ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

புதுக்கவிதைகளில் திருநங்கைகளின் வாழ்வியல் (Biographies of transgender people in Modern poetry)

முனைவர் தனலெட்சுமி.ச,  உதவிப் பேராசிாியா்,  தமிழ் உயராய்வு மையம், தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி, சிவகாசி 02 May 2023 Read Full PDF

முனைவர் தனலெட்சுமி.ச,  உதவிப் பேராசிாியா்,  தமிழ் உயராய்வு மையம், தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி, சிவகாசி, விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா.

ஆய்வுச் சுருக்கம்

      திருநங்கைகளை உறவுகளும் ஏற்றுக் கொண்டு  சமூகத்தில் அங்கிகாரம் அளித்து கல்வி உயர்வு பெற வேண்டும்.அவர்களை அவலமாகக் கருதாமல் அனைவரும் மதிக்க வேண்டும் புதுக்கவிதைகளில் திருநங்கைகள் வாழ்வியலை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

திறவுச் சொல் : திருநங்கை, சமூக அங்கிகாரம்,  அவலம், எழுத்துப்பிழை.

Abstract

Transgender people should be accepted in relationships and given recognition in the society and get higher education. Everyone should respect them without considering them as a disgrace.

Key Words

Transgender,Social recognition,Shame,Typo

புதுக்கவிதை - அறிஞர் விளக்கம்

      " கவிதை என்பது ஒலிநயம் அமைந்த சொற்களின் கட்டுக்கோப்பும், அஃது இன்பத்தையும் உண்மையுடன் இணைப்பது. அறிவுக்குத் துணையாகக் கற்பனையைக் கொண்டிருப்பது" என்றார்

  • ஜான்சன்

" இசை தழுவிய எண்ணமே கவிதை "

                        -கார்லைல்

" கவிதை வாழ்விலிருந்து மலர்ந்தது. வாழ்விற்கே உரியது.வாழ்விற்காகவே நிலைப்பெற்றிருக்கிறது.

(Poetry made out of life belongs to life exists for life )

                                                                -ஹட்சன்

" கவிதையின் அடிப்படை வாழ்க்கையைப் பற்றிய திறனாய்வே" என்னும் அழியா உண்மையும் ஆழமும் மிகுதியாகப் பெற்றுத் திகழ்தலே சிறந்த கவிதையின் இலக்கணம் என்பார்"

                                          -மாத்யுஅர்னால்டு

" வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று கூறுவதே கவிதை என்றும் கவிதைக்கு அழகும் உண்மையும் தேவை என்பதையும் வலியுறுத்தியுள்ளார்"

                              -அரிஸ்டாட்டில்

என்று அற்ஞர்கள் பலரும் தம் கருத்துக்களைக் கூறியுள்ளனர் என கார்த்திகேயன் தம்நூலில் பதிவு செய்துள்ளார்

இலக்கண நூல்களில் திருநங்கை

      மனிதன் பிறக்கும் போதே ஆண் பெண் என்ற இரு பாலினமின்றி இணைந்து பிறக்கும் போது அவர்களை அரவாணிகள் என்று இன்றைய காலச் சொல்லால் அழைக்கின்றோம்.ஆனால் இவர்கள் குறித்து

முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில்

            " பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்

            ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்

            தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்

            இவ்வென அறியும் அந்தம் தமக்கு இலவே

            உயர்திணை மருங்கின் பால் பிரிந்திசைக்கும்"

                              (தொல் - 487)

என்று கூறியுள்ளார். அரவாணிகள் உடலளவில் ஆணாகவும் மனத்தளவில் பெண்ணாகவும் இருப்பதாக தொல்காப்பியர் தம் நூற்பாவில் சுட்டியுள்ளார். மேலும்

            "ஆண்மை திரிந்த யெர்நிலைக் கிளவி

           ஆண்மை அறிசொற்கு ஆகிடன் இன்றே"

                              (தொல் - 495)

என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பவணந்தி முனிவரோ, ஆண்தன்மையை விட்டுப் பெண் தன்மையை அவாவுவனவாகிய பேடுகள் உயர்திணைப் பெண் என்றும் பெண்மை விட்டு ஆண் தன்மை அதிகமாக இருப்பவர்களை உயர்திணை ஆண்பாலாகும் என்று தம் நன்னூலில்,

      "பெண்மை விட்டு ஆண் அவாவுவ பேடு ஆண்பால்

      ஆண்மை விட்டு அல்லாது அவாவுவ பெண்பால்

      இருமையும் அஃறிணை அன்னவும் ஆகும்"

                              (நன்னூல்  264)

என்று பதிவு செய்துள்ளார்.

