ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

“தொடக்கநிலை பள்ளி மாணவர்களுக்கு தமிழ் பாடத்தை பல்லூடகத்தின் வழி கற்பித்தலில் திறன்மேம்பாடு” (“Skill Development in Teaching Tamil Subject to Primary School Students through Multimedia”)

திருமதி த. சுவப்னா*1, முனைவர். த. சகாய சைலா*2, என். கே. தி. தேசிய மகளிர் கல்வியியல் கல்லூரி (தன்னாட்சி), டாக்டர் பெசன்ட் சாலைஇ திருவல்லிக்கேணி, சென்னை 24 Mar 2023 Read Full PDF

கட்டுரையாளர்: திருமதி த. சுவப்னா*1, எம். எட், ஆய்வு மாணவி

நெறியாளர்: முனைவர். த. சகாய சைலா*2, உதவிப்பேராசிரியர்

என். கே. தி. தேசிய மகளிர் கல்வியியல் கல்லூரி (தன்னாட்சி), டாக்டர் பெசன்ட் சாலைஇ திருவல்லிக்கேணி, சென்னை - 600 005

Abstract (ஆய்வு சுருக்கம்)

A study was carried out on “Skill Development in Teaching Tamil Subject to Primary School Students through Multimedia”. In this, 50 students studying in primary school were selected as research samples in simple method and field study was carried out. Using data collected from students. As a result of the study, the data were converted into value points and tested by statistical analysis such as mean plot interpretation and t-test. The range of marks achieved in the pre-exam and post-examination in the multi-media teaching method is seen to improve. It is observed that the achievement of post-test scores of multimedia teaching method is better than the post-test scores of traditional teaching method. Through this study under the title of Effectiveness in Multilingual Teaching of Tamil to Primary School Students, it can be seen that multimedia teaching is better than traditional teaching. So it is certain that teaching in multimedia mode can improve the learning ability of students.

ஆய்வு சுருக்கம் (Abstract)

“தொடக்கநிலை பள்ளி மாணவர்களுக்கு தமிழ் பாடத்தை பல்லூடகத்தின் வழி கற்பித்தலில் திறன்மேம்பாடு” குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தொடக்கநிலைப் பள்ளியில் பயிலும் 50 மாணவர்கள் எளிய முறையில் ஆய்வு மாதிரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாணவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை பயன்படுத்தி. தரவுகளை மதிப்பு புள்ளிகளாக மாற்றி புள்ளியியல் பகுப்பாய்வுகளான சராசரி, திட்ட விளக்கம் மற்றும் t-சோதனை போன்றவற்றில் மதிப்புகளை கண்டறிந்து சோதிக்கப்பட்ட ஆய்வின் விளைவாக மரபு வழி கற்பித்தல் முறையில் முன் தேர்வு, பின் தேர்வில் அடைந்த மதிப்பெண்களின் அடைவு மேம்பட்டு காணப்படுகிறது. பல்லூடக வழி கற்பித்தல் முறையில் முன் தேர்வு, பின் தேர்வில் அடைந்த மதிப்பெண்களின் அடைவு மேம்பட்டு காணப்படுகிறது. மரபு வழி கற்பித்தல் முறையின் பின் தேர்வு மதிப்பெண்களை விட பல்லலூடக கற்பித்தல் முறையின் பின் தேர்வு மதிப்பெண்களின் அடைவு மேம்பட்டு காணப்படுகிறது. தமிழ் பாடத்தை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பல்லலூடகடகத்தின் வழி கற்பித்தலில் திறன்மேம்பாடு என்ற தலைப்பின் கீழ் செய்யப்பட்ட இவ்வாய்வில் மூலம் பல்லூடக வழி கற்பித்தல், மரபு வழி கற்பித்தலை விட சிறந்ததாக இருப்பது அறிய முடிகிறது. எனவே பல்லூடக முறையில் கற்பித்தல் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த இயலும் என்பது திண்ணம்.

திறவுச் சொற்கள்:  தொடக்கநிலைப்பள்ளி, தமிழ் மொழிப்பாடம், பல்லூடகம்.

முன்னுரை (Introduction)

21 ஆம் நூற்றாண்டின் சகாப்தம் பெரும்பாலும் ஒரு தொழில்நுட்ப சகாப்தமாகவே கருதப்படுகிறது. தொழில்நுட்பம் இன்று மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது. வகுப்பறை தொழில்நுட்பத்தின் வரலாறு பழமையான வகுப்பறை தமிழ் மரபில் நீண்டகாலம் பனை ஓலையும் எழுத்தாணியும் பயன்பாட்டில் இருந்தது. இந்த மரபு ஆங்கிலேயர் வருகையுடன் முடிவடைகிறது. வானொலியின் வருகை மாணவர்களின் கேட்டால் திறனையும் அதன் பின்னர் புகைப்படம் மற்றும் வீடியோவின் வருகை காட்சித் திறன் அதிகரிப்பையும் விருத்தி அடைய வைத்தது. மேலும் ஒரு O.H.P வருகை காட்சியையும் பன்மடங்கு ஆக்கியது. கணினியின் வருகை கல்வி உலகில் பெரும் புரட்சியாக கொள்ளப்படுகின்றது. தொடர்ந்து சமூக வலைத் தளங்களின் வருகை கல்வியின் கணிசமான பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டன. இன்று பல்லூடகத்துடன் வகுப்பறை நடைமுறைக்கு வந்துள்ளன. தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் அவர்களின் கற்றலில் தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது. மாணவர்களின் கற்றல் மற்றும் ஊடாடும் தன்மை அதிகரிக்கின்றது. பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் தொழில்நுட்பத்தை தவிர்க்க இயலாததாகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் இணையம் பல மடங்குங்களால் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. இன்றைய மாணவர்கள் கல்வியில் இணையத்தை பயன்படுத்தி நல்ல முறையில் கல்வி கற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள்.

ஆய்வின் தேவை (Need for the Current Research)

இன்றைய கல்வி சூழலில் கணிதம் அறிவியல் முதலான பாடங்கள் பல்லூடக கணினி, கருத்தளாவுதல் வீடியோக்ககள், ‘யு ட்யூப் ஸ்கூல்’ மற்றும் குறுந்தகடுகள் போன்ற பல்வேறு அமைப்பின் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதால் கற்றல் அடைவு மேம்பட்டுள்ளது. அதே போல் தமிழ்பாடத்தை பல்லூடக கணினி மற்றும் ‘யு ட்யூப் வீடியோக்கள் அமைப்பின் மூலம் கற்பித்தால் கற்றல் அடைவு மேம்படுமா? என்பதனைக் கண்டறியவும் வருங்கால வகுப்பறைகளில் பல்லூடக கணினி அமைப்பு முதன்மை இடத்தை பிடித்து விடுமாதலால் கணினி வழி தமிழ்ப்பாடமும் கற்பிக்கப்பட வேண்டும் என்ற நோக்கிலும் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழில் இத்தகைய ஆய்வு பெரிதளவு நடைபெறவில்லை என்பதால் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆய்வு நோக்கம் (Objectives)

  • மரபுவழி கற்பித்தல் முறையில் முன்தேர்வு, பின் தேர்வில் அடைந்த மதிப்பெண்களின் அடைவை கண்டறிதல்.
  • பல்லூடக வழி கற்பித்தல் முறையில் முன்தேர்வு, பின் தேர்வில் அடைந்த மதிப்பெண்களின் அடைவை கண்டறிதல்.
  • மரபுவழி கற்பித்தல் முறையின் பின் தேர்விற்கும், பல்லூடக வழி கற்பித்தல் முறையின் பின் தேர்விற்கும் இடையே வேறுபாடு உள்ளதா எனக் கண்டறிதல்.

கருதுகோள் (Hypothesis)

  • மரபுவழி கற்பித்தல் முறையில் முன் தேர்வு, பின் தேர்வில் அடைந்த மதிப்பெண்களுக்கு இடையே குறிப்பிடத் தகுந்த வேறுபாடு இல்லை;
  • பல்லூடக வழி கற்பித்தல் முறையில் முன்தேர்வு, பின் தேர்வில் அடைந்த மதிப்பெண்களுக்கு இடையே குறிப்பிடத் தகுந்த வேறுபாடு இல்லை;
  • மரபுவழி கற்பித்தல் முறையின் பின் தேர்விற்கும், பல்லூடக வழி கற்பித்தல் முறையின் பின் தேர்விற்கும இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை;

மாதிரிக் கூறு (Sample Distribution)

சென்னையிலுள்ள பள்ளிகளில் அரசுப் பள்ளியிலிருந்து தொடக்கப் பள்ளி பயிலும் 50 மாணவர்கள் மாதிரிகளாக தேர்தெடுக்கப்பட்டனர்.

மாதிரிக் கூறு (Sample Distribution)

ஆய்வாளர் தமது ஆய்வுக்குத் தேவைப்படும் விவரங்களை சேகரிப்பதற்கு பயன்படுத்தும் பல்வேறு கருவிகள் “ஆய்வுக் கருவிகள்” (Research Tools or instruments) என அழைக்கப்படுகின்றன. ஓவ்வொரு ஆய்விலும் பல்வேறு புதிய கதவல்களைப் பெறுவதற்கு இவை தேவைப்படுகின்றன. இவை ஆய்வின் நோக்கங்களுக்கு ஏற்றவையாகும், ஆய்வுக்குட்படுவோரது நிலைமைகளுக்கு ஏற்பவும் அமைய வேண்டும். கல்வி ஆய்வுகளில் பெரும்பாலும் பேப்பர், பென்சில் மூலம் தகவல்களைப் பெறும் சாதனங்களே பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சில ஆய்வுகளில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கருவிக்களங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறாக அவ்வாய்விற்கு தேவையான தரவுகளைப் பெறுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஆய்வுக் கருவி

  • கற்றல் அடைவை சோதிக்கும் வினாத்தாள்

சார்பிலக்கிய மீள் பார்வை (Review of related Literature)

காரல் எ பியர்டு (2005) வகுப்பறையில் மரபுவழி கற்பித்தல் முறைக்கும் கணினியைக் கொண்ட கற்பித்தல் முறைக்கும் இடையே உள்ள வேறுபாடும் அதன் மதிப்பீடும் என்ற ஆராய்ச்சியில் கணினி முறையில் கற்பித்தலினால் ஏற்படும் வளர்ச்சியும் மதிப்புடும் ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாராய்ச்சியில் ஒரே நிலை வயதுடைய மாணவர்களும், கணினி அனுபவம் நிறைந்தவர்களும் பங்கு கொண்டனர். பங்கு கொண்டவர்களை இரு குழுக்களாக பிரிந்தனர். இவ்விரு குழுக்களுக்கும் ஒரே மாதிரியான பாடங்கள் மேற்கண்ட கணினி முறையின் படியும் மரபுவழி முறைப்படியும் கற்றக் கொடுக்கப்பட்டது. அவற்றில் கணினி முறையில் கற்பிக்கப்பட்ட மாணவர்களே சிறந்து விளங்கினர். இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்ட முறைகள் தெளிவாகவும் முறையாகவும் கூறப்பட்டுள்ளது. கணினி முறையானது பல முன்னெற்றங்களையும் முறைகளையும் கொண்டுள்ளது. இவை வகுப்பறையில் பல வளர்ச்சிகளையும் பல முன்னேற்றங்களையும் மாணவர்களிடையே கொண்டு வருவதற்கு பயன்பட்டது.

நிக்கோல்சன் ஜெனிபர் மற்றும் நிக்கோல்சன் ஐரான் (2010) செய்தித் தொடர்பு தொழில்துறையில் கற்பிப்பதற்காக திறம்பட அமைக்கப்பட்டுள்ள வீடியோக்களைப் பயன்படுத்துதல் பற்றி ஆய்வு செய்தனர். பல்லூடக கணினி முறையினை அவற்றிலும் குறிப்பாக திறம்பட அமைக்கப்பட்டுள்ள வீடியோக்களைக் கொண்டு மாணவர்களுக்கு கற்பித்தல் என்பதே ஆகும். இவ்வாறு கற்பிப்பது ஆசிரியர்களுக்கு மாணவர்களுடைய திறனை எம்.எஸ் ஆக்ஸஸிலும் முன்னேற்ற முடிந்தது. இந்த ஆய்விற்கு தேவையான விபரங்கள் மாணவர்களிடம் கணக்கெடுப்பு முறை மூலம் பெறப்பட்டது. இந்த ஆய்வில் கணக்கெடுப்பு முறையின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் படி பல்லூடகக் கணினி முறையின் மூலம் படிப்பதினால் மாணவர்களுடைய கற்றல் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டதும் அல்லாமல் அவர்களுக்கு பல விதங்களில் பயனாகவும் இருந்தது. வீட்டுப்பாட வேலைகளை எளிமையாகப் பூர்த்தி செய்வதற்கும் அவை பயனள்ளதாக அமைந்தன. மேலும், மாணவர்களுக்கு ஆசிரியர்களுக்கும் வகுப்பறையில் கற்பிப்பதை விட பல்லூடகச் சூழ்நிலையானது அவர்களின் அறிவாற்றலைப் பெருக்குவதற்கு மிகவும் பயன்பட்டது.

 

தரவுப் பகுப்பாய்வு (Data Analyses)

அட்டவணை - 1

மரபுவழி கற்பித்தல் முறையில் முன்தேர்வு, பின் தேர்வு சோதனையில் அடைந்த மதிப்பெண்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை                    t-சோதனை மூலம் காட்டும் அட்டவணை

சோதனை

மொத்த மாணவர்களின் எண்ணிக்கை

சராசரி

திட்டவிலக்கம்

SED

CR

சிறப்பு வரம்பு எல்லை

முன் தேர்வு

50

33.21

13.96

3.96

11.15

0.01

பின் தேர்வு

50

38.53

14.01

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி மரபுவழி கற்பித்தலில் முன்தேர்வு மதிப்பெண்களின் சராசரி மற்றும் திட்டவிலக்க மதிப்பு முறையே 33.21, 13.96 ஆகும். மேலும் மரபுவழி கற்பித்தலில் பின்தேர்;வு மதிப்பெண்களின் சராசரி மற்றும் திட்டவிலக்க, மதிப்பு முறையே 38.53, 14.01 ஆகும். 0.01 சிறப்பு வரம்பு எல்லையில் CR ன் மதிப்பு 11.15 ஆகும். எனவெ மரபுவழி கற்பித்தல் முறையில் முன்தேர்வு, பின்தேர்வில் அடைந்த மதிப்பெண்களுக்கு இடையேக் குறிப்பிடத் தகுந்த வேறுபாடு காணப்படுகிறது. இதன்படி முன்தேர்வு மதிப்பெண்களை விட பின்தேர்வு மதிப்பெண்களின் அடைவு மேம்பட்டுக் காணப்படுகிறது.

அட்டவணை - 2

பல்லூடக வழி கற்பித்தல் முறையில் முன்தேர்வு, பின் தேர்வு சோதனையில் அடைந்த மதிப்பெண்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை t-சோதனை மூலம் காட்டும் அட்டவணை

சோதனை

மொத்த மாணவர்களின் எண்ணிக்கை

சராசரி

திட்ட விலக்கம்

SED

CR

சிறப்பு வரம்பு எல்லை

முன் தேர்வு

50

14.86

2.46

0.296

16.66

0.01

பின் தேர்வு

50

40.00

23.32

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி பல்லூடக வழி கற்பித்தலில் முன்தேர்வு மதிப்பெண்களின் சராசரி மற்றும் திட்டவிலக்க மதிப்பு முறையே 14.86, 2.46 ஆகும். மேலும் பல்லூடகவழி கற்பித்தலில் முன்தேர்வு மதிப்பெண்களின் சராசரி மற்றும் திட்டவிலக்க, மதிப்பு முறையே 40.00, 23.32 ஆகும். 0.01 சிறப்பு வரம்பு எல்லையில் CR ன் மதிப்பு 16.66 ஆகும். எனவே பல்லூடகவழி கற்பித்தல் முறையில் முன்தேர்வு, பின்தேர்வில் அடைந்த மதிப்பெண்களுக்கு இடையேக் குறிப்பிடத் தகுந்த வேறுபாடு உள்ளது. இதன்படி முன்தேர்வு மதிப்பெண்களை விட பின்தேர்வு மதிப்பெண்களின் அடைவு மேம்பட்டுக் காணப்படுகிறது.

அட்டவணை - 3

மரபுவழி கற்பித்தல் முறையின் பின்தேர்விற்கும், பல்லூடக வழி கற்பித்தல் முறையின் பின்தேர்விற்கும் இடையே உள்ள வேறுபாட்டை   t-சோதனை மூலம் காட்டும் அட்டவணை

சோதனை

மொத்த மாணவர்களின் எண்ணிக்கை

சராசரி

திட்ட விலக்கம்

SED

CR

சிறப்பு வரம்பு எல்லை

மரபுவழி கற்பித்தல் முறை பின் தேர்வு

50

38.53

14.01

0.463

13.87

0.01

பல்லூடக வழி கற்பித்தல் முறை பின் தேர்வு

50

40.00

23.32

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி மரபுவழி கற்பித்தலில் பின்தேர்வு மதிப்பெண்களின் சராசரி மற்றும் திட்டவிலக்க மதிப்பு முறையே 38.53, 14.01 ஆகும். மேலும் பல்லூடகவழி கற்பித்தலில் பின்தேர்வு மதிப்பெண்களின் சராசரி மற்றும் திட்டவிலக்க, மதிப்பு முறையே 40.00, 23.32 ஆகும். 0.01 சிறப்பு வரம்பு எல்லையில் CR ன் மதிப்பு 13.87 ஆகும். எனவெ மரபுவழி கற்பித்தல் முறையின் பின்தேர்விற்கும், இடையேக் குறிப்பிடத் தகுந்த வேறுபாடு உள்ளது. இதன்படி மரபுவழி கற்பித்தல் முறையின் பின்தேர்வு மதிப்பெண்களை விட பல்லூடக கற்பித்தல் முறையின் பின்தேர்வு மதிப்பெண்களின் அடைவு மேம்பட்டுக் காணப்படுகிறது.

 

ஆய்வு முடிவு (Research Findings)

கருதுகோள் - 1

மரபுவழி கற்பித்தல் முறையில் முன்தேர்வு, பின் தேர்வில் அடைந்த மதிப்பெண்களுக்கு இடையே குறிப்பிடத் தகுந்து வேறுபாடு இல்லை

இக்கருதுகோள் t-சோதனையின் மூலம் சோதிக்கப்பட்டுள்ளதை அட்டவணை -1ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுள் மரபுவழி கற்பித்தல் முறையில் முன்தேர்வு பின் தேர்வில் அடைந்த மதிப்பெண்களுக்கு இடையே குறிப்பிடத் தகுந்த வேறுபாடு உள்ளது. இதன்படி மரபுவழிக் கற்பித்தல் முறையில் முன்தேர்வு மதிப்பெண்களை விட பின் தேர்வு மதிப்பெண்களின் அடைவு மேம்பட்டுக் காணப்படுகிறது.

எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள கருதுகோள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

கருதுகோள் - 2

பல்லூடக வழி கற்பித்தல் முறையில் முன்தேர்வு, பின் தேர்வில் அடைந்த மதிப்பெண்களுக்கு இடையே குறிப்பிடத் தகுந்த வேறுபாடு இல்லை.

இக்கருதுகோள் t-சோதனையின் மூலம் சோதிக்கப்பட்டுள்ளதை அட்டவணை 2-ல் குறிப்பிட்டுள்ளது. இவற்றுள் பல்லூடக வழி கற்பித்தல் முறையில் பயிலும் மாணவர்களின்  முன்தேர்வு, பின் தேர்வில் அடைந்த மதிப்பெண்களுக்கு இடையே குறிப்பிடத் தகுந்த வேறுபாடு உள்ளது. இதன்படி பல்லூடக வழி கற்பித்தல் முறையில் பயிலும் மாணவர்களின் முன்தேர்வு மதிப்பெண்களை விட பின் தேர்வு மதிப்பெண்களின் அடைவு மேம்பட்டுக் காணப்படுகிறது.

எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள கருதுகோள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

கருதுகோள் - 3

மரபுவழி கற்பித்தல் முறையின் பின் தேர்விற்கும், பல்லூடக வழி கற்பித்தல் முறையின் பின் தேர்விற்கும் இடையே குறிப்பிடத் தகுந்த வேறுபாடு இல்லை.

இக்கருதுகோள் t-சோதனையின் மூலம் சோதிக்கப்பட்டுள்ளதை அட்டவணை 3-ல் குறிப்பிட்டுள்ளது. இவற்றுள் மரபுவழி கற்பித்தல் முறையின் பின் தேர்விற்கும், பல்லூடக வழி கற்பித்தல் முறையின் பின்தேர்விற்கும் இடையே குறிப்பிடத் தகுந்த வேறுபாடு உள்ளது. இதன்படி மரபுவழி கற்பித்தல் முறையின் பின்தேர்வு மதிப்பெண்களை விட பல்லூடக வழி கற்பித்தல் முறையின் பின் தேர்வு மதிப்பெண்களின் அடைவு மேம்பட்டுக் காணப்படுகிறது.

எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள கருதுகோள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

கல்வியியல் தாக்கம் (Educational Implications)

கல்வியியல் தொழில்நுட்பத்தினால் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்ற இக்காலத்தில் கணினி மூலம் பல்லூடகத்தைப் பயன்படுத்தி கற்பித்தல் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

நம்நாட்டில் பள்ளிகளில் கல்வியைக் கணினித் துணையோடு கற்பித்தல் என்பது தொடக்க நிலையிலேயே உள்ளது. அதிலும் தமிழில் கணினியைப் பயன்படுத்திக் கற்பித்தல் என்பது இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. அதுவும் தமிழ் பாடத்தை பற்றிய பல்லூடக வழி கற்பித்தல் அமைப்பு முறை சரிவர வளர்ச்சி அடையவில்லை. ஆவை வளர்ச்சி அடைய வேண்டுமெனில் பல்லூடகம் சார்ந்த தொழில் நுட்பங்கள் தமிழில் உருவாக்கப்பட வேண்டும். தமிழில் வன்பொருட்களும் பெருமளவில் உருவாக்கப்பட வேண்டும்.

தமிழில் பல்லூடகக் கணினி வழிக் கற்பித்தல், கணினியில் சுயக்கற்றல் உருவாதல் போன்றவற்றிகான அடிகோல் நாட்டவேண்டும். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கணினியைத் தமிழில் பயன்படுத்துவதற்கான பயிற்சிகள் தரப்பட வேண்டும். அரசுப்பள்ளிகளில் ஆரம்ப நிலையிலேயே கணினி கல்வி தரப்பட வேண்டும். இதனால் கணினி பற்றிய சிறந்த மனப்பான்மை ஏற்பட்டு கல்வியில் கணினியின் பயன்பாடு அதிகரிக்கும். இதன் மூலம் பல்லூடக வழிக் கற்பித்தலி இன்னும் அதிகமாக மேம்படும்.

ஆய்வு பரிந்துரை (Suggestions for Further Research)

  • அரசுப் பள்ளி, அரசு உதவிப் பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கிடையேயும் இவ்வாய்வை மேற்கொள்ளலாம்
  • நகர்புறம் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இடையே கற்றல் அடைவு மேம்படுமா என அறியலாம்
  • உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கிடையே இவ்வாய்வை மேற்கொள்ளலாம்
  • மாணவர்களின் சமூக பொருளாதாரப் பின்னணிக்கும், பெற்றோரின் கல்வித் தகுதிக்கும், மாணவர்களின் பிறப்பு வரிசைக்கும், பல்லூடக கற்பித்தல் முறை மாணவர்களின் கற்றல் அடைவிற்கும் இடையே தொடர்பு உள்ளதா எனக் கண்டறியலாம்.

முடிவுரை (Conclusion)

        “தமிழ்பாடத்தை தொடக்க பள்ளி மாணவர்களுக்கு பல்லூடகத்தின் வழி கற்பித்தலில் திறன்மேம்பாடு” என்ற தலைப்பின் கீழ் செய்யப்பட்ட இவ்வாய்வின் மூலம் பல்லூடக வழிக் கற்பித்தல் மரபு வழிக் கற்பித்தலை விட சிறந்ததாக இருப்பது அறிய முடிகிறது. எனவே பல்லூடக முறையில் கற்பித்தால் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் என்பது திண்ணம்.

 

மேற்பார்வை நூல்கள் (Reference)

பேராசிரியர். நாகராஐன். கி (2003), “கல்வியியல் புதுமைகள்”, சென்னை இராம் பதிப்பகம்.

வளர்தமிழ்ச் செல்வர் மாணவ முதஸ்பா (2004), “செம்மொழி உள்ளும் புறமும்,  சென்னை அறிவியல் தமிழ் அறக்கட்டளை.

பரமேஸ்வரி (2005), “பதினோறாம் வகுப்பு மாணவர்களுக்குக் கணினி வழியாக பொருளியல் கற்பித்தலின் திறன்பாடு” – சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

பிரதிபா (2006), “கல்வியியல் தொழில் நுட்பம்”, சென்னை சாரதா பதிப்பகம்.

முனைவர். மீனாட்சிசுந்தரம் .அ (2006) “கல்வி நுட்பவியல் தகவல் தொடர்பு நுட்பவியலும் மேலாண்மையும்”, திண்டுக்கல் காவ்யமாலா பதிப்பகம்.

பேராசிரியர். கணபதி. வி. (2007), நாற்றமிழ் கற்பிக்கும் முறைகள்,  சென்னை சாந்தா பதிப்பகம்.

பேராசிரியர். நாகரரின். கி (2007). “கல்வி ஆராய்ச்சி நெறிமுறைகள், சென்னை, இராம் பதிப்பகம்.