ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

 சிலப்பதிகாரத்தில் முப்பொருளின் பாகுபாடு

ஆய்வாளர்: க. நந்தினி, முதுகலைத்தமிழ் இலக்கியம் - இரண்டாம் ஆண்டு, தமிழ்த்துறை, சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒட்டன்சத்திரம் | நெறியாளர்: திருமதி அ. பாவை, M.A., M.Phil., M.LISC., (Ph.D)., தமிழ்த்துறைத் தலைவர் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம் 08 Feb 2024 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம் 
    தமிழர் பண்பாட்டுக்கு கருவூலமாய்த் திகழ்வது தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் இன்று நமக்குக் கிடைக்கும் நூல்களில் மிகவும் தொன்மையானது தொல்காப்பியம் இலக்கியம் என்பது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடி. நமது வாழ்க்கையேப் இலக்கியங்கள் தொன்ற காரணமாக இருந்தன. இலக்கியங்கள் புறத்திலே வீரமுமு; அகத்திலே காதலும் கொண்டு வாழும் மனித வாழ்வியலைத் தெள்ளத்தெளிவாய் உணர்த்துகின்றன. 
தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் வாழ்ந்த மக்கள் நிலங்களை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை எனப் பகுத்துக் கொண்டு தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். அந்த ஐந்து நிலத்திற்கும் உரிய பொருள்களே முப்பொருள்கள் எனப்பட்டன. நிலமும் பொழுதும் முதற்பொருளாகும்.  அம்முதற்பொருளை மையமாக வைத்துக் கொண்டு மக்கள் வாழும் புகுதியில் இயற்கையாகவோ அல்லது செய்ற்கையாகவோ கிடைக்கும் பொருள்கள் கருப்பொருள்கள் எனப்பட்டன. மக்களுக்கு உரிய பொருள்கள் உரிப்பொருள்கள் எனப்பட்டன. அதாவது புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் இவற்றைப்  பின்பற்றியே மக்களின் வாழ்க்கை முறை அமைந்திருந்தது.
முன்னுரை 
    தமிழர் மரபையும் அவர்களது பண்பாட்டையும் வாழ்க்கை முறைகளையும் பின்பற்றி உருவானது தான் சிலப்பதிகாரம் இளங்கோவடிகளால் இயற்றப்படட இக்காப்பியம சிறந்த அகத் திணை நூலாக விளங்குகிறது. இங்கோ பல நூல்களைக் கற்றவர் என சிலப்பதிகாரம் ஒரு சான்று ஆகும். தமிழரின் திணைக் கோட்பாட்டில் முப்பொருளின் பங்கு என்பது முதலியதை ஆகும். அகம் பற்றிய விளக்கம். திணைப் பற்றிய விளக்கம் சங்க இலக்கியங்களில் தியானது திண் திணி திணை என்று உருவாகிய சொல் வடிவத்தையும் எடுத்துரைக்கப் பெறுகின்றன. முதல் கரு உரி இவை மூன்றும் இணைந்தே திணை என்ற செய்திகளையும் திணை மயக்கம் பற்றியும திணை பாகுபாடு பற்றியும் ஒவ்வொருஇலக்கண நூல்களில் உரைக்கப்பெறுகின்றன. முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் இவற்றின் விளக்கம் பற்றியும் அவற்றின் வகைகள் பற்றியும  அவை ஒவ்வொரு நிலத்திற்கும் பொருந்தி அமைந்ததைப் பற்றியும் இவ்வியல் விளக்குகிறது. 
அகம் விளக்கம் 
        அகமெனப் படுவது வகையொரு மூன்றனுள் 
        இன்பமென்று மியல்பிற் றாகி
        அகத்துநிக ழொழுக்க மாதல் வேண்டும்
எனவே அகம் என்பது உள்ளத்தையும அந்த உள்ளத்தால் உணரப்படுகின்ற இன்ப உணர்விலும் புலனாகிறது. 
திணை விளக்கம் 
    திணை என்ற சொல் தமிழர்களின் அகததிணை மரபுகளின் அடிப்படையில் அமைந்தது. திணை என்ற சொல்லிற்கு இடம் ஒழுக்கம குடி குலம் பூமி பொருள் எனப் பல பொருள்களை தருகிறது. தமழ்மொழி அகராதி எனவே வாழிடம் எனும் பொருளைத்தருவது திணை திணை என்ற சொல்லிற்கு வாழிடம் என்பதோடு இல்லாமல் ஒழுகலாறு என்ற மற்றொரு ஆழமான பொருளும் உண்டு. 
திணைப்பெயர்கள் 
    திணை என்பது ஒழுகம் ஒழுக்கம் உரிப்பொருளைக் குறித்தது. பின்னர் திணைப் பெயர்களைக் குறித்தது என்று சிலர் கூறுவர். ஆpன் நிலமே திணைப் பகுப்பின் அடிப்படை எந்நிலங்களிலும் சிறந்து விளங்கிய பூப்பெயர் அந்நிலங்களுக்கு ஆகுபெயராயின. அவை பின்னர் திணை நிலைப் பெயர்களாக வளர்ந்துள்ளன. 
        திணை ஏழாயினமைக்குக் காரணம் ஏழுவகைக் 
        காதலொழுக்கங்களும் உரிப்பொருள்களுமே 
என்கிறார் வ.சுப. மாணிக்கம். 
        ஏழு திணைகளையும் ஒருங்கு சுட்ட வேண்டுமானால் அகத்திணை 
        என்னும் பொதுக் குறியீட்டை ஆளுதல் தொல்காப்பிய வழக்கு. 
என்கிறார் வ.சுப. மாணிக்கம்.

சங்க இலக்கியங்களில் திணை 
    திணை என்ற சொல் முதலில் நிலத்தையும் பின்னர் அந்நில மக்களின் வாழ்க்கை ஒழுகலாறுகளையும் ஒழுகலாற்றில் பாடப்பட்ட முறையையும் குறித்தது. 
    செய்யுளினுடைய உறுப்புகளைத் தொகுத்துக் கூறுகின்ற தொல்காப்பியம் திணையினை 
        திணையே கைகோள் பொருள்வகை எனாஆ (தொல்.பொருள்.310)
        மண் திணிந்த நிலனும் (புறம்)
        திணி மணல் அடைகறை (குறுந்)
        வான் திணைப் புரையோர் (குறிஞ்சி)
போன்ற சங்க இலக்கியத் தொடர்கள் மூலம் திணி திணையென உருவாகின்ற சொல் வடிவத்தைக் காண முடிகிறது. 
தொல்காப்பியத்தில் திணப் பாகுபாடு 
    ஒழுக்கத்தினைத் திணை என்று கொண்டு அதன் அடிப்படையில் திணை ஏழு வகைப்படும் என்று கூறுவர் தொல்காப்பியர். திணை என்பது ஒழுகமக்ம் அது உரிப்பொருள் என்று சிறப்பித்துச் சொல்லப்படும். 
        ஐந்திணை ஒழுக்கத்திற்கும் அன்போடு கூடிய ஐவகை ஒழுக்கம் என்று 
        பெயர் இதனை என்பின் அகனைந்திணை.
என்று கூறுகிறார் சாமி. சிதப்பரனார். 
அகப்பாடலில் திணையை இனங்காணுதற்குரிய அடிப்படையைத் தொல்காப்பியம் அகத்திணையியலில் கூறியுள்ளார். 
தொல்காப்பியத்தில் திணைப்பாகுபாடு 
    தொல்காப்பிய பொருளதிகாரத்தில் ‘திணை’பற்றிய கருத்து கூறப்பட்டுள்ளது. திணை என்பதற்குப் பல பொருள்களுண்டு. ஒழுக்கத்திற்கு ‘திணை’ என்ற பொருள் கொண்டு அதனடிப்படையில் ஏழுவகையாகக் கூறுவர்தொல்காப்பியர். 
        கைக்கிளை முதலாகப் பெருந்திணை இறுவாய் 
        முற்படக் கிளந்த எழுதிணை என்ப. (தொல்) 
என்று  அகப்பொருள் இலக்கணமாகத் திணையைப் பாகுபடுத்திக் கூறப்பட்டுள்ளன. 
        மாயோன் மேய காடுறை உலகமும் 
        சேயோன் மேய மைவரை உலகமும் 
        வேந்தன் மேய தீம்புனல் உலகமும் 
        வருணன் மேய பெருமணல் உலகமும் 
        முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் 
        சொல்லிய முறையாற் சொல்லவும படுமே. (தொல். பொருள்)
என்று கூறுவதன் மூலம் உணர்ந்து  கொள்ளலாம். 
நம்பியகப்பொருளில் ஐந்திணைப் பாகுபாடு 
    தொல்காப்பியத்தில் கூறுப்பட்டுள்ளதைப் போல் நிலமாக வகுக்கப்படும்திணைக் குறியீட்டுப் பெயர்கள் பற்றிய கருத்து இலக்கண நூலாகிய நம்பியகப் பொருளிலும் கூறப்பட்டுள்ளது. நம்பியகப் பொருளில் நிமாக வகுக்கப்பட்ட ஐந்திணையின் பெயர் பற்றி 
        குறிஞ்சி பாலை முல்லை மருதம் 
        நெய்தல் ஐந்திணைக்கு எய்திய பெயரே (நம்பி. அகம்)
என்று கூறப்பட்டுள்ளது. 
    நம்பியகப் பொருளில் ஐந்திணை ஐந்நிலமாக பாகுபடத்தப்பட்டுள்ளது. இதனை 
        உரையே சுரமே புறவே பழனம் 
        திரையே அவைஅவை சேர்நரும் இடனே
        எனார் ஐயுலகத்து அனையியல் நிலமே (நம்பி. அகம்)
என்ற நூற்பாவால் அறியப்படுகின்றது. 
இறையனார் அகப்பொருளில் ஐந்திணைப்பாகுபாடு 
    இறையனார் அகப்பொருள் என்ற இலக்கண நூலிலும் ஐந்திணைப் பற்றி கூறப்பட்டுள்ளது. 
        ஐந்திணை யாவன யாவையோ எனின் 
        குறிஞ்சி நெய்தல் பாலை முல்லை மருதம் என இவை (இறைஅகப்.வி)
என்று கூறப்பட்டுள்ளது. முதற்பொருளாகிய நிலம் பற்றி
        குறிஞ்சிக்கு நிலம் மலையும் மலை சார்ந்த இடமும்
        நெய்தற்கு நிலம் கடலும் கடல் சார்ந்த இடமும் 
பாலைக்கு நிலம் இல்லை 
முல்லைக்கு நிலம் காடும் காடு சார்ந்த இடமும் 
மருதத்திற்கு நிலம் பழனமும் பழனஞ் சார்ந்த இடமும் (இறை.அகப்.வி)
என வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது. 
    இறையனார் அகப்பொருள் நூலின் பாலைத்திணைக்கு நிலம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் தொல்காப்பியரின் கருத்துக்கு ஏற்ப பாலைத் திணைக்கு நிலமாகக் குறிப்பிட 
        நடுவண் ஐந்திணை நடுவண தொழியப் 
        படுதிரை வையம் பாத்திய பண்பே.
என்றார் தொல்காப்பியனார். 
பிற இலக்கணங்களில் கூறப்படும் முப்பொருள்கள் 
        அவைதாம்
        முதல்கரு வுரிபொருண் மூன்றா கும்மே
என்று முத்துவீரியத்திலும் 
        முதல்கரு வுரியெனு முறைப்பொருளன
என்று மாறன் அகப்பொருளிலும் 
        முதல்கரு வனைந்த உரிப்பொருள் அகமே
என தமிழ்நெறி விளக்கத்திலும் முப்பெருள் பற்றி இலக்கண ஆசிரியர்கள் கூறியுள்ளனர். 
திணையினை உணரும் முறை 
    முதல் கரு உரி ஆகிய மூன்றும் இணைந்ததைத் திணை என்கிறோம். எனினும் எல்லாப் பாடல்களிலும் மூன்றும் இணைந்து வராது. சிலபாடல்களில் முதல் கரு உரி ஆகிய மூன்றும் சில பாடல்களில் முதலும் உரியும் சில பாடல்களிலும் கருவும் உரியும் சில பாடல்களில் உரிப்பொருள் மட்டும் அமைந்து வரும். 
ஐந்திணைகளின் விளக்கம் 
குறிஞ்சித் திணை 
    வரையும வரை சார்ந்த இடனும் ஆகிய நிலனும் இருள் தூங்கித் துளி மிகுதலானும் பனியானும் சேறல் அரிதாகலானும் பானாள் கங்குடின் பரந்து உடன் வழங்காது மாவும் புள்ளும் துணையுடன் இன்புற்று காமக்குறிப்புக் கழியவே பெருதாலானும் காவில் மிகுதி நோக்காது வரும் தலைவனைக் குறிக்கண் எதிர்;ப்பட்டுப் பணருங்கால் தலைவிக்கு இன்பம் பெருகுதலானும் கதிர்காலமும் அதனை தொடர்ந்த முன்மணிக் காலமும் இவையெல்லாம்அமைந்து வருவது குறிஞ்சித் திணை எனப்படுகிறது. 
முல்லைத் திணை 
    காடும் காடு சார்ந்த இடனும் ஆகிய நிலனும் வெப்பமும் தட்பமும் மிகாது இடைநிகர்த்தாகிஏவல் செய்து வரும் இளைநருக்கு நீரும் நிழலும் பயத்தலானும் ஆர்பதம் மிக்கு நீரும் நிழலும் பெறுதலின் கவின் சிறந்து மாவும் புள்ளுட் துணையொடு இன்புற்று விளையாடுவன கண்டு வினைவயின் பிரித்து பாசறையிலென்றும் விரை பரிந்தேர் வார்ந்து மீளும் தலைவற்குக் காமக்குறிப்பு மிகுதலானும் கார்காலமும் புல்லை மேய்ந்து முல்லைத் திணையைச் சிறப்பித்து நி;றலின் அவை அதற்குச் சிறந்தன என்பதுஉம் கிளவியெல்லாம் அமைந்தது முல்லைத் திணையாகும்.
பாலைத்திணை 
    பாலையின் கடுமையான வெப்பமம் அரிய வழிகளும் பரிந்துள்ள தலைவன் தலைவியரின் பிரிவுத்துயரை மிகுவிக்கும் இயல்புடையன. பாலை என்பது வெம்மை மிகுந்த சுரத்திணை நிலமாகக் கொண்டது. இளவேனில் முதுவேனில் பருவங்களில் வெம்மை மிகுந்த நண்பகல் மிகவும் தன்பத்தைத் தருமாதலால் சிறப்புக் கருதி இந்த பருவங்கள் பாலைக்குக் குறிப்பிட்டன. 
மருதத் திணை 
    பழனும் பழனம் சார்ந்த இடனும் ஆகிய நிலனும் பபரத்தையிற் பிரிந்த தலைவன் ஆடலும் பாடலுங் கண்டும் கேட்டும் பொழுது கழிப்பிப் பிறருக்குப் புலனா காலை மீளும் காலம் அது ஆதலினால் ஊடலும் ஊடல் நிமித்தமும் ஆகிய உரிப்பொருளும் ஒன்றற்கு ஒன்று உடையதாய் அமைந்தது மருதத் திணை. 
நெய்தல் திணை 
    கடலும் கடல் சார்ந்த இடனும் ஆகிய நிலனும் வெஞ்சுடர் வெப்பம் தீரத் நண்ணுரைஞ் சொலை தாழ்ந்து நிழல் செய்யவும் தண்பதம்பட்ட தென்வழி மேய்ந்து பட்டதென்வழி மேய்ந்து பல்வேறு வகைப்பட்ட புள்ளெல்லாம் குடம்பை நோக்கி உடங்கு பெயரவும புன்னை முதலிய பூவின் மாற்றம் இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ஆகிய உரிப்பொருள் ஒன்றற்கு ஒன்று பொருத்தம் உடையது நெய்தல் திணை ஆகும். 


முடிவுரை 
    சிலப்பதிகாரத்தில் முப்பொருளின் பாகுபாடு என்னும் பொருண்மையில் நிகழ்த்திய ஆய்வில் கண்டறியப்பட்ட மெய்மைகளாவன
    தொல்காப்பியர் கூறுகின்ற திணைகள் திணை விளக்கம் திணை பெயர்கள் திணைப் பாகுபாடுகள் முதலியன அறியப்பட்டுள்ளன. 
    சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இவ்வுலகப் பொருள் மரபுகளை பிற இலக்கிங்களோடு ஒப்பிட்டு மரபுகளையும் அவை பெறுகின்ற மாற்றங்களையும் தனித்தனியாக ஆராயலாம். 


சான்றெண் குறிப்புகள் 
    தொல்காப்பியம்         -    நச்சினார்க்கினியர் உரை
    அகப்பொருள்            -    மு. சண்முகம் பிள்ளை
    தமிழ்க்காதல்         -    வ.சுப. மாணிக்கம் 
    தொல்காப்பியம்         -    இளம்பூரணனார்
    அகத்திணையியல்         -    நம்பியப்பொருள் 
    முத்துவீரியம்         -    ச.வே. சுப்பிரமணியன்
    சிலப்பதிகாரம்         -    காடுகாண்காதை