எஸ்.கே.சிவகணேசன், தலைவர் / முதுநிலை விரிவுரையாளர், வரலாற்றுத்துறை, கலை கலாசார பீடம், கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை
ஆய்வுச்சுருக்கம் : மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் நூல் பல சிறப்புக்களைக்கொண்டது. இலங்கைத்தமிழரின் வரலாறு தொடர்பிலான பல பரம்பரைக்கதைகளைக் கொண்டதாக அந்நூல் எழுதப்பட்டுள்ளது. இயக்கர், நாகர் எனவழைக்கப்பட்ட பூர்வ குடிகள், புரதான காலத்து அனுராதபுரம் மற்றும் பொலனறுவை காலத்து அரசர்கள், அவர்கள் காலத்தில் இடம் பெற்ற முக்கிய வரலாற்று சம்பவங்கள், கிழக்கிலங்கையின் ஆட்சியாளர்கள் என பல வரலாற்றுத் தகவல்களைக் காட்டிநிற்கின்றது. இந்நூலின் காவிய நாயகனாக மாகோன் என்ற மன்னன் காட்டப்பட்டுள்ளான். இவன் கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் கலிங்க தேசத்திலிருந்து படைகளோடு வந்து பொலனறுவை இராச்சியத்தைக் கைப்பற்றி சுமார் 40 வருடங்களுக்கு மேலாக ஆட்சி செலுத்தியிருந்தான். அம்மன்னன் கிழக்கிலங்கையோடு நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தான். அந்நூல் காட்டிய தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ள நேரடியான தொல்பொருள் சான்றுகள் கிடைக்கவில்லை. அதனால் அந்நூலை ஆதாரமாகக்கொண்டே ஆராய்ச்சியாளர்களினால் மாகோன் தொடர்பிலான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவந்தன. இருந்தபோதிலும் தற்போது திருகோணமலை - கோமரசன்கடவல என்ற இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்று மாகோன் தொடர்பிலான தகவல்களை மீள்வாசிப்புக்குள்ளாக்கி, உறுதிப்படுத்தியுள்ளது. அவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகள் தொடர்பில் ஆய்வில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
PAGES: 13 | VIEWS | DOWNLOADS
எஸ்.கே.சிவகணேசன், தலைவர் / முதுநிலை விரிவுரையாளர், வரலாற்றுத்துறை, கலை கலாசார பீடம், கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை | கலிங்க மாகோன் – மீளாய்வு | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |