Volume 6, Issue 1

மனித உளவியலில் தொலைக்காட்சி விளம்பரங்கள் ஏற்படுத்தும் சாதக பாதக தன்மைகள்

Author

திரு. விசுமாப்போடி சசிகரன் விரிவுரையாளர், நுண்கலைத்துறைஇ கலை கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை

Abstract

ஆய்வுச் சுருக்கம் : நுகர்வோரையும் விற்பனையாளர்களையும் இணைக்கும் பாலமாக விளங்குவனவே விளம்பரங்கள் ஆகும். காலந்தோறும் ஏற்பட்டு வரும் தொழிநுட்ப மாற்றங்களுக்கேற்ப விளம்பரங்களின் தன்மையும் நோக்கமும் மாற்றமடைந்து வருகின்றன. விளம்பரங்கள் தகவல் தொடர்பு துறையின் ஓர் அங்கமாக இருந்து இன்று தனித்துறையாக வளர்ந்துள்ளதுடன் தகவல் தொடர்பு துறையினை ஆட்டிப் படைக்கும் ஓர் வலிமைமிக்க ஒரு துறையாக வளர்ந்துள்ளது. விளம்பரம் பல ஆற்றல்களைக் கொண்டுள்ளது. இது மக்கள் தொடர்பு துறையின் ஆணிவேராகவும் சக்தி வாய்ந்த சந்தையியலின் கருவியாகவும் வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்துறையின் பகுதியாகவும் தகவல் சாதனத்தின் வருவாய் பெருக்கியாகவும் காணப்படுகின்றது. தகவல் தொடர்பு சாதனங்களில் ஒன்றாகிய தொலைக்காட்சியில் விளம்பரங்கள் நுகர்வோரின் தேவையினை நிறைவேற்றும் வகையில் காணப்படுகின்றன. எனினும் அவற்றின் நன்மை தீமைகள் போன்ற விடயங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. இப்பின்னணியில் மனித உளவியலில் தொலைக்காட்சி விளம்பரங்கள் ஏற்படுத்தும் சாதக பாதக விடயங்களை ஆராய்வதாகவே இவ் ஆய்வு அமைகின்றது.

DOI

PAGES: 8 | VIEWS | DOWNLOADS


Download Full Article

திரு. விசுமாப்போடி சசிகரன் விரிவுரையாளர், நுண்கலைத்துறைஇ கலை கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை | மனித உளவியலில் தொலைக்காட்சி விளம்பரங்கள் ஏற்படுத்தும் சாதக பாதக தன்மைகள் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)