பன்னிரு பாட்டியலில், கடவுள் படைப்பில் ஆண் பெண் என்ற இரண்டு இனங்கள் தவிர்த்து மூன்றாம் பாலினமாக ஓர் இனம் உள்ளது என்பதை,    

      "ஆண்பால் பெண்பால் அலியென நின்ற

       மூன்றே பால் என பொழிந்தனர் புலவர்"

என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

 

இலக்கியங்களில் திருநங்கை

      சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்றில் சோழன் நலங்கிள்ளியைப் புகழ்ந்து பாடும் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் தம் பாடலில்,

            "சிறப்பு இல் சிதறும் உறுப்பு இல் பிண்டமும்

             கூனும் குறளும் ஊனமும் செவிடும்

            மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு

            எண்பேர் எச்சம் என்று எவை எல்லாம்

            பேதைமை அல்லது ஊதியம் இல்"

                                     (புறம் 28)  

"வடிவற்ற தசைப்பிண்டத்தை " (அரவாணி) திருநங்கை என்ற சொல்லால் குறிப்பிட்டுள்ளார்.

உலகப்பொதுமறையாம் திருக்குறளிலும்

            " பகையத்து பேடிகை ஒவ்வாள் அவையகத்து

             அஞ்சும் அவன்கள்ள நூல்"

                                    (குறள் 727)

போர்க்களத்தில் பேடியின் கையில் உள்ள கத்தி போல் சபையில் ஒடுக்கமுடையவன் கற்ற கல்வியும் பயனில்லாமல் போய்விடும் என்று திருநங்கைகள் குறித்து வள்ளுவர் பதிவு செய்துள்ளார்.

திருநங்கை (Transgender)

      ”திருநங்கை எனப்படுவோர் பிறப்புறுப்பால் ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களைக் குறிக்கும். இவர்கள் அலி, பேடி, அரவாணி போன்ற பெயர்களில் கேலிக்கையாக அழைக்கப்படுவதுடன் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.”

      ஆயிஷா பாரூக். அவர்களின் வாிகளில் திருநங்கை என்பவள்…

      ”மங்கையானவள் திருநங்கையாவள் நிழலன் இருளில் சிாிப்பவள் அன்பின் ஊற்றாய் பிறந்தவள் வலியின் வலியை தாங்கியவள் திறமைகளை தீர்க்கமாய் பெற்றவள் ஆணாகி பெண்ணாகி யாதுமானவள்” என்று கூறுகிறார்.

      திரு- ஆண்மகன், நங்கை- பெண்மகள் திருநங்கைகளைப் பற்றி தெளிவாக சொல்ல வேண்டுமானால்,

      ”ஆணாக பிறந்து, பாலின உணர்வைப் பெறும் வயதில் குரோமோசோம் குறைப்பாட்டால் மனதளவில் மட்டும் பெண்ணாக உணர்ச்சி மாற்றம் அடைபவர்கள் எனலாம்”

      முதலில் ஒரு விசயம். இது அவர்களே வேண்டுமென்று நினைத்து மாறுவதில்லை. இது விடை சொல்ல முடியாத இயற்கையின் விளையாட்டு.

புதுக்கவிதைகளில் திருநங்கை

      ”அர்த்தநாாி கடவுள் இல்லை நாங்கள்

       கரம் கொண்டு வணங்குதற்கு

       ஹார்மோன் குறைபாட்டில்

       அர்த்தமற்று போனவர்கள்

       ஈனஸ்வரத்தில் தாளம் பிழன்றவர்கள்

       முகாாிக்கும் மோட்சம் அற்றவர்கள்!

       ஈன்றபோது கொஞ்சிய தாய்

       மாற்றாந்தாய் ஆனாள்

       எங்களின் மாற்றங்கள் கண்டு…!

பெற்ற தாயே திருநங்கைகளை ஒதுக்கும் அவலம் மாற வேண்டும்.

      ”நீ விழுந்த

       அதே கருவறையில் தானே

       நானும் விழுந்தேன்

       குழந்தையாய் இருந்தபோது

       உனக்கும் தாய்மடி

       எனக்கும் தாய்மடி

       தாலாட்ட மறந்ததில்லை

       ஒரே விரல்பிடித்து

       நாம் ஊர்ந்து சென்ற

       வீதிகளும்

       உனக்கும்  எனக்கும்

       ஒரே இருக்கை தந்த

       பள்ளிகளும்

       இன்று

       என்னை மட்டும் ஏன்

       தள்ளி வைத்து பார்க்கிறது…

       தவங்கிடந்து பெற்ற

       தாய்கூட

       என்னை

       தவறென்றே ஒதுக்கியது ஏன்..?

திருநங்கைகளை தவம் கிடந்து பெற்ற தாயே வெறுக்கும் அவல நிலையை தம் “மலராத மொட்டுகள்“ என்ற தலைப்பில் எழுதிய கவிதை மூலம் முப்படை முருகன் எடுத்துரைக்கிறார்.

      ”திருநங்கைகளும் மனிதர்களே…

       ஒன்றுமில்லாதோர்க்கு அடைக்கலம் தரும்

       அம்மாக்கள் இவர்களில் உண்டு

 

       அக்கா என்று எவரேனும் அழைக்க ஏங்கும்

       சகோதாிகள் இவர்களில் உண்டு…

 

       பாசத்திற்கு ஏங்கும் தங்கைகளும்

       இவர்களில் இருக்கிறார்கள்

 

       பெண்ணென்று சமூகம் இவர்களை

       ஏற்றுக்கொள்ள மூச்சுள்ள வரை

       முயற்சிக்கிறார்கள்

 

       வெறுப்பின் காரணமே சொல்லாமல்

       இவர்கள்மேல் வெறுப்பென்னும் அதிதாரம்

       பூசப்படுகிறது

 

       உண்மையான புறக்கணிப்பின் வலியை

       திருநங்கைகளால் மட்டுமே முழுமையாய்

       சொல்ல முடியும்”

 

      பல்வேறு துறையில் சாதனைகள் புாிந்து

       போராடி தன்னை நிரூபிக்கிறார்கள்…

       பெற்றோர்கள் இவர்களைத்

       தள்ளாதிருப்பதே திருநங்கைகள் உயர

       மிகச்சிறந்த வழி…

            திருநங்கைகளும் மனித இனம், உறவுகளுக்கு தவிக்கும் உன்னதமானவர்கள் சமூக அங்கீகாரம் கிடைக்கத் தவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பெற்றவர்களே புறம்தள்ளும் கொடூரத்தை தாங்க இயலாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் “ஜான்“ என்பவர் திருநங்கை என்ற தலைப்பில் எழுதிய கவிதை வழி அறிய முடிகிறது.

      ”அவனாகப் பிறந்த நான்

       அவளாக மாறாமல்

       இருந்திருந்தால்

       புழுவாக எனை நோக்கும்

       சமூகப் பார்வைகளிலிருந்து

       தப்பிப் பிழைத்திருப்பேன்….

 

       இறைத்தூாிகை வரைந்த

       கோலத்தில் என்பால்

       முப்பாலாய் கலக்காமல்

       இருந்திருந்தால்

       கண்ணீாில் தினம் தினம்

       கரையாமல் போயிருப்பேன்

       ஹார்மோன்கள் செய்யும்

       மாற்றங்களை

       இயல்பென்றே இதயங்கள்

       ஏற்றிருந்தால்

       பெற்ற அன்னையே

       அடித்துத் துரத்தும் நிலைக்கு

       நானும் ஆளாகாமல்

       இருந்திருப்பேன்”

            அவன் அவளாக உருமாறிய இயற்கை அறிவியலை உதயசகியின் கவிதை எடுத்துரைக்கும் முக்கியமான சிக்கல் பெற்ற அன்னையே அடித்துத் துரத்தும் அவலநிலைக்கு ஆளாகாமல் இருந்திருப்பார்கள் திருநங்கைகள்.

      ”கருப்பைச் சுமக்காத தாய்மையும்

       கூடிக் கலவாத ஆண்மையும்

       கலந்து பிறந்த இடையினம்

       எழுத்துப் பிழைதான்

       எங்கள் பிறப்பு

       எங்கள் கருத்தில்

       என்றுமில்லை பிழை

       களையாய் நினைத்து

       களைந்து விடாதீர்

       மாற்றுப் பயிராய்

       செழிக்க விடுங்கள்

       உலகமே தள்ளிப் போக

       உயிர் கொல்லி வைரசா நாங்கள்

       அள்ளிக் கொஞ்ச அன்னையில்லை

       தட்டிக் கொடுக்கத் தந்தையில்லை

       கள்வனுக்கும் உறவுண்டு எங்களுக்கோ

       கொள்ளியிடவும் யாருமில்லை

       ஒருபார்வை ஒரோயாரு பார்வை

       வாஞ்சனையோடு பாருங்கள்

       வளர்ப்பு நாயாய்

       வீழ்ந்திருப்போம் காலடியில்

       இறைவா என்னிடம்

       ஒரு யாசகம்

       படைப்பைத் திருத்தி விடு

       இல்லையேல்

       படைப்பவனை மாற்றவிடு!

திருநங்கைகள் இறைவனிடம் கையேந்தி கேட்கும் ஒரேயொரு பிச்சை எழுதத்துப்பிழையாய் எங்களைப் படைக்காமல் திருத்திக் கொள். இல்லை என்றால் படைப்புத் தொழில் செய்பவனை மாற்றிவிடு என்று தம்முடைய கோபத்தின் உச்சத்தை வெளிக்காட்டுகின்றனர்.

      ”பத்துமாதம் சுமந்த அன்னை

       பெருவலியுடனும்

       பேருவகையுடனும்

       பெற்றெடுத்தாள் அவனை!...

       ஈன்ற பொழுதினும் பெருவலி கண்டாள்

       தன் மகனை மாற்றான் என அறிந்த

       அவன் அன்புத்தாய்!...

       பள்ளியின் சேர்க்கைப் படிவம் முதல்

       மீந்தன வழியும் கழிவறை வரை

       இனம் காணாத அவள்,

       தன்னுள்ளே தன்னை

       ஒளித்து வைத்து கொண்டாள்…

       நவீன காலத்தின் பெருவளர்ச்சியில்

       இன்று தன்னை கொஞ்சமே…

       கொஞ்சமாய் வெளிப்படுத்துகிறாள்

       சமூக ஆர்வராய்… ஊடக மங்கையாய்…

       கவிஞராய்… அரசு ஊழியராய்

       பேறு காலம் பார்த்திடும் ஓர் தாயாய்!

       கூன் குருடு செவிடு நீங்கிப்

       பிறந்த அவள் - பேடு நீங்கிப்

       பிறக்கவில்லை… அவ்வளவே…!

       அாிதினும் அாிதாய் மனிதப் பிறவி

       கொண்டவர்கள் அனைவரும்

       கலியுகத்தில் மனிதர்களாய் இல்லை…

       ஆனால்.

       தன் பிறவிப் பயனறிந்து வாழ்ந்திடப்

       போராடும் நம் தோழி அவளுக்குத்

       தந்திடுவோம் நம் அன்பும் ஆதரவும்…!!

தன் தாயே தன்னை மறுக்கிறாள், தன் கல்வி மறுக்கப்படுகிறது. சமூகம் கொஞ்சம் கொஞ்சமாய் ஏற்றுக் கொள்ளட்டும். நம் திருநங்கைத் தோழிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவோம். அகிலத்தின் சிகரம் தொடட்டும்

வெ.முனிஷ் என்பவரால் எழுதப்பட்ட சுயம்பு (ப – 94) என்னும் கவிதை தொகுப்பில் திருநங்கைகளின் வாழ்வியலை

                  "கல் தோன்றி

                   மண் தோன்றாத

                   காலத்தில் முன் தோன்றிய

                  ஆதியினம்

                  அலியினம்"   என பதிவு செய்துள்ளார்.

      திருநங்கைகளை சமூகம் ஏற்றுக் கொள்வது இருக்கட்டும் முதலில் தன் பெற்றோர், தன் குடும்ப உறவுகள் ஏற்கும் மனப்பான்மை பெற வேண்டும். இளமையில் வறுமை கொடிது என்பார்கள். வறுமையை விட கொடுமையானது பெற்ற தாயே பிள்ளையை வெறுக்கும் அவலம். ஆகவே திருநங்கைகளாக இனம் கண்டால் தாயானவள் ஒதுக்காமல் , அன்பு செலுத்தி ஆதரவு காட்டினால் பிறரும் , இச்சமூகமும் மதிப்பர். அவர்களும் தம் வாழ்வை மகிழ்வாக கல்வி பெற்று, சமூகத்தில் சிறந்த சாதனையாளர்களாக வலம் வருவர்.

அடிக்குறிப்புகள்

  1. 1.http: // ta.m.wikipedia.org
  2. கார்த்திகேயன் புதுக்கவிதை வித்தகள் ப 2-3
  3. யாழினி - - இணையதளம்
  4. 3.பொ.சாந்தி, மூன்றாம் பால்
  5. முப்படை முருகன், மலராத மொட்டுகள்
  6. ஜான், திருநங்கை
  7. உதயசகி, அவன் அவளாக
  8. அருவி, திருநங்கை
  9. தப்தி.செல்வராஜ், அவன் அவளாகிப் போனாள்
  10. வெ.முனிஷ் சுயம்பு ப-94