிறுவனங்களின் பல்வேறு பிரதேசத்தில் சமய நிறுவனங்களுடாக தீட்ஷை வழங்கப்படுகின்றன அவற்றில் ஒன்றாக நல்லை ஆதீனம் சிறப்பிடம் பெறுகிறது. 1977ம் ஆண்டு ஸ்ரீமத் சோமசுந்தரத் தம்பிரான் சுவாமிகளால் ஐப்பசி வெள்ளி, கந்தசஷ்டி போன்ற விசேட தினங்களில் தீட்ஷை வழங்கப்பட்டுள்ளது. அன்றுமுதல் இன்றுவரை தீட்ஷை வழங்கும் நிறுவனமாக சிறப்பிடம் பெறுகின்றது நல்லை ஆதீனம்.ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் சுவாமிகளின் ஆசியோடு 2000ம் ஆண்டு 22மாணவர்களுக்கும் 2001-39 மாணவர்களுக்கும் சமயதீட்ஷை அன்றுமுதல் இன்றுவரை சைவப்புலவர் சங்கத்தால் வழங்கப்பட்டு வருகின்றது. தீட்ஷை என்றால் உயிரைப் பற்றிய ஆணவமலத்தைக் கெடுத்து சிவஞானத்தை கொடுப்பது என்று பொருள், தமிழில் தீட்ஷை, உடலுக்கு பல சடங்குகள் செய்யப்படுகின்றன. அதுபோல உயிராகிய ஆன்மாவிற்கு செய்யக்கூடிய சடங்கே தீட்ஷையாகும். எவ்வாறு வாகனம் ஓட்ட ஓட்டுனர் உரிமம் தேவையோ நிலம் வாங்க நிலப்பதிவு அவசியமோ, தொழில்துவங்க தொழில் உரிமம் தேவையோ அது போல சிவசம்பந்தம் எனும் ஆரம்பப்படி நிலையை உறுதிப்படுத்திக்கொள்ள இம்மை மறுமை இன்பங்கள் அடைய சிவபெருமான் திருவருள் பெற உரிமம் (தீட்ஷை) தேவை. எந்த வயதினரும் (7வயது முதல்) எந்த வயதிலும் ஆண், பெண் இருபாலரும் தீட்ஷை பெறலாம் என நடைமுறை வாழ்வில் தீட்ஷை முக்கிய சிறப்புப் பெறுகிறது. தீட்ஷை பெறாதவர் பொதுச்சைவர் எனப்படுவார். அவர்கள் திருநீற்றை நீரில் குழைத்து திரிபுண்டரமாக அணியமுடியாது, நமசிவாய எனும் மிக உயர்ந்த மந்திரமான ஐந்தெழுத்தை உச்சரிக்க முடியாது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது தான் சைவம் காட்டும் நெறி எனவே குரு மூலம் தீட்ஷை பெறவேண்டும். நமது சமய குரவர்களும் சந்தான குரவர்களும் நமக்கு அருளியது அதுவே அவர்கள் அருளியதே நமக்கு பிரமாணம் ஸ்ரீ இராமனுக்கும் அகத்தியரும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு உபமன்சு முனிவரும் தீட்ஷை செய்து வைத்துள்ளனர். ஏன் தீட்ஷை பெற வேண்டும் அதன் முக்கியத்துவம் சிறப்புக்களை நோக்கில் சிவபெருமானை ஆகமங்களில் விதித்தபடி வழிபாடு செய்வதற்கு உரிய அதிகாரம் பெற்று ஐந்தெழுத்து ஓதி முப்பரிமாணமாக திருநீறு அணிந்து பூசை செய்யவும் தீட்ஷை பெற்றால் ஞானம் பெறலாம்

சிவதீட்ஷையின் சிறப்புக்கள் ஏன் தீட்ஷை பெறவேண்டும்? (Merits of Deeksha why take Deeksha?)

சிவாகம மரபில் தீட்ஷை என்பது மிக முக்கியமான கிரியையாகும். சிவாகமங்களின் கிரியாபாதமே சிவதீட்ஷை பற்றி எடுத்தியம்புகின்றன. 'தீட்ஷை என்பது மலத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுப்பது.' நமது உடம்பின் புறஅழுக்கை நீரினால் சுத்தம் செய்வதுபோல உள்ளிருக்கும் சூக்கும் உடம்பினையும் அதில் உள்ள தீயஅழுக்குகளையும் ஆசமனம், மந்திரசெபம் முதலான அனுட்டானக் கிரியைகளினாலேயே போக்கமுடியும். இவற்றினைச் செய்வதற்கு வேண்டிய பயிற்சியும், முயற்சியும் தேவை அதனை உணர்ந்தே நம் சமயத்தில் ஏழுவயதில் தீட்ஷைபெற வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.10 ஏனெனில் கால் கைகளை அடக்கி ஆளும் பக்குவமும் மனதில் இச்சைகள் தோன்றி விருத்தியாகக் கூடிய காலமும் அப்பருவ காலத்தில் இருந்து தான் தோன்றுகிறது என்பதனாலேயே அவ் வயதில் தீட்ஷை பெற்றிருந்தால் அனுட்டான சாதனங்களினால் தேகத்தையும் மனத்தையும் அடக்கி நம் வசப்படுத்தவும் தீச்செயல் தோன்றாமலும் தடுக்கமுடியும். சிவதீட்ஷை பெற்று சைவசமயிகளாக வாழ்வதால்,

  • குருபக்தி சிறக்கும்
  • தெய்வவழிபாடும் தெய்வ நம்பிக்கையும் சிறக்கும்
  • சைவ விழுமியங்கள் சிறக்கும்
  • வினைகள் குறையும்
  • முத்தி கிடைக்கும்
  • சிவசின்னங்களின் மகிமையும்
  • புனிதத்தன்மையும் சிறந்து விளங்கும்
  • இறைவன் தீட்ஷா கிரியையின் மூலம் மட்டுமே வினைகள் குறைக்கப்படும்
  • சமய தீட்ஷை பெற்றால் அவர்களை எமன் அணுகமாட்டான் அதனால் நரகம் இல்லை
  • அவ்வுயிரை வாங்க ஸ்ரீ கண்ட பரமேஸ்வரன் அதிகாரம் பெற்றவர்
  • விஷேட தீட்ஷை பெற்றால் அவ்வுயிரை அனந்த தேவர் வாங்குவார்
  • நிர்வாண தீட்ஷை பெற்றால் சதாசிவமூர்த்தி வாங்குவார்
  • நமது பிள்ளைகள் நமக்கு பிதிர்க்கடன் ஆற்றாவிட்டாலும்கூட ஆவியுலக இன்னல் இல்லை
  • இறைவன் தீட்ஷா கிரியையின் மூலம் மட்டுமே வினைகள் அருளுகிறார்
  • பிராணாயாமம் செய்யும்போது இருதய நோய் வராது
  • மாரடைப்பு நெருங்காது
  • சிவாகம பாவங்கள் மூலம் மனம் அடங்கும் நிம்மதி கிட்டும்

ஐம்பொறிகளும் நமக்கு குற்றேவல் புரியும் அப்பர் 'பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி' என்ற திருத்தாண்டகப் பாடல்வரி மூலம் பாவனை உயிரை தூய்மைப்படுத்தும், தீட்ஷை பெற்று ஆன்மார்த்த பூஜை செய்வதன் மூலம் நமது வினைகள் குறையும். இறைவனைக் காணும் வழிகாண நமக்கான குருவிடம் தீட்ஷை பெற வேண்டும். நமக்கான குருவை தேர்ந்தெடுக்க இயலாதபட்சத்தில் சிவபக்தியும் முறையான சிவவழிபாடும் நாம் கொண்டிருந்தால் அகத்தியரே நமக்கு குருவாயிருந்து நமக்கான குருவை அடையாளம் காட்டி சிவதரிசனம் பெற வழிகாட்டுகிறார். சிவதீட்ஷையின் ரகசியம் கற்ற அகத்தியர் தீட்ஷை பற்றி சிறப்பிக்குமிடத்து சித்தர்களின் தலையாய சித்தர் அந்த பரம்பொருளின் பிரியத்துக்குரிய அகத்திய மாமுனி பாமரனும் தகுதி இருந்தால் இறைவனை அடையலாம் என்பதற்காக பகிர்ந்து கொண்ட தேவரகசியம், சித்தரகசியம் இவை இவற்றை உணர்ந்து சித்தியடைந்தவர்களுக்கு ஞானம் பெருகும் பாவம் விலகும் என்கிறார். மேலும் ஆதி சித்தனான சிவனின் பாததரிசனம் கிடைக்குமாம். இந்த தீட்ஷைகளை நற்குமாரனான முருகப்பெருமான் தனக்கு அருளியதாகவும் கூறுகிறார்.

அகத்தியர் அருளியவை முப்பத்திரண்டு சிவதீட்ஷைகள் குருவிடம் இருந்து பெறப்படும் உபதேசங்களில் முதன்மையானதும் இந்த சிவதீட்ஷைகள் தான் இந்த தீட்ஷைகளை முறையாக குருவின் மூலமாய் பெற்று செபிக்க தீட்ஷைகள் சித்திக்கும் என்கிறார் அகத்தியர். அகத்தியார் அருளிய மந்திரங்களை செபிக்கும்போது குறிப்பிட்ட மந்திரங்களுக்கு முன்னர் 'ஓம்' என்கிற பிரணவத்தையும் சேர்த்தே செபிக்க வேண்டுமென தெளிவாகக் கூறியிருக்கிறார். சில மந்திரங்கள் ஒம் என்று துவங்கினால்கூட அதற்கு முன்னர் இன்னொரு ஓம் சேர்த்து இருமுறை ஓமென செபித்தே மந்திரம் சொல்ல வேண்டும் எனவே மந்திரம் எப்படி இருந்தாலும் துவக்கத்தில் பிரணவ மந்திரத்துடனே அகத்தியர் அருளிய அனைத்து மந்திரங்களையும் செபிக்க வேண்டும். சிவதீட்ஷை என்பது கன்ம நீக்கத்தினையும் மலநீக்கத்தினையும் ஏற்படுத்துவது என்பதனை சிவயாம்புவ ஆகமத்தின் பிரமாணத்தினைக் கொண்டு தெளிவுபடுத்தப்படுகின்றது. காஷ்மீர சைவத்தில் தீட்ஷை பற்றி விரிந்த விளக்கம் போதியளவு காணமுடியாதுவிடினும் பேணுகின்றனர். சைவ ஆசாரமாக வாழும் சைவப்பூசாரிகள் பரம்பரை அந்தணச் சிவாச்சாரிய பரம்பரையினர் பேணுகின்றனர். தீட்ஷை பெறுவதையும் பூணூல் சடங்கு செய்யும் விதிமுறைகளையும் மேற்கொண்டு சைவகைங்கரியங்கள் மேற்கொள்வதற்கு தீட்ஷை பெறுகின்றனர். பின்னர் விபூதி உருத்திராக்கம் திருவைந்தெழுத்து இவை சிவசின்னங்களாக பேணி அணிகின்றனர். கிரியை மார்க்கத்திற்கு நாம் செல்லும்போது நாம் பெறுகின்ற தீட்ஷை விஷேட தீட்ஷையாகும். ஞானமார்க்கத்தில் நாம் காலடி வைக்கும்போது குரு நமக்கு வழங்கும் தீட்ஷை நிர்வாண தீட்ஷையாகும். ஆதார தீட்ஷை, நிராதார தீட்ஷை என இரு வகைப்படும். இறைவன் ஞானசிரியர் ஒருவர் மூலம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் உடைய நம் போன்ற சகலருக்கு அளிக்கும் தீட்ஷை ஆதார தீட்ஷை எனப்படும். இறைவன் வேறோர் ஆதாரத்தையும் வேண்டாது தானே குருவாய் நின்று ஆணவம் கன்மம் ஆகிய இரு மலங்கள் மட்டும் உடைய பிரளயாகலருக்கு முக்தியளிக்கும் தீட்ஷை நிராதார தீட்ஷை ஆகும். திருவாவடுதுறை திருத்தலத்தில் திருமூலர் திருமந்திரத்தைப் பாடினார். இங்கே சித்தாந்த சைவ ஆதீனத்தை நிறுவியவர் ஸ்ரீநமசிவாய தேசிகராவார். அருணந்தி சிவாச்சாரியாரிடம் தீட்ஷை பெற்ற சித்தர் சிவப்பிரகாசர் நமசிவாய எனும் தீட்ஷாநாமத்தைச் சூடினார். இன்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து சிவதீட்ஷை பெறுவதற்கு திருவாவடுதுறை ஆதினத்திற்கு சென்று வருகின்றனர். ஆறுமுகநாவலருக்கு நாவலர் எனும் பட்டம் தீட்ஷா நாமம் வழங்கி கௌரவிக்கப்பட்ட ஆதீனமாகும். சைவசமயத்தினர் தீட்ஷைபெற்று நித்திய வழிபாடும் வீட்டில் குருவழிபாடும் செய்து நன்நெறியுடன் வாழ்கின்றனர். குரு என்ற சொல்லுக்கு பாசத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுப்பவர் என்பது பொருள். பக்குவம் அடைந்த ஆன்மாக்களுக்கு குருதீட்ஷை மூலம் முக்தி கொடுக்கின்றார். இறைவனும் குருவாக – ஞானகுருவாக வருவதனாலும் நாம் குருவை இறைவனாக மதித்தே வழிபாடு செய்ய வேண்டும். தட்ஷிணாமூர்த்தி வடிவம் கொண்டதும் குருவாம் தன்மையாலே.

சிவாச்சாரியருக்கு இருக்க வேண்டிய தகமைகளை சிவாகமங்கள் கூறுகின்றன.

  • திருமணம் முடித்து இல்லறம் நடத்துபவராக இருக்க வேண்டும்
  • உடல் உளக் குற்றமற்றவராக இருத்தல் வேண்டும்
  • கல்வி அறி;வும் ஒழுக்க மேம்பாடும் மிக்கவராக இருத்தல் வேண்டும்
  • சைவ நாற்பாதங்களில் பயிற்சி உடையோராக இருத்தல் வேண்டும்
  • சீடர்களுக்குச் சிறந்த ஒழுக்கத்தையும் சைவ பாரம்பரியத்தையும் போதிப்பவராக இருத்தல் வேண்டும்
  • பதினாறு முதல் எழுபது வயதிற்கு உட்பட்டோராக இருத்தல் வேண்டும்11

ஆறுமுகநாவலரின் சைவவினாவிடை நூலில் தீட்ஷை பெற்றவர்கள் வணங்குவதற்குரியோர் பற்றியும் சிறப்பித்து கூறப்படுகின்றது.

  • குரு என்றால் தீட்ஷாகுரு, வித்யாகுரு, போதககுரு முதலானோர் ஆவார் சங்கமம் என்பது நிர்வாண தீஷீதர், விஷேஷதீஷpதர், சமய தீஷpதர் எனும் முத்திறத்துச் சிவபக்தர்களை அழைப்பர்.
  • சமய தீட்ஷpதர் வணங்குவதற்கு உரியவர்கள் ஆசாரியர், நிர்வாணதீஷpதர் விஷேஷ தீட்ஷpதர், சமய தீட்ஷpதர் தம்மில் மூத்தோரையும் வணங்குவர்.
  • விஷேஷ தீட்ஷpதர் வணங்குவதற்கு உரியவர்கள் ஆசாரியாரையும் நிருவாண தீட்ஷpதரையும், விஷேஷ தீட்ஷpதர்களுள்ளே தம்மில் மூத்தோரையும் வணங்குவதற்கு உரியர்.
  • நிர்வாண தீட்ஷpதர் வணங்குவதற்கு உரியவர் ஆசாரியாரையும் நிர்வாண தீட்ஷpதருள்ளே தம்மில் மூத்தோரையும் வணங்குவதற்கு உரியர்.
  • ஆசாரியர் வணங்குவதற்கு உரியவர்கள் ஆசாரியர்களுள்ளே தம்மில் மூத்தோரையும் வணங்குவதற்கு உரியர்.

என வணக்க வழிபாட்டு ஒழுங்குமுறையும் விதிக்கப்பட்டுள்ளது.

சிவாகமமரபில் தீட்ஷைக்குகந்த மாதங்கள், வருடங்கள், திதிகள், நட்சத்திரங்கள், இலக்கினங்கள் என்பன சிறப்பித்துக் குறிப்பிடப்படுகிறது.

தீட்ஷைக்குகந்த மாதங்களாக

உத்தமம் - வைகாசி

மத்திமம் - பங்குனி, மார்கழி, ஆனி

அதமம் - ஆடி, ஆவணி, மாசி

விலக்க வேண்டியவை – சித்திரை, தை, புரட்டாதி

தீட்ஷைக்குகந்த வாரங்களாக – ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி

தீட்ஷைக்குகந்த திதிகளாக – துவிதீயை, திருதியை, பஞ்சமி, ஷஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, பௌர்ணமி

தீட்ஷைக்குகந்த நட்சத்திரங்களாக – அஸ்வினி, ரோகினி, மிருகசீரிடம், புணர்பூசம், பூசம், மகம், உத்தரம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், மூலம், பூராடம், உத்தராடம், சதயம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி

தீட்ஷைக்குகந்த இலக்கினங்களாக - இடபம், சிம்மம், கன்னி, தனு, மீனம்.

நிறைவுரை – Conclusion

தொகுத்து நோக்கில் தீட்ஷை பெறுவதனால் ஒரு சைவசமயி புனிதமாகிறான். பூர்வ, அபரக்கிரியைகள், சைவகைங்கரியங்கள் செய்வதற்குத் தகுதியைப் பெறுகின்றான். சிவப்பிரமாண குலத்திலுதித்த ஒருவரே பரார்த்த கிரியைகளை நடத்திவைக்கும் தகுதியுடையவர் எனச் சிவாகமங்கள் புகழுகின்றன. அவர்களும் முறைப்படி சமய, விஷேட, நிர்வாண தீட்ஷைகளையும் பெற்று ஆசாரிய அபிஷேகத்தையும் செய்தவர்களாக இருக்க வேண்டும் என்பது விதி. அன்மார்த்தமாகச் சிவபூசைகளைச் செய்ய விரும்பும் அடியார்களும் தீட்ஷை பெற்றுக்கொள்ள வேண்டும். முறைப்படி சிவசின்னங்களை அணிந்து நடைமுறைவாழ்வில் பின்பற்ற வேண்டும். இக்கண்ணோட்டத்தில் சைவசமய மரபில் தீட்ஷை முதலம்சம், சிவாச்சாரியார முதற்கொண்டு சைவசமயிகள் வரை தீட்ஷை வழங்கப்படுவதைக் காணுகிறோம். இவ்வொழுங்கில் பக்தி நம்மை இணைத்துக்கொண்டு மனிதப்பிறப்பினுடைய மாண்பினை உணர்ந்து நமது வாழ்வில் உயர்வு பெறுவதற்கும் வழிகாட்டியுள்ள சிறப்பு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. சிவதீட்ஷையினுடைய சிறப்பியல்புகளும் அதன் புனிதத்தன்மையும் சைவசித்தாந்த விழுமியங்களில் இளையோடியிருப்பது குறிப்பிடப்படுகிறது. இறையொழுங்கில் புனிதம், அன்பு, தூய்மை, சந்தியாவந்தனம், சிவசின்னங்களின் மகிமை, பூணூல் அணிவதன் தகுதிப்பாடு, நடைமுறை வாழ்வில் பேணிப்பாதுகாக்கும் திறன் என்பன குறிப்பிடப்பட்டுள்ளது.

அடிக்குறிப்புக்கள் - Footnots

  1. ஆறுமுகநாவலர் சைவ வினாவிடை,பக்13
  2. கோபாலகிருஸ்ணஐயர்.ப, இந்துப்பண்பாட்டு மரபுகள்
  3. அகோரசிவாச்சாரியார், க்ரியாக்ரமஜோதி,ப.24
  4. த.மனோகரன், இந்துநாகரிகம் வெளியீடு, அகில இலங்கை இந்துமாமன்றம்,

ப-140

  1. சைவசமயதீட்ஷை குறிப்பு புத்தகம், அகில இலங்கை சைவப்புலவர் சங்கம், பக்.1-13
  2. பத்மநாபன்.ச., சிவாகமரபு நிலைத்தனவும் அழிந்தனவும், ப.119.
  3. திருமூலர், திருமந்திரம், காசித்திருமடம், திருப்பனந்தாள், ப.88
  4. பத்மநாபன்.ச,சிவாகம மரபு, நிலைத்தனவும் அழிந்தனவும், பக்.32-40
  5. ஞானகுமாரன்.நா., சைவசித்தாந்தத்தெளிவு, ப.74.
  6. கைலாசநாதக்குருக்கள்.கா, சைவத்திருக்கோயில் கிரியைநெறி, ப.10
  7. சைவப்பெரியார் சிவபாதசுந்தரம்.சு., சைவசமய தத்துவம்,பக்-46-47

உசாத்துணை நூல்கள் – 

அகோர சிவாச்சாரியார்     (1967)       கிரியாக்ரம த்யோதி சென்னை.
…………………………      (1967)       க்ரியாக்ரமத்யோதி காஞ்சி
ஏ.மு.அருணாசலக்குருக்கள்

……………………….       (1967)       க்ரியாக்ரம் ஜ்யோதி முதற்பாகம் -
தீஷாவிதி.

அருணைவடிவேலு முதலியார்.சி. (1991)      சிவஞானபோத மாபாடியம்
பொருள்நிலை விளக்கம் தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு.

அழகப்பாமுதலியார்.மயிலை.    (1921)       காரணாகமம் ப10ர்வபாகம் 1ம்
பாகம் சிவஞானபோத யந்திரசாலை சித்தாந்திரிப்பேட்டை சென்னை.

ஆறுமுகநாவலர்.ஸ்ரீலஸ்ரீ        (2004)       சைவவினாவிடை 1ம் 2ம்
புத்தகம்  அ~;டல~;மி வெளியீடு.

………………………        (2004)      பாலபாடம் 4ம் புத்தகம்.
தர்மகர்த்தாசபை

யாழ்ப்பாணம்

இந்துமக்களுக்கு ஒருகையேடு   (2006)       அகில இலங்கை இந்துமாமன்றம்
கொழும்பு.

இராஜலிங்ககுருக்கள்          (1996)       நித்தியார்சனா விதி காரணாகமம்
தமிழ்நாடு.

இராசமாணிக்கனார். மா.      (1958)       சைவசமய வளர்ச்சி ஒளவை
வெளியீடு சென்னை.

ஈசான சிவாச்சாரியார்         (1924)       சிவலிங்க பிரதி~;டாவிதி
சாம்பசிவ சிவாச்சாரியர் பதிப்பு.

உமாபதி சிவாச்சாரியார்      (2001)       திருவருட்பயன் விளக்க
உரையுடன் (உரை. சு.சிவபாத சுந்தரனார்) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் - கொழும்பு.

கந்தையா.மு.               (1998)      சைவசித்தாந்த நோக்கில்
கைலாசபதி ஸ்மிருதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக

வெளியீடு யாழ்ப்பாணம்.

கலைவாணி இராமநாதன்       (1992)       வேதபாரம்பரியமும்
சைவசித்தாந்தமும்ää

ஸ்ரீரெங்கா பிறிண்டர்ஸ்.

கணபதி. ஆ.வு.ஆ            (1988)     ஈசான சிவகுருதேவ பத்ததி
சாஸ்திரி பதிப்பு.

16. கிரணாகமம்             (1932)      சிவாகம சித்தாந்த பரிபாலன

சங்கம் தேவகோட்டை கும்பகோணம்.

17. குமாரசாமிக்குருக்கள்.த.      (2007)      மஹோற்சவ விளக்கம் அச்சுவேலி

திருமயிலை சே.வெ.ஜம்புலிங்கம்

பிள்ளை-பதிப்பித்தது.

18. குமாரசாமிக்குருக்கள்.ச      (1928)       சிவப10ஜை விளக்கம்

பருத்தித்துறை கலாநிதி யந்திரசாலை.

19. குமாரசாமிக் குருக்கள்.ச.     (1950-1951)   வேதாகம நிரூபணம் ஐஇ ஐஐ

அச்சுவேலி.

20. கைலாசபிள்ளை.த.          (1995)      ஆறுமுகநாவலர் சரித்திரம்-

யாழ்ப்பாணத்து நல்லூர்.

21. கைலாசநாதக்குருக்கள்.கா.    (1961)      சைவத்திருக்கோயில் கிரியைநெறி

இந்துகலாசார அபிருத்திச்சங்கம் கொழும்பு.

22. கைலாசநாதக்குருக்கள்.கா.     (2009)      சைவத்திருக்கோவிற் கிரியைநெறி

யாழ்ப்பாணம்.

23. கோபாலகிரு~;ண ஜயர்.ப.     (1992)      கலாநிதி இந்துப்பண்பாட்டு

மரபுகள்ää வித்தியா வெளியீடு

யாழ்ப்பாணம்.

24. சண்முகசுந்தரம்.செ.         (1900)      காராணாகமம் (பூர்வபாகம்)

முதலியார் பதிப்பு.

25. சண்முகசுந்தர முதலியார்.கோ.             சென்னை சித்தாந்திரிப்பேட்டை

26. சபாரத்தினம். எஸ்.பி.       (2002)      சைவ ஆகமங்கள் ஓர் அறிமுகம்

சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்

சென்னை.

27. சிவாக்கிரயோகிகள்           (1968)      சிவநெறிப் பிரகாசம்ää

திருவாவடுதுறை ஆதீனம்   

இந்தியா.

28. சிவம்.ப.                (2007)      சிவாச்சாரிய அபிஷேக தீட்ஷா

பத்ததிää சர்வானந்தமயபீடம்

இணுவில் யாழ்ப்பாணம்.

29. சிவபாதசுந்தரம்ää சு.        (2000)      சைவக்கிரியை விளக்கம்

சைவபரிபாலன சபை

யாழ்ப்பாணம்.

30. சிவபாதசுந்தரம்.சு            (2001)      திருவருட்பயன் விளக்க

உரையுடன் இந்துசமய கலாசார

அலுவல்கள் திணைக்களம்.

31. சிவசாமி.வி.               (1989)      சமஸ்கிருத இலக்கியச்

சிந்தனைகள் நியூ ஈராபப்ளி

கேசன்ஸ் லிமிடெட் - யாழ்ப்பாணம்.

32. சிவாச்சார்ய அபிN~க தீ~hபத்ததி(2007)      சர்வானந்த மயபீடம்

யாழ்ப்பாணம்.

33. சுவாமிநாதக்குருக்கள்;.       (1975)      ப10ர்வபாகம் காமிகாகமம் பதிப்பு

தென்னிந்திய அச்சக சங்கம்

சென்னை.

34. சுவாமிநாத சிவாச்சாரியார்.சி.  (1977)      மகுடாகமம் ப10ர்வபாகம் பதிப்பு

தென்னிந்திய அர்ச்சகர் சென்னை.

35. ………………………….      (1977)      காமிகாகமம்ää தென்னிந்திய

அர்ச்சகர் சங்க பொதுக்காரிய

தரிசி தென்னிந்திய

அர்ச்சகர் சங்கம்

36. சுவாமிநாத சிவாச்சாரியார்..செ.  (1975)      காமிகாகமம் (பூர்வபாகம்); பதிப்பு.

37. ……………………          (1977)      மகுடாகமம் (பூர்வபாகம்)

பதிப்பு.

38 ……………………….        (1960)      வாமதேவ பத்ததி தருமை

ஆதீனம் பதிப்பு.

39. சுப்பிரமணியபிள்ளை.கா.       (1925)      அறிமுகம் மெய்கண்ட சாஸ்திரம்

பதினான்கு சைவசித்தாந்த

நூற்பதிப்புப் கழகம் சென்

40. சுப்பிரமணிய சாஸ்திரிகள்.மு.ஆ  (1934)       சுhமசம்பு பத்ததி

                                      தமிழ்மொழி பெயர்ப்பு

                                      தேவகோட்டை சிவாகம சங்கம்

41. திருமூலர்                 (2003)      திருமந்திரம் காசித் திருமடம்

திருப்பனந்தாள்

42. பத்மநாபன் பிரம்மஸ்ரீ.ச.      (2017)      சிவாகமமரபு வெளியீடு ஸ்ரீ

முன்னேஸ்வரம் தேவஸ்தானம்

சிலாபம்.

43. பரமசாமிக்குரு.மு           (1989)       சிவார்ச்சன சந்திரிகா தீபிகா

திருக்கணித நிலையம் மட்டுவில்.

44 . ………………………       (2017)      சிவாகமமரபு நிலைத்தனவும்ää

அழித்தனவும் முன்னேஸ்வரம்.

45. பாலசுந்தரக் குருக்கள்.கு.      (1967)      காரைநகர்; சைவமகாசபை –

பொன்விழாமலர் விடயம் ஆகமம்

வேதாகம பூ~ணம்.

46. பாலகைலாசநாதசர்மா.ம       (1994)       காமிகாகம அர்ச்சனாவிதிப்படலம்

                                      ஓர் சிறப்பு ஆய்வு.

                                      பிரசுரிக்கப்படாதது.

47. பொன்னுஸ்வாமி.க.          (2002)       சென்னைää வித்தியாநுபாலன

யந்திரசாலை பதிப்பகம். இந்து

பண்பாட்டு மரபுகள்

48. மயிலை அழகப்பா முதலியார்   (1907)      சுப்ரபேதாகமம் சிவஞானபோத

யந்திரசாலை சித்தாரிப் பேட்டை

சென்னை (பதி). கலி 5009

49. ……………               (1921)     காரணாகமம் (பூர்வ பாகம்) 1ம்

பாகம் (பதி) சிவஞானபோத யந்திரசாலை சித்தாரிப் பேட்டை சென்னை கலி 5029

50. ………………              (1921)      காரணாகமம் பூர்வபாகம் 2ம்

பதிப்பு சிவஞானபோத

யந்திரசாலை

சித்தாரிப்பேட்டை சென்னை. 

51. மணி சி.சு.                (2001)       சிவஞானமாபாடிய நுண்பொருள்

விளக்கம் சிறப்புப் பாயிரம்

52. முத்துக் குமாரசாமி தம்பிரான்   (2004)      (பதிப்பு) திருநாவுக்கரசு

சுவாமிகள் தேவாரம் (தலமுறை) பன்னிரு திருமறைப்பதிப்பு நிதி வெளியீடு திருப்பனந்தாள்

53. ……………….             (2003)      திருஞானசம்பந்த சுவாமிகள்

தேவாரம் பன்னிரு திருமுறை

பதிப்பு நிதி வெளியீடு

திருப்பனந்தாள்

54. ஞானகுமாரன்.நா.           (1994)      சைவசித்தாந்த தெளிவு செல்வம்

வெளியீடுää பருத்தித்துறை

55. ………………..             (2003)      மெய்யியல் செல்வம் வெளியீடுää

பருத்தித்துறை

56. ……………….             (1994)      நயம்தரும் சைவசித்தாந்தம் நியூ

செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

சென்னை.

57. ஸ்ரீபஞ்சா~;ர யோகிகள்        (1925)      சைவபூ~ணம் தேவகோட்டை

பதிப்பு.

58. ஸ்ரீமகோர் சிவாச்சாரியார்       (1927)      பத்ததி கிரியாக்கிரமஜோதி எனும்

உரையுடன் அம்பல நாவலர்

பதிப்பு.

59. ஜானகி. எஸ்.எஸ்.          (1988)      சிவாலயங்களும்

ஆலயக்கிரியைகளும் சென்னை. 

60. Balakailasanathasarma,M.,          (2021)             Cannons of Saivagamas

                                                                                    Jaffna, Sri Lanka.

61. …………………………..            (2022)             Saundaryasastra Aesthetics in

Saivagamas

                                                                                    Jaffna, Sri Lanka.

62. Bhatt. Ed.N.R.,     1961,1972,1988.         nusuthfkk; Vol.I, II, III,

Institute Francais D’Indologic,

Pondicherry.

63. Bhatt. Ed.N.R.,     1964,1967,1991                      m[pjhfkk; Vol.I, II, III, Institute

François  D’Indologic,

Pondicherry

64. Winternitz. M.,                             (1963)             History of Sanskrit  literature

vol.I part I,

University of Calcutta, Culcatta.