ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழகத்தில் சமணமும் பௌத்தமும் (Buddhism and Jainism in Tamil Nadu)

முனைவர் ரெ.வனிதா, உதவிப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், தமிழ்த்துறை, அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவிலாச்சேரி, கும்பகோணம். 22 Nov 2023 Read Full PDF

ABSTRACT:

      Jainism is an ancient religion whose own historiography centres on its 24 guides or Tirthankaras. Of the 24, the last two tirthankaras – are generally accepted as historical persons, with the 23rd Tirthankara pre-dating the Buddha and the Mahavira by probably some 250 years.Buddhists believe Gautama Buddha, the historical buddha, rediscovered the long forgotten dharma around the 5th century BCE, and began to teach it again. In Buddhism there were previous buddhas, too, 24 in total as described in the Buddhavamsa, the 14th book of the Khuddaka Nikāya. Buddhists also believe that Gautama Buddha had many previous rebirths as described in the Jataka Tales.

Buddhist scriptures record that during Prince Siddhartha's ascetic life (before attaining enlightenment) he undertook many fasts, penances and austerities, the descriptions of which are elsewhere found only in the Jain tradition.

Key Words: Jainism, Tirthankaras, Buddhist, penances, Khuddaka Nikāya and austerities

ஆய்வுச்  சுருக்கம்

சமணம் என்பது ஒரு பழங்கால மதமாகும், அதன் சொந்த வரலாற்று வரலாறு அதன் 24 வழிகாட்டிகள் அல்லது தீர்த்தங்கரர்களை மையமாகக் கொண்டுள்ளது. 24 பேரில், கடைசி இரண்டு தீர்த்தங்கரர்கள் - பொதுவாக வரலாற்று நபர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள், 23 வது தீர்த்தங்கரர் புத்தருக்கும் மகாவீரருக்கும் சுமார் 250 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டம் கொண்டவர்.  வரலாற்று புத்தரான கௌதம புத்தர் , கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் நீண்டகாலமாக மறக்கப்பட்ட தர்மத்தை மீண்டும் கண்டுபிடித்தார் என்றும், அதை மீண்டும் கற்பிக்கத் தொடங்கினார் என்றும் பௌத்தர்கள் நம்புகின்றனர் . புத்தமதத்தில் முந்தைய புத்தர்களும் இருந்தனர், குத்தக நிகாயாவின் 14வது புத்தகமான புத்தவம்சத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி மொத்தம் 24 புத்தர்கள் இருந்தனர். ஜாதகக் கதைகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி கவுதம புத்தருக்கு பல முந்தைய மறுபிறப்புகள் இருந்ததாக பௌத்தர்கள் நம்புகின்றனர் .

      இளவரசர் சித்தார்த்தரின் துறவு வாழ்க்கையின் போது (ஞானம் பெறுவதற்கு முன்பு) அவர் பல விரதங்கள், தவங்கள் மற்றும் துறவறங்களை மேற்கொண்டார் என்று பௌத்த நூல்கள் பதிவு செய்கின்றன, அவற்றின் விளக்கங்கள் ஜைன மரபில் மட்டுமே காணப்படுகின்றன.

திறவுச்சொற்கள்: சமணம், தீர்த்தங்கரர்கள், ஞானம், தருக்கம , மகாவீரர், பௌத்தர்கள், திக்நாகர், பசிப்பிணி

முன்னுரை

      முற்காலத்திலே, ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன்னே, தமிழ்நாட்டில் தலைசிறந்திருந்த சமண சமயமும் பௌத்தமும்  இப்போது  மறக்கப்பட்டுவிட்டது. சமண சமய வரலாறும், சரித்திரமும் மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் போயின. அது மட்டுமன்று, சமண சமயத்தின் மேல் வெறுப்பு உணர்ச்சியும் உண்டாக்கப்பட்டது. இவற்றையெல்லாம் கண்டபோது, தமிழ்நாட்டின் வரலாற்றுப் பகுதியாகிய இதனை எழுதி முடிக்க வேண்டும் என்னவென்றால், தமிழ் நூல்களைப் படிக்கும் போதும் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராயும்போதும் சமண சமயத்தவர், தமிழ் மொழிக்குச் செய்திருக்கும் சிறந்த தொண்டுகளைக் உணரமுடிகிறது.

சமணர் தொண்டு

      பிறப்பினால் உயர்வு காணும் மனநிலை சமணத்தில் இல்லை.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யால்" 1

என்பது குறள். சமணர் உணவு, அடைக்கலம், மருந்து கல்வி என்னும் நான்கு தானங்களைச் பேரறமாகக் கொண்டனர் (1) அன்னதானம் அறங்களுட் சிறந்தது என்பதை நாடெங்கும் பரப்பினர் (2) அடைக்கலம் வந்தவரைப் பாதுகாத்தல் வற்புறுத்தப்பட்டது கவுந்தியடிகள் மாதரிக்கு அடைக்கலச் சிறப்பை வற்புறுத்தியது சிலப்பதிகாரத்தில் காணப்படும்) (3) சமண முனிவர் மருத்துவ மனைகளை அமைத்துப் பொது மக்களுக்கு மருந்துகள் வழங்கினார் ஊர்ச் சிறுவர்களுக்குத் தம் பள்ளிக்கூடத்திலேயே கல்வி கற்பித்தனர் நாட்டு மக்களது மொழியைப் பயின்று, அம்மொழியிலேயே தம் சமயப் பிரசாரத்தை மேற்கொண்டனர். அம்மக்கள் மொழியிலேயே இலக்கண இலக்கிய- நிகண்டு நூல்களைச் செய்து அழியாப் புகழ் பெற்றனர் இந்த அரிய வழிகளையே கிறித்தவப் பாதிரிமார் பின்பற்றித் தம் சமய வளர்ச்சியைச் செய்து. உலகெங்கும் வெற்றி பெற்று வருகின்றனர்.

 கலை வளர்ச்சி:

      தருக்கத்தில் சமணர் பெயர் பெற்றவர். சமய வாதத்தில் வல்லவர் எனவே, தருக்கக் கலை அவர்களால் நன்கு வளர்ச்சி பெற்றது திருக்குறள், சிலப்பதிகாரம், நாலடியார், நீலகேசி, யசோதர காவியம், சிந்தாமணி, மேரு மந்திர புராணம் திருக் கலம்பகம் முதலிய இலக்கிய நூல்களும், யாப்பருங்கலக் காரிகை. யாப்பருங்கல விருத்தி, நன்னூல், நேமிநாதம் முதலிய இலக்கண நூல்களும், திவாகரம், சூளாமணி முதலிய நிகண்டு நூல்களும் சமணர் செய்தவை நீலகேசி சமயவாதத்தை உணர்த்தும் நூல் மலைக்குகைகளில் வாழ்ந்த சமண முனிவர்கள் அக்குகைகளில் ஓவியங்களைத் தீட்டினர் நாம் இன்றும் இவற்றைக் காணலாம். இவர்களால் ஓவிய சிற்பக் கலைகள் வளர்ச்சியுற்றன என்று கூறுதல் பொருத்தமாகும்.

      ஊன் உண்ணாமை வேத கால ஆரியர் தம் தெய்வங்களுக்கு ஆடு, மாடு, குதிரை முதலியவற்றைப் பலியிட்டனர். அவற்றை உண்டனர். சங்க காலத் தமிழரும் ஊன் உண்டனர் ஆனால், காலப்போக்கில் பிராமணரும் பிறரும் ஊன் உண்ணுதலை அறவே நீக்கிவிட்டனர். பௌத்தர் ஊன் உண்ணாதவர், ஆயினும் கொல்லாமையை மட்டுமே நன்கு வற்புறுத்தினர். ஊனுண்ணாமையை மிகுதியாக வற்புறுத்த வில்லை. கொல்லாமை ஊன் உண்ணாமை ஆகிய இரண்டையும் சமணரே வற்புறுத்தினர் இவற்றைத் தம் சமயத்தில் சிறப்புக் கொள்கையாகவும் கொண்டனர்.

"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா வுயிரும் தொழும்”

      என்பது சமணர் வைணவரிடத்தும் துக்கொள்கை பிற்காலத்தில் சைவரிடத்தும் படிப்படியாகப் பரவியது என்பது பொருத்தமாகும் சைவ வைணவ சமயங்கள் செல்வாக்கடைந்து, சமணம் மங்கிய காலத்தில் சமணர் சைவ வைணவங்களில் சேர்ந்து கொண்டனர் அவர்கள் அந்நிலையிலும் தமது ஊன் உண்ணாமை பழக்கத்தைத் தொடர்ந்து மேற்கொண்டிருக்கலாம். மயிலை சீனி வேங்கடசாமி சமணமும் தமிழும் பக்-76-77)2,

 தீபாவளி:

      வர்த்தமான மகாவீரர் கடைசி சமண தீர்த்தங்கரர் அவர் பாவாபுரி அரசன் அரணமனையில் தங்கி அங்குக் கூடியிருந்த மக்களுக்கு இரவு முழுவதும் அறவுரைகள் செய்தார். நெடுநேரம் விழித்த காரணத்தால் மக்கள் அவ்விடத்திலேயே உறங்கிவிட்டனர் மகாவீரரும் தாம் இருந்த இடத்திலேயே வீடுபேற்றை அடைந்தார் பொழுது விடிந்தது எல்லோரும் விழித்து எழுந்தனர். மகாவீரர் வாழ்வு நீத்ததைக் கண்டனர். அரசன் சான்றோருடன் கூடி யோசித்தான். மகாவீரரை மக்கள் ஆண்டுதோறும் நினைத்து வழிபடுவதற்காக அவர் வீடுபெற்ற நாளில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றிவைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். (தீபம் விளக்கு ஆவளி வரிசை: தீபாவளிட விளக்குகளின் வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறடைந்தார் ஆதலால், தீபாவளி விடியற்காலையில் மக்களால் உண்மை நிகழ்ச்சி கொண்டாடப் பெறுகிறது. இது மறைக்கப்பட்டு, அறிவுக்குப் பொருத்தமற்ற நரகாசுரன் கதை பிற்காலத்தில் இந்துக்களால் கட்டி விடப்பட்டது என்பது அறிஞர் கருத்து.

      சமண சமயம் செல்வாக்கிழந்த காலத்தில் சமணர்கள் வைணவங்களைத் தழுவினர் அந்நிலையிலும் தீபாவளியைக் கொண்டாடினர் அப்பழக்கம் பிற சமயத்தாரிடையும் நாளடைவில் புகுந்துவிட்டது சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள் குஜராத்தியர் தீபாவளியை முதலியோர் இன்றும் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவதே இதற்கு ஏற்ற சான்றாகும்3 (மயிலை சீனி வேங்கடசாமி. சமணமும் தமிழும், பக்.79-80) சமணம் ஆகிய

 ஐயனார்:

      இத்தெய்வம் பௌத்தம் இரண்டுக்கும் கோவில்களில் இத்தெய்வத்தை இன்றும் பிரம்மயட்சன், சாத்தனார் பெயர்களில் இத்தெய்வம் வணங்கப்படுகிறது. ஐயனாருக்கு ஊர்தி குதிரை: சமண ஐயனாருக்கு ஊர்தி யானை ஐயனார் கோவிலில் இன்றும் இந்துக்கள் வணங்குகின்றனர். ஐயனார், சாஸ்தி ஹரிஹர புத்திரன் என்று பெயர்களையிட்டு அழைக்கின்றனர் 4  மயிலை சீனி வேங்கடசாமி. சமணமும் தமிழும், பக்93)

 அறுபத்து மூவர்:

      சமணப் பெரியார் திரிசஷ்டிசலாகா புருஷர் எனப்படுவர். திரிசஷ்டி அறுபத்து மூன்று சலாகா அருஷர் - பெரியார் சைவப் பெரியார் சுந்தரரது திருத் தொண்டத் தொகைப்படியும். திருத்தொண்டர் புராணப் படியும் 72 பேர் ஆனால், அவருள் ஒன்பதின்மர் தொகையடியார் அறுபத்து மூவர் தனி அடியார் தொகையடியானாக் கழித்துச் சைவர்கள் சிவனடியார் அறுபத்துமூவர் என்றே கூறி வருகின்றனர் அறுபத்து மூவர் விழா இன்றும் நடைபெற்று வருகின்றது. சமண தொகையைக் கொண்டே சைவப் பெரியார் தொகையைக் குறித்திருக்கலாம் என்று கருதுதல் பொருத்தமாகும்.

சமணர் தங்கள் 63 பெரியார் வரலாறு கூறும் நூலை ஸ்ரீபுராணம் என்றும் சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தை ஸ்ரீபுராணம் என்று பழங் காலத்தில் வழங்கி வந்தனர் என்பது திருவொற்றியூர்க் கல்வெட்டால் தெரிகிறது.

சமணசமய சாத்திரங்களுக்குச் ‘சித்தாந்தம்' என்னும் பெயருண்டு சைவரும் சமய சாத்திரத்தைச் ‘சித்தாந்தம்’ என்றே கூறுகின்றனர்5 மயிலை தமது சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும் பக் 94-96)

 சித்தர் வணக்கம்:

      சித்தர் என்பவர் சமணர் வணக்கத்திற்குரியவர் சமணர் சித்தர் வணக்கம் செய்த பின்னரே படிப்பர் கல்வி கற்பிப்பர் சமண முனிவர் இருப்பிடம் பள்ளி எனப்பட்டது அதில் இருந்த கூடத்தில் அவர்கள் ஊர்ப்பிள்ளைகட்கு எழுத்துக்களையும் நூல்களையும் கற்பித்து வந்தனர். அதனால் அக்காலப் பிள்ளைகள் படித்த இடம் பள்ளிக்கூடம் எனப்பட்டது. அப்பெயர் இன்றளவும் சுல்வி கற்பிக்கும் இடங்களுக்கு வழங்கப்பட்டு வருவது கண்கூடு. சமணர் சித்தரை வணங்கிக் கல்வி கற்பிக்கத் தொடங்கியது போலவே சைவ வைணவரும் 'அரி நமோத்து சித்தம்' என்று கூறி வந்தனர். இன்றும் திண்ணைப் ஆசிரியர்கள் இதனைக் கூறுகின்றனர் 6 சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும் பக்97)

வடக்கிருத்தல்:

      இது ‘சல்லேகனை’ என்று சமணத்தில் பெயர்பெறும் மனக்கவலையை உண்டாக்கும். இடையூறு தீராத நோய் ஒன்றுண்டானபோது சல்லேகனை செய்து உயிர்  துறக்கலாம் என்பது சமணர் கொள்கை.

      ‘சல்லேகனை’ செய்பவர் தருப்பைப் புல்மீது வட க்கு நோக்கி இருக்கவேண்டும். என்பது விதி சமண தீர்த்தங்கரர். அனைவரு விற்றிருந்து உயிர் போகும் வரையில் உணவு கொள்ளாமல் வடக்கே வெறுபேறு அடைந்தனர். ஆதலால் வடதிசை புண்ணிய திசை என்பது சமணர் கொள்கை புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள்7 என்பது சிலப்பதிகாரம். சேரமான் பெருஞ்சேரலாதன் முதுகில் வெண்ணிப் போரில் புண் ஏற்பட்டது அவன் அப்புறப் புன்ணிற்கு நாணி வடக்கிருந்து உயிர் நீத்தான். தன் மக்களிடம் வெறுப்புக் கோப்பெருஞ்சோழன் காவிரியாற்றின் இடைக் கறையில் வடக்கிருந்து உயிர்விட்டர் கபிலர் தம்மை ஆதரித்த பாரிவள்ளல் இறந்த பிறகு திருக்கோவலூரில் வடக்கிருந்து உயிர் நீத்தார். எனவே இப்பழக்கத்தைச் சமணரிடமிருந்து சங்க காலத் தமிழர் கற்றனர் என்பது தெளிவு.

      இங்ஙனம் கொல்லாமை, ஊன் உண்ணாமை, உண்ணா நோன்பிருந்து உயிர் விடுதல் முதல் பல வழக்கங்களும் ஐயனார் வழிபாடு போன்ற வழிபாடுகளும் தீபாவளி போன்ற கொண்டாட்டங்களும் தமிழகத்தில் பரவின என்று கருதுதல் சீனி.வேங்கடசாமி, சமணமும் தமிழும், பக்.180-184) சமண பொருத்தமாகும்8 தீமைகள்

1. பிற சமய வெறுப்பு: பிற சமயத்தாரைக் கொடுமைப் படுத்தல்-

(1) திருநாவுக்கரசரை நீற்றறையில் இட்டமை, விஷம் கல்லைக் கட்டிக் கடலில் தள்ளியமை,

(2) திருஞான சம்பந்தர் விஷம் கலந்த உணவு தந்தமை, யானையை ஏவிக் கொல்லச் செய்தமை. தங்கியிருந்த மடத்துக்குத் தீ வைத்தமை முற்றும்.

      2 பெண்களை இழிவு செய்தமை: பெண்கள் துறத்தல் இயலாது முற்றும் துறந்தவரே விடுபேற்றை அடைவர். ஆதலால் பெண்கள் பெண் பிறவியிலேயே வீடு பேற்றை அடைய முடியாது. அவர்கள் ஆண்களாகப் பிறந்து துறவு நிலையை அடைந்தால்தான் விடுபேற்றை அடைய முடியும் ஆதலால் வீடுபேற்றுக்குத் தகுதியில்லாத பிறவி என சமணர் கருதினர் நூல்களில் இழித்தும் பாடியுள்ளனர் (பெண்களும் ஆண்களைப் போலவே வீடுபேறு அடையலாம் மனத்தூய்மையும் சமயத்தினரது நம்பிக்கை) சமணத்தின் வீழ்ச்சிக்கு சிறந்த பக்தியுமே விடுபேற்றிற்கு வழி செய்வன என்பது சைவ வைணவ காரணம்.  

      3 தொன்று தொட்டுத் தமிழ் இயல், இசை, நாடகம், முன்று பிரிவுகளாக இருந்தது. கூத்தர், கூத்தியர் பன்னெடுங் காலமாக நாடக கலையை வளர்த்து வந்தனர் ஆனால், முனிவர் நாடகம் காமத்தை மிகுவிக்கும் என்று நாட்டில் பிரசாரம் செய்து, நாடகக் கலைக்கு உலை வைத்தனர் சிந்தாமணி போன்ற தம் நூல்களிலும் நாடகத்தைப் பார்ப்பவர் கண்களையே பெயர்க்க வேண்டும் என்றும் குறித்துள்ளனர் இச்சமனர் செல்வாக்குப் பரவியிருந்த காலத்தில் தமிழகத்தில் நாடகக்கலை வீழ்ச்சியுற்றது. இது தமிழுக்குப் பெருந்தீமை.

      4. சமண முனிவர் வடநாட்டினர் பாலி, வடமொழி முதலிய வடநாட்டு மொழிகளில் வல்லவர் அவர்கள் தமிழைக் கற்று நூல்களை எழுதியபோது அவர்தம் சமயத் தொடர்பான சொற்களும் வழிபாட்டுக்குரிய சொற்களும் பிறமொழிச் சொற்களாகவே தமிழில் கலந்தன அவர்கள் எழுதிய உரைநடை கலப்பு நடையாகவே இருந்தது. நீலகேசி உரைநடையைச் சான்றாகக் காண்க.

தமிழகத்தில் பௌத்த சமயச் செல்வாக்கு

      பௌத்த சமயம் அசோகர் காலத்தில் தமிழகம் வந்தது என்பது ஆராய்ச்சியாளர் முடிபு சமண முனிவர்களைப் போலவே பௌத்த முனிவரும் முதலில் மலைக்குகையில் வாழ்ந்தனர். பின்பு பல ஊர்களில் பரவினர் மடங்களையும் கோயில்களையும் அமைத்துக்கொண்டு வாழலாயினர். அவர்கள் மடம் பள்ளி எனப்பட்டது. கோவில் விகாரம் எனப்பட்டது.

கொல்லாமை:

வேத வேள்விகளில் ஆடு, மாடு, குதிரை வற்புறுத்தினர். அக்கொள்கை நாளடைவில் இந்துக்களிடமும் கொல்லலாகாது என்று பௌத்தம் பரவியது. ஊன் உண்டு வந்த பிராமணர் அறவே உயிர் கொலையை நீக்கிவிட்டனர். வேளாளர் முதலிய பிறரும் காலப்போக்கில் புலால் உண்ணலைத் தவிர்த்தனர்.

அரசமரத்துத் தொழுகை:

      அரசமரத்தின் அடியில் தங்கியிருந்த போதுதான் புத்தர் ஞானத்தைப் பெற்றார். அரச மரம் (போதிவிருட்சம் புத்தரால் சிறப்புற்றது. அதனால் பௌத்தர் அரச மரத்தைத் தொழுது வந்தனர் அரசமரத்தின் அடியில் புத்த தேவர் சிலையை அல்லது பாதங்களை வைத்து வழிபட்டு வந்தனர். பௌத்த மதம் தமிழகத்தில் அழிந்து விட்டது. ஆனால், பௌத்த வழிபாட்டிற்குரிய அரசமரம் இந்துக்களிடையே செல்வாக்குப் பெற்றது. அரசமரத்தடியில் பிள்ஸ் தீவமும் நாகங்களின் உருவங்களும் வைக்கப்பட்டன தமிழ்ப் பெண்கள் அரசமரத்தைச் சுற்றி வந்து வணங்குகின்றனர்.

 மடங்கள்:

      பௌத்த மதத்தின் உயிர்நாடி சங்கம் என்பது  பௌத்த  துறவிகளின் கூட்டமே சங்கம் எனப்பட்டது. அவர்கள் ஊர் தோறும்  பள்ளிகளை மடங்களை; அமைத்தனர். அவற்றில் தங்கி ஊர் மக்களுக்குச் அறிவைப் பரப்பினர் சிறு பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டினர். பொது மக்களுக்கு மருத்துவ உதவியும் செய்தனர். இம்முறையைப் பின்பற்றியே பிற்காலத்துச் சைவ மடங்களும் வைணவ மடங்களும் வைதிக மடங்களும் தமிழகத்தில்  தோன்றின என்பது ஆராய்ச்சியாளர் முடிவு.

அத்வைதம்:

      கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கரர் போதித்த 'அத்வைத மதம் மாயா வாத மதம் என்று சைவ வைணவர்களால் கூறப்பட்டது. இராமானுஜர். சங்கரரது மதத்தைப் பிரசன்ன பௌத்தம் மாறுவேடம் பூண்டு வந்த பௌத்திம் என்று குறித்துள்ளனர் அத்துவைத மதத்தைத் தோற்றுவித்தவரும் இவ்வாரு கூறியுள்ளார் பத்ம புராணத்திலும் சங்கரர் மதம் இவ்வாறே கூறப்பட்டுள்ளது இக்கூற்றுக்களால் பௌத்த சமயத்திலிருந்து ஏற்றுக்கொள்ளப் பட்டன என்பது தெளிவு ஒன்பதாவது

      புத்தர்  அவதார புருஷர் புத்தரைத் திருமாலின் அவதாரம் என்று தசாவதார சரித்திரம் கூறுகிறது. அதனால் வைணவம் புத்தரை ஓர் அவதாரமாக ஏற்றுக் கொண்டது வெளிப்படை பதிதருக்குச் சாஸ்தா சாத்தனார் என்று பெயர் உண்டு. அவர் ஐயனார் என்றும் அழைக்கப்பட்டார். சைவர் சாஸ்தா அல்லது ஐயனார் என்ற பெயருடன் புத்தரைத் தம் தேவர்களுள் ஒருவராகச் சேர்த்துக்கொண்டனர்.

 ஐயனார்:

      தமிழகத்தில் ஐயனார் கோயில்கள் மிகப் பலவாக இருக்கின்றன. ஐயனார் சமணத்திற்கும் பௌத்தத்திற்கும் உரிய தெய்வம் குதிரையை ஊர்தியாகக் கொண்ட ஐயனார் பௌத்த சமயத்திற்கு உரிய தெய்வமாகும். யானையை ஊதியாகக் கொண்ட ஐயனார் சமண சமயத்திற்கு உரிய தெய்வமாகும்.

      தமிழ் நாட்டுச் சிற்றூர்களில் ஐயனார் கோயில்களைக் காணலாம். ஐயனார் என்று கூறி இந்துக்கள் வழிபடுகின்றனர்.

 தருமராசர் கோயில்கள்:

      புத்தர் பெயர்களுள் தருமன் அல்லது தருமராசன் என்பது ஒன்று பிங்கலம் திவாகரம் என்னும் நிகண்டுகளில் இப்பெயர்களைக் காணலாம் எனவே இவை புத்தர் தரும்ராசர் கோயில்களே ஆகும். பௌத்தம் குன்றிய பிறகு இக்கோயில்கள் பாண்டவருள் மூத்தவனான தருமராசன் கோயில்களாகக் கற்பிக்கப்பட்டன. இக்கோயில்களில் பௌத்தர் வழிபடும் அரசமரம் இருத்தலை இன்றும் காணலாம்9 (சீனி வேங்கடசாமி பௌத்தமும் தமிழும். பக்.44-48)

 பெண் தெய்வங்கள்:

      தாராதேவி, மங்கலா தேவி சிந்தாதேவி முதலிய பெண் தெய்வங்கள் பௌத்த சமயத்திற் குரியவை இத்தெய்வங்களின் இந்து சமயச் செல்வாக்குப் பெற்றபொழுது பகவதி கோயில்களாகவும் திரௌபதி அம்மன் கோயில்களாகவும் கிராம தேவதைகளின் கோயில்களாகவும் மாற்றப்பட்டுவிட்டன.

 நூல்கள்:

      மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, பிம்பிசார கதை சித்தாத்தத் தொகை, திருப்பதிகம் என்பன பௌத்த நூல்கள், மணிமேகலை என்ற காவியம் ஒன்றே பௌத்த சமய உண்மைகளையும், பௌத்த சமயப் புலவர்களையும் இன்றும் உணர்த்துவதாக உள்ளது. கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் புத்தமித்திரர் என்பவரால் வீரசோழியம் என்ற இலக்கணம் செய்யப்பட்டது.

தலையை மழித்தல் துவராடையை உடுத்தல்:

      பௌத்த துறவிகள் தலையை மழிக்கும் வழக்கமுடையவர்கள் துவர் ஆடையை உடுத்து வந்தனர். இவ்விரண்டு வழக்கங்களும் இன்றும் இந்து சமயத துறவிகளிடம் காணப்படுகின்றன.

கோயில் கட்டடக்கலை:  

      சாரநாத் அமராவதி முதலிய இடங்களில் பௌத்தவிகாரம் சிறந்த கலை நுட்பத்தைப் பெற்றுள்ளன அக்கலை நுட்படி தென்னாப் பரவியது. தென்னாட்டுக் கட்டடக்கலை ஓவியக்கலை. சிற்பக்கலை ஆகியவற்றிற்கு மேலே கூறப்பெற்ற கோயில்களும் அவற்றின்கண் தீட்டப்பெற்ற ஓவியங்களும் சிற்பங்களும் ஓரளவு துணை புரிந்தன என்பது ஆராய்ச்சியாளர் முடிவு.

 உணவு படைத்தல்:

      எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் பௌத்தரால் மிகச் சிறந்த அறமாகக் கருதப் பட்டது. நாட்டில் பசியின் கொடுமையை நன்கு விளக்கிப் பசித்தவருக்கு பெருமை பௌத்தத்திற்கே உரியது பசிப்பிணி என்னும் பாவி உணவு படைக்க வேண்டுமென்பதை மிகுதியாக எடுத்துப் பேசிய என்பது மணிமேகலை காணார்; கேளார், நொண்டிகள் அனாதைகள் முதலிய எளிய மக்களை உணவு கொடுத்துப் பாதுகாக்க வேண்டுமென்று வற்புறுத்தியது பௌத்த சமயமேயாகும் மாதவி மகனான மணிமேகலை இத்தொண்டினைச் செய்து காட்டினாள் என்று மணிமேகலை கூறுகிறது.

நல்லொழுக்கம்:

      தந்தை மக்கள், மாணாக்கன், முதலாளி. தொழிலாளி, கணவன் பணக்காரர் மனைவி ஆசிரியன்- நடந்து, கொள்ள வேண்டுமென்பதையும் புத்தர் பெருமான் ஏழை ஆகிய இவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வெவ்வாறு கூறியுள்ளார். அக்கருத்துக்களே பிற்கால நீதி நூல்களில் வற்புறுத்தப்பட்டன

தமிழில் பிறமொழிக் கலப்பு:

      பண்டைக் காலத்தில் பௌத்த சமய நூல்கள் எல்லாம் பாலி மொழியிலேயே எழுதப்பட்டு வந்தன. பௌத்த முனிவர்கள் தமிழைக் கற்றுத் தமிழில் நூல்கள் செய்தனர். தமிழ்நாட்டு முகக்ஷிம் ஒம் சமய நூல்களைத் தமிழில் எழுதும்பொழுது அரபு மொழிச் சொற்கள் இடம் பெறுதல் போலவே பௌத்தர்கள் தமிழ் நூல்களை எழுதியபோது மொழிச் சொற்கள் தமிழில் இடம் பெற்றன. ஆராமம் சயித்தியம், சேத்திய யூகம் தூபம், தூபி. திகாரை பேதி, பிட்சு, பிட்சுணி, தேரன், தேரி முதலியன தமிழில் வழங்கி வரும் பாலி மொழிச் சொற்கள் (சீனி.வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும்10 பக் 126)

முடிவுரை:

      பௌத்தர் சமணரைப் போல் சிறந்த கல்விமான்கள், வாதத் திறமையுள்ளவர்கள். அன்பையே உயிர் நோடி நகக்கொண்டவர்கள் அன்பு அருள். இரக்கம் முதலிய நற்பண்புகளை மக்கள் உள்ளங்களில் அழுத்தமாகப் பதிய வைத்த சிறப்பு பௌத்த சமயத்திற்கே உரியது எனல் மிகையாகாது காஞ்சிநகர அரசன் சீனத்திலும் சப்பானிலும் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் பௌத்தத்தைப் பரப்பி அழியாப் புகழ் பெற்றார். காஞ்சியைச் சேர்ந்த  திக்நாகர் மிகப் பெரிய பௌத்த ஆசிரியர் இவர்  மாணவரே காஞ்சித் நளாந்தைப் பல்கலைக்கழகத் தலைமைப் பேராசிரியருமாகிய குருப்பாலர் (கி.பி 528-560) என்பவர் இப்பெரு மக்களால் தமிழரது அறிவுத் வட நாட்டிலும் இலங்கையிலும் சீனம் சப்பான் நாடுகளிலும் பா சாரி புத்தர், போன்ற தமிழ் பௌத்தர்கள் பாலி மொழியை அடிகள். சீத்தலைச் சாத்தனார். புத்ததத்தர் புத்தநந்தி பயின்று பௌத்த சமய நூல்களில் பெரும் புலமை பெற்றிருந்தனர். தருக்கக் கலையிலும் சிறந்து விளங்கினர்.

அடிக்குறிப்பு:

  1. திருக்குறள்.               பக்கம் 4
  2. சமணமும் தமிழும்         பக்கம் 6
  3. சமணமும் தமிழும்         பக்கம் 7
  4. சமணமும் தமிழும்         பக்கம் 7
  5. சமணமும் தமிழும்         பக்கம் 8
  6. சமணமும் தமிழும்         பக்கம் 8
  7. சிலப்பதிகாரம்            பக்கம் 9
  8. சமணமும் தமிழும்         பக்கம் 9
  9. பௌத்தமும் தமிழும்       பக்கம் 13
  10. பௌத்தமும் தமிழும்       பக்கம் 15

 

துணைநூற்பட்டியல்

திருக்குறள் தெளிவு பேரா சுந்தர சண்முகனார், நான்காம் பதிப்பு 2006 புதுவை பைந்தமிழ் பாவை பதிப்பகம் புதுச்சேரி 11

சிலப்பதிகாரம் புலியூர் கேசிகன், பாரி நிலையம், மறு பதிப்பு 2022, 184,பிராட்வே, சென்னை

பௌத்தமும் தமிழும் மயிலை சீனி வேங்கடசாமி, நாம் தமிழர் பதிப்பகம் 2006, சென்னை

சமணமும் தமிழும் மயிலை சீனி வேங்கடசாமி, பதிப்பு 2017

கௌரா பதிப்பகம் சென்னை

திருக்குறள் தெளிவு பேரா சுந்தர சண்முகனார், நான்காம் பதிப்பு 2006 புதுவை பைந்தமிழ் பாவை பதிப்பகம், புதுச்சேரி 11