முனைவர் திருமதி சுகன்யா அரவிந்தன் முதுநிலை விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். இலங்கை
ஆய்வுச்சுருக்கம்: தொல் தமிழர் வாழ்வில் மூத்தோர் வழிபாடாக நடுகற் பண்பாடு அமைந்திருக்கின்றது. சங்கப்பனுவல்களின் தொகுப்பு முறையில் காலத்தால் முற்பட்டவையாகிய அகநானூறு, புறநானூறு ஆகியவற்றிலே ‘பதுக்கை’ மற்றும் ‘நடுகல்’ பற்றிய குறிப்புக்கள் அதிகம் உள்ளன. நடுகற்கள் எவ்வாறு வீரவழிபாடாகவும் சடங்கு முறையாகவும் மாற்றம் பெற்றது என்பதை இனங்காண்பதே இவ்வாய்வின் நோக்கமாகும். பகுப்பாய்வு முறையியலை அடிப்படையாகக் கொண்டு சங்கப்பாடல்களின் வைப்பு முறைகளிலே இலக்கியங்களைப் பகுப்பாய்வு செய்து, அவற்றில் நடுகல் குறித்த பாடல்களைத் தனியே வகையீடு செய்து விவரண முறையியல் அடிப்படையில் இந்த ஆய்வு முன்வைக்கப்படுகின்றது. கடவுள் கோட்பாடுகள் உருவாவதற்கு முன்னரே தமக்கு முன்னர் வாழ்ந்து தம்குடிகளைக் காத்து மடிந்த வீரர்களை மூத்தோராகக் கொண்டு தலைமுறையாகத் தொடர்ந்த மரபே நடுகல் வழிபாடு என அறியமுடிகின்றது. இதுவே பிற்காலத்தில் வழிபாட்டுச் சடங்காகவும் கிராமியத் தெய்வமரபாகவும் மாற்றமுற்றதெனக் கருதமுடிகின்றது.
PAGES: 15 | VIEWS | DOWNLOADS
முனைவர் திருமதி சுகன்யா அரவிந்தன் முதுநிலை விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். இலங்கை | சங்ககாலப்பாடல்கள் சுட்டும் மூத்தோர் வழிபாடு - அகநாநூறு மற்றும் புறநானூறு பாடல்கள் சுட்டும் நடுகல் வழிபாட்டு மரபினடியான ஆய்வு | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |