ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

பகவத்கீதையும் திருக்குர்ஆனும் வெளிப்படுத்துகின்ற கடவுட் கோட்பாடு - ஓர் ஒப்பீட்டாய்வு

பூபாலசிங்கம். தனேஸ், தற்காலிக உதவி விரிவுரையாளர், ஓப்பீட்டுச் சமயம் மற்றும் சமூக நல்லுறவுத்துறை, கலை கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம். 23 Jan 2020 Read Full PDF

ஆய்வின் சுருக்கம்

ஒவ்வொரு மதமும் தன் கடவுள் அல்லது கடவுள்களை விளக்கி ஓர் நம்பிக்கைக் கட்டமைப்பை எடுத்துரைக்க தனக்கென ஒரு புனித நூல் தனை கொண்டுள்ளது. அந்த வகையில் இந்து சமய புனித நூல்களில் ஒன்றாக பகவத்கீதையும் இஸ்லாம் சமய புனித நூலாக திருக்குர்ஆனும் விளங்குகின்றன. பகவத்கீதை என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத்கீதை என்பதற்கு பகவானின் பாடல்கள் என்று பொருள்கொள்ளப்படுகிறது. “பகவத்” என்றால் இறைவன். “கீதா” என்றால் நல்ல உபதேசம். இது போலவே வானவர் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம், நபியவர்களுக்கு வல்லவன் அருளிய நூலே திருக்குர்ஆன் ஆகும். “குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”, “ஓதக்கூடியது”, ஓதவேண்டியது என்று பொருள்கொள்ளப்படுகிறது. அண்ணல் நபி அவர்களுக்கு ஜிப்ரில் (அலை) அவர்கள் மூலமாக “ஓதப்பட்ட” இவ்வேதம், மனித சமுதாயம் தன் மேன்மையைக் கருதி “ஓதவேண்டியது” என்ற பொருளையே தன் பெயராகக் கொண்டிருப்பதும், இவ்வேதமே இவ்வுலகில் அதிகமான மக்களால் “ஓதப்படுவதும்” சிந்தித்து நயக்கத்தக்கதாக இருக்கிறது.

எந்தவொரு சமயமாக இருந்தாலும் அவை ஒழுக்கக் கருத்துக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு அவை வாழும் மக்களிடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்துகின்ற விழுமியங்களையே தாங்கி நிற்பவை என்பதையும் சமயங்களிடையேயான குறிக்கோளை அடையும் பாதைகள் வேறுபட்டவையாக அமைந்திடினும் கூட அவற்றின் இறுதி இலக்கு ஒன்றே. அந்தவகையில் திருக்குர்ஆனும் பகவத்கீதையும் வெளிப்படுத்துகின்ற கடவுட் கோட்பாட்டில் ஒற்றுமை காணப்படுகிறதா? வேற்றுமை காணப்படுகிறதா?, இவை இரண்டும் சமூக மக்களிடையே எவ்வாறான நல்லிணக்கத்தன்மையினை வெளிப்படுத்துகின்றது? போன்ற விடையங்களை ஆய்வு செய்வதாக இவ்வாய்வு அமைகின்றது.

இந்த ஆய்வின் மையப் பொருளாக “பகவத்கீதையும் திருக்குர்ஆனும் வெளிப்படுத்துகின்ற கடவுட் கோட்பாடு - ஓர் ஒப்பீட்டாய்வு” அமைவு பெறுகின்றது. அந்த வகையில் பகவத்கீதை, திருக்குர்ஆன் ஆகிய புனித நூல்களின் மொழி பெயர்ப்பு நூல்கள் இவை தொடர்பாக ஆய்வு நூல்கள் புனித நூல் குறிப்பிடும் கடவுட் கோட்பாடு தொடர்பான ஆய்வு நூல்கள் இவை தொடர்பான சஞ்சிகைகள் இணையத்தளத் தகவல்கள் ஆகியன இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

திறவுச் சொற்கள்

பகவத் கீதை, திருக்குர்ஆன், சமூக நல்லிணக்கம், கடவுட்கோட்பாடு.

 

இலக்கிய மீளாய்வு

பகவத்கீதையில் கடவுட் கோட்பாடு.

மோஹன்ராஜ், வி. எம்., 2008, 'பார்த்தனும் சாரதியும்”, பாரதி புத்தகாலயம், அண்ணாசாலை சென்னை. இந்நூலில் மகாபாரதக்கதைச் சுருக்கம், மகாபாரதம், பகவத்கீதையின் காலம் தொடர்பான அலசல்கள், பல்வேறு அறிஞர்களது கருத்து முன்வைப்புக்கள், இலங்கியல் கண்ணோட்டத்திலான பார்வையில் பகவத்கீதை தொடர்பான விடயங்கள், கதாபாத்திர அமைவு, கிரு~;ணனால் ஆற்றுப்படுத்தப்படுகின்ற விதம் என்பவற்றுடனான பல்பரிணாம நோக்காக பகவத்கீதை பார்க்கப்படுகிறது.

ஸ்ரீPமத் சித்பவானந்தர், 2001, 'ஸ்ரீPமத் பகவத்கீதை”, ஸ்ரீ ராமகிரு~;ண தபோவனம் திருப்பராய்த்தறை. இந்நூலில் மகாபாரதத்தினூடாக பகவத்கீதை மக்களின் பிரதிநிதியாகவும் காட்டப்பட்டுள்ளது. மேலும் போர்க்களம், உபதே இடமாக கொள்ளப்பட்டமைக்கான காரணம், பகவத்கீதையின் சிறப்பு, யோக சாஸ்திரமா நிறுவியுள்ளதோடு புரட்சிகரமான நூலாகவும் கூறப்படுகின்றது.

சுவாமி சின்மயானந்தா, 'ஸ்ரீமத் பகவத்கீதை” எழட-2, சின்மயா மி~;ன் டிரஸ்ட், சின்மயா பிரசுரம் ( தமிழ் பிரிவு ). பத்து தொடக்கம் பதினெட்டு வரையான பகவத்கீதையின் அத்தியாயங்களை விளக்கும் இந்நூலில் கீதை தத்துவம், விஞ்ஞானம் இரண்டையும் இணைத்துப் பாடுவதாகவும் இதனால் அறிவையும் மனதையும் ஏக காலத்தில் தன் வயப்படுத்திக் கொள்கிறது என்பதாகவும் ஒவ்வொரு உயிரினதும் மாறுபட்ட இயல்புக்கான காரணம் ஆளுமையிலும் மேலெழுந்து நிற்கின்ற சுபாவங்களின் தன்மையே எனவும் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதர், 1981, 'பகவத்கீதை உண்மையுருவில்”, பக்தி வேதாந்த புத்தக அறக்கட்டளை, சென்னை. இந்நூல் அகில உலக பக்தி இயக்க ஸ்தாபகரால் எழுதப்பட்டதால் கடவுளின் நாம் கீர்த்தனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மன ஆற்றுப்படத்தலின் செயல்முறை வழிநடத்தலின் சாந்த வழிமுறைகளில் மந்திர உச்சாடனம், தியானம் என்பவற்றின் போக்கை கீதையில் காண இந்நூல் உதவுகின்றது.

 

அல்குர் ஆனில் கடவுட் கோட்பாடு.

முஹம்மத் குலாம். மு, 2002, “இஸ்லாத்தில் இறைநம்பிக்கை”, இஸ்லாமிக் புக் ஹவுஸ். இந்நூலானது இஸ்லாமின் அடிப்படைகளை எடுத்துச் சொல்லும் வகையில் அமைவு பெறுகின்றது.

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது, 1996, “இஸ்லாமிய போதனைகளின் தத்துவஞானம்”, இந்நூலானது அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் என்னும் அமைப்பை நிறுவிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அவர்களால் 1896 இல் லாஹீரில் நடைபெற்ற உலக சமயங்களின் மாநாட்டில் வாசிப்பதற்காக எழுதப்பட்ட கட்டுரையாகும். இது மனித இயல்பு, நல்லொழுக்கம், ஆன்மீக நிலைகள் யாவை? மரணத்தின் பின் மனிதனின் நிலை என்ன? இவ்வுலக வாழ்க்கையின் நோக்கம் என்ன? அதை அடைவதற்கான வழிகள் என்ன? ஆன்மீகத்தை பின்பற்றி நடந்தால் இம்மையிலும் மறுமையிலும் விளையும் பயன்கள் யாவை? இறைஞானம் பெறுவதற்கான வழிகள் யாவை? என்பவற்றை எடுத்தியம்புவதாக அமைவு பெற்றுள்ளது.

மௌலதி. கே. எம். எச். காலிதீன். கலாநிதி, 1993, “ இஸ்லாம் - முஸ்லிம் சமூகம் முஸ்லிம் உலகம் மதிப்பீடு”. நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூல் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் இஸ்லாம் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு அதற்கான தீர்வுகளை முன் வைப்பதாக அமைவு பெறுகின்றது.

மன்சூர்.எஸ்.எம், 1999, “ இஸ்லாம் பேசுகின்றது ”, நொலெஜ் பதிப்பக வெளியீடு, இன் நூலானது இஸ்லாம் அதன் அசல் உருவில் முழுமையான வடிவில் முன் வைப்பதற்கு ஆசிரியர் மேற் கொண்ட முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இஸ்லாத்துடன் தொடர்புடைய பல ஐயங்களை களையும் விதத்தில் விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன.

முஹம்மது அல் கஸ்ஸாலி, 1996, “இஸ்லாமிய ஒழுக்க மாண்பு”, அபூர் யூசுப் பப்ளி~ர்ஸ் வெளியீடு, ஒழுக்க வாழ்வினை வாழ்வதற்கான வழிகளை அல்குர் ஆனின் அடிப்படையில் எடுத்துக் கூறுவதாக அமைகின்றது.

அல்ஹாஜ் மௌலவி அப்துர் ரஸ்ஸாக். எம். ஏ, 1999, “இஸ்லாமிய விழுமியங்கள்”, முஸ்லீம் மகக்ளின் அவர்தம் வளர்ச்சிக்கு இஸ்லாமிய பண்பாடு தார்மீக சிந்தனை இறைவனது ஏவல் போன்ற விழுமியங்கள் வாழ்க்கை முறையில் காணப்படுகின்றன. என்பதை இந்நூல் எடுத்து கூறுவதாக அமைகின்றது.

பகவத்கீதை பற்றிய அறிமுகம்

பகவத்கீதை என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத்கீதை என்பதற்கு பகவானின் பாடல்கள் என்று பொருள்படும். “பகவத்”  என்றால் இறைவன். “கீதா” என்றால் நல்ல உபதேசம். அதாவது இறைவனது நல்ல உபதேசம் எனவும் கொள்ளப்படுகின்றது. இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. “கீதா” என்ற சொல்லை வேகமாகச் சொல்லும் போது “தாகீ” என்று மாறும். தாகீ என்றால் “தியாகம்”. வாழ்வில் வருகின்ற அனைத்து சுக துக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதும் இதன் பொருள். துறவு கொள்ளுங்கள், எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள் என்பதும் “கீதா” விற்குரிய ஆழமான பொருளாகும். அர்ஜீனன் தன் உறவினர்கள் மீது தாக்குதல் நடத்த  தயங்கிய போது, தர்மத்தைக் காக்க அவர்களை அழித்தலும் தவறில்லை. அதற்குரிய பலாபலன்கள் தன்னையே சேருமென பகவான் கிரு~;ணர் கூறினார். எனவே, எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்து விட வேண்டும் என்பதே கீதையின் பொருள். எனவே தான் கீதை இந்துக்களின் ஐந்தாவது வேதமாக விளங்குகிறது. (hவவிள:ஃஃஅ-வயஅடை.றநடினரnயை.உழஅஃயசவiஉடநஃளிநஉயைட-யளவசழ-pசநனiஉவழைளெஃடிhயபயஎயன-பவைய-pசநயஉhiபெ-வாந-டழசன 2019ஃ10ஃ18இ 6.30.)

மகாபாரத மகாகாவியத்தில் பீ~;ம பருவத்தின் பதினெட்டு அத்தியாயங்களில் அடங்கி பகவத்கீதைக்கு மண்ணுலக வாழ்வை விண்ணுலக வாழ்வுடன் இணைக்கும் பாலமாய் விளங்கும் பெருமை உண்டு. சமயம், தத்துவம் இரண்டையும் நடைமுறை வாழ்க்கையுள் அடக்கிவிட்ட பெருமையும் கீதைக்கே உரியது.  குருசே~;த்திரப் போர்க்களத்தில் பாசக்கட்டால் கோழையாகிவிட்ட பார்த்;திபனுக்கு அவனது சுயதர்மத்தை அதாவது கடமையைச் செய் என கிரு~;ண பகவான் உபதேசிப்பதாக கீதை விளங்குகிறது. இந்த உரையாடல்களின் உள்ளடக்கமே பகவத்கீதையாகும். இதில் கிரு~;ணர் சொல்வதாக 575 ஸ்லோகங்களும், அர்ஜீனன் சொல்வதாக 57, சஞ்சயன் சொல்வதாக 67, திருதராஸ்டிரன் சொல்வதாக ஒரு ஸ்லோகம் என மொத்தமாக 700 ஸ்லோகங்களை கொண்டதாகக் காணப்படுகின்றது. (அருட்செல்வப்பேரரசன்.ஆ, 2004:2)

திருக்குர்ஆன் அறிமுகம்

முகம்மது (ஸல்) அவர்கள் மூலமாக மனித குலத்துக்கு அருளப்பட்ட இறுதி வேதமே திருக்குர்ஆன் ஆகும். இத்திருமறை எல்லா காலகட்டத்திற்கும், எல்லா நிகழ்வுகளுக்கும், எல்லா இன, தேச மக்களுக்கும், வாழ்வில் எல்லாத்துறைகளுக்கும் வழிகாட்டியாக அமைந்தும் இஸ்லாமியரின் சமய நம்பிக்கையானது. மனிதன் இப்பூவுலகில் நீதிமிக்க வாழ்க்கை அமைப்பை நிலைநாட்டவும், மறுமையில் வெற்றியும், ஈடேற்றமும் அடையவும் கூடிய அடிப்படைகளை வெளிப்படுத்திப் பெரும் அருட்கொடையாய் திருக்குர்ஆன் திகழ்கின்றது. திருக்குர்ஆனைப் பொறுத்தவரை 114 (சூராக்கள்) அத்தியாயங்களும், 6666 வசனங்களும் காணப்படுவதோடு 30 (ஜுஸ்உ) பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் முஹம்மத் நபியவர்கள் மதீனாவிற்கு செல்வதற்கு முன் இறங்கிய அத்தியாயங்கள் (மக்கிய்யா) மக்காவில் இறக்கப்பட்டவை எனவும் முஹம்மத் நபியவர்கள் மதீனாவிற்கு சென்ற பின் இறங்கிய அத்தியாயங்கள் (மதனிய்யா) மதினாவில் இறக்கப்பட்டவை எனவும் அழைக்கப்படுகின்றன. இவ்வாறாக 86 மக்கிய்யா அத்தியாயங்கள் அத்தியாயங்களும் 28 மதனிய்யா அத்தியாயங்களும் காணப்படுகின்றன. (முஹம்மது ஏ. எல். (காஸிமி), 2000:1-5)

இவ்வேதமானது நபி முஹம்மத் அவர்களின் காலப்பகுதியில் மனன வழியாகப்; பாதுகாக்கப்பட்டதோடு கால ஓட்டத்தில் தோல், எலும்புகள், ஓலைகள் என்பவற்றிலும் எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டன. நபி முஹம்மத் அவர்களுக்குப் பின் இஸ்லாமிய ஆட்சியின் முதல் தலைவரான கலீபா அபூபக்கர் அவர்களின் காலப் பகுதியில் ஸைத் பின் காபித் என்பவரின் தலைமையில் குழுவொன்று உருவாக்கப்பட்டு திருக்குர்ஆன் ஒரு முழுமையான நூலாக திரட்டப்பட்டது. முழுமையாக திருக்குர்ஆன்; தொகுக்கப்பட்ட பிறகு முஸ்லீம்களின் தலைவர் என்ற அடிப்படையில் அபூபக்கரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. அவருடைய மறைவுக்குப் பின் இரண்டாவது கலீபா உமரிடம் வந்து சேர்ந்தது. அவரும் மறைவுற்றார். இத்தூய தொகுப்பு அவருடைய மகளும் முஹம்மத் நபியின் துணைவியுமான ஹப்சாரழியல்லாஹ{ அன்ஹாவிடம் ஒப்படைக்கப்பட்டது. குர்ஆனின் அரசாங்கப் பிரதியாக இதுவே இருந்தது. ஆகையால், சாதாரணமாக பொதுமக்கள் தாமாக திரட்டி வைத்திருந்த பிரதிகளை விட இது மதிப்பு வாய்ந்ததாக, நம்பிக்கைக்குரியதாக இருந்தது. (நடைமுறைக்கேற்ற இஸ்லாம் - பாகம் 1, ப15-20.)

பகவத்கீதையும் திருக்குர்ஆனும் வெளிப்படுத்தும் கடவுட் கோட்பாடு

தோன்றிய இரண்டு சமய தத்துவ நூல்களின் சூழல் பின்னணியினை அடிப்படையாகக் கொண்டு ஒப்பிடும் பொழுது சில அடிப்படை உண்மைகளைக் கண்டு கொள்ளக்கூடியதாகவுள்ளது. பகவத்கீதை எழுந்த சூழல் இராஜாங்கம் ஒன்றினைத்  தவறான வழியிலே கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துக் கொண்ட கௌரவர்கள் மீள  ஆட்சியுரிமை பெறுவதற்கு சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் மீள வழங்க ஒப்புக் கொண்டிருந்தனர். இவ் நிபந்தனைகளுக்கமைய  14 ஆண்டுகளில் 13 ஆண்டுகள் வனவாசமும் ஓராண்டு அஞ்ஞான வாசமும்  இருந்து மீள வந்து  ஆட்சி உரிமையைப் பாண்டவர்கள் கேட்டபொழுது அதை மறுத்ததனால் பாரதப்போர் ஆரம்பமானது. இந்நிலையில் பாண்டவர்கள் வழிவந்தோர் அர்ஜீனன் தனது இன பந்துக்களை  எதிர்த்துப்  போரிடத் தயங்குகிறான் சுற்றம் அழியும், சேனை அழியும், செல்வம் அழியும், குடியினர்கள் அழிவார்கள் என்ற எண்ணப்பாடே அவனது தயக்கத்திற்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் பரமாத்மா மானிட வடிவில் தோற்றம் பெற்றுத் தனது தெய்வீகத்தை வெளிப்படுத்தி அறம் எது தர்மம் எது என்கின்ற விடயங்களை அர்ஜீனனுக்கு உபதேசிக்கின்றார்.

இது போன்றுதான் திருக்குர்ஆன் எனும் புனித நூலானது மக்கா நகரிலே ஹிரா குகையிலே இறக்கியருளப்பட்டது. முகம்மது நபியவர்கள் காலத்தில் அவர் வாழ்ந்த பிரதேசத்தில் மக்களிடம் காணப்பட்ட ஒழுங்கீனமான வாழ்க்கையை கருதிக்கொண்டு தனக்கு இறைப்பரம்பொருளால் உபதேசிக்கப்பட்ட நற்கருத்துக்களை திருக்குர்ஆனாக மக்களுக்கு உபதேசம் செய்தார். கால ஓட்டத்தில் தேவை கருதி திருக்குர்ஆன் ஆனது எழுத்துருவம் பெற்று நல்லுபதேசங்கள் தொகுக்கப்பட்டது. எனவே ஒழுக்க வாழ்வு, இணக்கப்பாடு இல்லாத வாழ்வு தோற்றம் பெற்ற வேளையில் உபதேசிக்கப்பட்ட நூலாகவே இவ்விரு நூல்களும் காணப்படுகின்றன. தர்மத்தை நிலைநாட்டி மீளவும் ஓர் ஒழுக்க வாழ்வு ஸ்தாபிப்பதே இந்நூல்களின் நோக்கமாக அமைகின்றன.

பகவத்கீதையில் பரமாத்ம தத்துவம் பேணப்பட்டவறாகவும் அவ்வேளை மனிதனானவன் நீதி தலைகுன்றி அநீதிக்கு ஏற்படுகின்றபோது அதனை துடைத்து எறிவதற்காக அவதார புரு~ராக பரமாத்மா தோன்ற வேண்டிய தேவையொன்று முன்னிறுத்தப்படுகிறது. இதன் விளைவாக பரமாத்மா “நான் பிறப்பற்றவனாக இருந்தாலும், எனது திவ்யமான உடல் அழிவற்றதாக இருந்தாலும், உயிர்வாழிகள் அனைவருக்கும் நானே இறைவனாக இருந்தாலும், நான் எனது சுயமான திவ்ய உருவில் ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுகின்றேன்”;. (4.6)

“எப்பொழுதெல்லாம் அறம் நலிந்து  மறம் தலையெடுக்கிறதோ அப்போதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்கிறேன்” (4.7) என்கின்ற கருத்தமைவுக்கமைய கிரு~;ணபரமாத்மாவாக தோற்றம் பெற்று கீதையில் போதனை செய்கிறார். (சுவாமி பிரபுபாதா,அ.ச., 2003:179)

இஸ்லாமில் உருவ வழிபாடு ஏற்றுக்கொள்வதில்லை எனினும் காலத்தின் தேவைகள் பொருட்டாய் நற்கருத்துக்களை உருவமற்ற இறைவன் தன் தூதர்களின் வழியாய் விண்ணிலிருந்து இறக்கி மண்ணில் வாழும் சமய போதகர்களுக்கு அறியபடுத்தினார். இந்நிலையில் உருவ பிரசன்னம் என்பது முக்கியப்படுத்தபடாது  உகந்த தேவையான கருத்துக்கள் என்ற அடிப்படையில் காலம் காலமாக, யுகம் யுகமாக நற்கருத்துக்கள் பிறப்பிக்கப்படுகிறது. என்கின்ற தத்துவார்த்தம் இரு நூல்களிலும் அடிப்படையில் உடன்பாடு உடையதாயக்; காணப்படுகிறது. பொதுவாக உலக சமயங்கள்  நிலைத்து நிற்பதற்கும், நீடித்திருப்பதற்கும் அவதார புரு~ர்களுடைய வருகையை எதிர்பார்த்து இருப்பது பொதுமைக் கருத்தாய் அமைகிறது. இந்த வகையில் இவர்கள் நடாத்துகின்ற அற்புத செயற்பாடுகள் சமயத்தின் இருப்பையும், நிலைப்பையும், நீடிப்பையும் நேர்க்கணியமாக நடத்திச் செல்கிறது. கிறிஸ்தவம் இயேசுவையும், இஸ்லாம் முகம்மது நபியையும், சீக்கியம் குருநானக்கையும், பௌத்தம் கௌதமபுத்தரையும் அவதார புரு~ர்களாக கண்டுகொள்கிறது. இவர்களது சிந்தனைகள், செயற்பாடுகள் அறவாழ்வு ஓங்க வழி செய்கின்றன.

கிரு~;ணபரமாத்மா தேவையை கருதியே உலகில் தோற்றம் பெற்றதோர் அவதாரமே மேற்குறிப்பிட்ட அவதார புரு~ர்களின் தோற்றம் போலல்லாது கிரு~;ணரது அவதாரம் பரமாத்மாவின் ஒரு தோற்றப்பாடே ஆகும். தோற்றத்தில் அவதார புரு~ர்களுக்கும் கிரு~;ண அவதாரத்திற்கும் உலகில் பிரசன்னமானது குறித்து சிறிது வேறுபாடு காணப்பட்டாலும் செயற்பாடுகள் ஒரே தன்மையானவையாகவே காணப்படுகின்றது. பகவத்கீதை தந்த கிரு~;ணரும் திருக்குர்ஆன் தந்த முகம்மது நபியும் உலக வாழ் மக்களது அறவாழ்வு உத்தரவாதப்படுத்தியவர்கள் என்றவகையில் ஒரே வகைப்பட்ட பலாபலன்களையே மக்களுக்காய் வழங்கினர். பயன்பாட்டின் அடிப்படையில் குறிப்பிடின் முகம்மது நபியும் கிரு~;ணபரமாத்மாவும் அவதார புரு~ர்கள் என்றவாறாகவே குறிப்பிடலாம்.

பகவத்கீதை ஏகம் என்கின்ற  அதாவது தனி ஒன்று என்கின்ற கருத்தினை நூலின் முழுமையிலும் உள்வாங்கி காணப்படுகிறது. இதை எளிமையாக குறிப்பிடின்  சொல்பவன், செய்பவன், பயனை ஏற்பவன் எல்லாம் ஒருவனே இக்கருத்தமைவு இந்து சமயத்தில் ஆரம்பகாலத்திலிருந்தே வளர்ந்து வருகிறது. “ஏகம் சத் விப்ரா பஃகுதா வதந்தி....” என இருக்குவேதம் குறிப்பிடுகின்றது. இதனை இறைவன் ஒருவனே எனினும் பலவென்று சொல்வார்கள் என்பர். இதனை உபநிடதமும் பசுக்கள் பல வண்ணங்களில் இருந்தாலும் அவை தரும் பாலின் நிறம் வெண்மையே என்று குறிப்பிடுகிறது. பகவத்கீதையில் கிரு~;ணர் மேற்குறித்த கருத்தமைவையே நீ செய்யும் கருமங்கள்  அனைத்தும்  என்னையே சேர்கின்றன என்கின்றார்.

புனித திருக்குர்ஆனும் இறைவன் ஏகனே ஒருவனே என்கின்ற கருத்தமைவைத் துல்லியமாக வெளிப்படுத்துகிறது. இதனை “லாஇலாஹ் இல்லல்லாஹ்” என்பதன் அர்த்தப்பாடு தெளிவுபடுத்துகிறது. உங்கள் நாயகன் ஒருவனே அவனைத் தவிர வேறு நாயகன் இல்லை அவன் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (2.163) “லாஇலாஹ” என்பது வணக்கத்துக்குரிய யாருமில்லை. என்று நாம் சொல்லும்போது வணக்கத்துக்குரியவன் எவருமில்லை என்ற அர்த்தப்பாடு வெளிப்படுத்தப்படுகிறது. “இல்லல்லாஹ்” என்பது அல்லாஹ் தவிர என்று நாம் சொல்லும்போது வணக்கத்துக்குரிய தகுதி அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளது. ஆகவே ஒப்பிட்டு நோக்கிப் பார்க்கும் பொழுது பகவத்கீதையிலும் திருக்குர்ஆனிலும் இடம்பெறுவது ஒரு கடவுட் கோட்பாடே ஆகும். இரண்டு சமயநூல்களினதும் அடிப்படையான கருத்தமைவு ஒன்றாகவே காணப்படுகிறது. (hவவி:ஃஃறறற.வயஅடைடைஙரசயn.உழஅஃஙரசயயெரனழை.யளிஇ 2019ஃ10ஃ20இ 6.30.)

பகவத்கீதையின் பிரகாரம் பரமாத்மாவே பொருள் என்றும் அவனே பிரபஞ்சத்தையும்  உலகில் வாழும் அனைத்து உயிரினத்தையும் தோற்றுவித்தான் என்றும் குறிப்பிடுகிறது. மேலும் மனிதனுக்கு இயல்பாகவே இராசதம், தாமதம், சாத்வீகம் ஆகிய குண இயல்புகள் உண்டு என்றும் இக்குணவியல்புகளில் சமநிலை தழும்புகிற  போதே அவன் செயலாற்ற முனைகிறான் என்றும் கூறுகிறது. மனிதனானவன் தன்னுள்ளாய் உள்ள சாத்வீக குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையே கீதை தன் போதனையாக அமைவுருத்திக் கொள்கிறது. மனிதனுடைய அறிவு மட்டுப்படுத்தப்பட்டது என்றும் அவன் இறைவனுடைய கருவியாகவே அமைகிறான் என்கின்ற கருத்தமைவை கீதை வழங்கி நிற்கிறது. மனிதன் இவ்வுலகில் ஒரு பார்வையாளன் மட்டுமே அவனுக்கு என்று எதுவும் எப்போதுமாய் இருக்க முடியாதென கீதையின் “எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது….” எனும் ஸ்லோகங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. எனவே கீதையில் மனிதன் ஒரு கருவியாக இனங்காணப்பட்டு ஒரு இயக்காததோர் இயக்க சக்தியின் வழிநின்று செயற்படுபவனாகக் கீதையில் மனிதன் சித்தரிக்கப்படுகிறான். (பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதர், (1981:0)

இவ்வாறான கருத்தமைவுதான் இஸ்லாமிலும் காணப்படுகிறது. இறைவன் இருக்கிறான், அவனே பிரபஞ்சத்தையும் தோற்றுவிக்கிறான், அவன் மனிதனை மகிழ்வாக வாழ படைத்தான், பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்துக்கும்  இறைவனின் தேவைப்பாடு எப்போதுமே உண்டு, அவன் தனித்தவன், அவன் தனித்துவமானவன், எனக்கு எவனதும், எதனதும் துணை தேவையில்லை, அவன் ஆதி அந்தம் இல்லாதவன், சந்ததிகள் அற்றவன், ஏனைய படைக்கப்பட்ட பொருட்களோடு ஒப்பாகாதவன், அவன் மாத்திரமே வணங்கி வழிபடத்  தக்கவன், அவன் காட்டிய வழிநின்று இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் தமது பணியை செவ்வனே செய்யக் கடவை யென்று திருக்குர்ஆன் எடுத்துக்கூறுகிறது. மேலும் ஒரு மனிதன் ஒரு செயலுக்காக சத்தியம் செய்கின்ற போது அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தாம் செய்யும் செயல்களை அல்லாஹ்வுக்காகவே நிறைவேற்ற வேண்டும். செய்யத்தகாத செயல்களையும் அல்லாஹ்வின் பெயரினாலேயே செய்யாதுவிடல் வேண்டும். செயல்களைப் புகழுக்கும் பெயருக்குமாகச் செய்பவன் தன்னை நரகத்திற்கு அழைத்துச் செல்வதற்காகவே செய்கிறான். எனவே பகவத்கீதையிலும் திருக்குர்ஆனிலும் கடமையைக் கடமைக்காகச் செய் என்ற கருத்தாக்கமே வலியுறுத்தப்படுவதனை காணக்கூடியதாகவுள்ளது. நாம் செய்கின்ற ஒவ்வொரு விடயங்களையும் புனித ஏற்பாட்டுடன் பொருந்துகின்றதா என்று பார்த்து கொள்ளப்பட வேண்டும். இம்மானுவேல் கான்டினது கருத்தும் கடமையைக் கடமைக்காகச் செய் என்கின்ற கருத்தமைவும் இங்கு ஒப்புநோக்கக்கூடியதாக அமைகிறது.

மனித இனத்தை நான்கு வர்ணங்களாகப் பகவத்கீதை வகைப்படுத்திக் காட்டியிருந்தாலும் ஒன்றிலிருந்து மற்றொன்று மேலானது என்று குறிப்பிடவில்லை. ஒவ்வொன்றும்  சம அந்தஸ்துடனே மதிக்கப்படுகின்றது. “கடமையைக் கடமைக்காகச் செய்” (சுவாமி ஆசுதோ~hனந்தர், 2004:477) என்ற அடிப்படையில் செயற்பட்டு கொண்டிருப்பவன் நிச்சயமாக இல்லாதவனாக இருந்தால் என்ன? துறவறத்தவனாக இருந்தால் என்ன? அவன் விடுதலைக்கு வழி சமைத்தவர் ஆகிறான். இங்கு பற்றற்ற செயற்பாடு எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்லாமைப் பொறுத்தவரை இல்வாழ்க்கை போற்றினாலும் அவ் இல்வாழ்க்கையே ஆன்மீக வாழ்வாக அமைய வேண்டும் எனக் குறிப்பிடத் தவறவில்லை. மனிதனைப் பொறுத்தவரை மூன்று கூறுகளால் ஆனவன் அவை முறையே உடம்பு, ஆன்மா, அறிவு ஆகும். இவை மூன்றும் சமநிலையாகப் பேணப்பட வேண்டும். இதில் ஆன்மீகத்தைப் பக்குவப்படுத்திக் கொள்வது, தூய்மைப்படுத்திக் கொள்வது, வளர்ச்சியுறச் செய்வது முக்கியமானது திருக்குர்ஆன் பின்வருமாறு இச்செய்தியை குறிப்பிடுகிறது. “ஆன்மாவைத் தூய்மைப்படுத்தியவன் வெற்றி பெற்றுவிட்டான் அதனைப் பாழ்படுத்திக் கொண்டவன் தோல்வி கொண்டுவிட்டான்” மேலும் கருத்தமைவை ஹதீஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறது. “அல்லாஹ் உங்களது தோற்றத்தையோ உடலையோ பார்ப்பதில்லை மாறாக உங்கள்  உள்ளங்களையே பார்க்கிறார்" பாவத்தில் வீழ்த்தப்படுவேன் என்று அச்சமும் தன்னை நன்மை செய்வதில் குறையுணர்வு மனிதர்களிடம் காணப்பட வேண்டும் பொருளில் பற்றற்ற வாழ்க்கைகளை மேற்கொள்ள வேண்டும். தனது செயல்களை இறைவன் மீதாய் பாரப்படுத்திக்கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் மீது அன்பு வைக்க வேண்டும். அல்லாஹ் என்றும் எப்போதுமாய் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பது மனிதனை சீர்படுத்தும் இறைவனிடம் பாவமன்னிப்பு பெற வேண்டும். நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும். தன்னைத் தானே விசாரித்துக் கொள்ள வேண்டும். தீய பண்பான பொய், புரட்டு, அவதூறு, பொறாமை, பொறுமையின்மை போன்ற இதிலிருந்து விலகியிருக்க வேண்டும்.  ஒட்டுமொத்தமாக பாவச் செயலில் இருந்து விடுபடுவதன் மூலம் ஆன்மீகம் மேம்படும். ஆன்மீகம் மேம்படும்போது விடுதலை சாத்தியமாகும் என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

முடிவுரை

பகவத்கீதையும் திருக்குர்ஆனும் வெளிப்படுத்தும் கடவுட் கோட்பாடு - ஓர் ஒப்பீட்டாய்வு என்ற அடிப்படையில் பகவத்கீதையில் மனிதனானவன் நீதி தலைகுன்றி அநீதி தலைதூக்கும்போது அதனை துடைத்து எறிவதற்காக அவதார புரு~ராக பரமாத்மா தோன்ற வேண்டிய தேவையொன்று முன்னிறுத்தப்படுகிறது. அதே போலவே திருக்குர்ஆனில் உருவ வழிபாடு ஏற்றுக்கொள்வதில்லை எனினும் காலத்தின் தேவைகள் பொருட்டாய் நற்கருத்துக்களை உருவமற்ற இறைவன் தன் தூதர்களின் வழியாய் விண்ணிலிருந்து இறக்கி மண்ணில் வாழும் சமய போதகர்களுக்கு அறியபடுத்தினார். இந்நிலையில் உருவ பிரசன்னம் என்பது முக்கியப்படுத்தபடாது  உகந்த தேவையான கருத்துக்கள் என்ற அடிப்படையில் காலம் காலமாக, யுகம் யுகமாக நற்கருத்துக்கள் பிறப்பிக்கப்படுகிறது. என்கின்ற தத்துவார்த்தம் இரு நூல்களிலும் அடிப்படையில் உடன்பாடு உடையதாயக்; காணப்படுகிறது. அத்துடன் பகவத்கீதை அநீதி தலை தூக்கும் போது அவதாரம் எடுப்பதாகவும், காலத்தின் தேவைக்கேற்ப நற்கருத்துக்கள் உருவமற்ற இறைவன் வழங்குகிறார் என்ற அடிப்படையிலும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இவ்விரு புனித நூல்களும் அமைவுறுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

பரிந்துரை

பகவத்கீதையும், அல்குர்ஆனையும் ஒப்பீடு செய்வதால் மட்டும் போதாது உலகில் காணப்படும் அனைத்து சமய ஆப்த நூல்களையும் வௌ;வேறான சமய ஆப்த நூல்களுடன் ஒப்பீடு செய்யப்பட்டு பொருத்தப்பாடுகள் கண்டுகொள்ளப்படுவதனூடாக சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழி செய்யப்பட வேண்டும்.

இந்து மதக்கருத்துக்களும், இஸ்லாம் மதக்கருத்துக்களும் இணக்கப்பாட்டின்  அடிப்படையில் ஒருமுகப்படுத்தப்பட்டதன் விளைவாகவே சீக்கியமதம் தோற்றுவிக்கப்பட்டது. சீக்கியமதத்தின் தோற்றம் இந்து, இஸ்லாம் மக்களிடையே  குரோதத்தை குறைத்துக்கொண்டது மட்டுமல்லாது பஞ்சாப் வாழ் மக்களின் ஒழுக்க வாழ்வையும், வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் பெரிதுமாய் உதவியது.  இவற்றையெல்லாம் கருத்திலெடுத்தவாறாய் சமயங்கள் ஒன்றுபட்டு உலக மாந்தர்களிடையே சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். என்பதும் எனது ஒப்பீட்டாய்வின் வழிப்பேறாய் கிடைக்கப்பெறுகிறது.

வௌ;வேறான சமயத்தை ஆப்த நூல்களைக் கற்பதாலும், புரிந்து கொள்வதாலும், வழிபாட்டு முறையிலும், வாழ்க்கை முறையிலும் ஓர் மேம்பட்ட நிலையை அடைந்து கொள்ளலாம். சமகால இந்திய மெய்யியலிலே தோற்றம் பெற்ற ராஜ் மோகன் ராய், தயானந்த சரஸ்வதி போன்றவர்கள் கிறிஸ்தவ நூல்களிலே காணப்பட்ட உயர்ந்த சிந்தனை பாங்கை இந்து சமயத்தோடு இணைத்துக் கொண்டார்கள் என்பதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

இவ்விதமாக உலகில் காணப்படுகின்ற வேறுபட்ட சமய சித்தாந்தங்களை, சமய நூல்களை கற்றுக்கொள்வதன் மூலம் அவற்றை ஒப்பீடு செய்து அவற்றுக்கிடையே காணப்படும் ஒற்றுமைப்பாட்டை எடுத்துச் சொல்வதும் உலக மாந்தர்களிடையே சாந்தியும், சமாதானமும் ஓங்க வழிசெய்யும்.

 

 

 

 

 

 

 

 

 

 

உசாத்துணை நூல்கள்

1.    முகம்மது ரஸீன்-ஹஸனி, மௌலவி, (2005), அல்குர்ஆன் தகவல் களஞ்சியம் (வினா-விடை) சாரு குர் ஆன் பப்ளிகேசன்ஸ். குருனாகல.

 

2.   முஹம்மது ஏ. எல். (காஸிமி), (2000), “அல்குர்ஆன் ஓர் அறிமுகம்”, சுஹா பப்லிகேசன்.

3.   …………., “நடைமுறைக்கேற்ற இஸ்லாம் - பாகம் 1”, இஸ்லாமிக் புக் ஹவுஸ்.

4.   மன்சூர். எஸ். எம், (1999), “இஸ்லாம் பேசுகின்றது”, நொலெஜ் பதிப்பக வெளியீடு.

5.   அருட்செல்வப்பேரரசன்.ஆ, (2004), “ஸ்ரீPமத் பகவத்கீதை”இ திருவெற்றியூர் புக் ஹவுஸ்.

6.   சுவாமி ஆசுதோசானந்தர்., (2001), “ஸ்ரீPமத் பகவத்கீதை”, ஸ்ரீ இராமகிருஸ்ண மடம்,சென்னை.

7.    சுவாமி பிரபுபாதர்.அ.ச., (1981), 'பகவத்கீதை உண்மையுருவில்”, பக்தி வேதாந்த புத்தக அறக்கட்டளை, சென்னை.

இணையத்தளம்

  1. (https://m-tamil.webdunia.com/article/special-astro-predictions/bhagavad-gita-preaching-the-lord, 2019/10/18, 6.30.)
  2. (http://www.tamililquran.com/quranaudio.asp, 2019/10/20, 6.30.)