ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஐம்பெருங்காப்பியங்களில் பெண்ணிய கோட்பாடுகள் (Feminist Theories in Aimeperumkappiyam)

ஆய்வாளர்: செல்வி. ச.துளசி மணி, முதுகலை தமிழ் இலக்கியம், இரண்டாம் ஆண்டு, சக்தி மகளிர் கலை மற்றும அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம் | நெறியாளர்: திருமதி அ. பாவை, M.A., M.Phil., M.LISC., (Ph.D)., தமிழ்த்துறைத் தலைவர் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம் 08 Feb 2024 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம் 
    காலந்தோறும் பெண்களின் நிலைகளை பல்வேறு காலங்களில் எழுந்த இலக்கியங்கள் பிரதிபலிக்கின்றன. சங்க காலத்தில் பெண்கள் கல்வியறிவில் மேம்பட்டு விளங்கியதையும் ஆண்களுக்கு நிகராக விளங்கியதையும் அக்காலத்தில் எழுந்த இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. இக்காலகட்டத்தை அடுத்துத் தோற்றம் பெற்ற சிலப்பதிகாரம் மணிமேகலை எனும் இரட்டைக் காப்பியங்களிலும் பிற்கால சோழ காலத்தில் தோன்றிய   சீவகசிந்தாமணி வளையாபதி குண்டலகேசி ஆகிய மூன்று காப்பியங்களிலும் பெண்ணியக் கருத்தாக்கங்கள் மிகுதியாகப் பேசப்பட்டுள்ளன. அந்தந்த இலக்கியங்கள் எழுந்த காலச் சூழலுக்கேற்ப பெண்மையின் பண்புகளை வரையறுப்பது இன்றியமையாததாகும். பேரரசுகளின் காலத்தில் உருவாக்கம் பெற்ற காப்பிய இலக்கிய வகைகளுள் மையப் பொருள்களான அறம் பொருள் இன்பம் வீடுபேறு எனும் நாற்பொருளைச் சுட்ட பெண்ணியச் சிந்தனைகளும் பின்புலமாக எடுத்தாளப்பட்டுள்ளன. இவற்றைக் தற்கால பெண்ணியக் கோட்பாடுகளினடிப்படையில் கண்டறிவதன்வழி காப்பியக் காலப் பெண்ணியச் சிந்தனைகளை வரையறை செய்வது கட்டுரையின் நோக்கமாகும். 
திறவுச்சொல் 
       பெண்ணியம், அடக்குமுறை, பகுத்தறிவு. பல்லரிவைக் குடும்பம், உரிமைகள், Feminism, Oppression, reasoning, Polygamy family, Rights.
முன்னுரை 
    ஒரு பெண் தனக்குரிய உரிமைகளை அறிந்து உணர்ந்து அதன்வழி தன்னை நிலை நிறுத்திக் கொள்வதே பெண்ணியம் பேசுதல் ஆகும். அப்பெண்ணியச் சிந்தனை தற்போது பெருவளர்ச்சி பெற்றிருந்தாலும் ஒரு பக்கம் பெண்கள் மீதான அடக்குமுறைகள் இருந்த காலத்திலும் பெண்மைக்கு குரல் கொடுத்தவை இலக்கியங்கள் இவ்விலக்கியங்கள் தோன்றிய காலத்தைப் பதிவுசெய்வதற்காகவும் சமூகத்திற்கு ஏதேனும் ஒரு கருத்தைத் கூறுவதற்காகவும் இந்தச் சமூகம் எவ்வாறு மாற வேண்டும் என்று அறிவுறுத்துவதாகவும் அமைந்தன. இதற்குப் பல இலக்கியச்சான்றுகளை காட்டலாம். குறிப்பாகக் காப்பியங்கள் இங்கு ஆய்வுக்குரிய எல்லையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. 
பெண்ணியம் சொற்பொருள் விளக்கம் 
    Feminism என்ற ஆங்கிலச் சொல் Femina என்ற இலத்தின் சொல்லிலிருந்து மருவி வந்ததாகும். குநஅiயெ என்ற சொல்லுக்குப் பெண்ணின் குணாதிசியங்களைக் கொண்டுள்ளது (heaving the qualities of Female) என்பது  பொருளாகும். இச்சொல் முதலில் பாலியல் குணாதிசியங்களைக் குறிப்பிடவே வழங்கப்பட்டுள்ளது. பின் பெண்களின் உரிமைகளைப் பேசுவதற்காக எடுத்தாளப்பட்டது. பெண்ணியம் உலகலாவியது. உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் மனித குலத்திலும் ஒவ்வொரு கால கட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்தை விமர்சிக்க ஏற்பட்டது. குறிப்பாகப் பெண்களின் சமத்துவத்தையும் முன்னேற்றத்தையும் வலியுறுத்துகிறது. Feminism என்ற ஆங்கிலச் சொல்லுக்கு முன்பு womenism என்ற ஆங்கிலச் சொல் அதே பொருளைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. 
    1889 – ஆம் ஆண்டு வரை றழஅயnளைஅ என்ற சொல் பெண்களின் உரிமை உரிமைப் பிரச்சனைகளையும் அதன் அடிப்படையில் போராட்டத்தையும் உணர்த்தப் பயன்படுத்தப்பட்டது. 
    1890 – ஆம் ஆண்டு Womanism என்ற சொல்லை விடுத்து Feminism என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. 1984 – ஆம் ஆண்டு வெளிவந்த ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் முதன் முதலில் இச்சொல் எடுத்தாளப்பட்டது. Feminism  என்ற சொல்லுக்கு அர்த்தம் ஏற்படுத்திக் கொடுத்தவர் ரே ஸ்ரேசே (Ray Strachey) என்ற பெண்மணியாவார். 
பெண்ணியம் விளக்கமும் தோற்றமும் 
    பெண்கள் தங்கள் நிலையிலிருந்து மாறி தங்களுடையத் தேவைகளை உரிமைகளைப் பெற ஏற்படுத்திய ஓர் அமைப்பே பெண்ணியம் என்பதாகும். இது குறித்து ஆக்ஸ்போர்டு அகராதி பெண்களின் தேவையை நிறைவேற்ற அவர்கள் சார்பாக வாதாடுவது போராடுவது (adunoeay of the clains of women) என்று விளக்கம் தருகிறது. “பெண்ணியம் என்ற கோட்பாடு பெண்களை நவீன மயமாக்கும் சிந்தனையின் எழுச்சியாகும்” என்று இரா.பிரேமா குறிப்பிடுவார்.
    தமிழகத்தில் பெண் விடுதலைக்காக முதன்முதலில் குரல் கொடுத்தவர் பாரதியே ஆவார். அவர் கவிதைகளில் பெண்மை சிறக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறார். அவர் துன்பந் தீர்வது பெண்மையினாலடா” என முழுங்குகிறார்.
    பெண்ணியச் சிந்தனை மனிதனின் பகுத்தறிவுச் தன்மையை மறுபரிசீலனைக்கு உட்படுத்திப் பார்க்க முயல்கிறது. அதன் வாயிலாக மரபு சார்ந்த சிலவற்றைப் புறந்தள்ளிப் புதிய கோட்பாடுகள் உருவாகின்றன. அவற்றுள் பெண்ணியச் சிந்தனையும் ஒன்று அது கி.பி.18 ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றது. அக்கருத்தை “18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியச் சமுதாயத்தில் சில மாற்றங்கள் தோன்றின அம்மாற்றத்தின் விளைவாகப் பெண்ணியம் தோன்றியது. இதற்கு அடிப்படையானவை புதுமைக் கருத்துக்கள் இப்புதுமைக் கருத்துக்களைப் பகுத்தளித்து தெரியும் காலம் என்று அழைக்கின்றனர் உண்மைக்குப் புறம்பானவைகளாகக் கருதப்பட சமத்துவம் தனிமனித சுதந்திரம் குடியாட்சி எல்லோருக்கும் ஒரே நியதி என்ற புதிய சமூக மதிப்புகள் உருவாகத் தொடங்கின” என்ற கருத்து  வலியுறுத்துகின்றது. 
    18 ஆம் நூற்றாண்டில் சமதர்மச் சமுதாய நோக்கிலும் புதுமையை விரும்பும் போக்கிலும் தனி மனித சுதந்திரத்தைப் போற்றும் நிலையிலும் பெண்ணியச்சிந்தனை தோன்றி வளர்ந்தது எனக் கருத இடமுண்டு. 
    Feminism என்ற ஆங்கிலச் சொல் கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டிலேயே சில இடங்களில் பெண்ணியச்சிந்தனைகள் எழுச்சி பெற்றிருந்தது என்றாலும் பெண்ணிடம் ஒரு தனிக் கோட்பாடாக வலுப்பெற்றது கி.பி. 19- ஆம்  நூற்றாண்டில் தான் இக்கோட்பாட்டின் தோற்றம் பற்றி இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. 
    ஆண் ஆதிகத்திற்கு எதிராகவும் பெண் ஒழுங்கு முறைக்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட்டது. இது தான் பெண்ணியத்தின் வேர் என்றும் இதிலிருந்துதான் பிண்பு பெண்ணியம் ஒரு தனிக் கோட்பாடாக வலுப்பெற்றது” என்பர் 
     19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேலே நாடுகளில் பகுத்தறிவின் அடிப்படையில் ஆண்களுக்குச் சமமான உரிமைகள் வேண்டிப் பெண்கள் எழுப்பிய போராட்டம் மூலம் தோற்றம் பெற்றது” என்கிறார் இரா. பிரேமா இக் கூற்றுகளின் படி பெண்கள் தங்கள் மீது  சுமத்தப்படுகின்ற அடக்கு முறைகளுக்கு எதிராகத் தீர்க்கமாக எழுப்பிய குரல்களே பெண்ணியத் தோற்றத்திற்கு வழிவகுத்தை அறியமுடிகிறது. 
காப்பியக் காலம் 
    தமிழ்க் காப்பியக் காலத்தை முற்காலம் (சிலம்பு மணிமேகலை) என்றும் பிற்காலம் (இராமாயணம் சிந்தாமணி) எனவும் இரண்டு கால கட்டமாகக் கூறுவர். இலக்கிய வகையுள் காப்பியம் நீண்ட பாட்டுடைச் செய்யுளாகவும் பாடல்களாகவும் காணப்பட்டன. பாவிகம் என்பது காப்பியப் பண்பே என்பர் இவை ஐம்பெருங்காப்பியம் ஐங்சிறுகாப்பியம் எனும் இரு பிரிவில் அடங்கும் இக்காப்பியங்கள் பெண்களைப் பற்றியம் பெண்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படத்த ஒரு தூண்டுகோலாக இருந்துள்ளன.
சிலப்பதிகாரம் 
    அறிஞர்களால் போற்றப்பெறும் முத்தமிழ் காப்பியமே சிலப்பதிகாரமாகும் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்ற முப்பெரும் உண்மைகளை விளக்குவதுடன் மூன்று நாடுகளின் வளங்களையும் எடுத்துரைக்கின்றன. இக்காப்பியம் கண்ணகியைத் தலைவியாக்கி பெண்மையைப் போற்றுகின்றது. 
கற்பில்; கண்ணகி 
    இவர் தமிழ் கற்பின் அடையாளம் தன்னேரில்லாத தலைமக்களைப் படத்துக் காட்டவே காப்பியங்கள் எழுந்தன. சிலப்பதிகாரத்தில் கண்ணகி உலகேத்தும் தலைமகளாய் ஈடு இணையற்று நிற்கிறாள். தெய்வத் தன்மை பொருந்திய கண்ணகியைப் போதில் ஆர் திருவினாள் புகழ்உடை வடிவென்றும் தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும் மாதரார் தொழுது ஏற்று வங்கிய பெருங்கலத்துத் காதலாள் பெயர் மன்னும் கண்ணகி என்பாற் மன்னோ” என்று சிறப்பித்துக் கூறுகிறார். வணிகக் குடியில் பிறந்த பெண் தனது கற்பு நிலையில் உயர்ந்தது சுட்டப்பட்டுள்ளாள். 
மணிமேகலை 
    காப்பியத்தில் மணிமேகலை தலைமைப் பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளாள். இவள் மாதவியின் மகளாக இருப்பினும் கண்ணகியின் மகளாகவே தன்னை வெளிப்படுத்ததுகிறாள். இளம் வயதில் துறவு பூண்டு பல அறச்செயலை மேற்கொண்டாள் பெண்களின் வளர்ச்சிக்கும் செயலுக்கும் பாடுபட்டவள் இவள். பசிக்கு மருந்தாய் மாறியதற்கு உயிர்களிடத்து அன்பு செலுத்த வேண்டும் பசித்தவர்களுக்கு உணவிடுதல் வேண்டும் என்ற கொள்கையே காரணமாகும். இச்சிறப்பைப் பெற்ற மணிமேகலைக்குப் பெயர்சூட்டும் விழாவில் மாதவியின் கனவில் மணிமேகலா தெய்வம் தோன்றி “காமன் கையுறக் கடு நவையதுக்கும் மாபெருந் தவக் கொடியின்றனை யென்றே” என்றுரைத்தது. காப்பியங்கள் குடும்ப வாழ்க்கையை எடுத்து இயம்புகின்றன. சாத்தனார் இளம்பெண் ஒருத்தியின் துறவு நிலைகொண்டு பெருங்காப்பியம் படைத்துள்ளார்.
பல்லரிவைக் குடும்பம் 
    ஒருவன் தன் வீரத்தாலும் நற்செயல்களாலும் எட்டுப் பெண்களை மணக்கிறான். சீவக சிந்தாமணியில் சீவகன் என்பவன் கந்தருவதத்தை குணமாலை கேமசரி கனகமாலை விமலை சுரமஞ்சரி இலக்கணை பதுமை ஆகிய எட்டுப் பெண்களை ஒவ்வொரு செயல்களில் மணக்கிறான் என்று காட்டியுள்ளார் இக்காப்பியம் மண நூல் என்று அழைக்கப்படுகிறது. திறமையுள்ள ஆண்மகனை பெண்கள் விரும்புவார்கள் அவனைக் குறைகூறவும் அனுமதிக்கமாட்டார்கள் என்பது புலனாகிறது. இக்காப்பியத்தில் பெண்கள் உயர்வுப் பொருளாகவோ சீதை கண்ணகி மணிமேகலை போன்ற உயர் காப்பியப் பெண்ணாகவோ யாரையும் பாடவில்லை பெண்ணைப் போகப் பொருளாகவே கருதியமையால் எட்டுப் பெண்களைத் திருமணம் செய்ததாகப் படைக்கப்பட்டுள்ளது. இது பெண்ணியச் சிந்தனைக்குக் குறைவாக மதிக்கப்பட்டதைக் காட்டுகின்றது. 
    வளையாபதி குண்டலகேசி போன்ற காப்பியங்களில் பெண்கள் தங்கள் நீதிகளையும் உரிமைகளையும் காக்கப் போராடினார்கள் என்பதை எடுத்துக் கூறுகின்றன. 

முடிவுரை 
    இவ்வாறு காப்பியங்களைப் பொறுத்தவரையில் தொடர்நிலைச் செய்யுளாக அமைந்து சமூகத்திற்கு நன்மை பயக்கும் ஒரு கருத்தைக் கூறிவருகையில் இவ்விலக்கியம் பெண்மையை முன்னிறுத்தியதாகவே அமைவதைக் காணமுடிகிறது பெண்மையை மையமிட்டு உலகின் இயக்கம் அமைவதை இக்காப்பியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. மேலும் இக்காப்பியங்கள் அவை  தோன்றிய காலத்துக் காணப்பட்ட பெண்களின் நிலையை எடுத்துரைப்பதாகவும் கருதலாம். 
துணைநூல் பட்டியல் 
    குருநாதன் இராம (தொ.ஆ).     -        பெண்ணியம், கலைஞர் பதிப்பகம் 
    சரளா ராஜகோபலான்.        -        காப்பிய மகளிர் ஒளிப் பதிப்பகம் 
    சாமிநாதையர் உ.வே. (தொ.ஆ).     -         சிலப்பதிகாரம் மூலமும் உரையும் 
    அடியார்க்கு நல்லார் உரை, உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம். 
    சாமிநாதையர் உ.வே. (தொ.ஆ).     -         மணிமேகலை மூலமும் உரையும். உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம் 
    சோமசுந்தரனார் பொ.வே. (உ.ஆ).-         சீவக சிந்தாமணி மூலமும் உரையும், திருநெல்வேலி சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
    சோமசுந்தரனார் பொ.வே. (உ.ஆ).    -   வளையாபதி குண்டலகேசி, உதயணகுமார காவியம் மூலமும் உரையும், கழக வெளியீடு.