வீ. மஞ்சு ( Reg.no. BDU2310632780329), முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர் கோ. ஜெயஸ்ரீ, இணைப்பேராசிரியர் | தமிழ்த்துறை, அரசினர் மகளிர் கல்லூரி(த), கும்பகோணம்
வள்ளல்கள் எழுவருள் ஒருவனான பாரி என்னும் வேளீர் குல நல்லோனை தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டதே வீரயுக நாயகன் வேள்பாரி நாவல் ஆகும். இதன் ஆசிரியர் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் ஆவார். இவ்வாய்வானது இயற்கைஅறநெறிக்கு கட்டுப்பட்டு அதனின்றும் வழுவாமல் ஓர் இனக்குழுத்தலைவனாகவும் தன்னடைக்கலம் வந்த பிற குலங்களைக் காக்கும் பாதுகாவலனாகவும் வேளீர் குலத்தின் தலைவனாகவும் விளங்கும் பாரியின் பறம்பு நாட்டு மக்களின் வாழ்க்கை முறைகள் மற்றும் அவர்களின் பண்பு நலன்களை ஆராய்வதாக அமைகிறது. அம்மக்களின் முடியாட்சி அற்ற வாழ்க்கை முறை எத்தகைய நிலையில் அமைந்திருக்கிறது என்பதனை புலவர் கபிலர் அவர்களின் கண்ணோட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. மேலும் பறம்பு மக்களின் வாழ்க்கை முறையானது தற்காலத்தில் திண்டுக்கல் மாவட்டதில் உள்ள பழநி, சிறுமலை போன்ற பகுதிகளில் வசிக்கும் பளியர் என்ற பழங்குடி மக்களின் வாழ்வியல் முறையோடு ஒத்துப்போவதாக உள்ளது. அவர்களின் வாழ்வியலும் இயற்கையோடு இணைந்ததாக உள்ளது. இயற்கையையோடு ஒன்றி அதன் போக்கிலேயே வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் தற்போதும் கீழ்நிலையிலேயே உள்ளது. மேலும் அரசாங்கம் விதித்த தடை சட்டத்தினால் பாதிக்கப்பட்ட நிலையையும் ஆராய்ந்து தொகுப்புரையில் விளக்கப்படுகிறது.
திறவுச்சொற்கள்: வேளிர், பறம்பு மலை, பளியர், சிறுமலை, விருந்தோம்பல், வாழ்வியல் முறை.
PAGES: 9 | VIEWS | DOWNLOADS
வீ. மஞ்சு ( Reg.no. BDU2310632780329), முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர் கோ. ஜெயஸ்ரீ, இணைப்பேராசிரியர் | தமிழ்த்துறை, அரசினர் மகளிர் கல்லூரி(த), கும்பகோணம் | பறம்பு மக்களின் பரந்த வாழ்வியல் (Detailed Description Of Livelihood Of Parambu People) | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |