ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

பெரிய புராணத்தில் இயற்கை (Nature in Periyapuranam)

முனைவர் இரா.வனிதாமணி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குயின்ஸ் கலை மற்றும் அறிவியல், மகளிர் கல்லூரி, புனல்குளம், புதுக்கோட்டை 22 Nov 2023 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்

     இயற்கை எங்கும் நிறைந்தது அதன் அழகில் மனிதர்கள் மகிழ்கிறார்கள். இவ் உலகம் செழிக்க வளம் கொடுக்கும் இயற்கையானது பெரியபுராணத்தில் சிறப்பான இடத்தை பெறுகின்றன. ஓரறிவு உயிரினங்களிலிருந்து, ஆறறிவு மனிதன் வரை உய்விக்கும் இடமாக இறைவன் இயற்கையை படைத்திருக்கின்றான். பஞ்சபூதமாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றோடு இறைவனை ஒன்றாக்கி இயற்கையை நாயன்மார்கள் பாடியுள்ளனர். இவ்வகையயிலே பெரியபுராணத்தில் இயற்கையை ஆராய்வதே நோக்கமாகும்.

Abstract

      Nature is everywhere. People enjoy its beauty. Nature, which gives the world prosperity, occupies a special place in Periyapurana. God has created nature as a resting place from single-sense creatures to six-sense man. The Nayanmars have sung of nature by uniting God with Panchabhuta, land, water, fire, wind and sky. In this way, the purpose of Periyapurana is to explore nature.

திறவுச்சொல் 

இறைவன், பக்தி, இயற்கை, சிவபெருமான், ஐம்பூதங்கள் 

(Keyword)

Lord, Bhakti, Nature, Lord Shiva, Five Buddhas.

 

முன்னுரை (INTRODUCTION)

      பெரிய புராணத்தில் இயற்கை என்பதில் சங்க காலம் முதல் மனிதன் இயற்கையை நேசித்தான் என்பதையும், இயற்கையின் நலமே, இறைவனின் நலம் என்பதையும் நாயன்மார்கள் வழி அறியலாம். மேலும், இயற்கையின் வடிவிலே இறைவனை நாயன்மார்கள் கண்ட வழியினை அறியலாம். மேலும், இயற்கையின் வடிவிலே இறைவனை நாயன்மார்கள் கண்ட வழியினை அறியலாம்.

இயற்கை (Nature)

      இயற்கை என்ற சொல் இறைவடிவானது என்பதை,

      இயற்கைப் பொருளை இற்றெனக்கிளத்தல்

  • என்ற தொல்காப்பிய நூற்பா வழி அறிய முடிகிறது.

இயற்கையல்லன செயற்கையில் தோன்றினும்

என்ற புறநானூற்று பாடல் வரிகளில் இயற்கை என்ற சொல் புலப்படுகின்றன. உலக மானிட முயற்சியின்றி இயல்பாகத் தாமே தோன்றி எங்கும் நிறைந்தவை இயற்கையேயாகும்.

ஐம்பூதங்களும் இயற்கையாகின்றன.

      இயற்கை           -     தெய்வம்

      இயற்கைத்தன்மை    -     தெய்வத்தன்மை

இயற்கை           -     தெய்வத்தொடர்பு

என்ற வகையிலே இயற்கை காணப்படுகின்றன.

பஞ்சபூத தலங்கள் (Panchal Places)

      இறைவனை இயற்கையாகக் கண்ட முன்னோர்கள் பஞ்சபூதங்களின் அம்சமாக இறைவனைப் படைத்தனர். பஞ்சபூதத்தின் சொபேமாக சிவபெருமான் பஞ்சபூதத் தலங்களில் தலைசிறந்து விளங்குகின்றான்.

      நிலம்        -     காஞ்சிபுரம்

      நீர்          -     திருவானைக்காவல்

      நெருப்பு      -     திருவண்ணாமலை

      காற்று       -     திருக்காளத்தி

      ஆகாயம்     -     சிதம்பரம்

என்ற நிலைிலே சிவபெருமான் இயற்கையின் அம்சமாகக் காணப்படுகின்றான்.

பக்தி இலக்கியங்களில் இயற்கை (Nature in devotional literature)

      பக்தி இலக்கியங்களில் இயற்கை தனித்தன்மை பெற்று விளங்குகின்றன.  இறைவனது அருளையும், ஆற்றலையும், பாடிப்பரவும் வகையிலே நாயன்மார்கள் சிறப்புடன் விளங்குகின்றனர். திருஞானசம்பந்தர்

“பொன்னிவளஞ் தருநாடு பொலிவெய்த நிலவியதாற்

கன்னிமதில் மருங்குமுகி னெருங் கழு மலமுதூர்”

                                                பெ.பு.1900

என்ற பாடலின் வழியே பிறையினை சூடியுள்ள சிவபெருமானை மனமுருகி பாடுகின்றார்.

      திருக்கழுமலம் என்ற தலமானது நீர்ஊற்றுகள், அழகிய வயல்கள், தாமரை மலர்கள், தேமா மரத்தின் சாறு போன்றவை நிறைந்து காணப்பட்டன. இதனை,

பரந்த விளை வயற் செய்ய பங்கயமாம் பொங்கெரியில்

வரம்பில்வளர தேமாவின் கனிகிழிந்த மதுநறுநெய்”

 

‘நிரந்தரநீ ளிலைக்கடையா லொழுகுதலா னெடிதவ்வூர்

மரங்களுமா குதிவேட்குந் தகையவென மணந்துளதால்”

என்ற பாடலின் மூலம் இயற்கையை அறியலாம்.

      திருநாவுக்கரசர், திருமுனைப்பாடி என்ற நாட்டின் இயற்கை அழகினை புகழ்ந்துள்ளார்.

செய்யமா ணியொளிசூழ் திருமுன்றின் முன்றேவாசிரியன்

கொய்யுலா மலர்சோலைக் குயில்கூவ மயிலாலு மாருரரைக்

என்பதில் பூச்சோலையில் குயில்கள் கூவ, மயில்கள் அசைய, திருவாரூரில் எழுந்தருளியுள்ள பெருமானை இனிமையாக போற்றுகின்றார்.

      அக்காலத்தில் ஒவ்வொரு ஆலயத்தின் முன் குளம் வெட்டி நிரை பாதுகாத்து, பின்பு அந்நீரில் நீராடி பின்பு இறைவனை வழிபட்டனர். காணும் இடமெல்லாம் பல உயிரினங்கள் இன்பமாக வாழ்ந்தன.

      குன்று போவம்மணி மாமதில் சூழும்

     குண்டு அகழ்க்கமல வண்டு அலாகைதைக்

     துன்பு நிறு புனைமேனிய ஆகித்

     தூய நீறுபுனை தொண்டர்கள் என்னச்

     சென்று சென்று முரல் கின்றது கிண்டு

     சிந்தை அன்பொடு தினைத்தெதிர் சென்றார்.

என்ற பாடல் வரிகளில் சுந்தரர் இயற்கையோடு இறைவனை தாம் செல்லும் தலங்கள் மூலமாக கண்டு இன்புற்றதார்.

      உலக உயிர்கள் வாழ்வும் உணவு பெருகவும் நீரைத் தரும் ஆறுகள் நாட்டின் உணிர் நாடியாகும். நாட்டை சேயாகவும் அதனை காக்கும் நீரை தாயாகவும் சான்றோர்கள் காட்டியுள்ளனர்.நமிநந்தியபிகள், ஈசனுக்கான நெய்விளக்கு ஏற்றி வழிபட்டுவந்தார். சமணர்களின் சூழ்ச்சியினால் நெய் விளக்கு ஏற்ற முடியவில்லை. அப்போது ஈசனின் திருவருளினால் குளத்து நீரை முகந்து கொண்டு விளக்கேற்றினார் இதனை,

இந்த மருந்சிற் குறத்துநீர் முகந்து கொடுவர்தேற்று

என்ற பாடலின் மூலம் நீரின் சிறப்பினை விளக்குகின்றார்.

      நெருப்பினைக் கடவுளாகப் பார்த்த நாயன்மார்கள் நெருப்பிலே சோதி வடிவாக ஈசனைக் கண்டனர்.

      நந்தனார் என்ற நாயனார் சோதி வடிவிலே இயற்கையை கண்டார் என்பதை,

      இப்பிறவி போய்நீங்க எரியிடை நீ மூழ்கி

     முப்புரிநூல் மார்பருடன் முன்னணைவாய்

                                          என்றும்

      தில்லைவாழ் அந்தணர்க்கும் எரியமைக்க

     மெய்ப்பொருளா னார் அருள

       என்பதில் நந்தனரின் பக்தி நெறியும், இயற்கையின் அற்புதத்தையும் அறிய முடிகிறது.

      உயிர்வாழ காற்று மிகவும் இன்றியமையாததாகும். சோலையில் நிறைந்த மொட்டும், மலரும், காயும், கனியும், அச்சோலை வெளிப்படுத்தும் மணம் பொறிபுலன் கடந்து உயிரோடும் உணா்வு கொண்டுள்ளன.

      திருஞானசம்பந்தர் திருப்பைஞ்ஞீலியின் சோலைகளை கடந்து, ஈசனின் திருவடிகளை பணிந்து, தமிழ்மாலையாகிய இனிய திருப்பதிகங்களைப்பாடி அப்பதியினிலே தங்கியிருந்தார். இதனை,

      பண் பயில் வண்டினம் பாடுஞ்சோலைப்

     பைஞ்ஞீலி வாணர் பழல்பணிந்து

     மணபர வுந்தமிழ் மாலைபாடி

     வைகி வணங்கி மகிழ்ந்து போந்து

என்ற பாடலின் மூலம் காற்றுபெறுமிடத்தை அறியமுடிகிறது.

தலவிருட்சகங்கள் (Header Properties)

நாள்             விருட்சம்

ஞாயிறு      வில்வம்

திங்கள்             துளசி

செவ்வாய்          விளா

புதன்              மாதுளம்

வியாழன்           அனுகு

வெள்ளி            மலர்நாவல்

சனி               விஷ்ணுகாந்தி

என்பவை, சிவபெருமானுக்கு நல விருட்சமாகும்.

      இயற்கையாகவே மரங்கள் இறைவனோடு கலந்து இருப்பதை உணர முடிகிறது.

      மரங்கள் மனிதர் வாழ்வோடு ஒன்றாக பின்ணிப்பிணைந்துள்ளன. மரங்கள் இல்லையேல் மழை வளம் இல்லை. மரங்களின் மூலமே காற்று வெளிப்படுகின்றது. மரங்களை நம் முன்னோர்கள் தெய்வமாக வழிபட்டனர். மரங்களின் வழியாக, மானிடம் சமுதாயம் மலர்ச்சி அடையுமு் என்பதில் மாற்றமில்லை.

பூக்கள் (Flowers)

      மலர்கள் என்றாலே அழகு மலர்களின் மணம் அனைவரையும் கவர்ந்திழுக்கும் தன்மையுடையவை ஆகும். இறைவனுக்கு மலரை சூட்டுவது அன்று முதல் இன்று வழக்கத்தில் உள்ளன. “ஆண்டாள் தான் சூடிய மாலையைத் திருமாலுக்குத் சூடியதால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என்ற பெயர் பெற்றார். ஈசனுக்கு எகந்த மலர் கொன்றை மலராகும். சிவபெருமானுக்குக் காலங்கள் தோறும் சாத்தப்பெறும் மலர்கள் பின்வருமாறு உள்ளன.

வாரங்கள் (Weeks)

      நாள்             மலர்

      ஞாயிறு -     தாமரை

      திங்கள்       -     ஆம்பல்

      செவ்வாய்    -     செங்குவளைப்பூ

      புதன்        -     செவ்வலரிப்பூ

      வியாழன்     -     கருங்குவளை

      வெள்ளி      -     வெண்தாமரை

      சனி         -     நிலோற்பலம்

மாதங்கள் (Months)

      சித்திரை            -     பலாசப்பூ

      வைகாசி            -     புன்னைமலர்

      ஆனி              -     வெள்ளெருக்கம்பூ

      புரட்டாசி          -     கொன்றைமலர்

      ஐப்பசி             -     தும்பைமலர்

      கார்த்திகை          -     கத்தரிப்பூ

      மார்கழி            -     பட்டிப்பூ

      தை               -     தாமரைமலர்

      மாசி              -     நிலோற்பலம்

      பங்குனி            -     மல்லிகைப்பூ

இவ்வாறாக மலர்கள் இடம்பெற்றுள்ளன.

      விறன்மிண்டநாயனார், எறிபத்த நாயனார் ஆகியோர் சிவபெருமானுக்கு விருப்பமான கொன்றைமலரை புகழ்ந்து பாடகின்றனர்.

இவ்வாறாக, ஒவ்வொரு செயலிவம், இறைவனோடு ஒன்றி, இறையோடு கூடிய இயற்கையாய் அமைந்துள்ளன. இவை அனைத்தும் இறைவன் மீது கொண்டள்ள பக்தியை, அன்பை, நாயன்மார்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

தொகுப்புரை

      இயற்கை, இவ்வுலகில் மாறாதது ஐம்பூதங்களில் மட்டுமல்லால், உலகில் உள்ள அனைத்து செயல்களிலும், பொரள்களில், இயற்கையும், இறைவனும், ஒன்றக் கலந்துள்ளான். மேலும் இயற்கையின் வழி இறைவனை அறிவதோட, இயற்கையின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் உணர முடிகிறது. இவ்வுலகிலே அனைத்திலும்  இறைவன் நீக்கமற நிறைந்துள்ளான் என்பது புலனாகிறது.

அடிக்குறிப்புகள்

  1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், ப-04.
  2. புறநானூறு பக் 35, பா-28.
  3. பெரியபுராணம் பா-10.
  4. மேலது பா-1900.
  5. மேலது பா-1905.
  6. மேலது பா-1489.
  7. மேலது பா-247.
  8. ஆற்றுப்படை இலக்கியத்தில் தமிழர் வாழ்வியல் ப.சேதுராமன் ப.119.
  9. பெரியபுராணம் பா-1877.
  10. மேலது பா-28.
  11. மேலது பா-28.
  12. பாரதிதாசன் வாணிதாசன் கவிதைகளில் இயற்கைப்புனைவு, வே.காத்தையன் ப-68.
  13. பெரியபுராணம் பா-2220.
  14. பெரியபுராணம் ப-247.
  15. தமிழ் இலக்கிய வரலாறு, சுபாஷ் சந்திரபோஸ், ப-127.
  16. பெரியபுராணம் ப-247.
  17. மேலது பா-57.

துணைநூற்பட்டியல்

  1. ஆற்றுப்படை இலக்கியத்தில் தமிழர் வாழ்வியல் பி.சேதுராமன், 41பி, சிட்கோ இண்டஸ்ரியஸ் எஸ்டேட் அம்பத்தூர் சென்னை.
  2. தொல்காப்பியம், சொல்லதிகாரம், இரா.ஜெயபால், கழகம், சென்னை.
  3. தமிழ் இலக்கிய வரலாறு, சுபாஷ் சந்திரபோஸ் பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை.
  4. புறநானூறு, சுப்பிரமணியன், நியூசெஞ்சுறி புக் ஹவுஸ் (பி) லிட் 41, பி.சிட்கோ இண்டஸ்டிரிஸ் எஸ்டேட், சென்னை.
  5. பாரதிதாசன் கவிதைகள், செல்வராசன் பாரிநிலையம், சென்னை.
  6. பெரியபுராணம் ஓர் ஆய்வு அ.ச.ஞானசம்பர்தன், தமிழ்ப்பல்கலைக்கழகத் தத்துவ மையம், சென்னை.