Guidelines For Authors

ஆய்வுக் கட்டுரைக்கான விதிமுறைகள்

Research paper can be written in Tamil or English language.

தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியில் ஆய்வுக்கட்டுரை எழுதலாம்.

Dissertation should be typed on A4 size paper, 12 characters, 1.5 spacing, not less than 10 pages and not more than 15 pages in Arial monogram (Unicode, Tamil), Times Neuroman (English) font. Footnotes (author's name, year) and bibliography (in Tamil and English) should be included.

ஆய்வுக் கட்டுரை  ஏ4 அளவு தாளில் , 12 எழுத்தளவில்  , 1.5 இடைவெளியுடன், 10 பக்கங்களுக்குக் குறையாமலும் 15 பக்கங்களுக்கு மிகாமலும் ஏரியல் ஒருங்குறி (யுனிகோடு, தமிழ்), டைம்ஸ் நியூரோமன் (ஆங்கிலம்) எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட வேண்டும். அடிக்குறிப்புகள் (ஆசிரியர் பெயர்,ஆண்டு) மற்றும் துணைநூற் பட்டியல் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) இடம் பெற்றிருக்க வேண்டும்

The first page of the research paper should contain the appropriate title focusing on the research paper, researcher name, ORCID number, work address (in case of professor) or educational institution address (in case of research student), email address and contact number (watsapp phone number). In case of a research student, the supervisor's name and workplace address must be included along with the information of the research student. 

ஆய்வுக்கட்டுரையின் முதல் பக்கத்தில் ஆய்வுக்கட்டுரையை மையமிட்ட பொருத்தமான தலைப்பு , ஆய்வாளர் பெயர், ORCIDஎண் , பணியிட முகவரி ( பேராசிரியர் எனில் )அல்லது கல்வி நிறுவன முகவரி( ஆய்வு மாணவர் எனில்), மின்னஞ்சல் முகவரி மற்றும் புலன எண் (watsapp phone number) இடம் பெற்றிருக்க வேண்டும்.  ஆய்வு மாணவர் எனில் ஆய்வு மாணவரின் தகவல்களோடு நெறியாளரின் பெயரும் பணியிட முகவரியும் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

Research students should write essays on their own research topics. Only revised research papers should be sent with the approval of supervisor. Name, work address and mobile phone number of the supervisor must be attached.

ஆய்வு மாணவர்கள் அவரவர் ஆய்வுத் தலைப்புகளில்தான்  கட்டுரை எழுத வேண்டும்.நெறியாளரின் அனுமதிப் பெற்று திருத்தம் செய்யப்பட்ட  ஆய்வுக்கட்டுரையைத்தான் அனுப்ப வேண்டும். நெறியாளரின் பெயர்,பணியிட முகவரி,அலைப்பேசி எண் ஆகியவற்றைக்  கட்டாயம் இணைக்க வேண்டும்.

Authors should submit essay without typographical error, grammatical error, punctuation error, sentence error.

கட்டுரையாளர்கள் தட்டச்சுப் பிழை, இலக்கணப் பிழை, கருத்துப்பிழை, வாக்கியப் பிழையின்றி கட்டுரை அனுப்புதல் வேண்டும்.

Abstract: An abstract is mandatory for every article. Research abstract must be in 250 – 300 words in English and Tamil. Citation: Apart from the citation in the abstract, you should also cite the fine references and make sure that they are included in the reference list.

ஆய்வுச்சுருக்கம்: ஒவ்வொரு கட்டுரைக்கும் ஆய்வுச் சுருக்கம் கட்டாயமானது. ஆய்வு சுருக்கமானது 250 – 300 வார்த்தைகளில் ஆங்கிலத்திலும் தமிழிலும் கட்டாயம் இடம் பெறல் வேண்டும். மேற்கோள்: ஆய்வுச் சுருக்கத்தில் மேற்கோளைத் தவிர்த்து நேர்த்தியான குறிப்புகளை மேற்கோளிட்டு குறிப்புப்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Keywords: 5 to 10 words of appropriate keywords used in the research paper closely related to the research paper.

திறவுச் சொற்கள்: ஆய்வுக்கட்டுரைக்கு நெருங்கிய தொடர்புடைய ஆய்வுக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட பொருத்தமான  திறவுச் சொற்கள் (key words)  5  முதல் 10 சொற்கள் வரை பயன்படுத்தலாம்.

Topic, Abstract, Key words must be in English and Tamil.

ஆய்வுக் கட்டுரைத்தலைப்பு (Topic), ஆய்வுச் சுருக்கம் (Abstract) , திறவுச் சொற்கள் (Key words)  ஆங்கிலத்திலும் தமிழிலும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

Ethics: Essayists should follow World Tamil Research Institute Research Ethics for Tamil and current MLA 8th Edition – Methodology for English.

நெறிமுறைகள் :  தமிழுக்கு    உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆராய்ச்சி நெறிமுறையையும்   ஆங்கிலத்திற்கு  தற்போதைய எம்.எல்.ஏ 8ம் பதிப்பு – முறையையும் கட்டுரையாளர்கள் பின்பற்ற வேண்டும்.

Bibliography: Relevant best references required for the article are cited and footnoted, and the supporting bibliography at the end of the article contains full information (author name, book title, publisher, publication address, year) in alphabetical order of footnote information. Used in quotation. The supplementary bibliography should be in Tamil and English. Avoid unnecessary abbreviations and footnotes. References not used in the article should not be listed in the supplementary bibliography.

துணை நூற்பட்டியல்:கட்டுரைக்குத் தேவையான தகுந்த நேர்த்தியான குறிப்புகளை மேற்கோளிட்டு அடிக்குறிப்பில் தருவதோடு கட்டுரையின் இறுதியில்  துணை நூற்பட்டியலில் மேற்கோளில் பயன்படுத்தப்பட்ட அடிக்குறிப்பிட்ட தகவல்கள் கிடைத்த புத்தகம், ஆய்விதழ், ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வேடுகள் மற்றும் இணையதள தரவுகள்  முதலானவற்றின் முழுத்தகவலும் (ஆசிரியர் பெயர், நூல் பெயர், பதிப்பகம், பதிப்பக முகவரி, ஆண்டு)அகரவரிசையில்  துணை நூற்பட்டியல் தமிழிலும் ஆங்கிலத்திலும் இடம் பெற்றிருக்க வேண்டும். அதில் தேவை இல்லாத சுருக்கக் குறியீடுகள் மற்றும் பின் குறிப்புக்களைத் தவிர்க்கவும்.கட்டுரையில் பயன்படுத்தாத நூல்கள் துணை நூற்பட்டியலில் பதிவு செய்யக்கூடாது.

SUBMISSION MODE: Quarterly (four times a year) “Arane International e Journal of Tamil Research” articles will be published in the months of (January), (April), (July), (October) at www.aranejournal.com. . Research Scholars and Professors should submit their Articles for the above publication by (January-10), (April-10), (July-10) and (October-10) 10 respectively.

ஒப்படைப்பு முறை: காலாண்டிதழாக (ஓராண்டிற்கு நான்கு முறை) வெளிவரும் “அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழில் கட்டுரைகள் தை (ஜனவரி), சித்திரை (ஏப்ரல்), ஆடி (ஜூலை), ஐப்பசி (அக்டோபர்)   மாதங்களில் www.aranejournal.com என்னும் வலைத்தளத்தில் வெளியீடு செய்யப்படும். ஆய்வு மாணவர்களும் பேராசிரியர்களும்  தங்கள் மேலான ஆய்வுக்கட்டுரைகளை மேற்கண்ட வெளியீட்டுக்கு முறையே தை (ஜனவரி-10), சித்திரை (ஏப்ரல்-10), ஆடி (ஜூலை-10), ஐப்பசி (அக்டோபர்-10)  ஆகிய மாதங்களில் 10 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Method of Article Submission: Typed research articles can be submitted directly to www.aranejournal.com website in word.doc format or emailed to aranjournal@gmail.com. Only quality articles selected by our evaluation committee will be published on the website (www.aranejournal.com).

கட்டுரை அனுப்பும் முறை: தட்டச்சு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை word formate இல் www.aranejournal.com இணையதளத்தில் இல் நேரடியாக submission  செய்யலாம் அல்லது  aranjournal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.  எங்கள் மதிப்பீட்டு ஆய்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் தரமான ஆய்வுக் கட்டுரைகள் மட்டும் இணையதளத்தில் ( www.aranejournal.com ) வெளியிடப்படும்.

You will be notified if your article has been selected within six days of your submission. After that you have to pay the fee, fill the registration form and copyright form and send it.

நீங்கள் கட்டுரை அனுப்பிய ஆறு நாட்களுக்குள் உங்களது கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்பது பற்றிய விபரம் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். அதன்பின் கட்டணம் செலுத்தி, பதிவு படிவம் மற்றும் copyright படிவம் நிரப்பி அனுப்ப வேண்டும்.

Author's Responsibility: Title, Abstract, Keywords should be in Tamil and English. Citations should be in Research Ethics and MLA Eighth Edition style for literature, APA style for science, and Chicago style for history. Acknowledgment information, disagreement and funding information should be placed on the last page of the article. Authors will be informed about the deletion of articles and corrections. They should accept it when necessary.

 கட்டுரையாளரின் பொறுப்பு: தலைப்பு, ஆய்வுச்சுருக்கம், திறவுச்சொற்கள் ஆகியவை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அமைய வேண்டும். மேற்கோள்கள் இலக்கியத்திற்கு ஆராய்ச்சி நெறிமுறைகள் மற்றும் MLA எட்டாம் பதிப்பு முறையிலும், அறிவியல் சார்புடையதற்கு APA முறையிலும் மற்றும் வரலாறு சார்புடையதற்கு Chicago முறையிலும் அமைய வேண்டும். ஒப்புதல் சார்ந்த தகவல்கள், கருத்து வேற்றுமை மற்றும் நிதியுதவி சார்ந்த தகவல்கள் கட்டுரையின் கடைசி பக்கத்தில் அமைய வேண்டும். கட்டுரைகளை நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் தொடர்பான செய்திகள் கட்டுரையாளர்களுக்குத் தெரிவிக்கப்படும். அவசியப்படும்பொழுது அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

The research paper should be structured as follows.

ஆய்வுக்கட்டுரை பின்வருமாறு அமைய வேண்டும்.

Title:

Should be in Tamil and English. The title of the essay should reflect the purpose of the essay and be unique. Avoid generic titles.

தலைப்பு: 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.கட்டுரைத் தலைப்பு கட்டுரையின் உள்நோக்கத்தைப் பிரதிபலிப்பவையாகவும் தனித்துவம் நிறைந்தததாகவும் இருக்க வேண்டும்.பொதுவான தலைப்புகளைத் தவிர்க்கவும்.

Name Details:

Author Name|Position or Research Student| College or University|City|Telephone (Phone Number)|Email Address| Orchid ID should be mentioned in Tamil and English.

*In case of research scholar Name of Supervisor|Designation|College or University|Town|Telephone (Phone Number)|E-mail Address in Tamil and English.

பெயர் விபரம் :

ஆய்வுக்கட்டுரையாளர் பெயர்|பதவிஅல்லது ஆய்வு மாணவர்| கல்லூரி அல்லது பல்கலைக்கழகம்|ஊர்|அலைப்பேசி (புலன எண்)|மின்னஞ்சல் முகவரி| Orchid ID  ஆகியவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குறிப்பிட வேண்டும்.

*ஆய்வு மாணவர் எனில் நெறியாளரின் பெயர்|பதவி|கல்லூரி அல்லது பல்கலைக்கழகம்|ஊர்|அலைப்பேசி அலைப்பேசி (புலன எண்)|மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குறிப்பிட வேண்டும்.

Abstract :

The abstract of the research paper should be written in Tamil and Abstract in English. Should consist of 100 to 250 words.

ஆய்வுச்சுருக்கம்:

ஆய்வுக்கட்டுரையின் ஆய்வுச்சுருக்கம் தமிழிலும் Abstract ஆங்கிலத்திலும் எழுத வேண்டும். 100 முதல் 250 சொற்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

Keywords:

You should set your keywords and key words (5 to 10) in Tamil and English to help in research article search.

திறவுச்சொற்கள்:

ஆய்வுக்கட்டுரைத் தேடதலில் உதவிட உங்களது திறவுச்சொற்கள் மற்றும் key words  (5 முதல் 10 வரை) தமிழிலும் ஆங்கிலத்திலும் அமைக்க வேண்டும்.

Introduction As part of your research proposal, it should reflect the need and need of the work. Avoid basic messages that everyone knows.

முன்னுரை

உங்கள் ஆய்வை முன்மொழிகின்ற பகுதி என்பதால் படைப்பின் அவசியத்தையும் தேவையையும் பிரதிபலிக்கவேண்டும். அனைவரும் அறிந்த அடிப்படைச் செய்திகளைக் கட்டாயம் தவிர்க்கவும்.

Research Approaches:

Follow research approaches and compose research paper.

ஆய்வு அணுகுமுறைகள்:

ஆய்வு அணுகுமுறைகளை பின்பற்றி ஆய்வுக்கட்டுரை அமைக்கவும்.

Benefits of the Research :

The research paper should be based on your chosen topic with a precise description of your research findings and collected research findings and research benefits. Tables, summaries, figures or figures may be used as necessary. When so used, explanatory headings should be mentioned under it.

ஆராய்ச்சியின் பலன்கள்:

உங்கள் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் ஆராய்ச்சி பலன்கள் பற்றிய துல்லியமான விளக்கத்துடன் நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பின் அடிப்படையில் ஆய்வுக் கட்டுரை இருக்க வேண்டும். அட்டவணைகள், சுருக்கங்கள், புள்ளிவிவரங்கள் அல்லது புள்ளிவிவரங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படலாம். அவ்வாறு பயன்படுத்தும்போது, ​​அதன் கீழ் விளக்கமான தலைப்புகளைக் குறிப்பிட வேண்டும்.

Conclusion:

The conclusion of a research paper is the section that communicates the essence of the research paper and its usefulness to the research community as a solution to the research. So focus on the conclusion. (Omit citations in conclusion.)

முடிவுரை:

ஆய்வுக்கட்டுரையின் முடிவுரை ஆய்வுக்கட்டுரையின் சாரத்தையும் அதன் பயனையும் ஆய்வின் தீர்வுவாக ஆய்வு சமூகத்திற்குத் தெரிவிக்கும் பகுதி. அதனால் முடிவுரையில் கவனம் செலுத்துக. (முடிவுரையில் மேற்கோள்களைத் தவிர்க்கவும்.)

References

The article, the reference section should include a supplementary bibliography of the following. The name of the author and the page number of the book cited should be given in parentheses.

Author's Name - Year of Publication - Book Name - Publisher's Name, Address must be included.

Only books mentioned in the articles should be recorded in the reference section. Articles not included in the article will be included in the supplementary bibliography and the article will not be accepted.

மேற்கோள்கள்:

கட்டுரையின் உள்ளே அடிக்குறிப்புகள் தந்திருந்தால் reference பகுதியில் துணை நூற்பட்டியல் பின்வருமாறு சேர்க்க வேண்டும். மேற்கோளிட்ட அடைப்புக்குறிக்குள் மேற்கோளிட்ட புத்தகத்தின் ஆசிரியர் பெயர், பக்க எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.

ஆசிரியர் பெயர் - வெளிவந்த ஆண்டு - புத்தகத்தின் பெயர் - வெளியீட்டாளர் பெயர், முகவரி ஆகியவை கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.

ஆய்வுக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்ட நூல்களை மட்டுமே reference பகுதியில்  பதிவு செய்ய வேண்டும். கட்டுரையில் இல்லாத நூல்கள் துணை நூற்பட்டியலில் சேர்க்கப்பட்டால் அக்கட்டுரை  ஏற்கப்படாது.

Click Here to Download the CopyRight Form. 

Click Here to Download the Registration Form.

On acceptance of submitted manuscript for publication in ARAN(AIJTR),

The following two must be sent to the Managing Editor, via email (aranjournal@gmail.com).

A MS Word file of the complete and exact content of the final version of the accepted, 

A signed copy of  ARAN(AIJTR), Copyright Agreement (to comply with the Copyright law, authors are required to complete and sign).

Click Here to Download the  ARAN(AIJTR) Paper Format

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Publication Impact Factor: .
Certificate Delivery: Digital

Publish your research with ARAN (AIJTR) and engage with global scientific minds