ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

கையறுநிலைப் பாடல்கள் உணர்த்தும்  மெய்ப்பாடுகள் (Hands - on songs are sentimental truths)

சி.ஜோதிலட்சுமி, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வியல் துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் மாவட்டம் 02 May 2023 Read Full PDF

கட்டுரையாளர்: சி.ஜோதிலட்சுமி, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வியல் துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் மாவட்டம்.

நெறியாளர்: முதுமுனைவர் இரா.சங்கர், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வியல் துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் மாவட்டம்.

 

ஆய்வுச்சுருக்கம் ( Study Summary)

Truths are used to express the intuitions of people. The truthsexpressed in the four hundred hand written songs can be clearly understood with the four types of states of truths such asindignity, loss, movement, and poverty.even today, people follow  the truths. Toldby tolkappiyar, lecturers like llampuranar and professor have explaind the  truths.

மனிதர்களின் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்திக்காட்ட மெய்ப்பாடுகள் பயன்படுகிறது. மெய்ப்பாட்டின் நிலைகலன்களான இழிவு, இழவு, அசைவு, வறுமை  போன்ற நால்வகை நிலைகலன்களைக் கொண்டு புறநானூற்றுக் கையறுநிலைப் பாடல்களில் வெளிப்படும் மெய்ப்பாடுகளை தெளிவாக அறியமுடிகிறது. தொல்காப்பியர் சொன்ன மெய்ப்பாடுகளைத்தான்  இன்றும் மக்கள்  கடைப்பிடிக்கின்றனர். இளம்பூரணர், பேராசிரியர் போன்ற உரைக்காரர்கள்  மெய்பாடுகளுக்கான விளக்கத்தினை எடுத்துரைத்துள்ளனர்

திறவுச் சொற்கள்

கையறுநிலை (GlovePoisition), மெய்ப்பாடு (Authenticity), அழுகை (Crying), மாரி (Marie), கள் ( Beer), அவலம் (Woe), தாளிஇலை ( Bay leaf).

முன்னுரை (Introduction)  

      மக்களின்  மணிமகுடமாகத் திகழ்ந்துக் கொண்டிருக்கும் இலக்கியம்தான் சங்க இலக்கியம் ஆகும். மக்களின் வாழ்க்கை முறைகளையும் சிக்கல்களையும் இன்பதுன்பங்களையும் அறிந்துக்கொள்வதற்கு இலக்கியங்கள் மிகவும் உதவியாக உள்ளது. மக்கள் தங்களுடைய உள்ளத்து உணர்ச்சிகள் உடலில் வெளிப்படுத்துவதுதான் மெய்ப்பாடு என்று தொல்காப்பியர் விளக்கம் அளித்துள்ளார். எண்வகை மெய்ப்பாடுகளில் ஒன்றான அழுகையில் தோன்றும் நான்கு வகை நிலைகலன்களையும் அவைகளின் மூலம் தோன்றும் கையறுநிலைப் பாடல்களையும் இக்கட்டுரை ஆராயவுள்ளது.

மெய்ப்பாடு விளக்கம்

      மெய்ப்பாடு என்பதற்கு தொல்காப்பியர் தரும் விளக்கம் ஒருவரின் உள்ளத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் அங்கு நிகழ்ந்தவாறே அருகிலுள்ளவர்கள் அறியும்படி உடம்பின் (மெய்யின்) வழி புலப்படுத்திக் காட்டுவதுதான் மெய்பாடாகும்.

      நகையே அழுகை இளிவரல் மருட்கை

      அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று

      அப்பால் எட்டே  மெய்பாடு என்ப 1  

செயிற்றியனார் மெய்பாட்டிற்கு விளக்கம் தருகையில் ,

      உய்ப்போன் செய்தது காண்போருக்கு எய்துதல்

      மெய்ப்பாடு என்ப மெய்யுணர்ந்  தோரே2

நடிப்பவனின் மனஉணர்வுகள்  அப்படியே காண்பவனுக்கும் ஏற்படுவதே மெய்ப்பாடு என்று செயிற்றியம் கூறுகிறது.

அழுகை மெய்பாடும் கையறுநிலையும்

      தான் துன்பத்தை  அடையும் போதோ, பிறர் துன்பத்தைக் கண்டபோதோ உடலின் கண்தோன்றும் உணர்வே அழுகை எனும் மெய்ப்பாடு ஆகும். தன்கண் தோன்றும் துன்பத்தை அழுகை என்றும், பிறர்கண் தோன்றும் துன்பத்தைக் கருணை என்றும் வழங்குதல் மரபு.

      இது இழிவு, இழவு, அசைவு, வறுமை என்னும் நான்கு உணர்ச்சிகளால் பிறக்கும். இழிவு (இழிவுப்படுத்துதல்) இழவு (உயிரையோ பொருளையோ இழத்தல்), அசைவு (முன்னிருந்த சிறப்புக் குன்றித் தளர்தல்), வறுமை (நல்குரவு) என்றும் நான்கையும் நிலைக்களனாகக் கொண்டு தோன்றும். இதனை,

      இழிவே இழவே அசைவே வறுமையென

      விளிவில் கொள்கை அழுகை நான்கே3

என்ற தொல்காப்பிய நூற்பா வழி அறியலாம். செயிற்றியம் நாடகவியல் சார்ந்து அழுகைத் தோன்றுவதற்குரிய காரணங்களை,

      நிலைமை யிழந்து நீங்கு துணையுடைமை

      தலைமை சான்ற தன்னிலை யழிதல்

     இன்னோர் அன்னவை இயற்பட நாடித்

     துன்னினர் உணர்க துணிவறிந் தோரே4

என விரிவாகப் பட்டியலிடுகிறது. அவற்றை எல்லாம் தொல்காப்பியம் சுட்டிய நான்கினுள் அடக்கிவிட முடியும்.

      கவலையொடு புணர்ந்த கண்ணீர் மாரியும், வாடிய நீர்மையும், வருந்திய செலவும், பீடு அழி இரும்பையும், பிரற்றிய சொல்லும், நீறைகை அழிதலும் நீர்மை இல் கிளவியும் என்று அழுகையின்போது தோன்றும்.

      தொல்காப்பியம் காட்டாத சில அழுகை வகைமையிலானப் பாடல்களும்  புறநானூற்றில்,

      நசை தர வந்தேன் நசை  பிறக்குஒழிய

 வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்5

இப்பாடல் பாண்டிய மன்னனின் படையின் வலிமையை அழிக்க விருப்பமுற்று வந்த பகைவர்கள் தற்போது அவ்விருப்பம் நீங்க  இகழ்ச்சியுடன் வாழ்பவர் ஆயினர் எனப் பகைவர் தம் இழிவைக் காட்டி நிற்கின்றது.

      இழிவு காரணமாகத் தோன்றும் அழுகை மெய்ப்பாடு அமைந்துள்ள புறநானூற்றுப் பாடல்களைக் 

      பாதுகாக்காமையால் இழிவு ( புறம் - 5)

     உழவர் குடியைப் பாதுகாக்காமையால் இழிவு  ( புறம்  – 35)

     நீர்நிலைகளைப் பெருக்காமையால் இழிவு ( புறம் - 18)

     முறையாக விரி வாங்காமையால் இழிவு  (புறம் – 184)

     நடுநிலைமை திரிதலால் இழிவு ( புறம் –  55)

     இரவலர்களின் தகுதி இறியாமையால் இழிவு (புறம் – 121, 208)

     அறம்செய்யாமையால்  இழிவு ( புறம் – 363)

     வஞ்சினமொழியை  மறந்தமையால் இழிவு ( புறம் – 71, 78)

     தறுகண்மையை மறத்தலால் இழிவு  ( புறம் – 98)

     முறையின்றி அரசினைக் கைப்பற்றியமையால் இழிவு ( புறம் – 75)

     மறவன் இல்லாதோருடன் போரிடுவதால் இழிவு ( புறம் – 45)

     சாபம் பெறுதலால் இழிவு ( புறம் – 202)

     உரிமை மகளிரை  விட்டுப்பிரிதலால் இழிவு ( புறம் – 145)

     ஈயாமையால் இழிவு ( புறம் – 202)

     முன்னோர்கள் செயலினால் இழிவு  ( புறம் – 151)

என வகைப்படுத்தி ஆராய்ந்துள்ளமை நோக்கத் தக்கதாகும்.

இழவு அழுகை

      உயிரை இழப்பதாலோ அல்லது பொருளை இழப்பதாலோ தோன்றும் அழுகை இழவு எனப்படும். இழவு உயிரானும், பொருளானும் இழத்தல் என இளம்பூரணரும், இழவென்பது தந்தையுந் தாயும் முதலாகிய சுற்றத்தாரையும் இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலியவற்றையும் இழத்தல் எனப் பேராசிரியரும் உரைவகுத்துள்ளனர். அதியமானின் இழப்பை ஔவையார், சிறியகட் பெறினே எனத் தொடங்கும் 235 வது பாடல்,

      ஆசாகெந்தை யாண்டுளன்  கொல்லோ

       இனிப் பாடுநரு மில்லைப் பாடுநர்க் கொன்றும் ஈகநருமில்லை6

என்றும் பாரியின் இழப்பை நினைத்துக் கபிலர் அழும் நிலையை 113 வது பாடல்,

      பாரி மாய்ந்தென கலங்கிக் கையற்று

      நீர்வார் கண்ணேம் தொழுது7

என்றும் காட்சிப்படுத்தி உள்ளன. கணவனை இழந்த பெண் அழும் நிலையை 249 வது அழுதல் ஆனாக் கண்ணன் என்றும், எடுத்துரைக்கின்றன. இழவு காரணமாகத் தோன்றும் அழுகை மெய்ப்பாடு  அமைந்துள்ள புறநானூற்றுப் பாடல்களை சி. கவிதா, கண்ணீர்விட்டு அழுதல், புலம்புதல் என இருவகையாகப் பாகுபடுத்தி முதல்வகையைக் கணவன் இழப்பு, மன்னனின் இழப்பு, சுற்றத்தின் இழப்பு என வகைப்படுத்தியும், இரண்டாவது வகையை இறந்த கணவனிடம் புலம்புதல் ( புறம் – 253)

      தனக்குத்தானே  புலம்புதல் ( புறம் – 273 )

     குயவனிடம் புலம்புதல் ( புறம் –  256)

என வகைப்படுத்தியும் ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

அசைவு அழுகை

      தன் நிலையிலிருந்து தாழ்வதால், உண்டாகும் தளர்ச்சி அசைவு என்னும் அழுகையாகும். அசைவென்பது தளர்ச்சி அது தன்னிலையிற் தாழ்தல் என இளம்பூரணரும் அசைவென்பது பண்டைய நிலைமைகெட்டு வேறொருவாறாகி வருந்துதல் என்று பேராசிரியரும் உரை வகுத்துள்ளனர் சான்று,

      அள் இலைத் தாளி கொய்யு மோனே

       இல் வழக்கு மடமயில் பிணிக்குஞ்

       சொல் வலை வேட்டுவன் ஆயினன் முன்னே8

 இப்பாடலில் முற்காலத்தில் வேட்டைக்காரனாக இருந்தவன் தற்போது தாளி இலையைப் பறித்துக் கொண்டிருக்கின்றான் என்ற தன்னிலைத் தாழ்தலாகிய அசைவு பற்றிய அழுகையைக் காண முடிகிறது. இப்பாடலைப் பேராசிரியர் பிறரிடத்தில் தோன்றிய அசைவு பற்றிய அழுகை என்பார். பிறன்கட்தோன்றிய அசைவு பற்றிய அவலம் .என்னை? இள்ளிழைத்தாளி கொய்யர் நின்றான் இது பொருது என அவலத்துச் சொல்லினமையின் என்பது அவர் கூற்று.

வறுமை அழுகை

      வறுமையின் காரணமாகத் தோன்றும் அழுகை பொருள் இல்லாமையையும் துய்க்கப் பெறாத பற்றுள்ளத்தையும்  குறிப்பதாகும். வறுமை என்பது ஷ ஷ நல்குரவு! என இளம்பூரணரும், ஷ ஷ வறுமையென்பது போகந் துய்க்கப்பெறாத பற்றுள்ளம் என்று பேராசிரியரும் உரை வகுத்துள்ளனர். புறநானூற்றில் இவ்வகைமையில் பலபாடல்கள் அமைந்துள்ளன.

      பாஅ லினமையின் தோலொரு திரங்கி

       இல்லி தூர்ந்த  பொல்லா வறுமுலை

       சுவைத்தொ  றமூஉந்தன் மகத்துமக நோக்கி

       நீரொடு நிறைந்த ஈரிதழ் மழைக்கணென்

       மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ

       நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண9

பெருந்தலைச் சாத்தனாரால் பாடப்பட்ட இப்பாடலில் தன் வறுமையைப் பதிவு செய்துள்ளார். முலையைச் சுவைத்துப் பால் இன்மையால் அழுகிறது. பசியால் அழும் அக்குழந்தையின் முகத்தைப் பார்த்துத் தாயும் அழுகிறாள்  எனத் தன்குடும்ப வறுமையை விளக்குவதால்  இப்பாடல் வறுமை  பற்றிப் பிறந்த அழுகையாயிற்று பேராசிரியர் இப்பாடலைத் தன்கண் தோன்றிய வறுமை பற்றிய அவலம் என்பதற்கு மேற்கோள் காட்டுவதும் இணைத்து நோக்கத்தக்கதாகும். மேலும், இரவலர்களின் வறுமையைக் காட்டும் வகையில்,

      நின்நிசை வேட்கையின் இரவலர் வருவர்அது

      முன்னம்முகத்தின்  உணர்ந்து அவர்

      இன்மை தீர்த்தல் வன்மையானே10

என்றும்,

      வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்

       வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி

      அருள, வல்லை ஆகுமதி11

என்றும் பல பாடல்கள் காணப்படுகின்றன. தன்கண் தோன்றுதல், பிறரிடத்தில் தோன்றுதல் என்ற இரண்டு பகுப்புகளிலுமே புறநானூற்றுப் பாடல்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

இளிவரல் மெய்ப்பாடு

      சாத்தன் மாய்ந்தப் பின்னர் ‘முல்லையும் பூத்தியோ‘ என முல்லையை நோக்கி வருந்தி உரைப்பதாகப் புறநானூற்றுப் பாடலில் அமைந்துள்ளது. வருத்தம் (இளிவரல்) மெய்ப்பாட்டைக் காண முடிகிறது.

இளையோர் சூடார் வளையோர் கொய்யோர்

     வல்வேர் சாத்தன் மாய்ந்தப் பின்றை

     முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே12

சாத்தன் மாய்ந்த பின்னர் ஒல்லையூர் நாட்டிலே மக்கள் எல்லாம் வருத்தமுற்று இருக்கின்றனர். இளைய வீரர்கள், மங்கள மகளிர், பாணன், பாடினி ஆகியோர் அனைவரும் நல்லணிகளை எல்லாம்  துறந்து  வருத்தமுற்று இருக்கும் இவ்வேளையில் முல்லையே நீ மட்டும் பூத்திருப்பது எதற்காக?  யாருக்கும்  பயன்படாத முல்லையும் பூத்தியோ? என்று புலவன் வருத்தமுறப் பாடுவது வருத்தம் (இளிவரல்) என்ற  மெய்ப்பாட்டைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

      குடவாயில் கோச்செங்கணானால் சிறைப்பட்ட கணைக்கால் இரும்பொறை, நீர் வேட்கையால் சிறைக் காவலரை நீர் வேண்ட, காலம் தாழ்த்தித் தந்த நீரை பெறாது உயிர்நீத்தான். அப்போது தன் நிலைக்குத் தானிறங்கிப் பாடுகிறான். கணைக்கால் இரும்பொறை,

குழவி இறப்பினும்

      தொடர்படு ஞமலியின் இடர்படுத்து இரீஇ

      கேள் அல் கேளீர் வேளாண்சிறுபநம்

      ஈன் மரோ  இவ்வுலகத் தானே13

இதனை வள்ளுவர்,

தலையின் இழிந்த மயிர் அணையர்  மாந்தர்

       நிலையின் இழிந்தக் கடை 14

மக்கள் நம் உயர்வுக்கு உரிய நிலையில் இருந்து தாழ்ந்தபோதும் தலையிலிருந்து விழுந்து தாழ்பெற்ற மயிரினைப் போன்றவர் என்று உரைப்பதை அறிய முடிகிறது.

நிறைவுரை (Foreword)

 சங்க இலக்கியங்களில் காணப்படும் கையறுநிலைப் பாடல்களில் மட்டுமில்லாது தொல்காப்பிய   பொருளதிகாரத்தில்  மெய்ப்பாட்டியல் என்னும் இயலில் அழுகை என்னும் மெய்ப்பாடு விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. புறநானூற்றுக் கையறுநிலைப் பாடல்களோடு மெய்பாட்டினை வகைப்படுத்திப் பார்ப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மெய்பாடு என்பது உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளை வெளிப்படுத்த பயன்படுகிறது. s

அடிக்குறிப்புகள் (Foot Notes)

  1. திருஞானசம்பந்தம் ச தொல்காப்பியம் பொருளதிகாரம்  மூலமும் உரையும்  ப – 223, கதிர் பதிப்பகம், திருவையாறு
  2.  மேலது ப - 223
  3. மேலது ப - 224
  4. மேலது ப - 224
  5.  மாணிக்கவாசகன் ஞா புறநானூறு மூலமும் உரையும்  ப -24, உமா பதிப்பகம், சென்னை
  6.  மேலது, ப - 324
  7.  மேலது, ப - 160
  8.  மேலது, ப - 342
  9.  மேலது, ப - 227
  10.  மேலது, ப - 4
  11.  மேலது, ப - 48
  12.  மேலது, ப- 334.
  13.  மேலது, ப - 120
  14.  வரதராசனார் மு, திருக்குறள் தெளிவுரை, ப – 197, கழக வெளியீடு, சென்னை