கிருஷ்ணமூர்த்தி. சோ. முனைவர் பட்ட ஆய்வாளர் -நெறியாளர்: பேரா.முனைவர் டி.ஆதித்தன், இணைப் பேராசிரியர், அரிய கையெழுத்துச் சுவடித்துறை, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
ஆய்வுச் சுருக்கம்: நாட்டார் வழக்காறுகளின் கலைகள் சடங்குகள் சார்ந்தும் சடங்குகள் சாராமலும் எனப் பல்வேறு வகையினவாக இருப்பினும், சமய எல்லைக்குள் மட்டுமே நிகழ்த்தப்படும் கலைகள் தமிழ்நாட்டில் மிகவும் அருகியும் வழக்கொழிந்தும் வருகின்றன.இவற்றுள் வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம், தேவராட்டம், காவடியாட்டம், சேவாட்டம், பேயாட்டம், உறியடியாட்டம், பத்மசாலியார் கூத்து, தெருக்கூத்து ஆகியனவாகும்.இவற்றில் வில்லுப்பாட்டு மற்றும் கணியான் ஆட்டமானது சடங்கு சார்ந்து நிகழ்த்தப்படுவதாகும்.இவற்றைச் சடங்கிலிருந்து பிரிக்க முடியாததாகும்.இரட்டைக் காப்பியங்களான சிலம்பு, மணிமேகலை போன்று இரட்டைக் கலைகளாக வில்லுப்பாட்டும் கணியான் ஆட்டமும் விளங்குகின்றன.இவை இரட்டைக் கலைகளாக விளங்கினாலும் இவற்றிலுள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பற்றியும் இக்கலைகளுக்குத் தற்போதுள்ள நிலைகளைப் பற்றியும், நாட்டுப்புறக் கோவில் விழாக்களில் கலைநிகழ்ச்சியாக இல்லாமல் விழாவின் ஒரு கூறாகவும் வழிபாட்டு முறைகளில் முக்கியமான அங்கமாகவும் திகழ்வதால் இக்கலைகளின் தனித்துவத்தைப் பற்றியும் ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
PAGES: 18 | VIEWS | DOWNLOADS
கிருஷ்ணமூர்த்தி. சோ. முனைவர் பட்ட ஆய்வாளர் -நெறியாளர்: பேரா.முனைவர் டி.ஆதித்தன், இணைப் பேராசிரியர், அரிய கையெழுத்துச் சுவடித்துறை, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | வில்லிசையும் மகுட இசையும் - ஓர் ஒப்பீடு | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |