ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைதீவுப் பிரதேசப் பாடசாலைகளில் கட்டிளமைப் பருவ மாணவர்களிடையேயான வன்போக்கு நடத்தை பற்றிய ஒப்பீட்டு உளவியல் ஆய்வு

பிரம்மியா சண்முகராஜா, க.கஜவிந்தன், மெய்யியல் உளவியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.இலங்கை. 31 Jan 2024 Read Full PDF

Abstarct: 

" A Comparative Study of Aggressive Behavior Among Adolescent Students in Mullaitivu And Jaffna Schools" Is this psychological study showing Aggressive Behavior Among Adolescent Students? Are there district-wise differences in that behavior? Find out if these students exhibit aggressive behavior verbally, physically or through anger or hostility. These students find that the actions of their parents, and family conflicts interrupt their Aggressive behavior, as well as the use of drugs and the direct impact of war influence Aggressive behavior. To know that, such Aggressive behavior is influenced by parents' profession, religion, place of residence, and the class they study. It was carried out to find out how to deal with students with Aggressive behavior, and how to avoid or reduce the effects of this behavior, giving advice, and presenting some other solutions. Based on these issues, the hypotheses and chapters of the study have been formulated.

Keywords: Adolescents, school, Aggressive behavior

ஆய்வுச் சுருக்கம்

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைதீவுப் பிரதேப் பாடசாலைகளில் கட்டிளமைப் பருவ மாணவர்களிடையேயான வன்போக்கு நடத்தை பற்றிய ஒப்பீட்டு உளவியல் ஆய்வு. இவ் உளவியல் ஆய்வானது கட்டிளம்பருவப் பாடசாலை மாணவர்களில் வன்போக்கு நடத்தை காணப்படுகின்றதா? அந்நடத்தையில் மாவட்டரீதியான வேறுபாடுகள் காணப்படுகின்றதா? என்பதனைக் கண்டறியவும் இம் மாணவர்கள் வாய் மொழி ரீதியாகவோ, உடலியல் ரீதியாகவோ அல்லது கோபத்தின் மூலமாகவோ, விரோதப்போக்குகளின் மூலமாகவோ வன்போக்குநடத்தையை வெளிப்படுத்துகின்றனரா? என்பதனை அறிந்து கொள்வதுடன், இம் மாணவர்களின் பெற்றோரின் நடவடிக்கைகள், குடும்ப சச்சரவுகள் என்பன இவர்களின் வன்போக்கு நடத்தையைத் துண்டுகின்றது என்பதனை அறியவும், அத்துடன் போதைப் பொருட்களின் பாவனை மற்றும் யுத்தத்தின் நேரடித்தாக்கம் என்பனவும் வன்போக்குநடத்தையில் செல்வாக்குச் செலுத்துகின்றது. என்பதனை அறியவும், இத்தகைய வன்போக்கு நடத்தையில் பெற்றோர்களின் தொழில், சமயம், வாழும் இடம், மற்றும் அவர்கள் கல்வி கற்கும் வகுப்பு என்ற விடயங்கள் செல்வாக்கு செலுத்தும் காரணிகளாக அமைகின்றது. என்பன தொடர்பாகக்கண்டறிவதுடன், வன்போக்கு நடத்தையுடைய மாணவர்களை எவ்வாறு கையாளலாம், மற்றும் இந்த நடத்தையினால் ஏற்படும் பாதிப்புக்களைத் எவ்வாறு தவிர்க்கலாம், அல்லது குறைக்கலாம், போன்ற ஆலோசணைகளை வழங்குதல் மற்றும் மேலும் சில தீர்வுகளை முன்வைக்கும் முகமாக மேற்கொள்ளப்பட்டது. இவ் விடயங்களின் அடிப்படையிலேயே ஆய்வின் கருதுகோள்களும், அத்தியாயங்களும் வகுக்கப்பட்டுள்ளது.

திறவுச் சொற்கள்: கட்டிளமைப் பருவ மாணவர்கள், பாடசாலை, வன்போக்கு நடத்தை

ஆய்வின் அறிமுகம்.

மனித வளர்ச்சிக்கட்டங்களில் பல்வேறு படிநிலைகள் காணப்படுகின்ற போதும், முழு மனிதனின் பெரும்பாலான பகுதி வளர்ச்சியினை ஒருவன் அடையும் படிநிலையாகக் கட்டிளமைப் பருவத்தினைக் கூறலாம். லீவின்சன் (levinson), சீகி (Sheehy) என்ற உளவியலாளர்கள் வேரைத் தேடும் பருவம் என இப்பருவத்தினை அழைக்கின்றனர். இவர்கள் நேர்மறையான மற்றும் எதிர்மறையானதுமான பல்வேறு வகையான நடத்தைகளையுடையவர்களாகக் காணப்படுகின்றனர். எதிர்மறையான நடத்தைகளில், மிகவும் பாரிய விளைவுகளைத் தரக்கூடிய நடத்தையாகவே வன்போக்கு நடத்தை காணப்படுகிறது. 12-13 அல்லது 20-24 வயது வரையான காலப்பகுதியினைச் சிறப்பாகக் கட்டிளமைப் பருவம் எனக் கூறுவர். இப்பருவத்தில் பெற்றோரின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவு பாடசாலையின் பங்கும் காணப்படுகின்றது. ஏனெனில் இப்பருவத்தினர், தமது பெரும்பாலான நேரத்தினைச் செலவு செய்யும் இடமாகப் பாடசாலை அமைகின்றது. உடல், உள, சமூக, ஆத்மீகரீதியான விருத்திக்குரிய சரியான வழிநடத்தல்கள், இப்பருவத்தே உரிய முறையில் வழங்கப்படவேண்டும். இல்லாவிடில் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதுடன், வன்போக்கு நடத்தை இயல்பினை வாய்மொழி ரீதியாகவும் உடல், உளம் சார்ந்ததாகவும், கோபம், பகை, விரோதம் என்ற வகையிலும் வெளிப்படுத்த முனைகின்றனர். இதனால் இவர்கள் தமக்கும் பிறருக்கும் துன்பத்தினை விளைவிப்பதுடன், தமது ஆளுமையில் எதிர்காலப் பாதிப்பை விருத்தி செய்து கொள்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் கட்டிளமைப்பருவத்தில் ஏற்படும் மாற்றங்களை உரிய முறையில் கையாளாமையும், உணர்வுகள் உரிய முறையில் வெளியேற்றப்படாமையும், தேவைகள் நிறைவு செய்யப்படாமையுமேயாகும். வன்போக்குநடத்தையினை உளம் சார்ந்ததாகவும், உடல் சார்ந்ததாகவும் மற்றும் பல வழிகளிலும் வெளிப்படுத்துகின்றனர். வன்போக்கு நடத்தையின் விளைவுகள் பாதிப்புக்கள் தொடர்பிலான விழிப்புணர்வின்மை மற்றும் அறியாமை என்பனவே இத்தகைய விளைவுகளுக்குக் காரணம் எனலாம். இங்கு நாம் கட்டிளமைப்பருவம் மற்றும் வன்போக்குநடத்தை என்பன தொடர்பாக நோக்க வேண்டும்.

ஆய்வுப்பிரச்சினை

கட்டிளமைப்பருவம் என்பது ஒரு மனிதனின் 75 % மான முழு வளர்ச்சியை அடையும் மிகவும் முக்கியமானதாகக் காணப்படுகிறது. இதனால் இப்பருவத்தில் ஏற்படும் உடல், உள மாற்றங்கள் உரிய முறையில் கையாளப்படாத போதும், தேவைகள் நிறைவேற்றப்படாத போதும், பொருத்தமான வாழ்கைச் சூழல் அமையாதபோதும் அவர்களது நடத்தைகள் வன்போக்காகவும் மாற்றப்படுகிறது. இத்தகைய வன்போக்கு நடத்தையானது தனிநபரது வாழ்வையும், அவரைச் சுற்றியுள்ளவரது வாழ்வையும் பாதித்து, ஊறு விளைவிப்பதாகவே அமைகின்றது. இந் நடத்தை ஏற்படுவதற்கான புறக்காரணிகள் பாடசாலைக் கட்டிளமைப் பருவத்தினருக்கு அதிகம் காணப்படுகின்றது.

இன்றைய சூழலில் வன்போக்கு நடத்தையைத் தூண்டுவதற்கான அதிக சந்தர்ப்பங்களைச் சமூகம் வழங்குவதாலும், சமூகத்தினைக் கற்றுக்கொண்டும், மாதிரிகளைப் பின்பற்றியும் வாழும் கட்டிளமைப் பருவத்தினரின் நடத்தை வன்போக்குடன் காணப்படுகின்றமைக்கு அதிக சாத்தியம் உள்ளது. இன்றைய பத்திரிகைகள், ஊடகங்கள் என்பனவற்றிலும், அதிகரிக்கும் போதைப்பொருட்களின் பாவனையிலும் இருந்து காணக்கூடியதாக உள்ளது. இப்பாதிப்புக்களில் கட்டிளமைப் பருவத்தினர் சிக்கிக்கொள்கின்றனர்.

ஆய்வின் நோக்கம்

வன்போக்கு நடத்தையானது பாடசாலை மாணவர்களில், விசேடமாகக் கட்டிளமைப் பருவத்தினரில் காணப்படும்போது, அது உடல், உள, மனவெழுச்சிடிரீதியாக மற்றும் வாய்மொழியாகவோ வெளிப்படுத்தப்படுகின்றது. இதனால் இப்பருவத்தினரின் விருத்தி, ஆரோக்கியம் என்பன பாதிக்கப்பட்டுச் சமூகவிரோத ஆளுமையினைத் தமதாக்கிக் கொள்ளலும், எதிர்கால வாழ்வைப் பிரச்சினைக்குரியதாக்கிக்கொள்ளும் நிலையும் ஏற்படும். ஆகையால் இவ் வன்போக்கு நடத்தையைத் தூண்டும் காரணிகளை இனங்கண்டு, அதனை உரிய முறையில் கையாள்வதுடன், கட்டிளமைப் பருவத்தினரின் ஆளுமைப்பிறழ்வு நிலையில் வன்போக்கு நடத்தையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு உண்டு பண்ணலுமே, இவ் ஆய்வின் நோக்கம் ஆகும்.

கட்டிளமைப் பருவம்

ஓர் அமைதியற்ற சிக்கலான பருவம் என ஸ்ரன்லிஹால் (Stanlihall) என்பவரால் அழைக்கப்பட்ட இப்பருவம், பிள்ளைப்பருவத்திலிருந்து வயது முதிர்ந்தோர் பருவத்தினை அடைவதற்கான இடைப்பட்ட காலப்பகுதியினை உள்ளடக்கிய மிக முக்கியமான பகுதியாகக் காணப்படுகின்றது. (ஜர்சில்ஸ்) 12/24 தொடக்கம் 20/24 வயது வரையான காலப்பகுதியினைக் கட்டிளமைப்பருவம் எனப் பொதுவாகக் கூறுவர். Adolescencence (வளர்ச்சியடைதல், முதிர்ச்சியை நோக்கி வளர்தல்) என்ற இலத்தீன் சொல்லிலிருந்து உருவானதே, Adolescencence என ஆங்கிலத்தில் கட்டிளமைப் பருவத்தைக் குறிப்பிடுவதாக காணப்டுகின்றது. இப்பருவமானது யுவதி, இளைஞன், யௌவனப்பருவம், வாலை, விடலை, இளந்தாரி, குமரப்பருவம், வளரிளம் பருவம் எனப்பலவாறாக அழைக்கப்படுகின்றது. இளமை இனியது. எவராலும் விரும்பத்தக்கது, புயல்களைச் சந்திப்பது, நாகரிகத்தை இரசிப்பது, முரண்பாடுகளில் மூழ்குவது, மற்றவர்களைத் தேடிக்கொள்வது, இன்பத்தில் திளைப்பது, துன்பத்தில் துவள்வது, தனித்தன்மையை நாடுவது, மதிப்பை எதிர்பார்ப்பது, சவால்களை எதிர்கொள்வது, சுதந்திரத்தை எதிர்பார்ப்பது, கொள்கைப் பிடிப்புள்ளது, இலட்சியக் கனவு காண்பது, புரிந்து கொள்ளல் கடினமானது, புதுமையைப் புகுத்துவது, உணர்ச்சிகளின் சிகரம், ஏமாற்றத்தில் உடைவது எனப் பலவாறாகக் கட்டிளமைப்பருவப் பண்புகளைப் பற்றிக் கூறியுள்ளார் இமாகுலேட் பிலிப். (Emagulet Philip)

கட்டிளமைப் பருவம் என்பது மூளையில் ஏற்படுகின்ற அற்புதமான இயக்க சக்தியின் மாற்றத்திற்கான நேரம் ஆகும். (Prof.BJ.Casey, Yale University,2022.)

வன்போக்கு நடத்தை

மனிதன் வளர்ச்சிப் பருவங்களுக்கு ஏற்ப சுயநிறைவினைப் பெறவேண்டும், என்ற நோக்கில் போராடும் குணம் கொண்டவன். (Hoppes) இவ்வாறு அவன் வன்போக்கு நடத்தைப் பாங்கினைக் காண்பிப்பதற்கான ஊக்கங்களை இயல்பிலேயே கொண்டுள்ளான். அத்துடன் இன்றைய ஊடகங்களின் பங்கும் பெரிதாகக் காணப்படுகின்றது. இவ்வாறு பார்க்கும் போது வன்போக்கு நடத்தை என்பது இயல்பிலேயே காணப்படுகின்றது, எனக் கூறிவிட முடியாவிட்டாலும் இயல்பில் அதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்பதே பொருளாகும்.

தன்னை அல்லது பிறரை அதாவது வேறு உயிரியைத் துன்பம் செய்வதாகக் காயம் ஏற்படுத்துவதாக அமையும் நடத்தைப்போக்கு வன்போக்கு நடத்தை எனக் கூறலாம். இது உடல் சார்ந்ததாகவோ, வாய்மொழி சார்ந்ததாகவோ, நேரடியாகவும் மறைமுகமாகவும், இவ் வன்போக்கு நடத்தையானது வெளிப்படுத்தப்படுகின்றது. இந் நடத்தையினை கோபம், சண்டை, வாய்ப்பேச்சுப் போன்ற பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்துகின்றனர். வெறுமனவே உளவியல் துறைக்கு மட்டுமன்றிச் சமூகவியல், மானுடவியல் போன்ற பல துறைகளிலும் உயிர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் இவ் வன்போக்குநடத்தையின் தொடர்பு காணப்படும்.

ஆய்வின் நோக்கங்கள்

ஆய்வின் நோக்கம் கட்டிளம் பருவ மாணவர்களின் வன்போக்கு நடத்தையில் மாவட்ட ரீதியான வேறுபாடுகளை அறிதல் இந்நடத்தைக்கான காரணங்கள், பாதிப்புகள், வெளிப்பாட்டு முறைகளை யாழ்ப்பாணம் முல்லைதீவு மாவட்டங்களை ஒப்பிட்டு ஆராய்வதே இவ் ஆய்வின் நோக்கம் ஆகும். இத்தகைய வன்போக்கு நடத்தையானது பாடசாலை மாணவர்களில் விசேடமாகக் கட்டிளமைப்பருவத்தினரில் காணப்படும்போது அது உடல், உள, மனவெழுச்சி ரீதியாக மற்றும் வாய்மொழியாகவோ வெளிப்படுத்தப்படுகின்றது. இதனால் இப்பருவத்தினரின் விருத்தி, ஆரோக்கியம் என்பன பாதிக்கப்பட்டு சமூகவிரோத ஆளுமையினைத் தமதாக்கிக் கொள்ளலும் எதிர்கால வாழ்வைப் பிரச்சினைக்குரியதாக்கிக்கொள்ளும் நிலையும் ஏற்படும் ஆகையால் இவ் வன்போக்குநடத்தையைத் தூண்டும் காரணிகளை இனங்கண்டு அதனை உரிய முறையில் கையாளவதுடன் கட்டிளமைப் பருவத்தினரின் ஆளுமைப்பிறழ்வு நிலையில் வன்போக்குநடத்தையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு உண்டு பண்ணலுமே இவ் ஆய்வின் நோக்கம் ஆகும்.

கருதுகோள்கள்

1.    கட்டிளம் பருவ பாடசாலை மாணவர்களிடம் வன்போக்குநடத்தை காணப்படுகிறது.

2.    யாழ்ப்பாணம் மாவட்ட கட்டிளமைப்பருவ பாடசாலை மாணவர்களின் வன்போக்குநடத்தைக்கும், முல்லைத்தீவு மாவட்ட கட்டிளமைப் பருவ பாடசாலை மாணவர்களின் வன்போக்குநடத்தைக்கும் இடையே வேறுபாடு காணப்படுகின்றது

3.    கட்டிளம்பருவ பாடசாலை மாணவர்களின் வன்போக்குநடத்தையில் பால் வேறுபாடு செல்வாக்கு செலுத்துகின்றது.

4.    கட்டிளம்பருவ   பாடசாலை மாணவர்களின் வன்போக்குநடத்தைக்கும் குடும்ப பின்னணிக்கும் தொடர்பு காணப்படுகின்றது.

5.    கட்டிளம்பருவ பாடசாலை மாணவர்களின் வன்போக்குநடத்தைக்கும் குடும்பத்தில் இடம்பெறும் சண்டைகள் கலவரங்கள் என்பவற்றுக்கும் இடையே தொடர்பு காணப்படுகின்றது.

6.    கட்டிளம்பருவ பாடசாலை மாணவர்களின் வன்போக்குநடத்தையில் போரில் நேரடியாக பாதிக்கப்பட்டிருத்தலானது செல்வாக்கு செலுத்துகின்றது.

ஆய்வு முறையியல்

ஆய்வுப்பிரதேசமும் மாதிரிகளும்

இவ் ஆய்வானது யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதியில் உள்ள கலவன் பாடசாலைகளில் இருந்து மூன்று மூன்றாக தெரிவு செய்து தரம் 9 தொடக்கம் 13 வரையான வகுப்புகளில் இருந்து 49.1 வீதமான யாழ் மாவட்ட பாடசாலை மாணவர்களையும், 50.1 வீதமான முல்லை மாவட்ட பாடசாலை மாணவர்களையும் மாதிகளாக தெரிவு செய்யப்பட்டு இவ் ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் ஆய்வுக்கான மாதிரிகள் ஆண் பெண் இரு பாலாருமாக இரு மாவட்ட பாடசாலைகளிலும் இருந்து 505 கட்டிளம் பருவ பாடசாலை மாணவர்கள் எழுமாறாக தெரிவு செய்யப்பட்டு அவர்களிடம் வினாக்கொத்துக்களை வழங்கியும் நேரடியாக அவதானித்தும் மற்றும் இம் மாணவர்களுடனும் இப்பாடசாலைகளுக்கான மாணவ ஆற்றுப்படுத்துனர்களுடனும் நேர்காணல் மேற்கொண்டும் இவ் ஆய்வானது மேற்கொள்ளப்ட்டுள்ளது.

தரவுகளும் பகுப்பாய்வுகளும்.

ஆய்வுக்காக பல்வேறுபட்ட தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டன. இத்தரவுகள் அளவுரீதியானது, பண்புரீதியானது என்ற அடிப்படையிலும் (SPSS) புள்ளியியல் விபரங்களின் அடிப்படையிலும் விரிவானதான பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு இவ் ஆய்வு தொடர்பான முடிவுகள் பெறப்பட்டுள்ளன.

இவ் ஆய்விற்குரிய முதல் நிலைத் தரவுகளுக்குரிய கருவிகளாக அவதானம், வினாக்கொத்து (Buss Perry Aggresive Scal) வன்போக்கு நடத்தை அளவுத்திட்டம் என்பனவும் இரண்டாம் நிலைத் தரவுகளாக பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் மற்றும் நூல்களும், இணையத்தள வெளியீடுகள் என்பனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத் தரவுகள் அளவு ரீதியாகவும், பண்பு ரீதியாகவும் பெறப்பட்டுள்ளன. ஆய்வுக்கு உரிய தரவுகளினைப் புள்ளி விபரரீதியாக விளக்கவும், அளவுரீதியாகக் கணிப்பிடவும் அளவுசார் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் விடயங்களினை விரிவாக விளக்கப் பண்புரீதியான தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வுக்கான தகவல்களைப் பெறுவதற்காக 505 வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் சரியான முறையில் பூர்த்தியாக்கப்பட்டு இருந்தமையினால் அனைத்து வினாக் கொத்துக்களுமே பகுப்பாய்வினை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

கட்டிளம் பருவப் பாடசாலை மாணவர்களில் வன்போக்கு நடத்தை என்னும் இவ்உளவியல் ஆய்வுக்காக விபரண ஆய்வு முறையியல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பகுப்பாய்வுத் தரவுகளின் விபரங்கள் பின்வருமாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளன.

ஆய்வுக்காகத் தெரிவு செய்யப்பட்ட ஆறு பாடசாலை மாதிரிகளிலும், பால் வேறுபாடுகள் மற்றும் பாடசாலை மாவட்ட வேறுபாடுகள் என்பவற்றின் அடிப்படையில் கட்டிளமைப் பருவப் பாடசாலை மாணவர்களில் வன்போக்கு நடத்தை காணப்படுகின்றதா, இல்லையா என்பதனைக் கண்டறிவதுடன் வன்போக்கு நடத்தையினை வெளிக்காட்டுபவர்கள் எத்தகைய வழிகளைக் கையாள்கின்றனர் என்பவற்றினையும், வன்போக்கு நடத்தையில் வசிப்பிடம், பெற்றோரின் தொழில், வருமானம், சமயம் மற்றும் கல்வி கற்கும் தரம் என்பனவும் செல்வாக்கு செலுத்துகின்றது, என்பது தொடர்பாக கண்டறியவும் இப்பகுப்பாய்வும், விளக்கமளித்தலும் மேற்கொள்ளப்படுகின்றது.

 

மாதிரிகளின் பாடசாலை தொடர்பான பகுப்பாய்வு.

 

School

 

Frequency

Percent

Valid Percent

Cumulative Percent

Valid

M.Udajarkaddu M. V

151

29.9

29.9

29.9

Suthanthirpuram G.T.M. S

49

9.7

9.7

39.6

Iranappalai RCMV

45

8.9

8.9

48.5

Skandavarodaya Collage

127

25.1

25.1

73.7

Union Collage

101

20.0

20.0

93.7

Arunodaya Collage

32

6.3

6.3

100.0

Total

505

100.0

100.0

 

 

 

                                                                             மூலம் : வினாக்கொத்து அளவை 2018

 

மேலே காட்டப்பட்ட வரைபானது, மாதிர்களின் பாடசாலை தொடர்பாகக் காட்டப்படுகின்றது அதனடிப்படையில் உடையார்கட்டு மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 30 வீதமானோரும், சுதந்திரபுரம் GTMS யைச் சேர்ந்த 10 வீதமானோரும், இரணப்பாலை RCMV யைச் சேர்ந்த 9 வீதமானோரும், கந்தவரோதயா பாடசாலையைச் சேர்ந்த 25 வீதமானோரும், யூனியன் கல்லூரியைச் சேர்ந்த 20 வீதமானோரும், அருணோதயா ம.வி சேர்ந்த 6 வீதமானோரும் காணப்படுகின்றனர்

 

மாதிரிகளின் பால் நிலை அடிப்படையிலான பகுப்பாய்வு

 

Gender

 

Frequency

Percent

Valid Percent

Cumulative Percent

Valid

Male

255

50.5

50.5

50.5

Female

250

49.5

49.5

100.0

Total

505

100.0

100.0

 

 

 

 

மூலம்: வினாக்கொத்து அளவை 2018

 

மேலே காட்டப்பட்ட வரைபானது ஆய்விற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட 505 மாதிரிகளின் பால்நிலை வேறுபாடு தொடர்பான விபரத்தைச் சுட்டிக்காட்டுகின்றது. இம் மாதிரிகளில் ஆண் மாணவர்கள் 50மூ, ஆனோரும் பெண் மாணவர்கள் 50மூ ஆனோரும் காணப்படுகின்றனர்.

மாதிரிகளின் மாவட்ட அடிப்படையிலான பகுப்பாய்வு

 

District

 

Frequency

Percent

Valid Percent

Cumulative Percent

Valid

Jafffna

252

49.9

49.9

49.9

Mullaitheevu

253

50.1

50.1

100.0

Total

505

100.0

100.0

 

 

 

 

                                                                          மூலம்: வினாக்கொத்து அளவை 2018

 

கருதுகோள் பரிசீலனை

                                           

1)கட்டிளம் பருவப் பாடசாலை மாணவர்களிடம் வன்போக்கு நடத்தை காணப்படுகின்றது.

 

1.1 யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலை மாணவர்கள்

 

Frequency

Percent

Valid Percent

Cumulative Percent

Valid

Yes

219

84.2

84.2

84.2

No

41

15.8

15.8

100.0

Total

260

100.0

100.0

 

 

 

 யாழ்ப்பாணம் மாவட்ட மாணவர்கள் வன்போக்கு நடத்தையை வெளிப்படுத்தல்                                           மூலம் : வினாக்கொத்து அளவை 2018

 

 

 

 

1.2 முல்லைத்தீவு மாவட்டப் பாடசாலை மாணவர்கள்

 

 

Frequency

Percent

Valid Percent

Cumulative Percent

Valid

Yes

229

93.5

93.5

93.5

No

16

6.5

6.5

100.0

Total

245

100.0

100.0

 

 

 

முல்லைத்தீவு மாவட்டப் பாடசாலை மாணவர்கள் வன்போக்கு நடத்தையை வெளிப்படுத்தல்

 

 

                                                                

 

 

 

 

 

மூலம் : வினாக்கொத்து அளவை 2018

மேலே காட்டப்பட்ட வரைபானது யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டப் பாடசாலை மாணவர்கள் வன்போக்கு நடத்தையை வெளிப்படுத்தல் தொடர்பான பகுப்பாய்வு. அதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலை மாணவர்கள் வன்நடத்தையை வெளிப்படுத்துகின்றார்கள் என 84 வீதமானோரும், இல்லை என 16 வீதமானோரும் குறிப்பிடுகின்றனர். அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களிடையே வன்நடத்தையை வெளிப்படுத்துகின்றார்கள் என 93.5 வீதமானோரும், இல்லை என 6.5 வீதமானோரும் குறிப்பிடுகின்றன. கட்டிளம் பருவ பாடசாலை மாணவர்களிடம் வன்போக்குநடத்தை காணப்படுவதுடன், யாழ்ப்பாண மாவட்டக் கட்டிளம் பருவ பாடசாலை மாணவர்களின் வன்போக்கு நடத்தைக்கும் முல்லைத்தீவு மாவட்டக் கட்டிளம் பருவ பாடசாலை மாணவர்களின் வன்போக்குநடத்தைக்கும் இடையே வேறுபாடு காணப்படுகின்றது. என்பதை அறிய 505 கட்டிளம் பருவத்தினர் ஆய்வுக்காக உட்படுத்தப்பட்டதில் யாழ்ப்பாணம் மாவட்ட மாணவர்களில் 84 வீதமானவர்கள் வன்நடத்தையை வெளிப்பாடுகளை அதிகமாக கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களில் 93.5 வீதமானவர்கள் வன்நடத்தையை வெளிப்பாடுகளை அதிகமாக   கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். என்பது ஆய்வு முடிவில் இருந்து உறுதிப்படுத்தப் படுகின்றது. யாழ்ப்பாணத்தில் 16 வீதமானவர்களும், முல்லைத்தீவில் 6.5 வீதமானவர்களும் வன்போக்கு நடத்தை அற்றவர்கள் என இனம் காணப்பட்டாலும் அவர்களும் ஏதோ ஓர் வகையில் வன்போக்கு நடத்தையினை வெளிக்காட்டுகின்றனர். என்பதும் ஏனைய கருதுகோள்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆய்வு மாதிரிகளில் பெரும்பாலானோர் வன்போக்கு நடத்தையுடன் காணப்படுவதன் மூலம் இக் கருதுகோள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.

1)    யாழ்ப்பாண மாவட்ட கட்டிளமைப்பருவ பாடசாலை மாணவர்களின் வன்போக்குநடத்தைக்கும், முல்லைத்தீவு மாவட்ட கட்டிளமைப்பருவ பாடசாலை மாணவர்களின் வன்போக்குநடத்தைக்கும் இடையே வேறுபாடு காணப்படுகின்றது.

 

Independent Samples Test

 

 

Levene's Test for Equality of Variances

t-test for Equality of Means

F

Sig.

t

df

Sig. (2-tailed)

Mean Difference

Std. Error Difference

95% Confidence Interval of the Difference

Lower

Upper

Aggression

 

Equal variances assumed

55.637

.000

3.569

503

.000

.099

.028

.045

.154

Equal variances not assumed

 

 

3.566

434.362

.000

.099

.028

.045

.154

                                                           மூலம் : வினாக்கொத்து அளவை 2018

 

இவ் அட்டவணையின் அடிப்படையில் நோக்குகின்ற போது இதன் பொருண்மைப் பெறுமானம் .000 ஆக காணப்படுவதால் இரு குழுக்களின் விலகலில் வேறுபாடு உண்டு. அதாவது இரண்டும் சமமாக இல்லை என்ற முடிவிற்கு வரமுடியும். இதனை அடிப்படையாகக் கொண்டு சமமாக இல்லை என்பதற்கான பொருண்மைப் பெறுமானத்தை நோக்குகின்ற போது இப் பெறுமானமானது .000 ஆக காணப்படுகின்றது எனவே இது 0.05க்கு குறைவாக இருப்பதால் கட்டிளமைப் பருவ யாழ் மாவட்ட மாணவர்களின் வன்நடத்தைக்கும், முல்லைத்தீவு மாணவர்களின் வன்நடத்தைக்கும் இடையே வேறுபாடு காணப்படுகின்றது. எனும் முடிவிற்கு வரமுடியும். எனவே கட்டிளமைப்பருவ யாழ் மாவட்ட மாணவர்களின் வன்நடத்தைக்கும், முல்லைத்தீவு மாணவர்களின் வன்நடத்தைக்கும் இடையே வேறுபாடு காணப்படுகின்றது. எனும் கருதுகோளானது ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

 

3) கட்டிளமைப்பருவப் யாழ்ப்பாண மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களின் வன்போக்கு நடத்தையில் பால்வேறுபாடு காணப்படுகின்றது.

3.1) யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகள்

Independent Samples Test

 

Levene's Test for Equality of Variances

t-test for Equality of Means

F

Sig.

t

df

Sig. (2-tailed)

Mean Difference

Std. Error Difference

95% Confidence Interval of the Difference

Lower

Upper

Aggression

Equal variances assumed

143.322

.000

4.896

258

.000

.213

.044

.128

.299

Equal variances not assumed

 

 

5.175

203.899

.000

.213

.041

.132

.295

                                     மூலம் : வினாக்கொத்து அளவை 2018

 

இவ் அட்டவணையின் அடிப்படையில் நோக்குகின்ற போது, இதன் பொருண்மைப் பெறுமானம் .000 ஆக காணப்படுவதால் இரு குழுக்களின் விலகலில் வேறுபாடு உண்டு. அதாவது இரண்டும் சமமாக இல்லை என்ற முடிவிற்கு வரமுடியும். இதனை அடிப்படையாகக் கொண்டு சமமாக இல்லை என்பதற்கான பொருண்மைப் பெறுமானத்தை நோக்குகின்ற போது இப் பெறுமானமானது .000 ஆக காணப்படுகின்றது. எனவே இது 0.05க்கு குறைவாக இருப்பதால், கட்டிளமைப்பருவப யாழ்ப்பாண மாவட்ட பாடசாலை மாணவர்களின் வன்போக்கு நடத்தையில் பால்வேறுபாடு காணப்படுகின்றது. எனும் முடிவிற்கு வரமுடியும். ஆகவே இக் கருதுகோளானது ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

 

 

3.2) முல்லைத்தீவு மாவட்டப் பாடசாலைகள்

 

Independent Samples Test

 

Levene's Test for Equality of Variances

t-test for Equality of Means

F

Sig.

t

df

Sig. (2-tailed)

Mean Difference

Std. Error Difference

95% Confidence Interval of the Difference

Lower

Upper

Aggression

Equal variances assumed

29.991

.000

-2.594

243

.010

-.081

.031

-.143

-.020

Equal variances not assumed

 

 

-2.600

180.502

.010

-.081

.031

-.143

-.020

                                        மூலம் : வினாக்கொத்து அளவை 2018

இவ் அட்டவணையின் அடிப்படையில் நோக்குகின்ற போது இதன் பொருண்மைப் பெறுமானம் .000 ஆக காணப்படுவதால் இரு குழுக்களின் விலகலில் வேறுபாடு உண்டு. அதாவது இரண்டும் சமமாக இல்லை என்ற முடிவிற்கு வரமுடியும். இதனை அடிப்படையாகக் கொண்டு சமமாக இல்லை என்பதற்கான பொருண்மைப் பெறுமானத்தை நோக்குகின்ற போது இப் பெறுமானமானது .000 ஆக காணப்படுகின்றது. எனவே இது 0.05க்கு குறைவாக இருப்பதால் கட்டிளமைப்பருவ முல்லைத்தீவு மாவட்டப்; பாடசாலை மாணவர்களின் வன்போக்கு நடத்தையில் பால்வேறுபாடு காணப்படுகின்றது. எனும் முடிவிற்கு வரமுடியும். ஆகவே இக் கருதுகோளானது ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

4)    யாழ்ப்பாண மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கட்டிளமைப்பருவப் பாடசாலை மாணவர்களின் வன்போக்கு நடத்தைக்கும், குடும்பத்தில் காணப்படும் போதைப்பொருள் பாவனைக்கும் இடையே தொடர்பு காணப்படுகின்றது.

Correlations

 

Aggression

Q8

Aggression

Pearson Correlation

1

-.421**

Sig. (2-tailed)

 

.000

N

245

245

Q8

Pearson Correlation

-.421**

1

Sig. (2-tailed)

.000

 

N

245

245

**. Correlation is significant at the 0.01 level (2-tailed).

4.1 யாழ்ப்பாண மாவட்ட கட்டிளமைப்பருவப் பாடசாலை மாணவர்கள்

மூலம் : வினாக்கொத்து அளவை 2018

 

                   

கட்டிளமைப்பருவப் பாடசாலை மாணவர்களின் வன்போக்கு நடத்தைக்கும், குடும்பத்தில் காணப்படும் போதைப்பொருள் பாவனைக்கும் இடையிலான இணைவானது இவ் அட்டவணை மூலம் காட்டப்படுகின்றது. அதனடிப்படையில் இதனுடைய பொருண்மைப் பெறுமானம் .000 ஆக காணப்படுகின்றது. இப் பெறுமானம் ஆனது 0.05 க்கு குறைவாக காணப்படுவதால் யாழப்பாண மாவட்ட கட்டிளமைப்பருவப் பாடசாலை மாணவர்களின் வன்போக்கு நடத்தைக்கும், குடும்பத்தில் காணப்படும் போதைப்பொருள் பாவனைக்கும் இடையே தொடர்பு காணப்படுகின்றது. என்ற முடிவிற்கு வரமுடியும். ஆகவே இக் கருதுகோளானது ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

 

4.2 முல்லைத்தீவு மாவட்ட கட்டிளமைப்பருவப் பாடசாலை மாணவர்கள்

Correlations

 

Aggression

Q8

Aggression

Pearson Correlation

1

-.412**

Sig. (2-tailed)

 

.000

N

260

260

Q8

Pearson Correlation

-.412**

1

Sig. (2-tailed)

.000

 

N

260

260

**. Correlation is significant at the 0.01 level (2-tailed).

 

                                                         மூலம் : வினாக்கொத்து அளவை 2018

 

இவ் அட்டவணையின் அடிப்படையில் நோக்குகின்ற போது இதன் பொருண்மைப் பெறுமானம் .000 ஆக காணப்படுவதால் இரு குழுக்களின் விலகலில் வேறுபாடு உண்டு. அதாவது இரண்டும் சமமாக இல்லை என்ற முடிவிற்கு வரமுடியும். இதனை அடிப்படையாகக் கொண்டு சமமாக இல்லை என்பதற்கான பொருண்மைப் பெறுமானத்தை நோக்குகின்ற போது இப் பெறுமானமானது .000 ஆக காணப்படுகின்றது எனவே இது 0.05க்கு குறைவாக இருப்பதால் கட்டிளமைப்பருவ முல்லைத்தீவு மாவட்ட கட்டிளமைப்பருவப் பாடசாலை மாணவர்களின் வன்போக்கு நடத்தைக்கும், குடும்பத்தில் காணப்படும் போதைப்பொருள் பாவனைக்கும் இடையே தொடர்பு காணப்படுகின்றது. எனும் முடிவிற்கு வரமுடியும். ஆகவே இக் கருதுகோளானது ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

 

5) யாழ்ப்பாண மற்றும் முல்லைத்தீவு மாவட்டக் கட்டிளமைப்பருவப் பாடசாலை மாணவர்களின் வன்நடத்தைக்கும், குடுமபத்தில் இடம்பெறும் சண்டைகள், கலவரங்கள் என்பவற்றிற்கிடையே  தொடர்பு காணப்படுகின்றது.

 

5.1 யாழ்ப்பாண மாவட்டக் கட்டிளமைப்பருவப் பாடசாலை மாணவர்கள்.

 

Correlations

 

Aggression

Q7

Aggression

Pearson Correlation

1

-.530**

Sig. (2-tailed)

 

.000

N

260

260

Q7

Pearson Correlation

-.530**

1

Sig. (2-tailed)

.000

 

N

260

260

**. Correlation is significant at the 0.01 level (2-tailed).

                                 மூலம் : வினாக்கொத்து அளவை 2018

யாழ்ப்பாண மாவட்ட கட்டிளமைப்பருவப் பாடசாலை மாணவர்களின் வன்போக்கு நடத்தைக்கும், குடும்த்தில் இடம்பெறும் சண்டைகள், கலவரங்கள் என்பவற்றிற்கிடையே இணைவானது இவ் அட்டவணை மூலம் காட்டப்படுகின்றது. அதனடிப்படையில் இதனுடைய பொருண்மைப் பெறுமானம் .000 ஆக காணப்படுகின்றது. இப் பெறுமானம் ஆனது 0.05 க்கு குறைவாக காணப்படுவதால் யாழ்ப்பாண மாவட்ட கட்டிளமைப்பருவப் பாடசாலை மாணவர்களின் வன்போக்கு நடத்தைக்கும், குடும்த்தில் இடம்பெறும் சண்டைகள், கலவரங்கள் என்பவற்றிற்கிடையே தொடர்பு காணப்படுகின்றது என்ற முடிவிற்கு வரமுடியும். ஆகவே இக் கருதுகோளானது ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

5.2 முல்லைத்தீவு மாவட்ட கட்டிளமைப்பருவப் பாடசாலை மாணவர்கள்

Correlations

 

Aggression

Q7

Aggression

Pearson Correlation

1

-.649**

Sig. (2-tailed)

 

.000

N

245

245

Q7

Pearson Correlation

-.649**

1

Sig. (2-tailed)

.000

 

N

245

245

**. Correlation is significant at the 0.01 level (2-tailed).

                                           மூலம் : வினாக்கொத்து அளவை 2018

 

இவ் அட்டவணையின் அடிப்படையில் நோக்குகின்ற போது இதன் பொருண்மைப் பெறுமானம் .000 ஆக காணப்படுவதால் இரு குழுக்களின் விலகலில் வேறுபாடு உண்டு. அதாவது இரண்டும் சமமாக இல்லை என்ற முடிவிற்கு வரமுடியும். இதனை அடிப்படையாகக் கொண்டு சமமாக இல்லை என்பதற்கான பொருண்மைப் பெறுமானத்தை நோக்குகின்ற போது இப் பெறுமானமானது .000 ஆக காணப்படுகின்றது எனவே இது 0.05க்கு குறைவாக இருப்பதால் முல்லைத்தீவு மாவட்ட கட்டிளமைப்பருவப் பாடசாலை மாணவர்களின் வன்போக்கு நடத்தைக்கும், குடுமப்த்தில் இடம்பெறும் சண்டைகள், கலவரங்கள் என்பவற்றிற்கிடையே தொடர்பு காணப்படுகின்றது. எனும் முடிவிற்கு வரமுடியும். ஆகவே இக் கருதுகோளானது ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

 

6) கட்டிளம்பருவ பாடசாலை மாணவர்களின் வன்போக்குநடத்தையில் போரில் நேரடியாக பாதிக்கப்பட்டிருத்தலானது செல்வாக்கு செலுத்துகின்றது.

 

Model Summary

Model

R

R Square

Adjusted R Square

Std. Error of the Estimate

1

.738a

.544

.543

53.95213

a. Predictors: (Constant), Q10

                              மூலம் : வினாக்கொத்து அளவை 2018

 

சீர்செய்யப்பட்ட R2 (Adjusted R Square) த்தை அடிப்படையாக கொண்டு சாராமாறியானது எந்த அளவிற்கு சார்மாறியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை அறிய முடியும் அதனடிப்படையில் இங்கு சீர்செய்யப்பட்ட R2 பெறுமதியானது .543 ஆக காணப்படுகின்றது. எனவே போரானது வன்போக்குநடத்தையில் 54.3 வீத ஆன செல்வாக்கையே செலுத்துகின்றது எனும் முடிவிற்கு வரமுடியும்.

 

ANOVAa

Model

Sum of Squares

df

Mean Square

F

Sig.

1

Regression

1749428.612

1

1749428.612

601.006

.000b

Residual

1464148.626

503

2910.832

 

 

Total

3213577.238

504

 

 

 

a. Dependent Variable: Aggression

b. Predictors: (Constant), Q10

                                     மூலம் : வினாக்கொத்து அளவை 2018

இவ் அட்டவணையின் அடிப்படையில் நோக்குகின்ற போது இதன் பொருண்மைப் பெறுமானம் ஆனது .000 ஆக காணப்படுகின்றது. இப் பெறுமானம் 0.05 க்கு குறைவாக காணப்படுவதால் கட்டிளமைப்பருவப் பாடசாலை மாணவர்களின் வன்போக்குநடத்தையில் போரில் நேரடியாக பாதிக்கப்பட்டிருத்தலானது செல்வாக்கு செலுத்துகின்றது. எனும் முடிவிற்கு வரமுடியும ஆகவே இக் கருதுகோளானது ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

 

Coefficientsa

Model

Unstandardized Coefficients

Standardized Coefficients

t

Sig.

B

Std. Error

Beta

1

(Constant)

-79.646

9.488

 

-8.395

.000

Q10

130.917

5.340

.738

24.515

.000

a. Dependent Variable: Aggression

                                                                          மூலம் : வினாக்கொத்து அளவை 2018

 

இவ் அட்டவணையின் அடிப்படையில்

Y - சார்மாறி (வன்போக்குநடத்தை)

X0 - ஆய்விற்காக எடுத்துக் கொள்ளப்படாத ஏனைய காரணிகள்

X1 - சாராமாறி (போர்)

      Y = X0 + X1

          Y = -79.646 + 130.917

போரானது ஒரு அலகினால் மாற்றமடையும் போது, மாணவர்களின் வன்போக்கு நடத்தை 13% ஆக குறைவடைகின்றது. எனும் முடிவிற்கு வரமுடியும்.

 

 

 

முடிவுரை

கட்டிளம் பருவ பாடசாலை மாணவர்களிடம் வன்போக்குநடத்தை காணப்படுவதுடன், யாழ்ப்பாண மாவட்டக் கட்டிளம் பருவ பாடசாலை மாணவர்களின் வன்போக்கு நடத்தைக்கும் முல்லைத்தீவு மாவட்டக் கட்டிளம் பருவ பாடசாலை மாணவர்களின் வன்போக்குநடத்தைக்கும் இடையே வேறுபாடு காணப்படுகின்றது. என்பதனை ஒப்பிட்டு நோக்க முடிந்தது. ஆய்வின்படி கட்டிளம் பருவத்தினரில் பெரும்பான்மையானோர் வன்போக்கு நடத்தையினை ஏதோவெரு வழியில் வெளிப்படுத்துகின்றவர்களாகவே காணப்படுகின்றனர். இவர்கள் பல்வேறான உறவுகளை இழந்தவர்களாயும், விடுதிகளில் வாழ்பவர்களாகவும் யுத்தசூழலில் நேரடியான மறைமுகமான தாக்கங்களுக்கு உள்ளானவர்கள் ஆகவும், குடும்பங்களில் சண்டை, போதைபொருள் பாவனையாளர், பெற்றோரின் இழப்புக்கள், பிரிவுகள் போன்றவற்றுடன், ஆசிரியர், நண்பர் உறவுகளினால் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் காணப்படுகின்றனர். இத்தகைய சூழல் உள்ளாந்தமாகவும் அதாவது மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் வன்போக்கு நடத்தையினை வெளிப்படுத்த காரணமாக அமைகின்றது. இத்தகைய பாதிப்புகளைக் கொண்ட மாணவர்கள் யாழ்ப்பாணத்தைவிடவும் முல்லைத்தீவில் அதிகம் காணப்பட்டனர். இதற்கு நேரடியான யுத்தத்தின் பாதிப்புகளே காரணம் என்பதும் கண்டறியப்பட்டது. கட்டிளம்பருவப் பாடசாலை மாணவர்கள் உடல்ரீதியாகவும் வாய்மொழிரீதியாகவும் தமது வன்போக்கு நடத்தையைக் காண்பிக்கின்றனர். வன்போக்கு நடத்தையைத்தூண்டும் ஏதோ ஒன்றாலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகளோ ஒருவரில் செல்வாக்குச் செலுத்தும்போது, இத்தகைய வெளிப்பாடுகளை கண்டுகொள்ளக் கூடியதாக அமைகின்றது. இந்நடத்தையினால் பல்வேறு பாதிப்புக்களைக் கட்டிளம் பருவத்தினர் எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக பாடசாலை மாணவர்களைப் பொறுத்தவரையில் பாடசாலைச்சூழல், ஆசிரியரின் அரவணைப்பு, அன்பு, நண்பர்களின் ஆதரவு, வகுப்பறைச்சூழல், தளபாடம் மற்றும் ஏனைய கட்டிட வசதிகள் மற்றும் அதிகாரங்கள் என்பனவும் மாணவர்களது வன்போக்குநடத்தையில் செல்வாக்கு செலுத்துகின்றது. மாணவர்களின் வீட்டுச்சூழல், வெளிச்சூழல், என்பனவும் தனிப்பட்ட அவர்களின் மனப்பாங்குகள், உளத்திறன்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுவதனால் உளக்குழப்பங்களுக்கு ஆளாவதும், நடத்தையில் அசாதாரணமான மாற்றங்கள் ஏற்படவும் காரணமாகின்றது.

எனவே பாடசாலைக் கட்டிளம் பருவத்தினரின் தேவைகள் பூர்த்தியாக்கப்படுவதுடன், மேற்கூறப்பட்ட வசதிகள் உரியமுறையில் வழங்கப்படும் போதும், உடல் உளத் தேவைகள் உரியவேளையில் வழங்கப்படுவதும் அவர்கள் பாதுகாக்கப்படுவதும், அவர்களது வன்போக்கு நடத்தையை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் உதவுவதுடன் வன்போக்கு நடத்தையினால் ஏற்படும் எதிர்கால பாதிப்புகளையும் இல்லாது ஒழிக்க முடியும் என ஆய்வு பரிந்துரைக்கின்றது.

 

Reference:

  1. hamandar, Fateme; Jabbari, D. Susan. (2017). Analysis of Component of Aggression inthe Stories of Elementary School Aggressive Children. Journal of Education andLearning, (2A) 187-195.Retrieved from: http://www.ccsenet.org/journal/index.php/jel.
  1. Nelson (2006). Tesser (1995). Causes of Students’ Aggressive Behaviour at Secondary SchoolLevel.Journal of Literature, Languages and Linguistics and An International Peer-reviewed Journal,11(49A) Retrieved From: www.iiste.org. Olweus, D. (1978). Aggression in schools: bullies and whipping boys. Washington
  1. D.C.: Orpinas, P. & Horne, A.M. (In Press). Bullies and victims: a challenge in schools. In J. Lutzker (Ed.), Violence Prevention. Washington, D.C.: American Psychological Association.Prentice-Hall.
    (PDF) AGGRESSIVE BEHAVIOUR OFHIGH SCHOOL STUDENTS. Available from: https://www.researchgate.net/publication/351840371_AGGRESSIVE_BEHAVIOUR_OFHIGH_SCHOOL_STUDENTS [accessed Jan 09 2022]
  1. Encyclopedia of Education (2002). Aggressive behaviour. Retrieved From: http://www.encyclopedia.com/social-sciences-and-law/education/education-terms-and-concepts/aggressive-behaviour
  1. Foa, Chiara; Brugman, Daniel; Mancini, Tiziana (2012). School Moral Atmosphere and Normative Orientationto Explain Aggressive and Transgressive Behaviours at Secondary School. Moral Education, 41 (1A) 1-22. Retrieved From: http://www.tandf.co.uk/journals.
  1.  Gasser, Luciano; Malti, Tina (2012). Children's and Their Friends' Moral Reasoning: Relations with AggressiveBehaviour. International Journal of Behavioural Development. 36 (5A) 358-366.Retrieved From: http://sagepub.com
  1. Katherine Darby hein (2004). Preventing aggression in the classroom: a case study of extraordinary teachers. Ph.D. Thesis. University of Georgia. Retrieved from: https://getd.libs.uga.edu/pdfs/hein_katherine_d_200405_phd.pdf
  1.  Kaya, Fadime; Bilgin, Hulya; Singer and Mark I. (2012). Contributing Factors to Aggressive Behaviours inHigh School Students in Turkey. Journal of School Nursing, 28 (1A) 56-6 Retrieved From: http://sagepub.com.
  1. Kohli and malik. A (2009). Level of aggression: a gender based study. Indian psychological review, 72(3A),155-160.11. Kozina
  1. UNICEF. National Survey on Emerging Issues among Adolescents in Sri Lanka, National Survey Report. Colombo, Sri   Lanka: Ministry of Health, 2004.