ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

“உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் சிந்தனைத் திறன் மற்றும் கற்றல் அடைவு - ஓர் ஆய்வு” (A STUDY OF THINKING ABILITY AND ACADEMIC ACHIEVEMENT OF HIGH SCHOOL STUDENTS)

திருமதி K. M. சுந்தரி*1, முனைவர். த. சகாய சைலா*2, என்.கே.தி. தேசிய மகளிர் கல்வியியல் கல்லூரி (தன்னாட்சி), டாக்டர் பெசன்ட் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 24 Mar 2023 Read Full PDF

கட்டுரையாளர்: திருமதி K. M. சுந்தரி*1 எம். எட், ஆய்வு மாணவி

நெறியாளர்: முனைவர். த. சகாய சைலா*2, உதவிப்பேராசிரியர்

என்.கே.தி. தேசிய மகளிர் கல்வியியல் கல்லூரி (தன்னாட்சி), டாக்டர் பெசன்ட் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005

Abstract (ஆய்வு சுருக்கம்)

A field study was used to find out the relationship between both thinking ability and learning achievement of school students. In this, 300 students studying in high schools in Chennai district were selected as research samples through a simple method. Using data collected from students. The results of the study which converted the data into value points and found the values of statistical analysis such as mean plot deviation and t-test showed a difference in thinking ability between male and female students of ninth grade. There is a difference in the thinking skills of students studying in government aided schools. The results indicate that there is a difference in thinking ability between government school and private school students. To overcome these differences, teachers must first motivate students to develop critical thinking skills. It is clear that developing thinking skills in students can make better students.

ஆய்வு சுருக்கம் (Abstract)

பள்ளி மாணவர்களின் சிந்தனைத் திறன் மற்றும் கற்றல் அடைவு இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பினை குறித்து கண்டறிய கள ஆய்வு பயன்படுத்தப்பட்டது. இதில் சென்னை மாவட்டத்தில் உள்ள உயர்நிலை பள்ளிகளில் பயிலும் 300 மாணவர்கள் எளிய முறையில் ஆய்வு மாதிரிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மாணவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை பயன்படுத்தி. தரவுகளை மதிப்பு புள்ளிகளாக மாற்றி புள்ளியியல் பகுப்பாய்வுகளான சராசரி, திட்ட விலக்கம் மற்றும் t- சோதனை போன்றவற்றின் மதிப்புகளை கண்டறிந்து சோதிக்கப்பட்ட ஆய்வின் விளைவாக ஒன்பதாம் வகுப்பு பயிலும் ஆண் மற்றும் பெண் மாணவர்கள் இடையே சிந்தனை திறனில் வேறுபாடு காணப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சிந்தனைத் திறனியில் வேறுபாடு காணப்படுகிறது. அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடையே சிந்தனைத் திறனில் வேறுபாடு காணப்படுகிறது என்பதை முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த வேறுபாடுகளை களைவதற்கு முதலில் ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாடத்துடன் இணைந்த சிந்தனைத் திறனையும் வளர்க்க வேண்டும். சிந்தனை திறனை மாணவர்களிடம் வளர்ப்பதன் மூலம் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும் என்பது தெளிவாக புலனாகிறது.

திறவுச் சொற்கள்:  உயர்நிலைப்பள்ளி, சிந்தனைத் திறன், கற்றல் அடைவு.

முன்னுரை (Introduction)

சிந்திக்கும் ஆற்றல் மனிதர்களுக்கு மட்டுமே உரிய சிறப்பு ஆகும். சிந்தனைத் திறன் பெரிய அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், முன்னேற்றங்களுக்கும் காரணமாக அமைந்துள்ளது. மனிதனின் ஒவ்வொரு சின்னச் செயலிலும் சிந்தனை பின்னிப் பிணைந்துள்ளதைக் காணலாம். சிந்தனை ஓர் அறிவுசார் செயலாகும்.

அறிவு இயக்க வளர்ச்சி தொடர்பாகப் பல்வேறு உளவியல் ஆய்வுகளை மேற்கொண்டவர் ஜீன் பியாஜே சிந்தித்தல்” எனும் மனச்செயல் ஆளுமை வயதளவில் அரும்புவதாக அவர் குறிப்பிடுகின்றார். குழந்தையிடம் பொருண்மை உருவாகும் போதே சிந்தித்தல் எனும் உளச்செயலும் நிகழ்கிறது. அறிவு இயக்கப் போக்கிற்கும் சிந்தித்தலுக்கும் உயரிய பங்கு உண்டு. சிந்தித்தல் நிகழாவிடின் அறிவு இயக்கம் இல்லை. சிந்தித்தலால் நிகழும் அறிவு இயக்கப் போக்கு இரண்டு வழிகளில் காணப்படுவதாக புரோவர்மேன், லாசரஸ் போன்றோர் குறிப்பிடுகின்றனர். அவற்றுள், ஒன்றில் புலக்காட்சி (Perceptual) இயக்கம் மிகுந்துள்ளது. மற்றொன்றில் பொருண்மை (Conceptual) முறைகள் மிகுந்துள்ளன. இவ்விரண்டும் இரண்டு மறுமுனைப் போக்குகளாகும். ஒன்று மிகுந்திருக்கும் போது மற்றொன்று குறையும் என்பது கார்லோ  போன்றோர் கருத்து.

ஆய்வின் தேவை (Need for the Current Research)

வளர்ந்து வரும் இன்றைய உலகில் புதியவற்றைக் கண்டுபிடித்தலுக்கு ஆய்வுதான் இன்றியமையாத ஒன்றாகும். ஆய்வு மக்கள் வாழ்வியலுடன் ஒன்றியதாக, மக்களுக்குப் பயன்படுவதாக விளங்க வேண்டும். இன்றைய சூழலில் எல்லோரும் எல்லாவற்றையும் ஆழ்ந்து நுண்ணிய முறையில் கற்றுத் தெளிய இயலாது.

“கல்வி கரையில் கற்பவர் நாள்சில

மெல்ல நினைக்கின் பிணிபல தெள்ளிதின்

ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்

பாலுண் குருகிற் றெரிந்து”

என்று நாலடியாரும் கூறுவதால் ஆராய்ச்சிப் பணி கண்ணுக்குக் கதிரொளி போன்றதாம். அதனால் ஒவ்வொருவரும், ஒவ்வொரு துறையில், வேறு வேறு பொருள் பற்றி ஆராய்ந்த உண்மைகளை வெளியிடுவது ஒரு சமுதாயக் கடமை ஆகும். நமது அறிவு வளர ஆய்வு தான் சிறந்த கருவி.

காய்தலும், உவத்தலும் அகற்றி, ஆய்வு நெறி போற்றி, குணங்களும் குற்றங்களும் கண்டுதனைத்திறன் மிக்க மாணாக்கர்கள் தாமும் நல்வாழ்வு வாழ்வதுடன், அவர்களது சமுதாயமும் முன்னேற்றமடையவும் உதவுவர்.

ஆய்வு நோக்கம் (Objectives)

  • ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலருக்குமிடையே சிந்தனைத் திறனில் உள்ள வேறுபாட்டைக் கண்டறிதல்
  • தமிழ் மொழி மற்றும் ஆங்கில மொழி பயிலும் மாணவர்களுக்கிடையே சிந்தனைத் திறனில் உள்ள வேறுபாட்டைக் கண்டறிதல்.
  • அரசுப்பள்ளி, அரசு-உதவிப்பெறும் பள்ளி மற்றும் தனியார்ப் பள்ளி மாணவர்களிடையே சிந்தனைத் திறனில் உள்ள வேறுபாட்டைக் கண்டறிதல்.

கருதுகோள் (Hypothesis)

கருதுகோள் - 1

ஒன்பதாம் வகுப்பு பயிலும் ஆண் மற்றும் பெண் மாணவர்களிடையே சிந்தனைத் திறனில் வேறுபாடு இல்லை.

கருதுகோள் - 2

தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கிடையே சிந்தனைத் திறனில் வேறுபாடு இல்லை.

கருதுகோள் - 3

அரசு பள்ளி, அரசு உதவிப்பெறும் பள்ளி மற்றும் தனியார்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கிடையே சிந்தனைத் திறனில் வேறுபாடு இல்லை.

மாதிரிக் கூறு

ஒவ்வொரு ஆய்விலும் ஒரு முழுமைத் தொகுதியில் இருந்து ஒரு சிறு மாதிரிக்கூறு தேர்ந்தெடுத்தல் என்பது ஆராய்ச்சியின் முக்கியமான கட்டமாகும். கல்வி ஆய்வில் அடிப்படை விவரங்களைப் பெறவும், உண்மைகளை அறியவும் ஒரே தன்மையான பிரிவினரிடமிருந்து கருத்துக்களைப் பெறுவது பயன்தரக் கூடியனவாகும். இவ்வாய்விற்கு மாதிரிக் கூறாக அரசுப் பள்ளியில் படிக்கும் 100 மாணவர்களையும், அரசு உதவிப்பெறும் பள்ளியில் படிக்கும் 100 மாணவர்களையும், தனியார்ப் பள்ளியில் படிக்கும் 100 மாணவர்களையும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஆய்வுக் கருவி (Tool Selection)

      “உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் சிந்தனை திறன் மற்றும் கற்றல் அடைவு ஓர் ஆய்வு” இது தொடர்பான வினாக்கள் ஆய்வாளரால் வடிவமைக்கப்பட்டு தரப்படுத்தப்பட்டது. பாடவல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் நெறியாளர் ஆகியோரின் ஆலோசனையின் அடிப்படையில் ஆய்வுக்கு ஏற்புடைமை உருவாக்கி 50 மாணவர்களிடம் சோதனை, மறு சோதனை முறையில் நம்பகத்தன்மை கணக்கிடப்பட்டது. நம்பகத்தன்மையின் மதிப்பு r = 0.83 தரப்படுத்தப்பட்ட மாணவர்களின் சிந்தனைத் திறன் பற்றிய அனவுகோல் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டன.

சார்பிலக்கிய மீள் பார்வை (Review of related Literature)

சுகஷாசினி பாசி (1991) “படைப்பாற்றல் திறனில் கட்டுரை எழுதும் முறை மற்றும் சிந்தனைத் திறன்” என்னும் தலைப்பில் ஆய்வினை குமரப்பருவத்தினரிடையே மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வில் கட்டுரை எழுத மரபு வழி மற்றும் புதுமை வழி என்ற இருமுறைகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. அதில் மரபு வழி முiறியல் குறைந்த அளவு பக்கமும், புதுமை வழி முறையில் அதிக அளவு பக்கமும் மாணவர்கள் சிந்தனைத் திறன் மூலம் எழுதினர் அது மட்டுமின்றி, வார்த்தைகள் வாக்கியங்கள், பத்திகளும் புதுமை வழியிலேயே அதிகம் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டது.

எல்லீஸ், ராபர்ட். எ. (2006) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கற்றல் மற்றும் சிந்தனைத் திறனில் மாணவர்களின் அணுகுமுறையைக் கண்டறிதல்” என்ற தலைப்பில் 52 முதலாம் ஆண்டு பல்கலைக்கழக அறியிவல் மாணவர்கள் மூலம் எழுதுதல் 52 முதலாம் ஆண்டு பல்கலைக்கழக அறிவியல் மாணவர்கள் மூலம் எழுதுதல் மூலம் கற்றலை தொழில் நுட்பத்தின் வழியாக எவ்வாறு மேம்படுத்தலாம் என்று ஆராயப்பட்டது. தரப்படுத்தப்பட்ட கேள்வித்தாள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொழில் நுட்பத்தை பயன்படுத்தாத மாணவர்கள் சிந்தித்தல் மற்றும் கற்றல் திறன் குறைந்தும், தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் மாணவர்கள் கற்றல் மற்றும் எழுதுதல் திறன் அதிகரித்தும் உள்ளனர் எனக் கண்டறியப்பட்டது.

ஸ்டெர்லேன், எ.கிரகம், ஸ்டெர் (பிப்ரவரி 2009) “உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சிந்தனைத் திறனை கற்றுத்தருதல் ஓர் ஆய்வு”.   அமெரிக்காவைச் சேர்ந்த கலை, வரலாறு சமூகவியல் மற்றும் அறிவியல் கற்பிக்கும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களின் சிந்தனைத் திறமை, சிந்தனையில் அவர்களுக்குள்ள தன்னம்பிக்கை, தங்களின் மாணவர்கள் பற்றிய அவர்களின் நம்பிக்கை பற்றி ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் சிந்தனைத் திறனில் உள்ள தரம் பற்றிய சந்தேகங்கள் ஏற்பட்டது. ஆசிரியர்கள் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குக் கொடுத்த சிந்தனை வேலைகள் மிகச் சிறியதாகவே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தரவுப் பகுப்பாய்வு (Data Analyses)

அட்டவணை-1

உயர்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சிந்தனைத் திறனில் எவ்வித வேறுபாடும் இல்லை

மாறுபாட்டிற்கான வாயில்

வரம்பற்ற பாகை (னக)

விலக்க வர்க்க கூடுதல்

விலக்க வர்க்க கூடுதலின் சராசரி

F-ன் மதிப்பு

சிறப்பு வரம்பு எல்லை

குழுவினருக்கிடையே

2

1471.647

735.823

9.926

0.01*

குழுவினருக்குள்ளே

297

22017.020

74.131

மொத்தம்

299

23488.667

809.954

மேற்கண்ட அட்டவணையில் F-ன் மதிப்பு 9.926 ஆகும். இம்மதிப்பு அட்டவணையின் 0.01 சிறப்பு வரம்ப எல்லையின் மதிப்பைவிட அதிகமாக இருப்பதால் சிந்தனை திறன் வேறுபாடு உள்ளது.

                             அட்டவணை-2

அரசு மற்றும் அரசு-உதவிப்பெறும் உயர்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சிந்தனை திறனில் எவ்வித வேறுபாடும் இல்லை.

வ. எண்

கல்லூரியின் வகை

மாணவ ஆசிரியர்களின் எண்ணிக்கை

கூட்டு சராசரி

திட்ட விலக்கம்

SEM

T-ன் மதிப்பு

1

அரசு கல்லூரி

100

63.83

9.416

0.942

3.182*

 

அரசு உதவிப்பெறும் கல்லூரி

100

67.72

7.794

0.779

மேற்கண்ட அட்டவணையில் t-ன் மதிப்பு 3.182 ஆகும்.  இம்மதிப்பு அட்டவணையின் 0.01 சிறப்பு வரம்பு எல்லையின் மதிப்பைவிட அதிகமாக இருப்பதால் அரசு மற்றும் அரசு-உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சிந்தனைத் திறனில் வேறுபாடு உள்ளது.

                              அட்டவணை - 3

அரசு மற்றும் தனியார் உயர்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சிந்தனை திறனில் எவ்வித வேறுபாடும் இல்லை

வ. எண்

கல்லூரியின் வகை

மாணவ ஆசிரியர்களின் எண்ணிக்கை

கூட்டு சராசாரி

திட்ட விலக்கம்

SEN

t-ன் மதிப்பு

1

அரசு கல்லூரி

100

63.83

9.416

0.942

4.106*

2

தனியார் கல்லூரி

100

69.05

8.543

0.854

மேற்கண்ட அட்டவணையில் t-ன் மதிப்பு 4.106 ஆகும்.  இம்மதிப்பு அட்டவணையின் 0.01 சிறப்பு வரம்பு எல்லையின் மதிப்பைவிட அதிகமாக இருப்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சிந்தனைத் திறனில் வேறுபாடு உள்ளது.

                               அட்டவணை-4

அரசு-உதவிப்பெறும் மற்றும் தனியார் உயர்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சிந்தனை திறனில் வேறுபாடும் இல்லை

வ. எண்

கல்லூரியின் வகை

மாணவ ஆசிரியர்களின் எண்ணிக்கை

கூட்டு சராசரி

திட்ட விலக்கம்

SEM

t-ன் மதிப்பு

1

அரசு உதவிப்பெறும் பள்ளி

100

67.72

7.794

0.779

1.150*

2

தனியார் பள்ளி

100

69.05

8.543

0.854

மேற்கண்ட அட்டவணையில் t-ன் மதிப்பு 1.150 ஆகும்.  இம்மதிப்பு அட்டவணையின் 0.01 சிறப்பு வரம்பு எல்லையின் மதிப்பை விட குறைவாக இருப்பதால் அரசு-உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சிந்தனைத் திறனில் வேறுபாடு இல்லை.

ஆய்வு முடிவு (Research Findings)

  • ஒன்பதாம் வகுப்பு பயிலும் ஆண் மற்றும் பெண் மாணவர்களிடையே சிந்தனைத் திறனில் வேறுபாடு காணப்படுகிறது.
  • அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சிந்தனைத் திறனில் வேறுபாடு காணப்படுகிறது.
  • அரசுப் பள்ளி மற்றும் தனியார்ப் பள்ளி மாணவர்களிடையே சிந்தனைத் திறனில் வேறுபாடு காணப்படுகிறது.

கல்வியியல் தாக்கம் (Educational Implications)

மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து கிடைக்கப்பெற்ற முடிவில் சிந்தனைத் திறனை தூண்டுவதன் மூலம் அரசுப்பள்ளி, அரசு உதவிப்பெறும் பள்ளி, மற்றும் தனியார்ப் பள்ளி மாணவர்களின் கற்றல் அடைவை அதிகரிக்க இயலும். மாணவர்களின் தேர்ச்சி அடைவு என்பது சிறப்பான முறையில் அமைய பெற்றோர்களும் ஆசிரியர்களும் முன் வரவேண்டும். மாணவர்களின் சிந்தனை திறனை தூண்டுவதன் மூலம் கற்றல் அடைவ அதிகரிக்கின்றது என்று இதன் மூலம் அறியலாம்.

ஆய்வு பரிந்துரை (Suggestions for Further Research)

ஆய்வாளர் தம் படிப்பு மற்றும் பட்டறிவிற்கேற்ப இந்த ஆய்வைத் தொடர்ந்து கீழ்வரும் தலைப்பில் ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.

  • மாணவர்களின் சிந்தனை திறனுக்கும் பாடத்திட்டத்திற்குத் தொடர்புள்ளதா என ஆய்வு மேற்கொள்ளலாம்.
  • கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்ப்புற மாணவர்களுக்கும் இடையே சிந்தனை திறனுக்கும் அவர்தம் அடைவிற்கும் தொடர்புள்ளதா எனக் கண்டறிதல்

முடிவுரை (Conclusion)

“உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் சிந்தனைத் திறன் மற்றும் கற்றல் அடைவ ஓர் ஆய்வு” என்னும் இவ்வாய்வில் பெறப்பட்ட தகவல்கள் அனைத்தும் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டு, புள்ளியல் முறைகளைக் கொண்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டது. இதில் கண்டுபிடிப்புகள் கல்வியின் பரிந்துரைகள் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

மேற்பார்வை நூல்கள் (Reference)

எல்லீஸ், ராபர்ட். எ ( 2006) - தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கற்றல் மற்றும் சிந்தனைத்திறன் கண்டறிதல்.

சுஹாசினி பாசி (1991) - படைப்பாற்றல் திறனில் கட்டுரை எழுதுதல்

வீரப்பன். பா (2004) உயர்நிலை தமிழ் கற்பித்தலில் புதிய ஆணுகுமுறைகள் வனிதா பதிப்பகம், முதற் பதிப்பு.

வேணுகோபால் இ.பா. (1993) மணிகல்வி உளவியல், சகுந்தலா வெளியீட்டகம், இந்திராணி, வேலூர் - 632512.

ஸ்டெர்லேன். எ (பிப்ரவரி 2009) உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சிந்தனையே கற்றுத் தருதல்.