ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சமகால தலித் சிறுகதைகள் காட்டும் சமூகம் (THE SOCIETY FROM CONTEMPORARY DALIT LITERATURE)

ம.பரிமளா தேவி, பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், இசுலாமியா கல்லூரி, வாணியம்பாடி 02 May 2023 Read Full PDF

கட்டுரையாளர்: ம.பரிமளா தேவி, பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், இசுலாமியா கல்லூரி, வாணியம்பாடி, திருப்பத்தூா் மாவட்டம்.

நெறியாளர்: DR.G.VENGADAKRISHNAN, ASST.PROFESSOR OF TAMIL, ISLAMIAH COLLEGE OF TAMIL, VANNIYAMBADI – 635752.

ABSTRACT

Poems, short stories, and novels of dalit genre came from Tamil literature in the last decade of the 20th century. Dalit literature books create the dabate and make a huge impact on society. because it revealed the woes of scheduled caste people as fiction stories. This research explores the differences between 1990s dalit genre books and contemporary dalit literature. In the modern world, people of scheduled caste get education, employment and reached higher positions. Some of them became a rulers or authorities in government offices. But, scheduled caste people face discrimination by the name of caste. Those who struggle for their rights without leaving their identities have been recorded in contemporary Dalit literature. And also it revealed inter caste married couples problems in the modern society.

ஆய்வுச்சுருக்கம்

இருபதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில்  கவிதை, சிறுகதை, வரலாறு, நாவல் ஆகியவை தலித் இலக்கியம் என்னும் வகைமையில் வெளிவந்தன.  பட்டியலின மக்களின் துயரங்களை வெளிப்படுத்தும் புனைவுக் கதைகளாக இவை வெளிவந்ததால், தலித் இலக்கியம் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

 தொன்னூறுகளுக்குப் பின்பு  எழுதப்பட்ட தலித் இலக்கிய படைப்புகளிலிருந்து சமகாலத்தில் எழுதப்பட்ட புனைவுகள் வேறுபடும் இடங்களை ஆராய்வதாக இந்த ஆய்வு அமைந்துள்ளது.

இந்த நவீன உலகில், பட்டியலின மக்கள் கல்வி கற்று நல்ல வேலைவாய்ப்பையும் பெறுகின்றனர். அவர்களில் இன்னும் சிலர் ஆட்சியாளர்களாக அல்லது அரசு அலுவலகங்களில் அதிகாரம் மிக்க  பதவிகளிலும் அமர்கின்றனர். ஆனாலும், சாதிய பாகுபாடுகளை பட்டியலின மக்கள் எதிர்கொண்டுதான் உள்ளனர்.

தங்கள் அடையாளத்தை விட்டு விடாமல் உரிமைகளுக்காக போராடும் குணமும் சமகால தலித் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் நவீன சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் இந்த ஆய்வு வெளிக்கொணர்கிறது.

KEYWORDS

dalit literature, tamil, caste discrimination ,short stories, azhagiya periyavan

திறவு சொற்கள்

தலித் இலக்கியம் ,தமிழ், சாதி பாகுபாடு, சிறுகதைகள், அழகிய பெரியவன்

முன்னுரை

தொன்னூறுகளுக்குப் பின்புதான் தமிழ்சிறுகதைகளில் தலித் இலக்கியம் என்னும் வகைமைகளில் கவிதை, சிறுகதை, வரலாறு, நாவல் என வரத் தொடங்கியது. இலக்கிய உலகில் தலித் மக்களின் வாழ்க்கை வரலாறு பேசும் பொருளாகியது. அம்மக்களின் அவலநிலையைப் புனைவுகளாக பதிவுசெய்தனா். தொன்னூறுகளுக்குப் பின்பு  எழுதப்பட்ட தலித் படைப்புகளிலிருந்து சமகாலத்தில் எழுதப்பட்ட புனைவுகள் வேறுபடும் இடங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

நன்மாறன் கோட்டைக் கதை

அழகிய பெரியவன் என்ற கதையில் வரும் ஒரு நிகழ்ச்சியில், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று புதிய பள்ளிக் கூடத்தில் ராமநாதன் சேர்ந்திருந்தார்.    உடற்கல்வி ஆசிரியர் “ஒரு அம்மா வந்து டி.சி. கேக்குது சார்” என்று சொன்னார். ராமநாதன் அந்த பெண்ணையும் அவளுடைய மூன்று குழந்தைகளையும் பார்த்து எதுக்கு டி.சி. கேக்குறீங்க, வாத்தியாருங்க யாராச்சும் அடிச்சிட்டாங்களா என்று கேட்டார்.  நாளைக்கு நாங்க ஊருக்குப் போறோம் சார்.  திரும்பி வர மாட்டம் சார் என்றாள். தலைமையாசிரியர் பள்ளியின் இடையில் டி.சி.யைக் கொடுக்க முடியாது என்று எவ்வளவு சொல்லியும் அந்தப் பெண் கேட்கவில்லை.

      “வருசா வருசம் நடக்கற மாதிரிதான் இந்த வருசமும் மாட்டுப்பொங்கல் அன்னிக்கு ஒட்டப்பந்தயம் வச்சாங்க. பந்தயத்துல எங்க மாடு ஜெயிச்சிடிச்சி அதனால மாட்டயும், எம் புருசனயும் சுளுக்கியால குத்திக் கொன்றுப்புட்டாங்க” (பக்-14)நாங்க காலனிகாரங்க எங்க மாடு காலனி மாடு, எனக்கு டிசியைத் தா  ங்க என்றாள்.

      “ மாட்டக் கொன்னதோட வுட்டுகருக்கலாம் ஒம் மாடு எப்படி ஜெயிக்கலாம்ன்னு கேட்டுக் கேட்டு உளரே கூடி சுளுக்கியால குத்துனத நான் என் ரெண்டு கண்ணலயும் பாத்தேன் சார். எம்மூணு பிள்ளைகளும் பாத்துச்சு (பக்- 20)      இந்தக் காலத்திலும் சாதி உண்டா என நினைப்பவர்கள் இக்கதையின் மூலம் சாதியக் கொடுமையை உணர முடியும்.

      “பிஞ்ச செருப்பெல்லாம் எங்கள ஜெயிக்கிறதா”

      “பொறம்போக்கு இடத்தில் இருக்கிறவனெல்லாம் எங்கள ஜெயிக்கிறதா”

      பன்னிக்கறி, மாட்டுக்கறி திங்கிறவனெல்லாம் எங்கள ஜெயிக்கிறா” என்ற கேள்விகள் இன்றும் நம்முள் நிலவும் சாதிப்பாகுபாட்டை உணர்த்துவதாக உள்ளது.

தண்டனை

      மேல்சாதிக்காரர்கள் பணம் மற்றும் படை பலத்தினால் கொலை செய்துவிட்டு அதனை மறைக்கும் வலிமையை பெற்றவர்களாக இருப்பதை காணமுடிகின்றது.

போலிஸ்

      படித்து பட்டம் பெற்று காவல்துறையில் பணியில் சேர்ந்து இருந்தான் சீனிவாசன். தன்னோட பணிபுரியும் ஏட்டு ராஜேந்திரனிடம் இந்த வேலையை விட்டுவிட என்ன செய்ய வேண்டுமென கேட்கிறான்.

      “ நம்ப சாதியில பொறந்ததில யாருமே இந்தக் காரியத்த செஞ்சிருக்க மாட்டாங்க. போலீசா இருந்ததால தான் கீழ்ச்சாதிப் பொணத்தத் தூக்கிட்டுப் போயி பொதச்சன், வெட்டியான் வேல பாத்தன்.  நம்ம சாதிக்கே அசிங்கமாயிடிச்சி செத்திடலாமின்னு இருக்கு ஏட்டய்யா.” (பக்- 35)எங்க ஊர்ல மாட்டு வண்டில கூட ஒக்காந்துகிட்டு அவனுங்கள போவவிடமாட்டோம் மோட்டார் பைக்கில் உட்காந்துகிட்டு போகவிட மாட்டோம்.  மீறி வந்தாலும் மறிச்சி வச்சிடயர்ல இருக்கிற காத்தை பிடுங்கிவிடுவோம். அப்படிப்பட்ட ஊர்ல பிறந்த என்னை கீழ்ச்சாதிப் பொணத்தத் தூக்கிட்டுச் சுடு காட்டுக்குப் போய் குழியில் இறங்கி மண்ணை தள்ளி மூடவும் வச்சிட்டாங்க. நம்ம சாதிக்கே அசிங்கமாப் போயிடுச்சி? அதத்தான் என்னால தாங்கிக்க முடில ஏட்டாய்யா என்று படித்த இளைஞனான சீனிவாசன் போலீஸ் கதையில் கூறுவது சாதிவெறியினை எடுத்துரைப்பதாக காட்டுகிறது.

      சாதி சோறு போடுமா? நம்ப சாதிப்பசங்க எல்லாம் ஏன் இப்படி இருக்கீங்க. எதுக்கெடுத்தாலும் கோபப்படுறது ஆத்திரப்படுறது? எப்போ திருந்துவீங்க? கிராமத்தை விட்டு வெளியே வாங்க என்று ராஜேந்திரன்  கதாபாத்திரம் கூறுவது கிராமங்களில் சாதிப் பிரச்சனைகள் இன்றும் இருப்பதை பதிவு செய்துள்ளது. நகரத்திற்கு வந்துவிட்டால் சாதிய அடையாளம் இல்லாமல் இருக்கலாம் என்கிற தீர்வையும் கதாபாத்திரத்தின் வழியே இமையம் முன்வைக்கிறார்.

பாம்பு

தன் மகள் கவிதா காலனிப் பையனை காதலிக்கின்றாள் என்பதை தெரிந்துக் கொண்டு வீட்டில் உள்ளவர்களையெல்லாம் அழைத்து பேசி அந்தக் குடும்பம் எடுக்கும் முடிவு மிகுந்த அதிர்ச்சியாக இருக்கின்றது.“போயும் போயும் ஒரு சேரி பையனா அவளுக்குக் கெடச்சான். நெனச்சாலே ஒடம்பெல்லாம் பத்திகிட்டு எரியுதே நான் என்ன பண்ணுவேன்” என காளியம்மாள் வீட்டிலுள்ளவர்களிடம் புலம்புகின்றாள்.(பக் 17 )“பெத்த வயிறு பத்தியெறியச் சொல்றேன் இப்படி ஒரு பெண்ணே எனக்குப் பொறக்கலன்னு நெனச்சிக்கிறேன். அவளக் கொன்னுடுங்க” என்றாள் காளியம்மா.(பக்- 20 )காதலிப்பது கூட தவறில்லை. ஆனால் வேறு சாதிப்பையனை காதலிப்பது தவறு என குடும்பமே சொல்கின்றது.கதையின் இறுதியில், மகளை பாம்பு கடித்துவிட்டது. ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறதுக்குள்ள இறந்து விட்டாள் என சொல்கின்றனர். குடும்பமே சேர்ந்து சாதி வெறியினால் மகளை கொலை செய்து விடுகின்றனர்.

பிணச்சுற்று

அன்பரசனும் திருமாலும் கல்லூரியில் ஒன்றாய் படிப்பவர்கள். சிறு வயதில் இருந்தே நண்பர்கள். அன்பரசனின் அப்பா ஊர்த்தோட்டி. ஊரிலும் சுற்றுப் பக்கங்களிலும் விழும் சாவுகளுக்கு மேளமடிக்க அன்பரசனையும் அழைத்து செல்வார். திருமாலின் அப்பா இறந்த செய்தி கல்லூரிக்கு வர இருவரும் ஊருக்கு செல்கின்றனர். திருமாலின் அப்பா இறுதி சடங்கு நடக்கும் வரை கூடவே அன்பரசனும் இருக்கின்றான். சாவு எடுத்த இரண்டு நாளில் ஊர்க்கூட்டம் நடக்குது.

“படுக்க எடங்குடுத்தா பாயப்புடுங்குவீங்களாடா? சினேகிதன்னா ஊட்டு வாசலோட நிக்கணும். எங்களோட சேந்து நீங்களும் பொணத்த சுத்துனா என்னா அர்த்தம்? எங்களுக்கு நீங்க பங்காளிங்களா? பயித்தாளிங்களா? கோபால்தான், காந்தி அது இதுன்னு பேசிணு பெரும்போக்கா இருந்துட்டான். அதுக்காக அவனூட்டு உப்பத்துன்னுட்டு அவனுக்கே துரோகம் செய்வீங்களோ? (பக்.92 )நீங்க வேற சாதிக்காரங்க, எங்க சாதிக்காரங்க சாவுல பொணத்த சுத்தலாமான்னு கேள்வி கேட்கிறார்கள்.

தண்டனை

      இனிமே நீங்க யாரும் எங்களுக்கு மேளமடிக்கவோ, குளி வெட்டவோ,எளவு சொல்லப் போகவோ வேணா, அடுத்த ஊர்க்காரன கூப்டுணு வந்து நாங்களே பாத்துக்குவோம்.  அத்தோட ஊர்க்கட்டுமானத்த மீறின முனிரத்தினம் ஊட்ட இன்னிலிருந்து ஒரு வருசத்துக்கு தள்ளி வைக்கிறோம்.  ஊர்லக்கீற யாரும் அவங்களோட ஒறவு தவச்சிக் கூடாது (பக்- 93) என்ற தண்டனையை ஊர்க்கூட்ட முடிவில் சொல்கிறார்கள்.

      அன்பரசன் கூட அதிர்ந்து விட்டான் அப்பாவை பார்த்து கலங்கினான். ஆனால் அன்பரசனின் அப்பா, “ஊரு விட்டு தள்ளி வெக்கிறதெல்லாம் ஏத்துக்க முடியாது.  காலமே மாறிணு வருது கொஞ்சம் மூஞ்சி மொகம் பாத்து பேசுங்க”  எதோ படிக்கிற பையன் தெரியாம செஞ்சுட்டான்.  எங்கள மேளமடிக்க மாணாண்டீங்க சரி அப்புறம் வெளியூர்லேர்ந்து எதுக்கு ஆளுங்கள கூப்டுணு வர்றீங்க.  நீங்களே தான் அடிச்சிக்கிறது.  (பக்- 93)   ஊரில் உள்ளவா்களைப் பார்த்து எதிர்த்து கேள்வி கேட்கின்றார். வேலையில் என்ன பாகுபாடு நாங்க செய்யும் வேலையினால்தான் எங்களை கீழ்ச்சாதிக்காரர்கள் என்று அவமானப் படுத்துறீங்க.  இனி உங்க வீட்ல சாவு விழுந்தா நீங்களே மேள அடிங்க என்று சொல்வது காலங்காலமாக சாதியினால் அடிமைப்படுத்தி வைத்ததனால் ஏற்பட்ட வலியினை பேசுவதாக உள்ளது . 

காக்கைக் குருவி உங்கள் சாதி.    

      வீடு மாறிப் போவது அவர்களுக்கொன்றும் புது அனுபவம் அல்ல.  புது வீட்டுக்கு குடித்தனம் போகும் காரணமென்பது மற்றவர்களில் இருந்து இவர்களுக்கு வேறானதாக இருந்தது.  முன்பிருந்த வீட்டின் உரிமையாளர், ரோட்டுக்கு அந்தப்பக்கம் அம்பேத்கர் நகர்னு அந்த ஏரியாவோட பேரை பார்த்ததுமே நீங்களா புரிஞ்சிகிட்டு அவங்களோட பழகாம ஒதுங்கியிருப்பீங்கன்னு பாத்தா நடக்கல.  அவங்க முகத்துல முழிக்கக் கூடாதுன்னு நடுவுல சுவர் எழுப்பியிருந்தோம்.  அப்புறம் தீண்டாமை சுவருன்னு பிரச்சனை பண்ணதால இடிச்சிட்டோம்.  கேபிள் டீவிக்காரன் கூட இந்தப் பக்கம் காசு வசூல் பண்ணிட்டுத்தான் அந்தப்பக்கம் போகணும்னு சொல்லியிருந்தோம்.  போஸ்ட்மேன், சிலிண்டர், லாண்ட்ரி, தள்ளு வண்டி கடைக்காரங்கன்னு எல்லாருக்கும் இந்த வழமை தெரியும்.  உங்க வீட்டுக் குழந்தைகங்க அந்த வீட்டு சனியனுங்களோட விளையாடுறாங்க.  அவங்க பழக்க வழக்கமெல்லாம் நம்மளுக்கும் வந்துருமோன்னு பயமாயிருக்கும்.  நீங்க வேற வீட்டை பார்த்துக்கொள்ளுங்க என்றார். 

“புலியும் பசுவும் ஓர் துறையில் இறங்கி நீரருந்திய தன்மதேசம் மனிதனோடு மனிதன் இறங்கி நீரருந்துவதற்கு இடமில்லா அதன்ம தேசமாகிவிட்டது” என்று அயோத்திதாசரால் குற்றச்சாட்டப்பட்ட இந்நாட்டில் தீட்டு தோஷம் பார்க்காதவர்களை அக்கம் பக்கத்தவராக கொண்ட வீட்டை எப்படித்தாம் தேடுவது?”  (பக்-16 ஆதவன் தீட்சண்யா, நீங்கள் சுங்கச் சாவடியில் நின்று கொண்டிருக்கிறீர்கள்).அம்பேத்கருடைய புத்தகத்தை வீட்டில் வைத்திருந்த காரணத்தினால் வேறு வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதை சொல்கின்றார். 

      “அம்பேத்கருடைய புத்தகங்களைப் படிக்கிறவர்களெல்லாம் அவருடைய சாதிக்காரர்களாகத்தான் இருக்கணுமா?  அவரால் எழுதப்பட்ட அரசியல் சட்டத்தை ஆதாரமாகக் கொண்டியங்கும் இந்த நாட்டில் அவருடைய சாதியல்லாத ஒருவரது வீட்டில் அவர் புத்தக உருவில் கூட நுழைய முடியாதா?  ஆழ்ந்தகன்ற மேதமையோடு விரியும் அம்பேத்கரின் நூல்களைப் பார்த்த மாத்திரத்திலியே அருவறுப்பும் அசூயையும் அடைகிற இவர்கள் புத்தகங்கள் புனிதமானவை என்று பூஜை போடுவதும் கால் பட்டுவிட்டால் கண்ணில் ஒற்றிக்கொள்வதும் போலித்தனம் இல்லை”   (பக்-19)  என்று ஆதவன் தீட்சண்யா குறிப்பிடுவது சாதியின் அடையாளமாக அம்பேத்கர் படமும் அவருடைய புத்தகமும் பார்க்கப்படும் அவலத்தைப் பதவு செய்திருக்கின்றார்.  தீண்டத்தக்க இந்தியா தீண்டப்படாத இந்தியான்னு இந்த நாடு ரெண்டா பிரிஞ்சிருக்குன்னு அம்பேத்கர் சொன்ன பிரிவினையை நாம புத்தகங்கள் வரைக்கும் நீட்டிச்சிவிட்டதா தெரியுது.  தீண்டப்படாதவர்கள் எவ்வளவு தகுதி பெற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் தீண்டப்படாதவர்களிடையே தான் பெரியவர்கள் என்று கருதுகிற ஒரு சாதியவாதி நமக்குள்ளும் இருப்பதால்தான் அம்பேத்கர் மாதிரியான ஒரு சிந்தனையாளரை இவ்வளவு காலமும் படிக்காமல் ஒதுக்கி விட்டோமா ?  இதுவும் ஒரு வகையான தீண்டாமை தான். 

      இறுதியாக அம்பேத்கர் நகருக்கே குடிபோவாக கதை முடிகின்றது.  எந்தவொரு அடையாளமும் வெளிபடாமல் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு வாழும் இருவரும் வாடகை வீட்டிற்கு செல்லும்போது ஏற்படும் சிக்கல்தான் இச்சிறுகதையின் மையக் கருத்தாகும்.      

முடிவுரை

சமகாலத்தில் தலித் மக்கள் கல்வி ,பொருளாதாரம் , வேலைவாய்ப்பு , பதவிகள் என உயர்ந்த இடத்திற்குச் சென்றாலும் அவர்கள் மீதான சாதிய இழிவு இன்னும் குறையவில்லை. தங்கள் அடையாளத்தினை விட்டு விடாமல் அதில் போராடும் குணமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பறையை உயர்ந்த சாதி மக்கள் நீங்களும் அடிக்கலாம் என்னும் கலகக்குரலும் உள்ளது. கலப்பு திருமணம் செய்து கொண்டிருக்கின்றவர்கள் அம்பேத்கர் படத்தை மாட்டியிருப்பதாலேயே அவர்களுக்கு வீடு மறுக்கப்படுகின்றது என்கிற அவலத்தையும் பார்க்கமுடிகின்றது.

துணைநூற்பட்டியல

அழகியபெரியவன், அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்,நற்றிணை பதிப்பகம், பதிப்பு 2018.

2.ஆதவன்தீட்சண்யா, நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள்,சந்தியா பதிப்பகம்,பதிப்பு 2016.

3.ஜீ. முருகன், கண்ணாடி,யாவரும் பப்ளிஷர்ஸ், பதிப்பு 2017.