Volume 1, Issue 7

தமிழகப்பழங்குடிகளின் தெருக்கூத்து அமைப்புமுறை

Author

முனைவர் ரே.கோவிந்தராஜ் உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை

Abstract

ஆய்வுச்சுருக்கம்: சங்க இலக்கியமான மலைபடுகடாம் இலக்கியம் கூத்தராற்றுப்படை என்று அழைக்கப்படுகிறது. கூத்து தமிழ்மக்களிடம் நீண்ட நாட்களாக வழங்கபட்டு வருகின்ற ஒரு கலை அம்சம். ஜவ்வாது மலைப்பகுதியில் வழங்கப்படும் கூத்தின் முறைகள் ஆய்வின் அடிப்படையில் தகவல்கள் தொகுக்கப்பட்டு அதன் அமைப்பினை விளக்குவது இந்த ஆய்வின் நோக்கமாகும். ஜவ்வாதுமலை வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள கிழக்குத்தொடர்ச்சி மலைபகுதியாகும். இம்மலைத்தொடர் கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையிலிருந்து தொடங்கி வடக்கே அமிர்தி வரை நீண்டுள்ளது. இம்மலைப்பகுதியில் பதினெட்டு நாடுகள் காணப்படுகின்றன. (இங்கு நாடு என்பது கிராம ஊராட்சியைக் குறிக்கிறது). அவற்றில் புதூர் நாடு, நெல்லிவாசல் நாடு, புங்கப்பட்டு நாடு, தென்மலை நாடு, முட்ட நாடு, முதலிய பகுதிகளில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கூத்துக்கலைஞர்கள் தெருக்கூத்தைச் சிறப்பாக நடத்திவருகின்றனர். இந்தத் தெருக்கூத்து முறையினை ஆராய்ந்து வெளிக்கொண்டு வரவேண்டியது காலத்தின் தேவையாகும்.

DOI

PAGES: 17 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் ரே.கோவிந்தராஜ் உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை | தமிழகப்பழங்குடிகளின் தெருக்கூத்து அமைப்புமுறை | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)