த.கல்பனா, முனைவர் பட்ட ஆய்வாளர் | முனைவர் இரா.திலகா, உதவிப் பேராசிரியர் – நெறியாளர், தமிழ்த்துறை, டாக்டர் நல்லி குப்புசாமி கலைக்கல்லூரி, மணக்கரம்பை, தஞ்சாவூர்.
வரலாற்றுப் பெட்டகமாகத் திகழும் சங்க நூல்களில் இடம்பெறும் ஐங்குறுநூறு ஐந்திணை மக்களின் வாழ்வியலை குறுகிய அடிகளில் எடுத்துரைக்கின்றது. பரத்தமை ஒழுக்கத்தால் தலைவியை பிரிந்திருந்த தலைவன், பிரிவுக் காலத்தில் நீவீர் என்ன எண்ணியிருந்தீர்கள் என்பதற்குத் தோழி பதிலுரைப்பதாக ‘வேட்கைப் பத்து’ அமைந்துள்ளது. தலைவனின் செயல்பாடுகளால் தலைவி வருந்தியிருந்தாலும், நாட்டின் வளமாக உள்ள நெல் முதலிய கூலங்கள் விளைச்சல் பெருகவும், உழவுக்கு ஆதாரமாக உள்ள பகடு சிறக்கவும், அறம் தழைத்து அல்லவை நீங்கவும், மக்களின் துன்பம் நீங்கி இன்பம் பெருகவும், அறம் தவறாது முறை செய்து நாட்டு மக்களைப் பாதுகாக்கும் மன்னன், பகை தணித்து நீண்டநாள் வாழவேண்டும் என்றும் இவையெல்லாம் சிறப்பாக இயங்க, மாரி பொய்க்காது பெய்ய வேண்டுமென்றும் விரும்பியிருந்தாள் என்று பதிலுரைக்கிறாள் தோழி. தன்னலமில்லா தலைவியின் உள்ளத்தையும், நாட்டுப்பற்றையும், இல்லற மேன்மையையும், கற்பின் திண்மையையும் வேட்கைப் பத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. தற்கால இல்லறத்தார்க்கு வழிகாட்டியாகவும் உள்ளது.
திறவுச்சொற்கள்: வேட்கை, ஆதன், அவினி, நெல், பகடு, பொலிக, சிறக்க ஊரன், நன்று, தீது, மாரி.
PAGES: 16 | VIEWS | DOWNLOADS
த.கல்பனா, முனைவர் பட்ட ஆய்வாளர் | முனைவர் இரா.திலகா, உதவிப் பேராசிரியர் – நெறியாளர், தமிழ்த்துறை, டாக்டர் நல்லி குப்புசாமி கலைக்கல்லூரி, மணக்கரம்பை, தஞ்சாவூர். | ஐங்குறுநூற்று மருதத்திணையில் “வேட்கைப் பத்து” வெளிப்படுத்தும் செய்திகள் (Vetkai Patthu" Revealing News in Aingurunooru Maruthathinai) | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |