முனைவர் இரா.இராமன் (கல்யாணராமன்), முதல்வர், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், சென்னை
ஆய்வுச் சுருக்கம்: மானுட வாழ்வின் மீதான எல்லையற்ற நேசத்தோடும், பட்டுப் போகாத புத்திளம் நம்பிக்கையோடும், ‘அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே’ என்ற இந்திய மரபின் வேர்ப் பிடிப்போடும் ‘பயன்பாட்டுப் படைப்பாக்கம்’ செய்து கொண்டிருக்கிறார் வெ.இறையன்பு. அதன் வெளிப்பாடே ‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற நூலாகவும் விரிந்துள்ளது. உழைப்புப் பகிர்வும் உற்பத்திப் பகிர்வும் உடைமைப் பகிர்வும் உரிமைப் பகிர்வுமாக மானுடர் அனைவரும் எல்லாரும் ஒருநிறையாக, எல்லாரும் ஒருவிலையாகச் சரிநிகராகக் கூட்டுக்களியில் திளைத்திருந்த தொல்குடிப் பண்பாட்டிலிருந்து தோன்றியதே ‘விருந்தோம்பல்’ என்பதைச் சங்க இலக்கியச் சான்றுகள் கொண்டு, 'இலக்கியத்தில் விருந்தோம்பல்' என்ற இந்நூலில் திறமையாக வெ.இறையன்பு நிறுவியுள்ளார்.. ‘ஓரிரு நூற்பழக்கமுள்ள வெகுஜன வாசகனும்’ படித்துப் புரிந்துகொண்டு ‘வெளித்தள்ளாமல் உள்ளிழுத்து மெல்ல அசைபோடும் பழகுமொழியில் (Not Exclusive but inclusive Language Style)’ வெ.இறையன்புவின் கருத்துகள், எல்லாருக்கும் பெய்யும் மழையாய், இந்நூலில் பெருக்கெடுத்துள்ளன என்றும், ஒரு பாட நூலாகும் மேன்மை இந்நூலுக்கு உண்டு என்றும் இக்கட்டுரையில் முடிவுரைக்கப்பட்டுள்ளது
PAGES: 24 | VIEWS | DOWNLOADS
முனைவர் இரா.இராமன் (கல்யாணராமன்), முதல்வர், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், சென்னை | வெ.இறையன்பு அவர்களின் இலக்கியத்தில் மேலாண்மை, இலக்கியத்தில் விருந்தோம்பல் -- நூல் மதிப்புரை | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |