முனைவர். அ. அமுல்ராஜ், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, வள்ளல் பெ.தெ.லீ செங்கல்வராய நாயக்கர் கலை (ம) அறிவியல் கல்லூரி, சூளை, சென்னை
ஆய்வுச் சுருக்கம்: பிற்காலச் சோழர்கள் ஆட்சியில் படைத்தலைவர்களாகப் பணியாற்றியவர்கள் ‘சம்புவராயர்கள்’. இவர்கள், இன்றைக்குள்ள விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ’முன்னூர்’ பகுதியின் அதிகாரிகளாக இருந்துள்ளனர். எனவே, பழங்காலத்தில் ’முன்னூர்’ பகுதியை ஆண்ட ‘நல்லியங்கோடன்’ மரபினர்களாக இவர்களை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பிற்காலச் சோழப் பேரரசு முடிவுக்கு வந்தபோது, 1257 -இல் இவர்கள் முதல் தன்னாட்சியை, திருவண்ணாமலை மாவட்டம் ‘படைவீட்டில்’ நிறுவினர். இம்முதல் தன்னாட்சியை நிறுவியவர் ‘இராஜகம்பீர சம்புவராயர்’ ஆவர். தெற்கில் காவிரி தொடங்கி, வடக்கில் திருப்பதி (வேங்கடம்) வரை இவர்கள் ஆட்சி செய்துள்ளனர். சகலலோக சக்கரவர்த்தி, வென்று மண்கொண்டான், சென்ற திசை வென்றான், எதிரிலி, நித்ராவசன விஜயீ போன்ற பல்வேறு சிறப்புப் பட்டங்களில் இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ’வீரசம்பன் குளிகை’, ’நாராயணன் காசு’ போன்ற நாணயங்களை அச்சிட்டு வெளியிட்டனர். இவர்கள் ஆட்சிக்கு வந்தபோது வேற்று மொழி, மதத்தவர்கள் படையெடுப்பு தமிழ்நாட்டில் நடைபெற்றது. அப்படையெடுப்பிலிருந்து தமிழ்நாட்டைக் காத்தனர். பிறபகுதியிலிருந்து போரில் உயிருக்குப் பயந்து ஓடிவந்த மக்களுக்கு ’அஞ்சினான் புகலிடங்களை’ இவர்கள் ஏற்படுத்தினர். வேளாண் உற்பத்திக்காகப் புதிதாக ஏரிகள், ஆற்றுக்கால்வாய்கள் வெட்டப்பட்டன. கோயில்களுக்கு இறையிலி நிலங்கள், கொடைகள் அளிக்கப்பட்டன. போர்க்களங்களில் பெற்ற வெற்றியின் நினைவாக பல்வேறு புதிய ஊர்களும், தெருக்களும் அமைக்கப்பட்டன. படைவீட்டில் அகக்கோட்டை, புறக்கோட்டை, மலையரண், அரண்மனைகள் ஆகியவை கட்டப்பட்டிருந்தன. இவர்கள் குறித்து கவிச்சக்கரவர்த்தி ’கம்பர்’, இரட்டைப்புலவர்களான இளஞ்சூரியர், முதுசூரியர் ஆகியோர் புகழ்ந்து பாடல்களை இயற்றியுள்ளனர். தமிழகத்தின் இடைக்காலத்தில் சிறந்து விளங்கிய இவர்கள் குறித்து, தமிழக வரலாற்றில் இன்று வரைப் பெரிதாகக் கவனம் பெறவில்லை. எனவே, சம்புவராயர்களின் ஆட்சி, மாட்சிமை குறித்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
PAGES: 16 | VIEWS | DOWNLOADS
முனைவர். அ. அமுல்ராஜ், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, வள்ளல் பெ.தெ.லீ செங்கல்வராய நாயக்கர் கலை (ம) அறிவியல் கல்லூரி, சூளை, சென்னை | சம்புவராயர்களின் ஆட்சியும் மாட்சியும் (The Rule and Majesty of The Sambuvarayar) | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |